ஞானமடைதல் என்றால் புத்தராக மாறுவது– மானுட வளர்ச்சி மற்றும் மனித ஆற்றலின் உச்சம் – பௌத்த மதத்தின் இறுதி குறிக்கோள் இதுவேயாகும். பூமியில் இருக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் அடைய நினைக்கும் திறன்.
நாம் இப்போது புத்தர்களாக இல்லை- மாறாக வாழ்க்கை முழுவதும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கிறோம். நாம் இவ்வாறு சிக்கிக்கொண்டிருப்பதற்கு நம்முடைய மனம் எல்லாவற்றிலும் முட்டாள்தனமானவற்றை பிரதிபலிப்பதன் வெளிப்பாடு, அதுவே யதார்த்தம் என்றும் நாம் நம்புகிறோம். உண்மையான மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நாம் சிந்தித்து செயல்படும் பல வழிகள் முடிவில் துன்பத்தையே கொண்டு வந்து சேர்க்கின்றன.
பொதுவாகவே நமக்கு என்ன தேவையோ அதையே நாம் செய்கிறோம், மற்றவர்களை அது எந்த வகையில் பாதிக்கும் என்று சிறிதும் எண்ணிப்பார்ப்பதில்லை, ஏனெனில் இந்த உலகத்தின் மையப்புள்ளியே நாம் தான் என்று கருதுகிறோம், நம்மை பற்றி மட்டுமே எண்ணிப்பார்க்கிறோம். இதுபோன்ற சிந்தனை யதார்த்தத்தை குறிக்காது: அது சுயநலம், நமக்கும் பிறர்க்கும் துன்பத்தை கொண்டு வரும். ஞானம் பெற நாம் முதலில் செய்யத் தொடங்க வேண்டியவை:
- நம்முடைய நடத்தையால் நமக்கும் பிறருக்கும் ஏற்படும் தாக்கத்தை புரிந்து கொண்டு, அழிவுகரமாக செயல்படுவதில் இருந்து விலகிஇருத்தல்
- அனைத்தும் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து, நம்முடைய கணிப்புகளே நம்மை முட்டாள் தனமாக்கி விடாமல் பார்த்துக்கொள்தல்
நம்முடைய மனதின் கணிப்புகளை நம்புவதை நிறுத்திவிட்டால், குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டு எழும் இடையூறு செய்யும் உணர்வுகளான கோபம், வெறுப்பு, பேராசை மற்றும் பொறாமை உள்ளிட்டவற்றையும் நாம் தடுத்துவிடலாம். நம்முடைய எதிர்மறை உணர்வுகளுடன் நாம் வலுக்கட்டாயமாக மீண்டும் செயல்பட வேண்டிய கட்டாயமில்லை. இவையெல்லாவற்றிற்கும் தேவை:
- விவேகமற்ற நடத்தையில் இருந்து விலகுவதற்கான உறுதியுடன், நன்னெறி சுய ஒழுக்கம்.
- சோர்வு அல்லது கவனச்சிதறலை தவிர்க்க, கவனம் செலுத்துதல்
- உதவி எது? உபத்திரம் எது? என்று பாகுபாயும் விருப்பமும், எது சரி, தவறு என்று பகுப்பாயும் அறிவும் தேவை
- உணர்வுகளின் சமநிலை, நேர்மறை பண்புகளான அன்பு மற்றும் கருணையை விதைத்தல்
இவைகளிலிருந்து நாம் மனஅமைதியைப் பெற்றாலும், அது போதுமானதல்ல: எல்லா இடத்திலும் நாம் எல்லோரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பிருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. எனவே தான் பிறருக்கு உதவுவதற்கான சிறப்பான வழியை நம்மால் கண்டறிய முடிவதில்லை.
இந்த நிலையை அடைய நாம் அனைவரும் முழு ஞானமடைந்த புத்தர்களாக மாற வேண்டும், அப்போது தான் நம்முடைய மனம் எதையும் பிரதிபலிக்காது. உயிர்வாழ்வன அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது என்பதை நாம் தெளிவாகப் பார்க்க முடிந்தால் பிறருக்கு எவ்வாறு உதவுவது என்பதையும் அறியலாம். நம்முடைய உடலில் அளவில்லாத சக்தி இருக்கிறது, அதன் மூலம் நாம் எல்லோருடனும் சிறப்பாக தொடர்பில் இருக்க முடியும், நம்முடைய மனதும் துள்ளியமாக எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும். நம்முடைய அன்பு, கருணை மற்றும் எல்லாவற்றின் மீதும் இருக்கும் சம அக்கறையானது உறுதியானது, நம்முடைய ஒரே ஒரு பாசத்திற்குரிய குழந்தையைப் போன்றது. பிறரின் நன்மைக்காக பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் நாம் கடமையாற்ற வேண்டும். மக்களோடு மக்களாக இருப்பதற்கோ அல்லது அதிக வேலையாகவோ சோர்வாகவோ இருப்பதாக நினைத்து மற்றவர்களை தவிர்க்கவோ நேரிடும் போது, நாம் ஞானமடைந்திருந்தால் நம்முடைய கோபம் அடையவோ, பொறுமையையோ இழப்பதற்கு வாய்ப்பே இல்லை.
புத்தராக நாம் எல்லாம் அறிந்தவர்களே ஆனால் சர்வ வல்லமை படைத்தவர்களல்ல. பிறரது துன்பங்களை நாம் புறந்தள்ளி விட முடியாது, ஆனால் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழியை கற்றுத்தருவதோடு, ஒரு வாழும் உதாரணமாக இருக்கலாம். ஞானமடையும் பயணத்தில் நமக்கு தேவையான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்:
- நம்பகத்தன்மையான நேர்மறை சக்தியை கட்டமைத்தல்: சுயநலமின்றி பிறருக்கு நம்மால் முடிந்த சிறந்த பலன்களை ஏற்படுத்துதல்
- யதார்த்தத்தை புரிந்து கொள்வதற்காக கடமையாற்றுதல்: உலகத்திற்கு முன் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதை நிறுத்துங்கள்.
நம் அனைவருக்குமே கடமைகளைப் பற்றிய புரிதல் இருக்கிறது – நம்முடைய சரீரம் மற்றும் அடிப்படை மனித அறிவாற்றலானது – ஞானமடைதலுக்கான காரணங்களை கட்டமைக்க உதவுகிறது. ஆகாயம் போல நம்முடைய மனதும் இதயமும் இயற்கையிலேயே உணர்வுகளின் கலக்கத்தாலும், இடையூறான சிந்தனைகளாலும் மாசுபடாதவை. நாம் செய்ய வேண்டியனவெல்லாம் அவற்றை மேம்படுத்துதல், இதனால் அவை அதன் முழுத் திறனை அடைய முடியும்.
ஞானமடைதல் என்பது எளிதில் அடைய முடியாத இலக்காகத் தோன்றலாம், சாதிக்க நினைப்பது கடினமானதும் கூட – யாருமே அது எளிமையானது என்று சொல்ல முடியாது! ஆனால் இலக்கின் திசையை நோக்கி குறி வைத்தால் அது நம் வாழ்க்கைக்கு நம்பமுடியாத அர்த்தத்தைக் கொடுக்கும். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்கான புரிதலைத் தரும், நம்மை நாமே அழுத்தம் மற்றும் கவலையில் இருந்து பாதுகாக்கலாம். மிகப்பெரிய சாகசத்தை நாம் தொடங்கும் போது வாழ்க்கை முழுமையடைகிறது: அனைவரின் நலனுக்காக ஞானமடைதல் என்பதே அது.