புத்தரின் உயர்வான பாதையை ஏன் & எப்படி பின்பற்றுவது?

லாம்-ரிம் என்றால் என்ன? மற்றும் அது புத்தரின் போதனைகளில் இருந்து எவ்வாறு வெளிப்பட்டது?

உயர்வான பாதையான, லாம் – ரிம் என்பது அடிப்படை பௌத்த போதனைகளை நம்முடைய வாழ்வில் அணுகவும் ஒருங்கிணைக்கவும் ஒரு வழி. புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் சமூகம் மற்றும் அதற்குப் பின்னர், கன்னியாஸ்திரிகள் சமூகத்தினருடன் வாழ்ந்தார். அவர் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே கற்பிக்காமல், மாறாக பலரின் வீடுகளுக்கும் அழைக்கப்பட்டார் அங்கு உணவு பரிமாறப்பட்ட பின்னர் அவர் சொற்பொழிவு ஆற்றுவார். 

“திறமையான வழிமுறைகள்” என்று நாம் சொல்வதையே புத்தர் எப்போதும் போதித்தார், இது மற்றவர்கள் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வழியில் கற்பிக்கும் முறையை குறிக்கிறது. இது அவசியமானது ஏனெனில், பல விதமான வேறுபட்ட நுண்ணறிவு அளவுகள் மற்றும் ஆன்மிக மேம்பாடு நிச்சயமாக இப்போதும் உள்ளன. மிக வேறுபட்ட மட்டங்களில் பரந்துபட்ட பலவகையான தலைப்புகளில் புத்தரின் போதனைக்கு இவை வழிவகுக்கின்றன.  

புத்தரை பின்பற்றும் பலருக்குத் தனித்துவமான நினைவுகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் எதுவும் எழுதப்படவில்லை போதனைகள் துறவிகளால் நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டு பின்வந்த தலைமுறையினருக்கு வாய்மொழியாக உரைக்கப்பட்டது. இறுதியில் போதனைகள் எழுதியும் வைக்கப்பட்டன, அவையே சூத்திரங்களாக அறியப்பட்டன. நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பல மிகப்பெரிய இந்திய குருக்கள் பொருட்களை ஒருங்கிணைக்கவும் அது குறித்த வர்ணனைகளை எழுதவும் முயற்சித்தனர். திபெத்திற்கு சென்ற இந்திய குருக்களில் ஒருவரான அதிஷா, 11ஆம் நூற்றாண்டில் இந்த முன்மாதிரிக்கான காட்சிப்படைப்பான லாம்-ரிம்மை உருவாக்கினார்.

அதிஷாவின் முன்மாதிரி என்பது ஒரு புத்தரின் நிலையை நோக்கி ஒவ்வொருவரும் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒரு முறையை மட்டுமே முன்வைத்தது. வெறுமனே சூத்திரங்களை மாறி மாறி படிப்பது மட்டுமே ஆன்மிகப் பாதையை எங்கிருந்து தொடங்குவது அல்லது ஞானத்தை எவ்வாறு அடைவது என்ற தெளிவை நமக்குத் தரப்போவதில்லை. அனைத்துப் பொருட்களுமே அங்கே இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தையும் ஒன்றுசேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. 

தரப்படுத்தப்பட்ட வரிசையில் பொருளை வழங்குவதன் மூலம் லாம்-ரிம் இதைத்தான் சரியாகச் செய்கிறது. அதிஷாவிற்குப் பின்னர், பல விதமான, அதிக விரிவான பதிப்புகள் திபெத்தியத்தில் எழுதப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் சோங்காபா எழுதிய பதிப்பைப் பார்ப்போம், இது பொருளின் மிகப்பெரிய விரிவாக்கமாக இருக்கலாம். சோங்காபாவின் படைப்பின் ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால், அதில் சூத்திரங்கள் மற்றும் இந்திய வர்ணனைகளின் மேற்கோள்கள் உள்ளன, எனவே அவர் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்று நாம் நம்பலாம்.

மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், சோங்காபா பல்வேறு விஷயங்களின் மிக விரிவான, தர்க்கரீதியான செயல்விளக்கங்களை வழங்குகிறது, இதனால் தர்க்கம் மற்றும் காரணத்தின் அடிப்படையில் போதனைகளின் செல்லுபடியாக்கலில் இன்னும் வலுவான நம்பிக்கையைப் பெறுகிறோம். சோங்காபாவின் சிறப்பியல்பு என்னவென்றால், முந்தைய எழுத்தாளர்கள் மிகவும் கடினமான விஷயங்களைத் தவிர்த்துவிடுவார்கள், ஆனால் இவர் அவற்றில் கவனம் செலுத்துவார்.

