புனிதர் தலாய் லாமாவின் செய்தி

21ம் நூற்றாண்டில், சர்வதேச அளவில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இணையதளம் பரந்து விரிந்த முக்கியமான ஊடகமாக அதிக அளவில் பயன்படுகிறது. அது உண்மை தான், பௌத்த போதனைகள், அதன் வரலாறு மற்றும் திபெத்திய கலாச்சாரத்தோடு தொடர்புடைய பல்வேவறு இதர தலைப்புககள் பற்றிய தகவல்களை பரப்பவும் தேவைப்படுகிறது. குறிப்பாக அது பற்றிய புத்தகங்களோ, தரமான போதனையாளர்களோ கிடைப்பது அரிதாக இருக்கும் இடங்களில், இணையதளம் கணக்கில் அடங்கா மக்களுக்கான முக்கிய மூலாதாரமாக இருக்கிறது. 

உலகில் தவறாக புரிந்து கொள்தல் மற்றும் குறுங்குழுவாதம் இருப்பது இயல்பே, முரண்பாடுகளுக்கு ஊற்றப்படும் எண்ணெயை அகற்றி புறக்கணிக்கும் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி. எனவே நான் முனைவர் அலெக்சாண்டர் பெர்சினின் பன்மொழி இணையதளத்தை வரவேற்கிறேன், berzinarchives.com, ஒரு விலைமதிப்பிற்குரிய கல்வி ஆயுதம். பௌத்தத்தின் பன்முகங்கள் மற்றும் திபெத்திய கலாச்சாரத்தை பல்வேறு பள்ளிகளில் இருந்து திரட்டிய தகவல்கைளைக் கொண்டு பரந்து பட்ட கட்டுரைகளாக உலகிற்கு இணையம் மூலம் வழங்குகிறது.  

ஜனவரி 26, 2007
புனிதர் தலாய் லாமா

Top