பத்து அழிவுகரமான செயல்களைத் தவிர்த்தல்

09:37
நாம் அனைவருமே நம்முடைய சொந்த நலனை மேம்படுத்த விரும்புகிறோம், மேலும் அந்த வளர்ச்சி ஆரோக்கியமாக, மற்றவர்களுடனான உறவுமுறைகளில் அதிக திருப்தியுடன் இருக்க நம்மில் பெரும்பாலானவர்கள் விரும்புகிறோம். அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை: அதற்கு நன்னெறிகள் தேவை. அதவாது அழிவுகரமான நடத்தையில் இருந்து விலகி மாறாக ஆக்கப்பூர்வமான, பயனுள்ள வழிகளில் செயல்படுதல். சிக்கலான உணர்வுகளான கோபம் மற்றும் பேராசை உள்ளிட்டவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் போது நாம் அழிவுகரமாக செயல்படுகிறோம், அவை நாம் மன அமைதியையும் சுய-கட்டுப்பாட்டையும் இழக்கக் காரணமாகின்றன. வலுக்கட்டாயமாக நாம் நம்முடைய எதிர்மறை பழக்கங்களை வெளிப்படுத்துகிறோம், மற்றவர்களைக் காயப்படுத்துவதுடன், இறுதியில் நம்மை நாமே காயப்படுத்திக்கொள்கிறோம்: நம்முடைய சொந்த நடத்தையே நம்முடைய நீண்ட கால மகிழ்ச்சிக்கு காரணமாகின்றன. மற்றொரு புறம், நாம் சுய – கட்டுப்பாட்டை பயிற்சித்து அன்பு மற்றும் இரக்கத்துடன் செயல்பட்டால், மற்றவர்களுக்கும் நமக்குமே கூட நம்பத்தக்க நண்பர்களாவோம், இயல்பாகவே நாம் மகிழ்ச்சியான வாழ்வை வழி நடத்தலாம்.

அழிவுகரமான நடத்தையின் வரையறை

நன்னெறிகளின் ஒவ்வொரு முறையும் அழிவுகரமான நடத்தையின் வகைகளில் ஏற்கக் கூடியவை என்ன, ஏற்க முடியாதவை என்ன என்ற வெவ்வேறு எண்ணங்களின் அடிப்படையில் சொந்த பட்டியலைக் கொண்டுள்ளது. மத மற்றும் குடிமை அமைப்புகள் சொர்க்கத்தின் அதிகாரம், அரச தலைவர் அல்லது சில வகையான சட்டமன்றங்களிலிருந்து வரும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாம் அதனை மதிக்காவிடில், நாம் குற்ற உணர்வு கொள்கிறோம் மேலும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்; அதுவே நாம் மதித்து நடந்தால், பதிலாக நாம் சொர்க்கத்திலோ, அல்லது இந்த ஜென்மத்தில் பாதுகாப்பான மற்றும் இணக்கமான சமூகத்திலோ இருப்போம். இணக்கமான முறைகள் மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்த காரணமாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலத்துகின்றன, ஆனால் இது சிக்கலானதும் கூட: மற்றவர்களுக்கு உதவிகரமானது அல்லது தீங்கானது என்ன என்பதை உண்மையில் நம்மால் எப்போதும் தீர்மானிக்க முடியுமா? எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் கூச்சலிடுவது அவரின் உணர்வுகளை காயப்படுத்தலாம், அல்லது அவர்கள் சில ஆபத்தை தவிர்ப்பதற்கும் உதவலாம்.

