மறுபிறப்பு என்றால் என்ன?

மற்ற இந்திய மதங்களைப் போலவே, பௌத்த மதமும் மறுபிறப்பு அல்லது மறுஅவதாரத்தை வலியுறுத்துகிறது. கடந்த காலத்தில் தனி ஒருவருடைய மனதின் தொடர்ச்சி, உள்ளுணர்வு, திறமைகள் உள்ளிட்டவை எதிர்காலத்திற்குச் செல்கிறது. ஒருவரின் செயல்கள் மற்றும் அவர்களால் கட்டமைக்கப்பட்ட வேறுபாடுகளின் அடிப்படையில், தனி ஒருவர் எண்ணற்ற வகையிலான உயிர் வடிவங்களில் சிறந்த அல்லது மோசமானவற்றில் எதுவாக வேண்டுமானாலும், மறுபிறப்பு எடுக்கலாம்: மனிதன், விலங்கு, பூச்சி, பேயாக மற்றும் இதர பார்க்க முடியாத வடிவங்கள் கூட எடுக்கலாம். சிக்கலான அணுகுமுறைகளான இணைப்பு, கோபம், அப்பாவித்தனம் மற்றும் அவர்களால் தூண்டப்படும் வலுக்கட்டாயமான நடத்தையின் உந்துதல் காரணமாக அனைத்து உயிரினங்களும் கட்டுப்பாடில்லாத மறுபிறப்பை அனுபவிக்கின்றன. கடந்த கால நடத்தையின் தாக்கம் ஒருவர் மனதில் எழுவதன் காரணமாக அவர் எதிர்மறை தூண்டுணர்வை பின்பற்றி அழிவுகரமாக செயல்பட்டால், இதன் விளைவாக அவர் துன்பம் மற்றும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கிறார். மாறாக ஒருவர் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டால், அவர் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார். வெற்றிகரமான மறுபிறப்பில் ஒவ்வொரு தனி நபரின் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை என்பது வெகுமதியோ அல்லது தண்டனையோ அல்ல, மாறாக அந்த நபரின் கடந்த கால செயல்கள் நடத்தை விதிகளின் காரணம் மற்றும் விளைவால் உருவாக்கப்பட்டது.

மறுபிறப்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

ஒரு விசயம் உண்மை தானா என்பதை நாம் எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறோம்? பௌத்த போதனைகளைப் பொறுத்தவரையில், விஷயங்களின் உண்மைத் தன்மையை இரண்டு வழிகளில் அறியலாம்: அவை நேரடியான புலனுணர்வு மற்றும் அனுமானம். பரிசோதனைக் கூடத்தில் ஒரு சோதனையைச் செய்வதன் மூலம் நேரடி புலனுணர்வால் ஒன்றின் இருப்பை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.  

உதாரணமாக, ஒரு துளி ஏரி நீரில் பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன, நுண்ணோக்கி மூலம் பார்ப்பதனால், நம்முடைய புலன்களின் மூலம் எளிதில் அது உண்மை என்பதை அறியலாம்.

இருப்பினும், சில விஷயங்களை நேரடி புலனுணர்வு மூலம் அறிய முடியாது. நாம் தர்க்கம், காரணம் மற்றும் அனுமானத்தை சார்ந்திருக்க வேண்டும், உதாரணமாக காந்தசக்தியின் இருப்பை காந்தம் மற்றும் இரும்பு ஊசியின் நடத்தையில் இருந்து அனுமானத்தின் மூலம் அறியலாம். நேரடி புலனுணர்வு மூலம் மறுபிறப்பை நிரூபிப்பது மிகவும் கடினமாகும். இருப்பினும், சிலர் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைவில் வைத்திருத்தல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட உடைமைகளை அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்களை முன்னரே அடையாளம் காணக்கூடிய பல உதாரணங்கள் உள்ளன. மறுபிறப்பு இருப்பதை நாம் ஊகிக்க முடியும், ஆனால் சிலர் இந்த முடிவை மற்றும் இந்த தந்திரத்தை சந்தேகிக்கலாம்.

