அகிம்சையே வழி

அமைதியை அடைவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் அகிம்சையே யதார்த்தமான வழியாகும். கருணை மனிதனின் அடிப்படை இயல்பு என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது. கடந்த நூற்றாண்டுகளின் வரலாற்றைப் பார்த்தால், வன்முறை அதிக வெறுப்பையும், அதிக எதிர்மறை உணர்ச்சிகளையும் மட்டுமே கொண்டு வருவதைக் காண்கிறோம். வன்முறையை எதிர்த்து வன்முறையையே பயன்படுத்தினால், அது நேர்மறையான விளைவை ஏற்படுத்தாது. ஐரோப்பாவில், வன்முறை சரியான முறையல்ல என்பதைத் தலைவர்கள் உணர்ந்தனர். அவர்கள் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் சிந்தித்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடங்கினர். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்சும் ஜெர்மனியும் எப்படி எதிரிகளாக இருந்தனர் என்பதை நான் அடிக்கடி மக்களுக்குச் சொல்வேன். எனது நண்பரும் குவாண்டம் இயற்பியல்ஆசிரியருமான கார்ல் ஃப்ரீட்ரிக் வான் வெய்சாக்கவருக்கு 90 வயது. அவருடைய இளமைக் காலத்தின் போது, ஜெர்மானியர்கள் அனைத்து பிரெஞ்சுக்காரர்களையும் எதிரிகளாகக் கருதினர், மேலும் பிரெஞ்சுக்காரர்கள் எல்லா ஜெர்மானியர்களையும் எதிரிகளாகக் கருதினர் என்று என்னிடம் கூறினார். ஆனால் இப்போது அந்த அணுகுமுறைகள் முற்றிலும் மாறிவிட்டன.

மக்கள் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்றதால், வன்முறை காலாவதியாகிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர். வன்முறையானது "நாம்" மற்றும் "அவர்கள்" என்ற கருத்துகளை வலுவாக சார்ந்துள்ளது, அதன் அடிப்படையில் சண்டைகள் வரும். ஆனால் அனைத்து அண்டை நாடுகளையும் ஒரே சமூகமாக கருதி அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை தொடங்கினர். ஐரோப்பிய யூனியன் தொடங்கியதில் இருந்து, ஐரோப்பாவில் சண்டை சச்சரவுகள் ஏற்படும் அபாயம் இல்லை என்று நான் எப்போதும் சொல்கிறேன். ஐரோப்பிய ஒன்றியம் இல்லை என்றால், ஒருவேளை இப்போது சில கடுமையான பிரச்சினைகள் எழுந்திருக்கும். ஆனால் மக்கள் வன்முறையற்றவர்களாக இருப்பதன் மூலம் அவர்களின் அடிப்படை மனித இயல்புக்கு இசைவாக மாறுகிறார்கள்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடையில் மக்களின் சிந்தனை மாறிவிட்டது. உதாரணமாக, போலந்தில் உள்ள ஒற்றுமை இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 200,000 ரஷ்ய வீரர்கள் இருந்தனர், ஆனால் மக்கள் அகிம்சை முறைகள் மூலம் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருந்தனர். இந்தக் கண்டத்தில் உள்ள மக்கள், வன்முறையால் பல துன்பங்களுக்கு ஆளான பிறகு, அகிம்சையே சிறந்த வழி என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற விஷயங்கள் தெளிவான அறிகுறிகளாகும்.

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதே உணர்வு லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆப்பிரிக்காவில் பல வேறுபட்ட நாடுகள் உள்ளன, எனவே முதலில் அது வட ஆப்பிரிக்காவில் தொடங்கி, பின்னர் மத்திய, கிழக்கு, மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தலாம். பின்னர் உலகம் முழுவதும்! என்கிற அளவில் கொண்டு செல்லலாம். இறுதியில் முழு உலகமும் ஒரே சங்கமாக மாற வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இது சாத்தியம் என்று நினைக்கிறேன். இதுவே எனது கனவு.

இந்தியா ஒரு நல்ல உதாரணம். இந்தியா வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகியவற்றின் ஒன்றியம். எல்லா மாநிலங்களும் வெவ்வேறு நாடுகளைப் போல, அவற்றின் சொந்த மொழிகள் மற்றும் எழுத்துகளுடன் உள்ளன. இருப்பினும் அவர்கள் ஒரு ஒன்றியத்தை உருவாக்குகிறார்கள். எனது கனவு - ஒரு வெற்றுக் கனவாக இருக்கலாம் - இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் என்றோ ஒரு நாள் ஒரே கூட்டமைப்பை உருவாகும். ஒரு யூனியனின் கருத்து அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

இந்த நூற்றாண்டு உரையாடலுக்கான நூற்றாண்டாக இருக்க வேண்டும். மக்கள் வெவ்வேறு நலன்களைக் கொண்டிருக்கும்போது, உரையாடல் இருக்க வேண்டும், ஆயுதங்கள் அல்ல. அது சாத்தியம். முதலில் அணு ஆயுத ஒழிப்பு வர வேண்டும். இது மிகவும் முக்கியம். தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் சந்திப்பின் போது, அங்குள்ள அரசாங்கம் சிரமங்களை எதிர்கொண்டதால், ரோம் நகருக்கு மாற்றப்பட்டது, அணு ஆயுத ஒழிப்பை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி பேசினோம். அப்போது, இதற்கான கால அட்டவணையை வகுத்து, அணுசக்தியை அதற்கேற்ப நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. "அணுஒழிப்பு" – கேட்பதற்கு இது மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் நிலையான நேர அட்டவணை இல்லாமல் மிகவும் பயனுள்ளதாக இருக்காது. அது ஒரு உலகளாவிய இயக்கமாக மாறினால், ஒருவேளை அதை அடைய முடியும். அதன் பிறகு, அனைத்து தாக்குதல் ஆயுதங்களையும், பின்னர் தற்காப்பு ஆயுதங்களையும் அகற்ற வேண்டும். அமைதியான உலகத்தை அடைய, நாம் படிப்படியாக இராணுவத்தை ஒழிக்க வேண்டும்.