பௌத்த நெறிமுறைகள் சுய-அழிவுகரமான நடத்தையிலிருந்து விலகி இருப்பதை வலியுறுத்துகின்றன - குறிப்பாக நீண்ட காலத்திற்கு நமக்கு தீங்கு விளைவிக்கும் வழிகளில் செயல்படுவது. பைத்தியக்காரத்தனமாக ரோட்டில் வண்டியை ஓட்டிச் சென்று நம்மை கடக்க முயலும் ஓட்டுநரை நாம் திட்டலாம், அந்த நொடியில் அது நமக்கு நல்ல உணர்வைத் தந்தாலும், அந்த நிகழ்வு நம்முடைய மனதை தடுமாற்றத்திலே வைத்திருப்பதோடு நம்முடைய சக்தியையும் அசைத்துப் பார்ப்பதன் விளைவாக நாம் மன அமைதியை இழக்கிறோம். கூச்சலிடுவதையே நம்முடைய பழக்கமாக்கினால், கோபப்படாமல் எந்த தடங்கலையும் நம்மால் சகித்துக்கொள்ள முடியாது; இது மற்றவர்களுடனான நம்முடைய உறவை மட்டும் சேதப்படுத்தாது, நம்முடைய சொந்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.    

மற்றொரு புறம், நம் நடத்தை மற்றவர்களுக்காக உண்மையான அக்கறையால் உந்தப்படும்போது, அன்பு, இரக்கம் மற்றும் புரிதலுடன், இயல்பாகவே அவ்வாறு செய்வதைப் போல உணர்ந்தாலும் கூச்சலிடுவதைத் தவிர்ப்போம் – அந்த ஓட்டுநர் கடந்து செல்ல நாம் மனதார அனுமதிக்கிறோம். இதன் முடிவு அந்த ஓட்டுநர் மகிழ்ச்சியாக உணர்கிறார், நாமும் கூட பலனடைகிறோம்: அடிப்படையில் மகிழ்ச்சியான மன நிலையுடன் நாம் அமைதி மற்றும் நிம்மதியாகவும் இருப்போம். கத்துவதற்கான தூண்டுதலை நாம் அடக்குவதனால் விரக்தியில் முடிகிறது. மாறாக, சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை முடிந்த வரை சீக்கிரமாகச் செல்ல சமமாக விரும்பினால், நாம் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு பந்தயத்தில் செல்லவில்லை, விஷயமில்லாத ஒன்றிற்கு முயற்சிக்கிறோம் என்ற பயனற்ற தன்மையை புரிந்து கொள்ளலாம். 

அழிவுகரமான நடத்தையை சிக்கலான உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வலுக்கட்டாயமாகச் செயல்படுதல் மற்றும் எதிர்மறை பழக்கங்கள் குறித்து பௌத்தம் விவரிக்கிறது. உதவிகரமானது என்ன? தீங்கானது என்ன? என்பதை நம்மால் சரியாக பாகுபடுத்த முடியாது, ஏனெனில் சிறந்தது என்ன என்று நமக்கு தெரிந்திருக்காது அல்லது ஒருவேளை நாம் அறிந்திருக்கலாம், ஆனால் நாம் முழுவதுமாக சுய-கட்டுப்பாட்டை இழக்கிறோம். முக்கியமான சிக்கலான உணர்வுகளான பேராசை மற்றும் கோபம், மேலும் அவை இது போன்ற பிரச்னைகளை உருவாக்கும் உணர்வுகளால் இயக்கப்படும் போது நாம் செயல்படும், பேசும் மற்றும் சிந்திக்கும் வழிகளின் விளைவுகள் குறித்து அப்பாவியாக இருத்தல். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அடிக்கடி சுய-மதிப்பை இழக்கும் ஏதோ உணர்வு, அதனால் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி எப்போது கவலைப்படுவதில்லை. என்ன நடந்தாலும் என்ற அணுகுமுறையை நாம் கொண்டிருக்கிறோம், நாம் எவ்வாறு உடை அணிகிறோம், நம்முடைய முடி பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது மற்றும் நம்முடைய நண்பர்கள் யார் என்பத போன்ற சில குறிப்பிட்ட மேலோட்டமான விஷயங்களைத் தவிர எதுவும் பெரிதல்ல. நம்முடைய நடத்தை நம்முடைய மொத்த தலைமுறை, அல்லது நம்முடைய பாலினம், இனம், மதம் அல்லது நாம் எவ்வாறு அடையாளப் படுத்தப்படுகிறோமோ அவற்றில் பிரதிபலிக்கும் என்ற குறிப்பிட்ட எந்த அக்கறையும் இல்லை. நாம் சுய-கவுரவம் மற்றும் சுய-மரியாதையை இழக்கிறோம். 

