மேம்படுத்தப்பட்ட லாம்-ரிம் பாதை குறித்த விளக்கம்

விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையின் சிறந்த பயன்

ஆன்மீகத்தை நோக்கிச் செல்ல சாத்தியமான வகையில், நாம் அனைவரும் விலைமதிப்பில்லாத மனித உடலுடன், விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை   அடைந்திருக்கிறோம். நாம் இப்போது மனிதர்களாக இருப்பதை விட அறிவொளியை அடைவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது - தெய்வங்களின் ராஜாவான இந்திரனாக நாம் மறுபிறவி எடுத்தாலும் கூட அந்த வாய்ப்பு இல்லை!  

நாம் இப்போது கொண்டிருப்பதை விட சிறந்த செயலாற்றும் அடிப்படை எதுவுமில்லை என்பதால், அதை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாம் அறிந்திருப்பது முக்கியம்.  ஆன்மிகத்தை வளர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி அதனை நமக்குள்ளாகவே மேலும் மேலும் அதிகமாக, கருணை மற்றும் இலகிய இதயத்தோடு மேம்படுத்துதல். ஒரு இலகிய இதயத்தின் அடிப்படையில், நாம் ஒரு போதிச்சிட்டா நோக்கத்தின் அர்ப்பணிப்பு இதயத்தை வளர்த்துக் கொள்ளலாம். இது ஞானத்தை அடைவதற்கான விருப்பம், மற்றொரு விதமாகச் சொல்வதானால் நம்முடைய அனைத்து குறைபாடுகளையும் அகற்றி நம்மால் முடிந்த வரை ஒவ்வொருவரும் சிறப்பிலும் சிறப்பான பலனை சாத்தியப்படுத்தும் விதமாக நம்முடைய முழுத்திறனையும் அடைதல். ஞானத்தை அடைவதற்கு நம்முடைய இதயத்தை நாம் பிறருக்காக அர்ப்பணித்தால், அதுவே நம்முடைய விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை சிறந்த பயனுள்ளதாக்க முடியும். 

கடந்த ஜென்மத்தில் கிடைத்த நேர்மறைத் திறன் இந்த ஜென்ம வெற்றிக்கான காரணம்

பல வகையான மனிதர்கள் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் மத்தியில், ஞானத்தை அடைவது ஒருபுறம் இருக்க, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நன்மை செய்வதில் ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிவது மிகவும் அரிது. பெரும்பாலானவர்கள் இந்த ஜென்மத்தில் மட்டுமே தனக்கான மகிழ்ச்சியைத் தேடுவதைப் பற்றி அக்கறையாக இருக்கின்றனர். இருப்பினும், எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள், நாம் அனைவருமே மகிழ்ச்சியை விரும்புகிறோம் யாருமே துன்பத்தையோ அல்லது பிரச்னைகளைக் கொண்டிருப்பதையோ விரும்பவில்லை. 

இந்த ஜென்மத்தில் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதில் கவனம் செலுத்துபவர்களுக்கு, இரண்டு வகையான மகிழ்ச்சிகள் இருக்கின்றன: உடல் ரீதியிலான மற்றும் மன ரீதியிலான மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் தங்களின் கவனத்தை சில வகையான உடல் ரீதியிலான மகிழ்ச்சிக்குள் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் உடல் ரீதியிலான மகிழ்ச்சியைப் பொறுத்தவரையில், நாம் அனைவரும் நம் வாழ்வில் ஏதோ ஒரு அளவைக் கொண்டுவர முயற்சிக்கிறோம் என்றாலும், அதை எப்படி செய்வது என்று நம்மில் பெரும்பாலோருக்கு உண்மையில் தெரியாது. உதாரணமாக, உணவு, உடை, தங்குமிடம் மற்றும் அந்தஸ்தில் நாட்டம் கொண்டு, வெளியே சென்று கொலை, அல்லது படுகொலை செய்தல் அல்லது அப்பாவி உயிரினங்களை படுகொலை செய்பவர்கள் உள்ளனர். மற்றவர்கள் திருட்டு, அல்லது ஏமாற்றுதல் அல்லது கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள், இவை அனைத்தும் மகிழ்ச்சியைத் தேடுவதிலும், ஒருவித உடல் நலனைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபடுகின்றன. ஆனால், அவர்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள், அந்த நல்வாழ்வைக் கொண்டுவருவதற்கான சரியான வழி அவர்களுக்கு உண்மையில் தெரியவில்லை. மகிழ்ச்சிக்கு பதிலாக, அவர்கள் தங்களுக்கு அதிகமான சிக்கல்களையே உருவாக்குகிறார்கள்.

மற்றொரு புறம்,தொழில், வர்த்தம், விவசாயம், கல்வி, கலை உள்ளிட்டவற்றில் தங்களின் வாழ்க்கையை சிறந்த நேர்மையானதாக்க முயற்சிக்கும் மக்கள். இதில் வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள், அவர்களால் செல்வம் மற்றும் பல உடைமைகளைப் பெற முடியும், இதில் வெற்றி பெறாதவர்களும், அல்லது மொத்த தோல்வியாளர்களாக மாறியவர்களும் கூட இருக்கிறார்கள்.  இதற்கு என்னக் காரணம் என்று நாம் கேட்டால் - ஏன் சிலர் வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் தோல்வியடைகிறார்கள் - அதற்கு காரணம் கடந்த ஜென்மத்தில் அவர்கள் வளர்த்தெடுத்த விதைகள் மற்றும் ஆற்றல்கள் தான். கடந்த ஜென்மத்தில் யார் அழிவுகரமாக இருந்தார்களோ அவர்கள் பெரிய நேர்மறை திறனை கட்டியெழுப்பி இருக்கிறார்கள், இதன் விளைவு அவர்கள் இந்த ஜென்மத்தில் தோல்வியுறுகிறார்கள். அதுவே கடந்த ஜென்மத்தில் யார் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார்களோ அவர்கள் நேர்மறைத் திறனை கட்டியெழுப்பி இருக்கிறார்கள், அது இந்த ஜென்மத்தில் அவர்களின் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமாகி இருக்கிறது. 

ஏன் சிலர் வெற்றி பெறுகிறார்கள் மற்றவர்கள் தோல்வியடைகிறார்கள் என்பதற்கான விளக்கத்தை நீங்கள் ஏற்காவிடில், அத்தகைய முரண்பாடு இருக்க உண்மையில் எந்த காரணமும் இல்லை என்று கருதுங்கள். மக்கள் அதே முயற்சி மற்றும் திறனுடன் செயலாற்றினால், அவர்களால் அதே அளவிலான வெற்றியைக் கொண்டிருக்க முடியும். இந்த ஜென்மத்தில் வாழ்வாதாரத்திற்காக தொழில் அல்லது வர்த்தகத்தில் எந்த வகையான செயலைச் செய்கிறோம் என்பதன் முடிவாக வெற்றி வருகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் – ஆனால் அதற்கான முழுக்காரணம் அதுவல்ல. வெற்றிக்கான உண்மையான காரணங்கள் முந்தைய வாழ்நாளில் ஆக்கபூர்வமான செயல்களிலிருந்து கட்டமைக்கப்பட்ட சாத்தியக்கூறுகள் ஆகும், அதே நேரத்தில் இந்த வாழ்நாளில் நாம் ஈடுபடும் வேலை மற்றும் செயல்பாடு அந்த காரணங்கள் கனிவதற்கு அனுமதிக்கும் சூழ்நிலைகள் அல்லது நிபந்தனைகளாக செயல்படுகின்றன.

