உள்ளார்ந்த அமைதி மூலம் மனஅமைதியை அடைதல்

Study buddhism universal values 06

உடல் மற்றும் மன ரீதியான அசவுகரியம்

கிழக்கோ, மேற்கோ, வடக்கோ அல்லது தெற்கோ நாம் எந்த திசையில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரின் குறிக்கோளும் அமைதியே. ஏழை, பணக்காரர் யாராக இருந்தாலும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நாம் அனைவரும் மனிதர்கள், அதனால் பொதுவாகவே நம் அனைவரின் மனஓட்டமும் ஒரே விதமாக இருக்கிறது: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக வாழத் தகுதி இருக்கிறது என்ற அந்த அளவிலேயே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.  ஒவ்வொருவருமே ‘நான்’ அல்லது ‘என்னுடையது’ என்றே கருதுகிறார்கள் ஆனால் உண்மையில் ‘நான்’ அல்லது ‘என்னுடையது’ என்பதன் முழு அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும், நான் என்ற உறுதியான எண்ணம் மட்டும் நம்மிடம் இருக்கிறது. இந்த உணர்வு வந்தவுடனேயே, மகிழ்ச்சியெனும் ஆசை துளிர்விடுகிறது, கவலைகளை ஏற்க மறுக்கிறோம். இவை தானாகத் தோன்றும், இந்த அடிப்படையில் பார்த்தால் நம் அனைவருக்குமே மகிழ்ச்சிக்கான உரிமை இருக்கிறது.

இதற்கிடையில் நம்முடைய வாழ்வில் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் மற்றும் தடைகள் ஏற்படலாம். இவற்றில் 2 வகை இருக்கிறது. முதல் வகை வலியானது உடலால் ஏற்படக்கூடியவை, உதாரணத்திற்கு நோய்வாய்ப்படுதல் மற்றும் முதுமையடைதல். என்னைப் போல, ஏற்கனவே முதுமை காரணமாக நான் பல அனுபவங்களை பெற்றிருக்கிறேன், என்னால் சரியாக பார்க்க, கேட்க, நடக்க முடியாது. இவையெல்லாம் நடப்பது கட்டாயம். மற்றொரு வகை முக்கியமாக மன அளவிலானது. உடல் ரீதியில் எல்லாமே சவுகரியமாகவும், ஆடம்பரமாகவும், சகல வசதிகளும் இருக்கும் எனினும் ஏதோ ஒரு வித அழுத்தம் மற்றும் சுய – சந்தேகங்கள் நமக்கு தனிமையை உணர வைக்கும். நமக்கு ஏற்படும் பொறாமை, பயம் மற்றும் வெறுப்பின் காரணமாக இறுதியில் மகிழ்ச்சியை இழந்து தவிப்போம். எனவே உடல் ரீதியாக இல்லாமல், மன ரீதியாக நாம் பல இன்னல்களை அனுபவிக்கக் கூடும்.

பணத்தின் மூலம் உடல் ரீதியாக சில சவுகரியங்களை செய்து கொள்ள முடியும், நம்மால் சில வலிகளை குறைக்க முடியும், உடல் அளவில் திருப்தியை ஏற்படுத்த முடியும். பெயர், பலம் மற்றும் புகழ் என்ற அளவில் அவை இருக்கும், எனினும் அதன் மூலம் நமக்கு உள்ளார்ந்த அமைதியை கொடுக்க முடியாது. சில நேரங்களில், அளவிற்கு அதிகமான பணம் மற்றும் சொத்துகளே நமக்கு பலவிதமான கவலைகளைக் கொடுக்கும். பெயர், புகழின் மீதே நாம் குறிக்கோளாக செயல்படுகிறோம், இது பாசாங்கு தனத்தைத் தவிர வேறெதுவும் தராது, இந்த பண்புகள் அசவுகரியம் மற்றும் அழுத்தத்தையே கொடுக்கும். எனவே மன மகிழ்ச்சி என்பது வெளிப்புறத்தை சார்ந்ததல்ல, ஆனால் ஆழமாக சிந்திப்பதேயாகும்.