பத்து அழிவுகரமான செயல்களின் பாரம்பரியப் பட்டியல்

உடல், பேச்சு மற்றும் மன ரீதியிலான பல்வேறு அழிவுகரமான செயல்கள் இருக்கின்றன. பௌத்தம் பத்து மிக தீங்கானவற்றை வரையறுக்கிறது. அவை தீங்கானவை ஏனெனில் அவை எப்போதும் குழப்பமான உணர்வுகள், வெட்கமின்மை, சங்கடமின்மை மேலும் அக்கறைப்படாமல் இருத்தல் உள்ளிட்டவற்றில் இருந்தே எழுகின்றன. ஆழமாக விதைக்கப்பட்டுள்ள பழக்கங்களில் இருந்து அவை வருகின்றன, இதன் விளைவு, எதிர்மறை போக்குகளை வலுப்படுத்துகின்றன. நீண்ட கால ஓட்டத்தில், நம்முடைய அழிவுகரமான நடத்தை மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையில் முடிகிறது மேலும் நமக்கு நாமே தொடர்ந்து பிரச்னைகளை உருவாக்குகின்றோம். 

மூன்று வகைகளான உடல் ரீதியான நடத்தை அழிவுகரமானது:

  1. பிறரின் வாழ்க்கையை பறித்தல் – பிறரை ஒன்றுக்கும் உதவாத சிறிய பூச்சி போல மாற்றுதல்- இதன் விளைவு, விரும்பத்தகாத எதையேனும் கண்டால் அதனை சகித்துக்கொள்ளம் தன்மை நமக்கு இல்லை; நமக்கு விருப்பம் இல்லாத ஒன்று என்றால் உடனடி பதில் அதனை அடிப்பது மற்றும் அழித்து விடுவது; அடிக்கடி நாம் சண்டையில் இறங்கிவிடுகிறோம்.   
  2. நமக்கு சொந்தமில்லாததை எடுத்தல் - திருடுதல், நாம் வாங்கிய ஏதோ ஒன்றை திருப்பித் தருவதில்லை, மற்றவர்களின் உடைமைகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவது உள்ளிட்ட பல.  இதன் விளைவு, நாம் எப்போதும் ஏழையாகவும் பாதிக்கப்பட்டவராகவும் உணர்வோம்; யாருமே நமக்கு எதையும் கடன் தர மாட்டார்கள்; மற்றவர்களுடனான நம்முடைய உறவானது பரஸ்பரம் சுரண்டலை முதன்மை அடிப்படையாகக் கொண்டிருக்கும். 
  3. தகாத பாலியல் நடத்தையில் ஈடுபடுதல் – பலாத்காரம், விபச்சாரம், உடலுறவு உள்ளிட்டவை. இதன் விளைவு, நம்முடைய பாலியல் உறவுமுறைகள் பெரும்பாலும் குறுகிய – காலம் மட்டுமே மேலும் நம்முடன் அடிக்கடி இணைபவர் ஒவ்வொரு விஷயத்தையும் புறக்கணிப்பார்; அடிப்படையில் இழிவான விஷயங்களால் நாம் ஈர்க்கப்படுகிறோம். 

அழிவுகரமான நான்கு வகை பேச்சு நடத்தைகள் உள்ளன:

