நான்கு மேன்மையான உண்மைகளின் படி கட்டமைக்கப்பட்டது லாம் லாம்-ரிம்

நான்கு நிதர்சனமான உண்மைகள்

ஞானம் அடைந்த பின்னர் அது குறித்து ஷக்யமுனி புத்தர் விளக்கினார், அது மாதிரியான நிலையை நாமே அடைவதற்காக அவர் பல்வேறு வழிமுறைகளை நமக்கு கற்பித்தார். அடிப்படை விஷயமானது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வேறு விதமாகச் சொல்வதானால், தர்மத்தை பயிற்சிப்பது. முதலாவது (1)நிஜமான பிரச்னைகள், ஒவ்வொருவரும் சந்திப்பது. இவை (2) உண்மையான காரணங்களைக் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால், (3) இந்தப் பிரச்னைகளின் உண்மையான மூலத்தை கண்டறிந்து அவற்றை நம்மால் நிறுத்திட இயலும், நாம்(4) சரியான மனப் பாதைகளை மேம்படுத்த வேண்டும். 

தொடக்க நிலை

இந்த நான்கு நிதர்சனமான உண்மைகளை (நான்கு மேன்மையான உண்மைகள்) சில வேறுபட்ட நிலைகளில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். தொடக்க நிலையில், மிகவும் மோசமான நிலையிலான மறுபிறப்பில் பிறப்பதற்கான உண்மையான சிக்கல்கள் இருக்கின்றன. நாம் வருத்தப்படும் உச்ச நிலையில் இருந்தால், நோயின் பிடியில் சிக்குண்டு, பசி, தாகம் அல்லது எப்போது ஒரு வலியால் கொடுமைகளை அனுபவித்தால், நமக்குள் ஆன்மிக எண்ணத்தை வளர்ப்பதற்கு நேரமோ அல்லது சாத்தியமோ இருக்காது. ஏனெனில் நம்முடைய மனம் தீவிர கஷ்டங்கள் மற்றும் துயரத்தால் நிறைந்திருக்கும். 

இதற்கான உண்மையான காரணம் அழிவுகரமாக செயல்படுதல். புத்தர் போதித்ததைப் போல, நாம் வலி அல்லது துன்பத்தை உருவாக்கினால், நமக்கு நாமே அந்தத் துயரை கட்டாயமாக அனுபவிக்க நேரிடும். மற்றொரு புறம், நாம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், நாம் மகிழ்ச்சியை உருவாக்கினால், கடைசியில் நாமும் அதே மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். எனவே, தீவிரமான பிரச்னைகளுக்கான உண்மையான நிறுத்தத்தை நாம் அடைய விரும்பினால், எதிர்மறை அல்லது அழிவுகரமான செயல்களில் இருந்து நம்மை நாமே விலக்கிக் கொள்ளும் சரியான பாதையை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

நாம்  மிகவும் அற்புதமான மனித வாழ்வைக் கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். நமக்குள் ஆன்மிகத்தை மேம்படுத்தவும் வளர்க்கவும் கூடிய அனைத்து வாய்ப்புகளையும் இப்போது நாம் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு நாம் மறுவாழ்வு மையத்திலோ அல்லது தீவிர பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவராகவோ இல்லை. எப்படி இருந்தாலும் இந்த வாய்ப்புகள் நீடித்து இருக்கப் போவதில்லை, ஏனெனில் நாம் அனைவருமே இறக்கப் போகிறோம் மேலும் அற்புதமான இந்த மனித வாழ்வை இழக்கப் போகிறோம். அப்படி நடக்கும் போது எந்த நிலைத்தன்மையும் இருக்காது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும், நம் மீது வாகனம் மோதலாம். நாம் உடனடியாக இறக்க நேரிட்டால், நாம் எப்போதும் அழிவுகரமாகவே செயல்பட்டிருந்தால், அடுத்த ஜென்மத்தில் மிக மோசமான நிலைகளுக்குச் சொல்ல அது வழிவகுக்கும். நாம் உருவாக்கிய வலி மற்றும் துன்பங்களை நாமே அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்கக் கூடிய சூழ்நிலைகள் நமக்கு அடையலாம். எனவே, அச்சுறுத்தும் இந்த எதிர்காலத்தில் இருந்து தப்பிப்பதற்கான வழி எதுவும் இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். அவர்களிடத்திலும் நாம் புத்தர்களைக் காணலாம். 

