சமநிலைப்படுத்துதல் மற்றும் சுயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்

இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், சென்ஷாப் செர்காங் ரின்போச் முனைவர். பெர்சினுக்கு இந்த போதனையை சொல்லிக் கொடுத்து, ஒவ்வொன்றையும் வார்த்தை மாறாமல் எழுதிக் கொண்டு அவருடைய மிக முக்கியமான போதனையாக இதனை பாதுகாத்து வைக்கச் சொல்லி இருக்கிறார். நம்முடைய மகிழ்ச்சியின்மை மற்றும் பிரச்னைகள் – நம்முடைய சுய- போற்றுதலுக்கான மிகப்பெரிய ஆதாரனமானவற்றை வெல்வதற்கான தியானங்களை இது மிக நுணுக்கமாக விவரிக்கிறது அதற்குப் பதிலாக மற்றவர்களுக்கான போற்றுதலை உண்மையாக வளர்க்கும் நடைமுறையே, அனைத்து மகிழ்ச்சிக்கான ஆதாரம் என்பதையும் உணர்த்துகிறது.

போதிசிட்டாவை எப்படி வளர்ப்பது என்பதற்கு இரண்டு பாரம்பரியங்கள் இருக்கின்றன, மனதார மற்றவர்களுக்கு அர்ப்பணித்து மற்றவர்கள் முடிந்த வரையில் அதிக பலனைப்பெறும் வகையில் ஞானத்தை அடைதல் – ஏழு பகுதி காரணம் மற்றும் விளைவு பாரம்பரியத்தோடு நம்முடைய அணுகுமுறையை சுயம் மற்றும் மற்றவர்களை நோக்கி பரிமாறுதல் மற்றும் சமநிலைப்படுத்தும் பாரம்பரியம் ஆகும். முதல்நிலையில் ஒவ்வொன்றும் தனித்தனியான அல்லது அமைதியை வளர்ப்பதற்கு தனித்துவமான வழியை கொண்டிருக்கின்றன. பெயரளவில் அமைதி என்ற ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொன்றும் வளர்க்கும் அமைதி வகையானது வித்தியாசமானதாகும். 

  1. ஏழு பகுதி காரணம் மற்றும் விளைவு தியானத்தில் ஒவ்வொருவரும் நம்முடைய தாய்மார்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்வதற்கு முன்னர் வரக்கூடிய அமைதியானது நண்பராக, எதிரியாக மற்றும் அறியாதவரை காட்சிப்படுத்துவதையும் உள்ளடக்கியதாகும் மேலும் இந்த சாந்தத்துடன் நாம் பற்றுதல் மற்றும் வெறுப்பு உணர்வுகளை நிறுத்தலாம்.அவற்றில் ஒன்று, உண்மையில்,”சாதாரண அமைதியுடன் நண்பர்கள், எதிரிகள் மற்றும் அறியாதவர்களுடனான இணைப்பு மற்றும் வெறுப்பு உணர்வை நிறுத்துதலாகும்.” சாதாரண என்ற இந்த வார்த்தையானது மேலும் இன்றியமையாத இரண்டாவது வழிமுறை இருப்பதை குறிக்கிறது.

    முதல் வகையான அமைதிக்கான மற்றொரு பெயரானது “சாதாரண அமைதி அதாவது ஷ்ரவகாக்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களுடன் பொதுவாக சாந்தத்தை வளர்க்கும் வழி.” ஷ்ரவகாக்கள் (கவனிப்பவர்கள்) மற்றும் பிரத்யேகபுத்தர்கள் (சுய – பரிணமிப்பாளர்கள்) ஹினாயனா(மிதமான வாகனம்) பௌத்த போதனைகளின் இரண்டு வகையான பயிற்றுநர்களாவர். இங்கே, சாதாரண என்பது இவ்வகையான அமைதியுடன், நம்மால் முழு மன ஈடுபாட்டுடன் போதிசிட்டாவை கொண்டிருக்க முடியாது. 
  2. அமைதியை வளர்க்க முதலில் நம்முடைய அணுகுமுறைகளை சுயத்தையும் மற்றவர்களை நோக்கியும் பகிர்ந்து சமநிலைப்படுத்துவது மேலே சொல்லப்பட்ட சாதாரண அமைதி வகையல்ல. அந்த அமைதியுடன் நம்முடைய பலனும் சேர்ந்து அனைத்து உயிரினங்களுக்கும் உதவி அவற்றின் பிரச்னைகளை நீக்கும் செயலை உள்ளடக்கிய  சிந்தனைகள் அல்லது செயலில் நெருக்கமான அல்லது தூரமான உணர்வை கொண்டிருக்கமாட்டோம். இது அமைதியை வளர்ப்பதற்கான குறிப்பாக தனித்துவமான, அசாதாரணமான மகாயான (பரந்த வாகனம்) வழியாகும்.

