நான்கு மேன்மையான உண்மைகள் என்றால் என்ன?

What are four noble truths

பிரச்னைகளிலிருந்து மீண்டுவர உதவும் பாதையை வகுக்கும் அடிப்படை காரணங்களே நான்கு மேன்மையான உண்மைகள். இதுவே புத்தரின் முதல் போதனை, மற்ற பௌத்த போதனைகளுக்கும் இதுவே கட்டமைப்பைத் தருகிறது.

முதல் மேன்மையான உண்மை : உண்மையாக துன்பப்படுதல்

பொதுவாக வாழ்க்கை என்பது திருப்தியில்லாதது என்பதே முதல் உண்மை. பிறப்பு முதல் இறப்பு வரை எண்ணிலடங்கா மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கின்றன, ஆனால் அவை எதுவும் நீடித்திருப்பதில்லை விரும்பத்தகாத பல நேரங்களும் இவற்றில் அடங்கும்.

  • மகிழ்ச்சியின்மை – உடல்நலக்குறைவு, விரக்தி, தனிமை, கவலை மற்றும் அதிருப்தி இவை யாவும் எளிதில் உணர்ந்து புரிந்து கொள்ளக்கூடியவை. பொதுவாக, இது நம்மைச் சுற்றி இருப்பதைச் சார்ந்ததாகவும் இருக்காது  – நம்முடைய நெருங்கிய நண்பருடன் மிகவும் பிடித்த உணவை உண்ணும் போது கூட நாம் மகிழ்ச்சியில்லாதவராக இருப்போம்.
  • சிற்றின்பம் -  நாம் என்ன மகிழ்ந்திருந்தாலும், அது உண்மையில் நீடித்திருக்காது அல்லது நமக்கு திருப்தி தராது, அந்த மகிழ்ச்சி விரைவிலேயே மகிழ்ச்சியின்மையாக மாறிப்போகும். நாம் உறையும் பனியில் இருந்தால், கதகதப்பான அறைக்கு செல்வோம், அதே சூடு அதிகமானால் அதனை பொருத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் புத்துணர்ச்சியான காற்றைத் தேடுவோம். இந்த மகிழ்ச்சியாவது நீடித்தால் மிகச்சிறப்பாக இருக்கும், ஆனால் பிரச்னையே அது அவ்வாறு இருப்பதில்லை என்பது தான்.
  • திரும்பத் திரும்ப ஏற்படும் பிரச்னைகள் – வாழ்வின் ஏற்ற இறக்கங்களைக் கையாள நாம் தேர்வு செய்யும் மோசமான வழிகளே பல்வேறு பிரச்னைகள் தோன்றக் காரணமாகிறது. உதாரணத்திற்கு, தவறான உறவுமுறையில் இருந்தால், அப்போது நாம் நடந்து கொள்ளும் விதம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்கிறது. ஆனால் அதன் பின்னரும் நமது தவறான பழக்கங்களை வலுப்படுத்துவதால், உறவில் முறிவை ஏற்படுத்திக்கொள்கிறோம். அடுத்த உறவு முறையிலும் கூட திரும்பவும் இதே விதமான அணுகுமுறையைத் தொடர்கிறோம். அதனால் அதுவும் மோசமாகிவிடுகிறது

இரண்டாவது மேன்மையான உண்மை : துன்பத்திற்கான சரியான காரணம்

நம்முடைய இன்பம் மற்றும் சிற்றின்பம் என்பது மெல்லிய காற்றிலிருந்து எழுவதல்ல, அதற்கு பரந்துபட்ட காரணங்களும், நிபந்தனைகளும் இருக்கின்றன. வெளிப்புற காரணிகளான நாம் வாழும் சமூகம் நமக்கான பிரச்னைகள் எழுவதற்கான நிபந்தனைகளாக செயல்படுகின்றன; ஆனால்  உண்மையான காரணமாக புத்தர் நமக்கு அறிவுறுத்துவது நம்முடைய மனதை உற்றுநோக்க வேண்டும். நம்முடைய கலக்கம் தரும் உணர்வுகளான – வெறுப்பு, பேராசை, பொறாமை உள்ளிட்டவை, நம்மை வலுக்கட்டாயமாக சிந்திக்கவும், பேசவும் மற்றும் செயல்படவும் செய்து இறுதியில் சுய-அழிவுப்பாதைக்குத் தள்ளுகிறது.

புத்தர் இதனை ஆழமாக பார்த்திருக்கிறார், இது மாதிரியான உணர்வுகளின் நிலைகளுக்குக் கீழ் மறைந்திருக்கும் உண்மையான காரணத்தை வெளிக்கொணர்ந்தார் : அதாவது யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ளும் வழி. நம்முடைய நடத்தையின் நீண்ட கால விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் குழப்பத்தோடு, நாம், மற்றவர்கள் மற்றும் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்ற தவறான புரிதலும் இதில் அடங்கும். எல்லாவற்றிலும் ஒன்றோடு ஒன்றிற்கான தொடர்பைப் பார்ப்பதை விட, நடப்பவை எல்லாம் வெளிப்புறக் காரணிகளின்றி சுயாதீனமாக நடப்பதாக நமக்கு நாமே நினைத்துக் கொள்கிறோம்.    