நாம் ஏழை மக்கள் சிலரைப் பார்க்கிறோம், அவர்களை உள்ளூரப் பார்த்தால் மிகவும் உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். உண்மையில் நமக்கு உள்ளார்ந்த திருப்தி இருந்தால், நம்மால் எந்த கடினமான உடல் வலியையும் பொருத்துக் கொண்டு அதில் இருந்து மீண்டு வர முடியும். எனவே உடல் மற்றும் மன அளவிலான வலிகளை பொருத்தவரையில் மக வலியே மிகவும் கொடியது என நான் கருதுகிறேன். ஏனெனில் உடல் ரீதியிலான அசவுகரியங்கள் மன சவுகரியத்தில் அடங்கிப் போய் விடுகிறது, ஆனால் மன அசவுகரியத்தை உடல் அசவுகரியத்தால் போக்க முடியாது. 

விலங்குகளை ஒப்பிடும் போது மனக் கஷ்டங்கள் மற்றும் மனிதர்களால் ஏற்படும் பிரச்னைகள் நமக்கு மிக அதிகம். உடல் ரீதியில், இரண்டு இனங்களுக்குமே வலிகள் ஒன்று தான், ஆனால் மனிதர்களுக்கு இருக்கும் அறிவாற்றலால் நமக்கு சந்தேகங்கள், பாதுகாப்பின்மை மற்றும் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறோம்; இவை அனைத்தும் வருவதற்கு முக்கிய காரணமே நம்முடைய முதன்மையான அறிவாற்றலே. இதனை வெல்ல நாம் நம்முடைய மனித அறிவாற்றலையும் பயன்படுத்த வேண்டும். உணர்வுகள் ரீதியில் பார்த்தால், சில உணர்வுகள், தோன்றிய உடனேயே நம்நிலையை இழக்கச் செய்து மன அமைதியை இழக்கச் செய்யும். மற்றொரு புறம் சில உணர்வுகள் நமக்கு மேலும் பலத்தைக் கொடுக்கும். உறுதி மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான அவை, நமக்கு சாந்தம் மற்றும் அமைதியான மன நிலைக்கு வழிவகுக்கும்.

இரண்டு வகையிலான உணர்வுகள்

ஆகவே, உணர்வுகள் இரண்டு விதமானவையாக இருக்கின்றன. ஒன்று மன அமைதிக்கு பெரும் தீங்கு விளைவிக்கும், கோபம் மற்றும் வெறுப்பு அழிக்கக் கூடிய உணர்வுகள்.  இந்த 2 உணர்வுகளும் நம்முடைய மன அமைதியை மட்டும் சீர்குலைப்பதில்லை, நம்முடைய பேச்சிற்கும், உடலுக்கும் கூட அவை தீங்கானவையே. மற்றொரு புறம் நம்முடைய செயல்களையும் அவை மாற்றிப் போடும். தவறான பாதைக்கு வழிகாட்டுவதலாயே அவற்றை நாம் அழிக்கக் கூடியவை என்கிறோம். மற்ற உணர்வுகளான கருணை உள்ளிட்டவை, நமக்கு உள்ளார்ந்த உறுதியையும் அமைதியையும் கொடுக்கும். உதாரணத்திற்கு இந்த உணர்வுகள் நமக்கும் மன்னிக்கும் உறுதியைத் தருகிறது. சில காலகட்டத்தில் சிலரால் நமக்கு கஷ்டங்கள் நேர்ந்திருக்கலாம், மன்னித்தல் அமைதிக்கு வழி வகுப்பதோடு, மன அமைதியையும் ஏற்படுத்துகிறது. நாம் கோபமாக இருக்கும் ஒரு நபரே நம்முடைய சிறந்த நண்பராகவும் மாறக் கூடும்.

