ஆன்மீக ஆசிரியருடன் கற்றல்

ஆன்மீக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பல நிலைகளில் உள்ளனர். திறனுள்ள மாணவர்கள் தாங்கள் அல்லது அவர்களின் ஆசிரியர்கள் உண்மையில் இருப்பதை விட உயர்நிலை தகுதி பெற்றவர்கள் என்று கற்பனை செய்வதாலோ, அல்லது ஆசிரியரை ஒரு சிகிச்சையாளராக பாவிக்கும் போதோ அதிக குழப்பம் மேலோங்குகிறது. நேர்மையான சுயபரிசோதனை மற்றும் யதார்த்தமான பரிசோதனை மூலம், நாம் ஒவ்வொருவரும் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தும் போது, ​​ஆரோக்கியமான மாணவர்-ஆசிரியர் உறவை உருவாக்க முடியும்.

ஆன்மீக மாணவர்-ஆசிரியர் உறவுமுறைப் பற்றிய அனுபவ உண்மைகள்

ஆன்மீக மாணவர்- ஆசிரியர் உறவுமுறையில் குழப்பத்தை தவிர்க்க, சில அனுபவ உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்:

  1. ஆன்மீகத்தை தேடுபவர்களில் பலர், ஆன்மீகப் பாதையில் ஒவ்வொரு நிலைகளாக முன்னேறிச் செல்கின்றனர். 
  2. பயிற்சியாளர்களில் பலர், தங்களின் வாழ்நாளில் சில ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, ஒவ்வொருவருடனும் வேறுபட்ட உறவுமுறைகளை கட்டமைக்கின்றனர். 
  3. ஆன்மீக ஆசிரியர்களை அனைவரும் ஒரே நிலையிலான சாதனையை அடையவில்லை. 
  4. ஒரு குறிப்பிட்ட தேடுபவருக்கும் ஆசிரியருக்கும் இடையே பொருத்தமான உறவுமுறையின் வகை என்பது ஒவ்வொருவரின் ஆன்மீக மட்டத்தைப் பொறுத்தது.
  5. மக்கள் ஆன்மிகப் பாதையில் முன்னேறிச் செல்லும் போது பொதுவாக தங்கள் ஆசிரியர்களுடன் படிப்படியாக ஆழமான நடத்தையில் தொடர்பு கொள்கிறார்கள்.
  6. ஏனெனில் ஒவ்வொரு தேடுபவரின் ஆன்மீக வாழ்விலும், அவர் வெவ்வேறு பாத்திரங்களாக இருக்கலாம், ஒவ்வொரு தேடல் கொண்டவரும்  அந்த ஆசிரியருடன் சரியான பொருத்தமான உறவுமுறையை கொண்டிருப்பது மாறுபடலாம்.

ஆன்முக ஆசிரியர்கள் மற்றும் ஆன்மீக தேடல் கொண்டவர்களின் நிலைகள்

ஆன்மீக மாணவர்கள் மற்றும் தேடல் கொண்டவர்கள் பல நிலைகளில் உள்ளனர். அவை:

  • பல்கலைக்கழகம் போல தகவலைக் கொடுக்க பௌத்த பேராசிரியர்கள் 
  • வாழ்வில் தர்மத்தை எப்படி செயல்படுத்துவது என்பதைக் காட்டும் தர்ம வழிகாட்டிகள்
  • tai-ch’I அல்லது யோகாவை ஒத்த முறைகளை போதிக்கும் தியான பயிற்றுநர்கள்
  • மாணவருக்கு வழங்கும் சபதங்களின் அளவைப் பொறுத்து ஆன்மீக வழிகாட்டிகள் வேறுபடுத்துகிறார்கள்: சாதாரண அல்லது துறவி சபதம், போதிசத்வா அல்லது தாந்த்ரீக சபதங்கள்.

