தொடக்க நிலை உந்துதல்

Initial level motivation

உண்மையான தர்மப் பொருளுக்கான மூன்று நிலைகளிலான உந்துதல்

லாம் – ரிம் வழங்கும் மூன்று நிலைகளிலான உந்துதல்:

  • தொடக்க நிலை – அடுத்த பிறவியில் மட்டுமல்ல, எதிர்வரும் அனைத்து பிறவிகளிலும் சிறப்பான மறுபிறப்பை நாம் கொள்ளப் போகிறோம் என்று நினைத்து நம்புவது.
  • இடைமட்ட நிலை – நாம் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம், நம்முடைய இலக்கானது கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறப்பில் இருந்து முழுவதுமாக விடுதலை பெறுதல்.
  • மேம்பட்ட நிலை – மற்றவர்களும் கட்டுபாடின்றி மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய மறுபிறப்பில் இருந்து விடுபடுவதற்கு உதவும் விதமாக, முழுமையாக ஞானமடைந்த புத்தரின் நிலையை அடைவதே நமது இலக்கு.

ஒவ்வொரு நிலைகளும் மறுபிறப்பின் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது மிகவும் வெளிப்படையானது. இருப்பினும், நாம் தொடக்கத்திலேயே கலந்தாலோசித்தது போலவே, இந்த மூன்று நிலைகளும் தர்மா-லைட் நிலைக்கும் கூட பொருந்தும். இந்த உந்துதல்களை நாம் அற்பமானதாக கருதவேண்டியதில்லை, ஏனெனில் அவற்றை ஒரு நேர்மையான வழியில் வளர்க்க முடிந்தால் அவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.

விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை பாராட்டுவதன் மூலம் சுயமன்னிப்பு நிலையிலிருந்து வெளியேறலாம்

தொடக்க நிலை உந்துதலுடன், நாம் கொண்டிருக்கும் “விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கை” என்று நாம் சொல்வதை பாராட்டுவதே முதலில் நாம் உணர வேண்டிய விஷயம்.  தர்மா –லைட் நிலையிலும் கூட, “மோசமான நான்” என்னும் உணர்வுகள் மற்றும் அதில் இருந்து வரக்கூடிய மனஅழுத்த உணர்வுகளை வெல்வதற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். நாம் இருக்கக்கூடிய அனைத்து மோசமான சூழ்நிலைகளையும் நாம் பிரதிபலிக்கிறோம், நாம் அந்த சூழலில் இல்லை என்பது எவ்வளவு அற்புதமானது என்று பாராட்ட முயற்சிக்கிறோம். 

நிலையான காட்சிப்படுத்தலில் காணக்கூடிய மிக பயங்கரமான சூழல்கள் என்று ஒரு பட்டியலே இருக்கிறது, ஆனால் அதைக் கடந்து வர வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஏனெனில் பொதுவான விஷயங்களை நாம் சிந்திக்க முடியும். எடுத்துக்காட்டாக, நாம் போர் மண்டலத்தில் வாழவும் இல்லை, பஞ்சத்தின் நடுவே பசியால் இறக்கக் கூடிய நிலையிலோ நம்முடைய குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையிலோ இல்லாதது எவ்வளவு அதிர்ஷ்டமானது என்பது பற்றி நாம் சிந்திக்கலாம்.  ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சமூகத்தில் நாம் கடுமையான சர்வாதிகாரத்தின் கீழ் வாழாதது நல்ல அதிர்ஷ்டம் என்று நாம் நினைக்கிறோம். ரோமானியாவில் இருப்பதையும் இங்கே இருப்பதையும் ஒப்பிட்டு பார்ப்பது வயதானவர்களுக்கு எளிதானதாக இருக்கலாம். நாம் மனதளவிலோ, உடலளவிலோ அல்லது உணர்வு ரீதியாகவோ கடுமையான ஊனத்திற்கு ஆளாகவில்லை என்பது எவ்வளவு அதிர்ஷ்டமானது. வெளிப்படையாக, பௌத்த பார்வையில் இருந்து பார்த்தால், எல்லோரும் மிதித்துக் கொல்ல நினைக்கும் கரப்பான்பூச்சியாக நாம் இல்லாமல் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டமானது என்று நாம் கருத்தில் கொள்ளலாம். 

இவ்வகையான சிந்தனையில் பல்வேறு விரிவாக்கங்கள் இருக்கின்றன, மேலும் நம்மை நாமே புறநிலை ரீதியாகப் பார்த்தால், இவ்வகையான சுதந்திரங்களைக் கொண்டிருக்கும் நாம் உண்மையில் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலிகள். நாம் இது போன்ற பொருட்களில் இருந்து மட்டும் விடுதலை பெறவில்லை, இதனை நாம் எப்போது வேண்டுமானாலும் இழக்கக் கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், எடுத்துக்காட்டாக அல்சைமர் நோயுடன் இருப்பது போல. தற்போது, மிக பயங்கரமான பொருளாதார நெருக்கடி இருக்கிறது, விஷயங்கள் இப்போது இருப்பதை விட மேலும் மோசமாகப் போகிறது.  உண்மையில் நாம் இருக்கும் ஒரு நிலையை விவரிக்கும் வார்த்தை “ஓய்வு”, அதாவது மோசமான சூழ்நிலைகளில் இருந்து ஒரு இடைவேளை என்று அர்த்தம். இந்த ஓய்வானது எந்த நேரத்திலும் முடிந்து போகலாம்.  

இந்த சுதந்திரங்களைத் தவிர, நம்முடைய வாழ்வை வளமாக்கும் பல்வேறு காரணிகளை நாம் காண வேண்டும். எடுத்துக்காட்டாக, நம்மில் பெரும்பாலானவர்கள் ஒப்பீட்டு அளவில் ஆரோக்கியமானவர்கள். நிச்சயமாக, நாம் அனைவரும் நோய்வாய்ப்படுவோம், ஆனால் இந்த கணத்தில் நம்மால் செயல்பட முடியும். புத்தர் போதித்த அந்த போதனைகள் மறைந்து போனாலும் நமக்கு இன்னும் கிடைக்கிறது. நாம் கற்பதற்கு பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் புத்தகங்கள் இன்னும் இருக்கின்றன. தெளிவாக நமக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தச் சூழலில், நாம் கொண்டிருக்கும் சுதந்திரங்கள் மற்றும் செறிவூட்டல்களை அடையாளம் காண வேண்டும், உண்மையில் ஆழ்நிலையில் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று பாராட்ட வேண்டும்.  