சாதாரண சமநிலை

ஏழு பகுதி காரணம் மற்றும் விளைவு தியானத்தில் ஒவ்வொருவரும் நம்முடைய தாய்மார்களாக இருந்தார்கள் என்பதை உணர்வதற்கு முன்னர் வரக்கூடிய சமநிலையை வளர்க்கும் வழி என்ன என்று நாம் கேட்டால், அது கீழ் வரும் நிலைகளை உள்ளடக்கியதாகும். 

மூன்று நபர்களின் காட்சிப்படுத்துதல்

முதலில் நாம் மூன்று நபர்களை கற்பனை செய்வோம் : நாம் விரும்பாத முற்றிலும் மோசமான மற்றும் மகிழ்ச்சியில்லாத நலர் அல்லது யாரை நாம் எதிரியாகக் கருதுகிறோமோ அவர், நம்முடைய மிக விருப்பமான அன்பானவர் அல்லது நண்பர், அல்லது அந்நியர் அல்லது இது போன்ற எந்த உணர்வுகளும் இல்லாத ஒருவர். இந்த மூன்று பேரையும் ஒரு சேர நாம் கற்பனை செய்வோம். 

ஒவ்வொருவர் மீதும் கவனத்தை செலுத்தும் போது பொதுவாக என்ன விதமான அணுகுமுறை எழுகிறதுதுவாக என்ன விதமான அணுகுமுறை எழுகிறது? நாம் விரும்பாதவரிடம் மகிழ்ச்சியின்மை, சவுகரியமின்மை மற்றும் வெறுப்பு உணர்வு எழுகிறது. மிகவும் பிடித்த நண்பரிடம் ஈர்ப்பு மற்றும் இணைப்புக்கான உணர்வு எழுகிறது. அந்நியர் கவர்ச்சிகரமாகவோ அல்லது வெறுக்கத்தக்கவராகவோ இல்லை என்பதால், உதவவோ அல்லது தீங்கு செய்யவோ விரும்பாத ஒரு அலட்சிய உணர்வு, அறியாதவரிடத்தில் எழுகிறது.

நாம் வெறுக்கும் ஒருவரிடம் இருந்து வெறுப்பை நிறுத்துதல்

கலந்துரையாடலை எளிதாக்குவதற்காக, இந்த மூன்று நபர்களும் பெண் என்று நாம் கற்பனையில் வைத்துக்கொள்வோம். முதலில் நாம் விரும்பாத, நாம் எதிரி என்று கருதக்கூடிய ஒரு நபரை நோக்கி செயலாற்றுவோம்.