நான்கு திபெத்திய பௌத்த மரபுகளில், சோங்காபாவுடன் தோன்றியவை "கெலுக்பா" பாரம்பரியம் என்று அழைக்கப்படுகின்றன.

ஆன்மிகப் பாதை என்பதன் அர்த்தம் என்ன, அதை எவ்வாறு வடிவமைப்பது?

ஆன்மிகப் பாதையை எவ்வாறு வடிவமைப்பது? என்பதே நிஜமான கேள்வி, பொதுவாக இந்தியாவில் பல்வேறு விதமான வழிமுறைகள் போதிக்கப்பட்டன.  உதாரணமாக, புத்தரின் காலத்தில் மற்ற அனைத்து இந்திய மரபுகளிலும் ஒருநிலைப்படுத்துதலை வளர்ப்பதற்கான முறைகள் பொதுவானவை. இவை அவர் கண்டுபிடித்த அல்லது உருவாக்கிய ஒன்றோ அல்ல. ஒருமுகப்படுத்துதல் மற்றும் நம்முடைய ஆன்மிகப் பாதையில் பிற அனைத்து அம்சங்களையும் எவ்வாறு கொண்டு வர முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் ஒப்புகொண்டுள்ளனர். 

நம்மை நாமே எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்காக இயற்கையாகவே புத்தர் பலவிதமான விளக்கங்களை பல விஷயங்களை புரிந்து கொள்வதற்காகக் கொண்டிருந்தார், ஆனால் உண்மையில் குறிப்பிட்டது ஆன்மிக இலக்குகள் பற்றிய அவரது புரிதல். இது போன்ற ஆன்மிக இலக்குகளுக்கான முக்கிய கொள்கை மற்றும் வெவ்வேறு தரங்களை வைப்பது என்னவென்றால், அதுவே நம்முடைய உந்துதல்.

இந்த இலக்கியத்திற்கு கொடுக்கப்பட்ட காலமே லாம் – ரிம், “லாம்” என்றால் பாதை என்று மொழியாக்கப்படுகிறது, “ரிம்” என்பது உயர்வான பாதைகளின் நிலைகளைக் குறிப்பிடுகிறது. இந்தப் பாதையானது நம்முடைய இலக்கை தரப்படுத்தப்பட்ட வரிசையில் அடைய நாம் மேம்படுத்த விரும்பும் பலவிதமான மனநிலைகள். இது வெறுமனே நாம் பயணிப்பதைப் போன்றது; நாம் ரோமானியாவில் இருந்து இந்தியா செல்ல விரும்பினால், இந்தியா தான் நம்முடைய இறுதி இலக்கு. ஆனால் இந்தியாவை இறுதியாக அடைவதற்கு முன்னர் நாம் துருக்கி, ஈரான் வழியாக செல்ல வேண்டும்.

ஆன்மிக உந்துதல்: நம்முடைய வாழ்வில் அர்த்தத்தை புகுத்துதல்

லாம்-ரிம்மில் தரப்படுத்தப்பட்டது என்றால் பொதுவாக அது நம்முடைய உந்துதல், பௌத்த காட்சிப்படுத்தலைப் பொறுத்தவரையில் இது இரண்டு –பகுதி விஷயமாகும். உந்துதல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்குடன் அல்லது நாம் கொண்டிருக்கும் நோக்கத்துடன் தொடர்புடையது, கூடுதலாக இலக்கை அடைய நம்மை இயக்கும் ஒரு உணர்வாகும். இன்னும் கூடுதல் துல்லியமாக, நாம் ஏன் இலக்கை அடைய வேண்டும் என்பதற்கான காரணம் மற்றும் நம்மை அங்கு கொண்டு செல்வதற்காக இயக்கும் ஒரு உணர்வு. 

இது நம்முடைய அன்றாட வாழ்வில் ஒட்டு மொத்த அர்த்தத்தையும் உருவாக்குகிறது; நம்முடைய வாழ்வில் வெவ்வேறு நிலைகளில் பல விதமான இலக்குகளையும் நாம் கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, நாம் கல்வி பெற விரும்புகிறோம், அல்லது வாழ்க்கைத் துணையை சந்திக்கிறோம், அல்லது ஒரு நல்ல வேலையைத் தேடுகிறோம், உள்ளிட்டவை. இதில் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே கலந்திருக்கின்றன, அது ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும்.  எதுவாயினும், இந்த தரப்படுத்தப்பட்ட உந்துதல்களின் காட்சிப்படுத்தல் நம்முடைய அன்றாட வாழ்விற்கும் ஏதாவது ஒரு வகையில் பொருந்தும். 