மூன்றாவது மேன்மையான உண்மை : துன்பப்படுதலை உண்மையாக நிறுத்துதல்

நாம் இத்துடன் நிறுத்திவிடக் கூடாது என்று புத்தர் சுட்டிக்காட்டுகிறார், ஏனெனில் நம்மால் காரணிகளை வேறறுக்க முடிந்தால், அதன் தீர்வு மேலெழாது. எதார்த்தம் பற்றிய குழப்பத்தில் இருந்து நாம் வெளிவந்தால், பிரச்னைகள் மீண்டும் வரவே முடியாது. அவர் நம்முடைய ஒன்றிரண்டு பிரச்னைகளைப் பற்றி மட்டும் பேசவில்லை – நம்மால் புதிததாக தோன்றக்கூடிய பிரச்னைகளையும் நிறுத்த முடியும் என்பதையும் சேர்த்தே அவர் கூறுகிறார்.  

நான்காவது மேன்மையான உண்மை : மனதின் சரியான பாதை

நம்முடைய அப்பாவித்தனம் மற்றும் விழிப்புணர்வின்மையில் இருந்து விடுபட, நம்மை எது நேரடியாக எதிர்க்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும் :

  • உடனடி மனநிறைவுக்காக குறுகிய பார்வையில் குதிப்பதற்கு பதிலாக, நீண்டகாலத்திற்காக திட்டமிடுங்கள்.
  • வாழ்வை ஒரு சிறிய பார்வையில் மையப்படுத்தி பார்ப்பதற்கு பதிலாக, பெரிய வரைபடமாகப் பாருங்கள்.
  • இப்போது நமக்கு எது எளிமையானதோ அதைச் செய்யாமல், எஞ்சி இருக்கும் வாழ்க்கைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கு நமது செயல்களால் ஏற்படும் விளைவுகளை சிந்தித்து செயல்படுங்கள்.

சில நேரங்களில் வாழ்வில் விரக்தி ஏற்படும்போது, நீண்ட கால விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் மது அருந்தியோ அல்லது நொறுக்குத் தீனிகளாக சாப்பிட்டோ கவனச்சிதறல் செய்வதே ஒரே வழி என்று நாம் நினைக்கிறோம்.  இதையே நாம் பழக்கப்படுத்தினால் ஏற்படப்போகும் தீவிரமான ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது குடும்பத்தினருக்கும் பேரழிவு தரும் ஆபத்தாகும். நாம் நம்முடைய செயல்களால் ஏற்படும் விளைவுகளில் இருந்து முற்றிலும் தனித்து இருக்கிறோம். நம்முடைய குழப்பத்திற்கான வலிமையான எதிரி எதுவெனில்:

  • புவியோடும், பிற மனிதர்களுடனும் நாம் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கிறோம் என்று உணர வேண்டும், நாம் எப்படி வாழ்கிறோம் என்ற கற்பனைகளெல்லாம் யதார்த்தமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தினசரி தியானத்தை பழக்கவழக்கமாக்கிவிட்டால் , வெற்று திட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மனக்குழப்பங்களை அனைத்தையும் தூக்கி எறிய முடியும்.

நாம் அனைவருமே மகிழ்ச்சியை விரும்புகிறோம், ஆனால் அது நம்மை இன்னும் ஏய்த்துவருகிறது. மகிழ்ச்சியைத் தேடும் புத்தரின் அணுகுமுறைகளாக நான்கு மேன்மையான உண்மைகளில் மேலே கூறப்பட்டுள்ளவை புத்தரின் முதல் போதனை - 2,500 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுமைக்கும் இப்போதும் பொருந்துபவை. 

அன்றாட வாழ்வியல் சிக்கலில், நான்கு உன்னதமான உண்மைகளை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் பெளத்த மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

நம்முடைய அன்றாடப் பிரச்னைகளுக்கான தீர்வாக நான்கு உன்னதமான உண்மைகளைப் பயன்படுத்தி பயன்பெற, நீங்கள் பௌத்த மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நாம் நினைப்பதைப்போலவே அனைத்தும் எப்போதும் நடக்கும் என்பது சாத்தியமில்லை, ஆனால் அதையே நினைத்து மனஅலுத்தத்திற்கு ஆளாகி, நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. நான்கு உன்னதமான உண்மைகளில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் நாம் உண்மையான மகிழ்ச்சியைத் தேடுவதற்கான தேவையை நிறைவேற்றி நம் வாழ்வை நிஜத்தில் அர்த்தமுள்ளதாக்கும்.

சுருங்கச் சொன்னால், உண்மையான துன்பம் என்பது அறியப்பட வேண்டும்; துன்பப்படுதலுக்கான உண்மையான காரணம் அகற்றப்படவேண்டும்; துன்பப்படுதலின் உண்மையான நிறுத்தத்தை அடைய வேண்டும்; மனதின் உண்மையான பாதையை உணர வேண்டும்.

Top