புத்தர் பாதையில் பயணிக்கும் முன்பான அறிவுரைகள்

தினசரி வாழ்வில் எதிர்ப்புகளை கையாளுவது எப்படி என்பதற்கான நடைமுறை சாத்தியமுள்ள தீர்வுகளை பெளத்தம் போதிக்கிறது. மனக்குழப்பம், நடைமுறைக்கு சாத்தியமற்ற மனப்போக்கால் துன்பம் விளைதல், பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு போன்ற நமது பிரச்னைகளின் மூலாதாரம் என்ன என்பதை பெளத்தம் கண்டறிந்துள்ளது. தியானம் செய்வதால் முறையற்ற சிந்தனையை மாற்ற முடியும், அன்பு, நேர்மறையான முயற்சியால், பிறர் மெச்சும்வகையில் மனதை மாற்றி, தினசரி வாழ்க்கையையும் புரட்டிப்போடமுடியும்.

பெளத்தம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வதுடன், அதை எப்படி நமது தினசரி வாழ்வில் பயன்படுத்துவது, பெளத்த கற்றல், பயிற்சி ஆகியவற்றை நமது பண்பாட்டு ஒத்திசைவுடன் காண்பதே தர்மம். தர்மம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் “தற்காப்பு நடவடிக்கை” என அர்த்தமாகும். பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, அடுத்தடுத்து நாம் செய்யும் முறை என்றும் அர்த்தம் கொள்ளலாம். இதை நாம் புரிந்துகொண்டால், புத்தர் கற்றுக்கொடுத்ததின் ஒவ்வொன்றின் பின்னணியையும் புரிந்துகொள்ளலாம்.

ஆர்வத்துடன் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் முன்பு, வாழ்வின் பிரச்னைகளை நன்றாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு நிறைய தீரம் தேவைப்படுகிறது. மனிதர்களில் பலர் தங்களை பற்றியோ, தங்களது வாழ்க்கையைப் பற்றியோ பெரிதாக அக்கரை கொள்வதில்லை. நாள் முழுவதும் கடுமையாக உழைப்பார்கள், பின்னர் பொழுதுபோக்கு என்ற ஒன்றால் குழப்பத்தில் தள்ளிக்கொள்வார்கள், மாலைவேளைக்குள் களைப்படைந்துவிடுவார்கள். அவர்களது வாழ்க்கையில் இருக்கும் நிஜமான பிரச்னைகள் குறித்து உள்ளார்ந்து பார்ப்பதில்லை. பிரச்னைகள் பல இருப்பதை உணர்ந்தாலும், அதன் உண்மையை உணர்ந்துகொண்டு, அதிக மன அதிருப்தியுடன், திருப்தியில்லாத வாழ்க்கையில் இருந்து விடுபட முயற்சிப்பதில்லை. நாம் தரமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோமா? என்பதை நிஜமாக பரிசோதித்துப்பார்க்கவும், அதேபோல் திருப்தில்லை என்ற முடிவையும் நேர்மையுடன் ஒத்துக்கொள்ளவும் துணிவு வேண்டும்.

திருப்தியில்லாத சூழ்நிலை & அதன் காரணிகள்

திருப்தியின்மையில் பல்வேறு மட்டங்கள் இருக்கின்றன. “சில தருணங்களில் மோசமான மனநிலையில் இருப்பதும், வேறு சில தருணங்களில் நல்ல மனநிலையில் இருப்பதும் வழக்கம்தான், அதுதான் வாழ்க்கை” என நாம் சொல்கிறோம். மகிழ்ச்சியாக இருந்தால் நல்லதுதான். இன்னும் நிலையை சீராக்க முடியும் என்று நம்பினால், நல்ல வழி கிடைக்கும். நமது வாழ்வின் தரத்தை உயர்த்த விரும்பினால், முதலில் பிரச்னைகளின் மூலத்தை கண்டறியவேண்டும். நம்மில் பலர் பிரச்னைகளுக்காக காரணத்தை வெளியில் தேடுகிறார்கள். “உன்னுடனான எனது உறவில் சிரமத்தை உணர்வதற்கு காரணமே நீ தான்! நான் விரும்பும் வகையில் நீ நடந்துகொள்வதில்லை”. அதே போல், அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளால் நாம் துன்பப்படுவதாக குற்றம்சாட்டுகிறோம். உளவியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நமது குழந்தை பருவத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவங்களை உற்று நோக்கினால், அப்படி நடக்க காரணம் என்னவாக இருந்தது என்பதை இப்பொது உணரமுடியும். நாம் மகிழ்ச்சியில்லாமல் இருக்க பிறர் காரணம் என சொல்வது மிக எளிது. மற்றவர்கள், சமூகம், பொருளாதார காரணிகள் ஆகியவற்றின் மீது குற்றம் சுமத்துவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இந்த கருத்தமைவு கட்டமைப்பு நம்மிடம் இருந்தால், நாம் மன்னிப்பதால் எதாவது நல்லது நடக்கலாம், ஆனால் பெரும்பானவர்கள் மனரீதியான பிரச்னைகள் மற்றும் துன்பத்திலிருந்து விடுதலையாவதில்லை.

மற்றவர்கள், சமூகம் ஆகியவை உங்கள் பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கலாம், ஆனால், அவர் மட்டுமே துன்பத்திற்கான மூலம் அல்ல என்கிறது பெளத்தம். துன்பத்திற்கான உண்மையான காரணிகளை கண்டறிய வேண்டும் என்றால், உள்ளார்த்து உற்று நோக்க வேண்டும். சில சமயங்களில், சூழல் காரணமாக நாம் மகிழ்ச்சியின்றி உணர்வோம். பல்வேறு மனிதர்கள் அதே சூழ்நிலையை வெவ்வேறாக பிரதிபலிப்பர்கள். இன்னும் சொல்லப் போனால், நாம் எப்படி நடந்துகொண்டோம் என எண்ணிப்பார்த்தால் ஒரு நாளுக்கும் அடுத்த நாளுக்கும் வித்தியாசம் இருக்கும். பிரச்னைகளுக்காக காரணி வெளிப்புறம் சார்ந்தது என்றால், நாம் எல்லா நாளும் ஒரே மாதிரியாக நடந்துகொண்டிருப்போம், ஆனால், அப்படி நாம் இல்லை. நாள் முழுதும் வேலையில் சிறப்பாக உணர்வது போல், நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது முக்கியம்.