நம்முடைய ஆன்மிக உந்துதல்களிலும் இதே விஷயம் சரியானது. நம்முடைய அன்றாட வாழ்விற்கு முற்றிலும் தொடர்புடைய இரண்டு மனநிலைகள் இவையே. நாம் நம்முடைய வாழ்வுடன் என்ன செய்கிறோம்? சரி “உலக மட்டத்தில்” பார்த்தால், நமக்கு குடும்பம், பணி உள்ளிட்டவை உள்ளன. ஆனால் ஆன்மிக மட்டத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதில் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தும். நம் வாழ்வின் இந்த இரண்டு அம்சங்களும் முரண்பாடானவை அல்லது பரஸ்பரம் இல்லை என்பது மிகவும் முக்கியம், மாறாக அவை எப்படியாவது இணக்கமாக கலக்கின்றன.

அவை இணக்கமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல மாறாக ஒவ்வொன்றும் மற்றொன்றை ஆதரிக்க வேண்டும். நம்முடைய ஆன்மிக வாழ்க்கையானது நம்முடைய அன்றாட உலக வாழ்க்கையை வழிநடத்துவதற்கான உறுதியை நமக்கு அளிக்க வேண்டும், அதே போன்று நம்முடைய உலக வாழ்க்கை நமது ஆன்மிக வாழ்க்கையை பயிற்சிப்பதற்கான வளங்களை நமக்குத் தரவேண்டும். லாம்-ரிம்மின் இந்த தரப்படுத்தப்பட்ட நிலைகள் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் அனைத்தும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒரு நல்ல மனிதராக மாறுதல்

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் புத்தரின் பயிற்சியுடன் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? புத்த பயிற்சியை பொதுவாக சில வார்த்தைகளுடன் தொகுக்க முடியும். எளிய மொழியில், சிறந்த மனிதர்களாக மாறுவதற்கு நமக்கு நாமே செயலாற்றுகிறோம். “சிறந்த மனிதர்” என்ற இந்த வார்த்தையானது தீர்மானமானதாக உச்சரிக்கப்படலாம், ஆனால் எந்த தீர்மானமும் இங்கே குறிப்பிடப்படவில்லை. அது விஷயமல்ல. நாம் நம்முடைய அழிவுகரமான நடத்தை, நாம் கொண்டிருக்கும் எதிர்மறை உணர்வுகளான கோபம், பேராசை, சுயநலம் உள்ளிட்டவற்றை வெல்வதற்கு முயற்சிக்கிறோம். 

இந்த வகை இலக்கை நோக்கமாகக் கொண்ட ஒரே மதம் அல்லது தத்துவம் அல்லது நடைமுறை எந்த வகையிலும் பௌத்தத்திற்கு மட்டுமே பிரத்தியேகமானது அல்ல. இதையே கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம், இந்துத்துவம் மற்றும் மனிதத்துவத்திலும் கூட நம்மால் காண முடியும். இது எங்கும் இருக்கிறது. மற்றவற்றில் நாம் காணும் இது போன்ற இதர விஷயங்களைப் போன்ற பௌத்த முறைகள் தரப்படுத்தப்பட்ட பாதையில் சிறந்த மனிதராக மாறுவதற்கான அணுகுமுறையை அளித்து இவ்வகை இலக்கை அடைவதற்கு நமக்கு உதவ முடியும். 

“சிறந்த மனிதராக” மாறுவதற்கு, முதலில் நாம் அழிவுகரமான வழியில் செயல்படுவதை நிறுத்த வேண்டும், ஏனெனில் அது பிறருக்கு தீங்கை ஏற்படுத்தும்.  இதனை செய்ய, சுய-கட்டுப்பாட்டிற்கான சில பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். ஆழ் மட்டத்தில், நம்மால் இதனைச் செய்ய முடியும் என்றால், பின்னர் நம்மால் உண்மையில் அழிவுகரமாக செயல்படுவதற்கு காரணமான: கோபம், பேராசை, இணைப்பு, பொறாமை, வெறுப்பு உள்ளிட்டவற்றை வென்று வருவதற்கு கவனம் செலுத்த முடியும். இதனைச் செய்வதற்கு, இது போன்ற எதிர்மறை உணர்வுகள் எவ்வாறு எழுகின்றன மற்றும் எவ்வாறு அவை செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்வது அவசியம். இந்த வழியில், குழப்பமான உணர்ச்சிகளைக் குறைக்க அல்லது அகற்ற உதவும் சில வகையான புரிதல்களை நாம் உருவாக்குகிறோம்.

