ஒருவரின் குற்றம் அல்லது தவறுகளிலிருந்து நம் கவனத்தை அந்த அவரைப் பற்றியதாக மாற்றும்போது, ​​அவர்கள் வருத்தப்படுகிறார்கள் அல்லது குழப்பமடைகிறார்கள் என்பதை உணரும்போது, ​​நாம் கோபப்படுவதைத் தவிர்க்கிறோம், மேலும் இரக்கத்துடன் அவர்களை மன்னிப்போம்.
Meditation forgiving others 1

விளக்கம்

ஆக்ஸ்போர்டு அகராதியின்படி, மன்னித்தல் என்பதன் பொருள் கோபப்படுதலை நிறுத்ததுதல் அல்லது ஒருவரின் குற்றம், குறைபாடு அல்லது தவறுக்காக  ஏற்பட்ட மனக்கசப்பை நிறுத்துதல் எனப்படுகிறது. சிலருக்கு, குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு கூடுதல் தாத்பரியத்தை கொண்டிருக்கிறது அல்லது மன்னிப்பு வழங்கும் கூடுதல் அதிகாரத்தை கொண்டிருக்கிறது, அதுவே பின்னர் குற்றவாளியை அவரின் செயல்களுக்காக எந்த வித தண்டனையும் இன்றி விடுவிக்கச் செய்கிறது. 

மனதின் காரணிகளுக்கான பௌத்த பகுப்பாய்வானது வெளிப்படையாக மன்னித்தலுக்கான ஒரு பததத்தை உள்ளடக்கியதாக இல்லை, ஆனால் அது கோபம், மனக்கசப்பு (உட்பகை கொண்டிருத்தலையும் உள்ளடக்கியது) மற்றும் அதன் எதிர்பதங்களான கோபப்படாமல் இருத்தல் மற்றும் தயவில்லாமல் இருத்தலையும் சேர்த்தது. 

  • கோபம் கொள்ளாமல் இருத்தல் என்றால் பதிலடி கொடுக்காமல் நமக்கோ பிறருக்கோ தீங்கு ஏற்படுவதற்கான காரணத்தை திரும்பத் தராமல் இருக்க விரும்புவதல்ல, ஏனெனில் நம்முடைய செயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  
  • கொடூரமாக இல்லாமல் இருத்தல் இரக்கத்தின் கூடுதல் பண்பு, அவர்களின் துன்பங்கள் மற்றும் அதற்கான காரணங்களில் இருந்து விடுபட விரும்புதல்.

எனவே, பௌத்த பார்வையில், நம்முடைய தீங்கான செயல்களின் விளைவாக நாமும் பிறரும் எல்லா துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  ஆனால் யாருக்கும் கர்ம வினைகளான அவர்களின் குற்றச்செயல்களில் இருந்து மன்னிக்கும் சக்தி எவர் ஒருவருக்கும் இல்லை, எனவே போதகர் அல்லது நீதிபதி குற்றவாளிகளை மன்னிப்பவர்களாக இருப்பதைப் போன்று உங்களை விட் புனிதமானவர் நீங்களே என்ற உயர்ந்த உணர்வைப் போன்ற அபாயம் எதுவும் இல்லை.

மன்னித்தலுக்கான பௌத்த அணுகுமுறையின் திறவுகோளானது ஒரு நபரை வேறுபடுத்திப் பார்ப்பது – அது யாரோ ஒருவரோ அல்லது நாமோ – அவர்களின் தீங்கான அல்லது அழிவுகரமான செயல்கள் அல்லது தவறுகளில் இருந்து வேறுபடுத்துவது. நாம் அழிவுகரமாக செயல்பட்டோம், தவறுகளைச் செய்தோம், நாம் மோசமானவர்கள் என்பதால் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் நடத்தைக்கான காரணம், பாதிப்பு மற்றும் யதார்த்தம் குறித்து நாம் குழம்பி இருக்கிறோம், மேலும் நம்முடைய புரிதல் அளவானதாக இருப்பதனால் நாம் தவறுகளை செய்கிறோம். கட்டுப்படில்லாமல் மீண்டும் மீண்டும் நிகழும் குழப்பம் மற்றும் சிக்கல்களுடன் கூடிய வரையறுக்கப்பட்ட சம்சாரியர்கள் நாம், எனவே இரக்கத்திற்கு சரியான பொருத்தமான பொருட்கள். போதுமான தீங்கு மற்றும் துன்பத்தை நமக்கு நாமே ஏற்படுத்தி விட்டோம், நாம் அதில் மேலும் எதையும் கூடுதலாக சேர்க்க வேண்டாம். 