வெளிப்புற அமைதி

அமைதியைப் பற்றி நாம் பேசும் போது, உணர்வுகள் மற்றும் உள்ளார்ந்த அமைதி பற்றியும்பேசுவது கட்டாயம். இதன் மூலம், உள்ளார்ந்த அமைதிக்கு எந்ததெந்த உணர்வுகள் வழிவகுக்கும் என்பதை கண்டறிய முடியும். ஆனால் முதலில் நான் வெளிப்புற அமைதி பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

வெளிப்புற அமைதி என்பது வன்முறையின்றி இருப்பது மட்டுமல்ல. அநேகமாக பனிப்போர் காலத்தில் நம்மிடம் அமைதி இருந்தது; ஆனால் அந்த அமைதி பயத்தின் காரணமாக நிலவியது, அணுசக்தி படுகொலையை நினைத்து பயந்தோம். இரண்டு பக்கத்திலுமே மக்கள், வெடிகுண்டு தாக்குதலை நினைத்து பயந்தார்கள், இது உண்மையான அமைதியல்ல. உண்மையான அமைதி என்பது உள்ளார்ந்த அமைதியில் இருந்து வரவேண்டும். எப்போது மோதல் ஏற்பட்டாலும், அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று நான் கருதுவேன், அதாவது பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வு.  எனவே, அமைதி என்பது மனதை உருக்கி, மற்றவர்களின் வாழ்விலும் மரியாதை செலுத்தி, பிறருக்கு தீங்கு ஏற்படுத்தும் காரணங்களை தவிர்த்தல், மற்றவர்களின் வாழ்க்கை நம்முடையதைப் போலவே புனிதமானது என்ற அணுகுமுறையைக் கொண்டிருத்தல். மற்றவர்களையும் மதித்தல் அவசியம், இந்த அடிப்படையில், நம்மால் இயன்ற வரை பிறருக்கு உதவ வேண்டும், பின்னர் அவ்வாறு உதவ நாம் முயற்சிக்க வேண்டும்.

நாம் கஷ்டத்தில் இருக்கும் போது நமக்கு உதவ யாரேனும் முன்வந்தால், நிச்சயமாக அவர்களை நாம் பாராட்டலாம். யாரேனும் கவலையில் இருந்தால், நாம் நமது புரிதலையாவது குறைந்தபட்சம் வெளிக்காட்டினால், அந்த நபர் இதற்காக பாராட்டுவதோடு, மகிழ்ச்சியாகவும் உணர்வார். எனவே உள்ளார்ந்த கருணை மற்றும் மன அமைதியின் மூலம் அனைத்து செயல்களும் அமைதியனவையாக மாறும். நம்மால் உள்ளார்ந்த அமைதியை நிலைநாட்ட முடிந்தால், வெளிப்புற அமைதியையும் நம்மால் உருவாக்க முடியும். 

மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் கலந்துரையாடும் போது பலதரப்பட்ட கருத்துகள் நமக்கு இருக்கும். ஆனால் “நான்”, “அவர்கள்” என்ற உறுதியான கருத்துகளின் அடிப்படையில், நமக்கு வேறு சில கருத்துகளும் ஊட்டம் பெற்று “எனது விருப்பம்”, “அவர்கள் விருப்பம்” என்றாகிவிடுகிறது. இந்த அடிப்படையில் போரே மூண்டுவிடுகிறது. என்னுடைய எதிரியை அழித்தால் எனக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நாம் கருதுகிறோம். ஆனால் தற்போது, புதிய யதார்த்தம் ஒன்று இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூலியல் ரீதியாகவும் நாம் ஒருவருக்கொருவர் மற்றவர்களைப் பெரிதும் சார்ந்திருக்கிறோம். எனவே “நாங்கள்” மற்றும் “அவர்கள்” என்ற கருத்துகள் இனி பொருந்தாது. யாரெல்லாம் “அவர்கள்” என்று கருதப்பட்டதோ அவர்கள் இப்போது “நாங்கள்” என்பதன் அங்கமாகிவிட்டனர். எனவே மன அமைதியை மேம்படுத்த முக்கிய காரணி கருணை, இந்த அங்கீகாரம் மூலம் 6 கோடி மக்கள் இருக்கும் இந்த கிரகத்தில், மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நாம் அனைவருக்குமான சம உரிமையாகும். இந்த அடிப்படையில் நாம் எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக் கொண்டால், வெளிப்புற அமைதியை நம்மால் நிலைநாட்ட முடியும். 