அதே போன்று, 

  • பௌத்த மாணவர்கள் தகவலைப் பெற விரும்புகிறார்கள்
  • தர்மா பயிலும் மாணவர்கள் தர்மத்தை வாழ்வில் எப்படி செயல்படுத்துவது என்பதை கற்க விரும்புகிறார்கள்
  • தியானம் பயிற்சிக்கிறவர்கள் இளைப்பாற அல்லது மனதை பயிற்சிப்பதை கற்க விரும்புகின்றனர்.
  • சீடர்கள் எதிர்கால வாழ்க்கை மேம்பாடு, விடுதலையைப் பெற அல்லது ஞானமடைய விரும்புகின்றனர், இந்த இலக்குகளை அடைய உதவும் சில மட்டங்களிலான சபதங்களை ஏற்கவும் அவர்கள் தயாராக உள்ளனர். சீடர்கள் இந்த வாழ்நாளை மேம்படுத்த விரும்பினாலும், அவர்கள் இதை விடுதலை மற்றும் ஞானத்திற்கான பாதையில் ஒரு படிக்கல் என்று கருதுகின்றனர்.

ஒரு ஆன்மீகத் தேடல் கொண்டவருக்கு ஒவ்வொரு நிலையும் அதன் தகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது, மேலும் ஆசிரியரின் பின்புலமான அவர் ஆசிரியரா அல்லது மேற்கத்திய துறவியா, கன்னியாஸ்திரியா அல்லது சாமானியரா, அவரின் கல்வித் தரம், உணர்ச்சி மற்றும் நன்னெறி முதிர்வு நிலை, ஒரு செயலை செய்து முடிக்கக் கூடிய தின்மம் உள்ளிட்டவற்றையும் நாம் சுயமாக கருத்தில் கொள்ள வேண்டும். எனவே கவனமாகவும் மெல்லவும் காரியத்தை செயல்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

திறனுள்ள சீடர் மற்றும் ஆன்மீக ஆசிரியருக்கான தகுதிகள்

ஒரு திறனுள்ள சீடராக, நாம் நம்முடைய வளர்ச்சியின் நிலையை சொந்தமாக பரிசோதிக்க வேண்டும், இதனால் நாம் தயாராக இல்லாத போது ஒரு உறவுமுறையில் நம்மை நாமே ஈடுபடுத்திக் கொள்ள மாட்டோம். சீடருக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகளானவை:

  1. தங்களின் சுய முன்முடிவுகள் மற்றும் கருத்துகளோடு இணைந்திருக்காமல் திறந்த மனதுடன் இருத்தல்.
  2. எது சரி? எது தவறு? என்பதை வேறுபடுத்தும் பொது அறிவு.
  3. தர்மாவில் உறுதியான ஆர்வத்துடன் சரியான தகுதிமிக்க ஆசிரியரை கண்டறிதல்.
  4. தர்மம் மற்றும் சிறந்த தகுதி வாய்ந்த ஆசிரியருக்கான பாராட்டு மற்றும் மரியாதை.
  5. விழிப்புணர்வான நிலையில் மனம்.
  6. உணர்ச்சி முதிர்வு மற்றும் நிலைத்தன்மையின் அடிப்படை நிலை.
  7. நன்னெறி பொறுப்பிற்கான அடிப்படை அறிவு.

ஆசிரியரின் நிலை அடிப்படையில், அவருக்கு கூடுதல் தகுதிகள் தேவை. பொதுவாக, அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

  1. தங்களது ஆன்மீக ஆசிரியர்களுடன் ஆரோக்கியமான உறவுமுறையுடன் இருத்தல்.
  2. தர்மத்தைப் பற்றி மாணவரை விட கூடுதல் அறிவு
  3. அனுபவம் மற்றும் சில மட்டத்திலான வெற்றி முறைகளை தியானம் மற்றும் அன்றாட வாழ்வில் செயல்படுத்துதல்.
  4. தர்மத்தை வாழ்வில் செயல்படுத்துவதற்கான பலனுள்ள முடிவுகளை உந்துதலுக்கான உதாரணமாக பொறுத்தும் திறன். அதாவது இவற்றை கொண்டிருத்தல்:
  5. நன்னெறி சுய-ஒழுக்கம்
  6. உணர்ச்சி முதிர்வு மற்றும் ஸ்திரத்தன்மை, மொத்த உணர்ச்சி சிக்கல்களில் இருந்து சுதந்திரம் 
  7. மாணவர்கள் பயனடைவதற்கான உண்மையான அக்கறையை போதனைக்கு முதன்மை உந்துதலாகக் கொண்டிருத்தல்
  8. போதனையில் பொறுமை
  9. பாசாங்கு இல்லாமை (தன்னிடம் இல்லாத குணங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது) மற்றும் வெளிவேஷம் இல்லாதது (அறியாமை மற்றும் அனுபவமின்மை போன்ற அவரிடம் உள்ள குறைகளை மறைக்காமல் இருப்பது).