  1. பொய் உரைத்தல் – தெரிந்தே எது உண்மையில்லையோ அதைச் சொல்வது, மற்றவர்களை தவறாக வழி நடத்துவது, உள்ளிட்டவை. இதன் விளைவு, நாம் என்ன சொன்னாலும் அதை யாரும் எப்போதும் நம்ப மாட்டார்கள் மேலும் நாமும் அவர்கள் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம்; யதார்த்தத்திற்கும் நம்முடைய சொந்த கட்டுக்கதைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை நம்மால் சொல்ல முடிவதில்லை.
  2. பிரிவு ஏற்படுத்தும் பேச்சு – ஒருவரை ஒருவர் விட்டுச் செல்லக் காரணமான வகையில் அவர்களைப் பற்றி மோசமான விஷயங்களைப் பேசுதல் அல்லது அவர்களின் எதிர்ப்பு அல்லது பிரித்தலை மோசப்படுத்துதல். இதன் விளைவு, நம்முடைய நட்பும் நீடித்திருக்கப் போவதில்லை ஏனெனில் அவர்களைப் பற்றியும் பின்னால் இப்படித் தான் பேசுவோம் என்று நம் நண்பர்கள் சந்தேகிக்கின்றன; நெருங்கிய நண்பர்களை இழக்கிறோம் அதனால் தனித்திருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் உணர்கிறோம். 
  3. கடுமையாகப் பேசுதல் – மற்றவர்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமாக சில விஷயங்களைப் பேசுதல். இதன் விளைவு, மக்கள் நம்மை வெறுக்கிறார்கள் மற்றும் நம்மை தவிர்க்கிறார்கள்; நம்முடன் இருந்தாலும் கூட, மற்றவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது மேலும் பெரும்பாலும் மோசமான விஷயங்களையே பின்னால் நமக்குச் சொல்வார்கள்; நாம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக தனித்திருப்பவர்களாக மாறுவோம். 
  4. அர்த்தமற்ற அரட்டைகள் – நம்முடைய சொந்த மற்றும் இதர மக்களின் நேரத்தை அர்த்தமற்ற அரட்டைகளால் வீணடிப்பது; மற்றவர்கள் ஏதேனும் நேர்மறையாக செய்து கொண்டிருக்கும் போது நம்முடைய அர்த்தமற்ற பேச்சால் மற்றவர்கள் இடத்தில் தலையிடுதல். இதன் விளைவு, யாருமே நம்மை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை; நம்முடைய கையில் வைத்திருக்கும் கருவியை ஒவ்வொரு சில நிமிடங்களும் சரிபார்க்காமல் எந்தப் பணியிலும் நம்மால் கவனத்தை திசைதிருப்பி வைத்திருக்க முடியாது; அர்த்தமுள்ள எதையும் நாம் செய்திருக்க முடியாது. 

மூன்று வகையான அழிவுகரமான சிந்தனைகள் இருக்கின்றன:

  1. பேராசையுடன் சிந்தித்தல் - பொறாமை காரணமாக, வேறொருவரிடம் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை அல்லது சில தரத்தை எவ்வாறு பெறுவது அல்லது இன்னும் சிறப்பாக அவற்றை விஞ்சுவது எப்படி என்று வெறித்தனமாக சிந்தித்து திட்டமிடுவது. இதன் விளைவு, நமக்கு எப்போதும் மன அமைதியோ அல்லது மகிழ்ச்சி உணர்வோ இருக்காது, ஏனெனில் நாம் எப்போதும் மற்றவர்களின் சாதனைகளைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களால் வேதனைப்படுகிறோம். 
  2. காழ்ப்புணர்ச்சியுடன் சிந்தித்தல் - வேறொருவரை எப்படி காயப்படுத்துவது அல்லது அவர்கள் சொன்ன அல்லது செய்த காரியத்திற்காக அவர்களை எவ்வாறு திரும்பப் பழிவாங்குவது என்று யோசித்து சதி செய்வது. இதன் விளைவு, நாம் எப்போதும் பாதுகாப்பாக உணர்வதில்லை அல்லது ஓய்வாக இருக்க முடிவதில்லை; நாம் தொடர்ந்து சித்தப்பிரமை மற்றும் பயத்தில் வாழ்கிறோம், மற்றவர்களும் நமக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று பயப்படுகிறோம். 
  3. சிதைந்துவிட விரோதத்துடன் சிந்தித்தல் - உண்மை மற்றும் சரியானது என்பதற்கு முரணான ஒன்றை பிடிவாதமாக நினைப்பது மட்டுமல்லாமல், நம்முடன் ஒத்துவராத மற்றவர்களுடன் நம் மனதில் வாதிடுவதும், அவர்களை ஆக்ரோஷமான முறையில் வீழ்த்துவதும் ஆகும். இதன் விளைவு, நாம் மேலும் அதிக குறுகிய –மனம் படைத்தவராகிறோம், ஏதேனும் உதவிகரமான ஆலோசனைகள் அல்லது அறிவுரையை முற்றிலும் ஏற்கும் மனப்பான்மை இல்லை; நம்முடைய இருதயமும் கூட மற்றவர்களுக்கு குறுகி விடுகிறது, எப்போதும் நம்மை பற்றி மட்டுமே சிந்தித்து நாம் மட்டுமே எப்போதும் சரியானவர் என நினைத்தல்; கடைசியில் நம்மிடம் புறக்கணிப்பும் முட்டாள்தனமும் மட்டுமே எஞ்சி இருக்கும். 