  1. அவளை விரும்பத்தகாத, வெறுப்பானவராக்கும் உணர்வை நாம் தோன்றச் செய்கிறோம். அது தெளிவாக எழும் போது,
  2. அதாவது அவளுக்கு மோசமான ஏதாவது நடந்தால் நல்லது என்று நினைப்பது, அல்லது அவள் விரும்பாத ஒன்று அவளுக்கு நடக்கும் போது அவள் அனுபவிக்கும் போது, மேலும் ஒரு உணர்வு எழுவதை நாம் கவனிக்கலாம்.
  3. பின்னர் இந்த மோசமான உணர்வுகள் மற்றும் விருப்பம் எழுவதற்கான காரணங்களை நாம் பகுப்பாயலாம். பொதுவாக இது ஏன் நடக்கிறது என்றால் அவள் நம்மை நோகச் செய்திருக்கலாம், நமக்கு தீங்கு செய்திருக்கலாம், நம்மிடமோ நம்முடைய நண்பர்களிடமோ மோசனமாவற்றை பேசியதன் விளைவு இது என்பதை நாம் கண்டறியலாம். அதனால் தான் அவளுக்கு கெட்டதோ அல்லது அவள் பெற விரும்பாத ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். 
  4. இப்போது, நாம் மிகவும் வெறுக்கும் அந்தப் பெண்ணிற்கு மோசமான எதாவது நடக்க வேண்டும் என்று விரும்புவதற்கான காரணம் குறித்து சிந்திப்போம் உண்மையில் அது நல்ல காரணம் தானா என்பதையும் நாம் சரிபார்க்க வேண்டும். அவற்றை கீழே உள்ளவற்றின் அடிப்படையில் கணிக்கலாம்:
    • என்னுடைய இந்த விரோதியே கடந்த காலங்களில் என்னுடைய தாயாக தந்தையாக, என்னுடைய உறவினர் மற்றும் நண்பராக கூட இருந்திருக்கலாம். அவள் எனக்கு எண்ணிலடங்கா முறையில் மிக உதவிகளை செய்திருக்கலாம். 
    • இந்த ஜென்மத்தில் என்ன நடக்கிறது என்பது நிச்சயம் இல்லாதது. பின்னர் கூட அவள் நமக்கு நல்ல உதவி செய்யும் சிறந்த நண்பராக மாறலாம். இது போன்ற விஷயங்கள் நடக்கவும் சாத்தியம் இருக்கிறது. 
    • ஏதோ ஒரு விதத்தில், நானும் அவளும் முடிவில்லாத எதிர்காலத்தை கொண்டிருக்கப் போகிறோம் இது முற்றிலும் நிச்சயமில்லாதது அவள் எதிர்காலத்தில் சில காலங்கள் என்றுடைய தாய் அல்லது தந்தையாக இருக்கலாம். இப்போது வரை, அவள் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கப் போகிறாள் என்னுடைய அனைத்து நம்பிக்கையையும் அவள் மீது நான் வைக்க வேண்டும். எனவே, கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலத்தில், அவள் இருந்திருக்கிறாள், இருக்கிறாள் மற்றும் எதிர்காலத்திலும் எண்ணிலடங்கா விதங்களில் உதவி செய்யப் போகிறாள், கடைசியில் அவள் என்னுடைய நல்ல தோழி. இந்த முடிவு நிச்சயமானது. அதனால் இந்த ஜென்மத்தில் அவள் சிறிதளவில் காயப்படுத்தினாள் என்ற சின்ன காரணத்திற்காக அவளை என்னுடைய எதிரியாகக் கருதி அவளுக்கு தீங்கு ஏற்பட விரும்புதை எப்போதும் செய்யக் கூடாது. 
  1. சில உதாரணங்கள் பற்றி நாம் சிந்திக்கலாம். உதாரணமாக, ஒரு வங்கி அதிகாரியோ அல்லது பணம் படைத்த சக்தி வாய்ந்த நபரோ எனக்கு ஏராளமான பணத்தை கொடுக்கிறார் அவருக்கு அப்படி செய்வதற்கான ஆசையும் நோக்கமும் இருக்கிறது, கடந்த காலத்தில் அவர் சிறிதேனும் கஷ்டப்படுத்தி இருக்கிறார், பொறுமையை இழந்து ஒரு நாள் கோபப்பட்டு என்னை கன்னத்தில் அறைந்திருக்கிறார். நானும் கோபமடைந்து என்னுடைய சீற்றத்தில் பிடிமானமாக இருந்தால், அது அவர் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை இழக்கச் செய்யும். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு வேறு யாருக்காவது பணத்தை கொடுப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. மற்றொரு புறம், அந்த அறையை என்னால் தாங்கிக் கொள்ள முடிந்து, என்னுடைய கண்களை கீழ் நோக்கி, வாயை மூடிக்கொண்டு இருந்தால், அவர் என் மீது மேலும் இறக்கப்படுவார் அதன் பின்னர் நானும் வருத்தமடையமாட்டேன்.  முதலில் கொடுக்க நினைத்ததை விட இப்போது மேலும் அதிகமாகக் கூட அவர் கொடுக்கலாம். எப்படி இருந்தாலும் நான் கோபப்படாமல் பெரிய நிகழ்வை உருவாக்காமல் இருந்தால் “வாய்க்கு எட்டியதை நாக்கு தள்ளிவிட்டது” என்ற திபெத்திய பழமொழியைப் போல ஆகிவிடும். 
  2. எனவே, நான் வெறுப்பவருடனான நீண்ட கால பயணத்தை நான் கருத்தில் கொள்ள வேண்டும், அதுவே அனைத்து வரையறுக்கப்பட்ட உயிர்களுக்கும் பொருந்தும் சரியானதாகும். நீடித்த காலத்தில் அவர்களின் உதவியானது 100% நிலையானது. எனவே, யாரோ ஒருவர் எனக்கு செய்த தீங்கு சில சிறிய, அற்பமான விஷயங்களுக்காக என் கோபத்தில் பிடிமானமாக இருப்பது முற்றிலும் பொருத்தமற்றது.
  3. அடுத்ததாக, நாம் ஒரு தேள், வனவிலங்கு அல்லது பேய்க்கு ஒரு சிறிய துன்பம் அல்லது குடைச்சல் கொடுத்தால் அது எப்படி உடனடியாக தாக்குகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவற்றைப் போன்று நாமும் நடந்து கொள்வது எவ்வளவு பொருத்தமற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்விதத்தில் நாம் நம்முடைய கோபத்தை தணிக்கலாம். இந்த நபர் நமக்கு என்ன தீங்கு செய்திருக்கிறார் என்பதைப் பற்றி சிந்திப்பதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை, நான் என்னுடைய பொறுமையை இழந்து கோபப்பட மாட்டேன், இல்லாவிட்டால் நான் வனவிலங்கு அல்லது ஒரு தேளைவிட சிறந்தவனாகி இருக்க முடியாது. 
  4. இறுதியாக, இவை அனைத்தையும் தர்க்க வடிவத்தில் பொருத்திப் பார்க்கிறோம். அவர்கள் எனக்கு தீங்கு செய்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக மற்றவர்களிடம் கோபப்படுவதை நான் நிறுத்திக்கொள்ள வேண்டும், ஏனெனில்: 
    • கடந்த ஜென்மத்தில், அவர்கள் என்னுடைய பெற்றோர்களாக இருந்திருக்கலாம். 
    • இந்த ஜென்மத்தில், பின்னர் அவர்கள் என்னுடைய நேசத்திற்குரிய நண்பர்களாக மாட்டார்கள் என்பதற்கு எந்த நிச்சயத்தன்மையும் இல்லை. 
    • எதிர்காலத்திலும், சில காலத்தில் அல்லது மறுபிறப்பில் அவர்கள் என்னுடைய பெற்றோராக இருந்து எனக்கு மிகப்பெரிய உதவி செய்யலாம், எனவே முக்காலங்களிலும் அவர்கள் எனக்கு மிக உதவிகரமாக இருந்திருக்கலாம். 
    • பதிலுக்கு நானும் கோபப்பட்டால், காட்டு விலங்கிற்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, இந்த ஜென்மத்தில் அவர் எனக்கு செய்த தீங்கிற்காக அவர் மீது கோபப்படுவதை நான் நிறுத்திக் கொள்கிறேன். 

