ஆசியாவில் பௌத்தத்தின் பரவல்

04:16
ஒரு சமயப்பரப்பு இயக்கத்தை வளர்க்கவில்லை என்றாலும், புத்தரின் போதனைகள் நூற்றாண்டுகளைக் கடந்து பரவி இருக்கிறது: முதலில் தென்கிழக்கு ஆசியாவில் தொடங்கி, பின்னர் மத்திய கிழக்கில் இருந்து சீனாவிற்கும், எஞ்சிய கிழக்கு ஆசிய பகுதிகளுக்கும் பரவி இறுதியில் திபெத் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் மேலும் அடைந்தது. வெளிநாட்டினருக்கு பௌத்த நம்பிக்கைகள் மீது உள்ளூர் ஆர்வம் இருந்த போதும் மேலே சொன்ன பிராந்தியங்களில் பௌத்தம் இயல்பாகவே வளர்ந்தது. சில சமயங்களில் மக்களுக்கு நன்னெறிகள் வழங்குவதற்கு உதவியாக ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தை தழுவினர், ஆனால் யாருமே வலுக்கட்டாயப்படுத்தி மாறவில்லை. புத்தரின் கருத்துகளை மக்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம், எது உதவியானது என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருந்தது.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் புத்தரின் போதனைகள் அமைதியான முறையில் பரவியது, அங்கிருந்து ஆசியாவின் தொலைதூரங்களிலும் பரந்து விரிந்தது. ஒரு புதிய கலாச்சாரத்தை எப்போதெல்லாம் அடைகிறதோ அப்போதெல்லாம் முக்கியமான மையப்புள்ளிகளான ஞானம் மற்றும் இரக்கத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பௌத்த முறைகள் மற்றும் பாங்கு உள்ளூர்வாசிகளின் மனநிலைக்கு ஏற்ப சுதந்திரமாக மாற்றப்பட்டது. எல்லாவற்றிற்குமான ஒரு மதகுரு தலைமை என்ற படிநிலையை பௌத்தம் எப்போதும் வளர்த்தெடுக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த முறைக்கேற்ப மேம்படுத்தி, சொந்த மத கட்டமைப்பு மற்றும் சொந்த ஆன்மீகத் தலைமையென பௌத்தத்தை பரப்பின. தற்போது, நன்கு அறியப்பட்ட மற்றும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் அந்த குருமார்களில் ஒருவர் திபெத்தை சேர்ந்த புனிதர் தலாய் லாமா.

வரலாற்று சுருக்கம்

பௌத்தத்தில் இவை இரண்டும் முக்கியமான பகுதிகள்: ஸ்ரவகயனா (அமைதியான வாகனம்), தனிப்பட்ட விடுதலையை வலியுறுத்துவது, மகாயனா (பரந்த வாகனம்), பிறருக்கு உதவும் வகையில் ஞானம் பெற்ற புத்தராக முழுவதும் மாறுவாதற்காக செயலாற்ற வலியுறுத்துவது. அமைதியான மற்றும் பரந்த வாகனம் இரண்டிற்கும் பல துணைபிரிவுகள் இருக்கின்றன. தற்போது, மூன்று வடிவங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கின்றன: தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் துணைப் பிரிவான தேரவாதாம் என்று அறியப்படும் ஒன்று ஸ்ரவகயனா, இரண்டாவது மகாயனா பிரிவுகள் சீன மற்றும் திபெத்திய பாரம்பரியங்கள் என பெயரிடப்படுகிறது.  

  • மூன்றாவது நூற்றாண்டு பொ.ஊ.மு தேரவாதாம் பாரம்பரியம் இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் பர்மாவிற்கு (மியான்மர்) பரவியது. அங்கிருந்து இதர தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களை (தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ்) அடைந்தது. இதர ஸ்ரவகயானா பள்ளிகள் நவீன பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இரானின் கிழக்கு மற்றும் கடற்கரைப்பகுதி, மத்திய ஆசியாவிற்கு பரவியது. மத்திய ஆசியாவில் இருந்து, சீனாவிற்கு 2ம் நூற்றாண்டு பொ.ஊ காலத்தில் பரவியது. ஸ்ரவகயானாவின் இந்த வடிவங்கள் பின்னர் மகாயனா அம்சங்களுடன் இணைந்து இந்தியாவில் பயணித்த அதே வழியில், மகாயனாவுடன் சீனாமற்றும் பெரும்பாலான மத்திய ஆசியாவின் ஆதிக்கம் செலுத்தும் பௌத்த முறையாக மாறியது. சீன முறையிலான மகாயனா பின்னர் கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாமிற்கு பரவியது.  
  • திபெத்திய மகாயனா பாரம்பரியம் 7ம் நூற்றாண்டு பொ.ஊழிக்காலத்தில் தொடங்கி, இந்திய பௌத்தத்தின் முழு வரலாற்று வளர்ச்சி மரபுரிமை பெற்றது. திபெத்தில் இருந்து அது இமாலயப் பிராந்தியங்கள் வழியாக மங்கோலியா, மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவின் சில பிராந்தியங்களுக்கு (புரியாத்தியா, கால்மீக்கியா மற்றும் துவா) பரவியது.
  • இதனோடு, 2ம் நூற்றாண்டு பொ.ஊழிக்காலத்தில் இருந்து, மகாயனா பௌத்தத்தின் இந்திய வடிவங்கள் வியட்நாம், கம்போடியா, மலேசியா, சுமத்ரா மற்றும் ஜாவாவிற்கு கடல் வாணிப வழியாக இந்தியாவில் இருந்து தெற்கு சீனாவிற்கு பரவியது. அவை எதுவும் இன்று இல்லை.