கடந்த கால நினைவுகளின் சுவடுகளை தள்ளிவைத்துவிட்டு, தர்க்க ரீதியில் மறுபிறப்பை புரிந்து கொள்வதை நோக்கி திரும்புவோம். சில விஷயங்கள் யதார்த்தத்திற்கு ஒத்துப்போகவில்லையெனில், அவற்றை பௌத்தத்தில் இருந்து வெளியேற்ற ஆவலுடன் இருப்பதாக புனிதர் தலாய் லாமா கூறி இருக்கிறார். மறுபிறப்பிற்கும் இது பொருந்தும். உண்மையில், அவர் இந்த அறிவிப்பையே அந்த அர்த்தத்தில் தான் தெரிவித்தார். மறுபிறப்பு என்ற இருத்தலே இல்லை என்பதை விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடிந்தால், பின்னர் அது உண்மை என்று நம்புவதை நாம் நிச்சயம் கைவிட வேண்டும். இருப்பினும், விஞ்ஞானிகளால் அது தவறு என்று நிரூக்கப்பட முடியாவிட்டால், ஏனெனில் அவர்கள் தர்க்கம் மற்றும் விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுகின்றனர், பின்னர் புதிய விஷயங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் வெளிப்படையாக இருப்பதால், அவை இருக்கிறதா என்பதை தொடர்ந்து ஆராய வேண்டும்.  

மறுபிறப்பு இல்லை என்பதை நிரூபிக்க, அவர்கள் அதன் இல்லாமையை அறிய வேண்டும். என் கண்களால் பார்க்காததால் மறுபிறப்பு இல்லை என்று வெறுமனே சொல்வது மறுபிறப்பின் இருப்பை காண்பது அல்ல. காந்தசக்தி மற்றும் புவியீர்ப்பு விலை போன்ற நம் கண்களுக்கு புலப்படாத பல விஷயங்கள் இருக்கின்றன.

மறுபிறப்பு இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய்வதற்கான பகுத்தறிவு வழிகள்

விஞ்ஞானிகளால் மறுபிறப்பின் இல்லாமையை நிரூபிக்க முடியாவிட்டால், அதன் பின்னர் மறுபிறப்பு என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்பதை அவர்கள் சரியான முறையில் ஆராய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தரவை முன்வைத்து அதை சரிபார்க்க முடியுமா என்று சோதிப்பது அறிவியல் முறை. எனவே, நாம் தரவை பார்க்கிறோம். உதாரணமாக, உற்றுநோக்கினால் பச்சிளம் குழந்தைகள் பிறக்கும்போது எதுவும் பதிவு செய்யப்படாத கேசட்டுகளைப் போன்று பிறப்பதில்லை. இளம் வயதிலேயே கூட அவர்களுக்கென்று குறிப்பிட்ட பழக்கங்கள் மற்றும் ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். இவை எங்கிருந்து வருகின்றன?

அவை பெற்றோரின் உடல் பொருட்களின் முந்தைய தொடர்ச்சிகளான விந்தணு மற்றும் முட்டையிலிருந்து வந்தவை என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஒன்றாக வரும் ஒவ்வொரு விந்தணுவும் கருமுட்டையும் கருப்பையில் சிசுவாக வளர்வதில்லை. அவை குழந்தையாக மாறுவதற்கும் அப்படி உருவாகாமல் போவதற்கும் என்ன வித்தியாசம்? உண்மையில் குழந்தைக்குள் பல்வேறு பழக்கங்கள் மற்றும் உள்ளுணர்வுகள் ஏற்பட என்ன காரணம்? அதற்கு டிஎன்ஏ மற்றும் ஜுன்கள் காரணம் என்று நாம் சொல்லலாம். இது உடல் அளவில் நடப்பது. ஒரு குழந்தை எப்படி உயிராகி வருகிறது என்பது உடல் ரீதியிலானது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆயினும் கூட, அனுபவ பக்கத்தை நாம் எப்படி பார்ப்பது? மனதை நாம் எவ்வாறு கணக்கிடுவது?