சிறிய அளவில் இருந்து தொடங்குகிறது

அமைதியை உருவாக்க வேண்டுமானால், முதலில் நாம் நமக்குள்ளாக அமைதியை மேம்படுத்தத் தொடங்க வேண்டும், அதன் பின்னர் நம் குடும்பத்தினர் மற்றும் நம்முடைய சமூகத்திடம் மேம்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, மெக்சிகோவில் ஒரு நண்பர் “அமைதிக்கான மண்டலம்” ஒன்றை தனது சமூகத்தினருக்காக மேம்படுத்தி இருந்தார். தன்னுடைய சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒப்பந்தம் செய்து அதன் மூலமாக இந்த மண்டலத்தை நிறுவினார்.  இந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அமைதிக்கான மண்டலத்தில் தங்களால் இயன்றவரை வன்முறையை தவிர்க்க முயற்சிப்பதாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் சண்டையிடவோ அல்லது கருத்து வேறுபட்டாலோ இந்த மண்டல எல்லைக்கு வெளியே சென்றுவிடுவதாக அவர்கள் ஒப்புகொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே இது மிகவும் நல்லது. 

உலக அமைதியை கோருதல் மிகவும் கடினம்; ஆனால் உலக அளவில் அதுவே சிறந்தது. ஆனால் யதார்த்தமாக என்ன செய்ய வேண்டுமானால், சிறிய அளவில் இருந்து தொடங்க வேண்டும், முதலில் தனக்குள்ளாக, பின்னர் குடும்பம், சமூகம், மாவட்டம் என விரிவுபடுத்தி, இந்த நிறுவல் மூலம் அமைதிக்கான மண்டலம் போன்றவற்றை தோற்றுவிக்கலாம், எனவே, உள்ளார்ந்த அமைதி என்பது கருணையோடு மிகுந்த தொடர்புடையதாகும்.

தற்போதைய சூழலில் உலகம் பல மாறுதல்களை உண்மையிலேயே சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது ஜெர்மன் நண்பரான மறைந்த பிரைடுரிச் வொன் வெய்ஸ்சேக்கர், என்னிடம் அவரது சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவரை நான் என்னுடைய ஆசான் போலக் கருதுவேன். ஒவ்வொரு ஜெர்மன் மனிதரின் பார்வையில், அவர்களுக்கு பிரெஞ்சுக்கார்கள் விரோதியாகத் தோன்றுவார்கள், அதே போன்று பிரெஞ்சுக்காரர்கள் பார்வையில் ஜெர்மானியர்கள் விரோதிகளாகத் தோன்றுவார்கள். ஆனால் தற்போது நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. நாம் இப்போது ஒன்றுபட்டு, ஐரோப்பிய யூனியனாக இருக்கிறோம். இது மிக நல்லது. இதற்கு முன்னர் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுடைய பார்வையில், அவர்களின் இறையாண்மையே உயர்வானதாகக் கருதினார்கள். ஆனால் தற்போது ஐரோப்பாவில் புதிய யதார்த்த நிலை நிலவுகிறது; தனிப்பட்ட விருப்பத்தை விட பொது விருப்பம் மிகவும் முக்கியமாகி இருக்கிறது.  பொருளாதாரம் முன்னேற்றம் கண்டால், ஒவ்வொரு உறுப்பு மாநிலங்களும் பலனடையும். எனவே இந்த சிந்தனையை இந்த பூகோளத்தில் உள்ள 6 கோடி மக்களுக்கும் ஏற்படுத்துவம் அவசியம். மிகப்பெரிய மனித குடும்பத்தில் உறுப்பினராக இருக்கும் நாம் அனைவர் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இரக்கம் எனும் உயிரியல் காரணி