 பௌத்தம் எவ்வாறு பரவியது

பெரும்பாலான ஆசியா முழுவதிலும் பௌத்தத்தின் விரிவாக்கமானது அமைதி உள்ளிட்ட சில வழிகளில் பரவியது. சக்யமுனி புத்தர், ஒரு பயண ஆசிரியராக தன்னுடைய நுண்ணறிவை ஆர்வமுள்ளவர்களுடனும் அருகிலுள்ள ராஜ்யங்களில் இருந்து விரும்பி அத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு ஒரு முன்மாதிரியை அமைத்தார். அவர் தன்னுடைய துறவிகளிடம் உலகின் முன் சென்று தன்னுடைய போதனைகளை விளக்குமாறு அறிவுறுத்தினார். தன்னுடைய சொந்த மதத்தை ஸ்தாபிக்க முற்படாமல், மற்றவர்களிடம் கண்டிப்பாகவோ, அவர்களின் சொந்த மதத்தை விட்டுக்கொடுத்தோ, புதிய ஒன்றிற்கு மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தவில்லை.

யதார்த்தத்தை புரிந்து கொள்ளாததால் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் மகிழ்ச்சியின்மை மற்றும் துன்பத்தைக் கடந்து வர மற்றவர்களுக்கு உதவுதலே புத்தரின் நோக்கம். பின்னர் வந்த தலைமுறை பின்பற்றுபவர்கள் இவரின் இந்த உதாரணத்தால் ஈர்க்கப்பட்டு, தங்களுடைய வாழ்வில் இது பயனுள்ளது என்பதைக் கண்டறிந்து மற்றவர்களுடன் இந்த முறைகளைப் பகிர்ந்தனர். இப்படித் தான் நாம் தற்போது அழைக்கும் “பௌத்தம்” தொலைதூரத்தில் பரந்து விரிந்தது.

சிலசமயங்களில் இந்த முறையானது இயல்பாக பரிணாம வளர்ச்சி பெற்றது. உதாரணத்திற்கு, பௌத்த வணிகர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச்சென்று குடியேறியபோது, உள்ளூர்வாசிகளில் சிலருக்கு இவர்களின் நம்பிக்கைகள், மீது இயல்பாகவே ஆர்வம் மேம்பட்டது, இப்படியாக இஸ்லாம் அறிமுகத்தில் இருந்து இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்டவற்றிலும் இவை நடந்தேறியது. பொதுஊழிக்காலத்திற்கு முன்னும் பின்னும் இரண்டு நூற்றாண்டுகளில் இதே முறையில் பௌத்தமானது பாலைவனச்சோலைகளில் மத்திய ஆசியாவின் பட்டுப்பாதை நெடுகிலும் நிகழ்ந்தது. 

உள்ளூர் ஆட்சியாளர்களும் மக்களும் இந்த இந்திய மதம் குறித்து அதிகம் கற்றுக்கொண்டனர், வணிகர்களின் சொந்த பிராந்தியங்களில் இருந்த துறவிகளை ஆலோசகர்கள் அல்லது ஆசிரியர்களாக அழைத்தனர், அதே போன்று பலர் பௌத்த நம்பிக்கையைத் தழுவினர். பொ.ஊ.மு 2ம்நூற்றாண்டைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், மற்றொரு ஆரோக்கியமான முறையில் சீரான கலாச்சார தன்மயமாக்கலால் மக்களை வென்றடைந்தது, கிரேக்கர்களை தற்போதைய மத்திய பாகிஸ்தானின் கந்தாரா பௌத்த சமூகத்திற்குள் கொண்டு வந்ததைப் போன்றது. 

