Study buddhism what is ethics

மகிழ்ச்சியான வாழ்க்கை மேற்கொள்ள நம்முடைய நடத்தைக்கு வடிவம் கொடுக்கும் தார்மீக மதிப்புகளின் முறையே நன்னெறிகளாகும். நன்னெறிகள் மூலம் நாம் நேர்மையாக வாழலாம், நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் நம்பிக்கையையும், நட்பையும் வழிநடத்தலாம். நன்னெறிகள் மகிழ்ச்சிக்கான திறவுகோல்.

பௌத்தத்தில் இருக்கும் நன்னெறிகள்

பௌத்தத்தில் நன்னெறிகள் என்பது விழிப்புணர்வை கூர்மைப்படுத்துதலை அடிப்படையாகக்கொண்டது: நீடித்த மகிழ்ச்சியை எது கொண்டு வருகிறது மற்றும் தொடர்ச்சியான பிரச்னைகளுக்கான காரணத்திற்கு இடையிலான வேறுபாட்டை நம் நுண்ணறிவைக் கொண்டு பகுப்பாயலாம். விதிமுறைகள் பட்டியலை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் தர்க்க ரீதியிலான உணர்வை ஏற்படுத்தும் முறையான நன்னெறி வழிமுறைகளைப் பின்பற்றுதலாகும்.

நம் மீது நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால், நம்முடைய நடத்தை பற்றி அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதாக அர்த்தம். ஒவ்வொருவருமே மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் அதற்கு தகுதியும் இருக்கிறது நம்மையும் சேர்த்துதான். குறைவான சுய – மதிப்பீடு தார்மீக அலட்சியத்திற்கு வழி நடத்துகிறது, ஆனால் சுய-மதிப்பு என்னும் உணர்வு சுய கண்ணியத்திற்கு வழிநடத்துகிறது. சுய கண்ணியத்தால், நமக்கு நாமே ஆழ்ந்த மரியாதையை கொள்வோம், நாம் ஒரு போதும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் : அது சரியான உணர்வல்ல.

வண்டு பூவில் இருந்து தேனை எடுக்கும் போது அதை துன்புறுத்துவதில்லை அல்லது அதன் நிறம் மற்றும் நறுமணத்தை கெடுப்பதில்லை; எனவே உலகம் முழுவதும் புத்திசாலித்தனமாக நகருங்கள். – தம்மபதம் : பூக்கள், வசனம் 49

“எதுவாயினும்” என்ற அணுகுமுறையே தனிமை, விரக்திக்கு வித்திடுகின்றன. நன்னெறிகள் மூலம் நாம் இந்த அணுகுமுறையைக் கடந்து வரலாம். அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்காக நாம் நம்பிக்கை மற்றும் நிலையான நட்பை கட்டமைக்க வேண்டும். 

 காரணங்கள் அடிப்படையிலான நன்னெறிகள் மற்றும் சபதங்கள்

பௌத்த நடைமுறையானது பொதுஅறிவு அடிப்படையிலானது. நாம் சுயநலமாகவோ, கோபமாகவோ அல்லது மற்றவர்களிடம் மூர்க்கத்தனமாகவோ நடந்து கொண்டால், நாம் எப்படி நமக்கான அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்க்க முடியும்?

பௌத்தத்தில், ஒவ்வொருவரும் ஏற்பதற்கு பல்வேறு அளவிலான சபதங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, திபெத்திய பாரம்பரியத்தில் முழுவதும் துறவறம் ஏற்றவர்கள் 253 சபதங்களை பின்பற்ற வேண்டும். பல புத்த மதவாதிகள் “ஐந்து நல்லொழுக்கங்களை” எடுத்துக்கொள்கின்றனர், அவை :

  • உயிரினங்களைக் கொல்லாமல் இருத்தல்
  • தனக்கு கொடுக்கப்படாததை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபடாமல் இருத்தல்
  • பொய்யான பேச்சிலிருந்து விலகிவிடுதல்
  • மது போன்ற போதைப் பொருள்களிலிருந்து விலகி நிற்றல்

பௌத்த நடைமுறையாளர்கள் வாழ்க்கையை நடைமுறைக்கு உகந்ததாக வாழ தன்னார்வத்தோடு இதனை பின்பற்றுகின்றனர். இந்த விதிகள் நாம் சரியான திசையில் இருப்பதற்கு உதவுகிறது, அதோடு மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான காரணங்களை உருவாக்குகிறது.