நம்முடைய விலைமதிப்பில்லாத வாய்ப்புகளை வீணடிக்காமல் மரணம் மற்றும் நிலையாமை பற்றி சிந்தித்தல்

நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத வாழ்க்கை நீடித்து இருக்கப் போவதில்லை என்பதை நாம் உண்மையில் புரிந்து கொள்வதே தொடக்க நம்பிக்கையில் அடுத்த புள்ளி. நம்முடைய வாழ்நாளில் சூழ்நிலைகள் மாறக்கூடியது இது உண்மையான நிலைக்கு கட்டுப்படுத்தப்பட்டதல்ல, ஆனால் நாம் இறக்கப் போகிறோம் என்பதே நிதர்சனம். ஆகவே நாம் மரணம் குறித்த ஏராளமான தியானங்களைக் கண்டிருக்கிறோம். சமூகத்தில் பலரும் மரணத்தை தவிர்க்க முயற்சிக்கிறார்கள், இது பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட தலைப்பு. ஏதோ ஒரு புள்ளியில் நாம் மரணிக்கப் போகிறோம் என்ற யதார்த்தத்தை நாம் உண்மையில் ஏற்றுக் கொள்வதில்லை. இது நாம் நேசிப்பவர்கள், நாம் அறிந்த ஒவ்வொருவரும் மற்றும் நாம் என அனைவருக்கும் பொருந்தும். இதுவே யதார்த்தம்.   

நிச்சயமாக நாம் இறக்கப்போகிறோம் என்ற உண்மையை ஆதரிக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எந்த காலத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவருமே மரணிக்கிறார்கள், ஆகவே நாம் என்ன சிறப்பானவர்கள் அல்லது அவர்களிடம் இருந்து நாம் எந்த வகையில் மாறுபட்டிருக்கிறோம். நாம் கொண்டிருக்கும் பிறப்பின் இறுதியே இறப்பிற்கான காரணம், ஆகவே ஜெனனம் இருந்தால் மரணம் என்பதும் வரத்தான் போகிறது. வயது மூப்பின் போது நம்முடைய உடல் நலிவுற்று வீழத்தொடங்கும். அது எப்படி இருக்கும் என்று நினைக்கிறோம் பெரும்பாலும் அந்த மாதிரி உறுதியாக இருப்பதில்லை, ஆனால் மிக எளிதில் தீங்கு மற்றும் காயத்தை பெற முடியும்.  இதை நாம் தர்க்கரீதியாக நம்ப வைக்க வேண்டும், இதனால் அது மெதுவாக ஒரு உணர்ச்சி மட்டத்தில் மூழ்கும்.

இதனுடன் சேர்ந்து நாம் நிச்சயமாக இறக்கப்போகிறோம் என்பதே உண்மை, ஆனால் அது எப்போது என்று நம்மால் அறியவே முடியாது என்பது இரண்டாவது விஷயம். நாம் வயதாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டு இறக்கவோ விரும்பவில்லை; ஆரோக்கியமான இளம் வயதினர் பலர் வயது மூப்படைவதற்கு முன்னரோ நோய்வாய்ப்படாமலேயோ இறக்கிறார்கள். அண்மையில் ஒரு மிகப்பெரிய விமான விபத்து நிகழ்ந்தது, விமானத்தில் ஏறும் போது யாருமே விபத்திற்குள்ளாகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் நாம் பேருந்தால் மோதப்படலாம். என்னுடைய நெருங்கிய நண்பர் சிறந்த நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார், 54 வயதே ஆன அவர் திடீரென இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமடைந்தார். 

எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் வரக்கூடிய மரணத்தை ஆதரிக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய வேலையை முடிக்கும் வரையிலோ அல்லது நாம் சாப்பிட்டு முடிக்கும் வரையிலோ அல்லது நாம் என்ன செய்த கொண்டிருந்தாலும் அது முடியும் வரையிலோ கூட மரணம் காத்திருக்கப் போவதில்லை. மரணத்திடம் “இதை நான் முடிக்கும் வரை, காத்திரு” என்று சொல்ல முடியாது. மரணம் வந்தால், வந்தது தான் நம்முடைய வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்துவிடும். நம்முடைய காலம் முடிந்து போனால், அதனை விரிவாக்கம்செய்ய நம்மால் மேலும் எதையும் செய்ய முடியாது. நீங்கள் மரணத்திற்கு லஞ்சம் கொடுக்க முடியாது. நாம் நம்முடைய உடலை வாழ்க்கையை-ஆதரிக்கும் இயந்திரமாக வைத்திருக்கிறோம், ஆனால் காய்கறி போன்ற நிலையில் நிலைத்திருப்பதன் பொருள் என்னவென்றால், அதன் பின்னரும் நம்முடைய வாழ்க்கை ஏதோ ஒரு புள்ளியில் முடிவு காணப் போகிறது. 

மரணம் குறித்த மூன்றாவது புள்ளி என்னவென்றால் நாம் மரணப்புள்ளியில் இருக்கும் போது நமக்கு உதவக்கூடியது என்ன என்பதை ஆராய்தல். இறக்கும் போது நம்முடன் பணம், நண்பர்கள் அல்லது குடும்பம் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. நாம் ஒரு பிரமிடே கட்டினாலும், அதனுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் நாம் இறந்த பின்னர், அவை எதுவும் நம்முடன் வரப்போவதில்லை. பௌத்த பார்வையில் இருந்து பார்த்தால், நாம் இறக்கும் போது உண்மையில் நமக்கு உதவுவது என்னவென்றால், நம்முடைய மன தொடர்ச்சியில் நாம் கட்டியெழுப்பிய நேர்மறையான பழக்கங்களே.

நம்முடைய கோபம், சுயநலம் உள்ளிட்டவற்றை குறைப்பதற்காக ஆன்மிகப்பாதையில் மேம்படுவதற்கான பெரிய தீர்வை உருவாக்கி இருக்கலாம், அல்லது பிறருக்கு உதவி இருக்கலாம், ஒருவேளை பல்வேறு நேர்மறைச் செயல்களைச் செய்திருக்கலாம். இது நம்முடைய மனதின் தொடர்ச்சி நிலையில் ஆழ்ந்த எண்ணத்தை ஏற்படுத்தும். தர்மா-லைட் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், நாம் அதன் பின்னர் வருத்தங்களின்றி, மதிப்புமிக்க, நேர்மறையான வாழ்க்கையை வழிநடத்தி இருக்கிறோம் என்ற உணர்வுடன் இறப்போம், குறிப்பாக அன்பாக நாம் ஒருவரை பராமரித்திருந்தால், பெரிய அளவில் சமூகத்திற்கு சில பங்காற்றி இருக்கிறோம்.“ நான் நல்ல மதிப்பான வாழ்க்கையை வழிநடத்தி இருக்கிறேன்” என்ற உணர்வு மற்றும் சிந்தனையால், நாம் அமைதியான மனநிலையைக் கொண்டிருப்போம்.

