ஒவ்வொருவருடனான நம்முடைய இணைப்பு மற்றும் சார்புதன்மையை நாம் உணர்ந்தால், மனிதாபிமானத்தில் நாமும் ஒரு அங்கமே என்று நமக்கு நாமே சிந்திப்போம் மேலும் உலகளாவிய அன்புடன் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவோம்.
Meditations broadening love 1

விளக்கம்

பௌத்தத்தில் அன்பு என்பது மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புவது மற்றும் மகிழ்ச்சிக்கான காரணத்தை கொண்டிருத்தல் மேலும் சாத்தியமிருந்தால் அந்த மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கு உதவும் விருப்பத்தை சேர்த்தல்,  வெறுமனே பின்னால் அமர்ந்து கொண்டு யாரேனும் உதவி செய்வார்கள் என்று நம்புவதல்ல. இது உலகளாவியது, அன்பை எல்லோருக்குமானதாக விரிவாக்குதல், நாம் யாரை விரும்புகிறோம் அல்லது நம்முடன் யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று இல்லாமல், தெரியாதவர்கள் ஏன் நாம் விரும்பாதவர்களுக்கும் கூட விரிவாக்கம் செய்தல் வேண்டும். இந்த வகையான உலகளாவிய அன்பு, நடுநிலையானது: அது இணைப்பு, விலக்கல் மற்றும் புறக்கணிப்பில் இருந்த விடுபட்டவை. ஏனெனில் எல்லோரம் ஒரே மாதிரியானவர்களே நாம் மகிழ்ச்சியாக இருக்கவும் துன்பப்படவும் விரும்பாதது போலவே ஒவ்வொருவரும்  என்று புரிந்து கொள்வதன் அடிப்படையிலானது. அவர்கள் அழிவுகரமான வழிகளில் சிந்தித்தும் நடந்தும் கொள்ளலாம் அது அவர்களுக்கு துன்பத்தையே அளிக்கும். அது ஏன் நடக்கிறதென்றால் அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் எது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 

எனவே, நாம் எல்லோரையும் போலவே மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் நபர்களாக நினைப்பதில் நம் அன்பை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். பொதுவாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் நாம் நம்முடைய அன்பை அடிப்படையாக வைப்பதில்லை, நிச்சயமாக அவர்கள் நல்ல விதமாக இருக்கிறார்களா அல்லது நமக்கு அன்பை மீண்டும் தருகிறார்களா என்பதல்ல. ஏனெனில் நமக்கு எந்த எதிர்பார்ப்பும் சார்புத்தன்மையும் இல்லை, நம்முடைய நிபந்தனையில்லாத அன்பு என்பது அமைதியான மனநிலை; இணைப்பின் அடிப்படையில் எந்தவொரு பகுத்தறிவற்ற சிந்தனை அல்லது நடத்தை மூலம் அது நம் மனதை மூடிமறைக்காது.

நம் அன்பின் உணர்ச்சி தொனி அனைவருடனும் இணைந்த உணர்வு மற்றும் நன்றியுணர்வின் உணர்வு. இணைந்த மற்றும் நன்றயுணர்வானது நாம் நுகரும் பொருட்கள் அல்லது அதில் இருந்து வரும் பயன்கள் அனைத்துமே மற்றவர்களின் உழைப்பில் இருந்து வருகிறது என்று உணர்தலில் இருந்து வருகிறது. மற்றவர்களின் கடின உழைப்பில் இல்லையென்றால், நாம் பயன்படுத்தும் அந்தப் பொருட்களை எங்கிருந்து பெறுவது, அந்தப் பொருட்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், நாம் உண்ணும் உணவு, நாம் உடுத்தும் உடை, மின்சாரம், நம் வீட்டில் இருக்கும் தண்ணீர், இணையதளத்தில் உள்ள தகவல் உள்ளிட்ட பல எப்படி கிடைக்கும்? நாம் வாங்கும் பொருட்களை உற்பத்தி செய்ய மற்றவர்களைத் தூண்டும் சந்தையை உருவாக்குவதன் மூலமும் மக்கள் மறைமுகமாக நமக்கு உதவுகிறார்கள்.

இந்த இணைப்பு மற்றும் நன்றியுணர்வை நாம் வலுவாக உணர்ந்தால், நாம் மேலும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வோம். இது ஹார்மோன் சுரப்பியுடன் தொடர்புடையது – இது தாய்க்கும் சேய்க்கும் இடையேயான ஒட்டுதலில் இணைந்துள்ள ஹார்மோன். ஒரு முறை நாம் இந்த இதமான, மகிழ்ச்சி உணர்வை உற்பத்தி செய்தால், நாம் இதனை நம்முடைய தியானத்திற்கு விரிவாக்கம் செய்யலாம், முதலில் நமக்கே, நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பவில்லை என்றால், வேறு யாராவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஏன் விரும்பப் போகிறோம். அனைவரையும் அதில் உள்ளடக்கும் வரை, அதனை பரந்த குழுக்களுக்கு அதிக அளவில் விரிவுபடுத்தலாம். 

ஒவ்வொரு நிலையிலும், நம்முடைய அன்பு மூன்று சிந்தனைகளைக் கொண்டுள்ளது:

  • மற்றவர்கள் மகிழ்ச்சியாகவும் அதற்கான காரணத்தையும் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்.
  • அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம், அதாவது, “அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று உண்மையில் நான் விரும்புகிறேன்.”
  • “என்னால் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியலாம்.”