எனவே, பௌத்த சூழலில் மனித்தல் என்பதன் பொருள்:

  • நாமோ அல்லது மற்ற ஒருவரோ – அந்த நபரின் செயலில் இருந்து வேறுபடுத்த வேண்டும்.
  • நம் மீதோ அல்லது மற்றவர்களிடமோ கோபம் கொள்ளாமல் அல்லது கொடூரமாக நடந்து கொள்ளாமல், அதற்கு மாறாக, 
  • நாமோ அல்லது அவர்களோ அழிவுகரமாக செயல்பட என்ன காரணமாக இருந்தது அல்லது தவறு செய்யத் துண்டியதில் இருந்து விருபட இரக்க உணர்வுடன் விரும்புதல். 

ஆனால் தீங்கான நடத்தை அல்லது தவறு என்று வரும்போது, நாம் எதுவும் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்க கூடாது. மேலும் அழிவுகரமான நடத்தைக்கு வித்திடும் முன்னர் நம்மால் முயன்ற ஏதோ முயற்சிகளை எடுத்து நம்முடைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் – ஆனால் கோபமில்லாமல் அல்லது உட்பகையை வைத்துக் கொள்ளாமல், அல்லது நாம் அவர்களை மன்னிக்கிறோம் என்ற கர்வ உணர்வு கொள்ளாமலும் செய்ய வேண்டும்.  

தியானம்

நமக்கு, மற்றவர்களுக்கு என இரண்டிற்கு சேர்த்து மன்னித்தலை நாம் மேம்படுத்தினாலும், இன்று நாம் மற்றவர்களை நோக்கி கவனம் செலுத்தலாம். மற்றொரு நேரத்தில் நமக்காக கவனம் செலுத்தலாம். 

  • அமைதியாக உட்கார்ந்து சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள்.
  • யாரோ ஒருவர் நீங்கள் காயப்படும் படியாக ஏதாவது செய்திருந்தால் அல்லது உங்களிடம் கூச்சலிட்டதால் அதற்காக நீங்கள் கோபப்பட்டிருந்தால் அதற்காக நீங்கள் மனக்கசப்பாக உணர்ந்திருந்தால் மேலும் அதன் விளைவாக உட்பகையை கூட கொண்டிருக்கலாம், அதனால் அது பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கலாம் அவர்கள் என்ன செய்தார்கள், ஏன் கோபப்பட்டு வருத்தப்பட்டோம் என்பதை நினைத்துப் பாருங்கள். 
  • நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் என்பதை நினைவுபடுத்த முயற்சித்து, மகிழ்ச்சியான அல்லது சவுகரியமான மனநிலைக்கான உணர்வுஇதுவல்ல என்பதை கருத்தில் வையுங்கள்.
  • இப்போது, உங்கள் மனதில் அந்த மனிதரின் செயல்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முயற்சியுங்கள். இது வெறுமனே ஒரு சம்பவம், சொல்லப்போனால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கைச் சூழலில் பல முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.
  • நான் உள்பட ஒருநபர் எல்லோரையும் போல துன்பமின்றி மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார், ஆனால் எது மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதைப் பற்றிய குழப்பத்தில் இருக்கிறார் அதனால் துன்பமாக இருக்கிறார், விழிப்புணர்வின்மை மற்றும் புறக்கணிப்பால் அவர்கள் அழிவுகரமாகச் செயல்பட்டு உங்களை காயப்படுத்துவதோ அல்லது உங்களை கூச்சல்படுத்தும் விதமாகவோ செயல்படுகிறார்கள்.
  • இந்தப் புரிதலில் நீங்கள் எவ்வளவு அதிகமாக கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களது கோபம் மற்றும் மனக்கசப்பு குறைகிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
  • அவர்களுக்கான இரக்கத்தை உருவாக்கி, அவர்கள் குழப்பத்தில் இருந்து விடுபடவும் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியின்மையால் நீங்கள் காயப்படுவது அல்லது கூச்சலிடும் படியான ஏதோ ஒன்றை செய்வதில் இருந்து விடுபட விரும்புதல். 
  • ஒரு குறிப்பிட்ட சரியான நேரத்தில், நீங்கள் அமைதியாகவும் அவர்கள் ஏற்கும் நிலையிலும் இருக்கும் போது நீங்கள் காயப்படும் படியாக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டி அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்க தீர்மானம் கொள்ளுங்கள்.