உண்மையான தர்ம விஷயத்தைப் பொறுத்தவரையில், இந்த நேர்மறையான பழக்கவழக்கங்கள், போக்குகள் மற்றும் நம் மன தொடர்ச்சியின் உள்ளுணர்வு ஆகியவை எதிர்கால வாழ்க்கையில் தொடரும் என்ற நம்பிக்கையுடன் நாம் இறக்கலாம். எதிர்காலத்தில், நான் விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை தொடர்ச்சியாக எடுக்கப்போகிறேன். நேர்மறை உள்ளுணர்வுகளுடன் நான் குழந்தையாக பிறக்கப்போகிறேன்” என்ற உணர்வுடன் நாம் இறப்போம். நாமே குழந்தைகளிடம் இதனைப் பார்க்க முடியும். சில குழந்தைகள், மிக இளம் வயதில் எப்போதும் அழுது கொண்டும் கோபத்துடனும் இருக்கும், ஆனால் மற்றவையோ அமைதியாக அன்பாக பிறரிடத்தில் இருக்கும். நம்முடைய கடந்த ஜென்மத்தில் நாம் கட்டமைத்த நேர்மறை பழக்கங்களின் முடிவே இந்த ஜென்மத்தில் பிரதிபலிக்கிறது. இறக்கும் போது அமைதியான மனநிலை இருந்தால், அது மிகவும் உதவியாக இருக்கும். வங்கிக்கணக்கில் நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அது எந்த சவுகரியத்தையும் தரப்போவதில்லை, ஏனெனில் இறக்கும் போது அவை வெறுமனே கணினித் திறையில் இருக்கும் எண்களே. 

மரணம் பற்றிய தியானம்

மேலே சொன்னவற்றால் நாம் மரண தியானத்தைக் கொண்டிருக்கிறோம், அங்கு இன்றே நம்முடைய வாழ்நாளின் கடைசி நாள் என்று கற்பனை செய்ய முடியும். எந்த நேரத்திலும் நாம் இறக்கத் தயாராக இருக்கிறோமா? என்று நம்மை நாமே கேட்கலாம். நான் இன்றே இறந்தால் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன் என்பது பற்றிய வருத்தம் இருக்குமா? இங்கு முக்கியமான விஷயம் நிச்சயமாக அழுத்தத்தை பெறாமல், இந்த விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையையும் நாம் இப்போது கொண்டிருக்கும் அனைத்து வாய்ப்புகளின் நன்மையையும் எடுத்துக்கொண்டு நம்மை ஊக்கப்படுத்துதலாகும். இந்த தியானத்தின் மொத்த நோக்கமும் அதுவே. வெறுமனே ஒவ்வொரு நாளும் எனக்கு வயது முதிர்வு மட்டும் ஏற்படவில்லை, தொடர்ந்து மரணத்திற்கு மிக நெருக்கத்தில் சென்றுகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாள் முடிவிலும் நம்முடைய வாழ்நாளின் ஒரு நாள் குறைந்துபோகிறது. காலம் கடந்து கொண்டிருக்கிறது எவ்வளவு நேரம் மிச்சமிருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆகவே காலத்தை வீணடிக்காமல் உண்மையில் நம்முடைய வாழ்வை சிறந்த பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே நம் வாழ்க்கையை வீணடித்துவிட்டோம், இன்னும் பலவற்றைச் சாதித்திருக்க முடியும் என்ற மனநிலையை இறக்கும் தருவாயில் உணர்ந்தால், இறக்கும் போது அது முற்றிலும் பயங்கரமான மனநிலையாகும்.

"நான் எனது வாய்ப்புகளை வீணாக்கப் போவதில்லை" என்ற மனநிலையை சீரான முறையில் நிறுவ வேண்டும். வெறியர்களாக மாறுவதையும், பயந்த நிலையில் வாழ்வதையும், எப்போதுமே செயல்படுதல் அல்லது தியானித்தலை நிறுத்த பயப்படுதல் உள்ளிட்டவற்றை நாம் தவிர்க்க வேண்டும். உண்மையில் நமக்கு ஒன்று தேவையெனில் நாம் அமைதியாகவும் ஒரு இடைவேளையும் எடுக்க வேண்டும், அதனால் அதன் பின்னர் செயல்படுவதற்கான பலத்தைப் பெறலாம். எனக்கு பிடித்த ஜென் தத்துவமானது: “மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிம்மதியாக இரு.” நீங்கள் இதைப்பற்றி சிந்தித்தால், உண்மையில் இது பல்வேறு அர்த்தத்தைக் கொடுக்கும். ஆம், நாம் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம், ஆனால் அதற்காக இறுக்கமாகவும் வெறித்தனமாகவும் இருப்பது சுய-வீழ்த்தலாகும். 

நம்மிடம் உள்ள இந்த அதிசயமான விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே முக்கிய செய்தி, ஆனால் அதை ஒரு சீரான முறையில் செய்ய வேண்டும். நமக்குத் தேவைப்படும்போது நாம் ஓய்வெடுக்கலாம், நாம் சோர்வாக இல்லாதபோது நமக்கு நாமே நேர்மையாக இருக்க முடியும், நாம் சோம்பேறியாக இருக்கிறோம். நமது உந்துதலை மனதில் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வெளிப்படையாக, மரண விழிப்புணர்வு தியானத்தை தர்மா – லைட் மற்றும் உண்மையான தர்மப்பொருள் இரண்டிற்குமே செயல்படுத்த முடியும். உதாரணமாக, ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்று சொல்லாமல் விடுதல் மற்றும் அவர்கள் செய்ததற்காக பாராட்டுவது அல்லது மன்னித்தல் மற்றும் யாரோ ஒருவருடன் ஒற்றுமையாக இருப்பது போன்ற எந்த விஷயத்தையாவது நாம் செய்யாமல் விட்டுவிட்டால், காத்திருக்காதீர்கள். அந்த நபர் நாளை உங்களை சுற்றி இல்லாமல் இருக்கலாம் மேலும் நாம் அவர்களைச் சுற்றி நாளை இல்லாமல் இருக்கலாம். மரண விழிப்புணர்வில் இருந்து நாம் பெறக்கூடிய இதுவே தர்மா-லைட்டின் பாடம். இது மிகவும் பயனுள்ளது மற்றும் எந்த நிலையிலும் உதவிகரமானது; மரணத்தை மறுக்காமல், மாறாக அதற்குத் தயாராக இருங்கள். நம்முடைய சொந்த மரணம் மற்றும் இறுதிச்சடங்கைக் கூட நம்மால் காட்சிப்படுத்த முடியும், அது மேலும் சிறிதளவேனும் யதார்த்தத்தை உருவாக்குவதற்கு நமக்கு உதவக்கூடும். வெறுமனே அதனுடன் வாழ்தல் மற்றும் நோய்வாய்ப்படுதல் அல்லது அழுத்தத்திற்கு ஆளாகமல் இருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.  