புத்தர்கள் அனைத்து வரம்புகளிலிருந்தும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டவர்கள், இதனால் அவர்களின் மனம், பேச்சு மற்றும் உடல் திறன்கள் வரம்பற்றதாகவும் தெளிவாகவும் இருக்கும். அவர்களின் மனம் சிக்கலான உணர்வுகள் அல்லது கோபம், இணைப்பு மற்றும் கற்பனை போன்ற அணுகுமுறைகளின் வரம்புகளுக்குள் அடங்காது. மனச்சோர்வு அல்லது மனம் அலைபாய்தலால் அவர்கள் வரையறைக்குள் வரமாட்டார்கள். மனதின் அம்சமாகவும் கருதப்படும் அவர்களின் இதயங்கள் சுயநலம் அல்லது ஆதரவினால் மட்டுப்படுத்தப்படவில்லை. உதாரணமாக, அவர்களின் பேச்சு தொடர்புகொள்ளும் திறனிலும் அவர்களின் உடல்கள் ஆற்றலில் மட்டுப்படுத்தப்படவில்லை. இந்த விதத்தில், அவர்களின் மனம், அவர்களின் இதயம், பேச்சு மற்றும் உடல் பற்றி எல்லாம் தெளிவாக உள்ளது. மேலும், அவர்கள் தங்களுடைய அனைத்து ஆற்றல்களையும் உணர்ந்து கொண்டதால், அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு பரிணமித்துள்ளனர்.

புத்தர்கள் மட்டும் இதைச் செய்யவில்லை, இதை எப்படி செய்தோம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவகையில் கூறியுள்ளனர். தர்மம் அல்லது எல்லைகளை மீறி மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்தல் போன்றவற்றை நிறுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் இது சாத்தியம். அத்தகைய இலக்குகளைக் கொண்டு அவற்றை நோக்கி முன்னேறிச் செல்லும் சமூகமும் உள்ளது, அதுவே சங்கமாகும். நமக்கு நாமே பிரச்சினைகளை உருவாக்கும் திசையில் செல்லும் வாழ்க்கையைத் தொடர்ந்து அனுபவிக்க விரும்பாமல், புத்தர், தர்மம், சங்கம் ஆகியவற்றின் நல்ல குணங்களைப் பார்த்து, நாம் அந்தத் திசையில் இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க அது நமக்கு உதவும், அவற்றில் இருந்து வாழ்க்கையில் நமது பாதுகாப்பான திசையைப் பெறுவோம். இதுவே சரணாகதி என்று அர்த்தப்படுத்துகிறது – நம்முடைய வாழ்க்கைக்கு பாதுகாப்பான திசையை கொடுப்பது. 

உண்மையான பாதுகாப்பான திசையானது கீழ்காணும் காரண மற்றும் காரியத்தின் சட்டங்களாக சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க நாம் விரும்பினால், கொலை, கொள்ளை, பொய் உரைத்தல் போன்றவற்றில் இருந்து நம்மை விலக்கிக் கொண்டு எதிர்மறையாக செயல்படுவதில் இருந்து நம்மை நாமே விலக்கிக் கொள்ளும் சரியான பாதையை நாம் பின்பற்ற வேண்டும்.  ஆகவே நாம் ஆக்கப்பூர்வமான விதத்தில் செயல்படுவோம். நான்கு நிதர்சனமான உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கான தொடக்க நிலை இதுவாகும். 

