மற்றவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

மற்றவர்கள் திறந்த மனதுடன் நம்மை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நேர்மறையான வாழ்க்கையை வாழ நாம் உதவ முடியும். நாம் சந்திக்கும் சிலர் இயல்பாகவே வெளிப்படையாக இருப்பார்கள் மேலும் சிலர் இயல்பாகவே கவர்ந்திழுக்கலாம். ஆனால் இந்த விவகாரங்களைத் தவிர்த்து, நாம் தாராள மனதுடன் இருந்தால், இனிமையான முறையில் அறிவுறுத்துங்கள், நடமுறையில் எப்படி பயிற்சிப்பது என்பதை தெளிவாக உணர்த்துங்கள். மக்கள் நமக்காக ஒன்றிணைவார்கள் மற்றும் நம்முடைய நேர்மறை செல்வாக்கை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

ஞானமடைதலை நோக்கி நாம் பயணிக்கும் போது, மற்ற அனைவருக்கும் உதவும் புத்தராக நமக்குத் தேவையான அனைத்து நல்ல குணங்களையும் முதிர்ச்சியடையச் செய்வதற்காக ஆறு தொலைநோக்கு அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால் மற்றவர்களை நல்ல குணங்களுடன் முதிர்ச்சியடையச் செய்ய வேண்மெனில், முதலில் அவர்களை நேர்மறையான எண்ணத்தின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும். புத்தர் இதை எவ்வாறு நான்கு படிகளில் திறம்பட நிறைவேற்றுவது என்று கற்பித்தார்:

1. தாராளமாக இருத்தல்

நம்மால் முடியும் என்றால், நாம் மற்றவர்களுடன் தாராளமாக இருக்கலாம். நம்மை பார்க்க யாராவது வந்தால், அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கானவற்றை நாம் கொடுக்கலாம்; நாம் வெளியே உணவு சாப்பிடச் சென்றால், நாம் அவர்களை உபசரிப்பதோடு அவர்களுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்தலாம். தாராளமாக இருத்தல் என்றால் வெறுமனே சில பொருட்களை யாருக்கேனும் கொடுப்பதல்ல. உண்மையில் முக்கியமானது நம்முடைய காலத்துடன் தாராளமாக இருத்தலாகும். யாரோ ஒருவரைப் பற்றி கற்பதற்கு ஆர்வமாக இருத்தல், அவர்களின் பிரச்னைகளை உண்மையான அக்கறை மற்றும் ஆர்வத்துடன் கேட்டல், அவர்களின் வாழ்க்கை பெரிய வரம் என்பதை தீவிரமானதாக எடுத்துக் கொண்டு நாம் எப்போதும் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. அது மக்கள் ஏற்றுக்கொள்ளவும் நிம்மதியாகவும் இருக்கச் செய்கிறது, இதன் விளைவாக, அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் மற்றும் நம்முடன் சவுகரியமாக உணர்வார்கள். நம்முடைய நேர்மறை செல்வாக்கிற்கு வெளிப்படையாக இருப்பதற்கான முதல் படி இதுவாகும். 

2. மகிழ்வளிக்கும் விதத்தில் பேசுதல் 

மக்கள் நம்மிடம் மேலும் திறந்தமனதுடன் இருப்பதற்கு, நாம் அவர்களிடம் கனிவான மற்றும் மகிழ்ச்சியான முறையில் பேச வேண்டும். அதாவது அவர்கள் புரிந்து கொள்ளும் வழிகளில், அவர்களின் மொழியை பயன்படுத்தி தொடர்புகொள்ளலாம், மேலும் அவர்களின் விருப்பம் என்கிற விதத்திலும் பேசலாம். அடிப்படையில், மற்றவர்கள் நம்முடன் சவுகரியமாக இருக்கச் செய்ய வேண்டும். அவர்களின் ஆரோக்கியம் பற்றி கேட்கலாம் மற்றும் அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆர்வம் காட்டலாம். யாருக்கேனும் கால்பந்தில் ஆர்வம் இருந்தால், “அது முட்டாள்தனம், என்ன ஒரு நேர விரயம்!” என்று நாம் சொல்லக் கூடாது. இது ஒரு முக்கியமான புள்ளி ஏனெனில் நாம் அவ்வாறு கூறினால், அவர்கள் நம் சொல்வதைக் கேட்பவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களை நாம் தாழ்வாகப் பார்ப்பதாகவே அவர்கள் உணர்வார்கள். போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்கிற அளவிற்கு மிக ஆழமாக சென்று நாம் அவர்களுடன் பேசாவிட்டாலும், கால்பந்து ஆட்டம் பற்றி சிறிதேனும் பேசினால் அவர்கள் நம்மை ஏற்றுக்கொண்டவர்களாக உணர்வார்கள். நாம் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க விரும்பினால், அனைவரிடமும் அவர்கள் ஆர்வம் காட்டும் விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவது முக்கியம். இதை நாம் செய்யாவிட்டால், நாம் எப்படி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்?