நம்முடைய இறப்புகளைப் பின்பற்றக்கூடிய மோசமான மறுபிறப்பு நிலைகளை பரிசோதிப்பதில் அச்சத்தை வளர்த்தல்

இறப்பிற்குப் பின்னர் என்ன நடக்கும் என்ற பகுப்பாய்வுடன் நாம் பின்னர் கடக்கலாம். இங்கே மோசமான மறுபிறப்பு நிலைகளின் காட்சிப்படுத்தல் இருக்கிறது நாம் அதனை அனுபவிக்க சாத்தியப்படலாம் மேலும் இதனை எப்படி தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் இருக்கிறது. மறுபடியும் சொன்னால் அது அவ்வளவு எளிதானதல்ல, ஏனெனில் நாம் இப்போது உள்ளதை விட மோசமான விலங்குகளின் மறுபிறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல பௌத்தத்தின் காட்சிப்படுத்தல், மாறாக நாம் காண முடியாத அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதே.   

விலங்குகளின் மறுபிறப்பு பற்றி நாம் கருத்தில் கொண்டால், அனைத்து வகையான பூச்சிகள், மீன் மற்றும் ஒவ்வொரு தனி இனங்கள் மற்றும் கிடைக்கும் அனைத்து வகையான உயிரினங்களையும் சேர்ந்து நினைவில் கொள்வது அவசியம். எல்லா விதமான பயம் மற்றும் துன்பங்களைத் தாங்குகின்ற விலங்குகளின் தேசத்தில் மறுபிறவியில் பிறப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. விலங்குகளின் மறுபிறப்பு பற்றி சிந்திக்கும் போது, மாளிகையில் நகப்பூச்சு பூசிக்கொண்டு ஆடம்பரமாக வாழும் செல்ல நாயான பூடுலின் வாழ்க்கையை நாம் கற்பனை செய்யக் கூடாது. மாறாக, பெரும்பாலான மக்கள் வெறுக்கும் கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகள் மற்றும் பெரிய விலங்குகளால் உயிருடன் உண்ணப்படும் சிறிய பூச்சிகள் மற்றும் மீன்கள், மேலும் நிச்சயமாக மனிதர்களால் தொழில்துறை ரீதியாக வளர்க்கப்பட்டு படுகொலை செய்யப்படும் விலங்குகள் பற்றி சிந்திக்கலாம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற வாய்ப்புகளைப் பற்றி இங்கு உருவாகும் உணர்ச்சி பெரும்பாலும் "பயம்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் இது சிறந்த வார்த்தையா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இது நம்பிக்கையற்ற தன்மையைக் குறிக்கிறது, அது பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும், அதனை தவிர்ப்பதற்கு நம்மால் முடிந்த ஏதேனும் செய்யலாம், ஆகவே நான் “அச்சம்”என்ற வார்த்தையை பரிந்துரைக்கிறேன், அதாவது அது நடக்கக் கூடாது என்று உண்மையில் நாம் மிக உறுதியாக விரும்புகிறோம் என்று பொருள்.

உதாரணமாக, ஒரு வேளை சலிப்பான தொழில்முறையான கூட்டத்தில் நாம் பங்காற்ற வேண்டி இருக்கலாம். நாம் அதற்கு செல்வதற்கு அச்சப்படலாம். அது மிகவும் சலிப்பாக மற்றும் பயங்கரமாக இருக்கப்போகிறது, ஆனாலும் நாம் செல்வதற்கு பயப்படவில்லை. இந்த உணர்நிலையைத் தான் நாம் உருவாக்க வேண்டும். நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத வாழ்க்கையை நாம் எந்த நிமிடத்திலும் இழக்கலாம், ஆகவே நாம் அதன் பயனை எடுத்துக்கொள்ள விரும்புகிறோம் இதனால் நமது அடுத்த ஜென்மத்தில் கரப்பான்பூச்சியாக பிறக்க விரும்பவில்லை என்பதை உறுதிபடுத்துகிறோம். ஒரு கரப்பான் பூச்சியாக இருப்பது மிகவும் மோசமாக இருக்கும், அது நடக்க வேண்டும் என்று உண்மையில் நாம் விரும்ப மாட்டோம், எனவே அதைத் தவிர்க்க நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

உண்மையான தர்மப் பொருளில், விலங்கு மற்றும் பூச்சியின் மறுபிறப்புகளைப் பற்றி மட்டுமல்ல, பேய் மற்றும் நரகசாம்ராஜ்யத்தின் மறுபிறப்பிகளைப் பற்றியும் பேசுகிறோம். இவற்றை சேர்ப்பதற்கு நாம் சங்கடப்படக்கூடாது; மறைக்கப்பட்டுள்ள இவற்றின் விளக்கங்களை மறைப்பது பௌத்தத்திற்கு நியாயமானதல்ல.  மாறாக நாம் திறந்த – மனதுடன், “உண்மையில் அது எனக்குப் புரியவில்லை” என்று கூறலாம். 

மனிதன் – அல்லாதவற்றின் மறுபிறப்பு நிலைகளை எவ்வாறு புரிந்து கொள்வது

மன செயல்பாடுகளின் அடிப்படையில் அல்லது வேறுவிதமாகக் கூறினால், எதையாவது அனுபவிக்கும் ஒவ்வொரு கணமும் நாம் இதை தொடர்புபடுத்த முடியும். ஒவ்வொரு கணமும், நாம் மனதின் முப்பரிமாணப்படிவம் எழுதலைக் கொண்டிருக்கிறோம், அதாவது எதையாவது பார்ப்பது, தெரிந்து கொள்வது அல்லது சிந்திப்பது என்று பொருள். அனுபவத்தின் ஒவ்வொரு கணத்தையும் சேர்ப்பதால், ஒருவித மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியற்ற உணர்வு இருக்கிறது. உண்மையில் இதுவே நம்மை கணினிகளிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. கணினிக்குள் தகவல்கள் இருக்கிறது, அது தனக்கு தெரிந்த உணர்தலைக் கொண்டு கையாள்கிறது. ஆனால் கணினிக்குள் இருக்கும் தகவல் துன்பமானதாக இருந்தாலும் கூட அதனால் அந்தத் தகவலை உணர முடியாது. நாம் கொண்டிருக்கும் மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியற்ற உணர்வுகளே அனுபவத்தை வரையறுக்கிறது, மேலும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையின் நிறமாலை மிகவும் விரிவானது. நாம் அனுபவிக்கக்கூடிய அளவிலான நிறமாலை என்பது நம்முடைய வன்பொருள் அடிப்படையிலானது, வேறு விதமாக சொல்வதானால், நாம் கொண்டிருக்கும் உடலின் வகையைப் போன்றது.