நம்முடைய மதங்களின் பின்னணி அல்லது நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பும் எவருக்கும் இந்த 10 கட்டுப்பாடுகள் பொருத்தமானது.

அழிவுகரமான நடத்தையின் பத்து பரந்துபட்ட வகைகள்

பத்து அழிவுகரமான செயல்கள் நாம் தவிர்க்க வேண்டிய பத்து பரந்துபட்ட வகைகளை பரிந்துரைக்கிறது. நம்முடைய நடத்தை மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி முடிந்த வரையில் நாம் பரந்துபட்ட பார்வையில் சிந்திக்க வேண்டும். அவை பற்றி சிந்திக்க இதோ சில உதாரணங்கள், ஆனால் நாம் ஒவ்வொருவரும் இந்தப் பட்டியலில் விரிவாக விளக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

  1. பிறரின் வாழ்க்கையை பறித்தல் -  அடித்தல் அல்லது மற்றவர்களை கடினமாக நடத்துதல், உடல் ரீதியிலான  பணியை ஒருவர் செய்து கொண்டிருக்கும் போது அந்த நபருக்கு உதவி தேவைப்படும் போது உதவி செய்ய மறுத்தல், உடல்நலமில்லாதவர் அல்லது வயது முதிர்ந்தவரோடு விரைவாக நடத்தல், மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல் மற்றும் புகைபழக்கம் இல்லாதவர்கள் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் புகைப்பது உள்ளிட்ட ஏதேனும் வகையான உடல் தீங்கை ஏற்படுத்துதல்.
  2. சொந்தமில்லாத ஒன்றை எடுத்தல் – இணையதளத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக தகவலை பதிவிறக்குவது, திருடுதல், ஏமாற்றுதல், வரி ஏய்ப்பு செய்தல், மற்றவர்களின் தனியுரிமையை ஆக்கிரமித்தல், மேலும் கேட்காமலே நம்முடைய இணை அல்லது நண்பர்களின் தட்டில் இருப்பவற்றை எடுத்த சுவைத்தலும் கூட இவற்றில் அடங்கும். 
  3. தகாத பாலியல் நடத்தையில் ஈடுபடுதல் – பாலியல் ரீதியில் ஒருவரை துன்புறுத்துதல், அன்பு செய்யும் போது நம்முடைய இணையரின் தேவையை புறக்கணித்தல், மிகக் குறைவான அல்லது அதீத பாசத்தை வெளிக்காட்டுதல். 
  4. பொய் உரைத்தல் - நம்முடைய உண்மையான உணர்வுகள் அல்லது அவர்களுடனான உறவில் நம்முடைய நோக்கங்களைப் பற்றி ஒருவரை ஏமாற்றுதல். 
  5. பிரிவுபடுத்தும் பேச்சு – யாரோ ஒருவர் சம்பந்தப்பட்ட அல்லது செய்யத் திட்டமிட்டுள்ள நேர்மறையான அல்லது நெறிமுறை நடுநிலையான ஒன்றை விமர்சித்தர் மற்றும் அதில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துதல்
  6. கடுமையாகப் பேசுதல் – மற்றவர்களிடம் கத்துதல், ஆக்ரோஷமான தொனியில் பேசுதல், உணர்வு ரீதியில் பாதிக்கப்படக் கூடியவரிடம் பரிதாபமற்ற மற்றும் தீவிரமாகச் பேசுவது, பொருந்தாத இடத்தில் அல்லது சரியில்லாத சமயத்தில் மோசமான அல்லது கிண்டல் மொழியில் பேசுதல். 
