மரணம் குறித்து யதார்த்தமாக இருத்தல்

வாழ்க்கை குறுகியது எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு, அர்த்தமுள்ளவற்றை செய்வதற்காக நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத வாய்ப்புகளை வீணாக்குவதை நிறுத்தினால், நமக்கும் இன்னமும் வாய்ப்பு எஞ்சி இருக்கும்.
Meditation being realistic about death 1

விளக்கம்

பெரும்பாலான மக்கள் சிந்திக்க விரும்பாத தலைப்பு எதுவென்றால் அது மரணம். ஆனால் மரணம் என்பது வாழ்வின் நிதர்சனம் மேலும் எல்லோருமே வாழ்வில் எதிர்கொள்ளக் கூடியது. தவிர்க்கமுடியாதது என்னவோ அதற்காக நமக்கு நாமே தயாராக இல்லையென்றால், நாம் மிகுந்த பயத்துடனும் மறுப்புடனும் இறக்கக் கூடும். எனவே, மரண தியானம் என்பது மிகவும் உதவிகரமானது மற்றும் முக்கியமானது.

நமக்கு ஒரு அபாயகரமான குணப்படுத்த முடியாத நோய் இருப்பதாகக் கூறப்படுவதை நாம் எவ்வாறு கையாள்வோம் என்று கற்பனை செய்வது போன்று மரணம் குறித்து நாம் செய்யக் கூடிய பல தியானங்கள் இருக்கின்றன. கீழ்காணும் தியானம் நமக்கு நாமே உந்துதல் தரவும் நம்முடைய அணுகுமுறை மற்றும் நடத்தையை மேம்படுத்துவதற்காக செயலாற்றவும் நிரந்தரமான ஒன்று இப்போது நாம் இன்னும் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த தியானத்தில், சுவாசத்தில் கவனம் செலுத்தி அமைதியாக இருந்த பின்னர், பின்வருவனபற்றி நாம் சிந்திக்கலாம்:

தியானம்

மரணம் தவிர்க்க முடியாதது, ஏனெனில்:

  • மரணம் வரப்போவது நிச்சயம், எந்தச் சூழலும் மரணம் எப்போதும் நிகழாமல் நம்மை பாதுகாக்கப் போவதில்லை – பிறந்த ஒருவர் மரணத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டார் என்று இது வரை வரலாறே இல்லை, எனவே நாம் இறக்காவிட்டால் நம்மை எது சிறப்பாக அமைக்கப் போகிறது?
  • நாம் இறக்க வேண்டிய நேரத்தில் நம்முடைய வாழ்நாள் நீட்டிக்கப்படப் போவதில்லை மேலும் எஞ்சியிருக்கும் நம் ஆயுட்காலம் இடைவிடாமல் குறைந்து வருகிறது – நம்முடைய வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் நாம் வயது முதிர்வு அடைகிறோம் மேலும் மரணத்தை நெருங்கிச் செல்கிறோம், எப்போதும் இளமையாகவோ அல்லது மரணத்தில் இருந்து தூரமாகவோ இருப்பதில்லை. கன்வேயர் பெல்ட் நகர்ந்து கொண்டிருப்பதைப் போலத் தான் நாமும் தவிர்க்க முடியாத மரணத்தை நோக்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். 
  • நாம் உயிருடன் இருக்கும்போதே மன அமைதியுடனும், மறுப்புகளின்றியும் இறக்க அனுமதிக்கும் நடவடிக்கைகளை எடுக்க நேரமில்லை என்றாலும் நாம் இறந்துவிடுவோம் - திடீர் மாரடைப்பு அல்லது கார் விபத்து என்று நாம் எதிர்பார்க்காத போதும் கூட மரணம் வரலாம்.

நாம் எப்போது இறப்போம் என்ற நிலைத்தன்மை இல்லை, ஏனெனில்:

  • பொதுவாக, நம்முடைய வாழ்க்கை சூழற்சிக்கு நிலைத்தன்மையில்லை – மரணம் எட்டும் என்பதால் வயதாவதை நாம் விரும்பவில்லை.
  • புவி வெப்பமடைதல், அதிக அளவிலான இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பெருந்தொற்று நோய்களுடன் இறப்பதற்கு அதிக வாய்ப்புகளும் உயிருடன் எஞ்சி இருப்பதற்கு குறைவான வாய்ப்புகளுமே இருக்கின்றன; எப்போதும் குறைந்து வரும் இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால்,  வன்முறைகள் மென்மேலும் அதிகரிக்கின்றன; நம்பிக்கையின்மை அதிகரிக்கும் உணர்வுகள், அதிக அளவு மருந்துகள், மற்றும் பல உள்ளன. 
  • நமது உடல்கள் எளிதில் பாதிப்படையக்கூடியவை - சிறிய நோய் அல்லது விபத்தும் கூட நமக்கு மரணத்தை ஏற்படுத்தும்.

நம்முடைய அணுகுமுறை மற்றும் நடத்தையை மேம்படுத்துவதற்காக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து செயலாற்றுவதைத் தவிர வேறு எதுவுமே மன அமைதியுடனும் மறுப்புகளின்றி நாம் இறக்கவும் பலன் தரப்போவதில்லை. நாம் இப்போது மரணத்தை சந்திக்க நேர்ந்தால்:

  • நம்முடைய செல்வத்தால் பயன் இருக்கப்போவதில்லை – நம்முடைய பணமானது கணினித்திரையில் எண்களாக மட்டுமே இருக்கும். 
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களாலும் பயன் இருக்காது – நாம் அவர்களை விட்டுசெல்லப் போகிறோம் மேலும் அவர்கள் நம்மைச் சுற்றி அழுதுகொண்டிருந்தால், அவர்கள் நம்மை மிகவும் வருத்தப்பட வைக்கத் தான் போகிறார்கள்.  
  • நம்முடைய உடலாலும் கூட எந்தப் பயனும் இல்லை - அந்தக் கூடுதல் உடல் எடையை கிலோ அல்லது பவுண்டுகளில் குறைத்ததிலிருந்து நாம் எவ்வளவு ஆறுதல் பெற முடியும்?

எனவே, பயம் மற்றும் வருத்தத்துடன் நாம் இறப்பதைத் தடுக்க முயற்சிகள் எடுப்பதே வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒரே விஷயம் என்று நாம் தீர்மானிக்கலாம்.

சுருக்கம்

தவிர்க்க முடியாத மரணம் குறித்து விழிப்புணர்வைப் பெருவதென்பது நம்மை நாமே மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்ளவோ அல்லது முழுவதும் பயத்தில் இருப்பதற்காகவோ அல்ல. இந்த வாழ்நாளில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் அளவானது மேலும் அது எப்போது முடியும் என்று யாராலும் உத்தரவாதம் தர முடியாது என்பதை நாம் உணர்ந்தால், நாம் தற்போது கொண்டிருக்கும் வாய்ப்புகள் மற்றும் நேரத்தின் முழுப் பலனுக்கான உந்துதலை எடுப்போம். மரணத்தை நினைவில் வைத்திருப்பது சோம்பல் மற்றும் தள்ளிப்போடுதல் ஆகியவற்றைக் கடக்க உதவுகிறது, இது எதிர்காலத்தில் விஷயங்கள் மோசமடைவதைத் தவிர்ப்பதற்கு சாதகமான நடவடிக்கைகளை எடுத்து நம்மை பாதுகாக்கிறது.

Top