இதை மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மை மட்டுமல்ல, மாறாக நம்முடைய ஒவ்வொரு பல்வேறு புலன்களாலும் புரிந்து கொள்ள முடியும். சிலரால் மற்றவர்களைவிடவும் கூடுதலாக பார்க்க முடியும், சிலரால் மற்றவர்களை விட சிறப்பாக கேட்க முடியும், மேலும் சிலரால் மற்றவர்கள் குளிரைத் தாங்குவதைவிட அதிகமாக வெப்பத்தை சகித்துக்கொள்ள முடியும். விலங்குகளைப் பொறுத்தவரையில், மனிதனை விட அதிக அலைவரிசையில் நாயால் கேட்க முடியும் ஏனெனில் அது வேறு வகையான உடலைக் கொண்டிருக்கிறது, ஆகவே வேறுவிதமான வன்பொருள். மனிதனின் கண்ணால் பார்ப்பதை விட கூடுதலாக பருந்தால் அதன் கண்களுடன் பார்க்க முடியும். இது பல்வேறு புலன்களுடன் அவ்வாறு இருந்தால், மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் உணரும் நிறமாலையுடன் இது ஏன் உண்மையாக இருக்க முடியாது?

நாம் இந்த ஆலோசனையில் இன்பம் மற்றும் வலியையும் சேர்க்கலாம், இருப்பினும் அவை ஒரே மாதிரியாக இல்லை. மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை மனதளவில் அனுபவிக்கக்கூடியவை, ஆனால் இன்பமும் வலியும் பெரும்பாலும் உடல் ரீதியானவை குறைந்தபட்சம் வார்த்தைகளாகவாவது நாம் ஆங்கிலத்தில் கொண்டிருக்கிறோம். நம்முடைய மனித வன்பொருளைப் பொறுத்தவரையில், உடல் ரீதியிலான துன்பங்கள் மிகவும் உறுதியானால் நாம் சுயநினைவற்றவராக மாறுவோம். உணர்வின் வலியுடன், நாம் அதிர்ச்சியை உணர்வோம் மேலும் நம்முடைய உடலானது ஒடுங்கி விடும். 

மற்றொரு புறம் இன்பம் என்பது சுவாரஸ்யமானது. நீங்கள் ஒரு நமைச்சலை பற்றி ஆராய்ந்தால், உண்மையில் அது தீவிர இன்பம். அது எப்போதும் வலி நிறைந்ததாக இருக்காது, ஆனால் உண்மையில் மிகவும் இன்பமானது எனவே தான் நாம் சொறிந்தே அதனை உள்ளுணர்வால் அழிக்கிறோம். இது தீவிரமான நமைச்சலுடன் நாள்பட்ட தோல் கோளாறுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாகும், இது நமைச்சலை இன்பமாகக் கருதுகிறது. குறிப்பாக அரிப்பு சேதத்தை ஏற்படுத்தும் என்றால், முயற்சி செய்வது, ஓய்வெடுப்பது மற்றும் அதனை அனுபவிப்பது மிகவும் மேம்படுத்தப்பட்டது மற்றும் மிகவும் கடினமானது. இருப்பினும், இது சாத்தியம். எப்படியிருந்தாலும், பாலியல் இன்பத்தைப் பொறுத்தவரை நாம் நினைத்தால், அது எவ்வளவு தீவிரமாகிறது, விரைவாக புணர்ச்சியையும் உச்சக்கட்டத்தையும் அடைய விரும்புகிறோம், அதை அழிக்க வேண்டும். 

ஆகவே, நாம் கொண்டிருக்கும் இந்த மனித வன்பொருளால் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மகிழ்ச்சி, மகிழ்ச்சியற்ற தன்மை மற்றும் இன்பம் மற்றும் வலியின் நிறமாலையைமே நாம் அனுபவிக்க முடிந்தது என்பதைக் காணலாம். வெவ்வேறு உணர் நிறமாலைகளான காண்தல் மற்றும் கேட்டலை விலங்குகளால் அதிகம் அனுபவிக்க முடியும் என்பதைக் கூட நாம் நிறுவியுள்ளோம். ஆகவே தர்க்கரீதியில் வேறு வகைகளான வன்பொருள்கள் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது அவற்றால் நிறமாலைகளின் வலி, இன்பம், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையை அதிகம் உணரும் திறன் இருக்கிறது. ஏன் முடியாது?

இந்த மன செயல்பாடுதான் வாழ்க்கையிலிருந்து வாழ்க்கைக்கு தொடர்ச்சியாவதைப் பற்றி நாம் பேசுகிறோம். கடுமையான துன்பம் மற்றும் வேதனையிலிருந்து சிறந்த உள்ளார்ந்த இன்பம் மற்றும் மகிழ்ச்சி வரை முழு நிறமாலையையும் அனுபவிக்க முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நாம் ஒவ்வொரு ஜென்மத்திலும் எந்த விதமான வன்பொருளைக் கொண்டிருக்கிறோம் என்பதே பெரியது. பௌத்தத்தில் விவரிக்கப்பட்டுள்ள நாம் காண இயலாத இதர உயிரினங்களின் வடிவங்களை குறைந்தபட்சம் திறந்த – மனதுடன் கருத்தில் கொள்வதற்கு இதுவே போதுமானது மேலும் தர்க்க ரீதியில் முயற்சிப்பதற்கான வழியும் இதுவே.நம்மால் அமீபாக்களைப் பார்க்க முடியாது, ஆனால் விஞ்ஞான வளர்ச்சியான மைக்ரோஸ்கோப்கள் மூலம் நாம் அதனைக் கண்டு அதனை ஒரு உயிர் வடிவமாக ஏற்றுக்கொள்ளலாம். அதே போலத் தான் நம்மால் பேய்களைப் பார்க்க முடியாது, ஆனால் மனதை மேம்படுவதன் மூலம் நாம் அதைக் காண்பதற்கான சாத்தியம் இருக்கலாம்.