இடை நிலை

இடைநிலையில் நாம் எவ்வகை சூழலில் மறுபிறப்பு எடுக்கிறோம் என்பது பொருட்டல்ல, பிறத்தல், நோய்வாய்ப்படுதல், வயது முதிர்தல் மற்றும் இறப்பு போன்ற வாழ்வின் நிதர்சனமான பிரச்னைகளை நாம் அனுபவிக்கிறோம். நமக்கு என்ன தேவையோ அதைப் பெறுவதற்காக முயற்சி செய்தாலும் கூட நமக்கு கிடைக்காமல் போகும் என்பதே உண்மையான பிரச்னை. அதே போல நமக்கு நடக்கவே வேண்டாம் என்று நினைக்கின்ற விஷயங்களும் நடப்பதற்கான சிக்கல்களும் இருக்கின்றன. வெறுப்பு போன்ற கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய பல விஷயங்களை நாம் கொண்டிருக்கிறோம், இதனால் மற்றவர்களிடம் கடினமான உறவுமுறைகளை கொண்டிருக்கிறோம். இப்படி நடப்பதற்கான உண்மையான காரணம் முதலில் நாம் யார் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்கிற யதார்த்தம் பற்றி விழிப்புணர்வின்றி இருக்கிறோம். இதனால் நாம் ஸ்திரமான ஏற்றத்தாழ்வு-அடையாளங்களை பற்றிக் கொள்கிறோம், அதனால் நாம் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறோம். இவற்றின் விளைவாக, அந்த அடையாளங்களை பாதுகாப்பதற்காக நம்முடைய மனங்கள் சிக்கலான உணர்வுகள் மற்றும் கோபம், இணைப்பு, அப்பாவித்தனம், பேராசை, பெருமை, அலைபாய்தல் போன்ற அணுகுமுறைகளால் நிரம்பி இருக்கிறது. இதன் அடிப்படையில் பல்வேறு தூண்டுதல்கள் அல்லது கர்மாக்கள் நம்முடைய மனதிற்குள் வருகிறது, அது நம்மை தூண்டப்பட்ட விதமாக நடந்து கொள்ளச் செய்கிறது.

நம்முடைய அடையாளங்களை மேலும் பாதுகாப்பானதாக உணர்வதற்காக நாம் இதைச் செய்கிறோம், உதாரணமாக, முடிந்தவரை அதிக செல்வம், பொருட்கள் அல்லது நண்பர்களைப் பெற முயற்சித்தல், அல்லது நமக்கு பிடிக்காவிட்டால் எல்லாவற்றில் இருந்தும் தப்பிக்கவோ அல்லது அனைதையும் அழிக்கவோ முயற்சிப்பது, கத்துவது அல்லது ஒவ்வொருவரிடத்திலும் மூர்க்கமாக நடந்து கொள்வது போன்று தூண்டப்படும் விதமாக செயல்பட்டால், உண்மையில் அது நமக்கு நிதர்சனமாக பிரச்னைகளைத் தரும்.

இந்தப் பிரச்னைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் விரும்பினால், நாம் சரியான பாதையை பின்பற்ற வேண்டும். முதலில், நாம் சரியான நோக்கத்தை மேம்படுத்த வேண்டும், அது நம்முடைய பிரச்னைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற உறுதியான முடிவாக இருக்க வேண்டும், அதுவே துறவறம் என்று சிலசமயங்களில் அழைக்கப்படுகிறது. இதனை நம்முடைய நோக்கமாகக் கொண்டு, பாகுபடுத்தும் விழிப்புணர்வை நாம் மேம்படுத்த வேண்டும் அதனுடன் நாம் யதார்த்தம் அல்லது வெற்றிடத்தை காண முடியும். அவ்வகையான அறிவொளியைப் பெற, நமக்கு ஒருநிலைப்படுத்துதல் தேவை, மேலும் நம்முடைய மனம் அத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டிருக்க, நமது உடல் மற்றும் பேச்சின் மொத்த செயல்களை நாம் கட்டுப்படுத்த வேண்டும். எனவே நாம் நன்னெறி சுய- ஒழுக்கத்தை கொண்டிருக்க வேண்டும். உயர்நிலை நன்னெறி சுயஉயர்நிலை நன்னெறி சுய-ஒழுக்கம், ஒருநிலைப்படுத்துதல், அறிவொளி என்கிற மூன்று உயர்நிலை பயிற்சிகளை இந்தப் பாதையில் நாம் பின்பற்றுவதனால் இருத்தலுக்கான அனைத்து சாத்தியமற்ற வழிகளின் மொத்த இல்லாமையான வெற்றிடத்தை காண்பதற்கான பாகுபடுத்தி பார்க்கும் விழிப்புணர்வை நம்மால் பெற முடியும்.