  7. அர்த்தமில்லாத அரட்டை – மற்றவர்களின் நம்பிக்கையை குறைத்தல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ரகசியங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துதல், அற்பமான விஷயங்கள் பற்றி தகவல் அனுப்புதல், குறிப்பாக நடுஇரவில், சமூக ஊடகத்தில் புகைப்படங்களை பதிவேற்றுவது மேலும் நம்முடைய அன்றாட வாழ்க்கை பற்றிய அற்பமான அம்சங்கள் பற்றி கருத்துகளைப் பகிர்வது, மற்றவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர்கள் முடிப்பதற்குள்ளாகவே தலையிடுவது, தீவிரமான விவாதங்களில் சிறுபிள்ளைத்தனமான கருத்துரைகள் அல்லது முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்வது. 
  8. பேராசையுடன் சிந்தித்தல் – உணவுவிடுதியில் நம்முடன் சாப்பிடும் நபர் அவர் ஆர்டர் செய்யும் உணவில் ருசி பார்க்க நமக்கு சிறிகு தர வேண்டும் என்று விரும்புவது, சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பார்க்கும் போதோ அல்லது பதிவுகளைப் படிக்கும் போது ஆச்சரியப்பட்டு, அவர்கள் எவ்வளவு அற்புதமான நேரத்தை கொண்டிருக்கிறார்கள் என்று கருதி நமக்கு நாமே சோகமாக உணர்தல் மற்றும் நாம் எப்படி பிரபலம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம் என்பதை எதிரி மனப்பான்மையுடன் சிந்தித்தல்.  
  9. காழ்ப்புணர்ச்சியுடன் சிந்தித்தல் – யாரோ ஒருவர் மோசமான ஒன்றை நம்மிடம் கூறினாலோ அல்லது நம்மிடம் கொடுமையாக நடந்து கொண்டாலோ நாம் நம்முடைய வார்த்தைகளை இழந்து அதன் பின்னர் நம்முடைய மனதிற்குள்ளேயே அந்த நபரை காயப்படுத்தும் விதமாக பதிலுக்கு நாம் என்ன சொல்லாம் என்ற சிந்தனை குடியேறிவிடும். 
  10. சிதைத்துவிடும் விரோதத்துடன் சிந்தித்தல் – எதிர்மறையாக சிந்தித்தல், யாரோ ஒருவர் கொடுப்பதைப் பற்றி அல்லது நம்மாலே கையாள முடியும் என்று நாம் விரும்பும் ஏதோ ஒன்றில் நமக்கு உதவ முயற்சிப்பது பற்றி விரோதமான சிந்தனைகள் மற்றும் தீங்கு இல்லாத சில பகுதிகளில் தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஒருவர் எவ்வளவு முட்டாள்தனமானவர் என்று நினைத்தல், ஆனால் அவற்றில் ஆர்வம் இருக்காது அல்லது அது முக்கியமில்லாதது என்று கருதுவது.   

நம்மை நோக்கி அழிவுகரமாக செயல்படுதல்

நம்முடைய நடத்தை மற்றவர்களை இலக்காகக் கொண்டதைப் போலவே நாம் நம்மை நோக்கிச் செயல்படும் வழிகளும் அழிவுகரமானவை. மகிழ்ச்சியான வாழ்வை வழிநடத்த, நாம் இந்த எதிர்மறை முறைகளை அடையாளம் கண்டு அதனை சரி செய்ய வேண்டும். மீண்டும், செயல்படும் பத்து அழிவுகரமான வழிகள் நாம் நிறுத்த வேண்டிய நடத்தையின் வகைகளை பரிந்துரைக்கிறது. 