வாழ்க்கையை நோக்கிய நமது அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை நாம் உணர்த்தொடங்கினால், நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில் நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும். உதாரணத்திற்கு, நாள் நன்றாக செல்லும்போது வருத்தமாக உணர்வதில்லை, ஆனால், மோசமான தினம் என்றால் சுயபுலம்பல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். வாழ்க்கை நோக்கிய நமது அடிப்படை அணுகுமுறைதான் வாழ்க்கை உணர்வதற்கான வழி. இன்னும் ஆழமாகச் சென்று உள்நோக்கினால், நமது அணுகுமுறைகள் தான் குழப்பத்திற்கு காரணம் என்பது புரியும்.


குழப்பமே பிரச்னைகளுக்கு மூலாதாரம்

நம்முடைய குழப்பத்தை ஆராய்ந்தால், ஒரு வகையில் நமக்கு நம்முடைய நடத்தையின் விளைவு மற்றும் தாக்கமே குழப்பத்திற்கு காரணம் என்பதைக் காண முடியும். நாம் எதைச்செய்வது அல்லது சொல்வது என்பதைப் பற்றிய குழப்பமும், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் குழப்பமடைகிறோம். எந்த மாதிரியான வேலையைத் தேர்வு செய்வது, திருமணம் செய்யலாமா வேண்டாமா, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா, உள்ளிட்டவைப் பற்றி நாம் மிகவும் குழப்பமடைகிறோம். நாம் ஒரு நபருடன் உறவுமுறைக்குள் நுழைகிறோம் என்றால், அதன் முடிவு எப்படி இருக்கும்? என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய எண்ணம் நம்முடைய தெரிவுகளில் எதைப் பின்பற்றப் போகிறது என்பது வெறும் கற்பனையே,   விருப்பமான சிந்தனையா அல்லது பயம் மற்றும் சித்த பிரமை அடிப்படையிலானதா.  ஒரு குறிப்பிட்ட நபருடன் நாம் ஆழமான உறவுமுறையில் இருந்தால், தேவதைக் கதைகளில் வருவது போல, அதன் பிறகு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். அல்லது அவர்கள் நம்மை கைவிட்டு விடுவார்களோ என்று பயப்படலாம், எனவே நாம் உணர்வு ரீதியாக ஒருவித இடைவெளியைக் கொண்டிருப்போம். சில சூழலில் நாம் வருத்தமாக இருந்தால், கூச்சலிட்டால் அந்த நிலைமை சரியாகிவிடும் என்ற நாம் நினைக்கிறோம். நாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றப்போகிறார்கள் என்று நாம் மிகவும் குழப்பமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். நாம் கூச்சலிட்டாலோ, நம் மனதில் இருப்பதைப் பேசிவிட்டாலோ, நாம் சற்று நிம்மதியாக உணர்வோம், எல்லாமே சரியாகிவிடும் என்று நினைக்கிறோம் ஆனால் அப்படி எல்லாமே சரியாகிவிடாது. என்ன நடக்கும் என்று நாம் அறிய விரும்புகிறோம். மாற்றத்திற்காக நாம் தீவிரமாக ஜோதிடத்தை நாடுவோம் அல்லது காசை சுண்டிவிட்டு பார்ப்போம். நாம் ஏன் இது போன்ற செயல்களைச் செய்கிறோம்? என்ன நடந்தாலும் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கவே நாம் விரும்புகிறோம்.

ஆழ் மட்டத்திலான குழப்பம் என்பது நாமும், மற்றவர்களும் எப்படி இருக்கிறோம் மற்றும் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதைப்பற்றியே குழப்பமடைகிறோம் என்று பௌத்தம் சொல்கிறது. கட்டுப்பாட்டின் ஒட்டு மொத்த பிரச்னைகள் குறித்தும் நாம் குழப்பமடைகிறோம். நமக்கு என்ன நடந்தாலும் முழுவதும் கட்டுப்பாட்டில் இருப்பது சாத்தியமே என்று கருதுகிறோம். உதாரணத்திற்கு, நம்முடைய கணினியை யாரும் பயன்படுத்த அனுமதிக்காமல் இருந்தால், அது எப்போதுமே செயலிழக்காமல் போகாது என்று நாம் நினைக்கலாம். ஏனெனில் நாம் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காவிட்டால் நாம் வெறுப்படைகிறோம். எப்போதுமே கட்டுப்பாட்டுக்குள் இருப்பது சாத்தியமல்ல.  அது யதார்த்தமும் அல்ல. யதார்த்தம் மிகவும் சிக்கலானது. வெறுமனே நாம் என்ன செய்தோம் என்பது பொருட்டல்ல, பல விஷயங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் முழு கட்டுப்பாட்டையும் இழந்து விட்டோம் என்பதல்ல இதற்கு அர்த்தம் அல்லது வெளிப்புற சக்திகளால் இயக்கப்படுகிறோம் என்பதும் அல்ல. என்ன நடக்கிறது என்பதற்கு நாமும் பங்களிப்பாற்றுகிறோம், ஆனால் என்ன நடந்தாலும் நாம் மட்டுமே ஒற்றைக் காரணியல்ல.

நம்முடைய குழப்பம் மற்றும் பாதுகாப்பின்மையால், அது அழிவுகரமான நடத்தை என்பதைக் கூட அறியாமல் நாம் அடிக்கடி அழிவுகரமாக செயல்படுகிறோம். இதற்குக் காரணம் நம் சிக்கலான உணர்வுகள், தொந்தரவு தரும் அணுகுமுறைகள் மற்றும் நம்முடைய வழக்கமான நடத்தையின் நிர்பந்தம் ஆகியவற்றின் தாக்கத்தின் கீழ் செயல்படுகிறோம்.  நாம் மற்றவர்களிடம் மட்டும் மோசமாக நடந்துகொள்ளவில்லை; தனிப்பட்ட முறையிலும் சுய-அழிவுப்பாதைகளில் நடக்கிறோம். மற்றொரு வகையில் சொல்வதானால், நமக்கு நாமே பல சிக்கல்களை உருவாக்குகிறோம். நமக்கு குறைவான பிரச்னைகளோ அல்லது நம்முடைய பிரச்னைகளில் இருந்து விடுதலையோ அல்லது அதற்கும் அதிகமாக, மற்றவர்களும் கூட அவர்களின் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்காக உதவ விரும்பினால், நம்முடைய வரையறைகளுக்கான ஆதாரத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