நமது நகரத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு எந்த அளவு தகுதி உள்ளது, எவ்வளவு நேரம் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளது, நமது ஆன்மீக நோக்கங்கள் என்ன (யதார்த்தமாக, "அனைத்து உணர்வுள்ள மனிதர்களுக்கு நன்மை பயக்க" மட்டும் அல்ல) உள்ளிட்ட- யதார்த்த சூழ்நிலைக்கு ஏற்ப நாம் விஷயங்களை பொருத்த வேண்டும். ஆன்மிக உறவில் ஈடுபடுவதற்கு முன், சாத்தியமான ஆசிரியரின் தகுதிகளை நாம் சரிபார்த்தால், ஆசிரியரை கடவுளாகவோ அல்லது பிசாசாகவோ கருதுவதை நாம் தவிர்க்கலாம். நாம் ஆன்மீக ஆசிரியரை கடவுளாக பாவிக்கும் போது, அப்பாவித்தனத்தால் நாமே துஷ்பிரயோகத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறோம். ஆசிரியரை பிசாசாகக் கருதினால், நம் சித்தப்பிரமையே நம்மை பலன் அடைய விடாமல் தடுக்கிறது.

ஆன்மீக வழிகாட்டியின் சீடாவதற்கும் சிகிச்சையளிப்பவரின் வாடிக்கையாளராக மாறுவதற்கும் இடையிலான வேறுபாடுகள்

ஆன்மீக – ஆசிரியர் உறவுமுறையில் குழப்பம் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய மூலாதாரமானது ஆன்மீக வழிகாட்டி சிகிச்சையாளரைப் போல இருக்க வேண்டும் என்கிற விருப்பம். எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னுடைய வாழ்வின் எஞ்சிய காலத்தில் மகிழ்ச்சியான உணர்வு மற்றும் நல்ல உறவுமுறையைப் பெற விரும்புகிறார். இந்த இலக்கை பல விதங்களில் அடைவதற்காக ஒரு ஆன்முக வழிகாட்டியின் சீடராக மாறுபவர் அதே நோக்கத்திற்காக ஒரு சிகிச்சையாளரிடம் சிகிச்சை பெறுபவராகவும் கருதுகிறார். 

பௌத்தமும் சிகிச்சையும்:

  1. நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை உணர்ந்து, அதைக் குறைக்க விரும்புவதில் இருந்து ஆரம்பியுங்கள்.
  2. நமது பிரச்சனைகள் மற்றும் அவற்றின் காரணங்களை அடையாளம் கண்டு புரிந்து கொள்ள ஒருவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பல வகையான சிகிச்சைகள், உண்மையில், பௌத்தத்தை புரிந்து கொள்வது சுய-மாற்றத்திற்கான திறவுகோலாக செயல்படுகிறது என்பதுடன் உடன்படுகிறது.
  3. நமது பிரச்சனைகளின் காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதை வலியுறுத்தும் சிந்தனைப் பள்ளிகளை ஏற்றுக்கொள்வது, இந்தக் காரணிகளை சமாளிக்க நடைமுறைகளை வலியுறுத்தும் மரபுகள் மற்றும் இரண்டு அணுகுமுறைகளின் சமநிலையான கலவையை பரிந்துரைக்கும் அமைப்புகள்.
  4. சுய-வளர்ச்சி செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாக வழிகாட்டி அல்லது சிகிச்சையாளருடன் ஆரோக்கியமான உணர்ச்சிபூர்வமான உறவை நிறுவ வாதாடுதல்.
  5. பெரும்பாலான பாரம்பரிய சிகிச்சை முறைகள் வாடிக்கையாளர்களின் நடத்தை மற்றும் சிந்தனை முறைகளை மாற்றியமைப்பதற்கான நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் தயங்கினாலும், ஒரு சில பிந்தைய பழங்கால பள்ளிகள் பௌத்தத்தில் உள்ளதைப் போன்ற நெறிமுறைக் கொள்கைகளை பரிந்துரைக்கின்றன. செயலற்ற குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிடமும் சமமாக நியாயமாக நடந்துகொள்வது மற்றும் கோபம் போன்ற அழிவுகரமான தூண்டுதல்களை செயல்படுத்துவதைத் தவிர்ப்பது போன்ற கொள்கைகளும் இதில் அடங்கும்.

ஒற்றுமைகள் இருந்தபோதிலும், ஒரு பௌத்த வழிகாட்டியின் சீடராக மாறுவதற்கும் சிகிச்சையாளரின் வாடிக்கையாளராகவும் மாறுவதற்கும் குறைந்தது ஐந்து குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன:

(1) ஒருவர் உறவுமுறையை நிறுவும் உணர்ச்சி நிலை. பொதுவாக பாதிக்கப்பட்டவர் உணர்ச்சி ரீதியில் தொந்தரவடைந்திருக்கும் போது சிகிச்சையாளரை அணுகுவார். அவர்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம், அதன் ஒரு பகுதியாக சிகிச்சைக்கு மருந்துகள் தேவைப்படலாம். இதற்கு மாறாக திறனுள்ள சீடர்கள், தங்களின் ஆன்மீகப் பாதைகளில் வழிகாட்டியுடன் உறவுமுறையை நிறுவுவதை முதல் நிலையாகக் கொள்ள மாட்டார்கள். அதற்கு முன்னர், அவர்கள் புத்தரின் போதனைகளைப் படித்து தங்களுக்குள்ளாகவே செயல்படத் தொடங்கி இருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் போதுமான அளவிலான உணர்ச்சி முதிர்வு மற்றும் நிலைத்தன்மையை அடைந்திருப்பார்கள் ஆதலால் சீடர் – வழிகாட்டி உறவுமுறையில் பௌத்த வகை அணுகுமுறையில் அவர்கள் ஆக்கப்பூர்வமானதை நிறுவி இருக்கிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், பௌத்த சீடர்கள் ஏற்கனவே நரம்பியல் அணுகுமுறைகள் மற்றும் நடத்தை தொடர்பானவற்றில் விடுபட்டிருக்க வேண்டும். 

(2) உறவுமுறையில் ஒருவர் எதிர்பார்க்கும் கருத்துப்பரிமாற்றம். சாத்தியமுள்ள பாதிக்கப்பட்டவர்கள் யாரோ ஒருவர் தங்களை கவனிக்க வேண்டும் என்பதில் பெரும்பாலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். எனவே, தங்களின் சொந்த பிரச்னைகள் மற்றும் குழு சிகிச்சையிலும் கூட சிகிக்கையாளர்கள் தங்கள் மீது ஒருநிலைப்படுத்திய கவனத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மற்றொருபுறம், பொதுவாக சீடர்கள் தங்களின் சொந்த பிரச்னைகளை வழிகாட்டிகளிடம் பகிர்ந்து கொள்ளாமலும் அதற்காக அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அல்லது கோரிக்கை வைக்கக் கூடாது. வழிகாட்டியை அவர்கள் தங்களின் சொந்த அறிவுரைக்காக கலந்தாலோசித்தாலும், அப்படிச் செய்வதை அவர்கள் வழக்கப்படுத்தக் கூடாது. அவர்களுக்குள்ளான உறவுமுறை என்பது போதனையை கேட்பதாக மட்டுமே இருத்தல் வேண்டும். பௌத்த சீடர்கள் தங்களின் வழிகாட்டிகளிடம் இருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கடந்து வருவதற்கான வழிமுறைகளை முதன்மையாக கற்றுக்கொள்கிறார்கள். பின்னர் சுய பொறுப்பேற்று அவற்றை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் செயல்படுத்தும் முறைகளாகக் கருதுகின்றனர். 