இது வரை இரக்கம் என்றால், தாயிடம் இருந்து பிறந்த பாலூட்டிகளான மனிதன், பாலூட்டிகள், பறவைகள் மற்றும் இன்னும் பிற – அவற்றின் வளர்ச்சியானது அவை பெறும் அன்பு மற்றம் அக்கறையை அடிப்படையாகக் கொண்டது.  முட்டையிட்டவுடன் இறந்துவிடக் கூடிய கடல் ஆமை, பட்டாம்பூச்சிகள், நன்னீர் முன் உள்ளிட்ட சில வகை உயிரினங்கள் இதில் இருந்து விதிவிலக்கானவை. உதாரணத்திற்கு கடல் ஆமையை எடுத்துக் கொண்டால், தாய் ஆமையானது கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு விட்டு சென்று விடும்; முட்டையில் இருந்து வெளிவரும் இளம் ஆமையின் வாழ்க்கை அதன் தனிப்பட்ட முயற்சியை சார்ந்தது. அவற்றிற்கு தாயின் அன்பு தேவையில்லை, எனினும் அவை உயிர் வாழ்கின்றன. எனவே நான் சில மக்களுக்கு சொல்வதுண்டு, இது ஒரு சுவாரஸ்யமான அறிவியல் பரிசோதனை இருக்கிறது. ஒரு கடல் ஆமையின் முட்டை பொறிந்து ஆமைக்குஞ்சு வெளிவந்ததும் தாய் ஆமைக்கும் அதற்குமான பிணைப்பு இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும். அவற்றிற்குள் அப்படியான ஒரு பாசம் இருப்பதாக நான் கருதவில்லை. இயற்கையே அவற்றை அப்படித் தான் படைத்திருக்கிறது, எனவே அவற்றிற்கு பாசம் தேவையில்லை. ஆனால் பாலூட்டிகளான நமக்கு அதிலும் குறிப்பாக மனிதர்களாகிய நமக்கு தாயின் அக்கறை கிடைக்காவிட்டால் நாம் மறித்துப் போவோம்.

ஒரு குழந்தையை பராமரிக்க சில உணர்வுகள் தேவை, அவை இரக்கம், அன்பு மற்றும் அக்கறை பராமரிப்பு. குழந்தை பிறந்த சில வாரங்களுக்கு அன்னையின் ஸ்பரிச தொடுதல் பச்சிளம் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியம் என்று விஞ்ஞானம் சொல்கிறது. அன்பு, பாசம், இலகிய மனம் கொண்ட குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்கள் உடல் ரீதியிலும் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அன்பு கிடைக்காத குழந்தைகள், அதிலும் குறிப்பாக இளவயது குழந்தைகள், பல கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள்.

சில விஞ்ஞானிகள் குரங்குகளை வைத்து பரிசோதனைகளை செய்திருக்கின்றனர். குட்டிக் குரங்குகளை தாய்க்குரங்கிடம் இருந்து பிரித்து வைத்து பார்த்ததில் குட்டிக்குரங்குகள் எப்போது மோசமான மனநிலையிலும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பதையும் கவனித்திருக்கிறார்கள். அவை மற்ற குரங்குகளோடு சேர்ந்து விளையாடுவதில்லை. ஆனால் தாயும் இருந்த குட்டிக் குரங்குகள் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்ற குரங்குகளோடு கொஞ்சி மகிழ்ந்து விளையாடி இருக்கின்றன. இதே போலத் தான் குழந்தைகளும் மழலைப் பருவத்தில் அன்பு கிடைக்காதவர்கள் – மனம் உறைந்து போகிறார்கள். அவர்களால் மற்றவர்களிடம் அன்பு செலுத்த முடிவதில்லை, சில கட்டத்தில் அவர்கள் வன்முறையாளர்களாகவும் மாறுகின்றனர்.  எனவே அன்பு என்பது உயிரியல் காரணி, உயிரியலை அடிப்படையாகக் கொண்ட காரணி.

இதே போன்று இரக்கமும், உணர்வும் உடல் ரீதியிலான உயிரியல் காரணிகளோடு தொடர்புடையவை என நான் கருதுகிறேன், நாம் எப்போதும் கோபம், வெறுப்பு மற்றும் பயத்தோடு இருந்தால், இவை நம்முடைய எதிர்ப்பு சக்தியை தின்று நம் பலத்தை குறைத்துவிடும் என்று சில விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் இரக்கம் கொண்ட மனம் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்க உதவும்.  