ஒரு முறை ஒருவர் திறந்த மனதுடனும் நம்மை ஏற்றுக்கொண்டவர்களாகவும் உணர்ந்தால், நம்முடைய இனிமையாக பேசும் வழி மிகவும் அர்த்தமுள்ள விஷயங்களாக மாறும். சரியான சமயங்களில், சரியான சூழ்நிலைகளில் நாம் புத்தர் போதனைகளின் அம்சங்கள் பற்றி பேசி அவை தொடர்புபடுத்தும் விதம் மற்றும் ஒரு மனிதனுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது என்பதை நாம் பேசலாம். அவ்வாறு செய்வதால் அவர்கள் பெறும் சில நன்மைகளை நாம் குறிப்பிட வேண்டும்.

அறிவுரை வழங்கும்போது நமது குரலின் தொனி மிகவும் முக்கியமானது. நாம் சத்தமாக, கீழ்த்தரமாக அல்லது ஆதரவளிக்கும் விதமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதுவே இனிமையாக பேசுவதை குறிக்கிறது. மிரட்டப்படுவதாகவோ அல்லது தேவையற்ற அறிவுரைகளால் துளைத்தெடுப்பதாகவோ உணராமல் நாம் பேசும் விதமானது மற்றவர் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அறிவுரை வழங்க சரியான தருணம் மற்றும் சரியான வழியை அறிவதற்கு மிகப்பெரிய உணர்திறனும் திறமையும் தேவை. நாம் மிகவும் தீவிரமாக இருந்தால், எப்போதும் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடலை வலியுறுத்தினால், மக்கள் நம்முடன் இருப்பதை சலிப்பாக உணர்வார்கள், நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தான் சில நேரங்களில் நம்முடைய சொற்பொழிவை சுவாரஸ்யமாக்க சில நேரங்களில் நமக்கு நகைச்சுவை தேவை, குறிப்பாக நாம் அறிவுரை வழங்கும் போது அந்த நபர்  தற்காத்துக் கொள்ள விரும்பினால் அதனை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். 

நாம் ஒருவரிடம் சில போதனைகளை விளக்கும் போது இனிமையான, ஆனால் அர்த்தமுள்ள விதத்தில் கனிவாகப் பேசியதன் விளைவாக, நாம் அறிவுறுத்தியவற்றின் நோக்கங்களை அடைய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால், அறிவுரை என்ன என்பதில் அவர்கள் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள், அதன் நன்மைகளை உணர்ந்து, அவர்கள் அதனை மதிப்பார்கள்.

3. மற்றவர்களை தங்கள் இலக்குகளை அடைய நகர்த்துவது

வெறும் பௌத்த கோட்பாட்டின் அடிப்படையில் மட்டும் எந்த அறிவுரையையும் சொல்லிவிட்டு நாம் நகரப்போவதில்லை; மற்ற நபரின் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப போதனையை எவ்வாறு பொருத்த வேண்டும் என்று நாம் வெளிப்படையாக விளக்க வேண்டும். இந்த வழியில், நம்முடைய அறிவுரையை மற்றவர்கள் பயிற்சிப்பதற்கு நகர்த்தலாம் இதனால் அவர்கள் போதனைகளின் நோக்கங்களை அடையலாம். போதனைகளை எப்படி செயல்படுத்தலாம் என்பதை அறிந்தால் மட்டுமே – சரியாக படிப்படியாக என்ன செய்யலாம் – அதனை முயற்சிப்பதற்கான ஆர்வமானவர்களாக மாறுகிறார்கள். 

மற்றவர்களை அவர்களின் வாழ்க்கையில் போதனைகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதில், அவர்களுக்கு எளிதாக்கும் சூழ்நிலைகளை வழங்க முயற்சிக்கிறோம். இதன் அர்த்தம் முதலில் விஷயங்களை எளிதாக்குகிறோம், குறிப்பாக பௌத்தத்தின் எந்த அனுபவமும் இல்லாதவர்களுக்கு எளிமையாக்குகிறோம். மெல்ல மெல்ல நாம் அவர்களை மேலும் கடினமான, மேம்படுத்தப்பட்ட முறைகளுக்கு வழிநடத்தலாம். இதன் விளைவாக அவர்கள் தொடர்ந்து தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள் மற்றும் பயிற்சி முறைகளுடன் முன்னேறிச் செல்கிறார்கள். அவர்களின் தற்போதைய நிலைக்கு அப்பாற்பட்ட சில போதனைகளைப் பயன்படுத்த முயற்சிப்பதன் மூலம் அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

4. இந்த இலக்குகளுடன் இணக்கமாக இருப்பது

மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயங்களில் ஒன்று, நம்மை ஒரு நயவஞ்சகனாக பார்க்க நாம் அறிவுறுத்துகிறோம். அவர்கள் போதனைகளிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க, நாங்கள் அறிவுரை வழங்கியபடி செயல்படுவதன் மூலம் ஒரு நல்ல உதாரணத்தை வைக்க வேண்டும்.