(3) செயல்படுகின்ற உறவுமுறையில் இருந்து எதிர்பார்க்கும் முடிவுகள்.  சிகிச்சையின் நோக்கமானது கற்றலை ஏற்றல் மற்றும் நம் வாழ்வில் பிரச்னைகளுடன் வாழ்தல், அல்லது அதனை பொறுத்துக்கொள்ளும் வகையில் அவற்றை குறைத்தல். இந்த ஜென்மத்தில் உணர்ச்சி நன்மையைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் பௌத்த ஆன்மீக வழிகாட்டியை அணுகும்போது, நம்முடைய பிரச்னைகள் குறைய வேண்டும் என்றும் கூட நாம் எதிர்பார்க்கலாம். வாழ்க்கை கடினமாக இருந்தாலும் - புத்தர் கற்பித்த வாழ்க்கையின் முதல் உண்மை மூலம் (உன்னதமான உண்மை) - நாம் அதை கடினம் குறைந்ததாக்கலாம். 

நம்முடைய வாழ்க்கையை உணர்வு ரீதியிலான கடினத்தை குறைத்தல், இருப்பினும் பண்டைய பௌத்த பாதையை அணுகுவதற்கு இது முதன்மை நிலை மட்டுமே ஆகும். ஆன்மீக வழிகாட்டிகளின் சீடர்கள் குறைந்த பட்சம் சாதகமான மறுபிறப்பு, விடுதலை மற்றும் அறிவொளி போன்ற பெரிய நோக்கங்களை நோக்கியே இருப்பார்கள். மேலும், பௌத்த சீடர்கள் பௌத்தத்தில் விளக்கப்பட்டுள்ளபடி மறுபிறப்பு பற்றிய அறிவார்ந்த புரிதல் மற்றும் அதன் இருப்பை குறைந்தபட்சம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்வார்கள். சிகிச்சை பெறுபவர்கள் மறுபிறப்பைப் பற்றியோ அல்லது அவர்களின் உடனடி சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கு அப்பால் உள்ள நோக்கங்களைப் பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

(4) சுய-மாறுதல் நிலைக்கான பொறுப்பு. சிகிச்சை பெறுபவர்கள் நேரத்திற்கான கட்டணத்தை செலுத்துவார்கள், ஆனால் வாழ்நாள் முழுமைக்கான அணுகுமுறை மற்றும் நடத்தை மாற்றத்தை தங்களுக்குள்ளாக ஏற்படுத்த பொறுப்பேற்பதில்லை. மற்றொருபுறம் பௌத்த சீடர்கள், போதனைகளுக்கு கட்டணம் செலுத்தலாம் அல்லது செலுத்தாமல் இருக்கலாம்; எப்படி இருந்தாலும், அவர்கள் தங்களின் வாழ்வின் திசையை மாற்றுகிறார்கள். பாதுகாப்பான திசையை (அடைக்கலம்) எடுப்பதன் மூலம், புத்தர்கள் முழுவதும் கடந்து பின்னர் போதித்த, ஆன்மீக சமூகத்தினர் பின்பற்றுவதற்கான உயர்நிலை உணர்தலை  தங்களுக்குள்ளாகவே சுய-முன்னேற்றத்திற்கு  பின்பற்றும் பொறுப்பை சீடர்கள் ஏற்கின்றனர். 