குழப்பத்தை நாமே நீக்குதல்

நம்முடைய பிரச்னைகளுக்கான ஆதாரம் குழப்பம் தான் என்பதை நாம் உணர முடியும் என்று பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அதுவும் மிகக் கடினமல்ல. உண்மையில் நான் குழம்பிவிட்டேன். “நான் எல்லாவற்றையும் குழப்பிக்கொண்டேன்” என்கிற நிலையை பலரும் அடைகின்றனர். அதன் பிறகு என்ன? அதில் இருந்து மீள்வதற்கோ அல்லது முன்னேறிச்செல்வதற்கோ பணத்தை செலவிடுவதற்கு முன்னர், நம்முடைய குழப்பத்தில் இருந்து விலகிச் செல்வது சாத்தியம் தானா என்று உண்மையில் நாம் நம்புவதோடு அதனை மிகத் தீவிரமாக எண்ணிப்பார்க்க வேண்டும். குழப்பத்தில் இருந்து விலகுவது சாத்தியம் தான் என்று நாம் நினைக்காவிட்டால், நாம் என்ன செய்ய முயற்சிக்கப் போகிறோம்? அது மிக நிலையானதல்ல என்றாலும் நம்முடைய குழப்பத்தில் இருந்து விலகுவது சாத்தியமாகலாம் என்ற ஒற்றை நம்பிக்கையோடு சென்றால், அது விருப்பமான சிந்தனையே.

விடுதலை பல வழிகளில் இருந்து வரும் என்று நாம் நினைக்கலாம். யாரோ வந்து நம்மை காப்பாற்றுவார் என்றும் கருதலாம். அது உயர்ந்த, கடவுளைப்போன்ற தெய்வாதீன உருவமாக இருக்கலாம், இதனால் நாம் மீண்டும் நம்பிக்கையுடையவர்களாக மாறி பிறப்பெடுக்கிறோம். மாறுதலாக, நாம் ஒரு ஆன்மிக ஆசிரியராக, இணையராக அல்லது நம்முடைய குழப்பத்தில் இருந்து காப்பாற்றும் யாரோ ஒருவராகப் பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில், மற்றவர்களை சார்ந்தவர்களாக இருப்பது பக்குவப்படாதவர்களாக நடந்து கொள்வது எளிது.    

நம்மை காப்பாற்றப் போகிறவர்கள் யார்? என்பதைக் கண்டறிவதில் நாம் அடிக்கடி நம்பிக்கை இழப்பதனால் நாம் யாராக இருக்கப் போகிறோம்? என்பதிலும் குழப்பமடைகிறோம். தங்களுக்குள்ளாகவே குழப்பத்தில் இருந்து விடுபடாத ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கலாம், ஏனெனில் அவருடைய சிக்கலான உணர்வுகள் மற்றும் நடத்தை நம்முடைய அப்பாவித்தனமான சார்பு நிலையின் நற்பலனை அபகரித்துக்கொள்ளும். முன்னேறிச் செல்ல இது நிலையான வழியல்ல. நம்முடைய அனைத்து குழப்பத்தையும் தெளிவுபடுத்த ஒரு ஆன்மிக ஆசிரியரையோ அல்லது உறவுமுறையையோ எதிர்பார்க்கக் கூடாது. நாமே நம்முடைய குழப்பத்தில் இருந்து தெளிவு பெற வேண்டும்.

ஆன்மிக குரு அல்லது இணையருடனான உறவுமுறை உதவிகரமான சூழலை கொடுக்கும், ஆனால் அந்த உறவுமுறை ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி அது ஆரோக்கியமில்லாததாக இருந்தால், நிலைமை மேலும் மோசமாகிவிடும். இதனால் குழப்பமே அதிகரிக்கும். தொடக்கத்தில், நாம் ஆழ்நிலை மறுதலித்தலில் இருக்கலாம், ஆசிரியர் மற்றும் இணையர் சிறந்தவர்கள் என்று கருதலாம்; ஆனால் இறுதியில் ஏதும் அறியா அப்பாவி என்ற உடையை அணிந்துகொள்கிறோம். மற்ற நபர்களின் பலவீனத்தை நாம் பார்க்கத் தொடங்கினால், நாம் உடைந்துபோகும் நேரத்தில், நம்முடைய எல்லா குழப்பங்களில் இருந்தும் அவர் நம்மை பாதுகாக்கப்போவதில்லை.  நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்வோம்.

நமது நம்பிக்கை மற்றும் நமது உறுதிப்பாடு தோற்கடிக்கப்பட்டால், அது மிகவும் மோசமானதாக இருக்கும். தொடக்கத்தில் இருந்தே அதனை தவிர்த்தல் மிகவும் முக்கியம். நாம் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆன்மிக ஆசிரியரால் எதைச் செய்ய முடியும்? அவரால் எதை செய்யமுடியாது? சாத்தியமானது எது சாத்தியமில்லாதது எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மோதல்களைத் தவிர்க்க முன்எச்சரிக்கையோடு அணுகவேண்டும்.

குழப்பம் அற்ற உறுதி நிலையால், தெளிவான மன நிலையை நாம் உண்டாக்க வேண்டும். குழப்பம் என்ற வார்த்தையின் எதிர்ச்சொல் புரிதல், இது குழப்பம் ஏற்படுவதைத் தடுக்கிறது. விடாது தியானிப்பது மற்றும் மனக்கொந்தளிப்பு, சிக்கலான உணர்வுகள், மன இறுக்கம், அதீத மன அலுத்தம் அல்லது அச்ச மனநிலை ஆகிவற்றை அணுகி தீர்ப்பதே பௌத்தத்தின் பணி. அதன் அர்த்தம் என்னவென்றால், நமது மோசமான இன்னோரு பக்கத்தை, நாமே மறுக்கும் அளவிற்கான குணத்தை நமக்குள்ளாக ஆராய்து பார்த்தல். அப்படி பார்க்கும்போது தென்படும் நம்முடைய பிரச்னைகளுக்கான காரணங்கள் அல்லது நம்முடைய பிரச்னைகளுக்கான அறிகுறிகளைக் கண்டறிந்து, அவற்றின் எதிர்மறையானவற்றை பொருத்தி  அதனை வெல்ல வேண்டும். இவை அனைத்தும் கற்றல் மற்றும் தியானத்தின் அடிப்படையில் இருக்கிறது. சிக்கலான உணர்வுகள் மற்றும் நடத்தையை அடையாளம் காண்பதோடு அவை எங்கிருந்து வருகிறது என்பதையும் அறிய கற்றுக்கொள்ள வேண்டும்.

