How to meditate alfred schrock unsplash

நமது மனதை அமைதிப்படுத்தி, அழுத்தத்தை குறைத்து நற்பண்புகளை மேம்படுத்தும் ஆயுதம் தியானம். பௌத்த போதனைகளைப்பற்றி அதிகம் அறிந்து கொள்ளாமல், பெரும்பாலான தொடக்க நிலையாளர்கள் ஆர்வத்தின் காரணமாக உடனுக்குடன் தியானிக்கத் தொடங்குகின்றனர். அது நல்ல முடிவு என்றாலும், அதன் நிலைகளில் முன்னேறுதல் அவசியம். புத்தரின் போதனையைப் பற்றி நாங்கள் அதிகம் கற்று வைத்திருப்பதால் எங்களது தியானம் படிப்படியாக ஆழப்படுத்தும்.

தியானத்தை பயிற்சிக்கான சில பொதுவான அம்சங்களைப் பற்றி நாம் இங்கே பார்க்கலாம். தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தியானிக்கலாம். தொடக்க நிலையாளர்கள் அமைதியான இடத்தை கண்டறிந்து தியானித்தல் உதவியாக இருக்கும், ஏனெனில் நம்முடைய சுற்றுப்புறமும் நமது தியானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

தியானிக்க ஏற்ற இடம்

நமக்குத் தேவையெனில் மெழுகுவர்த்தி, சிலைகள் மற்றும் ஊதுபத்தி வாசனை நிரம்பிய ஒரு அறையை தியானத்திற்கு ஏற்ற இடமாக நாம் கற்பனை செய்து கொள்ளலாம் அதில் தவறில்லை. அதிர்ஷ்டவசமாக, இது மாதிரியான ஏற்பாடுகள் அவசியமில்லை; ஆனால் அந்த அறை சுத்தமாகவும் செம்மையாகவும் இருப்பதும் முக்கியம்.

நம் சுற்றுப்புறம் ஒழுங்கானதாக இருந்தால், அது நம் மனதை ஒழுங்காக வைத்துக்கொள்ள உதவும். அசுத்தமான சுற்றுப்புறம் நம் மனதை எதிர்மறையாக பாதிக்கும்.

தொடக்க நிலையில், சுற்றுப்புறம் அமைதியாக இருப்பதும் மிகவும் உதவியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரத்தில் வசிப்பவர்களுக்கு இது கடினமானது, எனவே தான் பெரும்பாலான மக்கள் அதிகாலையில் அல்லது இரவு நேரத்தில் தியானம் செய்கின்றனர். இரைச்சல் நமக்கு தொந்தரவு தராது, எனினும் தொடக்க நிலையில் அவை தியானத்தில் கவனம் செலுத்த இடையூறாக இருக்கும்.

 இசை மற்றும் தியானம்

இசையுடன் தியானிப்பதை பௌத்தம் அறிவுறுத்தவில்லை, ஏனெனில் மன அமைதிக்கு வேறொன்றை சார்ந்திருக்க நேரிடும். மாறாக நமக்குள்ளாக அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

 தியானத்திற்கான நிலை

தியானிக்கும் போது முதுகை நேராக வைத்து சவுகரியமாக அமர வேண்டும், நம்முடைய தோள்பட்டைகள், கழுத்து மற்றும் முகத் தசைகளை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார்ந்தால் சவுகரியமாக இருக்குமென்றால், அதுவும் சிறந்ததே. தியானத்தை துன்புறுத்தலாக உணரக் கூடாது! சில ஜென் தியான வகைகளில் நகரவேக் கூடாது. வேறு சில தியானங்களில், உங்களுடைய கால்களை நீங்கள் நகர்த்த விரும்பினால், நகர்த்திக்கொள்ளலாம் – அது பெரிய சவால் இல்லை.