தவறு செய்த ஒருவருடன் இதையே திரும்ப முயற்சியுங்கள்

  • அவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் அவர்கள் மீது எப்படி கோபம் கொண்டீர்கள் என்பதை நினைவில் கொண்டு பாருங்கள்.
  • நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் என்பதை நினைவுபடுத்த முயற்சித்து இது போன்ற உணர்வு மகிழ்ச்சியல்ல அல்லது சவுகரியமான மனநிலையல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
  • இப்போது, உங்கள் மனதில் அந்த நபர் செய்த தவறான செயலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முயற்சியுங்கள்.
  • நான் உட்பட ஒரு மனிதர் எல்லோரையும் போல,  உதவிகரமாக, தவறு செய்யாமல் இருக்க விரும்புகிறார், ஆனால் அவ்வாறு செய்வதற்கான அல்லது செயல்படும் சிறந்த வழி என்ன என்பதைப்பற்றி குழப்பமடைகிறார் அல்லது கவனம் செலுத்துவதில்லை, அல்லது சோம்பலாக இருக்கிறார் அல்லது எதுவாக இருந்தாலும், புறக்கணித்தல் மற்றும் குழப்பமான உணர்வுகளால், அவர்கள் தவறு செய்கிறார்கள்.  அவர்கள் கட்டுப்பாடுகளுடன் கூடிய சம்சாரிகள், ஆதலால் அவர்கள் எப்போதும் சிறந்தவர்களாக இருப்பார்கள் மற்றும் எப்போதுமே தவறு செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமில்லாதது.
  • புரிதலில் நீங்கள் எவ்வளவு அதிகமாக கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு கோபம் குறையும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். 
  • அவர்களுக்காக இரக்கத்தை ஏற்படுத்துங்கள், அவர்கள் குழப்பம், புறக்கணிப்பு மற்றும் சிக்கலான உணர்வுகளால் செய்யும் தவறுகளில் இருந்து விடுபட விரும்புங்கள். 
  • ஒரு குறிப்பிட்ட சரியான நேரத்தில், நீங்கள் அமைதியாகவும் அவர்கள் ஏற்கும் நிலையிலும் இருக்கும் போது அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அதனை சரி செய்ய அவர்களுக்கு உதவ தீர்மானம் கொள்ளுங்கள்.

சுருக்கம்

மன்னித்தல் என்றால் மற்றவர்களை அவர்களின் அழிவுகரமான நடத்தை அல்லது அவர்களின் தவறுக்காக மன்னிப்பது என்று பொருளல்ல, அதே போல நாம் புனிதர்கள் அவர்களை விட சிறந்தவர்கள், அவர்கள் நம்மை விட மோசமானவர்கள், அதனால் நம்முடைய கர்வமான அதிகாரத்தால், அவர்கள் வருத்தப்படாவிட்டாலும் கூட நாம் அவர்களை மன்னித்துவிடுகிறோம். மன்னித்தல் என்றால் கோபம் கொள்ளாமல், மனக்கசப்பு உணர்வின்றி, உட்பனை வைத்திருக்காமல் பதிலடி கொடுக்க விரும்புதல். நாம் ஒருவரை அவரின் செயல் அல்லத தவறில் இருந்து வேறுபடுத்தலாம், அவருக்காக இரக்கத்தை வளர்க்கலாம் மேலும் அவர்களின் செயலை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கலாம் அல்லது அவர்கள் அந்தத் தவறை திரும்பச் செய்யாமல் இருக்க உதவலாம். இந்த வழியில், கோபத்தின் காரணமாக நமக்கு வரக்கூடிய ஆபத்துகள் மற்றும் துன்பம், குறிப்பாக சினம் வழிவகுக்கும் கோபமான சிந்தனைகள், முரட்டுத்தனம், விரோதப்பேச்சு மற்றும் கோபமூட்டும் அசட்டையான நடத்தையை தவிர்க்கலாம்.

Top