அதே போல, வெற்றி என்பது காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில், சேர்ந்தே எழக்கூடியவை. காரணங்கள் கடந்தகால வாழ்க்கையிலிருந்து வந்தவை - அந்த வாழ்நாளில் உருவாக்கப்பட்ட சாத்தியங்கள்.  இந்த வாழ்நாளில் வைக்கப்படும் நேரம் மற்றும் முயற்சியின் அடிப்படையில் சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. இரண்டும் ஒன்றாக சேர்ந்து கட்டாயம் வரும்.

எதிர்கால வாழ்க்கைக்கான அக்கறை

இந்த வாழ்நாளில் மக்கள் எவ்வளவு நல்லவர்களாக மாறினாலும், அவர்கள் எத்தனை அற்புதங்களை அனுபவித்தாலும் சரி; ஆயினும்கூட, அவர்கள் திரட்டியதில் யாரும் திருப்தி அடைவதாகத் தெரியவில்லை. “என்னிடம் போதுமான அளவு இருக்கிறது; நான் இனி பெற வேண்டியது எதுவும் இல்லை” என்று யாரும் சொல்வதில்லை. வைத்திருப்பதைக் கொண்ட அவர்கள் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. அவர்கள் எப்போதும் மேலும் மேலும் அதிகம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களின் மொத்த வாழ்க்கையையும் பணியிலேயே செலவிடுகிறார்கள். இருப்பினும் அவர்களின் பணி ஒருபோதும் முடிவுக்கே வரப்போவதில்லை.

விவசாயியைப் போலவே, ஆண்டின் அனைத்து பருவங்களிலும் உழைப்பது, நடவு செய்தல், அவரது வயல்களில் கலந்துகொள்வது, அறுவடை செய்வது போன்ற ஒரு தொடர்ச்சியான சுழற்சியாக மாறுகிறது. வசந்த காலத்தில், அவர் மீண்டும் நடவு செய்கிறார், மீண்டும் ஒரு முறை அடுத்த சுழற்சி முறைக்கு செல்கிறார். நாங்கள் எவ்வாறு தொடர்ந்து பணியாற்றுகிறோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இந்த வாழ்நாளின் பணி முடிவுக்கு வரும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்றாலும், உண்மையில் அது முடிவடையும் ஒரு காலம் இருக்கிறது – அது தான் நாம் மரணிக்கும் காலம்.

எனவே யாரெல்லாம் உணவு, உடை மற்றும் அடையாளத்திற்காக இந்த வாழ்நாளில் பணியாற்றுகிறார்களோ உண்மையில் அவர்கள் அவர்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஏனெனில், அவர்களால் உடல் சவுகரியத்தை பெற முடிந்தாலும், மன மகிழ்ச்சியை அவர்களால் அடைய முடியாது. மன மகிழ்ச்சி இல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிறைவடையாது மேலும் அவர்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையுடனே இறக்கிறார்கள். 

எனவே, மன மகிழ்ச்சிக்கு சில நீடித்திருக்கக் கூடிய காலத்திற்கு பணியாற்ற முயற்சிப்பது முக்கியமானது. இந்த வாழ்நாளில் நாம் அடையக்கூடிய உடல் மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைக்காத ஒன்று. நாம் உண்மையிலேயே நீடித்த மகிழ்ச்சியை விரும்பினால், நமது எதிர்கால வாழ்க்கையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, உண்மையிலேயே நீண்டகால மகிழ்ச்சிக்காக நாம் பணியாற்ற முடியும்.

எதிர்கால வாழ்நாளில் மகிழ்ச்சியை அடைவதை நோக்கி நாம் உழைத்தால், அது ஒரு ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம், தர்மத்தின் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டுள்ளதன் அர்த்தம். இந்த வாழ்நாளின் கவலைகள் - அழிந்துபோகக்கூடிய விஷயங்கள் - நாம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், நாம் வெறுமனே ஒரு உலக, பொருள் சார்ந்த மனிதர். எதிர்கால வாழ்க்கையின் கவலைகளை நாம் கவனிக்கத் தொடங்கினால், நாம் ஒரு ஆன்மீகவாதியாக மாறுகிறோம்.

எதிர்கால மகிழ்ச்சிக்கு அழிவுகரமான நடத்தையிலிருந்து கட்டுப்படுத்துதல்

எதிர்கால வாழ்க்கையில் மகிழ்ச்சியை உறுதி செய்யும் வழி குறிப்பிட்ட தர்மத்தின் “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை” எடுப்பதை உள்ளடக்கியது. குறிப்பாக, நம்மை நாமே அழிவுரமான செயல்களைச் செய்வதில் இருந்து விலக்குவது என்று அர்த்தம். உடல் அளவில் மூன்று, பேச்சளவில் நான்கு, மனதளவில் மூன்று என்று பத்து அழிவுகரமான செயல்கள் இருக்கின்றன. இது போன்ற எந்த வழிகளிலும் அழிவுகரமாக செயல்படுவதில் இருந்து நம்மை நாமே விலக்கிக்கொள்வதோடு பாதுகாத்தும் கொண்டால், நம்முடைய எதிர்கால வாழ்நாளில் நம்மால் மகிழ்ச்சியை கொண்டு வர முடியும்.

ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டால், ஆன்மிகப் பயிற்சியின் தொடக்கத்தை கொண்டிருப்போம் அது விஷயங்கள் அனைத்தும் இந்த வாழ்நாளிலும் எதிர்காலத்திலும் நல்ல விதமாக செல்வதைக் கொண்டு வரும் என்பதை நாம் இப்போது நிறுவி இருக்கிறோம். இந்த வகையான ஆக்கபூர்வமான நடத்தையானது, எடுத்துக்காட்டாக, ஒரு விலங்கு அல்லது பூச்சியை வேண்டுமென்றே கொல்வது அல்லது வேண்டுமென்றே திருடும் செயல் ஆகியவற்றைப் பார்ப்பது மற்றும் அதிலிருந்து வரும் அனைத்து குறைபாடுகளையும் எதிர்மறையான முடிவுகளையும் பார்ப்பது உள்ளிட்டவையும் அடங்கும். அதைச் செய்துவிட்டு, பின்னர் கொல்லவோ அல்லது திருடவோ கூடாது என்பதில் உறுதியான முடிவை எடுப்பதும் இதில் அடங்கும். மக்கள் இதுபோன்ற முடிவை எடுக்கும்போது, அவர்கள் சரியாகவும் ஆக்கபூர்வமாகவும் செயல்படுவதை உறுதிசெய்ய ஒரு இராணுவம் அல்லது காவல் படை இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் சொந்த ஒழுக்கநெறி மற்றும் நன்னெறிகள் அழிவுகரமான செயல்களில் இருந்து அவர்களைத் தடுக்கின்றன.