இன்னொரு உதாரணம் எடுத்துக் கொள்வோம். மருத்துவத் துறையைப் பார்த்தால், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், நோயாளியின் முன்னேற்றத்திற்கு அவரின் நம்பிக்கையும் மற்றொரு புறத்தில் மிக முக்கியம். எனவே, நம்பிக்கையின் அடிப்படை என்ன? மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புறத்தில் இருந்து அவர்கள் நோயாளி குணமடைய உண்மையான அக்கறை மற்றும் பராமரிப்பை காட்டுகின்றனர், அதன் பின்னரே நம்பிக்கை வருகிறது. மற்றொருபுறம், மருத்துவர் நிபுணத்துவம் பெற்றவராகவே இருந்தாலும், அவர் நோயாளியை ஒரு இயந்திரம் போல பாவித்தால், பிறகு அங்கு வெகு குறைந்த நம்பிக்கையே இருக்கும். அதுவே, மருத்துவருக்கு நல்ல அனுபவம் இருந்து, கூடவே நம்பிக்கையும் இருக்கிறது, மருத்துவருக்கு கூடுதலாக இரக்கமும் இருந்தால், அதிகமாகவே நம்பிக்கை இருக்கும். இப்படிப்பட்ட அம்சங்களோடு மருத்துவர் இருந்தால் நோயாளி நிம்மதியாக தூங்குவதோடு, குழப்பம் குறைந்து இருப்பார். நோய்வாய்ப்பட்டவருக்கு அடிமனதில் ஆழமான குழப்பம் இருந்தால், அது அவருக்கு கஷ்டத்தைத் தருவதோடு, நோயிலிருந்து மீள்வதும் பாதிக்கப்படும்.

ஆனால் வாழ்க்கையில் பிரச்னைகள் என்பது தவிர்க்க முடியாதவை. சாந்திதேவா, எனும் மிகப்பெரிய இந்திய பௌத்த மதகுரு, பிரச்னைகளை நாம் சந்திக்கும் போது அவற்றை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அந்தப் பிரச்னையை ஏதோ ஒரு வழியில் தீர்க்க முடியும் என்றால் கவலைப்படத் தேவையில்லை, அந்த வழியை பயன்படுத்தினாலே போதும். ஆனால் அதுவும் உதவவில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை, எல்லா நேரங்களிலும் அவற்றால் நமக்கு நற்பலன் இருக்காது. இந்த வரிகளை நினைவுபடுத்திப் பார்த்தலே மிகப்பெரிய உதவியாகும். பெரிய பிரச்னையாக இருந்தாலும் கூட, இவ்வாறு சிந்தித்தால் நம்மால் அதனை குறைக்க முடியும்.  

நீண்ட காலமாகவே நமக்கு பிறரின் கவனிப்பு தேவைப்படுகிறது, உதாரணத்திற்கு நாம் சிறு குழந்தைகளாக இருந்த போது நம்மிடம் அன்பு மற்றும் இரக்கம் இருந்தது. ஆனால் சுதந்திரமாக நாம் வளர வளர, தன் வழியில் நடப்பதற்கு இரக்கத்தை விட வலிய தீங்கு செய்யும் உணர்வை அணுகுகிறோம். ஆனால் 6 கோடி மக்களுமே தாய்வழி வந்தவர்கள் தான். எல்லோருமே மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அன்னையின் அன்பு கவனிப்பில் அனுபவித்திருப்பார்கள், அல்லது, அன்னையின் அன்பு கிடைக்காவிட்டாலும் குழந்தைப் பருவத்தில் யாரோ ஒருவரின் அன்பும் அரவணைப்பும் கிடைத்திருக்கும்.  படிப்படியாக நம் வயது அதிகரிக்கும் போது இந்த குணங்கள் தேய்ந்து நாம் வலிய தீங்கு செய்கிறோம், அதிக கொடுமைகளை செய்கிறோம், அதிக பிரச்னைகளை உருவாக்குகிறோம். 

