மூன்று பயிற்சிகள்

அடிப்படை பௌத்த பயிற்சி நம்மை மூன்று விதங்களில் பயிற்றுவிக்கிறது. நம்முடைய சொந்த நலன் மீது நமக்கே அக்கறை இருப்பதால், நம்முடைய பிரச்னைகள் மற்றும் துன்பங்களை வெல்ல பயிற்சி பெற முடியும்.  அல்லது அன்பு மற்றும் இரக்கத்தால் மற்றவர்களுக்கு அதிக நன்மை பயக்கும் பயிற்சியை அளிக்க முடியும். 

மூன்று பயிற்சிகள் என்றால் என்ன?

  • நன்னெறி ஒழுக்கம் – அழிவுகரமான நடத்தையில் இருந்து விலகும் திறன். இதை மேம்படுத்துவதற்கான ஒரே வழி நம்மை ஆக்கப்பூர்வமான நடத்தைகளில் ஈடுபடுத்திக்கொள்வதேயாகும். இந்த முதல் பயிற்சியானது சுய – ஒழுக்கத்தைப் பற்றியது – நாம் மற்றவர்களை ஒழுங்குபடுத்த முயற்சிக்கவில்லை.
  • ஒருமுகப்படுத்துதல் – நம்முடைய மனதை மையப்படுத்துதல், இதனால் எல்லா விதமான வெளிப்புற எண்ணங்களுடன் நம் மனம் சுற்றித்திரிவதை நாம் அனுபவிக்க மாட்டோம். நம்முடைய மனம் சோர்ந்து போய்விடாமல் கூர்மையாகவும், மையப்படுத்தியும் இருக்கச் செய்யலாம். மனதின் ஸ்திரத்தன்மை ஒருபுறம் என்றாலும் உணர்வுகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் அவசியம், இதனால் கோபம், பிணைப்பு, பொறாமை உள்ளிட்டவை நம்முடைய மனதை வெல்ல இயலாது. 
  • விழிப்புணர்வை பாகுபடுத்துதல் – ஏற்றுக்கொள்ளக்கூடியவை எது, நிராகரிக்கப்பட வேண்டியவை எது என்று பாகுபடுத்தல் அல்லது வேறுபடுத்தல் திறன். உதாரணத்திற்கு நீங்கள் காய்கறி வாங்க கடைக்குச் செல்லும் போது, “இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை, ஆனால் அது நன்றாக இருக்கிறது” என்று பாகுபடுத்தி பார்க்கிறீர்கள். நாம் இங்கு நடத்தையை பாகுபடுத்துகிறோம் – நாம்  இருக்கும் சூழல் யாருடன் இருக்கிறோம் என்பதைக் கொண்டு எது பொருத்தமற்றது, எது பொருத்தமானது என்று பிரிக்கலாம். உண்மையில் யதார்த்தம் எது, எவையெல்லாம் வெறும் கற்பனையின் கணிப்புகள் என்று நாம் ஆழ்மட்டத்தில் பாகுபடுத்தல் வேண்டும்.

பௌத்த அறிவியல், பௌத்த தத்துவம் மற்றும் பௌத்த மதம்

இந்த பயிற்சிகளை நம்முடைய சொந்த பலனுக்காவோ அல்லது பிறரின் நலனுக்காகவோ நாம் பயிற்சித்தாலும், இரண்டு விதங்களில் நாம் அவற்றை அணுகலாம். இவை இரண்டும் பொது மக்கள் மத்தியில் புனிதர் தலாய் லாமா உரையாற்றியதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியே. அவர் பௌத்தத்தை மூன்று பாகங்களாக பிரிக்கிறார்: பௌத்த அறிவியல், பௌத்த தத்துவம் மற்றும் பௌத்த மதம்.   

பௌத்த அறிவியல் முக்கியமாக மனதின் அறிவியலை குறிக்கிறது – மனம் மற்றும் உணர்வுகளின் தூய்மை குறித்து தலாய் லாமா என்ன சொல்ல விரும்புகிறார், நம்முடைய உணர்வுகளை அவை எவ்வாறு செயல்படுத்துகிறது. பல்வகை உணர்வுகளின் நிலை குறித்தும், அது எவ்வாறு செயல்படுகிறது, எப்படி ஒன்றிணைந்து செல்கிறது என்பது குறித்து பௌத்தம் மிக விரிவான ஆய்வை செய்திருக்கிறது.