தர்ம-லைட் பதிப்பு இதர அனைத்து பகுதிகளையும் மனித அனுபவங்களின் வகைகளாகக் குறைக்கிறது. உதாரணமாக, யாரேனும் மனரீதியில் மிகவும் உளைச்சலுக்கு ஆளாகலாம், அது கிட்டதட்ட அவர்கள் நரகத்தில் வாழ்வதைப் போன்றது. அவர்களுக்காக அனுதாபத்தை உருவாக்குவதற்கும், எதிர்காலத்தில் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருப்பதற்கும் நமக்கு இது உதவக்கூடும். தர்மா –லைட் நிலையில் இந்தச் செயல்பாடு நல்லது. இருப்பினும், உண்மையான தர்மப் பொருள் மனித அனுபவம் குறித்து பேசுவதில்லை, ஆனால் அதற்கு மாறாக நாமும் மற்ற ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் அனுபவத்தை அவர்களின் மனதின் தொடர்ச்சியின் அடிப்படையில் பேசுகிறது. இந்த மன செயல்பாடு எதனுடனாவது சேர்ந்து நிறமாலையில் மகிழ்ச்சி முதல் மகிழ்ச்சியற்றது, வலி முதல் இன்பம் தருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் பயங்கரமான வலி அனுபவங்களை மட்டுமே ஆதரிக்கக்கூடிய சில அடிப்படைகளை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இது தெளிவாக உள்ளது.

இதனை தவிர்ப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? இது ஒரு முக்கியமான கேள்வி! முதலில் நாம் நம்முடைய வாழ்வில் குறிப்பிட்ட நேர்மறை திசையை செலுத்த வேண்டும், அவை இது போன்ற மோசமான மறுபிறப்புகளைத் தவிர்ப்பதை உறுதிசெய்கிறது. உண்மையில் இது அதனை மட்டும் செய்யவில்லை, ஆனால் நம்மை விடுதலை மற்றும் ஞானத்திற்கும் வழிநடத்துகிறது. 

வாழ்வில் பாதுகாப்பான திசையை செலுத்துதல்: சரணாகதி அடைதல்

“சரணாகதி” என்ற வார்த்தையில் எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை, இது மிகவும் செயலற்றதாக ஒலிப்பதனால் சிறிது தவறாக வழிநடத்தப்படுகிறது, இதனால் புத்தர் நம்மை காப்பவர் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் சென்று, “ஓ புத்தரே என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று சொல்கிறார்கள். அல்லது நாம் விலங்குகளைப் போல வனவிலங்கு சரணாலயத்திற்கு எடுத்துச்செல்வதா. செயலற்ற ஒன்றைப்பற்றியல்லாமல் நாம் மிகவும் செயல்பாடான ஒன்றைப் பற்றி பேசுகிறோம். நான் இதனை நம்முடைய வாழ்வில் “பாதுகாப்பான திசையை” செலுத்துதல் என்றே விவரிக்கிறேன்; நாம் இந்தத் திசையில் சென்றால், மோசமான மறுபிறப்புகளை அனுபவிப்பதில் இருந்தும், கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்புகள் உள்ளிட்ட இரண்டையும் சேர்த்து நம்மை நாமே காத்துக்கொள்ளலாம், அதே போன்று பிறருக்கு மேலும் திறம்பட உதவுவதற்கான சாத்தியமும் ஏற்படும். 

“தர்மம்” என்ற வார்த்தை பொதுவாக புத்தரின் போதனைகள் என்றே மொழிபெயர்க்கப்படுகிறது,  உண்மையில் அது தற்காப்பு நடவடிக்கையை குறிப்பிடுகிறது. எதிர்கால பிரச்சினைகள் மற்றும் துன்பங்களைத் தடுக்க அல்லது தவிர்க்க இது நமக்குள் நாம் இணைத்துக் கொள்ளும் ஒன்று. மோசமான மறுபிறப்புகளின் மூன்று பிரச்னைகள், ஒருசேர மறுபிறப்கைத் தவிர்ப்பதற்கு நாம் இந்த நடவடிக்கைகளை நம்முடைய வாழ்வில் செலுத்தலாம், மேலும் முழுத்திறனுடன் பிறருக்கு உதவலாம். 

புத்தரால் சுட்டிக்காட்டப்பட்ட திசை என்ன? உண்மையில் புத்தரே சாதித்த திசை என்னவென்றால், இது அனைத்து தடைகள், குறைபாடுகள், குழப்பங்கள் மற்றும் குழப்பமான உணர்ச்சிகளை முழுமையாக நிறுத்துவதாகும். அதே சமயம், புத்தர் மனம் கொண்டிருக்கும் அனைத்து நேர்மறைத் திறன்களையும் உணர்ந்தார். இந்த திசையைப் பற்றி தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். விலைமதிப்பற்ற மற்றும் புத்தரின் அறிய ஆபரணங்கள், தர்மம் மற்றும் சங்கத்தின் பாதுகாப்பான திசை பற்றி நாம் பேசினால் உண்மையில் நாம் இதை பொருள்படுத்துகிறோம். தர்மம் என்பது உண்மையில் புத்தரால் நிறைவேற்றப்பட்டது மேலும் நாம் அனைவரும் அதையே அடைவது எப்படி என்ற அவரது போதனைகள். யாரோ ஒருவர் அதனை முழுவதுமாக அடைந்திருந்தால் புத்தர் அதனை சுட்டிக்காட்டுகிறார். சங்கம் என்பது மடத்தில் இருப்பவர்களையோ அல்லது நம்முடைய பௌத்த மையத்தில் இருப்பவர்களையோ குறிப்பிடவில்லை மாறாக துறவு சமூகம் என்று குறிப்பிடப்படுகிறது. மூன்று ஆபரணங்களில் ஒரு பகுதியான சங்கம் மிக அதிகமான உணர்ந்தவர்களைக் குறிப்பிடுகிறது, புத்தர் முழுவதுமாக அடைந்ததில் பகுதியேனும் அடைந்தவர்கள் இவர்கள்.

அதன்படி, நாம் முதலில் செய்ய வேண்டியதும் இதுவே. நாம் நேர்மையாக நம்முடைய வாழ்வில் பாதுகாப்பான திசையை செலுத்த வேண்டும்; அதை நோக்கித் தான் நாம் செயலாற்றுகிறோம். புத்தர் என்ன அடைந்தாரோ அதனை அடைவதற்கு புத்தர் முழுமையாக செயலாற்றிய வழியில், சங்கம் பகுதியாக தன்னுடைய வழியில் செய்திருப்பதைப் போல நாம் செயலாற்ற வேண்டும். நம்முடைய வாழ்வில் இந்த திசையை செலுத்துவதன் மூலம் நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் ஒவ்வொரு நிலையிலும் உருவாகும், ஏனெனில் இப்போது நம்முடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தையும் திசையையும் கொண்டிருக்கிறது. நம்முடைய குறைபாடுகளை அகற்றவும், நமது திறன்களை உணரவும் நமக்கு நாமே செயலாற்றுவோம். நாம் அவ்வாறு செய்தால், பொதுவாக நாம் உணர்வு ரீதியாக மகிழ்ச்சியாக இருப்போம், ஏனெனில் “வாழ்க்கை எதைப்பற்றியது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இங்கே என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை; என்னுடைய வாழ்க்கை அர்த்தமில்லாதது” என்றெல்லாம் நாம் சிந்திக்க மாட்டோம். இது ஒரு பயங்கரமான மனநிலை, இப்படியான நிலையில் மக்கள் இருந்தால், பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை பணத்தை சுற்றி நகர்கிறது என்று பொருள். அது போலவே, உண்மை என்னவென்றால், "பணத்தால் நம்முடைய மகிழ்ச்சியை வாங்க முடியாது."