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதற்கான காரணம் குறித்து நாம் சிந்தித்தால், முதலில் நாம் அவர்களின் துன்பத்திற்கான காரணத்தை அடையாளம் காண வேண்டும். அவர்கள் பசியோடு இருந்தால், அவர்களுக்கு போதுமான உணவு வேண்டும் என்று மட்டும் விருப்பப்படக் கூடாது; அவர்கள் உணவை உண்ட பின்னர், நொறுக்குத் தீனியை அதிகம் சாப்பிட்ட பருமானாகக் கூடும் என்பதையும் கூட நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே, அவர்களின் உணவுப் பழக்கத்தில் உணர்வின் சமநிலை, மனநிறைவு மற்றும் சுய-கட்டுப்பாடும் கூட தேவை என்று நாம் விருப்பப்பட வேண்டும். நீபொருள்களின் தேவையால் கிடைக்கும் குறைந்த கால திருப்தியைவிட நீண்ட நாட்கள் நீடித்திருக்கக் கூடிய மகிழ்ச்சிக்காக நாம் சிந்திக்க வேண்டும்.

தியானம்

  • சுவத்தில் கவனம் செலுத்தி அமைதியாக அமருங்கள்.
  • நீங்கள் நுகர்வு செய்யும் எல்லாப் பொருட்கள் மற்றும் அதன் பயன் எப்படி பிறரை சார்ந்து இருக்கிறது என்று சிந்தியுங்கள்.
  • மற்றவர்களுடனான இணைப்பு மற்றும் ஆழ்ந்த நன்றியுணர்வில் கவனம் செலுத்துங்கள்.
  • இது உங்களை எவ்வாறு இதமாக, மேலும் பாதுகாப்பாக மற்றும் மகிழ்ச்சியாக உணர வைக்கிறது என்பதை கவனியுங்கள்.
  • உங்களை நீங்களே கவனியுங்கள் அடிக்கடி நீங்கள் துன்பமாக இருந்தால் அதனை குறிப்பெடுங்கள்.
  • சிந்திக்கவும்: நான் மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சிக்கான காரணங்களையும் கொண்டிருந்தால் அது எவ்வளவு அற்புதமாக இருக்கும்; என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா; எனக்கு கூடதல் மகிழ்ச்சியை கொடுக்கும் காரணங்களை என்னால் உருவாக்க முடியுமா, வெறும் மேலோட்டமான குறுகிய – கால மகிழ்ச்சியல்ல, மாறாக நீண்ட கால மகிழ்ச்சி. உணர்ச்சி சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மை, அமைதியான தெளிவான மனம், அதிக புரிதல், மற்றவர்களுடன் சிறப்பாக தொடர்பு கொள்வது போன்ற - உங்களை மகிழ்ச்சியான நபராக மாற்றும் குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.
  • [விரும்பினால்: இந்த இதமான மகிழ்ச்சியைக் குறிக்கும் இதமான மஞ்சள் ஒளியால் நீங்கள் நிரப்பி இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.]
  • நீங்கள் விரும்பும் ஒரு நபருக்கும் இப்படியே செய்து பாருங்கள் மேலும் இதனை நீங்கள் விரும்பும் சிலருக்கும் விரிவாக்கம் செய்யங்கள்.
  •  [விரும்பினால்: அந்த இதமான மஞ்சள் ஒளி உங்களிடமிருந்து வெளியேறி அந்த நபரை நிரப்புகிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.]
  • அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்கள் அவர்களுடன் உங்களுக்கு அதிக தொடர்பு இருக்காது கடையின் செயலிட முகப்பில் இருக்கும் கிளர்க், அல்லது பேருந்து ஓட்டுநர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 
  • அதன் பின்னர் நீங்கள் விரும்பாதவர்கள். 
  • பிறது ஒரு சேர மூன்று குழுக்களுக்கும் செயல்படுத்துங்கள்.
  • அதன் பிறகு அன்பை நகரம், நாடு, முழு உலகம் என ஒவ்வொருவருக்கும் விரிவாக்கம் செய்யுங்கள். 

சுருக்கம்

சார்பில்லாத, உலகளாவிய அன்பு, ஒரு சிக்கலான உணர்ச்சியாகும், இது அனைவருடனும் இணைந்திருக்கும் உணர்வையும், உங்கள் வாழ்க்கையில் உங்கள் நல்வாழ்வுக்கு அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வாறு பங்களித்தார்கள் என்பதற்கான நன்றியுணர்வையும் இணைக்கிறது. இது ஒரு அமைதியான, இதமான உணர்வு நிலை, இணைப்பின்றி, எதிர்ப்பு அல்லது வேறுபாடின்றி, பிடித்தமான எதுவுமின்றி அல்லது நீங்கள் அந்நியப்பட்டவர்கள் என்ற உணர்வும் இல்லை. இது நிபந்தனையற்றது மேலும் எல்லோருக்கும் விரிவுபடுத்தக்கூடியத், அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பெரிதல்ல, ஏனெனில் இதுவும் கூட அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள் யாரும் துன்பப்படவிரும்பவில்லை என்ற சமநிலை புரிதலின் அடிப்படையிலானது. அதே போன்று அது பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காது. இது ஒரு செயலற்ற உணர்வு அல்ல, ஆனால் பொருள் தேவைகளிலிருந்து விடுபடுவதன் குறுகிய கால மகிழ்ச்சியை மட்டுமல்லாமல், குழப்பமான உணர்ச்சிகள் மற்றும் குழப்பமான எண்ணங்களிலிருந்து விடுபடுவதன் நீண்டகால நிலையான மகிழ்ச்சியைப் பெற மற்றவர்களுக்கு உதவ உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வழிவகுக்கிறது. 

Top