பௌத்த அறிவியலிலும் சேர்க்கப்பட்டுள்ளவைகள்:

  • அறிவாற்றல் அறிவியல் – நமது புலனுணர்வு எவ்வாறு செயல்படுகிறது, இயற்கை நினைவுத்திறன் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவும் பலவிதமான பயிற்சி முறைகள்.
  • அண்டத்தோற்றவியல் – பிரபஞ்சம் எப்படி தோன்றி, சகித்து வாழ்ந்து, முடிகிறது என்ற விரிவான பகுப்பாய்வு
  • பொருள் – திடம், ஆற்றல், துணை அணுத்துகள்கள் மற்றும் பல எவ்வாறு செயல்படுகின்றன என்ற விரிவான பகுப்பாய்வு
  • மருந்து – உடலுக்குள்ளாகவே ஆற்றல் எவ்வாறு செயல்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள தலைப்புகளை யார் வேண்டுமானாலும் படித்து பலனடையலாம், மேலும் தலாய் லாமா அவ்வப்போது இவை குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசனைகளையும் நடத்துகிறார்.

இரண்டாவது பிரிவு, பௌத்த தத்துவம், உள்ளடக்கியுள்ள அம்சங்கள்:

  • நன்னெறிகள் – அடிப்படை மனிதப் பண்புகளான கருணை மற்றும் பெருந்தன்மை எந்த மதத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இதன் மூலம் யார் வேண்டுமானாலும் பலன் பெறலாம்.
  • தர்க்கம் மற்றும் மனோதத்துவவியல் – கணக்கோட்பாடு, பிரபஞ்சம், விவரங்கள், குணங்கள், பண்புகள் உள்ளிட்டவை பற்றிய விரிவான விளக்கம், அவை எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன, நாம் அவற்றை எவ்வாறு தெரிந்து வைத்திருக்கிறோம்.
  • காரணம் மற்றும் விளைவு – யதார்த்தம் என்ன,  நம்முடைய கணிப்புகள் எவ்வாறு யதார்த்தத்தை சிதைக்கின்றன மற்றும் காரணவியம் பற்றிய விரிவான பகுப்பாய்வு.

பௌத்த தத்துவம் பௌத்தர்களுக்கு மட்டுமே என்ற அவசியமில்லை, ஆனால் எல்லோரும் இதன் மூலம் பயனடையலாம். 

மூன்றாவது பகுதி, பௌத்த மதம், பௌத்த பயிற்சியின் உண்மையான வடிவத்தை உள்ளடக்கியது. எனவே கர்மா, மறுபிறப்பு, மதச் சடங்குகள், மந்திரங்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். எனவே பௌத்த பாதையை பின்பற்றுபவர்களுக்கு இது குறிப்பிடும்படியானது.

மூன்று பயிற்சிகளும் எளிமையாக பௌத்த அறிவியல் மற்றும் தத்துவம் மூலமாக முன்வைக்கப்படலாம், அவை எல்லோருக்கும் பொருத்துவதாகவும் அனைவருக்கும் ஏற்றதாகவும் உருவாக்குகின்றன, அல்லது இரண்டிற்குமானதோடு பௌத்த மதத்திற்கு சேர்த்து முன்வைக்கப்படலாம். “குறைந்தபட்ச தர்மம்” மற்றும் “உண்மையான பொருள் தர்மம்” என்று நாம் சொல்வதற்கு சமமானவை இவை.

  • குறைந்தபட்ச தர்மம் – இந்த ஜென்மத்தை மேம்படுத்தும் பொருட்டு பௌத்த அறிவியல் மற்றும் தத்துவ முறைகளை பயிற்சித்தல்.  
  • உண்மையான பொருள் தர்மம் – மூன்று பௌத்த குறிக்கோள்களாவன: சிறந்த மறுபிறப்பு, மறுபிறப்பில் இருந்து விடுதலை மற்றும் ஞானமடைதலுக்காக மூன்று பயிற்சிகளை தழுவுதல்.