 தியானிப்பதற்கான நேரம்

தியானிக்கத் தொடங்கும் போது சிறிது நேரம் மட்டுமே தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது – வெறும் மூன்று அல்லது ஐந்து நிமிடங்களே போதுமானது. இந்த நேரத்தைக் கடந்து தியானித்தால் சற்று கடினமாக உணர்வோம். அலைபாயும் மனம், பகல்கனவு அல்லது தூங்கியே விடக்கூடிய அளவில் நீண்ட நேரம் தியானிப்பதற்குப் பதிலாக குறுகிய நேரத்தில் அதிக கவனத்துடன் தியானித்தல் சாலச்சிறந்ததாகும்.

எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு கொள்கை என்னவென்றால் தியானிக்கும் போது ஏற்ற இறக்கத்துடன் இருக்க வேண்டும். சில நாட்களில் உங்களது தியானம் நன்றாக அமையும், சில நாட்கள் அப்படி இருக்காது.

மிக முக்கியமானது நம்முடைய உடலும், மனமும் நிதானமாக இருக்க வேண்டும், நம்மை நாமே கஷ்டத்தை நோக்கி தள்ளக்கூடாது. சில நாட்கள் தியானிப்பதை உணர்வோம், சில நாட்கள் அவ்வாறு இருக்காது. முன்னேற்றம் என்பது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் இருக்காது, சில நாட்களில் அற்புதமாக உணர்வோம், அடுத்த நாளே அவ்வளவு பெரிதானதாக இருக்காது. சில ஆண்டுகளாக விடாமுயற்சிக்குப் பின்னர், நம்முடைய தியானப்பயிற்சி மேம்பட்டு வரும் பொதுவான வளர்ச்சியைக் காண முடியும்.

எப்படி அடிக்கடி தியானம் செய்வது

தியானத்தோடு சேர்ந்தே இருப்பது ஒரு திறவுகோல். தொடக்கத்தில் சில நிமிடங்கள் தினசரி தியானிக்க முடிந்தால் அதுவே சிறந்தது, சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் தியானிக்கலாம். ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேதனையாக தியானிப்பதை விட இடைவெளி விட்டு பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்ததாகும். 

மூச்சுப்பயிற்சி தியானம்

பெரும்பாலான மக்கள் செய்யும் முதல் தியானம் அமைதியாக அமர்ந்து, சுவாசத்தில் கவனம்செலுத்துதல். நாம் மனஅழுத்தத்தில் இருந்தால் நம்மை அமைதிப்படுத்த இது மிக உதவியாக இருக்கும்.

  • மூக்கு வழியாக இயல்பாக சுவாசித்தல் – அதிக வேகமாவும் இல்லை, மிகவும் மெதுவாகவும் இல்லை, மிகவும் ஆழமாகவும் இல்லை, மிகவும் மேலோட்டமாகவும் இல்லை
  • மூச்சுப்பயிற்சியின் போது இரண்டு இடங்களில் கவனம் செலுத்துங்கள் – மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து வெளியனுப்புதல் சக்தியை பெருக்க உதவும், நாம் தூங்குவது போலவோ அல்லது அடிவயிறு மேலும் கீழும் செல்வது போலவோ உணர்ந்தால் முடிவில் நம் மனம் அலைபாய்வதை அறியலாம்.
  • மனம் அலைபாய்ந்தால், ஒன்றில் இருந்து பத்து வரை எண்ணிக்கொண்டே விழிப்புடன் சுவாசித்து மூச்சை உள்ளிழுத்து வெளியனுப்ப வேண்டும், இதன் மூலம் கவனத்தை மீண்டும் மெதுவாக மூச்சுப்பயிற்சிக்கே திருப்பலாம்.

நாம் நம் மனதை நிறுத்திவைக்கவில்லை. நம்முடைய கவனம் அலைபாய்வதை இயன்ற வரை விரைவாக உணர்ந்து, அந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு உண்மையாக செயலாற்றுதல்; அல்லது, நாம் சோர்வாகவோ, உறங்குவது போன்றோ உணரத் தொடங்கினால், நம்மை நாமே எழுப்புதல். இது எளிதல்ல!