கண்டிப்பான நன்நெறிகளை கடைப்பிடித்தல், நாம் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கையாகும், இது மகிழ்ச்சியான மனநிலையில் இறக்க அனுமதிக்கிறது. இல்லாவிடில், நாம் மிகுந்த துக்கம் மற்றும் பதற்றத்துடன் இறக்கக் கூடும். ஒரு நெறிமுறை நபராக இருப்பதற்கான இந்த தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுத்திருந்தால், மரணத்தின் போது நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் ஒரு மனிதனாக, அல்லது ஒரு கடவுளின் சாம்ராஜ்யத்தில் ஒரு கடவுளாக - இந்திரனாகவோ அல்லது ஏதோவொன்றாகவோ மறுபிறவி எடுப்போம் என்று உறுதியாக நம்பலாம்.

அனைத்து உயிர்களிலும் கட்டுப்பாடின்றி தொடரும் பிரச்னைகள்

நாம் மனிதராகவோ – அல்லது கடவுள்களின் ராஜாவாகவோ கூட மறுபிறப்பு எடுத்தாலும் – நம்முடைய வாழ்வில் பிரச்னைகளை கொண்டிருக்கப் போகிறோம். கட்டுப்பாடின்றி தொடரும் பிரச்னைகள் தோன்றும், நாம் எங்பே எப்படி மறுபிறப்பை எடுக்கிறோம் என்பது பொருட்டல்ல. ஆகவே, அழிவுகரமான செயல்களைத் தவிர்ப்பதற்கான ஒரு நெறிமுறையைப் பின்பற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை, அவ்வாறு செய்வதன் மூலம், மோசமான மறுபிறப்பில் நம்மை மறுபிறவி எடுப்பதைத் தடுக்க நாம் விரும்புகிறோம். ஏனெனில், நாம் எங்கே எதுவாக மறுபிறப்பு எடுத்தாலும் பிரச்சினைகள் இருக்கப் போகின்றன.

பரந்த நோக்கம் தேவை என்பதை இது குறிக்கிறது. உதாரணமாக – சமஸ்கிருதத்தில் “ஷமதா” மற்றும் திபெத்தியத்தில் “ஷினய்” – எனப்படும் அசைவற்ற சீரமைவான மனநிலையை நாம் மேம்படுத்தினால் – இதன் விளைவாக இருத்தலின் உயரிய தளம் ஒன்றில் கடவுளாக மறுபிறப்பு எடுக்கக் கூடும்: மிகத் தூய்மையான தளம் அல்லது உருவமில்லாத உயிரினங்கள் தளம். அதன் பின்னால் அந்த வகையான மறுபிறப்பு நிலையின் அனைத்து சிறப்புகளையும் நம்மால் பெற முடியும்.

ஆனால் இருத்தலுக்கான உயரிய தளம் ஒன்றிற்குள் மறுபிறப்பு எடுத்தாலும், அதில் சிறப்பானது என்று ஒன்றுமில்லை. அது வெறுமனே வானளாவிய கட்டிடத்தின் உச்ச தளத்திற்கு செல்வதைப் போன்றதே – ஒரு முறை அங்கே சென்றுவிட்டால், அங்கே செய்வதற்கு எதுவும் இல்லை என்றும் மீண்டும் கீழே வந்துவிடுவோம்.

புத்தரின் வார்த்தைகளில் நம்பிக்கையை பெறுதல்

ஆகவே, நாம் எங்கே மறுபிறப்பு எடுத்தாலும் முன்னேறிச் செல்வதற்கு நம்முடைய பிரச்னைகளை வெளியேற்ற முயற்சிப்பது அவசியம். அதனைச் செய்வதற்கு, நாம் பிரச்னையின் வேருக்குச் சென்று பாகுபடுத்தும் விழிப்புணர்வுடன் துன்பத்தை வெட்ட வேண்டும் இதனால் யதார்த்தம் மற்றும் கற்பனைக்கு இடையேயானவற்றை தெளிவாக நம்மால் பாகுபடுத்த முடியும். இந்த வழியில், இறுதியில் நாம் வெற்றிடத்தை உணரும் நிலைக்கு வருவோம், அதாவது இருத்தலுக்கு சாத்தியமில்லாத வழிகளின் மொத்த இல்லாமை என்று அர்த்தம். யதார்த்தத்தின் இந்தத் தெளிவான புரிதல் நம்முடைய தவறான முன்னிறுத்தல்களை வெளியேற்றுகிறது, மேலும் அப்படி செய்வதனால், எந்த ஜென்மத்திலும் நாம் அனுபவிக்கும் பிரச்னைகள் மற்றும் துன்பங்களை எப்போதைக்கும் அகற்றலாம்.  இது என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது, அதுவே நாம் அடையக்கூடிய ஒன்றும் கூட.

வெற்றிடம் பற்றிய போதனைகளை நாம் புத்தரின் வார்த்தைகளால் சேமித்து வைக்கப்பட்டுள்ள பழங்கால புத்தகங்களில் இருந்து கற்கலாம். ஆனால் இந்த வேதங்களின் செல்லுபடியாகும் நம்பிக்கையை நாம் எவ்வாறு பெறுவது, வெற்றிடத்தை மட்டும் கருத்தில் கொள்வதற்ற, மாறாக அதற்குள் புத்தர் பேசியுள்ள அனைத்தையும் கருத்தில் கொள்வதாகும். நம்பிக்கை அதற்குள்ளாக செல்லுபடியாக தர்க்கம் மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் அடைய வேண்டும். உதாரணமாக எடுத்துக்கொள்வோம், வெற்றிடம். தர்க்கரீதியான பகுத்தறிவை நம்புவதன் மூலம் வெற்றிடத்தின் செல்லுபடியை நாம் நிறுவ முடியும். கூடுதலாக, உட்கொள்ளப்பட்ட ஒருநிலைப்படுத்துதல் மற்றும் அசைவற்ற சீரமைவான மனநிலையை எவ்வாறு அடைவது என்பது குறித்த போதனைகளை நாம் நடைமுறையில் அடைவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், இந்த நிலைகளை நாமே பெறுவதன் மூலமும் சரிபார்க்க முடியும்.

இதனுடன், இந்த பயிற்சிகள் மூலமாக உண்மையில் அத்தகைய ஒருநிலைப்படுத்துதலை அடைவதற்கான துணை தயாரிப்புகளாக விவரிக்கப்படும் பல்வேறு வகையான உயரங்கள், புலன்படந்த உணர்வை நாம் உண்மையில் அடைகிறோம். இந்த வெவ்வேறு விஷயங்கள் அனைத்தும் புத்தரால் போதிக்கப்பட்டவை, உண்மையில் நம்முடைய சொந்த அனுபவத்தால் அதனை செல்லுபடியாக்கலாம்.