 தியானம்

தியானம் என்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பல்வேறு எதிர்ப்புசக்திகளை செயல்படுத்த பயிற்சித்தல், இதனால் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று நாம் பரிட்சயப்படுவோம் மேலும் அதனை யதார்த்த வாழ்விலும் செயல்படுத்த முடியும். உதாரணத்திற்கு, நாம் நினைக்கும்படி மற்றவர்கள் நடந்துகொள்ளவில்லை என்றால் நாம் கோபப்படுகிறோம், தியானத்தின் மூலம் இந்த சூழலை சிந்தித்து, அதனை வேறு கோணத்தில் பார்க்க முயற்சிக்கலாம். மற்ற நபர் பொருத்துக்கொள்ள முடியாத விதத்தில் செயல்படுவதற்கு பல வேறு காரணங்கள் இருக்கலாம். அவர் நம்மை விரும்பவில்லை என்பதற்காக அவர்கள் நடிக்க வேண்டிய கட்டாயமில்லை. “என் நண்பர் என்னை இனியும் நேசிக்கப் போவதில்லை, ஏனெனில் அவரோ அல்லது அவளோ என்னை அழைத்து பேசவில்லை” என்பது போன்ற நடத்தைகளுக்கு தியானத்தின் மூலம் தீர்வு காண முயற்சிக்கலாம். 

இது போன்ற சூழல்களில் அதிக நிம்மதியான மனநிலை, புரிதல் மற்றும் பொறுமையோடு கடக்க பயிற்சிக்க வேண்டும். பிறகு அந்த நபர் ஒரு வாரத்திற்கு உங்களிடம் பேசவில்லை என்றாலும் கூட, நீங்கள் வருத்தம் அடைய மாட்டீர்கள். அவர் அல்லது அவளுடைய வாழ்வில் நாம் தான் மிக முக்கியமான நபர் என்று சிந்திப்பது தன்முனைப்பானது. நாம் வருத்தமடையத் தொடங்கினால், அந்த நபர் ஒரு வேளை பணிப்பளுவில் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது நம்முடைய உணர்ச்சிகளின் வருத்தத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.

பௌத்த பயிற்சி என்பது முழு – நேர தொழில்

பௌத்த பயிற்சி என்பது பொழுதுபோக்கல்ல. அது நாம் செய்வது போன்று ஏதோ விளையாட்டோ அல்லது இளைப்பாறுதலோ இல்லை. பௌத்த பயிற்சி என்பது முழு- நேரப் பணி. நம்முடைய பணியானது நம்முடைய வாழ்வின் அனைத்திற்குமான அணுகுமுறைகளை நோக்கி செயலாற்றுதல். அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பை மேம்படுத்துவதற்காக நாம் செயலாற்றத் தொடங்கினால், உதாரணத்திற்கு அதனை நம்முடைய குடும்பத்தினர் மீது செயல்படுத்திப் பார்க்க வேண்டும். பலர் ஒரு அறையில் அமர்ந்து அன்பிற்காக தியானிக்கின்றனர், ஆனால் அவர்களின் பெற்றோர் அல்லது இணையர்களிடம் இருந்தே அதைப் பெறமுடிவதில்லை. இது மிகவும் சோகமானது.

உச்ச நிலையை தவிர்த்தல்

பௌத்த போதனைகளை நம்முடைய யதார்த்த வாழ்க்கைச் சூழல்களான வீடு மற்றும் பணியிடத்தில் செயல்படுத்த முயற்சிக்கும் போது, உச்ச நிலையை தவிர்த்தல் வேண்டும். முழு பழியையும் பிறர் மீது சுமத்துவது ஒரு வகை உச்ச நிலை, அதற்கு எதிரான உச்சநிலை முழுப்பழியையும் தானே ஏற்றுக்கொள்வது. வாழ்க்கை என்பது மிகவும் குழப்பமான ஒன்று. இந்த குழப்பத்திற்கு இரு பக்கம் இருக்கிறது: ஒரு பக்கம் நாம், மறு பக்கம் அடுத்தவர்கள். மற்றவர்களின் நடத்தை மற்றும் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை நமது அனுபவம் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். புனித வழியில் வந்த நீதிமான்களாக நம்மை நாமே கருதிக்கொண்டு, மற்றவர்களை பாவம் செய்தவர்கள் என குற்றம்சாட்டுகிறோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயற்சிப்பது மிகவும் எளிமையானது. இருப்பினும் பிறர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அறிவுரைகள் வழங்கலாம் மேலும் நம்முடைய அறிவுரைகளால் அவர்கள் மேலும் முரட்டுத்தனமாகிவிடக் கூடாது, ஆனால் பெரும்பான்மையான செயலாற்றல் நமக்குள்ளானதாகவே இருக்க வேண்டும்.

நமக்குள்ளாகவே செயலாற்றும் போது, மேலும் இரு உச்ச நிலைகளையும் கண்காணித்தல் வேண்டும்: முழுமையாக நமது உணர்வுகள்/விருப்பங்களால் நிரம்பியிருக்கும் மனநிலையில் இருத்தல் அல்லது அது பற்றி அறியாமலேயே இருத்தல். தாம் தான் எல்லாமும் என்பது முதல் ரகம். நமது உணர்வுகள், சிந்தனைகள் மட்டுமே சரி என்று கருதுவது. மற்றவர்களின் உணர்வுகள் குறித்து அக்கறை காட்டாமல் இருப்பது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நாம் என்ன நினைக்கிறோம் என்பதே மிக முக்கியம் என்று நினைப்போம். மற்றொரு புறம், ஒட்டுமொத்தமாக நம்முடைய உணர்வுகளின் நிலையோடு தொடர்பே இல்லாமல் இருப்போம் அல்லது எதையுமே உணர மாட்டோம், நம்முடைய உணர்வுகள் மறுத்துப்போனது போன்ற நிலை. இது போன்ற உச்சநிலைகளை தவிர்ப்பதற்கு மிக நுண்ணிய சமநிலை தேவை. அது மிக எளிதல்ல. மற்றவர்களுடன் இருக்கும் போதும் நாம் எப்போதும் நம்மையே கவனித்துக்கொண்டிருந்தால் - நமக்குள்ளேயே இரட்டைத்தன்மையை கற்பனை செய்வோம் – எனவே நாம் உண்மையில் யாருடனும் இணைந்து செயல்படுவதில்லை அல்லது யாருடன் இருந்தாலும் தொடர்புபடுவதில்லை.

