மரணம் மற்றும் இறப்பது பற்றிய பௌத்தத்தின் அறிவுரை

05:54
நாம் அனைவருமே மரணத்தை சந்திக்கப் போகிறோம், அதனால் நாம் அதனை தவிர்க்க முடியாது. நம்முடைய மரணம் பற்றி யதார்த்தமாக இருப்பது முழுமையான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ நம்மை செயல்படுத்துகிறது. பயத்துடன் இறப்பதைவிட, நாம் மகிழ்ச்சியோடு இறக்கலாம் ஏனெனில் நாம் நம்முடைய வாழ்க்கையை மிக நன்றாக வாழ்ந்திருக்கிறோம்.

அர்த்தமுள்ள வாழ்க்கையை முன்னெடுத்தல் 

இத்தனை ஆண்டுகளில், நம்முடைய உடல்கள் மாற்றம் கண்டிருக்கின்றன. பொதுவாகச் சொன்னால், ஆன்மிகம் அல்லது தியானத்தால் கூட நடப்பவற்றை தடுத்து நிறுத்திவிட முடியாது. நாம் நிலையில்லாதவர்கள், நொடிக்கு நொடி எப்போதும் மாற்றம் கொள்பவர்கள்; இயற்கையின் பகுதியும் அதுவே. நேரம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறது; எந்த சக்தியாலும் அதை நிறுத்த முடியாது. எனவே உண்மையான கேள்வி என்னவென்றால் நாம் அந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோமோ இல்லையா? நம்முடைய நேரத்தை மற்றவர்களுக்கு அதிக பிரச்னைகளை உருவாக்குவதற்காக பயன்படுத்துகிறோமா? இதுவும் கூட கடைசியில் நமக்கே உள்ளுக்குள் ஆழ்ந்த மகிழ்ச்சியின்மை உணர்வை உருவாக்குகிறது. இது நாம் நேரத்தை பயன்படுத்தும் விதம் தவறானது என்று நான் நினைக்கிறேன்.

சரியான உந்துதலுடன் தினசரி நம்முடைய மனதிற்கு வடிவம் கொடுக்க முயற்சிப்பது ஒரு சிறந்த வழி, பின்னர் எஞ்சிய தினத்தை அந்த வகையான உந்துதலுடனே கொண்டு செல்லலாம். மேலும் இதன் அர்த்தம் என்னவென்றால், சாத்தியமிருந்தால், பிறருக்கு சேவையாற்றுங்கள்; அப்படி முடியவில்லையெனில், குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள்.  அந்த வகையில் வெவ்வேறு விதமான தொழில்களில் எந்த வித்தியாசமும் இல்லை. உங்களுடைய தொழில் எதுவாக இருந்தாலும், நீங்கள் நேர்மறை உந்துதலைக் கொண்டிருக்க முடியும். நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் – தசாப்தங்கள், நம்முடைய நேரமானது இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல – பின்னர் நம்முடைய வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகும். மிக குறைந்தபட்சம், நாம் நமது சொந்த தனிப்பட்ட மகிழ்ச்சியான மன நிலைக்கு ஒருவித பங்களிப்பைச் செய்கிறோம். சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ நம்முடைய முடிவானது வரப்போகிறது, அன்றைய தினத்தில் நாம் வருத்தப்படக்கூடாது; நம்முடைய நேரத்தை நாம் ஆக்கப்பூர்வமாக செலவிட்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். 

மரணத்தைப் பற்றி யதார்த்தமான அணுகுமுறையை கொண்டிருத்தல்

நம்முடைய நிகழ் காலம், எப்படி இருப்பினும் அது நீடித்து இருக்காது. ஆனால் சிந்தியுங்கள்: “மரணம் ஒரு எதிரி,” என்பது முற்றிலும் தவறு. மரணம் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கம். நிச்சயமாக, பௌத்த மதப் பார்வையில் இருந்து பார்த்தால், இந்த உடலானது ஏதோ ஒரு வகையில் எதிரி. மோட்சம் அடைவதற்கான நேர்மையான ஆசையை மேம்படுத்த முறையே – விடுதலை – பின்னர் நமக்கு அந்த வகையிலான அணுகுமுறை தேவை: இந்த பிறப்பு, இந்த உடல், துன்பப்படுவது மிகவும் இயற்கை எனவே நாம் அதனை நிறுத்த வேண்டும். ஆனால் இந்த அணுகுமுறையானது பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகிறது. மரணம் ஒரு எதிரி என்று நீங்கள் கருதினால், பிறகு இந்த உடலும் கூட எதிரியே, மேலும் வாழ்க்கை முழுவதுமே கூட எதிரி தான். அது கொஞ்சம் கொஞ்சமாக தூரம் செல்கிறது. 