  1. மற்றவர்களின் வாழ்வை பறித்தல் – அதிக வேலை செய்து உடல் ரீதியாக நம்மை நாமே வருத்திக் கொள்வது, மோசமாக உண்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் அல்லது போதுமான உறக்கத்தை பெறுவதில்லை.
  2. சொந்தமில்லாததை எடுத்தல் – அற்பமான விஷயங்களில் பணத்தை செலவரித்தல், அல்லது கஞ்சத்தனமாக இருத்தல் அல்லது நம்மால் வாங்க முடியாத போது நமக்கே மலிவாக செலவு செய்தல்
  3. தகாத பாலியல் நடத்தையில் ஈடுபடுதல் – நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாலியல் செயல்களில் ஈடுபடுதல், அல்லது ஆபாசப் படங்களை பார்த்து நம்முடைய மனதை சஞ்சலப்படுத்திக் கொள்வது. 
  4. பொய் உரைத்தல்  - நம்முடைய உணர்வுகள் அல்லது உந்துதல் பற்றி நம்மை நாமே ஏமாற்றுதல்
  5. பிரிவுபடுத்தும் பேச்சு – எப்போதும் புகார் கூறுவது போன்ற அருவறுப்பான வழியில் பேசுவது, இதனால் மற்றவர்கள் நம்முடன் இருப்பதை இன்பமாக காணமாட்டார்கள், அவர்கள் நம்முடைய நட்பை தவிர்ப்பார்கள். 
  6. கடுமையாகப் பேசுதல் – சொற்களாலே நம்மை நாமே துன்புறுத்துதல்
  7. வெட்டி அரட்டைகள் – நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள், சந்தேகங்கள் அல்லது கவலைகள் பற்றி பாகுபாடின்றி பேசுதல், அல்லது சமூக ஊடகத்தை பார்த்துக் கொண்டு மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவது, மனமில்லாமல் வீடியோ கேட்களை விளையாடுதல், அல்லது வலைதளத்தில் உளாவுதல்
  8. பேராசையுடன் சிந்தித்தல் - ஒரு பரிபூரணவாதி என்பதால் நம்மை எப்படி மிஞ்சுவது என்று பற்றி யோசித்தல்
  9. காழ்ப்புணர்ச்சியுடன் சிந்தித்தல் – நாம் எவ்வளவு பயங்கரமானவர் என்பது பற்றி சிந்தித்து குற்றஉணர்வு  கொண்டு மகிழ்ச்சியாக இருக்க நாம் தகுதியானவரல்ல என்று கருதுவது
  10.  சிதைத்துவிடும் விரோதத்துடன் சிந்தித்தல் – நம்மை நாமே முன்னேற்ற அல்லது பிறருக்கு உதவ முயற்சிக்கிறோம் நாம் முட்டாள் என்று நினைத்தல்

நம்முடைய அழிவுகரமான முறைகளை எவ்வாறு கையாள்வது?

கடந்த காலத்தில் நாம் நடந்து கொண்ட அனைத்து அழிவுகரமான வழிகளையும் பார்க்கத் தொடங்கினால், நம்மைப் பற்றியே எதிர்மறையாக உணர்வை தவிர்க்க வேண்டியது முக்கியம். குற்றஉணர்வால் பாதிக்கப்படுவதை விட, அறியாமையால் நாம் அதைச் செய்தோம் என்பதை அங்கிகரித்து நம்முடைய நடத்தையின் விளைவுகளால் அப்பாவியாக இருத்தல்: இயல்பாகவே நாம் மோசமானவரல்ல, நம்முடைய சிக்கலான உணர்வுகளால் வலுக்கட்டாயமாக இயக்கப்பட்டோம். நாம் என்ன செய்தோமோ அதைப் பற்றி வருத்தப்படுதல், அது நடந்திருக்கக் கூடாது என்று விரும்புதல், ஆனால் கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது என்பதை உணருங்கள். கடந்து போனதே கடந்த காலம் –ஆனால் இப்போது அந்த வகை நடத்தையை மீண்டும் செய்யாமல் இருக்க சிறந்த முயற்சி எடுப்பதே நாம் காணக் கூடிய தீர்வு. அதன் பின்னர் நாம் நம்முடைய வாழ்வில் புகுத்த முயற்சிக்கும் நேர்மறை திசையை மறு உறுதிப்படுத்துதல், மேலும் அன்பு மற்றும் இரக்கம் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய முடிந்த வரையில் முயற்சிகளை செய்ய ஈடுபடுதல். இது சமநிலைக்கு அதிக நேர்மறை பழக்கங்களை கட்டமைக்கிறது அதே சமயம் கட்டாயப்படுத்தும் எதிர்மறை சக்திகளை வெளியேற்றுகிறது. 