உண்மையான கலை என்பது இயல்பாகவும் நேர்மையான வழியிலும் மற்றவர்களுடன் தொடர்புபடுத்துதல், எனினும் நம்முடைய கவனத்தின் ஒரு அங்கம் நம்முடைய உள்மனது மற்றும் அணுகுமுறை மீது இருக்க வேண்டும். நாம் இதனை செய்ய முயற்சிக்க வேண்டும். அது இன்றி ஏதோ முடங்கிய நிலையில் செயல்படுவதென்பது நாம் மற்றவர்களுடன் இல்லாததைப் போன்றது.

யாரோ ஒருவருடன் தொடர்புபடும் செயல்முறையில் இருக்கும் போது, நம்முடைய உந்துதல் மற்றும் உணர்வுகளை நாம் சோதித்தால், சில சமயங்களில் அந்த நபரிடம் சொல்வதற்கு உதவியாக இருக்கும். இருப்பினும் மற்றவரிடம் நாம் சொல்லவேண்டுமென்றால் அது மிகவும் தற்பெருமை போல உணரப்படும். பெரும்பாலும், மற்றவர்கள் நாம் என்ன உணர்கிறோம் என்று அறிய ஆர்வம் காட்டமாட்டார்கள். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது மிகவும் சுய-முக்கியத்துவமான உணர்வு. நாம் சுயநலமாக நடந்து கொள்கிறோம் என்பதை நாம் அறிந்தால், நம்மால் அதை உடனே நிறுத்த முடியும். நாம் அதனை அறிவிக்க வேண்டியதில்லை. 

அடுத்த இரண்டு உச்ச நிலைகள் என்னவென்றால், நாம் அனைவரும் கெட்டவர்கள் அல்லது அனைவரும் நல்லவர்கள். நாம் நம்முடைய கஷ்டங்கள், பிரச்னைகள் மற்றும் தொந்தரவு தரும் உ ணர்வுகள் மீது அதிக கவனத்தை செலுத்துவோமேயானால், நாம் கெட்டவர்கள் என்று உணரத்தொடங்குவோம். அது மிக எளிதாக குற்றஉணர்வாக மாறக்கூடும். “நான் பயிற்சிக்க வேண்டும். நான் பயிற்சிக்காவிட்டால், நான் கெட்ட மனிதன்.”  பயிற்சிக்கு இது மிகவும் கவலை கொள்கிற உணர்வின் அடிப்படையாகும்.

இதே போன்று நாம் மற்றொரு உச்ச நிலையைத் தவிர்க்க வேண்டும், அது நம்முடைய நேர்மறை பக்கத்தில் அதீத வற்புறுத்தல்களை செலுத்துகிறது. “நாம் அனைவரும் சிறந்தவர்கள். நாம் அனைவரும் புத்தர்கள். அனைத்தும் அற்புதமானது.” இது மிக மோசமான நிலை, ஏனெனில் இதனால் நாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை என்று அர்த்தமாகிவிடும்; நாம் எந்த நேர்மறைகளையும் நிறுத்தத் தேவையில்லை, ஏனெனில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய அடிப்படை நற்குணங்களை மட்டுமே பார்த்தால் போதுமென்றாகிவிடும். “நான் அற்புதமானவன். நான் சிறந்தவன். நான் என்னுடைய நேர்மறை நடத்தையை நிறுத்தத் தேவையில்லை. ஏற்கனவே நான் ஒரு புத்தர்!” நமக்கு சமநிலை தேவை. நம்மைப் பற்றியே நாம் மிகவும் தாழ்வாக உணர்ந்தால், நம்முடைய அனைத்து குறைபாடுகளில் இருந்தும் விலகுவதற்கான திறனை நாம் நினைவில் கொண்டு நாம் புத்தர்களாக மாறலாம்; சிற்றின்பத்தில் சிறிதேனும் சலித்துப்போன உணர்வு ஏற்பட்டால், நாம் நம்முடைய எதிர்மறை பக்கங்களை வலியுறுத்த வேண்டும்.  

பொறுப்பை எடுத்துக்கொள்ளுதல்

அடிப்படையில், நம்முடைய முன்னேற்றம் மற்றும் பிரச்னைகளில் இருந்து வெளியேறுவதற்காகவும் நாம் நமக்குள்ளாகவே பொறுப்பை எடுத்துகொள்ள வேண்டும். நிச்சயமாக, நமக்கு உதவி தேவை. நாமே இதைச் செய்வதென்பது சாத்தியமல்ல. ஆன்மிக ஆசிரியர்கள் அல்லது ஆன்மிக சமூகத்தின், ஒத்த மனமுடைய மக்கள், தங்களுக்குள்ளாகவே செயலாற்றுபவர்கள், தங்களின் பிரச்னைகளுக்காக ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்ளாதவர்களிடம் இருந்து நாம் உதவி பெறலாம். எனவே தான் தம்பதிகள், ஒருவரையொருவர் ஒரே விதமான நடத்தையை பகிர்வதோடு, குறிப்பாக பிரச்னைகள் எழும் போது ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம். இணையர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருந்தால், எதுவும் வேலைக்கு ஆகாது. இருவரில் ஒருவர் மட்டுமே தனக்குள்ளாக செயலாற்றுகிறார் மற்றவர் குறைசொல்லிக்கொண்டே இருந்தாலும் வேலைக்கு ஆகாது. நாம் ஏற்கனவே இருந்த உறவுமுறையில் அந்த நபர் மற்றவரை குறை சொல்பவராக இருக்கிறார், ஆனால் நாம் என்ன பங்காற்றி இருக்கலாம் என்பதை பார்க்கலாம், அந்த உறவுமுறையை முறித்துக்கொள்ள வேண்டும் என்பது அதற்கு அர்த்தமல்ல, ஆனால் அது மிகவும் கடினம் தான்.  நாம் இந்த உறவுமுறையில் தியாகியாக இருக்க முயல்வதை தவிர்த்தல் வேண்டும் : “எல்லாவற்றையும் நான் சகித்துக் கொண்டிருக்கிறேன். இது மிகக் கடினம்.” இவை அனைத்துமே மிக நொந்து போன ஒரு நிலை.