இந்த உடல், நீண்ட நாட்கள் இருக்கப்போவதில்லை என்பது மரணத்தின் நிச்சயமான அர்த்தம். இந்த வாழ்நாளில் நாம் சிலவற்றுடன் மேம்படுத்தி இருக்கும் நெருங்கியத் தொடர்பை அனைத்துப் பொருட்களில் இருந்து பிரிக்க வேண்டும். விலங்குகள் மரணத்தை விரும்புவதில்லை, எனவே இயற்கையாக மனிதனுக்கம் அதே விருப்பம் தான். ஆனால் நாம் இயற்கையின் ஒரு அங்கம், எனவே மரணம் நம்முடைய வாழ்வின் ஒரு பகுதி. தர்க்கரீதியில், வாழ்க்கை தொடக்கமும் முடிவும் கொண்டிருக்கிறது – ஜனனம் மற்றம் மரணம் இருக்கிறது.  எனவே இது சாதாரணமானதல்ல. ஆனால் மரணம் பற்றிய யதார்த்தம் இல்லாத அணுகுமுறை மற்றும் பார்வைகள் நமக்கு கூடுதல் வருத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். 

ஆதலால், பௌத்த பயிற்சியாளர்களாக, நமக்கு நாமே மரணம் மற்றும் நிலையாமை பற்றி தினசரி நினைவுபடுத்துவது மிகவும் பயனுள்ளதாகும். இரண்டு நிலைகளிலான நிலையாமை இருக்கின்றன: ஒரு மொத்த நிலை [உருவாக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் முடிவுக்கு வருகின்றன] மற்றொன்று நுட்பமான நிலை [காரணங்கள் மற்றும் நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் நொடிக்கு நொடி மாறக் கூடியவை]. உண்மையில், நிலையாமையின் நுட்பமான நிலையே புத்த மதத்தின் உண்மையான போதனை; ஆனால் பொதுவாக, நிலையாமையின் மொத்த நிலையும் கூட பயிற்சித்தலில் முக்கியமான பகுதி ஏனெனில் உணர்வுகளின் அடிப்படையிலான எப்போதும் இருக்கக் கூடிய சில அழிவுகரமான உணர்வுகளை இது மட்டுப்படுத்துகிறது. 

பெரிய மன்னர்கள் அல்லது ராஜாக்கள் – மேற்கிலும் கூட – அவர்களின் பெரிய அரண்மனைகள் மற்றும் கோட்டைகளுடன் பாருங்கள். இந்தப் பேரசர்கள் தங்களையே அழிவில்லாதவர்களாகக் கருதுகின்றனர். ஆனால் இப்போது நாம் அந்த கட்டமைப்புகளைப் பார்த்தால், அது வேடிக்கையாக இருக்கிறது. சீனப் பெருஞ்சுவறைப் பாருங்கள். இதனைக் கட்டுவதற்கு பணியாளர்களுக்கு மிகுந்த துன்பத்தை உருவாக்கி இருக்கும். ஆனால் இந்தப் பணிகள் யாவும் “என்னுடைய அதிகாரம் மற்றம் பேரரசு எப்போதும் நீடித்திருக்கும்” மற்றும் “என்னுடைய பேரரசர் எப்போதும் நிலைத்திருப்பார்” என்ற சிந்தனையுடன் கட்டப்பட்டவை. பெர்லின் சுவர் போல இது ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று கிழக்கு ஜெர்மன் கம்யூனிச தலைவர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இந்த உணர்வுகள் அனைத்தும் அவர்கள் தங்களையும் தங்கள் கட்சியையும் அல்லது நம்பிக்கையையும் புரிந்துகொள்வதிலிருந்தும், அவை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நினைப்பதிலிருந்தும் வருகின்றன. 

நம்முடைய உந்துதலின் ஒரு பகுதியாக இப்போது நமக்கு நேர்மறை ஆசை தேவை என்பது உண்மை தான் – ஆசையின்றி எந்தச் செயலும் இல்லை. ஆனால் அறியாமையுடன் கூடிய ஆசை ஆபத்தானது. எடுத்துக்கட்டாக, நிரந்தர உணர்வு இருப்பதனால் அது அடிக்கடி “நான் எப்போதும் நிலைத்திருக்கேன்” என்ற வகையிலான பார்வையை உருவாக்குகிறது. அது யதார்த்தமில்லாதது. அது அறியாமை. மேலும் அதனை நீங்கள் ஆசையுடன் சேர்த்தால் - இன்னும் ஏதாவது, இன்னும் ஏதாவது, இன்னும் ஏதாவது என விருப்பம் இருக்கும் – இது மேலும் தொல்லைகள் மற்றும் சிக்கல்களை உருவாக்கும். மாறாக ஞான ஒளியுடனான ஆசை மிக நேர்மறையானது ஆதலால் நமக்கு அது தேவை. 