ஆங்கில வார்த்தையான “மனம்” சமஸ்கிருதம் மற்றும் திபெத்தியத்தில் மொழி பெயர்க்கும் போது அதே அர்த்தத்தை கொண்டிருப்பதில்லை. சொந்த மொழியில், “மனம்” என்பது அதைச் செய்வதைவிட மனதின் செயல்பாடு அல்லது மன நிகழ்வுகளைக் குறிக்கிறது. செயல்பாடு அல்லது நிகழ்வு குறிப்பிட்ட விஷயங்களான சிந்தனைகள், பார்வைகள், சப்தங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள் உள்ளிட்டவற்றின் அறிவாற்றல் எழுச்சி – அதனை பார்த்தல், கேட்டல், புரிந்து கொள்ளுதல் மேலும் புரிந்து கொள்ளாதது போன்ற அவற்றுடனான அறிவாற்றல் ஈடுபாடு.  

ஒரு தனிமனிதனுக்குள் எழும் அறிவாற்றல் மற்றும் மன செயல்பாடுகளின் ஈடுபாடு எங்கிருந்து வருகிறது? நாம் இங்கே உடல் எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி பேசவில்லை, நிச்சயமாக உடல் பெற்றோரிடம் இருந்தே வந்தது. நாம் அறிவாற்றல் உள்ளிட்டவற்றை பற்றியும் பேசவில்லை, ஏனெனில் மரபணு அடிப்படையே அதற்குக் காரணம் என்று நம்மால் வாதிக்க முடியும். இருப்பினும், ஒருவருக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் பிடிப்பதற்கான ஆர்வம் அந்த நபரின் மரபணுவில் இருந்து வந்ததாகச் சொல்வது அதனை மிக நீளமாக இழுப்பதாகும்.  

சில விருப்பங்கள் நம்முடைய குடும்பங்கள் அல்லது பொருளாதார அல்லது சமூகச் சூழல்களை உள்ளடக்கி அதன் தாக்கத்தில் இருந்து வந்தவை என்று நம்மால் கூற முடியும். இந்தக் காரணிகளுக்கு நிச்சயம் கட்டுப்பாட்டை கொண்டிருக்கின்றன, ஆனால் நாம் செய்யும் அனைத்திற்கும் அதன் வழியிலேயே சரியான விளக்கம் கொடுப்பது மிகவும் கஷ்டம்.

உதாரணமாக, நான் ஏன் குழந்தையாக இருக்கும் போதே எனக்கு யோகா மீது ஆர்வம் வந்தது? என் குடும்பத்திலோ அல்லது என்னை சுற்றி இருக்கும் சமுதாயமோ அப்படி இல்லை. நான் வசித்த பகுதியில் சில புத்தகங்கள் கிடைக்கும், அதனால் இந்த தாக்கம் சமூகத்தில் இருந்து வந்தது என்று நீங்கள் கூறலாம், ஆனால் நான் ஏன் குறிப்பாக ஹதா யோகா என்ற புத்தகம் படிக்க ஆர்வமாக இருந்தேன்? நான் ஏன் அதை தேர்வு செய்தேன்? அது மற்றொரு கேள்வி. விஷயங்கள் தற்செயலாக நடக்கிறதா, அதனால் அதிர்ஷ்டம் வருகிறது, அல்லது எல்லாவற்றையும் விளக்க முடியுமா?

தனிநபரின் மனச் செயல்பாடு எங்கிருந்து வருகிறது?

இந்த விஷயங்கள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, முக்கியமான கேள்விக்கு திரும்புவோம்: அறிவாற்றல் விஷயங்கள் எழுவதன் செயல்பாடு மற்றும் அதனுடனான அறிவாற்றல் ஈடுபாடு எங்கிருந்து வருகிறது? இந்த உணரும் திறன் எங்கிருந்து வருகிறது? வாழ்க்கைக்கான தீப்பொறியானது எங்கிருந்து வருகிறது? விந்தணு மற்றும் முட்டையின் சேர்க்கை எப்படி உண்மையில் உயிரைக் கொண்டிருக்கிறது? அது எப்படி மனிதனாக மாறுகிறது?  சிந்தனைகள் மற்றும் பார்வை எழுதலை அனுமதிப்பது என்ன, அதனுடன் அறிவாற்றல் ஈடுபாடுக்கு என்ன காரணம், மூளையின் வேதியியல் மற்றும் மின் செயல்பாட்டின் அனுபவப் பக்கம் எது?