மேலும், பௌத்த சீடர்கள் வாழ்வில் நன்னெறி, ஆக்கபூர்வமான செயல், பேச்சு, சிந்தனை ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவர்கள் முடிந்தவரை, அழிவுகரமான வடிவங்களைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக ஆக்கபூர்வமானவற்றில் ஈடுபடவும் முயற்சி செய்கிறார்கள். சீடர்கள் கட்டுப்பாடற்ற மறுபிறப்பின் தொடர்ச்சியான பிரச்சனைகளில் இருந்து விடுதலையை மனதார விரும்பும்போது, அவர்கள் முறையாக சாதாரண அல்லது துறவற சபதங்களை மேற்கொள்வதன் மூலம் இன்னும் வலுவான அர்ப்பணிப்பை செய்கிறார்கள். சுய-வளர்ச்சியின் இந்த கட்டத்தில் உள்ள சீடர்கள், இயற்கையாகவே அழிவுகரமான அல்லது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக புத்தர் பரிந்துரைத்த குறிப்பிட்ட நடத்தைகளில் இருந்து எல்லா நேரங்களிலும் கட்டுப்படுத்தும் வாழ்க்கைக்கான சபதம் செய்கிறார்கள். பிந்தையதற்கு ஒரு உதாரணம், துறவிகள் பற்றுதலைக் குறைப்பதற்காக, சாதாரண உடையை கைவிட்டு, அதற்கு பதிலாக அங்கிகளை அணிவது. முழு விடுதலைக்கான விருப்பத்தை வளர்ப்பதற்கு முன்பே கூட, சீடர்கள் பெரும்பாலும் சாதாரண அல்லது துறவற சபதங்களை எடுக்கிறார்கள்.

மறுபுறம், சிகிச்சையாளர்களிடம் சிகிச்சை பெறுபவர்கள், சந்திப்பு நேரத்திற்கான ஐம்பது நிமிட அட்டவணையை வைத்திருப்பது போன்ற சிகிச்சை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சில நடைமுறை விதிகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், இந்த விதிகள் சிகிச்சையின் போது மட்டுமே பொருந்தும். அவை சிகிச்சை அமைப்பிற்கு வெளியே பொருந்தாது, இயற்கையாகவே அழிவுகரமான நடத்தையைத் தவிர்ப்பதில்லை, மேலும் அவை வாழ்நாள் முழுவதிற்குமாகதும் இல்லை.

(5) ஆசிரியர் அல்லது சிகிச்சையாளரை நோக்கிய அணுகுமுறை. சீடர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளை அவர்கள் அடைய முயற்சிக்கும் வாழ்க்கை உதாரணங்களாக பார்க்கிறார்கள். வழிகாட்டிகளின் நல்ல குணங்களை சரியான முறையில் அங்கீகரிப்பதன் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கருதுகிறார்கள், மேலும் அறிவொளிக்கான அவர்களின் தரப்படுத்தப்பட்ட பாதை முழுவதும் இந்த பார்வையை வைத்துக்கொண்டு அதனை வலுப்படுத்துகிறார்கள். இதற்கு நேர்மாறாக, சிகிச்சை பெறுபவர்கள் தங்கள் சிகிச்சையாளர்களை உணர்ச்சி ஆரோக்கியத்திற்கான மாதிரிகளாகக் கருதலாம், ஆனால் சிகிச்சையாளர்களின் நல்ல குணங்களைப் பற்றிய சரியான விழிப்புணர்வு அவர்களுக்குத் தேவையில்லை. சிகிச்சையாளராக மாறுவது உறவின் நோக்கம் அல்ல. சிகிச்சையின் போது, சிகிச்சையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இலட்சியங்களின் கணிப்புகளுக்கு அப்பால் வழிநடத்துகிறார்கள்.