பின்னர் மேலும் ஆழமாக சென்று இந்த அனைத்து சிக்கலான உணர்வுகளுக்கும் கீழே உண்மையில் என்ன இருக்கிறதோ அதன் மீது செயலாற்றி, நம்முடைய சுயநலம் மற்றும் நம்மை மட்டுமே பற்றிய சுய- மையப்படுத்திய வழியிலான சிந்தனையை அடையாளம் காணலாம். பொதுவாக நாம், “எனக்கென தனி வழியை நான் கொண்டிருக்க வேண்டும்” என்று நினைக்கிறோம். நம்முடைய பாதையை நாம் பெறவில்லை என்றால், நாம் அடிக்கடி கோபம் கொள்கிறோம். இருப்பினும் எப்போதுமே நாம் விரும்பும் விதத்திலேயே அனைத்தும் இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறோம், அது ஏன் அப்படியே இருக்க வேண்டும்? அப்படி இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவதைத் தவிர நிச்சயமாக எந்தக் காரணமும் இல்லை. அனைவருமே ஒரே மாதிரியாக சிந்திக்கின்றனர், நாம் அனைவருமே சரியாக இருக்க முடியாது.   

காலப்போக்கில், இந்த மிக அடிப்படையான பிரச்சனையாளரை சமாளிக்கும் அளவுக்கு நாம் செயலாற்றுவோம். நம்முடைய சுயநலம், அதை நாம் ஆராய்ந்தால், “நான்” மற்றும் என் “சுயம்” என்ற கருத்து அடிப்படையிலானது. மற்றொரு வகையில் சொல்வதானால், நாம் எவ்வாறு இருக்கிறோம் என்ற கருத்து “நான் ஏதோ ஒரு வகையில் சிறப்பானவன்” என்ற எண்ணத்தின் அடிப்படையிலானது, அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தின் மையமாக இருந்தால், அனைவரிடத்தில் இருந்தும் தனித்து இருப்பவரே மிக முக்கியமானவர்.  இந்த கோணத்தில் நாம் ஆராய வேண்டும் ஏனெனில் நிச்சயமாக ஏதோ ஒன்று மிகத் தவறாக மற்றும் அது குறித்து சிதைவாக இருக்கிறது. இதைத் தான் தரப்படுத்தப்பட்ட பாதையானது துல்லியமாக விளக்குகிறது.

உந்துதலின் முன்னேற்ற நிலைகள்: தர்மா-லைட்

புத்தர் போதித்த முறைகள் இந்த வகையான இலக்குகளுக்கு மிகவும் உதவிகரமானவை. அடிப்படையில், நாம் ஏன் அழிவுகரமான நடத்தை மற்றும் எதிர்மறை உணர்வுகளான கோபம், சுயநலம் உள்ளிட்டவற்றை தவிர்க்கிறோம் என்பதற்கு காரணம் இருக்கிறது. இந்தக் காரணங்கள் இருந்தாலும் நமக்குத் தெரியும் இவற்றின் தாக்கத்தின் கீழ் நாம் செயல்பட்டால் அது அமைதியாக இருக்காது என்பதோடு நமக்கும் பிறருக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்னைகளை நாம் விரும்பவில்லை. 

சிக்கல் – உருவாக்கலை நாம் தரப்படுத்தப்பட்ட வழியில் அணுக முடியும். அவ்வாறான குறிப்பிட்ட வழிகளில் நான் செயல்பட்டால், அது உடனடியாக சிக்கல்கள் மற்றும் கஷ்டங்களை உருவாக்கும். உதாரணமாக, நாம் யாருடனாவது மிகப்பெரிய சண்டையிட்டு அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தினால், நமக்கும் கூட காயம் ஏற்படும் அல்லது சிறையில் அடைக்கப்படுவோம். ஆழ்ந்த மட்டத்தில், நம்முடைய அழிவுகரமான நடத்தைக்கான நீண்ட – கால தாக்கங்களையும் நாம் பார்க்க வேண்டும், ஏனெனில் இப்போது மட்டுமல்ல நாம் எதிர்காலத்தில் வரக்கூடிய கஷ்டங்களையும் தவிர்க்க விரும்புகிறோம். இதனை மேலும் மேம்படுத்துவதனால், நம்முடைய குடும்பம், அன்பானவர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கும் சிக்கல் மற்றும் பிரச்னை உருவாக்குவதை தவிர்க்க விரும்புவோம். இவை அனைத்தும் வாழ்நாளின் எல்லைக்குள் அடக்கம். இதை மேலும் ஆழமாக சென்று பார்த்தால், மேலும் கூடுதலான அம்சங்களான புவி வெப்பமடைதல் போன்ற எதிர்கால சந்ததியினருக்கான கஷ்டங்களை ஏற்படுத்துவதை தவிர்க்க விரும்புவது குறித்தும் சிந்திப்போம்.