அதன் பின்னர் நாம் மக்களுக்கு அளிக்கும் பதிலை மற்றும் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகளை குறைக்கத் தொடங்குகிறோம், இதனால் நாம் உண்மையில் எப்படி செயல்பட்டோம் மற்றும் பழக்கத்திற்கு  மாறாக அழிவுகரமாக செயல்பட உணர்கிறோம் இரண்டிற்கும் இடையேயான இடைவெளியை எளிதில் கைப்பற்ற முடியும். நாம் அந்த நிமிடத்தை உதவிகரமானது என்ன, தீங்கானது என்ன என்பதை முடிவு செய்ய பயன்படுத்துவோம், அழிகரமான ஏதோ ஒன்றை  செய்தல், கூறுதல் அல்லது சிந்தித்தலில் இருந்து விலக்க நமக்கு உதவுகிறது. மிகப்பெரிய இந்திய பௌத்த குரு சாந்திதேவா பரிந்துரைத்தது போல, “ஒரு மரக்கட்டையைப் போல அமைதியாக இருங்கள்.”

நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் அப்படி செய்ய முடியும், ஆனால் புரிதல், அன்பு, இரக்கம் மற்றும் மரியாதையுடன் செய்ய வேண்டும். நாம் எதயும் அடக்கவில்லை, ஏனெனில் அவை நமக்கு ஆர்வம் மற்றும் பதற்றத்தையே உருவாக்கும். பின்னால் வருத்தப்படக் கூடிய ஏதோ ஒன்றை செய்யவோ அல்லது செய்யவோ இயக்கும் எதிர்மறை சக்தியை ஞானம் மற்றும் இரக்க மனமுடன் நம்மால் அகற்ற முடியும். அதன் பின்னர் நேர்மறை உணர்வுகள் மற்றும் புரிதல் அடிப்படையில் நாம் ஆக்கப்பூர்வமான விதத்தில் சுதந்திரமாக செயல்படுபவராக மாறுவோம். 

சுருக்கம்

அழிவுகரமான நடத்தையில் இருந்து நாம் விலகி விட்டால், அது நமக்கு மட்டும் பலன் தராது, மாறாக இறுதியில் அது நம்முடைய சுய- ஆர்வத்தில் இருக்கும். நம்முடைய சொந்த நடத்தை அதுவே நம்முடைய சொந்த மகிழ்ச்சியின்மைக்கான காரணம் என்பதை நாம் பார்த்தால், உண்மையில் இயல்பாகவே, அழிவுகரமான மற்றும் எதிர்மறை பழக்கங்கள் மற்றும் செயல்களைத் தவிர்ப்பதில் நம்மால் மகிழ்ச்சியடைய முடியும். நாம் இந்த பழக்கங்களை வலுப்படுத்துவதை நிறுத்தினால், மற்றவர்களுடனான நம்முடைய உறவுமுறைகள் முன்னேறும் மற்றும் அதிக நேர்மையானதாக மாறும், இதனால் நமக்குள்ளாகவே நாம் அமைதியை உணர்வோம். உண்மையில் நாம் மன அமைதியை விரும்பினால், அழிவுகரமான வழிகளில் செயல்படுதல், பேசுதல் மற்றும் சிந்தித்தலில் இருந்து நமக்கு நாமே விடுபட முயற்சி எடுக்கலாம். இவ்வாறு செய்வதனால் நம்முடைய வாழ்க்கைத் தரமானது மிகப்பெரிய முன்னேற்றத்தை காணும்.

Top