 உத்வேகத்தை பெறுதல்

பௌத்த பாதையென்பது அவ்வளவு எளிதானதல்ல. அது வாழ்வின் அசுத்தத்தைக் கையாள்வது. இதனை கடப்பதற்கு நமக்கு ஒரு வித உறுதி தேவை; நமக்கு நிலையான உத்வேக ஆதாரங்கள் தேவை. நம்முடைய உத்வேகத்தின் ஆதாரமென்பது ஆசிரியர்கள் சொல்லும் கற்பனை மாயாஜாலக் கதைகள் போன்றவையாக இருந்தால் – பௌத்த வரலாற்றில் நம்மைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ – அது மிக நிலையான உத்வேத்திற்கான ஆதாரமாக இருக்க முடியாது. அதே போன்று அது மிக வியப்பானதாக இருக்கும், ஆனால் அவை நம்மிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய வேண்டும். பலரிடத்தில், அற்புதங்கள் மூலம் நாம் அடைய நினைக்கும் மோட்சத்திற்கான கற்பனை உலகை இது வலுப்படுத்துகிறது. ஒரு மிகப்பெரிய மாயாஜாலக்காரர்கள் அவருடைய அற்புதங்கள் மூலம் நம்மை காப்பாற்றப் போகிறார் என்று நாம் கற்பனை செய்கிறோம் அல்லது இது போன்ற அற்புதமான செயல்களை நமக்குள்ளாகவே நாம் வளர்த்துக்கொள்ள முடியும். இது போன்ற கற்பனைக் கதைகளில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அது நம்முடைய நம்பிக்கையை ஈர்க்கலாம், அது உதவியாக இருக்கலாம், ஆனால் உத்வேகத்திற்கு இது நிலையான அடிப்படையல்ல. நமக்கு நிலையான அடிப்படை தேவை.  

புத்தரே இதற்கு சிறந்த உதாரணம். புத்தர் மக்களை “ஈர்க்க” முயற்சிக்கவில்லை அல்லது கற்பனைக் கதைகளைச் சொல்லி அவர்களை வசப்படுத்தவில்லை. அவர் காற்றில் மாயாஜாலம் செய்தல், மக்களை ஆசிர்வதித்தல் உள்ளிட்ட எதையும் செய்யவில்லை. புத்தர் பயன்படுத்திய ஒப்புமை, பௌத்த போதனைகள் மூலம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது, புத்தர் ஒரு சூரியனைப் போன்றவரா? சூரியன் மக்களை வெப்பமாக்க எப்போதும் முயற்சிப்பதில்லை. இயல்பாகவே, சூரியன் எப்படி இருக்கிறதோ அதனிடம் இருந்து தன்னியல்பாக ஒவ்வொருவருக்கும் வெப்பம் கொடுக்கிறது.

இருப்பினும் கற்பனைக் கதைகளைக் கேட்டு அல்லது சிலையின் தலையைத் தொடுவது அல்லது கழுத்தைச் சுற்றி சிவப்புக் கயிற்றை வாங்கிக் கட்டிக்கொள்வதால் அதிக சக்தி கிடைக்கும் என்று கேள்விபட்டிருப்போம், இவை எதுவும் நிலையானதல்ல. உந்து சக்திக்கான நிலையான ஆதாரமென்பது கட்டற்ற ஆசிரியராகவும், இயல்பில் மனிதனாக இருத்தல் – அவரது பண்பு, பௌத்த போதனைகளை பயிற்சிக்கும் வழியில் எட்டும் முடிவுமாகும். இதுவே ஈர்த்தல் எனப்படுகிறது, ஒரு நபர் நம்மை பொழுதுபோக்குவதற்காக நடிப்பதைப் போன்றதல்ல. எனினும் இது கற்பனைக்கதையைப் போல வியப்பானதாக இருக்காது, அது நமக்கு ஈர்ப்புக்கான நிலையான உணர்வைத் தரும்.

நாம் முன்னேற்றமடைந்தால், நம்முடைய சுய முன்னேற்றத்தைப் பார்த்து நமக்கு நாம் உந்துசக்தி பெற முடியும் – அதியசமான சக்திகளைப் பெறுவது என்று அர்த்தமல்ல, ஆனால் நம்முடைய பண்புகள் மெல்ல மெல்ல மாறுவதில் இருந்து அந்த உந்துதல் கிடைக்கும். போதனைகள் எப்போதும் நம்முடைய சுய நேர்மறை செயல்களை கொண்டாடவே வலியுறுத்தும். முன்னேற்றம் என்பது நேரியல்பானதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் பெறுவது மட்டுமல்ல. வாழ்வின் ஒரு தன்மையானது கட்டுப்பாடின்றி ஏற்படும் பிச்னைகளில் இருந்து நாம் முழுமையாக விடுபடும் வரையில் நம்முடைய மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அது நம்ப முடியாத உயர்நிலை. சில நேரங்கள் மகிழ்ச்சியாகவும் சில நேரங்கள் துன்பமாகவும் இருக்கும் என்பதை நாம் கட்டாயம் எதிர்பார்க்க வேண்டும். சில சமயங்களில் நாம் நேர்மறை வழியில் செயல்பட முடியும் சில நேரங்களில் உளநோய் பழக்கத்தின் சக்தி மேலோங்கி இருக்கும். அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவ்வளவு சாதாரணமாக  அதிசயங்கள் நிகழ்ந்துவிடாது.

வாழ்வின் எட்டு வெளிப்படையான அம்சங்கள் வலியுறுத்தும் அசவுகரியத்தை தவிர்க்கும் போதனையானது எல்லாம் நல்லபடியாக நடந்தால் தலைக்கனம் கூடிவிடாமலும், அதுவே சரியாக நடக்கவில்லையென்றால் மனமுடைந்து போகாமலும் இருக்கச் செய்கிறது. அதுவே வாழ்க்கை. குறுகிய கால விளைவுகளைப் பார்க்காமல் நீண்ட கால தாக்கத்தைப் பார்த்தல் வேண்டும். நாம் ஐந்து ஆண்டுகளாக பயிற்சித்துக் கொண்டிருந்தால், உதாரணத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிட்டு பார்த்தால் ஏராளமான முன்னேற்றம் இருக்கும். சில சமயங்களில் நாம் வருத்தமடைந்தாலும், நாம் சூழலை அமைதியாக, தெளிவான மன மற்றும் இதயத்துடன் கையாள முடியும் என்று கண்டறிந்தால், நாம் சில முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்பதையே அது சுட்டிக்காட்டுகிறது.  இது ஊக்கமளிக்கிறது. இதுவே உண்மையான உந்துசக்தி.