"சீடர்" என்ற வார்த்தையின் பொருத்தமற்ற பயன்பாடு

சீடர்கள், ஆசிரியர்கள் அல்லது இருவரும் விதிமுறைகளின் சரியான அர்த்தத்தை நிறைவேற்றுவிதில் குறைபாடுடையவர்கள் சில நேரங்களில்,சிலர் சீடர்கள், ஆசிரியர்கள் அல்லது இருவரும் விதிமுறைகளின் சரியான அர்த்தத்தை நிறைவேற்றுவதில் குறைபாடுடையவர்கள் என்கிற உண்மைக்கு மாறாக தங்களை ஆன்மீக வழிகாட்டிகளின் சீடர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் அப்பாவித்தனம் பெரும்பாலும் அவர்களை நம்பத்தகாத எதிர்பார்ப்புகள், தவறான புரிதல்கள், புண்படுத்தும் உணர்வுகள் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு இட்டுச் செல்கிறது. இந்தச் சூழலில், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது என்பது, பாலியல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ சுரண்டப்படுவது அல்லது அதிகாரத்தை வெளிப்படுத்தும் ஒருவரால் தவறாக வழிநடத்தப்படுவது. மேற்கு நாடுகளில் காணப்படும் மூன்று பொதுவான போலி சீடர்களை ஆராய்வோம், குறிப்பாக ஆன்மீக ஆசிரியர்களுடன் பிரச்சனைகளுக்கு ஆளாகிறவர்கள்.

(1) சிலர் தர்ம மையங்களுக்கு தங்களின் கற்பனைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வருகின்றனர். மர்மமான கிழக்கு அல்லது சூப்பர்ஸ்டார் குருக்கள் பற்றி எதையோ அவர்கள் படித்தோ கேட்டோ இருக்கின்றனர், ஒரு கவர்ச்சியான அல்லது மாய அனுபவத்தைப் பெறுவதன் மூலம் அவர்களின் வெளித்தோற்ற உற்சாகமற்ற வாழ்க்கையைக் கடக்க விரும்புகின்றனர். அவர்கள் ஆன்மீக ஆசிரியர்களைச் சந்தித்து உடனடியாக தங்களை சீடர்கள் என்று அறிவித்துக் கொள்கிறார்கள், குறிப்பாக ஆசிரியர்கள் ஆசியர்களாக, அங்கிகள் அணிந்தவர்களாக அல்லது இரண்டு ஒன்று சேர்ந்தவர்களாக இருந்தால் இப்படிச் செய்கின்றனர். அவர்கள் மேலங்கிகளை அணிந்தாலும் இல்லாவிட்டாலும், ஆசியப் பட்டங்கள் அல்லது பெயர்களைக் கொண்ட மேற்கத்திய ஆசிரியர்களுடன் ஒத்த நடத்தைக்கு ஆளாகிறார்கள்.

இத்தகைய தேடுபவர்களின் அமானுஷ்யத்திற்கான தேடலானது, ஆன்மீக ஆசிரியர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளை அடிக்கடி சீர்குலைக்கிறது. அவர்கள் தங்களைத் தகுதியான வழிகாட்டிகளின் சீடர்களாக அறிவித்துக் கொண்டாலும், கற்பனையில் தவிர, இயற்கைக்கு அப்பாற்பட்ட எதுவும் நடக்கவில்லை என்பதை உணரும்போது அவர்கள் பெரும்பாலும் இந்த ஆசிரியர்களை விட்டு வெளியேறுகிறார்கள். மேலும், "உடனடி சீடர்களின்" நம்பத்தகாத அணுகுமுறைகளும் அதிக எதிர்பார்ப்புகளும் பெரும்பாலும் அவர்களின் விமர்சன திறன்களை மறைக்கின்றன. அத்தகைய நபர்கள் குறிப்பாக ஒரு நல்ல செயலைச் செய்வதில் புத்திசாலித்தனமான ஆன்மீகவாதிகளால் ஏமாற்றப்படுவார்கள்.