யதார்த்தத்தைக் காண்பதன் அவசியம்

மனது கோபமாக இருந்தால், அக்கோபம் மூளையை ஆதிக்கம் செய்யும் என ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் என்னிடம் சொன்னார். கோபமாக இருக்கும் பயங்கரமான மனிதனை 90% அவனது தோற்றமே வெளிக்காட்டும் அதுவே மனநிலை வெளிப்பாடு. இன்னொரு வகையில் சொல்லவேண்டுமானால், 90% எதிர்மறைகள் மனதில் இருந்து வெளிப்படும். ஒருவரிடம் இணைப்பு மற்றும் உறுதியான விருப்பம் ஏற்படும் போது இவை ஒத்ததாக இருக்கும்: நாம் 100 % அழகாகவும், நன்கு இருப்பவரையும் பார்க்கிறோம். ஆனால் இதில் மிகப்பெரிய சதவிகிதம் அவருடைய மனதின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்; நாம் யதார்த்தத்தைப் பார்ப்பதில்லை. எனவே, யதார்த்தத்தைப் பார்க்க வேண்டியதுமிக அவசியம்.

இதில் மற்றொரு முக்கியமான அம்சம்: யாருமே கஷ்டப்பட விரும்பமாட்டார்கள், ஆனால் ஏன் கஷ்டம் ஏற்படுகிறது? அதற்குக் காரணம் நம்முடைய அப்பாவித்தனம், நம்முடைய புறக்கணிப்பு, நம்முடைய அணுகுமுறை: நாம் யதார்த்தத்தைப் பார்ப்பதில்லை. நம்முடைய குறுகிய பார்வையில், ஒரு முழு படத்தின் யதார்த்தத்தைப் பார்த்து விட முடியாது. நம்மால் 2 பரிமாணங்களில் மட்டுமே பார்க்க முடியும், ஆனால் அது போதாது. நாம் மூன்று, நான்கு, ஆறு பரிமாணங்களில் விஷயங்களைப் பார்க்க வேண்டும். இப்படி தீர ஆராய முதலில் நம்முடைய மனதை அமைதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இங்கும் கூட ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமான உணர்வுகளுக்கு இருக்கும் வேற்றுமைகளை நாம் அனைத்துக் கோணங்களிலும் புரிந்து கொள்ள வேண்டிடியது முக்கியம். நாம் வளர வளர, படிப்படியாக உயிரியல் காரணியான இரக்கம் ஒளிஇழந்துவிடுகிறது, எனவே இரக்க உணர்வை அழியாமல் காக்க அதுபற்றிய கல்வியும், பயிற்சியும் தேவை. உயிரியல் வகையான இரக்கமானது, சார்புடையது தான் என்றாலும்: இது மற்றவர்களிடம் இருந்து அன்பைப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதனை அடிப்படையாக வைத்து, காரணத்தையும் ஆராய்தல் மூலம் கிடைக்கும் விஞ்ஞான காரணிகளையும் சேர்த்தால், இரக்கத்தின் உயிரியல் அளவை தக்க வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதனை அதிகரிக்கவும் முடியும். எனவே, பயிற்சி மற்றும் கல்வி மூலம் அளவான சார்புடைய இரக்கத்தை அளவில்லாத சார்பில்லாத இரக்கமாக ஆறு கோடி மக்களுக்கும் அவர்களைக் கடந்தும் விரிவுபடுத்தலாம்.

கல்வியின் முக்கியத்துவம்

இவை எல்லாவற்றிற்குமான திறவுகோல் கல்வி. நவீன கல்வி மூளையையும், அறிவாற்றலையும் மேம்படுத்துகிறது, ஆனால் அது மட்டும் போதாது. சமகல்வி முறையில் இலகிய மனதை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டிய தேவை இருக்கிறது.  இவை மழலைப் பள்ளிகளில் தொடங்கி பல்கலைக்கழகம் வரைத் தொடர வேண்டும்.