இந்த அனைத்து உந்துதல்களுடன், முற்காலத்தை மேம்படுத்துவதற்காக பிற்காலத்தை விட்டு விடுவது என்று பொருள் அல்ல. மாறாக அவை குவிந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கிறது. தரப்படுத்தப்பட்ட பாதைக்கான பொதுவான கொள்கை இதுவே. மேலே விவரிக்கப்பட்டுள்ள அனைத்தையும் நான் “தர்மா-லைட்” என்று அழைக்கிறேன். இது பௌத்த போதனைகளான “தர்மா” இந்த வாழ்க்கைக்கான அம்சங்களாக மட்டுமே மறுபிறப்புடன் குறிப்பிடாமல் வழங்குகிறது. “தர்மா-லைட்” மற்றும் “உண்மையான தர்ம விஷயம்” போன்ற வார்த்தைகளுக்கு இணையாக கோக-கோலா லைட் மற்றும், உண்மையான சர்க்கரை நிரப்பப்பட்ட கோக-கோலா என்று நான் உருவாக்கி இருக்கிறேன்.

இந்த வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே சிந்திக்கும்போது மறுபிறப்பை எடுப்பதில் சந்தேகம் எழுகிறது

“தர்மம்” என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கும் ஒரு சமஸ்கிருத வார்த்தை. “லைட்” என்பதற்கு அதனுடன் தவறாக ஏதோ இருக்கிறது என்று அர்த்தமல்ல, மாறாக அது வெறும் உறுதியான, உண்மையான பதிப்பல்ல. திபெத்திய பாரம்பரியங்களில் கண்டறியப்பட்ட லாம்-ரிம்மின் உண்மையான படைப்புகளே யதார்த்தமான விஷயம், ஆனால் தொடக்கத்தில் பலருக்கு இது மிகையானதாக இருக்கலாம். இதற்கு முக்கியமான காரணம் மறுபிறப்பை நாம் முழுமையாக நம்புகிறோம் என்று அது முற்றிலும் கருதுகிறது, மேலும் தொடக்கத்தில் அனைத்துத் தலைப்புகளுமே மறுபிறப்பு இருக்கிறது என்கிற விதத்தில் வழங்கப்படுகிறது. இந்தக் கோணத்தில் இருந்து நம்முடைய எதிர்கால வாழ்க்கையின் சிக்கல்களைத் தவிர்த்தல் மற்றும் அதனை மேம்படுத்துதல் என்று நாம் செயல்படத் தொடங்குகிறோம்.

எதிர்கால வாழ்க்கையின் மீது நமக்கு நம்பிக்கை இல்லையென்றால், பிறகு எப்படி நாம் நம்முடைய உந்துதலில் நேர்மையாக இருந்து அதனை மேம்படுத்த முடியும்? இது நிச்சயமாக சாத்தியமில்லை. நம்முடைய நிகழ்காலம் மற்றும் எதிர்கால எண்ணங்கள் குறித்து நாம் கேள்விகளைக் கொண்டிருந்தால், நாம் நம்பிக்கை இல்லாமலோ அல்லது அதனை புரிந்து கொள்ளாமலோ இருந்தால், நாம் தர்மா-லைட்டை தொடங்க வேண்டும். உண்மையில் நம்முடைய ஆன்மிகப் பயிற்சியின் நோக்கத்திற்காக என்னென்ன செய்கிறோம் என்று நமக்கு நாமே நேர்மையாக இருக்க வேண்டும்.  

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, இந்த வாழ்க்கையை மேலும் சிறிதளவேனும் சிறப்பானதாக்க வேண்டும் என்பதே நோக்கம். அது முற்றிலும் நியாயமான நோக்கம். இது தொடக்கமே மேலும் மிக அத்தியாவசியமான நிலை. நாம் இந்த தர்மா-லைட் நிலையில் இருந்தால், எவ்வாறாயினும், இது தர்மா-லைட் மட்டுமே உண்மையான விஷயமல்ல என்பதை அங்கீகரிக்க வேண்டியது முக்கியமாகும். இரண்டையும் குழப்பிக்கொள்வதனால், பௌத்தத்தை மற்றொரு சிகிச்சை முறையென்றோ அல்லது சுய-உதவி என்றோ குறைத்து மதிப்பிடுகிறோம். இவ்வாறாக அளவுபடுத்துவது பௌத்தத்திற்கு உகந்ததல்ல. 