(2) மற்றவர்கள் மையங்களுக்கு உணர்ச்சி அல்லது உடல்ரீதியிலான வலியை கடக்க வேண்டிய உதவியை நாடி வரலாம். அவர்கள் பல்வேறு சிகிச்சை முறைகளை முயற்சித்து அது பலனளிக்காமல் இருந்திருக்கலாம். இப்போது அவர்கள் நோய்தீர்ப்பவர்/மந்திரவாதியிடம் இருந்து ஒரு அதிசய தீர்வை தேடி வந்திருக்கலாம். தங்களுக்கு ஆசீர்வாத மருந்தை கொடுக்கவோ, சிறப்பு பிரார்த்தனை அல்லது மந்திரத்தை மீண்டும் சொல்லவோ அல்லது ஒரு லட்சம் சிரம் பணிவது போன்ற வலிமையான பயிற்சியையோ கொடுத்தால், அவர்கள் தங்களை சீடர்களாக அறிவித்துக்கொள்வார்கள். அவர்கள் குறிப்பாக அமானுஷ்யத்தின் தேடலில் உள்ள மக்களை கவர்ந்திழுக்கும் அதே வகையான ஆசிரியர்களிடம் திரும்புகிறார்கள். அதிசயங்களைத் தேடுபவர்களின் "சரிசெய்தல்" மனப்பான்மை, தகுதிவாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பின்பற்றும்போது பெரும்பாலும் ஏமாற்றம் மற்றும் விரக்திக்கு வழிவகுக்கிறது. தகுதிவாய்ந்த வழிகாட்டிகளின் ஆலோசனையைப் பின்பற்றும் போது கூட அற்புதமான குணங்கள் ஏற்படாது. ஒரு "சரி செய்தல்" மனப்பான்மை ஆன்மீக கயவர்களிடமிருந்து துஷ்பிரயோகத்தை ஈர்க்கிறது.

(3) இன்னும் சிலர், குறிப்பாக ஏமாற்றமடைந்த, வேலையில்லாத இளைஞர்கள், இருத்தலியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான நம்பிக்கையில் மதப் பிரிவுகளின் தர்ம மையங்களுக்கு வருகிறார்கள். "ஆன்மீக பாசிச" வழிகளைப் பயன்படுத்தி கவர்ந்திழுக்கும் மெகாலோமேனியாக்கள் அவர்களை ஈர்க்கின்றது. அவர்கள் தங்கள் பிரிவினருக்கு முழு விசுவாசத்தைக் கொடுத்தால், அவர்கள் சீடர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எண்ணிக்கையில் பலத்தை உறுதியளிக்கிறார்கள். அவர்கள் எதிரிகளை, குறிப்பாக தாழ்ந்த, தூய்மையற்ற பௌத்த மரபுகளைப் பின்பற்றுபவர்களை அடித்து நொறுக்கும் கடுமையான பாதுகாவலர்களின் வியத்தகு விளக்கங்களுடன் சீடர்களை மேலும் கவர்ந்திழுக்கின்றனர்.

ஸ்தாபகத் தந்தைகளின் இயக்கங்களின் அதிதீவிர மனித சக்திகளின் மகத்தான கதைகளுடன், ஆன்மீக உரிமையின் நிலைகளுக்கு அவர்களை உயர்த்தும் ஒரு வலிமைமிக்க தலைவரின் சீடர்களின் கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். இந்த வாக்குறுதிகளுக்கு பதிலளிப்பதன் மூலம், அத்தகையவர்கள் தங்களை சீடர்கள் என்று விரைவாக அறிவித்து, சர்வாதிகார ஆசிரியர்கள் தங்களுக்கு என்ன அறிவுறுத்தல்கள் அல்லது கட்டளைகளை வழங்கினாலும் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். இதன் முடிவுகள் பொதுவாக பேரழிவு தரும்.

சுருக்கம்

சுருக்கமாகச் சொன்னால், பௌத்த மையத்தில் கற்பிக்கும் அனைவரும் உண்மையான ஆன்மீக வழிகாட்டிகளாக இல்லை என்பது போல, ஒரு மையத்தில் படிக்கும் அனைவரும் உண்மையான ஆன்மீக சீடர்கள் அல்ல. வழிகாட்டி மற்றும் சீடர் ஆகிய இரண்டு சொற்களின் துல்லியமான பயன்பாடு நமக்குத் தேவை. இதற்கு ஆன்மீக நேர்மை மற்றும் பாசாங்குஇன்மை தேவை.

Top