எதார்த்தத்தைப் பற்றி நமக்குத் தெரியாததாலும், நாம் யார், நாமும் உலகமும் எப்படி இருக்கிறோம் என்பது பற்றிய குழப்பமும் இருப்பதால், எல்லாவற்றிலும் உறுதியான மற்றும் சுதந்திரமானவை போன்ற சாத்தியமற்ற வழிகளில் அவற்றைப் புரிந்துகொள்கிறோம். எவ்வாறாயினும், அத்தகைய கற்பனையான சாத்தியமற்ற வழியில் எதுவும் இல்லை. எல்லாம் சாத்தியமற்ற முறையில் இருப்பது இல்லாமை. இருப்பினும், எதுவும் இல்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, எது இருந்தாலும், அது சார்ந்து எழும் விதத்தில் உள்ளது, எல்லாமே காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், பகுதிகள், அல்லது மனதுடனான உறவு மற்றும் மன முத்திரை செயல்முறை ஆகியவற்றைச் சார்ந்து எழுகின்றன. இத்தகைய உண்மையான புரிதல் மற்றும் உணர்தலின் மூலம், உணர்ச்சிகளைத் தொந்தரவு செய்யும் மன இருட்டடிப்புகள் அல்லது மனத் தடைகளை நாம் கடந்து விடுதலை பெறலாம். இப்படி நான்கு சரியான உண்மைகளைப் புரிந்துகொள்வதே இடைநிலையாகும்.

மேம்பட்ட நிலை

மேம்பட்ட நிலையில் இருக்கும் போது, நாம் மட்டுமே பிரச்னைகளை சந்திக்கவில்லை மாறாக ஒவ்வொருவமே நம்மைப் போன்று அதே பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும். எனவே, இந்த நிலையில், உண்மையான பிரச்னைகள் என்பது ஒவ்வொருவதும் எதிர்பொளும் பிரச்னைகள். மேலும் மற்றொரு உண்மையான பிரச்னைகயானது ஒவ்வொருவரும் அந்தப் பிரச்னைகளில் இருந்து கடந்து வர உதவ முடியாமல் இருப்பது. இந்தப் பிரச்னைகளின் உண்மையான காரணம், முதலில் நம்மைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொண்டு மற்றவர்களின் நிலையை புரிந்து கொள்ளாமல் புறந்தள்ளும் சுயநலம். பின்னர், மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான அனைத்து திறமையான வழிகளையும் அறிந்து கொள்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் மன இருள் அல்லது மனத் தடைகள் உள்ளன, வேறுவிதமாகக் கூறினால், நம் சர்வ அறிவைத் தடுக்கும் தெளிவின்மை. இதை நிறுத்துவது நமது சொந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, புத்தர் நிலையை அடைவதற்கு அப்பால் செல்வது, அதில் நமது அனைத்து வரம்புகளையும் கடந்து, நமது அனைத்து திறன்களையும் உணர்ந்து, முடிந்த வரை அனைவருக்கும் நன்மை செய்ய முடியும்.

இதற்கு இட்டுச்செல்லும் உண்மையான பாதை, முதலாவதாக, போதிச்சிட்டாவின் உந்துதலை வளர்ப்பது, இது மற்ற அனைவருக்கும் நம் இதயங்களை விரிவுபடுத்துகிறது அல்லது திறக்கிறது மற்றும் அறிவொளியை அடைய, புத்தரின் நிலை அவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும். இதை நமது உந்துதலாகக் கொண்டு, தொலை தூர அடைதல்கள் அல்லது பரிபூரணங்களை நாம் வளர்த்து நடைமுறைப்படுத்துகிறோம், இவை அனைத்தும் அக்கறையுள்ள அன்பு மற்றும் இரக்கமுள்ள அனுதாபத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இவை தாராள மனப்பான்மை, சுய ஒழுக்கம், பொறுமையான சகிப்புத்தன்மை, மகிழ்ச்சியான விடாமுயற்சி, மனதின் நிலைத்தன்மை (ஒரு நிலைப்படுத்துதல்), மற்றும் பாகுபடுத்தும் விழிப்புணர்வு (அறிவொளி) ஆகியவையாகும். தொலை தூர பாகுபாடுகளுடன், நமது குழப்பமான உணர்ச்சிகளைக் கடந்து விடுதலையைப் பெறுவதற்கு நாம் பார்க்க வேண்டிய அதே யதார்த்தம் அல்லது வெற்றிடத்தை நாம் காண்கிறோம். எப்படி இருந்தாலும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உறுதியை விட போதிசிட்டாவின் சக்தி நமது உந்துதலாக மிகவும் வலுவானதாக இருப்பதால், அந்த புரிதலுக்கு அதிக ஆற்றல் உள்ளது.