உண்மையான தர்ம விஷயம் எதைப்பற்றியது என்று நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, அது உண்மை என்று மட்டுமே நம்பி நாம் அதனை அங்கீகரிக்க வேண்டும். நாம் திறந்த-மனதோடு சிந்தித்து, “எதிர்காலம் பற்றி அவை என்ன சொல்கின்றன மற்றும் விடுதலை சரி என்பதில் நான் உறுதியாக இல்லை, ஆனால் இப்போதைக்கு நான் தர்மா-லைட் மட்டத்தில் செயல்படப்போகிறேன். நான் மேலும் வளர்ச்சியடைந்தால், மேலும் படித்தால் தியானித்தால், ஒருவேளை உண்மையான தர்ம விஷயம் பற்றி கூடுதலாக புரிந்து கொள்ளக் கூடும்.” புத்தருக்கு மரியாதை மற்றும் அவர் அந்த விஷயங்களை கற்பிக்கும் போது முட்டாள்தனமாக பேசவில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது ஒரு சரியான செல்லுபடியாகும் சிறந்த அணுகுமுறையாகும்.

எதிர்கால வாழ்க்கை மற்றும் விடுதலையை வரையறுக்கும் விளக்கத்தை நமக்கு நாமே கொண்டிருக்கலாம் சில குறிப்பிட்ட எண்ணங்களை நாம் அங்கீகரிக்கவும் கூட முடியும், உதாரணத்திற்கு, முற்றிலும் தவறானதாக இருக்கலாம், பௌத்தம் அது போன்ற முன்கூட்டிய வரையறைகள் அல்லது விளக்கங்களை ஏற்காது. ஆகவே நாம் எதையாவது சிந்திக்கிறோம் என்றால், அல்லது அபத்தமானதாக அதனைக் கண்டறிந்தால், புத்தரும் அதை அபத்தமானதாகவே பார்த்திருப்பார் ஏனெனில் அது முற்றிலும் தவறான புரிதல். எடுத்துக்காட்டாக, நாம் ரெக்கைகள் கொண்ட ஒரு ஆன்மாவாக உடலை விட்டு பறந்து சென்று மற்றொன்றிற்குள் புகுந்து கொள்கிறோம் என்பது போன்றவற்றை புத்தர் ஏற்கவில்லை. நமக்கு நாமே சர்வ வல்லமை படைத்த கடவுளாக மாறலாம் என்பதையும் புத்தர் ஏற்கவில்லை.  

தொடக்கமற்ற மறுபிறப்பின் விதிகள் குறித்து சிந்திப்பதன் நன்மைகள்

தரப்படுத்தப்பட்ட இந்தப் பாதையில் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான முறைகளை நாம் தர்மா-லைட் அல்லது உண்மையான தர்ம விஷய வழியில் பொருத்த முடியும். எப்படி இருப்பினும், உண்மையில் எதிர்கால வாழ்க்கையை புரிந்து கொள்வதன் அடிப்படையில் சில முறைகள் இருக்கின்றன. உதாரணமாக எல்லோரிடத்திலும் சமமான அன்பை மேம்படுத்த முடியும், அதில் ஒரு வழி ஒவ்வொருவருக்கும் தொடக்கமில்லாத மறுபிறப்பு இருக்கிறது மேலும் வரையறைக்குட்பட்ட எண்ணிக்கையில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதை உணர்வதாகும். இந்தத் தொடக்கப் புள்ளியில் இருந்து, ஒரு கட்டத்தில் மற்ற ஒவ்வொரு தனி உயிரும் நம்முடைய தாய் மற்றும் மற்றவர்களின் தாய் என்று தர்க்க ரீதியில் அதை பின்பற்றுகிறது. தொடக்கமில்லை மாறாக எண்ணிக்கைக்கு உட்பட்ட உயிர்கள் இருப்பதாக யாரேனும் இந்த தர்க்கத்திற்கு கணிதவியல் ஆதாரத்தை தரக்கூடும். ஒரு வேளை எண்ணிக்கையில் அடங்காத காலம் மற்றும் உயிரினங்கள் இருந்தால், அவை இந்த வகையில் செயல்படும் என்று நம்மால் நிரூபிக்க முடியாது. 

குறிப்பாக எல்லைக்குட்படாத முந்தைய மறுபிறப்புகள் உள்ளிட்டவை குறித்து நாம் எப்போதும் சிந்தித்திருக்கவில்லை என்றால் நிச்சயமாக, தொடர்புபடுத்திப் பார்க்க இது மிகவும் கடினமான தலைப்பு. எல்லைக்குட்படாத மறுபிறப்பு அடிப்படையில், தாயின் அன்பை அனைத்து உயிர்களும் நம்மிடம் காட்டி இருக்கிறது என்கிற ரீதியில் நம்மால் சிந்திக்க முடியும், அதனை பாராட்டி, பாசமாக இருக்க விரும்பி அன்பை திருப்பி கொடுக்கலாம்.  அதன் அடிப்படையில் ஒரு முழு வளர்ச்சி இருக்கிறது. இதில் ஒரு பகுதி செயல்பாடாகக் காண்பது அல்லது அந்த நபர் நம்முடைய தாயாக இருந்திருந்தால் என்று வெறுமனே காலத்தின் அக்கறையாகக் கொள்வது. நாம் நம்முடைய தாயாரை பத்து நிமிடங்களோ, பத்து நாட்களோ அல்லது பத்து ஆண்டுகளோ பார்க்காவிட்டாலும் கூட, அவர் இன்னமும் நம்முடைய தாய் தான். அதைப் போலத் தான், அவரை நாம் பத்து ஜென்ம காலத்தில் பார்க்காவிட்டாலும், அவர் இன்னமும் நம்முடைய தாயே. மறுபிறப்பில் நம்பிக்கை இருந்தால் இந்த வழியில் சிந்திப்பது மிகவும் உதவிகரமானது. இந்த நம்பிக்கை இல்லையென்றால் அது வெறும் முட்டாள்தனம்.