பெரும்பாலும் தன்மயமாதல் என்பது பௌத்த மதத்தைத் தழுவி ஆதரித்த சக்திவாய்ந்த மன்னர்களின் பிரதான செல்வாக்கால் ஏற்பட்டது. உதாரணத்திற்கு, பொ.ஊ.மு 3ம் நூற்றாண்டின் மத்தியில், மன்னர் அசோகரின் தனிப்பட்ட வலியுறுத்தலின் முடிவாக பௌத்தம் வடஇந்தியா முழுவதிற்கும் பரவியது. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்த இவர் தனது குடிமக்களை பௌத்த நம்பிக்ககையை தழுவுமாறு கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் மக்கள் நன்னெறி வாழ்வை முன்நடத்த வேண்டும் என்பதற்காக தனது சாம்ராஜ்யம் முழுமையிலும் இரும்புத்தூண்களில் கட்டளைகளை பொதித்து வைத்தார், புத்தரின் கொள்கைகளை தான் பின்பற்றுவதன் மூலம் மற்றவர்களும் அதனால் ஈர்க்கப்பட்டு பௌத்த போதனைகளை தழுவக் காரணமாகவும் இருந்தார். 

தொலைதூர தேசங்களுக்கு மதமாற்ற அமைப்புகளை அனுப்பி அசோக மன்னர் தனது சாம்ராஜ்யத்திற்கு வெளியேயும் தீவிரமாக மதமாற்றம் செய்தார், சிலசமயங்களில் இலங்கை மன்னர் தேவநம்பியா திஸா போன்ற வெளிநாட்டு ஆட்சியாளர்களின் அழைப்பின் பேரிலும் செயல்பட்டார். பல சமயங்களில் துறவிகளை தன்னுடைய தூதுவர்களாக அனுப்புவார்.  பார்வையிடச் செல்லும் துறவிகள் மற்றவர்களை மதம்மாற அழுத்தம் தருவதில்லை, ஆனால் புத்தரின் போதனைகள் எளிதில் கிடைக்க வழிசெய்கின்றனர், இது மக்கள் தாங்களாகவே அதனை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. தென்னிந்தியா மற்றும் தெற்கு பர்மா போன்ற இடங்களில், பௌத்தம் விரைவில் வேரூன்றியதற்கு இது உண்மையான சான்றாகும், அதே நேரத்தில் மத்திய ஆசியாவில் உள்ள கிரேக்க காலனிகள் போன்ற இடங்களில், எந்தவொரு உடனடி தாக்கம் ஏற்பட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை.

16 ஆம் நூற்றாண்டின் மங்கோலிய சக்திவாய்ந்த அல்தான் கான் போன்ற பிற மத மன்னர்கள் பௌத்த ஆசிரியர்களை தங்கள் சாம்ராஜ்யத்திற்கு அழைத்ததோடு, தங்கள் மக்களை ஒன்றிணைக்கவும், தங்கள் ஆட்சியை பலப்படுத்தவும் உதவும் பொருட்டு, பௌத்த மதத்தை நிலத்தின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவித்தனர்.

இந்த செயல்பாட்டில், அவர்கள் பௌத்தமதத்தில் இல்லாத, பூர்வீக மதங்களின் சில நடைமுறைகளை தடை செய்திருக்கலாம், மேலும் அவற்றைப் பின்பற்றுபவர்களைக் கூட துன்புறுத்தினார்கள், ஆனால் இந்த அரிய நகர்வுகள் பெரும்பாலும் அரசியல் நோக்கம் கொண்டவை. இதுபோன்ற லட்சியம் கொண்ட ஆட்சியாளர்கள் தங்களது குடிமக்களை பௌத்த நம்பிக்கை அல்லது வழிபாட்டை பின்பற்றும்படி ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை. இது நிச்சயமாக மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இல்லை.

 சுருக்கம்

கவனத்தோடு சரியான பகுப்பாய்வு செய்து அதன் பின்னர் பின்பற்றலாமே தவிர குருட்டு நம்பிக்கையோடு தன்னுடைய போதனைகளைப் பின்பற்ற வேண்டாம் என்று மக்களுக்கு சக்யமுனி புத்தர் கூறி இருக்கிறார்.  சக்திவாய்ந்த மதமாற்ற அமைப்புகள் வற்புறுத்துவதாலோ அல்லது அரசாணையாலோ மக்கள் புத்தரின் போதனைகளை ஏற்கக்கூடாது என்று வரலாறு சொல்லாமல் சொல்கிறது. 17ஆம் நூற்றாண்டு முற்பகுதியில், நெய்ஜி டோயின் கிழக்கத்திய மங்கோலிய நாடோடிகளுக்கு கால்நடைகளை லஞ்சமாகக் கொடுத்து பௌத்த மதத்திற்கு மாற்ற முயன்றார். இதனை நாடோடிகள் அதிகாரிகளிடம் புகாரளிக்க, கர்வத்தோடு இருந்த அந்த ஆசிரியருக்கு தண்டனையளிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 

பல்வேறு வழிகளில், பௌத்தம் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள் முழுமையிலும் அன்பு, இரக்கம் மற்றும் கருணைக்கான கருத்தை சுமந்து கொண்டு, வெவ்வேறு மக்களின் மனநிலைகள் மற்றும் அவர்களின் தேவைக்கு பொருந்தும் விதமாக அமைதியான பரவலையே தக்கவைத்திருக்கிறது.

Top