குறைந்தபட்ச தர்மம் குறித்து நான் பேசும்போது, அவை உண்மையான பொருள் தர்மத்தின் முதல் படி என்றே சொல்வேன், ஏனெனில் ஆன்மிக இலக்குகளைப் பற்றி மேலும் சிந்திப்பதற்கு முன்னர் நம்முடைய அன்றாட வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான தேவையை உணர வேண்டும். பௌத்த அறிவியல் மற்றும் தத்துவம் பௌத்த மதத்திற்கு முதன்மையான தேவையல்ல, எனவே ஒரு பௌத்த பாதையின் பூர்வாங்கம் அடிப்படையில் சிந்திக்கிறோமோ இல்லையோ அல்லது பொதுவாக அதனை பொருட்படுத்தாமல் ­­நம்முடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மூன்று பயிற்சிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்க வேண்டும். 

நான்கு மேன்மையான உண்மைகள்

பௌத்த தத்துவத்தில் இருந்து பௌத்த சிந்தனைகள் செயல்படும் விதம் குறித்த பொதுவான விளக்கம் எங்களிடம் உள்ளது, அவையே நான்கு மேன்மை தரும் உண்மைகள் என்று அழைக்கப்படுகின்றன.  நாம் அவற்றை வாழ்வின் நான்கு உண்மைகள் என்றே நினைத்துப் பார்க்க வேண்டும், கீழே சொல்லப்பட்டுள்ளவை போல:

  • நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் பிரச்னைகளைப் பார்க்கும் போகும், புலனாகும் முதல் உண்மை வாழ்க்கை கடினமானது.
  • வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு காரணம் இருக்கிறது என்பதே இரண்டாவது உண்மை.
  • மூன்றாவது உண்மை நம்மால் பிரச்னைகளை தடுக்க முடியும்; நாம் அமைதியாக பிரச்னைகளை ஏற்றுக்கொள்ளாமல், அவற்றிற்கு தீர்வு காணலாம்.
  • காரணங்களை விலக்கினால் நம்மால் பிரச்னைகளில் இருந்து வெளிவரமுடியும் என்பதே நான்காவது உண்மை. நாம் இதைச் செய்ய முடியும் புரிதல் பாதையை பின்பற்றுவதனால் எவ்வாறு பேச வேண்டும், செயல்பட வேண்டும் என்பன விளங்குகிறது.

எனவே, நாம் செயல்படும் அல்லது பேசும் விதம் நமக்கு பிரச்னைகளை ஏற்படுத்தலாம், நாம் அதனை மாற்ற வேண்டும். நம்முடைய பிரச்னைகளுக்கான காரணங்களில் இருந்து விடுபடுவதற்கு மூன்று பயிற்சிகளும் ஒரு பாகமாகும். மூன்று பயிற்சிகளை புரிந்து கொள்வதே உதவிகரமான வழி, ஏனெனில் நாம் எதற்காக அந்த பயிற்சியை மேற்கொள்கிறோம் என்பதை குறிக்கிறது. எனவே, நமக்கு வாழ்வில் பிரச்னைகள் இருந்தால், நாம் பார்க்க வேண்டியவை:

  • நான் எவ்வாறு பேசுகிறேன், செயல்படுகிறேன், என்னுடைய நன்னெறி ஒழுக்கத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?
  • என்னுடைய கவனத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா- நான் எல்லா இடங்களிலும் செயல்படுகிறேனா, நான் உணர்வுகளால் உடைந்து போகிறேனா?
  • குறிப்பாக, எதார்த்தத்திற்கும் என்னுடைய முட்டாள்தனமான திட்டங்களுக்கும் இடையே வேறுபடுத்திக்காட்டுவதில் சிக்கல் இருக்கிறதா?