சுவாசம் மூலம் தியானிப்பதன் பலன்கள்

மனஅழுத்ததை போக்க உதவுவதோடு, சுவாசத்தின் மூலம் தியானிப்பதால் வேறு சில பலன்களும் உள்ளன. நாம் எப்போதும் “கற்பனையில்” மிதப்பவராக இருந்தால், சுவாசத்தில் கவனம் செலுத்துவமதன் மூலம் நிஜ உலகில் இருப்பதை உணர உதவும். சுவாச தியானங்கள் சில மருத்துவமனைகளில் குறிப்பாக அமெரிக்காவில் வலி நிவாரண மேலாண்மைக்காக பின்பற்றப்படுகிறது. இவ்வகை தியானம் உடல் வலியில் இருந்து நிம்மதி தருவதோடு, உணர்வுகளின் வலியையும் குறைக்கிறது.

 பிறர் மீது அன்பை ஏற்படுத்துங்கள்

சுவாச தியானம் மூலம் நாம் நம்முடைய மனதை அமைதிபடுத்திவிட்டால், நம்முடைய திறந்த மற்றும் விழிப்பான மனநிலையைக்கொண்டு பிறரிடத்தில் அன்பை பெருக்க பயன்படுத்தலாம்.  தொடக்கத்தில், வெறுமனே “நான் இப்போது அனைவரையும் நேசிக்கிறேன்” என்று நினைக்கக் கூடாது, அதனை தவிர்த்து உண்மையிலேயே அவ்வாறு உணர வேண்டும். அதனை மிஞ்சும் சக்தி எதுவும் இல்லை. நேசித்தல் உணர்வை கட்டமைக்க நாம் பகுத்தறிவு சிந்தனையை பயன்படுத்தலாம்:

  • எல்லா உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை, நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இருக்கிறோம்.
  • மகிழ்ச்சியை விரும்புவதில் நாம் அனைவரும் சமமே, துன்பத்தை யாரும் விரும்புவதில்லை.
  • எல்லோராலும் விரும்பப்படவே ஆசைப்படுகிறோம், யாருமே வெறுப்பதையோ அல்லது புறக்கணிக்கப்படுவதையோ விரும்பவில்லை.
  • நான் உள்பட எல்லா உயிரினங்களும் ஒன்றே. நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சார்ந்திருப்பவர்கள் என்பதால், நாம் இதனை உணர்வோம்:
  • ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக இருக்கலாம், மகிழ்ச்சிக்கான காரணங்களும் இருக்கின்றன. எல்லோருமே பிரச்னைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்.

இவ்வாறு சிந்தித்து பாருங்கள், நம்முடைய மனம் சூரியன் போன்ற மஞ்சள் வெளிச்சத்தை அன்பு கலந்து ஒவ்வொருவருக்கும் எல்லா திசைகளிலும் பிரகாசிக்கச் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். நம்முடைய கவனம் அலைபாய்ந்தால், “எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்கிற உணர்வை மீண்டும் கொண்டு வரலாம்.

அன்றாட வாழ்க்கைக்கான தியானம்

இவ்வகையான தியானங்களை நாம் பயிற்சி செய்தால், நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை நம்மால் மேம்படுத்த முடியும். இறுதி இலக்கு என்பது நாள் முழுவதும் மூச்சுப்பயிற்சியிலேயே கவனம் செலுத்தத் தேவையில்லை என்பதே, ஆனால் அந்தத் திறன்களைப் பயன்படுத்தி தேவைப்படும் சமயத்தில் கவனத்துடன் இருக்க உபயோகிக்கலாம்.  நாம் யாரோ ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம், அப்போது நமது சிந்தனையானது “இவர் எப்போது வாய் மூடுவார்?!” என்றே யோசிக்கும். நமது தியானப் பயிற்சியானது இவ்வாறு யோசிக்க வைக்கும், “நான் செய்தது போலத்தான், நம்மை பிறர் விரும்ப வேண்டும், கவனிக்க வேண்டும் என்று யோசிப்பதே மனித இயல்பு.” தியானம் இந்த வழியில் நம்முடைய சொந்த வாழ்க்கை மற்றும் பிறருடன் கலந்துரையாடவும் உதவியாக இருக்கும்.

Top