பிறந்த குழந்தையின் மனச் செயல்பாடு பெற்றோரிடம் இருந்து வந்ததாகக் கூறுவது மிகக் கடினம், ஏனெனில் அது அப்படியானால், பெற்றோரிடம் இருந்து எப்படி வந்திருக்க முடியும்? அங்கே சில இயக்க முறையும் ஈடுபட்டிருக்கிறது. 

வாழ்க்கையின் அந்த தீப்பொறி - விஷயங்களின் விழிப்புணர்வால் வகைபடுத்தப்படுகிறது - ஒரு விந்து மற்றும் முட்டை போலவே பெற்றோரிடமிருந்து வருகிறதா? இது புணர்ச்சியுடன் வருகிறதா? கருமுட்டை வெளிப்படுதலுடனா? அது விந்தணுவில் இருக்கிறதா? முட்டையா? பெற்றோரிடம் இருந்து எப்போது வந்தது என்ற விஞ்ஞானக் குறியீடு, தர்க்கத்துடன் வரவில்லையெனில், அதன் பின்னர் நாம் மற்றொரு தீர்வைக் காண வேண்டும்.

வெளிப்படையான தர்க்கத்துடன் பார்க்கும்போது, செயல்பாட்டு நிகழ்வுகள் அனைத்தும் அவற்றின் சொந்த தொடர்ச்சிகளிலிருந்து, அதே வகை நிகழ்வில் ஏதாவது ஒன்றின் முந்தைய தருணங்களிலிருந்து வந்ததைக் காண்கிறோம். உதாரணமாக, ஒரு உடல் நிகழ்வு, அது பொருளாக இருந்தாலும் அல்லது ஆற்றலாக இருந்தாலும், அந்த பொருளின் அல்லது ஆற்றலின் முந்தைய தருணத்திலிருந்து வருகிறது. இது ஒரு தொடர்ச்சி.

கோபத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். நாம் கோபமாக உணரும் போது உடல் சக்தி பற்றி நாம் பேசலாம், இது ஒரு வகை. இருப்பினும், கோபத்தை அனுபவிப்பதின் மன செயல்பாடை கருத்தில் கொள்ளுங்கள் - உணர்ச்சியின் எழுச்சியையும் அது பற்றிய உணர்நிலை அல்லது அதன் உணர்வற்ற விழிப்புணர்வையும் அனுபவித்தல். இந்த வாழ்நாளில் தனிஒருவர் கோபத்தை அனுபவிப்பதற்கு தன்னுடைய சொந்த முன் தருணங்களின் தொடர்ச்சி இருக்கிறது, ஆனால் இதற்கு முன்னர் அது எங்கிருந்து வந்தது? ஒன்று அது பெற்றோரிடம் இருந்து வந்திருக்க வேண்டும், அது எப்படி நடந்தது என்பதை விவரிக்க எந்த இயக்க முறையும் இருப்பதாகத் தெரியவில்லை, அல்லது அது படைக்கும் கடவுளிடம் இருந்து வந்திருக்கலாம். 

இருப்பினும் சிலருக்கு, ஒரு சர்வ வல்லமை படைத்த கடவுள் நடப்பில் உள்ள பிரச்னைகளை எப்படி அணுகிறார் என்ற தர்க்கரீதியான முரண்பாடுகள் எழுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, மாற்று என்பது யாருடைய வாழ்க்கையிலும் கோபத்தின் முதல் தருணம் தொடர்ச்சியான அதன் முந்தைய தருணத்திலிருந்து வருகிறது. மறுபிறப்பு கோட்பாடும் இதையே விளக்குகிறது.