நடைமுறை முன்னெடுப்பு

நாம் நடைமுறைக்கு ஏற்றாற் போலவும் தாழ்ந்து செல்லும் நிலையிலும் இருத்தல் வேண்டும். நாம் தூய்மைப்படுத்தும் பயிற்சியை செய்யும் போது, உதாரணத்திற்கு, மிகப்பெரிய சன்னியாசி போன்ற ஒரு வெளிப்புற நபர் நம்முடைய பாவங்களில் இருந்து நமக்கு மன்னிப்பு தருவார் என்று கருதாமல் இருப்பது மிக முக்கியம். பௌத்தத்தில், தூய்மைப்படுத்துதலின் போது எந்த சன்னியாசியும் நம்மை பாதுகாக்கவோ அல்லவோ ரட்சிக்கவோ போவதில்லை. அது முன்னேற்றமும் அல்ல. நம்மை எது தூய்மைபடுத்தும் என்றால் உண்மையில் நம்முடைய மனதை இயல்பாக தூய்மைபடுத்துதல். அவை இயல்பாகவே குழப்பத்தால் கறைபடவில்லை; குழப்பத்தை நீக்க முடியும். நம்முடைய சொந்த முயற்சிகள் மூலம் மனதின் இயல்பான தூய்மையை அங்கீகரிப்பதனால் குற்ற உணர்ச்சி, எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் பலவற்றை நாம் விட்டுவிட முடியும். இது தூய்மைபடுத்தும் செயல்முறை செயல்பட உதவுகிறது.

மேலும், இந்த நடைமுறைகள் அனைத்தையும் செய்வதிலும், பௌத்த போதனைகளை நம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த முயற்சிப்பதிலும், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். பாசாங்கு செய்யாமல் அல்லது நாம் இப்போது இருப்பதை விட உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது முக்கியம்.

பௌத்தத்தை கத்தோலிக்க பின்புலத்தில் இருந்து அணுகுதல்

உதாரணத்திற்கு, பௌத்தத்தின் மீது ஆர்வம் கொண்ட சிலர் கத்தோலிக்க பின்புலத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். அது நம்முடைய நிலையென்றால், நாம் பௌத்தத்தை அணுகி படிக்கத் தொடங்கும் போது, நாம் கத்தோலிக்கத்தை கைவிட்டு விட்டு பௌத்தத்திற்கு மாற வேண்டும் என்று நாம் உணரக் கூடாது. எனினும், இரண்டு பயிற்சிகளையும் கலக்காமல் இருக்க வேண்டியது முக்கியம். தேவாலயத்தில் அமர்வதற்கு முன் மூன்று திறனிழத்தலை நாம் தொழுகைபீடத்தில் செய்யக் கூடாது. அதே போன்று பௌத்தத்தை பயிற்சிக்கும் போது, கன்னி மேரியை நாம் காட்சிப்படுத்தக் கூடாது, நாம் புத்தரை கண் முன் கொண்டு வர வேண்டும். நாம் ஒவ்வொன்றையும் தனித்தனியே பயிற்சிக்க வேண்டும். நாம் தேவாலயத்திற்கு சென்றால், கர்த்தரின் நினைவும்; பௌத்த தியானம் செய்தால், அதில் மட்டுமே கவனம் இருத்தல் வேண்டும்.

அன்பினை வலியுறுத்தல், பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட பல காரணிகள் பொதுவான இருக்கின்றன. அடிப்படையில் எந்த முரண்பாடும் இல்லை. நாம் அன்பு, கருணை, மற்றும் பிறருக்கு உதவுதலை பயிற்சித்தால், நாம் நல்ல கத்தோலிக்கவாதி மற்றும் நல்ல பௌத்தராக என இரண்டிலுமே நல்லவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும், கடைசியில் நாம் ஒரு வாய்ப்பை தேர்ந்தெடுக்க வேண்டும், ஆனால் அளவில்லாத ஆன்மிக முன்னேற்றத்திற்கான முழு முயற்சியையுடன் நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு செல்லப் போகிறோம் என்றால், ஒரே நேரத்தில் இரண்டு படிக்கட்டுகளில் செல்ல முடியாது – இது மிக உதவிகரமான தோற்றம். நாம் அடிப்படையில் கீழ் மட்டத்தில் கூடம் வரை மட்டுமே செயல்படுகிறோமென்றால், நல்லது. நாம் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. இரண்டில் இருந்துமே நாம் பலனைப் பெற முடியும்.

தவறான விசுவாசத்தை தவிர்த்தல்

பௌத்தத்தை நம்முடைய வாழ்வில் செயல்படுத்தும் போது, நம்முடைய சொந்த மதத்தை தீங்கானதாகவோ அல்லது தாழ்வாகவோ புறந்தள்ளிவிடாமல் இருப்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய தவறு.  பின்னர் நாம் பௌத்த வெறியர் மற்றும் கத்தோலிக்க எதிர்ப்பு வெறியராக மாறிவிடுவோம். உதாரணத்திற்கு, மக்கள் அதை கம்யூனிசம் மற்றும் ஜனநாயகத்துடன் செய்கிறார்கள். உளவியல் வழிமுறை என்று அழைக்கப்படும் தவறான விசுவாசம் ஆட்கொள்கிறது. நம்முடைய குடும்பத்தினர், பின்புலம் உள்ளிட்டவற்றிற்கு விசுவாசத்துடன் இருக்க விரும்புகிறோம், எனவே நாம் அதனை புறந்தள்ளினாலும் கூட கத்தோலிக்கத்திற்கு விசுவாசத்துடன் இருக்க விரும்புகிறோம். நம்முடைய பின்புலத்திற்கு விசுவாசமாக இல்லாமல், மோசமானது என்று அனைத்தையும் புறந்தள்ளினால், நாம் முற்றிலும் மோசமானவர் என்று உணர்வோம். ஏனெனில் இது உச்சபட் அசவுகரியம், நம்முடைய பின்னணியில் எதையாவது கண்டுபிடிப்பதன் அவசியத்தை நம்மை அறியாமலே உணர்கிறோம்.