நம் வாழ்நாளில் அன்றாட வாழ்வில் இதனை நாம் செயல்படுத்தலாம், அல்லது எதிர்காலத்தில் நாம் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நீண்டு கொண்டே போகலாம். தொடக்க நிலையில், இந்தப் பயிற்சியை நம் அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை மட்டுமே என்று கருத வேண்டும்: அவை எவ்வாறு நமக்கு உதவுகிறது? பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் நாம் என்ன செய்கிறோம்? அவற்றை போக்க நம்மால் என்ன செய்ய முடியும்?

 துன்பத்திற்கான காரணம்

பௌத்த தத்துவப் பார்வையில், துன்பத்திற்கான காரணம் விழிப்புணர்வின்மை. குறிப்பாக இரண்டு விஷயங்களில் நமக்கு விழிப்புணர்வு இல்லை அல்லது குழப்பத்தில் இருக்கிறோம்.

முதல் அம்சம் காரணம் மற்றும் விளைவு பற்றிய விழிப்பு இல்லை, குறிப்பாக நம்முடைய நடத்தையில். சிக்கல் தரும் உணர்வுகளான கோபம், பேராசை, இணைப்பு, பொறாமை உள்ளிட்டவற்றால் நாம் அழிவுகரமாக செயல்படுகிறோம். கோபத்தில் எல்லோரிடத்திலும் சண்டையிடுகிறோம், பொறாமை காரணமாக மற்றவர்களை கஷ்டப்படுத்துகிறோம், மற்றவர்களுடன் சேர்ந்திருந்தால் அவர்களுடனேயே ஒட்டிக்கொள்கிறோம் – இவை அனைத்துமே பிரச்னைகளுக்கு காரணம். ஏனெனில் இந்த உணர்வுகள் அழிவுகரமாக செயல்பட வைக்கின்றன அல்லது சுய-அழிவிற்கு காரணமாகின்றன, இதன் பலன் துன்பத்தில் முடிகிறது.

சிக்கல் தரும் உணர்வுகள் என்ற வார்த்தைக்கான விளக்கத்தைப் பார்த்தால் உதவிகரமாக இருக்கும். அது ஒரு மனநிலை அது எங்கே, எப்போது தோன்றுகிறதோ அப்போது நம்முடைய மன அமைதியையும் சுய-கட்டுப்பாட்டையும் இழக்கக் காரணமாகிறது. கோபத்தில் மற்றவர்களிடம் சத்தமிடுகிறோம், அறிந்தோ அறியாமலோ அவை அவர்களுக்கு வருத்தைத் தருகிறது. ஒன்று நாம் சொல்வதையோ அவர்கள் காது கொடுத்து கேட்டிருக்கமாட்டார்கள், அல்லது நாம் முட்டாள் என நினைத்து நகைப்பார்கள். ஆனால் நாம் மன அமைதியை இழந்து, உணர்வுப்பூர்வமாக வருத்தமடைந்தால், நாம் கூச்சலிட்டு முடித்த பிறகும் கூட அவை நம்முடனேயே இருக்கும். அது ஒரு மோசமான அனுபவம். ஏனெனில் நாம் சுய – கட்டுப்பாட்டை இழந்து, நாம் கூறியவற்றால் பின்னர் நாமே கூட வருத்தமடையலாம்.

நாம் இவ்வாறு செயல்படலாம் ஏனெனில்:

  • உண்மையில் காரணம் மற்றும் விளைவை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் இவ்வாறு சிக்கல் தரும் உணர்வுகளின் அடிப்படையில் செயல்பட்டால் அவை நமக்கு துன்பத்தையே தரும் என்பதை புரிந்து கொள்வதில்லை.
  • அல்லது காரணம் மற்றும் விளைவை நேர்எதிராக புரிந்து கொண்டு குழம்பிப் போகிறோம். நாம் எப்போதுமே நினைக்கிறோம், “நாம் ஒருவரிடம் சண்டையிட்டால் அது நமக்கு நன்றாக இருக்கும் என நினைக்கிறோம்,” ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை. அல்லது ஒருவருடன் நான் சேர்ந்திருக்கும் போது நாம் இவ்வாறு கூறி இருப்போம், “நீ ஏன் என்னை அடிக்கடி அழைக்கவில்லை அல்லது அடிக்கடி சந்திக்கவில்லை?” பெரும்பாலும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறோமா, அவ்வாறு இல்லை? நம்முடைய தேவையை நாம் நிறைவேற்றவில்லை ஏனெனில் காரணம் மற்றும் விளைவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதில் நாம் குழம்பி இருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் இரண்டாவது வகை விழிப்பின்மை யதார்த்தத்தைப் பொருத்தது. ஏனெனில் யதார்த்தம் பற்றி குழம்பி இருக்கிறோம், இதனால் சிக்கல் தரும் நடத்தையே கிடைக்கின்றன. இதற்கான உதாரணம் சுய- முன்நோக்கம், எப்போதுமே நான், என்னுடைய, எனக்கு என்ற சிந்தனை. இது ஒரு தீர்வாக இருக்கலாம், ஒரு குறைபாட்டில் சிக்கிக்கொண்டிருக்கும் போது அங்கு நாம் சரியானவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டாலும் கூட, சிறந்தவராக இருக்க முயற்சிக்கிறோம், அனைத்தையும் சரியான முறையில் பெறுகிறோம் – இது சற்றே வலுக்கட்டாயமானதாகிவிடுகிறது. நமக்கு சில தற்காலிக மகிழ்ச்சி இருந்தாலும், அவை சீக்கிரமே அதிருப்தியாக மாறிவிடும், ஏனெனில் “நான் சரியானவன் அல்ல” என்று நாம் இப்போதும் நினைக்கிறோம், நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள மேலும் மேலும் உந்தல் தருகிறோம்.   

உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம், ஒருவர் தூய்மை விரும்பியாக இருக்கிறார் – அவருடைய வீட்டை சுத்தம் செய்வதில் சிறந்தவர். அவர்களால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும், அனைத்தையே முறையே சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற ஒரு தவறான கருத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது முடியவே முடியாது! நீங்கள் அனைத்தையும் சுத்தம் செய்திருப்பீர்கள், அதனை சிறப்பாக செய்திருப்பதனால், நல்ல விதமாக உணர்வீர்கள், குழந்தைகள் வீடு திரும்பிய பிறகு அனைத்தும் அலங்கோலமாகி விடும்; இதனால் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும், அதனை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறையில் இது கட்டாயமாகிவிடுகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் துண்டு அளவிலான மகிழ்ச்சியையே உணர்வீர்கள், “ஆஹா, இப்போது எல்லாம் வரிசைப்படி” – இந்த உணர்வு வெகு விரைவிலேயே மறைந்துபோகும். எப்போதுமே நீங்கள் தவறவிட்ட ஒரு இடம் இருக்கும்.

மீண்டும் மீண்டும் பெறும் இதே மனநிலையால், இது ஒரு குழப்பமான உணர்ச்சியாக இருந்தாலும் அல்லது குழப்பமான அணுகுமுறையாக இருந்தாலும், இந்த வகை நிர்பந்தமான நடத்தையை மீண்டும் செய்வதன் மூலம், “எல்லாவற்றிலும் பரவலான துன்பம்” என்று சொல்வதே கிடைக்கும். இது பழக்கவழக்கங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றியது, இதனால் அவை உண்மையில் நம் பிரச்சினைகளை நிலைநிறுத்துகின்றன.

இது மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு நாம் எப்போதுமே கோபமாக இருந்தால், நாம் உயர் ரத்த அழுத்தத்தையும், வருத்தம் உள்ளிட்டவற்றின் விளைவால் அல்சரையும் பெறுகிறோம். அல்லது, நீங்கள் எப்போதுமே தூய்மை விரும்பி என்றால், ஓய்வெடுப்பது சற்றே கடினம். அனைத்துமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எப்போதுமே பதற்றத்துடன் இருப்பீர்கள், ஆனால் எதுவும் சிறப்பாக அமையாது. 