ஒரு திரைப்படத்தின் ஒப்புமை

மறுபிறப்பை நாம் ஒரு திரைப்படத்தின் ஒப்புமையுடன் புரிந்து கொள்ள முயற்சிப்போம். திரைப்படம் என்பது பட பிரேம்களின் (படக்காட்சிகளின்) தொடர்ச்சி என்பதைப் போல, நம்முடைய மனதின் தொடர்ச்சிகள் அல்லது மன – ஓட்டங்கள் எப்போதும் –மாறும் தருணங்களின் தொடர்ச்சி விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் இந்த ஜென்மத்தில் இருந்து அடுத்த ஜென்மத்திற்கு மாறக் கூடியது. “நான்”, “என் மனம்” என்ற திடமான, கண்டறியும் உட்பொருள் இல்லை, அது மறுபடியும் பிறப்பதற்கு. மறுபிறப்பு என்பது ஒரு கன்வேயர் பெல்ட் மீது அமர்ந்திருக்கம் சிறிய சிலை போன்றவற்றின் ஒப்புமையல்ல, ஒரு ஜென்மத்தில் இருந்து மற்றொரு ஜென்மத்திற்கு செல்வதற்கு. மாறாக அது ஒரு திரைப்படம் போல, ஏதோ ஒன்று நிலையாக மாறிக்கொண்டே இருக்கிறது. 

ஒவ்வொரு படக்காட்சியும் வித்தியாசமானது, ஆனால் அதில் தொடர்ச்சி இருக்கிறது. ஒரு படக்காட்சி அடுத்ததோடு தொடர்புப்படுகிறது. அதே போன்று, நிகழ்வுகளின் விழிப்புணர்வுத் தருணங்களின் தொடர்ச்சி நிலையாக மாறுவது, சில தருணங்கள் நினைவற்ற நிலையாக இருந்தாலும் மாறுதல் நிச்சயம். மேலும், அனைத்துத் திரைப்படங்களும் ஒரே மாதிரியானவையல்ல, இருப்பினும் அவையும் கூட படங்களே, அனைத்து மனதின் தொடர்ச்சிகள் அல்லது “மனங்கள்” ஒரே மாதிரியானவை அல்ல என்பதைப் போன்றவை. நிகழ்வுகளின் விழிப்புணர்வின் தொடர்ச்சியான எண்ணற்ற தனிப்பட்ட ஓட்டங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த கண்ணோட்டத்தில் "நான்" என்று முத்திரையிடப்படலாம்.

மறுபிறப்பு தொடர்பான கேள்வியில் நாம் ஆராயத் தொடங்க வேண்டிய காரணத்தின் சாராம்சங்கள் இவையே. ஒரு கோட்பாடு தர்க்க ரீதியில் அர்த்தம் உருவாக்கினால், கடந்த காலத்தை நினைவுபடுத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணரலாம். நாம் மேலும் தீவிரமாக உண்மையை பார்க்க வேண்டும். இந்த வழியில், காரணமான அணுகுமுறையில் இருந்து மறுபிறப்பின் இருத்தலை நாம் ஆராய வேண்டும்.

மறுபிறப்பு எடுப்பதென்றால் என்ன?

பௌத்தத்தை பொறுத்தவரையில், மறுபிறப்பு என்பது ஒரே ஆன்மாவின் தொடர்ச்சி அல்ல. அதாவது ஒரு சிறிய சிலை அல்லது நபர், ஒரு கன்வேயர் பெல்ட் மீது அமர்ந்து கொண்டு ஒரு ஜென்மத்தில் இருந்து மற்றொரு ஜென்மத்திற்கு போவதல்ல. கன்வேயர் பெல்ட் என்பது காலத்தை குறிக்கிறது மேலும் இங்கே குறிப்பிடப்படும் உருவம் சில திடமான பொருள், ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஆளுமை அல்லது ஆத்மா  எனப்படும்“நான்”: “இப்போது நான் இளமையாக இருக்கிறேன், நான் இப்போது வயது முதிர்வடைந்துவிட்டேன்; நான் இப்போது இந்த வாழ்க்கையில் இருக்கிறேன், நான் இப்போது அந்த வாழ்க்கையில் இருக்கிறேன் என காலத்தின் மூலம் கடந்து செல்கிறோம்.” பௌத்தத்தின் மறுபிறப்பு கருத்து இதுவல்ல. மாறாக, ஒப்புமை என்பது ஒரு திரைப்படத்தை போன்றது. திரைப்படத்தில் தொடர்ச்சி இருக்கும்; படக்காட்சிகள் தொடர்ச்சியை உருவாக்குகின்றன. 