இதைப் போலவே, நம்முடைய கடின உழைப்பு மற்றும் தலைப்புகள் தொடர்பாக புத்தர் என்ன போதித்தாரோ அதனை மெய்யாக்கும் முயற்சியின் அடிப்படையில் தர்க்க மற்றும் சொந்த அனுபவத்தின் மூலம் நம்மால் அதனை செல்லுபடியாக்க முடியும், பொதுவாக புத்தர் வார்த்தைகளின் செல்லுபடியாகும் நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்கிறோம். அந்த உறுதியான நம்பிக்கையிலிருந்து பெறப்பட்ட பாதுகாப்பால், புத்தர் பேசிய பிற தெளிவற்ற விஷயங்களை செல்லுபடியாக்கும் மிக ஆழ்ந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம்.

எடுத்துக்காட்டாக, நாம் ஆக்கப்பூர்வமான விதத்தில் செயல்பட்டால், இதன் பலனாக நாம் சிறந்த நிலை மறுபிறப்பான மனிதன் அல்லது கடவுளாக மறுபிறவி எடுப்போம் என்று புத்தர் கூறி இருக்கிறார். மற்றொரு புறம், நாம் அழிவுகரமாக எதிர்மறையாக செயல்பட்டால், அதன் தொடர்ச்சியாக நரக உயிரினமான “தீராப்பசி கொண்ட” பேய், அல்லது மிருகமாக மறுபிறப்பு எடுப்போம். இவை எல்லாம் நடத்தை காரணம் மற்றும் விளைவு பற்றிய விளக்கங்கள், நமது சொந்த அனுபவம் அல்லது தூய தர்க்கத்தின் மூலம் அவற்றை ஆதாரப்படுத்துவது அல்லது செல்லுபடியாக்குவது கடினம். வேதங்களை ஆதாரமாக வைத்து கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில் தர்க்கம் மற்றும் அனுபவம் உட்கொள்ளப்பட்ட ஒருமனப்படுத்துதல் மற்றும் வெற்றிடத்தின் சரியான புரிதலை கருத்தில் கொண்டு புத்தர் என்ன போதித்தாரோ அதனை செல்லுபடியாக்குவதை விளக்கினால், நடத்தை மற்றும் அதன் முடிவுகள் பற்றி புத்தர் கூறியதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் காரணமாக மாறுகிறது. 

அதே சமயம், வெற்றிடம், யதார்த்தம், இருத்தலுக்கான சாத்தியமில்லாத மொத்த இல்லாமை குறித்த புத்தரின் விளக்கக்ளை மிக கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவை அனைத்தும் சரியானவை என்று உணர்வதனால், அதன் பின்னர் நாம் புத்தரின் மேலான விளக்கங்களை கருத்தில் கொள்ளலாம்: அதாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுவதன் முடிவு மகிழ்ச்சி; அழிவுகரமாக மற்றும் எதிர்மறையாக செயல்படுவதன் விளைவு துன்பம். இந்த விளக்கங்கள் அனைத்தும் கூட சரியே என்று பின்னர் நாம் உறுதியான நம்பிக்கையை பெற்று, அதன் அடிப்பைடயில் நம்முடைய நடத்தையில் மாற்றம் செய்வதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கலாம். நமக்கு மகிழ்ச்சி தேவையெனில், நாம் செயல்படும் விதத்திலேயே அதைக் கொண்டு வரலாம். அதாவது ஆக்கப்பூர்வமாக மற்றும் நேர்மறையாக நாம் செயல்பட வேண்டும். 

துறவு: அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுபட தீர்மானித்தல்

சிறப்பான மனித மறுபிறப்பை ஆன்மிக வளர்ச்சியை அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளுடனும் நாம் இப்போது கொண்டிருப்பதன் அடிப்படை செயல்பாடையும் கூட கருத்தில் கொள்வது நலம் தரும் – வேறு எங்குமே இப்படி தோன்றவில்லை. கடந்த ஜென்மத்தில் கட்டியெழுப்பியுள்ள ஏராளமான நேர்மறைத் திறனின் விளைவே இது. கட்டாயமாக நாம் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும் செயல்பட்டு இருப்போம், அதுவே நமக்கு இத்தகைய மறுபிறப்பையும் வாய்ப்புகளையும் இப்போது நமக்கு கொண்டு வந்து தந்திருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை நாம் வீணாக்கி விடக் கூடாது. உணவு மற்றும் உடை, புகழ் மற்றும் அங்கீகாரம் என்று இந்த ஜென்மத்திற்கானவற்றில் மட்டுமே நாம் முழுமையாக ஈடுபட்டிருந்தால், பின்னர் இந்த வாழ்நாளே வீண் தான். நம்முடைய ஆத்மாவின் மீதான அக்கறையாக இவையாவும் இருந்தால், பின்னர் இந்த அறுதியிடலால், நாம் இந்த வாழ்நாளில் மட்டும் மொத்த விடாப்பிடி எண்ணங்களில் இருந்து திசை திரும்பவே முடியாது.   

மற்றொரு புறம், எதிர்கால வாழ்நாளில் கடவுள், இந்திரன், உள்ளிட்ட மறுபிறப்புகளுடன் மகிழ்ச்சியைப் பெறுவதற்காக நெம்முடைய முயற்சி முழுவதையும் போட்டால், அதுவும் பிரச்னையே. ஒரு கடவுளைப் போன்ற வகையான வாழ்க்கையை பெற்றிருப்பதைப் பாருங்கள். அந்தக் கடவுள் ஏராளமான மகிழ்ச்சியை கொண்டிருக்கிறார் மேலும் தற்காக மேலோட்டமான பிரச்னைகள் எதுவும் இல்லை.  

ஆனால் மரணிக்கும் போது, அந்தக் கடவுள் கூட ஏராளமான மறுப்பு மற்றும் மனஉளைச்சல் கொண்டிருக்கிறார், ஏனில் ஒட்டுமொத்த வாழ்வின் மகிழ்ச்சியும் ஒரு கனவைப் போலவும், மிக அதிகமான துன்பம் மற்றும் மகிழ்ச்சியின்மையை மரணத்தின் முகம் கொண்டு வரப்போகிறது. ஆகவே, எந்த மாதிரியான மறுபிறப்பை கொண்டிருக்கப் போகிறோம் என்பதை நமது இலக்காக வைத்தால் அது நம்முடைய எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வல்ல.

கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத மனித உடலின் முழுப் பயனையும் அடைய வேண்டும், ஏனெனில் அது இழக்கப்போகும் ஒன்று. பிறந்த பிறகு, மரணத்தில் இருந்து தப்பித்தவர்கள் என்று யாரும் இல்லை. மரணம் என்பது நிச்சயமாக நம் எல்லோருக்கும் வரக்கூடிறயது, காலம் மட்டுமே அங்கே ஒரு பொருட்டு. ஒருவருக்கு மரணம் வரக்கூடிய குறிப்பிட்ட நேரம் எது என்பதை யாராலும் சொல்ல முடியாது. இந்த யதார்த்தங்களைப் பற்றி சிந்திப்பது, நாம் இப்போது உயிருடன் இருக்கும்போதே நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறது.