நம்முடைய பிரச்னைகளுக்கான காரணங்களை விலக்க மூன்று பயிற்சிகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன

நமக்கு தேவையான உண்மையான மூன்று பயிற்சிகள் என்ன?:

  • நம்முடைய குழப்பத்தில் இருந்து வெளிவர வேறுபடுத்திப்பார்க்கும் விழிப்புணர்வு தேவை. உதாரணத்திற்கு, தூய்மை விரும்பியாக இருக்க விரும்பினால், “அனைத்துமே சிறந்ததாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்” என்ற விருப்பம் உங்களுக்கு இருக்கிறது, “என்னுடைய வீடு அசுத்தமாகப்போகிறது அதனை யாராலும் தடுக்க முடியாது” என்ற நிதர்சன எண்ணமும் இருந்தால் நீங்கள் மேலும் மனநிம்மதியாக உணர்வீர்கள், வீட்டை தூய்மைபடுத்திக்கொண்டே இருந்தாலும், ஆவேசம் உங்களை ஆட்கொள்ளாமல் நிம்மதியாக இருக்க முடியும். ஒரு பழமொழியை உதாரணத்திற்கு சொல்வார்கள் மரத்தை கூரிய கோடரியால் கொண்டு வெட்டுவது போன்றது.
  • கோடரியால் மரத்தை வெட்டும்போது, நாம் தொடர்ந்து அதே இடத்தில் வெட்ட வேண்டும், அது தான் கவனம். நம்முடைய மனம்அலைபாய்ந்து கொண்டே இருந்தால், விரிப்புணர்வின் வேறுபாட்டை நீங்கள் இழந்து விடுவீர்கள். எனவே கவனம் தேவை, அப்போது தான் நாம் எப்போதுமே ஒரே இடத்தில் கோடரியை செலுத்த முடியும்.
  • இந்தக் கோடரியைப் பயன்படுத்த உறுதி தேவை. உறுதி இல்லாவிட்டால், உங்களால் கோடரியை தூக்க கூட முடியாது, அந்த உறுதியானது நன்னெறி சுய – ஒழுக்கத்தில் இருந்து வருகிறது.

நம்முடைய பிரச்னைகளுக்கான மூலக்காரணத்தை வெல்வதற்கு இந்த மூன்று பயிற்சிகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் இவ்வாறு உணர்ந்து கொள்ளலாம். பௌத்தமதத்தின் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமலே மேலே கூறப்பட்டுள்ளவற்றை முயற்சிக்கலாம், ஆகவே அவை எல்லோருக்கும் ஏற்றதாகும். அடுத்து என்ன என்று செல்வதற்கு முன்னர், நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதை மீண்டும் அசைபோடலாம்:

  • கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை விழிப்புணர்வின் பாகுபாடுகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம், இதனால் நம்முடைய சொந்த நடத்தையிலேயே என்ன காரணம் மற்றும் விளைவு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காணலாம். நம்மால் விரிப்புணர்வை வேறுபடுத்த முடியாவிட்டால், நம்முடைய நடத்தை மற்றும் செயல்பாடுகள் துன்பத்தை ஏற்படுத்தும், அல்லது நமக்கு திருப்தியே தராத ஒரு வகை மகிழ்ச்சியாகவே இருக்கும்.
  • மேலே கூறப்பட்டுள்ளவற்றை சரியாக புரிந்து கொள்ள, நமக்கு நல்ல கவனம் தேவை, இதனால் நாம் எப்போதும் கவனம் சிதறாமல் இருப்போம்.
  • கவனத்தை மேம்படுத்த, ஒழுக்கம் தேவை, இதனால் நம்முடைய மனம் அலைபாய்ந்தாலும், நம்மால் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
  • நம்முடைய பிரச்னைகளைக் கையாள உதவவும், நம்முடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் இந்த மூன்று பயிற்சிகளையும் நாம் செயல்படுத்தலாம்.

இவை எல்லாவற்றிலும் இருந்து விடுபட முக்கியமான திறவுகோள் என்னவென்றால் வாழ்வில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் அதிருப்தி அனைத்தும் நம்முடைய சொந்த குழப்பத்தில் இருந்து வருகிறது. நம்முடைய பிரச்னைகளுக்கு மற்றவர்களையோ, அல்லது சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டுவதற்கு பதிலாக, ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்.  சூழ்நிலைகளை நம்முடைய மனம் எந்த வகையில் கையாள்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நாம் பலவிதமான கடினமான சூழ்நிலைகளை சந்திக்கிறோம், ஆனால் இங்கு நமது பொதுவான மகிழ்ச்சியின்மை உணர்வை பற்றியும், நொடிப்பொழுதே இருக்கும் மகிழ்ச்சியின் வகை பற்றியுமே பேசுகிறோம். நாம் இதை விட சற்று அதிகமானவற்றை பற்றி சிந்திக்க வேண்டும், மன அமைதி மூலம் வருகிற மகிழ்ச்சி நீடித்திருப்பதோடு நிலைத்தும் இருக்கும்.  