நான் நீ ஆக மாறுகிறேன், அல்லது நாம் அனைவரும் ஒன்று என்று பௌத்தம் சொல்லவில்லை. நாம் அனைவரும் ஒன்றென்றால், நான் நீ என்றால், நாம் இருவரும் பசியாக இருந்தால், நான் சாப்பிடச் செல்லும் போது நீ எப்படி காரில் காத்திருக்க முடியும்? ஆனால் அது அப்படியல்ல. நாம் ஒவ்வொருவரும் சொந்த தனிப்பட்ட ஓட்டத்தின் தொடர்ச்சியை கொண்டிருக்கிறோம். என்னுடைய படத்தில் வரும் காட்சிகள் உன்னுடைய படத்திற்கானதாக மாறாது, ஆனால் நம்முடைய வாழ்க்கையானது திரைப்படம் போன்றது என அர்த்தப்படுத்துவது அது நிலையானதல்ல, நிர்ணயிக்கப்பட்டதல்ல. வாழ்க்கை ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு போய்க்கொண்டே இருக்கிறது. கர்மாவைப் பொறுத்து அது ஒரு கோர்வையை பின்பற்றுவதால் தொடர்ச்சி உருவாகிறது.

ஒவ்வொரு தொடர்ச்சியும் யாரோ ஒருவருடையது அதை “நான்” என்று அழைக்க முடியும்; ஒவ்வொரு தொடர்ச்சியும் யாருக்குமானதல்ல என்று பொருளல்ல. ஆனால் படத்தின் தலைப்பு ஒட்டுமொத்த தலைப்பையும், அதில் இருக்கும் ஒவ்வொரு படக்காட்சியையும் குறிக்கிறது, ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் நிலையான ஒன்றைக் காண முடியாது, அதைப்போலவே “நான்” என்பது தனிநபர் மனதின் தொடர்ச்சி மற்றும் அதன் ஒவ்வொரு தருணத்தையும் குறிக்கிறது, ஆனால் எந்த தருணத்திலும் நிலையான ஏதோ ஒன்றை கண்டறிய முடியாது.  ஆயினும்கூட, வழக்கமாக "நான்," என்ற ஒரு "சுயம்" உள்ளது. பௌத்தம் ஒரு பாரம்பரியம் உள்ளிட்ட எவற்றையும் நம்பாத முறையல்ல. 

மனிதர்கள் எப்போதும் மனிதர்களாகவே மறுபிறப்பு எடுக்கிறார்களா?

நாம் இங்கே எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் மனதில் செயல்பாடு மேலும் மனதின் செயல்பாட்டை பண்படுத்தும் பொதுவான காரணிகள் என்ன? மனிதனின் மனச் செயல்பாட்டை பண்படுத்துவது என்னவென்றால் அறிவாற்றல் தொடர்பானது. அந்த அறிவாற்றல், நமக்கெல்லாம் தெரிந்தது போல, “மிகுந்த அறிவாளியல்ல” என்பதில் இருந்து “மிகுந்த அறிவாளி” என்ற மொத்த அளவில் இருக்கலாம். ஆனால் வேறு சில காரணிகள் இருக்கின்றன அவையும் கூட மனச் செயல்பாட்டின் ஒரு அங்கம், உதாரணமாக கோபம், பேராசை, இணைப்பு, கவனச்சிதறல், வலுக்காட்டாயமான நடத்தைகள் அனைத்தையும் இந்த மனதின் காரணிகள் கொண்டு வருகின்றன. சிலரிடத்தில், இந்தக் காரணிகள் மனச் செயல்பாட்டை அதிகாரம் செய்யும், அதனால் அவர்கள் மனித அறிவாற்றலை பயன்படுத்தமாட்டார்கள், ஆனால் மாறாக பேராசை அல்லது கோபம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அதிகம் இயக்கப்படுவார்கள்.   