மக்களை மட்டுமல்ல குறிப்பாக கொசுவைப் பற்றி நாம் சிந்தித்தால் கூட இது பொருந்தும். இந்தக் கொசுவானது கடந்த ஜென்மத்தில் நம்முடைய தாயாக இருந்திருக்கலாம், ஏனெனில் மறுபிறப்பு எந்த வடிவத்திலும் இருக்கலாம் அதற்கு மனதின் செயல்பாடு உள்ளது. இதற்கும் கூட தர்மா-லைட் பதிப்பு உள்ளது, அங்கே ஒவ்வொருவரும் எப்படி வீட்டிற்கு கொண்டு வரப்படுகின்றனர், நம்மை எவ்வாறு பராமரிக்கின்றனர், நமக்கு எவ்வாறு உணவு ஊட்டுகின்றனர் என்பதைக் காணலாம். ஒவ்வொருவருக்கும் அந்தத் திறன் இருக்கிறது; நாம் பயணிக்கும் போது, நமக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாதவர்கள் உண்மையில் நம்மிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதோடு நமக்கு விருந்தோம்பல் அளிப்பார்கள். அது ஆணா அல்லது பெண்ணா என்பது விஷயமல்ல, ஒவ்வொருவராலும் நம்மிடம் தாயைப்போல பரிவு காட்ட முடியும். ஒரு குழந்தை, நாம் வயது மூப்படைந்ததும், நம்மை பராமரிப்பதில் உதவ முடியும். இது சிறிது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் கூட மிகவும் உதவிகரமானது ஏனெனில் நாம் பார்க்கும் இந்தக் கொசு நம்மை வீட்டிற்கு அழைத்துச் சென்று தாயைப் போல என்னை பராமரிக்கும் என்று சிந்திப்பது சற்றே கடினமானது. 

தர்மா-லைட் மற்றும் உண்மையான தர்ம விஷயங்கள் மட்டங்களில் முறைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைப் பற்றி சிறிதேனும் விளக்குகிறது. இரண்டுமே தங்களது வழியில் மிக உதவிகரமாக இருக்கிறது, ஆனால் தர்மா –லைட் பதிப்பு வரையறைக்குட்பட்டது. உண்மையான தர்ம விஷயம் சாத்தியங்களுக்கான மிகப்பெரிய பிரபஞ்சத்தைத் திறக்கிறது. நாம் எந்த நிலைக்கு செயல்படுத்தினாலும் முக்கியமான விஷயம் அன்றாட வாழ்க்கைக்கு அதனை செயல்படுத்துவதாகும்.  நாம் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டாலோ அல்லது நீண்ட வரிசையில் காத்திருந்தாலோ, நாம் அனைவரையும் நம்முடைய தாயைப் போல பார்க்க வேண்டும்.  கடந்த கால வாழ்க்கையிலோ அல்லது நிகழ்வாழ்க்கையிலோ நாம் இதனை சிந்திக்க முடியும், இது நம்முடைய கோபத்தை தனிப்பதற்கு உதவுவதோடு, பொறுமையை மேம்படுத்தவும் நமக்கு உதவும். ஒரு வரிசையில் உண்மையில் நமக்கு முன்னர் நம்முடைய தாயார் நின்று கொண்டிருந்தால், நிச்சயமாக நமக்கு முன்னர் அவர் சேவையை பெறுவதற்கு நாம் ஒரு போதும் மறுப்பு தெரிவிக்க மாட்டோம். இந்த வழியில் நாம் இது போன்ற புரிதல்களை செயல்படுத்த முயற்சிக்க முடியும். நம்முடைய தியான பீடத்தில் அமர்ந்திருக்கும் போது மட்டுமே வெறுமனே நாம் இந்த மனநிலைகளை மேம்படுத்தப் போவதில்லை, மாறாக நம்முடைய அன்றாட வாழ்விலும் செயல்படுத்தப்போகிறோம்.  