எனவே, இந்த வாழ்நாளிற்காக மட்டும் பெற்ற விஷயங்களுடன் நாம் நம்முடைய மொத்த விடாப்பிடி எண்ணங்களில் இருந்தும் விலகிச் செல்ல வேண்டும்.  இந்த வாழ்நாளின் பல்வேறு அழிந்துபோகக்கூடிய விஷயங்களுக்கு நீடித்த சாரம் எதுவுமில்லை என்பதைப் பிரதிபலிப்பதன் மூலம் இதைச் செய்கிறோம். இவ்வழியில், இந்த வாழ்நாளிற்கான விஷயங்களுடன் நாம் நம்முடைய விடாப்பிடி எண்ணங்களில் இருந்து விலகி, அவ்வகையான விடாப்பிடி எண்ணகள் அடிப்படையிலான பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானத்தை மேம்படுத்த முடியும். விடுபடுவதற்கான இவ்வகையான தீர்மானமே “துறவு.”  

இதே போன்று, நாம் எதிர்கால வாழ்நாள் மற்றும் மறபிறப்பு எடுக்கக் கூடிய அனைத்து இதர வகையான சூழல்களையும் பார்க்க வேண்டும். எதிர்கால மறுபிறப்புகளில் ஒரு மனிதனாகவோ அல்லது கடவுளாகவோ நாம் பெறக்கூடிய சிறப்பையும் மகிழ்ச்சியையும் பற்றி சிந்திக்கும்போது, இவை சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் எவ்வளவு பணம் படைத்தவராக இருந்தாலும், பிரச்னைகள் கட்டுப்பாடின்றி நிகழும். ஆகவே, எதிர்கால வாழ்நாட்களுக்காக இந்த விஷயங்களுடன் இணைந்திருப்பதும், அவதானிப்பதும் நாம் விலகிச் செல்ல வேண்டிய ஒன்று. இரண்டாவது வகை உறுதியை வளர்க்க முயற்சிப்பதன் மூலம் இதைச் செய்கிறோம். இதன் பெயரே, எதிர்கால வாழ்ளில் விடாப்பிடி எண்ணங்களுடன் வரக்கூடிய பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானமாகும். 

ஆகவே விடபடுவதற்கு இரண்டு வகையான தீர்மானங்கள் இருக்கின்றன. இந்த வாழ்நாளின் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானம் மற்றும் அனைத்து எதிர்கால வாழ்க்கையிலும் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானம். 

நிலையாமை

ஆன்மிகப் பயிற்சியாளர் யாரென்றால், எவர் ஒருவர் வாழ்வில் எந்தச் சூழலும் எப்போதும் நிலையாக இருக்கப்போவதில்லை என்ற உண்மையை நினைவில்வைத்திருப்பவரே; நிலையாமை மற்றும் மரணத்தை நினைவில் வைத்திருப்பவர்; தன்னடைய பிரச்னைகள் மற்றும் வாழ்வில் இருக்கும் அனைத்து பிரச்னைகள் பற்றி விழிப்புடனும் நினைவிலும் வைத்திருப்பவர். அவ்வகையான பயிற்சியாளர்கள் இது போன்ற அனைத்து பிரச்னைகளையும் தவிர்ப்பதற்கான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க உந்துதல் தரும் ஒன்று அது. நிலையாமை, பிரச்னைகள் மற்றம் மரணம் பற்றி நாம் மறந்துவிட்டால், நாம் அவற்றை கடந்த செல்ல முடியும், அது மிக நல்லதாக இருக்கும் – அது மிகச் சிறப்பானது. ஆனால் உண்மை என்னவென்றால், நம்மால் அதைச் செய்ய முடியாது. நாம் இறக்கப் போகிறோம் என்ற உண்மையை புறந்தள்ளிவிட்டு நம்முடைய வாழ்க்கை பிரச்னைகளைக் கொண்டிருக்கப் போகிறது அவை உண்மையை மறையச் செய்யாது எனபதே நிதர்சனம். எனவே நம்முடைய பிரச்னைகள் பற்றி மிகச் சிறந்த விழிப்புடன் இருந்து, யதார்த்தத்துடன் அதனை அணுகி, அவற்றை விலக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆன்மிகப் பயிற்சியோடு இணைந்தது இதுவே.

முதலில் இந்த நடவடிக்கைகளின் பல்வேறு சுற்றுப் பரிமாற்றத்தை அமைத்தபோது, நிலையாமை, எதுவும் நிலைத்து இருக்கப் போவதில்லை என்பதை பற்றி கற்பிப்பதன் வழியில் புத்தர் தானே அவ்வாறு செய்தார். அவருடைய மொத்த ஆன்மிக தாகம் நிலையாமையை உணர்வதில் இருந்து தொடங்கியது. அதே போன்று, அவருடைய வாழ்க்கை முடிந்து அவர் இறந்த போது, அதுவும் கூட நிலையாமை பற்றிய உண்மையை ஒவ்வொருவருக்கும் விளக்கும் கருத்திற்குள்ளாகவே இருந்தது. 

நான்கு மேன்மையான உண்மைகள்

மேலும், பிரச்னைகள் எங்கிருந்தும் வருவதில்லை. எந்தக் காரணமும் இன்றி அவை நமக்கும் நிகழாது. மாறாக, நம்முடைய அனைத்து உண்மையான பிரச்னைகள் மற்றும் மகிழ்ச்சியின்மை நம்முடைய வலுக்கட்டாயமான நடத்தை, சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகள் போன்ற உண்மையான காரணங்களில் இருந்து எழுகிறது – மற்றொரு விதமாக சொல்வதானால், நம்முடைய கர்மா மற்றும் மாயை. சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளுடன் வலுக்கட்டாயமாக செயல்படுதலே எல்லாப் பிரச்னைகளையும் கொண்டு வருகிறது. 

இப்போது, நம்முடைய அனைத்து பிரச்னைகளுக்குமான இந்த இரண்டு காரணங்களில், வலுக்கட்டாயமான நடத்தையே சிக்கலான உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் வேரூரின்றி இருப்பதை நாம் பார்க்கலாம். 

பௌத்த புத்தகங்களில் விளக்கிக் கூறப்பட்டிருக்கும் 84,000 வெவ்வேறு வகையான சிக்கலான உணர்வுகள் மற்றும் நடத்தைகளை நாம் பகுப்பாய்ந்தால், அவை அனைத்தும் அறியாமை அல்லது இருத்தலுக்காக உண்மையிலேயே நிறுவப்பட்ட இருத்தல் மற்றும் அடையாளங்களுக்கு ஈர்ப்பதற்கு நம்மை வழிநடத்தும் விழிப்புணர்வின்மை போன்ற ஒற்றை ஆதாரத்தில் இருந்து இவை அனைத்தும் வருகிறது என்பதை நாம் கண்டறியலாம். 

நமக்கோ மற்றவற்றிற்கோ உண்மையான நிறுவப்பட்ட அடையாளம் என்று எதுவும் இல்லை – இருப்பினும், அவற்றிற்கு உண்மையான நிறுவப்பட்ட அடையாளம் அல்லது இருத்தல் இருப்பதாக நினைப்பதால் அந்த விஷயங்கள் நம்மை ஈர்க்கிறது. எனவே, அந்தப் பொருளுக்கு உண்மையான நிறுவப்பட்ட அடையாளம் என்ற ஒன்று இருப்பதற்கு சாத்தியமில்லை என்பதை நாம் உணர்ந்து பாகுபடுத்த முடிந்தால், அது போன்ற அடையாளம் இருக்கும் பொருளால் ஈர்க்கப்படுவதை அகற்றுவதற்கான மாற்று மருந்தாக அது செயல்படும். 