உதாரணமாக, தீராத காம ஆசைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்களில் சுற்றுவது, மற்றவர்களை பார்ப்பது, அவர்கள் பார்க்கும் யாராவது ஒருவருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்று இருக்கிறார்கள் –அவர் ஒரு நாயைப் போல நடந்து கொள்வதாக நீங்கள் நினைக்கவில்லையா? ஒரு நாய் தான் எந்த நேரத்தில் மற்ற எந்த நாயைப் பார்த்தாலும் உடனே உறவு வைத்துக்கொள்ளும்; இது சுய- கட்டுப்பாடு இல்லாமையை பயிற்சிக்கிறது. ஒரு மனிதன் இவ்வழியில் நடந்து கொண்டால், அவன் விலங்கின் மனநிலையை பழக்கப்படுத்தி கட்டமைக்கிறான். எனவே, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, மறுபிறப்பு என்ற விஷயங்களோடு நாம் சிந்தித்தால், அந்த நபரின் ஆசைப்படும் மனநிலையானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் மனச் செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்தும், மேலும் அது அவர்களின் உடலில் மறுஅவதாரம் எடுக்கிறது மனதின் செயல்பாட்டிற்கு அதுவே அடிப்படை, அதுவே விலங்காக மறுபிறப்பு எடுப்பது.  

எனவே நம்முடைய நடத்தையை பகுப்பாய்வது மிகவும் உதவிகரமானது : “நான் இந்த வகை அல்லது அந்த வகை விலங்கைப் போல நடந்து கொள்கிறேனா?” ஒரு ஈயைக் குறித்து சிந்தியுங்கள். ஈயின் மனநிலையானது முற்றிலும் அலைபாயும் மனநிலை. ஒரு ஈயால் ஒரு இடத்தில் சில நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது; அது நகர்ந்து கொண்டு கவனச்சிதைவுக்கு ஆளாகிக்கொண்டுமே இருக்கும். அந்த வகையில் நம்முடைய மனமும் ஒரு ஈயின் மனம் போல இருக்கிறதா?அப்படியானால், அடுத்த ஜென்மத்தில் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நாம் நல்ல அறிவாளியாக நல்ல ஒருநிலைப்படுத்துதலைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?

இது போன்ற சில சிந்தனைகள் மறுஜென்மத்திலும் மனிதர்கள் நிச்சயம் மனிதர்களாகவே பிறக்க வேண்டியது கட்டாயமல்ல என்பதை புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன. நாம் பல்வேறு வகையான உயிர் வடிவங்களாக மறுபிறப்பு எடுக்கலாம், அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மனிதனாக நாம் பல நேர்மறை பழக்கங்களை கட்டமைத்தால், நாம் ஒரு விலங்காக மறுபிறப்பு எடுத்தாலும் கூட, நம்முடைய முந்தைய மிருகத்தனமான நடத்தையின் கர்ம சக்தி தேய்ந்து போகும் போது, நமது முந்தைய நேர்மறை சக்தி ஆதிக்கம் செலுத்தி நாம் மீண்டும் மனிதனாக பிறக்கலாம். 

முக்கிய விஷயம் என்னவென்றால், மன செயல்பாட்டில் உள்ளார்ந்த எதுவும் இல்லை, அது மனித மன செயல்பாட்டை உருவாக்குகிறது அல்லது அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது அது போன்றதாகவோ உருவாக்குகிறது. அது எளிமையான மனச் செயல்பாடு. எனவே நாம் கொண்டிருக்கும் மறுபிறப்பின் வகையானது கர்மா அடிப்படையில், நம்முடைய வலுக்கட்டாயமான நடத்தைகளால் கட்டமைத்திருக்கும் பல்வேறு பழக்கங்களால் வருவது. எதிர்கால வாழ்நாளில், அந்த பழக்கங்களைச் செயல்படுத்துவதற்கு பொருத்தமான அடிப்படையாக செயல்படும் ஒரு உடல் நம்மிடம் இருக்கும்.

சுருக்கம்

மறுபிறப்பு குறித்து பௌத்தம் என்ன சொல்கிறது எனப் பகுப்பாய்ந்தால், தனிப்பட்ட மன தொடர்ச்சிகளை நிலைநிறுத்தும் காரண செயல்முறையை நாம் ஆராய வேண்டும்: மனச் செயல்பாடுகளின் தனிப்பட்ட தொடர்ச்சிகள் ஒருபோதும் கெட்டு ஒழியாது. தொடக்கம் இல்லாத மறுபிறப்பு என்பது நாம் எடுக்கும் முடிவாகும், அதன் முன்பு கட்டமைக்கப்பட்ட சொந்த நடத்தை பழக்கங்கள் ஒவ்வொரு வாழ்நாளில் பழக்கத்தை வடிவமைக்கின்றன.

Top