நமக்குள்ளாகவே செயல்படுவதற்கான முறை தியானம்

தர்ம செயல்முறையானது நமக்குள்ளாகவே செயல்படுவதாக விவரிக்கும் போது, இதுவே பொருளாகும். நம்முடைய அறையில் அமைதியாக, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், இவ்வகையான புரிதல்கள் மற்றும் இது போன்ற அதிக நேர்மறை மனநிலைகளை நாம் உருவாக்கி பயிற்சிக்கிறோம். நம்முடைய கற்பனைத் திறனை பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறோம் மேலும் அவர்களை நோக்கி ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை மேம்படுத்துகிறோம். இது ஒரு பாரம்பரிய முறையல்ல, இருப்பினும், நம்முடைய தியானத்தில் மக்களின் புகைப்படங்களை ஒரு பார்வைஓட்டம் விடுவது சிறந்த செல்லத்தக்கது என்று நான் நினைக்கிறேன். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் படங்களை அவர்கள் வைத்திருக்கவில்லை மேலும் நம்முடைய நவீன தொழில்நுட்பத்தை இந்த செயல்முறைக்கு தழுவுவதில் சிக்கல் இருப்பதாக நான் கருதவில்லை.   

ஒரு குறிப்பிட்ட நேர்மறையான மனநிலையுடன் போதுமான பரிச்சயத்தை நாம் உருவாக்கியவுடன், அதை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முயற்சிக்கிறோம். அதுவே முழுமையான நோக்கம். தியானத்தில் அமர்ந்திருக்கும் போது மட்டும் நேசிக்கும் சிந்தனைகளைக் கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு அதற்கு மாறாக குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள் மீது கோபம் கொள்வது விருப்பமான விளைவு அல்ல. ஆகவே, நம்முடைய தியான பயிற்சியை நாம் எப்போதுமே வாழ்வில் இருந்து தப்பிப்பதற்கானதாக நிச்சயம் கருதக் கூடாது, ஏனெனில் நாம் சில நிமிடங்கள் மட்டுமே அமைதிபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். எல்லா வகையான நம்ப முடியாத விஷயங்களையும் சிந்தித்துக்கொண்டு ஒரு கற்பனை உலகிற்குள் செல்வதாக நினைப்பதும் கூட ஒரு வகை தப்பித்தலே. தியான பயிற்சியானது சற்றே மாறுபட்டது; வாழ்க்கையின் சிக்கல்களைக் கையாள்வதற்கு நாம் பயிற்சி எடுக்கிறோம். 

இது கடின உழைப்பு, மிக விரைவாக எளிமையாகச் செய்யக் கூடியது என்று நினைத்து நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாது, அல்லது விளம்பரத்தால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. சுயநலத்தையும் நம்முடைய இதர அழிவுகரமான உணர்வுகளையும் வெல்வது எளிதல்ல, ஏனெனில் அவை மிக மிக ஆழமான பழக்கங்கள் அடிப்படையிலானவை. அவற்றை வெல்வதற்கான ஒரே வழி, விஷயங்களைப் பற்றிய நமது அணுகுமுறைகளை மாற்றுவதும், இது போன்ற அழிவுகரமான மனநிலைகளை அடிப்படையாகக் கொண்ட குழப்பத்திலிருந்து நம்மை விடுவிப்பதுமாகும்.

சுருக்கம்

பௌத்தத்தை பயிற்சித்தல் என்பது தர்மா –லைட் மற்றும் உண்மையான தர்ம விஷயம் என்று பிரிக்கப்படுகிறது. தர்மா –லைட்டுடன், நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரும்புகிறோம், வாழ்க்கை நம் மீது வீசும் சிக்கல்களை சிறப்பாக கையாள்வதற்கான மனதின் காரணிகளுடன் நம்மை நாமே தயார்படுத்துகிறோம். தர்மா –லைட்டுடன் தவறானதாக எதுவும் நிச்சயமாக இல்லை, கோக –கோலா லைட் போலவே, யதார்த்தமான விஷயத்திற்கு அறுசுவையானதாக எப்போதும் இருக்கப் போவதில்லை.  

பாரம்பரியமாக, லாம்-ரிம்மின் போதனைகள் தர்மா-லைட்டின் நாம் விவாதித்த எந்த எண்ணங்களுக்கு ஏற்றதாக இருக்காது, ஏனெனில் அது கடந்த மற்றும் எதிர்கால வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஊகிக்கிறது. இருப்பினும், நாம் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தவும் சிறந்த மனிதராக மாறவும் விரும்புவிது உண்மையான தர்ம விஷயத்தை பயிற்சிக்கும் சாலையின் மீது எடுத்து வைக்கும் தேவையான முதல் அடியாகும். 

Top