நமது பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற உறுதியை மட்டுமே நாம் கொண்டிருந்தால், இது யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதலுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலை வழங்குகிறது. எப்படி இருந்தாலும், யதார்த்தத்தைப் பார்ப்பதற்கான நமது உந்துதல், கூடுதலாக, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தால், இது அதிக ஆற்றலைச் சேர்க்கிறது. இவ்வாறு, நம் புரிதல் இரு நிலைகளின் இருட்டடிப்புகளையும் துண்டிக்கிறது, உணர்ச்சிகளைத் தொந்தரவு செய்யும் இருட்டடிப்புகளை மட்டுமல்ல, சர்வ அறிவைத் தடுக்கிறது.

உதாரணமாக, விஷபாம்பு கடியை எப்படி குணப்படுத்துவது என்பது பற்றி மருத்துவ விரிவுரை உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதைப் படிக்கும் ஒரு மாணவன் டாக்டராக வேண்டும் என்பதற்காகக் கலந்து கொண்டால், அவன் நிறைய பணம் சம்பாதிக்கவும், அவனுடைய பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் முடியும், அவன் இந்த சொற்பொழிவை ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலுடன் மட்டுமே கேட்பான். இருப்பினும், ஒரு குழந்தை பாம்பால் தீண்டப்பட்டால், ஒரு தாய் பயிற்றுவிக்கும் இடத்திற்கு ஓடுவாள், தன் குழந்தை குணமடைய வேண்டும் என்பதில் அவளுக்கு தீவிர அக்கறை இருப்பதால், பாம்பு கடியை எப்படிக் குணப்படுத்துவது என்பதை அவள் அதிக தீவிரத்துடன் கற்றுக்கொள்ள விரும்புவாள். அதேபோல், யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதலுக்குப் பின்னால் ஒரு போதிசிட்டா உந்துதல் இருக்கும் போது, இது அதற்கு அதிக வலிமையான சக்தியைச் சேர்க்கிறது, இதனால் நமது புரிதல் நமது மனத் தெளிவின்மை உள்ளிட்ட அனைத்தையும் குறைக்க முடியும்.

இவ்வகையானது, ஒரு பாதை அல்லது ஞானம் மற்றும் அறிவொளியை இணைக்கும் மனதின் பாதையை உள்ளடக்கியது. இருப்பினும், சூத்திர அளவில் அவை இங்கே ஒன்றிணைக்கும் விதம், இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் ஒன்றல்ல. மாறாக, இது ஒவ்வொன்றும் மற்றொன்றின் சூழலில் நிகழும் ஒரு முறையாகும். இவ்வாறு, நம் இதயங்களை மற்ற அனைவருக்கும் விரிவுபடுத்தி, அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஞானம் அடைவதற்கான வழிமுறையானது, நமது அறிவொளி அல்லது யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதன் பின்னணியில் உள்ளது, மேலும் நேர்மாறாகவும் உள்ளது.

இந்த முறை மற்றும் அறிவொளியை இணைக்கும் விதத்தில், நமது மனத் தெளிவின்மைகளை அகற்றுவதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கும். உண்மையில், இது மூன்று எண்ணற்ற யுகங்கள் என அறியப்படும், எண்ணற்ற மிகப்பெரிய வரையறுக்கப்பட்ட எண், இது 10-ஐ தொடர்ந்து 60 பூஜ்ஜியங்கள் ஆகும். அதை ஜில்லியன் என்று அழைப்போம். இது ஒரு மிக நீண்ட நேரமாகும், மேலும் நமது வரம்புகளை கடப்பதற்கும், நமது அனைத்து திறன்களை உணர்ந்து அவர்களுக்கு சிறந்த முறையில் பயனளிப்பதற்கும் நாம் இவ்வளவு நேரம் எடுக்கும் வரை மற்றவர்கள் காத்திருக்க முடியாது. இங்குதான் தந்திரம் வருகிறது. தந்திரம் என்பது ஒரு மஹாயானம் அல்லது பரந்த மனப்பான்மை கொண்ட ஒரு புத்தரின் நிலையை அடைய - மிக விரைவாகவும் திறமையாகவும் - மற்றவர்களுக்கு முடிந்தவரை மற்றும் விரைவில் நன்மை பயக்கும். சாத்தியம். நான்கு நிதர்சனமான உண்மைகளின் அடிப்படையில் நாம் இப்போது விவாதித்த அனைத்து முறைகளையும் இது அடிப்படையாகக் கொண்டதாகும்.

Top