நான்கு மேன்மையான உண்மைகளில் ஒன்று நான்கு மேன்மையான உண்மைகளில் ஒன்று - உண்மையில் நிறுவப்பட்ட இருத்தல், அடையாளம் என்ற ஒன்று இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டால் – அந்தப் புரிதலே “மனதிற்கான சரியான பாதை,” “உண்மையான பாதை”. விடுதலை மற்றும் எழுச்சியை அடைதல் ஆகியவற்றை சரியானபடி புரிந்துகொண்டாலே மனதின் பாதை சரியானதை உணர ஆரம்பிக்கும். 

உண்மையில் நிறுவப்பட்ட அடையாளம் என்ற ஒன்று எதற்குமே இல்லை என்ற பாகுபடுத்தும் விழிப்புணர்வு போன்ற உண்மையான மனதின் பாதையை நாம் கொண்டிருந்தால் – பின்னர் நாம் எப்போதும் சிக்கலான உணர்வுகள் அல்லது அணுகுமுறைகளை கொண்டிருக்க மாட்டோம்,ஏனெனில் இது போன்ற பிரமைகள், சாத்தியமற்ற வழிகளை முன்னிறுத்தி நம்புவதை அடிப்படையாகக் கொண்டவை. நாம் நீண்ட காலம் எந்த சிக்கலான உணர்வுகள் அல்லது அணுகுமுறைகள் இன்றி இருந்தால், நாம் வலுக்கட்டாயமாக செயல்பட மாட்டோம். நாம் வலுக்கட்டாயமாக நீண்ட காலம் செயல்படவில்லையெனில், நமக்கு நாமே நீண்ட காலத்திற்கு பிரச்னைகளை உருவாக்க மாட்டோம். நம்முடைய அனுபவத்தில் நீண்ட காலங்கள் பிரச்னை எழாத நிலையே “உண்மையான நிறுத்தம்” ஆகும்.

நான்கு உண்மைகளின் வழங்கல் உயர்நிலை உணர்வாளர்களான அசாத்தியமானவர்களால் காணப்பட்ட உண்மை. இவையே நான்கு மேன்மையான உண்மைகள். முதல் இரண்டு உண்மைகள் சிக்கல் என்றால் என்ன, அதாவது உண்மையான பிரச்னைகள் மற்றும் அதன் உண்மையான காரணங்களைக் கையாள்கிறது: வலுக்கட்டாயமான நடத்தை மற்றும் சிக்கலான உணர்வுகள் மற்றும் நடத்தைகள். விடுதலை என்றால் என்ன என்பதை கையாள்வதுடன் நம்முடைய கவனத்தை நாம் கடைசி இரண்டு உண்மைகளை நோக்கி திருப்பினால், பின்னர் அனைத்து பிரச்னைகளையும் எப்போதைக்கும் வெளியேற்றுவதற்கான காரணங்கள் மூலம் உண்மையான நிறுத்தத்தை அடைய விரும்பலாம். அதனைச் செய்வதற்கான வழி உண்மையான மனதின் பாதைகளை மேம்படுத்துவதாகும். இவ்வாறாக உயர்நிலை அசாத்தியவாதிகள் உண்மையில் கண்டறிந்த இந்த நான்கு உண்மைகளை நாம் உணரவும் புரிந்து கொள்ளவும் முடியும். 

சிறப்பான செயலாற்றும் கட்டமைத்தலை அடிப்படையில் நாம் நம்முடைய விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பில் கொண்டிருக்கிறோம், இப்போது நாம் நம்முடைய அனைத்து முயற்சிகளையும் இந்த நான்கு மேன்மையான உண்மைகளை உணர்வதற்கு பயன்படுத்த வேண்டும். நாம் அவ்வாறு செய்தால், இந்த மறுபிறப்புடன் நாம் கொண்ட வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத் இருக்கிறோம் என்று பொருள். உண்மையான நிறுவப்பட்ட இருத்தல் என்ற ஒன்றே இல்லை என்ற பலன் தரும் மனதிற்கான பழக்கம், நிலையான, நீடித்திருக்கும் விழிப்புணர்வை நாம் கட்டமைத்தால், நாம் என்றென்றைக்கும் நம்முடைய அனைத்து பிரச்னைகளையும் முழுமையாக வெளியேற்றலாம். 

இரக்கத்தை மேம்படுத்துதல்

நமக்காக மட்டுமே அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விலகுதல் இப்போதைக்கு நல்லது – ஆனால் அது போதுமானதல்ல. ஏனெனில் நாம் ஒருவர் மட்டுமே, எண்ணிலடங்கா ஏராளமான மற்றவர்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நம்மால் எண்ணிக்கை செய்யவே முடியாது, மேலும் ஒவ்வொருவருக்கும் பிரச்னைகள் உள்ளன – அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வழியில் துன்பப்படுகிறார்கள். எனவே, நமக்காக மட்டுமே செயலாற்றுதல் சரியல்ல: நாம் ஒவ்வொருவருக்கும் தீர்வு காண வேண்டும். 

கட்டுக்குள் மனம் கொண்டுள்ள மற்ற உயினிங்கள் நம்மிடம் மிகவும் கருணையுடன் இருக்கின்றன, பிரதிபலிப்பில் பார்த்தால், இது மிகத் தெளிவாகத் தெரியும் – சொல்லப்போனால், அவற்றை விட கருணை மிகுந்த உயிரினங்கள் எதுவுமில்லை. புத்தரின் கருணை மற்றும் கட்டுக்குள் மனதை வைத்திருக்கும் உயிரினங்களின் கருணையையும் நாம் கருத்தில் கொண்டால், இரண்டுமே சமம் என்பதை நாம் உணரலாம். உதாரணமாக, நமக்கு தேன் பிடித்தால், அந்தத் தேன் எங்கிருந்து வருகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அது ஏராளமான தேனீக்களின் கடின உழைப்பில் உருவாகி நமக்கு கிடைக்கிறது: பல பூக்களுக்குச் சென்று, மகரந்தச் சேர்க்கை செய்து தேனை பிரித்தெடுத்து தனியே சேகரித்து வைக்கிறது. நம்மால் தேனின் சுவையை அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், நாம் இந்த சிறிய பூச்சிகளின் பணி மற்றும் கருணையை சார்ந்திருக்க வேண்டும். 

அதே போன்று நம்மில் சிலர் உண்ணக்கூடிய மாமிசமும் அப்படித்தான், உதாரணமாக நாம் உடல் நலிவுற்று பலவீனமாக இருக்கும் போது நம்முடைய உடலை உறுதிசெய்வதற்கு சில உணவு தேவை, அது எங்கிருந்து வருகிறது? நம்முடைய உடல் வலிமைக்கும் ஊட்டச்சத்திற்கும் தேவையான மாமிசமானது விலங்குகள் தங்களில் வாழ்வை விட்டுக்கொடுப்பதில் இருந்தே வருகிறது. 