தாந்திரிக பயிற்சியில், மண்டை ஓடுகள் மற்றும் இந்த வகையான விஷயங்களுடன், நிலையாமையின் நினைவூட்டல்களையும் நாம் காண்கிறோம், சில மண்டலங்களில் கல்லறைகள், இடிகாடுகளை நாம் காட்சிப்படுத்துகிறோம். இவை அனைத்துமே நிலையாமையை நமக்கு நினைவூட்டும் சின்னங்கள். ஒரு நாள் என்னுடைய கார் இடிகாடு வழியாக சென்று கொண்டிருந்தது, என்னுடைய மனதில் புதிதாகத் தோன்றியது, பின்னர் இதை நான் என்னுடைய பொதுமக்களுக்கான உரையிலும் குறிப்பிட்டிருந்தேன் “நான் கல்லறையை கடந்து கொண்டிருந்தேன். அதுவே நம்முடைய இறுதி இடம். நாம் அங்கே செல்ல வேண்டும்.” இறுதியில் மரணம் வரும் என்பதை உணர்த்தவே இயேசு கிறிஸ்து தன்னைப் பின்பற்றுபவர்களை நோக்கி சிலுவையை காண்பிக்கிறார். புத்தரும் அதையே தான் செய்திருக்கிறார். அல்லாவைப் பற்றி எனக்குத் தெரியாது – அல்லாவிற்கு உருவம் இல்லை – ஆனால் நிச்சயமாக முகமதும் இதனை விவரித்திருக்கிறார்.

எனவே, மரணம் விரைவிலோ அல்லது தாமதமாகவோ வரும் என்ற யதார்த்தத்துடன் நாம் இருக்க வேண்டும். மரணம் வரப்போகிறது என்ற ஒரு வகை அணுகுமுறையை சரியாக தொடக்கத்தில் இருந்தே வளர்த்துக்கொண்டால்; பிறகு உண்மையில் மரணம் வரும் போது, நீங்கள் மிகக் குறைவான பதற்றத்துடன் இருப்பீர்கள். எனவே, பௌத்த பயிற்சியாளருக்கு, தினசரி அடிப்படையில் இதனை தனக்குள்ளாக நினைவுபடுத்திப் பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.

மரணிக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்

நம்முடைய கடைசி நாள் வரும் போது, நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதனை ஏதோ விசித்திரமாக பார்க்கக் கூடாது. வேறு வழியும் அங்கே இல்லை. அந்த நேரத்தில், தத்துவர்த்த மதத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள், “கடவுள் கொடுத்தது இந்த பிறப்பு, எனவே முடிவும் கடவுளின் திட்டப்படி தான் இருக்கிறது. மரணத்தில் எனக்கு விருப்பம் இல்லாவிடினும், கடவுள் அதனை உருவாக்கி இருக்கிறார், ஆதலால் அதற்கு ஒரு அர்த்தம் அவசியம் இருக்கும்” என்று சிந்திப்பார்கள். படைக்கும் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை உடையவர்கள் அந்த வகையில் சிந்திக்க வேண்டும். 

இந்திய பாரம்பரியங்களை பின்பற்றுபவர்கள் மற்றும் மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர்கள் வருத்தம், வருத்தம், வருத்தம் மட்டுமே படுவதற்கு பதிலாக அவர்களின் எதிர்கால வாழ்க்கை பற்றி சிந்தித்து நல்ல எதிர்கால வாழ்க்கைக்கான சரியான காரணத்தை உருவாக்க சில முயற்சியை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் இறக்கும் நேரத்தில் உங்களுடைய அனைத்து நல்லொழுக்கங்களையும் அர்ப்பணித்தனால் உங்களுடைய அடுத்த ஜென்மம் நல்லதாக அமையும். அதன் பின்னர், நம்முடைய நம்பிக்கை என்ன என்பது பெரிதல்ல, இறக்கும் போது, மனநிலையானது அமைதியாக இருப்பது அவசியம். கோபம், அதீத பயம் –இவை நல்லதல்ல.