அழிவுகரமான நடத்தையை தவிர்த்தல்

இப்போது, நாம் நம்முடைய வாழ்வில் பாதுகாப்பான திசையை பெற்றிருக்கிறோம். இதன் அடிப்படையில், மோசமான மறுபிறப்புகளை தவிர்ப்பதற்கான வழி என்ன? அந்த முறையானது அழிவுகரமான வழியில் உடல்ரீதியாகவோ, வார்த்தை வழியாகவோ அல்லது மனரீதியாகவோ செயல்படுவதைத் தவிர்த்தல். கோபம், பேராசை, இணைப்பு, அப்பாவித்தனம், பொறாமை, ஆணவம் மற்றும் மற்றவர்களின் முழு நீண்ட பட்டியல் போன்ற சிக்கல் தரும் உணர்ச்சியின் கீழ் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தவிர்க்க முயற்சிக்கிறோம் என்பதே இதன் பொருள். விலைமதிப்பில்லாத இந்த மனித வாழ்க்கையின் பலனை தொடக்க நிலையில் இப்போது நாம் எடுத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, அழிவுகரமான விதத்தில் பேசுதல், செயல்படுதல் மற்றும் சிந்தித்தல் உள்ளிட்டவற்றை தவிர்த்தலாகும். 

இருப்பினும், நாம் ஒரு பௌத்த கட்டமைப்பிற்குள் இதனைச் செய்ய வேண்டும். பொதுவாக, அனைத்து மதங்களுமே கொல்லுதல் மற்றும் திருடுதல் போன்ற அழிவுகரமான விதத்தில் செயல்படுவதை போதிக்காது, ஆனால் தனித்துவமான பௌத்த அடிப்படை என்னவென்றால், அது சில சட்டம் அல்ல. சில ஆன்மிகவாதிகளால் உருவாக்கப்பட்ட சட்டமோ அல்லது சட்டப்பூர்வமாகவோ அல்லது அரசாங்கமோ இல்லை. பௌத்த நெறிமுறைகளானது சட்டத்திற்கு கீழ்படிவதை அடிப்படையாகக் கொண்டதல்ல, “சட்டத்தை மதி, இல்லாவிட்டால் நீ தண்டிக்கப்படுவாய்.” குற்றவியல் சட்டத்தை பொறுத்தவரையில், நாம் லஞ்சம் கொடுக்கலாம் அல்லது தண்டனையில் இருந்து தப்பிக்க நல்ல வழக்கறிஞரை அணுகலாம். அதே போன்று சட்டத்தை மதித்தால் நாம் நல்லவர்கள், அவ்வாறு நாம் மதிக்காவிட்டால் நாம் கெட்டவர்கள் அல்லது குற்றவாளி என்று அர்த்தமல்ல. கீழ்படிதல் என்பது பௌத்த நெறிமுறையின் அடிப்படையல்ல.

ஆக்கப்பூர்வமான நடத்தையில் ஈடுபடுதல்

பௌத்தத்தில் ஆக்கப்பூர்வமான நடத்தை என்றால் என்ன என்பதை அறிவது முக்கியமானது. அழிவுகரமான நடத்தைகளின் அடிப்படையில் இதைப் பார்த்து நாம் இதைச் செய்யலாம். உதாரணமாக, உயிரை உடுக்கவும் கொல்லவும் இருக்கும் ஒரு வழி வேட்டையாடுதல். ஆனால் நாம் எப்போதுமே வேட்டையாடவில்லை, வேட்டையாடுவதில் எப்போதுமே ஆர்வம் இல்லை என்றால், பின்னர் உண்மையில் நாம் வேட்டையாட மாட்டோம் என்பது நல்ல விஷயமாகவே இருந்தாலும் அது ஆக்கப்பூர்வமான நடத்தையின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.  ஆக்கப்பூர்வமான நடத்தை என்பது ஒரு கொசுவைக் கொல்ல விரட்டுவதைப் போன்ற உணர்வு, நாம் நம்முடைய உணர்வால் செயல்பட மாட்டோம். நாம் அவ்வாறு செயல்பட்டால், நாம் கோபத்தின் வெளிப்பாடாகச் செயல்படுகிறோம், நான் நான் நான் என்று மட்டுமே சிந்திக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதோடு, நாம் ஒரு கொசுவைக் கொன்றால், நமக்கு பிடிக்காத எதுவாக இருந்தாலும் அதனைக் கையாள்வதற்கு கொல்ல முயற்சிக்கும் உறுதியான பழக்கத்தை அது உருவாக்கும். ஆகவே கொசுவை விரட்டுவதை விட, ஒரு கோப்பையில் பிடித்து வெளியே சென்று விட்டுவிடுவதைப் போன்ற அதனைக் கையாள அமைதியான வழியைக் கண்டறியலாம். ஆக்கபூர்வமான நடவடிக்கை என்னவென்றால், நாம் உண்மையில் கொல்ல விரும்பும் போது இன்னொரு உயிரைக் கொல்வதைத் தவிர்ப்பதாகும். நாம் தவிர்க்கிறோம் ஏனெனில் அதற்கான காரணம் மற்றும் தாக்கத்தை நாம் புரிந்து கொள்கிறோம். இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கையானது பலமான நேர்மறைத் திறன்களை நம்முடைய மனதில் கட்டமைக்கிறது.

ஆக்கப்பூர்வமான செயலில் மேலும் பலம் வாய்ந்த நிலைகளும் கூட இருக்கின்றன, அதில் கொசுவைக் கொல்லாமல் இருப்பது மட்டுமல்ல, அதற்கு உணவளிப்பதும் அடங்கும். நம்முடைய ரத்தத்தில் சிறிதேனும் சுவைத்துக்கொள்ள அதனை அனுமதிப்பது. நம்மிடம் தான் ஏராளமாக இருக்கிறதே. இவ்வாறு செய்யும் சிலரை உண்மையில் நான் பார்த்திருக்கிறேன். வெறுமனே நாம் வேட்டையாட மாட்டோம் என்பது நாம் நினைக்கும் அளவுக்கு சாதகமான நடவடிக்கை அல்ல.