எங்கள் பின்னணியின் குறைந்த நன்மை பயக்கும் சில அம்சங்களுக்கு விசுவாசமாக இருக்கும் போக்கு நம்மை அறியாமலே உள்ளது. உதாரணத்திற்கு, நாம் கத்தோலிக்கத்தை புறந்தள்ளலாம், ஆனால் நரகம் குறித்த வலுவான பயத்தை நாம் பௌத்தத்திற்குள் கொண்டு வருகிறோம். என்னுடைய நண்பர் ஒருவர் தீவிர கத்தோலிக்க பற்றாளர், பின்னர் தீவிர பௌத்தராக மாறினார், அதன் பிறகு இருப்பியல் நெருக்கடிக்கு ஆளானார், “நான் கத்தோலிக்கத்தை கைவிட்டுவிட்டேன், எனவே நான் இப்போது கத்தோலிக்க நரகத்திற்கு செல்லப்போகிறேன்; ஆனால் நான் பௌத்தத்தை கைவிட்டு மீண்டும் கத்தோலிக்கத்திற்கே திரும்பினால், பௌத்த நரகத்திற்கு செல்வேன்!” என்பார். கேட்பதற்கு இது நகைப்புக்குரியதாக இருந்தாலும், உண்மையில் அவரைப் பொருத்த வரையில் இது தீவிர பிரச்னையாகும்.

நம்மை அறியாமலே நாம் பெரும்பாலும் சில குறிப்பிட்ட அணுகுமுறைகளை கத்தோலிக்கத்தில் இருந்து பௌத்த பயிற்சிக்கு கொண்டு வருகிறோம். இதில் பொதுவான ஒன்று குற்றஉணர்வு, அற்புதங்களைத் தேடுதல் மற்றும் நம்மை காப்பாற்றுவதற்கு வேறு நபர்கள். நாம் பயிற்சிக்காவிட்டால், நாம் பயிற்சிக்க வேண்டும் என்று உணர்வோம், அப்படி செய்யவில்லையென்றால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறோம். இந்த எண்ணங்கள் எப்போதும் உதவிகரமானதல்ல. நாம் அதனைச் செய்யும் போது அதனை உணர வேண்டும். நம்முடைய பின்புலங்களைப் பார்த்து, நேர்மறை அம்சங்களை அங்கீகரிக்க வேண்டும், எனவே நாம் எதிர்மறை குணாதிசயங்களை விட நேர்மறையானவற்றிற்கு விசுவாசமாக இருக்க முடியும். "மரபு வழியாக குற்ற உணர்ச்சி மற்றும் அற்புதத்தைத் தேடுவதையும் நான் பெற்றிருக்கிறேன்" என்று நினைப்பதற்குப் பதிலாக, "கத்தோலிக்க பாரம்பரியமான அன்பு, தர்மம் மற்றும் துரதிர்ஷ்டவசமானவர்களுக்கு உதவுவது போன்றவற்றை நான் பெற்றிருக்கிறேன்" என்று நாம் சிந்திக்க முடியும்.  

நம்முடைய குடும்பத்தினரை பொருத்தவரையிலும் கூட நாம் அதையே செய்யலாம். நாம் அவர்களை புறக்கணித்திருக்கலாம், நம்மை அறியாமலே அவர்களின் நேர்மறைகளுக்கு தெரிந்தே விசுவாசமாக இருப்பதை விட  எதிர்மறை பாரம்பரியத்திற்கு விசுவாசமாக இருந்திருக்கலாம். நாம் அதனை அங்கீகரித்தால், எடுத்துக்காட்டாக, நமக்கு கொடுத்தருளிய கத்தோலிக்க பின்புலத்திற்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம், அதன் பின்னர் எந்த மோதல்களும் இன்றி முன்னேற்றத்திற்கு இடர்பாடாக இருக்கும் நம்முடைய கடந்த கால மற்றும் எதிர்மறை உணர்வுகள் இன்றி நம்முடைய சொந்த பாதையில் நாம் செல்ல முடியும்.

இதன் உளவியல் காலக்கெடுவை புரிந்து கொள்ள முயற்சித்தல் மிக முக்கியமானது. நாம் நம்முடைய கடந்த காலம் – நம் குடும்பங்கள், நம் மதங்களின் பிறப்பு, அல்லது ஏரோ ஒன்றை பற்றி சிந்தித்தால் – நமக்குள்ளாகவே நாம் எதிர்மறை அணுகுமுறையை புகுத்துகிறோம். மற்றொருபுறம், நம்முடைய பின்புலம் மற்றம் கடந்த காலத்தில் இருந்த நேர்மறையானவற்றை அங்கீகரித்தால், நமக்கு நாமே மேலும் கூடுதலான நேர்மறை அணுகுமுறைகளைப் பெறமுடியும். நம்முடைய ஆன்மிக பாதையில் மேலும் கூடுதலாக நிலைத்திருக்க நமக்கு அது உதவும்.

சுருக்கம்

நாம் நிதானமாக படிப்படியாக முன்னேற வேண்டும். மிகவும் முன்னேற்றம் பெற்ற போதனைகள் குறித்து நாம் கேட்டாலோ அல்லது படித்தாலோ, “ஒரு போதனையை எவ்வளவு விரைவாக கேள்விப்படுகிறீர்களோ, அதனை உடனடியாக பயிற்சியுங்கள்“ என்று பெரிய குருமார்கள் கடந்த காலத்தில் சொல்லி இருந்தாலும், ஏதோ சில நமக்கு மிகவும் உயர்நிலையானதா என்பதை கண்டறிந்து அல்லது அப்படி ஏதோ ஒன்று இருந்தால், அதனை நாம் உடனடியாக பயிற்சிக்க முடியும். அது மிக உயர்நிலையானதென்றால், அந்த நிலைகளைக் கண்டு, அத்னை நாம் பயிற்சிப்பதற்கு முன்னர் நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டு அதன் பின்னர் அவற்றை பின்பற்ற வேண்டும். சுருக்கமாக, என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான கெஷ் ங்கவாங்க் தர்க்யேய் சொன்னது போல, “நாம் கற்பனை வழிகளை பயிற்சித்தால், கற்பனை ரீதியிலான முடிவுகளையே பெறுவோம் ; நடைமுறை வழிமுறைகளை பயிற்சித்தால், நடைமுறை முடிவுகளைப் பெறுவோம்."

Top