கோபத்தை வெல்வதற்கு நாம் யாருக்கேனும் பௌத்த வழிமுறைகளை போதித்தால், உதாரணமாக, ஒரு மோசமான காட்சியை நினைத்துப் பாருங்கள் நாம் அவர்களுடன் உணவு விடுதியில் இருக்கிறோம், நம்முடைய உணவு வருவதற்கு அரை மணி நேரம் தாமதாகிறது, பௌத்த போதனைகளின் கோபத்தை கையாள்வதைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த முறைகள் பலனில்லாதவை என்று கை விட்டுவிடுவார்கள். மேலும் நம்மிடம் மேலும் எந்த அறிவுரை பெறுவதையும் நிறுத்திக் கொள்வாக்ரள். எனவே தான் நாம் என்ன போதிக்கிறோமோ அது நம்முடைய நடத்தைக்கு ஒத்ததாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் நாம் என்ன சொல்கிறோமோ அதனை மற்றவர்கள் நம்புவார்கள்.

தற்போது நிச்சயமாக, நாம் புத்தர்கள் அல்ல அதனால் நாம் யாருக்கேனும் சிறந்த முன்மாதிரியாக இருப்பதற்கான எந்த வழியும் இல்லை. இருப்பினும், நம்மால் முடிந்த சிறந்தவற்றை நாம் முயற்சிக்கலாம். ஒரு நயவஞ்சகனாக இல்லாமல் இருப்பது என்றால் நாம் உதவ முயற்சிக்கும் ஒருவருடன் இருக்கும்போது போதனைகளைப் பின்பற்றுவதைப் போன்று செயல்படுவது, ஆனால் நாம் தனியாக இருக்கும்போதோ அல்லது நம் குடும்பத்துடன் அதனை மதிக்காமல் செயல்படுவது அல்ல. தர்ம நோக்கங்களுடன் முழுநேரமும் நேர்மையாக தொடர்ந்து செயல்பட வேண்டும். 

சுருக்கம்

பௌத்த போதனைகள் மூலம் முதிர்ச்சியடைவதற்கு மற்றவர்களை ஒன்றிணைத்தல் மற்றும் உதவுவதற்கான நான்கு படிகள் நமது தனிப்பட்ட உறவுகளில் மட்டுமல்லாமல், உலகில் தர்மத்தை கிடைக்கச் செய்வதற்கான பெரிய அளவிலும் பொருத்தமானவை.

  • தாராளமாக இருத்தல் – இலவசமாக போதனை செய்தல்  
  • இனிமையான விதத்தில் பேசுதல் – புத்தகங்கள், இணையதளங்கள், பாட்கேஸ்ட்கள், காணொளிகள், சமூக வலைதளம் உள்ளிட்ட பரந்து விரிந்த ஊடகங்கள் மூலம் போதனைகளை அணுகத்தக்க புரிந்து கொள்ளும் மொழியில் எளிதாக்குதல்.
  • மற்றவர்களை அவர்களின் இலக்கை அடைய நகர்த்துதல் - படிப்படியாக பொருள் படிப்பது மற்றும் உள்வாங்குவது மற்றும் தினசரி வாழ்க்கையில் போதனைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெளிவாகக் குறிக்கிறது.
  • தொடர்ந்து இந்த நோக்கங்களுடன் இருத்தல் – நீங்கள் உங்களுடைய வாழ்வை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள் என்ற விதத்தில் பௌத்த கொள்கைகளை உதாரணம் காட்டி விளக்குங்கள், ஒரு தர்ம அமைப்பு என்றால், ஒரு அமைப்பு எப்படி நடத்தப்படி வேண்டும் என்ற வழியில் விளக்கலாம்.  

இந்த நான்கு படிகள், ஒரு உண்மையான பொதுநல உந்துதலால் ஆதரிக்கப்படுகின்றன, அப்படி இல்லையென்றால் ஞானமடைவதற்கான ஒரு முழு போதிச்சிட்டா, மற்றவர்கள் நம் நேர்மறையான செல்வாக்கை ஏற்றுக்கொள்ள இவையே சிறந்த வழிகள் ஆகும்.

Top