பௌத்த நெறிமுறைகளின் அடிப்படை நடத்தை காரணத்தையும் விளைவையும் புரிந்தலேயாகும்

பௌத்தத்தில், நெறிமுறைகளின் முழு அடிப்படையும் சில வழிகளில் செயல்படுவது சில வகையான முடிவுகளை உருவாக்கும் என்பதையும், தீங்கு விளைவிக்கும் மற்றும் எது உதவியாக இருக்கும் என்பதையும் பாகுபடுத்துவதாகும். உதாரணமாக நாம் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட்டால், அது மகிழ்சியின்மை அல்லது நமக்குள்ளாகவே உளைச்சலான மனநிலையை உருவாக்கும். நம்முடைய அடிப்படை குழப்பத்தின் காரணமாக நாம் இது போன்று செயல்படுகிறோம். போதைப்பொருள் அல்லது மதுவிற்கு அடிமையாவதைப் போல அழிவுகரமாக செயல்படுவது உண்மையில் சுய – அழிவு என்பதை நாம் முதலில் அறிவதில்லை. மேலும், நாம் தலைகீழாக இப்படி யோசிக்கிறோம் நாம் எப்போது உச்சநிலையில் அல்லது எந்நேரமும் குடி மயக்கத்தில் இருந்தால், நம்முடைய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்று நாம் நினைக்கலாம். 

ஆகவே, நன்னெறி நடத்தையின் அடிப்படைக்கான புரிதலுடன், நாம் அழிவுகரமாக செயல்பட்டால், அது நாம் மோசமானவர்கள் என்பதற்காக அல்ல, குழப்பத்தில் இருப்பதனால் நிகழ்ந்தது என்பதை உணர்வோம். மற்றவர்கள் அழிவுகரமாக செயல்பட்டால், அவர்கள் கெட்டவர்கள் அதனால் தண்டிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல, ஏனென்றால் அவர்கள் மிகவும் குழப்பமாகவும் உளைச்சலுடனும் இருக்கிறார்கள். 

ஆம், அவர்களை நாம் பூட்டி வைக்கலாம் ஏனெனில் அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது, ஆனால் அது வேறு மனநிலையுடன் செய்யப்பட்டிருக்கும். நாம் அவர்களைத் துன்பப்படுத்தவோ அல்லது தண்டிக்கவோ வேண்டாம், மாறாக அவர்களுக்கு உதவும் உணர்வுடன் முயற்சிக்கவும். அவர்கள் மனதின் தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள் அத எப்போதும் தொடரும் நாம் இப்போது அவர்களுக்கு மறுவாழ்வு தர முயற்சிக்காவிட்டால், எதிர்காலத்தில் அவர்கள் மிகவும் அழிவுகரமான வழியில் செயல்படுவதையே வழக்கப்படுத்துவார்கள். 

எப்படி இருப்பினும், இந்த தொடக்க நிலையில், முக்கியமாக நம்மீதே நாம் கவனம் செலுத்துவோம் மேலும் எதிர்காலத்தில் பயங்கரமான சூழல்களைத் தவிர்க்க விரும்புவோம், தர்ம-லைட் அணுகுமுறை போல அது இந்த ஜென்மத்திலோ, அல்லது உண்மையான தர்மப் பொருள் அணுகுமுறையால் எதிர்கால வாழ்க்கைக்காகவோ. இந்த நிலையில், நாம் விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையை பாதுகாப்பான திசையை கண்டுபிடிப்பதன் மூலம் இப்படித் தான் பயன்படுத்தப் போகிறோம். நாம்ம இந்த வாழ்க்கையை மதிப்பிட வந்திருக்கிறோம் ஏனெனில் நமக்குத் தெரியும் நாம் அதனை இழக்கப்போகிறோம் என்பது, மேலும் எதிர்காலத்திலும் நாம் விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையைக் கொண்டிருப்பதைத் தொடரப்போகிறோம் என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்.  நமக்கு இந்த மனித வாழ்க்கை தேவை ஏனெனில் நம்முடைய இலக்குகளான விடுதலை மற்றும் ஞானமடைதலை அடைய நீண்ட நேரம் எடுக்கப் போகிறது. தர்மா – லைட் என்பது வெறுமனே உண்மையான தர்மப்பொருளுக்கான அடிக்கல், தொடக்க நிலையில் இருந்து இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளுக்கு அது உயர்த்தும்.

சுருக்கம்

தொடக்க உந்துதல் என்பது நாம் கொண்டிருக்கும் நம்பமுடியாத விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையை பாராட்டுவதாகும். நாம் இந்த உடலைக் கொண்டிருக்கிறோம், நமக்கு வாய்ப்புகள் இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு மனித அறிவாற்றல் இருக்கிறது; நம் மனதை அதில் வைத்தால் நம்மால் எதையுமே சாதிக்க முடியாது.

நாம் இப்போது இருக்கும் அற்புதமான இந்தச் சூழலானது நீடித்திருக்காது, ஏனெனில் எதுவும் செய்ய முடியாது. நாம் எவ்வளவு பணக்காரர் அல்லது எவ்வளவு புகழ் மிக்கவர், அல்லது எத்தனை நண்பர்களைக் கொண்டிருக்கிறோம், அல்லது நம்முடைய உடல் எவ்வளவு உறுதியானது என்பதெல்லாம் பொருட்டல்ல, ஏனெனில் நாம் இறப்பது நிச்சயம். என்ன இருந்தாலும் எதுவும் மரணத்தை தடுக்கப்போவதில்லை, நம்முடைய காலம் எப்போது முடியும் என்பதை அறிந்து கொள்வதற்கும் கூட எந்த வழியும் இல்லை. ஏற்கனவே சொல்லி வைத்திருப்பதைப் போல சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும். மரணத்தை உணர்ந்தால் அன்றாட வாழ்வை வழிநடத்துவதற்கு சாத்தியம் இருக்காது.

இந்த வாழ்க்கை நிலையற்றது எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் முடிந்து போகலாம் என்பதை நாம் பார்த்தால், மரணத்திற்கு பின்னர் என்ன இருக்கும் என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோம். ஏனெனில் பல விதமான சாத்தியமான நிலைகள் இருக்கின்றன, அவற்றில் பல பயங்கரமானவை, அதில் நாம் மறுபிறப்பு எடுக்கக் கூடும், நம்முடைய வாழ்க்கைக்கு நாம் பாதுகாப்பான திசையை செலுத்த வேண்டும். 

இந்த பாதுகாப்பான திசை நம்மை எதிர்கால துன்பத்தை ஏற்படுத்தும், அழிவுகரமான செயல்களில் இருந்து விலகி, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு எதிர்காலத்தை மகிழ்ச்சியானதாக்கும். இந்த வழியில், நாம் நம்முடைய எதிர்கால மறுபிறப்புகளை சிறந்த நிலைகளில் உறுதிப்படுத்தலாம். 

Top