எனவே, நம்முடைய அனைத்து பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கான உறுதியை நாம் மேம்படுத்தினால், அந்த அணுகுமுறையை நாம் மற்றவர்களுக்கும் பரிமாற்றம் செய்ய வேண்டும். நம்முடைய சொந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானம் போல, மற்றவர்களும் அவர்களின் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதை நாம் விரும்ப வேண்டும். இந்த அணுகுமுறையே “இரக்கம்” ஆகும். 

நம்முடைய சொந்த பிரச்னைகள் மற்றும் நாம் எவ்வாறு அதனை வைத்திருக்க விரும்பவில்லை என்பதை குறித்து நாம் தீவிரமாக சிந்திக்காவிட்டால் – மேலும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானத்தை நாம் மேம்படுத்தாவிட்டால் – மற்றவர்களின் பிரச்னைகளைத் தீவிரமாகப் பார்ப்பது மிகவும் கடினம். மற்றவர்கள் அவர்களின் பிரச்னைகளில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு நேர்மையான இரக்கத்தை நம்மால் மேம்படுத்த முடியாது. உதாரணமாக, ஒரு அதிகாரி தன்னுடைய தொழிலில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து உயர் பதவியை அடைந்திருந்தால், அந்த மனிதர் மற்றவர்களின் பிரச்னைகளுக்காக பரிவு மற்றும் இரக்கத்தை கொண்டிருப்பார். இவ்வகை மனிதரால் மற்றவர்களுக்கு கடினமான சூழல்களில் சிறப்பாக உதவி செய்ய முடியும், மாறாக துன்பம் என்றால் என்ன என்றே அறியாமல் எளிய வழியில் உயர் பதவிக்கு வந்தவர்களால் அவ்வாறு உதவ முடியாது.   

போதிசிட்டா

மற்றவர்கள் அவர்களின் துன்பத்தில் இருந்து விடுபட விரும்பும் அணுகுமுறையே “இரக்கம்” ஆகும். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் அணுகுமுறையே “அன்பிற்கான” விளக்கம். ஒவ்வொருவரும் துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதை கருத்தில் கொண்டால், ஒவ்வொருவரும் நம்மிடம் கருணையோடு இருப்பதாக நாம் முடிவு செய்தால், மேலோட்டமாக இல்லாமல், மாறாக அவர்களின் அனைத்து பிரச்னைகளில் இருந்து அவர்கள் விடுபடுவதற்காக நாம் அவர்களுக்காக எதாவது செய்ய வேண்டும் –பொறுப்பெடுத்துக் கொள்ளும் இதனையே “விதிவிலக்கான தீர்மானம்” என்கிறோம். 

நாம் வெறுமனே நம்முடைய சுயநலக் கவலையில் சிக்கிக் கொண்டால், புத்தரின் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளவோ அல்லது உணரவோ வழி இல்லை. மாறாக, நாம் நம்முடைய சுயநலத்தில் இருந்து வெளியேறி மற்றவர்களின் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டால், அதுவே நாமும் ஞானமடைந்த புத்தராக மாறுவதற்கான அடிப்படையாகும். சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டுநமக்கான வளங்களை அடைவதற்காக கொலை, திருடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறோம். திறனில்லாத இதுபோன்ற வழிகள் கூடுதல் பிரச்னைகளையே நமக்கு கொண்டு வரும் இதற்கெல்லாம் ஆணிவேர் நம்முடைய சுயநலமாகும்.

மற்றவர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டதன் விளைவாக ஷக்யமுனி புத்தர் முற்றிலும் தெளிவான சிந்தனை உள்ளவராகவும் முழுமையாக பரிணாம வளர்ச்சி அடைந்தவராகவும் விளங்கியதால் அவரால் ஞான நிலையை அடைய முடிந்தது. சொல்லப்போனால் மற்றவர்களின் மீது அக்கறை கொண்டதன் அடிப்படையில் அனைத்து புத்தர்களுமே தங்களின் காலகட்டங்களில் முழுத்திறனுடன் இந்த நிலையை உணர்ந்தார்கள். எனவே, நாம் யதார்த்தவாதிகளாக இருந்தால், “ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களை அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுவிப்பதையும் கொண்டு வருவதைப் பற்றி நாம் விதிவிலக்கான தீர்மானத்தை கொண்டிருந்தாலும் கூட, நம்மால் அவ்வாறு செய்ய முடியாது, நாம் எவ்வளவு விருப்பப்படுகிறோம் என்பது பொருட்டல்ல. அனைவரும் அவர்களின் பிரச்னைகளை வென்று மகிழ்ச்சியை பெறுவதற்கு உதவும் திறன் புத்தருக்கு மட்டுமே உள்ளது. 

எனவே, மற்றவர்கள் பலனடைய நம்முடைய மனதை முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டியது அவசியம், புத்தரின் ஞான நிலையை அடைவதற்கு சாத்தியம் இருக்கும் சிறந்தவற்றை செய்ய வேண்டும். அதுவே “போதிசிட்டாவின் நோக்கம்.” 

அது போன்ற அர்ப்பணிப்பு இதயத்துடன் போதிசிட்டாவின் நோக்கத்தையும் கொண்டிருந்தால், ஒரு மலரைப் போல எளிமையான வேண்டுதலைக் கூட நாம் செய்யலாம். அது போன்ற நம்முடைய வேண்டுதலின் நோக்கம் ஒவ்வொருவருக்கும் பலனை ஏற்படுத்துகிறது, மேலும் ஞானமடைய உதவுகிறதென்றால் நம்மால் முடிந்த சிறந்த சாத்தியமானவற்றை செய்யலாம், பின்னர் அந்த எளிய செயலின் இருக்கும் நேர்மறை திறனில் இருந்து கட்டமைக்கப்படுவது பல்மடங்காகப் பெருகும். உண்மையில், நம்முடைய நோக்கமானது ஒவ்வொருவருக்கும் பலனை ஏற்படுத்த முடியுமென்றால், நன்மை என்பது அந்த நோக்கத்திற்கு சரியான விகிதாச்சாரமாகும். இது உயிரினங்களின் எண்ணிக்கையைப் போலவே பரந்து விரிந்தது. நம்முடைய இதயத்தை தூய்மையாகவும் நேர்மையாகவும் இந்த வழியில் அர்ப்பணிப்பதன் பலனானது புத்தரிடம் இந்த உலகம் முழுவதையும் தங்கம் மற்றும் நவரத்தினங்களால் நிரப்ப வேண்டும் என்று வேண்டுதல் வைப்பதில் கிடைக்கும் பலனைவிட மிக உயர்ந்ததாகும். 

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் உணவளித்தாலும் கூட, போதிசிட்டா நோக்கத்துடன் அது போன்ற அர்பணிப்பை ஒரு கணமேனும் கொண்டிருந்தாலும் அந்தப் பலன் உயர்ந்தது.