அமெரிக்காவில் சில விஞ்ஞானிகள் குழந்தைகளின் இரக்க குணம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த சில கல்வித் திட்ட பயிற்சிகளை உருவாக்கி இருக்கின்றனர். நிர்வாண நிலையை அடைவதற்காகவோ, எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்பதற்காகவோ மட்டும் குழந்தைகளுக்காக இது வடிவமைக்கப்படவில்லை, அவர்களின் வாழ்வில் பல நற்பலன்களை இவை அளிக்கும். சில பல்கலைக்கழகங்களில் கூட ஏற்கனவே இலகிய மனம் மற்றும் இரக்கத்தை மேம்படுத்துவது குறித்து கல்வித் திட்டங்கள் இருக்கின்றன. அது மாதிரியான சார்பில்லாத இரக்கம் பிறரின் மனப்பான்மையை மையப்படுத்தி இருக்காது, அவர்கள் மனிதர்கள் என்பதே எளிமையான காரணம். நாம் அனைவருமே இந்த கிரகத்தில் இருக்கும் ஆறு கோடி மக்கள் தொகையில் ஒரு பகுதி, எனவே ஒவ்வொருவருமே சமஉரிமை என்ற காரணியின் அடிப்படையில் இரக்க குணத்திற்கு தகுதியானவர்.

உள் மற்றும் வெளிப்புற படைவலிமை குறைப்பு

உள்ளார்ந்த அமைதி மற்றும் உலக அமைதி இரண்டிற்குமே நமக்கு உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற படைவலிமை நீக்கம் தேவை. அதாவது உள் மட்டத்தில் நாம் கருணையை பெருக்கிக் கொண்டால், அதன் பின்னர் தானாகவே அதன் அடிப்படையில், நாம் மற்றவற்றை, எல்லா நாடுகளையும்  வெளி மட்டத்தில்  நீக்கிவிடலாம் . இது பிரான்கோ – ஜெர்மன் ஐரோப்பிய படை வீரர்களின் ஒன்றுபட்ட படைகள் போன்றது; இது மிக சிறந்தது. ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனிலும் ஒன்றுபட்ட படைகள் இருந்தால், உறுப்பினர்களிடையே ஆயுதச் சண்டை தேவையில்லை.

ஒரு முறை பிரசெல்ஸில் நடந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தின் போது எதிர்காலத்தில் ஐரோப்பிய யூனியனின் தலைமையகம் கிழக்கிற்கு மாற்றப்பட்டால் உதவியாக இருக்கும் என்று நான் கூறினேன். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, போலந்தில் அது இருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன். ரஷ்யாவையும் இணைத்துக் கொண்டு விரிவுபடுத்த இது நல்ல முடிவாக இருக்கும், அதே போன்று நாட்டோ நாடுகளின் தலைமையகத்தை மாஸ்கோவிற்கு மாற்றலாம். இவை நடந்தால், உண்மையிலேயே அமைதி நிலவும், ஐரோப்பாவில் போர் அபாயமே இருக்காது. தற்போதைய நிலையில் ரஷ்யா மற்றும் ஜார்ஜியா இடையே சில சிக்கல்கள் இருக்கிறது, ஆனால் நாம் நமது நம்பிக்கையை விட்டு விடக் கூடாது. 

அமைதி விரிவாக்கப்பட்டால், உதாரணத்திற்கு, பிரான்சின் அலங்காரச் சந்தை மூடப்பட்டு, பொருளாதாரத்தை, பெரும் வளத்தை உற்பத்தி செய்வதை நோக்கி நகர்த்தமுடியும். உதாரணத்திற்கு, பீராங்கிகள் தயாரித்துவரும் தயாரிப்புக்கூடங்களை புல்டவுஸர் தயாரிக்கும் இடமாக மாற்றலாம்.

அமெரிக்க நாடுகளுக்கு நமது உதவி மிகவும் அவசியம். ஏழைகள்-பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி மிகப் பெரிய பிரச்னை. இந்த பிரச்னை உலகவில் மட்டுமில்ல; நாடுகளின் அளவில் கூட இந்த இடைவெளி பெரும் வருத்தம் தரும்நிலையில் உள்ளது. உதாரணத்திற்கு, பிரான்ஸை எடுத்துக்கொண்டால், ஏழை- பணக்காரர்களுக்கு இடையில் பெரும் இடைவெளி நீடிக்கிறது. சிலர் பசியில் வாடுகின்றர். ஆனால், மனிதர்களாகிய நாம், அனைவருக்கும் ஒரே நம்பிக்கை, தேவை மற்றும் பிரச்னைகள் இருக்கின்றன. நாம் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு, உள்ளார்ந்த அமைதியின் மூலம் மன அமைதியை பெருக்க வேண்டும்.

Top