சாத்தியமிருந்தால், பௌத்த பயிற்சியாளர்கள் தங்களுடைய தற்போதைய காலத்தை எதிர்கால வாழ்க்கையை எதிர்நோக்குவதற்காக பயன்படுத்த வேண்டும். போதிசிட்டா பயிற்சிக்கிறது, மேலும் குறிப்பிட்ட தந்திரிக பயிற்சிகள் இவற்றிற்கு நல்லது. தந்திரிக போதனைகளைப் பொறுத்தவரையில், மரணிக்கும் நேரத்தில் எட்டு நிலையிலான உறுப்புகளின் கலைப்பு இருக்கிறது – உறுப்புகளின் மொத்த நிலைகளான உடல் கரைகிறது, அதன் பின்னர் அதிக நுணுக்கமான நிலைகளும் கூட கரைகிறது. தந்திரிக பயிற்சியாளர்கள் இதனை தங்களின் அன்றாட தியானத்திலும் சேர்க்க வேண்டும். தினந்தோறும், நான் மரணத்தின் மீது தியானம் செய்கிறேன் – வெவ்வேறு மண்டல பயிற்சிகளில் – குறைந்தபட்சம் ஐந்து முறைகள், ஆதலால் இப்போதும் நான் உயிருடன் இருக்கிறேன்! ஏற்கனவே இன்று காலையில் நான் மூன்று மரணங்களைக் கடந்திருக்கிறேன்.  

அடுத்த நல்ல ஜென்மத்தை பெறுவதற்கு இந்த வழிகள் உத்திரவாததை உருவாக்குவதைப் போன்றது. இதில் நம்பிக்கை இல்லாதவர்கள், நான் ஏற்கனவே சொன்னது போல, நிலையாமையின் உண்மை குறித்து யதார்த்தவாதியாக இருப்பது முக்கியமாகும். 

இறந்து கொண்டு இருப்பவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்

உண்மையில் இறந்து கொண்டு இருப்பவர்களுடன் இருக்கும் போது, சுற்றி இருப்பவர்களுக்கு சில அறிவு இருப்பது நல்லது [எப்படி உதவுவதென்று]. நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, இறப்பவர்களுடன் இருப்பவர்கள் படைக்கும் கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள், நீங்கள் கடவுளை நினைவுபடுத்தலாம். பௌத்த மத பார்வையில் இருந்தும் கூட , ஒரு புள்ளியில் கடவுள் மீது நம்பிக்கை இருப்பது குறைந்தபட்ச பலனைக் கொண்டுள்ளது. நம்பிக்கை இல்லாதவர்கள், மதம் சாராதவர்கள், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, யதார்த்தமாக இருந்து மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியமாகும். 

இறக்கும் மனிதனைச் சுற்றி உறவினர்கள் அழுது கொண்டிருந்தால் அவர்கள் மனதை அமைதியாக வைத்திருப்பதற்கு தீங்கு விளைவிக்கும் – அதீத இணைப்பு. அதே போல உறவினர்களை நோக்கி அதீத இணைப்புல், கோபம் மேம்படவும் சாத்தியம் இருக்கிறது, இதனால் மரணத்தை எதிரியைப் போல பார்ப்பார்கள். ஆதலால் அவர்களின் மன நிலையை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியமாகும். அது மிகவும் முக்கியம். 

பல நேரங்களில் பௌத்தர்களின் விருந்தோம்பலுக்குச் செல்ல எனக்கு அழைப்பு விடுப்பார்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு கன்னியாஸ்திரி மடத்தில், அங்கிருந்த கன்னியாஸ்திரிகள் இறப்பவர்கள் மற்றும் தீவிர உடல் நலமின்மையுடன் இருப்பவர்களை முழுவதுமாக பராமரிக்கும் அர்ப்பணிப்புப் பணியை செய்த வருகின்றனர். இரக்கத்திற்காக நாம் செய்யும் அன்றாட பயிற்சியை செயலில் செய்த பார்ப்பதற்கு இது மிகச் சிறந்த நல்ல வழியாகும். அது மிக முக்கியம்.  

சுருக்கம்

மரணம் ஏதோ விசித்திரமானதல்ல. இது ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நடக்கிறது. நிச்சயாக நாம் இறக்கப் போகிறோம் என்பதை புரிந்து கொண்டால் நாம் அர்த்தமுள்ள வாழ்வை வழிநடத்த அது ஊக்குவிக்கும். எந்த நேரத்திலும் மரணம் நிகழலாம் என்று பார்த்தால், சிறு சிறு விஷயங்களுக்காக அதிகம் சண்டை மற்றும் விவாதம் செய்யாமல் இருப்போம். மாறாக, முடிந்தவரை மற்றவர்களுக்கு பயனளிப்பதன் மூலம் வாழ்க்கையை அதிகம் பயன்படுத்த உந்துதல் பெறுகிறோம்.

Top