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு முறை மட்டுமே உணவளித்தாலே அவர்களின் பசி போய்விடும் என்று கருத முடியுமா? அவர்கள் மிக விரைவிலேயே மீண்டும் பசிக்கு ஆளாகிவிடுவார்கள் மேலும் அவர்களின் பசிப் பிரச்னை நீடித்திருக்கும். ஆனால் நாம் போதிசிட்டா நோக்கத்துடன் ஒவ்வொருவரின் அனைத்து பிரச்னைகளும் எல்லா நேரமும் அகல விரும்பி ஞானமடைய சிறந்த சாத்தியமுள்ளவற்றை செய்து நம்மை நாமே அர்ப்பணித்தால், அது ஒவ்வொருவரின் பசியை மட்டுமல்ல, மாறாக அவர்களின் பிரச்னைகளும் முழுமையாக முடிவு காண்பதற்கான திறனை கொண்டு வரும்.

இறுதிக் குறிப்புகள்

ஆகவே, போதிசிட்டா நோக்கத்தை வளர்ப்பதை நோக்கி அடியெடுத்து வைக்கும் போது, நாம் எந்த ஒரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்த மாட்டோம் என்று திடமான உறுதிமொழியை எடுக்க வேண்டும். மற்றவர்களைத் துன்பப்படுத்துவதன் தீமைகள் மற்றும் பின்விளைவுகளை நாம் பார்த்தால், அவர் யாராக இருந்தாலும், அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதி பூண்டால், அது மிகப்பெரிய பலன்களைக் கொண்டு வரும். இந்த வகை நடத்தையின் விளைவு மிகவும் பாராட்டத்தக்கது. யாரையும் காயப்படுத்தவோ அல்லது யாருக்கும் தீங்கு ஏற்படுத்தவோ போவதில்லை என்று நாம் இப்போது எடுக்கப் போகும் திடமான உறுதிமொழியானது நம் அனைவராலும் இப்போதே எடுக்கக் கூடிய ஒரு ஆன்மிக நடவடிக்கையாகும். ஆன்மிகப் பயிற்சி என்பது மிகவும் உயர்ந்தது மற்றும் தொலைதூரமானது என்று நாம் நினைக்கத் தேவையில்லை.  

சுருக்கமாகச் சொன்னால், ஆன்மிகப் பயிற்சியாளராக இருப்பது என்பது ஏதோ சில வகை அயல்சார்பு வாழ்க்கையை வாழ்வதோடு சேர்ந்ததல்ல. வரலாற்றில் இருக்கும் பல விவரங்கள் குடும்பத்தலைவர்களும் மிகப்பெரிய ஆன்மிகப் பயிற்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த எண்பத்து –நான்கு மஹாசித்தர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கும் போது, அவர்களில் பலர் குடும்பத் தலைவர்களும் இருக்கின்றனர். 

நமக்கு வயது மூப்புடைந்தாலோ அல்லது வயதானவர்களால் ஆன்மிகப் பயிற்சியாளர்களாக முடியாது என்றோ நாம் விரக்தியடையத் தேவையில்லை. கடந்த கால விவரங்களைப் பார்த்தால், ஸ்ரீஜதி என்ற குடும்பத்தலைவரை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், அவர் ஆன்மிகப் பயிற்சியாளராக மாறும் போது அவருடைய வயது 80. தன்னுடைய வாழ்நாளில் அவரால் விடுபட்ட நிலையை அடைய முடிந்தது. அதனால் நமக்கு ஒரு போதும் அதிக வயதாகிவிடவில்லை. 

மறுபுறம், நாம் இளமையாக இருந்தால், நாம் அற்பமானவர்களாக இருக்கக்கூடாது, ஆனால் நம் ஆன்மீக நடைமுறைகளில் தீர்க்கமாக இருக்க வேண்டிய எந்த ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மரணம் எப்போது நிகழும் என்பதை அறிய வழி இல்லாததால், நமக்கு வயதாகும் வரை இந்த தடுப்பு ஆன்மீக நடவடிக்கைகளை எடுப்பதை நாம் தள்ளி வைக்கலாம் என்று நாம் நினைக்கக்கூடாது. மேலும், முதுமை என்பது ஒரே நேரத்தில் நம் மீது வருவது போல் தோன்றுகிறது. அவ்வாறு நடக்கும்போது, திடீரென்று, நம்முடைய வாழ்க்கை நழுவ விட்டது போல உணர்கிறோம்.

நம்மால் செய்யக் கூடிய பல்வேறு எளிமையான நேர்மறை விஷயங்கள் உள்ளன. எனக்கு தெரிந்த சிலர் மற்ற நாடுகளில் இருக்கின்றனர், அவர்கள் தங்களின் பெரும்பாலான முயற்சி மற்றும் பணத்தை பறவைகளுக்கு உணவளிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்களின் வீடுகளுக்கு வெளியே உணவு தானியப் பெட்டிகளை வைத்து நாள்தோறும் அதில் உணவை வைப்பதற்காக ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவு செய்கின்றனர். உண்மையில், பறவைகள் தங்களின் உணவை இழக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தங்களின் சுற்றுலாவை விட்டுக்கொடுத்திருக்கின்றனர். இது ஒரு சிறந்த பயிற்சி; அதைப் பார்க்கும் போது நான் மகிழ்ச்சியடைந்தேன், ஏனெனில் போதிசத்வா வகையான உண்மையான பயிற்சி இதுவே. திபெத்தியர்களைப் பற்றியும் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன, அவர்கள் இந்தியாவிற்கு யாத்ரிகர்களாகச் சென்று புறாக்களுக்கு ரொட்டிகளையும், பல வகையான பறவைகளுக்கு அரிசியையும் உணவாக வைத்துள்ளனர். நீண்ட கால வாழ்க்கையில் இவ்வகையான பயிற்சியை கொண்டு வருவது மிகவும் சிறந்ததாகும். 

சுருக்கம்

நம்முடைய உரையாடலை சுருக்கமாகச் சொன்னால், அதன் முக்கிய அம்சங்கள்:

  • ஒவ்வொருவரின் நலனுக்காகவும் செயலாற்ற கருணை மற்றும் நிலையான இலகிய மனதை வளர்த்தல் வேண்டும். 
  • யாரையும் அல்லது எதையும் எப்போதும் காயப்படுத்தக் கூடாது; எப்போதும் தீங்கு அல்லது பிரச்னைகளை ஏற்படுத்தாதீர்கள்.

சிறந்த ஆன்மிகப் பயிற்சியாளராக இருப்பதற்கான முக்கிய அம்சங்கள் இவையே. நம்முடைய சிறந்த மனித மறுபிறப்பில் நமக்கு இருக்கும் இந்த செயலாற்றுதலின் அடிப்படையை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், நம் இதயங்களை முற்றிலும், போதிச்சித்த நோக்கத்துடன், மற்றவர்களுக்கு அர்ப்பணித்து, அறிவொளியை அடைய வேண்டும். இவ்வழியில், நம்மால் உண்மையில் முழு தெளிவான மன நிலை மற்றும் முழுமையாக பரிணாமம் பெற்ற – ஒரு முழு ஞானமடைந்த புத்தரின் நிலையை அடைய முடியும். 

Top