வெளிப்புற அமைதியை அடைய, முதலில் நாம் உள் மட்டத்தில் அடைய வேண்டும். அதிக கோபம், பொறாமை மற்றும் பேராசை உள்ளது. எனவே, நமக்கு வெளிப்புற நிராயுதபாணியாக்கம் மற்றும் உள் நிராயுதபாணியாக்கம் இரண்டும் ஒன்றாகத் தேவை. உள் நிராயுதபாணியாக்கம் கல்வி மூலம் வருகிறது. அதிக இரக்கமுள்ள மனதுடன், நமது உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இதுனுடன் தொடர்புடையது, புன்னகைக்க வேண்டியது மிக அவசியம். மக்கள் புன்னகையை பார்க்க விரும்புகிறார்கள், முகம் சுளிக்கவோ அல்லது கோபமான முகத்தையோ பார்க்க மாட்டார்கள். குழந்தைகள் மற்றும் நாய்கள் கூட புன்னகையை விரும்புகின்றன. நீங்கள் ஒரு நாயைப் பார்த்து சிரிக்கும்போது, அது அதன் வாலை ஆட்டுகிறது. நீங்கள் ஒரு நாய்க்கு உணவளித்து, மிகவும் இறுக்கமான முகத்துடன் இருந்தால், நாய் உணவை சாப்பிடும், ஆனால் பின்னர் போய்விடும்.

சமூக விலங்குகள் சமூக அக்கறை கொண்டவை, ஏனெனில் அவற்றின் உயிர்வாழ்தல் மற்ற சமூகத்தைச் சார்ந்தது.  மனிதர்களாகிள நாம் சமூக விலங்குகள் மற்றும் ஒட்டு மொத்த உலகமும் நமது சமூகம். இப்படிச் சிந்திக்கும்போது, மற்றவர்களிடம் மரியாதையை வளர்க்கிறோம். வெவ்வேறு கருத்துக்கள், வெவ்வேறு ஆர்வங்கள் இருந்தாலும், எப்படி தொடரலாம் என்பதில் சில உடன்பாடுகளை எட்டலாம்.

முதலில் நாம் நம்முடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் உள்பட மற்றவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நாம் எல்லோரும் இந்த கிரகத்தில் ஒன்றாக வாழ வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில், கிழக்கு மற்றும் மேற்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோர்கள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள். அனைவரின் எதிர்காலமும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறது. உலகப் பொருளாதாரத்திற்கு, தேசிய எல்லைகள் மிகவும் முக்கியமல்ல. 

புவி வெப்பமடைதல் மிகவும் தீவிரமான பிரச்னை. இது தொடர்ந்தால், பிறகு அடுத்த நூற்றாண்டில், உலகில் தீவிரமான கஷ்டங்கள் இருக்கும். நான் ஒரு துறவு, எனக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் நீங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி, உங்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு நீங்களே பொறுப்பு. எனவே புவி வெப்பமடைதலை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். 

அதே போல, உலகத்தின் மொத்த மக்கள் தொகையும் 700 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் சுற்றும் பூமியில் வசிப்பவர்களின் எண்ணைக்கை ஆயிரம் கோடியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்துடன் அனைவரின் நலனைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்.

அகிம்சை வழிகள் மட்டுமே பிரச்னைகளை சமாளிப்பதற்கான ஒரே வழிமுறைகள். இந்தியாவில் நான் அகிம்சையின் இந்திய தத்துவம் மற்றும் மதச்சார்பின்மை நன்னெறிகளை படிக்க முயன்றேன். அகிம்சையின் இருப்பிடம் இந்தியா. 3,000 ஆண்டுகளாக அங்கே மத நல்லிணக்கம் இருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் பலவற்றில் உள்ள சுன்னி மற்றும் ஷியா நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் பரிந்துரைத்துள்ளேன். இந்தியாவில் சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் பலர் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இது போன்று மத நல்லிணக்கத்தை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

பொருள்வாத விஷயங்களில் அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்தியாவில் நவீன பொருள்வத கல்வியை அகிம்சை, தார்மீக பொறுப்பு மற்றும் உணர்ச்சி அறிவு ஆகியவற்றின் பண்டைய மரபுகளுடன் இணைப்பது எளிது. உணர்ச்சிகள் தொடர்பான அதன் பண்டைய மரபுகளை புதுப்பிக்க இந்தியாவுக்கு உதவ நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன். சீனாவும் அதன் பண்டைய மரபுகளைக் கொண்டுள்ளது. இப்போது அங்கு 400 மில்லியன் பௌத்தர்கள் உள்ளனர். இந்தியாவையும் சீனாவையும் இணைத்தால், அது மிகப்பெரிய மக்கள் தொகை.
 
படிப்படியாக, பல்வேறு தொழில்கள் மூலம், அமைதியான, இரக்கமுள்ள உலகத்தை உருவாக்க முடியும். அப்படி செய்தால், 21ம் நூற்றாண்டின் பிற்பகுதி மிகவும் அமைதியானதாக இருக்க முடியும். எனக்கு இப்போது 84 வயதாகிறது, எனவே இன்னும் பத்து அல்லது இருபது வருடங்களில் "பை, பை" என்று சொல்லும் நேரம் வரும். ஆனால் தொலைநோக்கு மற்றும் பயிற்சி முறைகள் மூலம் நாம் இப்போதே தொடங்க வேண்டும். அவ்வளவுதான். நன்றி.

Top