நாம் கஷ்டத்தை பார்க்கிற போது, மனஅழுத்தத்திற்கு ஆளாகி மிகவும் துயரப்படுகிறோம். அல்லது அவற்றை மிகுந்த மனஅமைதியோடு எதிர்கொள்கிறோம், ஏனெனில் நாம் அந்தச்சூழலை தெளிவாகக் பார்க்கிறோம், அதில் தொடர்புடையது என்ன என்பதை பார்த்தால் நமக்கு நாமே துக்கப்பட்டுக்கொள்வதைவிட அவற்றை கையாள்வதற்கான வழிகள் கிடைக்கும்.

உங்களுடைய பிள்ளை இரவு நேரத்தில் வெளியே செல்கிறார் என்று வைத்து கொள்வோம், “அவர்கள் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்று அவரை நினைத்து நீங்கள் உண்மையில் மிகவும் வருத்தப்படுகிறீர்கள், நம்முடைய பதற்றம் மற்றும் வருத்தத்தின் காரணமாக “எப்படியாவது நான் என்னுடைய பிள்ளையின் பாதுகாப்பிற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்”, ஆம், நிச்சயமாக இது ஒரு கற்பனை வடிவம். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பினால், நீங்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணர்கிறீர்கள், ஆனால் அடுத்த முறை அவர்கள் வெளியே செல்லும் போது மீண்டும் வருத்தப்படுகிறீர்கள். எனவே அந்த வகையான உணர்வு எளிதில் நீங்காது, இல்லையா? நாம் எப்போதும் கவலைப்படுகிறோம், எனவே அது நிலைத்திருக்கும் - எல்லாவற்றையும் பற்றி கவலைப்படுகிற ஒரு பழக்கமாக நாம் இதை உருவாக்கியுள்ளோம் - அது நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது மிகவும் விரும்பத்தகாத நிலை.

உண்மையான திறவுகோள் என்பது இவை எல்லாவற்றிகும்  நம்முடைய சொந்த குழப்பம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளல். சில வகையில் செயல்படுவது மகிழ்ச்சியைத் தரும் என்று நினைக்கிறோம், அல்லது அந்த செயல்பாடு எல்லாவற்றையும் சரியாகச் செய்ய கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறோம், ஆனால் அப்படியில்லை. நாம் இந்த சிந்தனையை வெட்டியெறிய வேண்டும் – “இது பொருத்தமில்லாதது!” – இதில் கவனமாக இருங்கள்.

சுருக்கம்

வாழ்வை இந்த நான்கு உண்மைகள் அடிப்படையில் பிரதிபலித்தால், நம்முடைய பிரச்னைகளும் எதிர்மறை உணர்வுகளும் நிலையானதல்ல மேம்படக்கூடியவை என்பதை பார்க்கும் ஊக்கமளிப்பவராக மாறி, இவையாவும் முற்றிலும் அகற்றக்கூடியவை என்ற உணர்வு பெறுவோம். ஒரு முறை துன்பத்திற்கான காரணத்தை கையாண்டால், துன்பம் இருக்காது, ஆனால் இந்தக் காரணங்கள் தானாக மறைந்துவிடாது.

நன்னெறிகள், கவனம் மற்றும் பிரித்தறிதல் ஆகிய மூன்று பயிற்சிகளின் பின்னணியில் நம் வாழ்க்கையை வாழ நம்பமுடியாத வழி உள்ளது. நாம் எப்போதும் தேடும் மகிழ்ச்சி என்ற அந்த விஷயத்தை நாம் நெருங்க அவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து செயல்படுகிறார்கள்.

Top