 வெற்றிகரமான வாழ்க்கைக்கான நன்னெறிகள்

வெற்றிகரமான வாழ்க்கை என்றால் ஒருவர் கணக்கில்லாத செல்வமும், சக்தியும் படைத்தவராக இருத்தல் என்று பலரும் நினைக்கின்றனர். நமக்கு அது போன்றவை கிடைத்தாலும், நாம் திருப்தியடைவதில்லை, சித்தபிரம்மை பிடித்தது போல எப்போது இழந்ததைப் பற்றியே சிந்திப்போம். நம்மிடம் அதிகமாக இருந்தாலும், குறிப்பாக பிறரிடம் இருந்து பெற்றவை, நாம் அதிக எதிரிகளை உருவாக்கியது தான். நம்மை யாரும் விரும்பாத ஒரு வாழ்க்கையை வாழ்வதை வெற்றிகரமான வாழ்க்கை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.  வெற்றிகரமான வாழ்க்கை என்பது நிறைய நண்பர்களை உருவாக்கி, நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை சந்தோஷமாக வைத்திருப்பது. அப்படி நடந்தால் நம்மிடம் எவ்வளவு பணம் அல்லது பலம் இருக்கிறது முக்கியமல்ல; நமக்கு உணர்வுகளின் ஆதரவு இருக்கும் என்ன நடந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் திறனை அது கொடுக்கும். 

நன்னெறி வழிமுறைகளானது மகிழ்ச்சி மற்றும் பிரச்னைகளை உருவாக்குவதற்கான வகைகளை வழி நடத்தும் நடத்தைகளின் வகைகளைக் குறிப்பிடுகிறது. நாம் நேர்மையாக இருந்தால், பிறருக்கு இன்பத்தை கொடுக்க விரும்பினால், மற்றவர்கள் நம்மை ஏமாற்றாமல் நம்புவார்கள், கொடுமைப்படுத்தவோ அல்லது சீரழிக்கவோ மாட்டார்கள். இந்த நம்பிக்கை நம் நட்பிற்கான அஸ்திவாரமாக நாம் சந்திக்கும் அனைவரிடத்திலும் விளங்கும்.  அவர்கள் நம்முடன் இருக்கும் போது இளைப்பாறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள், பயப்பட ஒன்றுமில்லை என்பதை அறிவார்கள். நாமும் நமக்குள்ளாக மகிழ்ச்சியை உணர்வோம். நாம் அருகில் செல்லும் போதெல்லாம் எச்சரிக்கையாகவோ அல்லது பயத்துடனோ மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று யார் விரும்புவார்கள்? அனைவருமே சிரித்த முகத்துடன் இருப்பதையே வரவேற்கிறார்கள்.

சமூக விலங்கான மனிதர்கள்: நாம் உயிர் வாழ பிறரின் ஆதரவு தேவை. பிறந்த குழந்தை மற்றும் முதியோர் விடுதிகளில் இருக்கும் பலவீனமான முதியவர்கள் போன்று உதவி செய்ய முடியாதவர்கள் மட்டுமின்றி, நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு பிறரின் உதவியும் அக்கறையும் தேவைப்படுகிறது. அன்பான நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் உணர்வு ரீதியிலான ஆதரவு நமது வாழ்வை முழுமையாக்குகிறது. நன்னெறிகளின் உறுதித்தன்மை நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நட்பு ரீதியிலான உறவுமுறையை உருவாக்குகிறது.

Top