நாம் விரும்பும் ஒருவருடனான பற்றுதலை நிறுத்துதல்

  1. நாம் முதலில் கற்பனை செய்தது போல எதிரி, நண்பர் மற்றும் அந்நியர் இருக்கும் குழுவில் நாம் நம்முடைய நண்பர் அல்லது விருப்பமான ஒருவர் மீது கவனம் செலுத்துகிறோம். 
  2. அவளுக்கான பற்றுதல் மற்றும் ஈர்ப்பு உணர்வை எழச்செய்கிறோம். 
  3. நாம் எவ்வளவிற்கு எவ்வளவு இவளுடன் இருக்கிறோமோ அவ்வளவு உறுதியானவனாக நம்மை நாமே உணரச் செய்வது,
  4. அதன் பின்னர் நாம் அவ்விதமான மையல் மற்றும் பற்றுதலை கொண்டிருப்பதற்கான காரணத்தை பகுப்பாய்கிறோம். இந்த உணர்வு எதனால் என்றால் இந்த ஜென்மத்தில் அவள் எனக்கு ஏதேனும் சிறிய உதவியை செய்திருக்கிறார், எனக்காக நல்லது எதையோ செய்து, என்னை நல்ல விதமாக உணரச் செய்திருக்கிறார் அல்லது அது போன்ற ஏதோ ஒன்று, அதனால் நான் அவளால் ஈர்க்கப்படுகிறேன் அல்லது பற்றுதல் கொண்டிருக்கிறேன். 
  5. அது போன்ற உணர்வை கொண்டிருப்பது சரியான காரணம் தானா என்பதை இப்போது நாம் பகுப்பாய்வோம். அதுவும் நல்ல காரணம் அல்ல, ஏனெனில்:
      • சந்தேகமே இல்லாமல் கடந்த ஜென்மங்களில், அவள் என்னுடைய எதிரியாக இருந்து, எனக்கு தீங்கு ஏற்படுத்தி இருக்கலாம், மேலும் என்னுடைய சதையை உண்டு ரத்தத்தைக் கூட குடித்திருக்கலாம். 
      • இந்த ஜென்மத்தில், அவள் எனக்கு மோசமான எதிரியாகப் போகிறாள் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. 
      • எதிர்காலத்திலும் கூட, நிச்சயமாக அவள் எனக்கு தீங்கு செய்யப் போகிறாள் அல்லது மோசமான எதையோ ஏதோ ஒரு காலகட்டத்தில் செய்யப் போகிறாள் என்பதும் தீர்மானிக்கப்பட்டதே. 
  1. இந்த ஜென்மத்தில் அவள் ஏதோ நல்லது செய்கிறாள் என்ற சிறிய காரணத்திற்காக, அற்பமான விஷயத்திற்காக, நான் மையல் கொண்டு அவள் மீது பற்றுதல் கொண்டால், மாயக்கன்னிகளின் பாடலால் வசீகரிக்கப்படும் ஆணை விட நான் சிறந்தவனல்ல. இந்த மாயக் கன்னிகள் அழகான தோற்றம் கொண்டு, ஆண்களை தங்கள் வழியில் வீழ்த்தி பின்னர் அவர்களை விழுங்கிவிடுவார்கள்.
  2. இந்த ஜென்மத்தில் அவனோ அல்லது அவளோ செய்த சிறிய நல்ல விஷயத்திற்காக நாம் பற்றுதல் கொண்டவராக மாறக் கூடாது என்று இந்த விதத்தில் தீர்மானிப்போம். 

நடுநிலையாக இருக்கும் ஒருவரை அலட்சியப்படுத்துதலை நிறுத்துதல்

மூன்றாவதாக, நம்முடைய நண்பராகவும், எதிரியாகவும் இல்லாமல் இடைப்பட்டு இருக்கும் அந்நியருடன் இதே நடைமுறையை நாம் பின்பற்றுதல். 

  1. நம்முடைய கற்பனையில் இருந்து அது போன்ற நபர் மீது கவனம் செலுத்துவோம். 
  2. நாம் எந்த உணர்வையும் கொண்டிருக்கவில்லை, அவருக்கு உதவவோ அல்லது தீங்கு ஏற்படுத்தவோ விரும்பவில்லை, அதே போன்று அவரை விட்டு விலகவோ அல்லது அவருடனே இருக்கவோ கூட ஆசைப்படவில்லை, 
  3. மேலும் அவரை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை உணர்கிறோம். 
  4. இப்படி உணர்வதற்கான காரணத்தை நாம் பகுப்பாய்வோம். ஏனெனில் அவள் நமக்கு உதவவும் இல்லை அதே சமயம் தீங்கு ஏற்படுத்தவும் இல்லை, எனவே அவளுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. 
  5. இதனை மேலும் ஆழமாக ஆராய்ந்தால், இந்த விதத்தில் உணர்வதற்கு சரியான காரணம் இருக்கிறது, கடைசியில் அவள் அந்நியர் அல்ல ஏனெனில் கணக்கில்லாத கடந்த ஜென்மங்களில், இந்த ஜென்மத்தில் இனி வரும் காலங்களில், எதிர்வரும் ஜென்மங்களில் அவள் என்னுடைய நெருக்கமான, தோழியாக, இன்னும் பலவாக இருக்கப் போகிறாள்.  

இந்த விதத்தில், நாம் நம்முடைய அனைத்து கோபம், பற்றுதல் அல்லது எதிரிகள், நண்பர்கள் மற்றும் அந்நியர்கள் மீதான அலட்சிய உணர்வை நிறுத்த முடியும். ஸ்ராவாகர்கள் மற்றும் பிரத்யேகாபுத்தர்களின் பொதுவான மற்றும் போதிசிட்டாவின் அர்ப்பணிப்பு இதயத்தை உருவாக்குவதற்கான ஏழு பகுதி காரணம் மற்றும் விளைவு முறையில் ஒவ்வொருவரும் நமது தாய்மார்களாக இருப்பதை அங்கீகரிப்பதற்கான பூர்வாங்கமாக உருவாக்கப்பட்ட வெறும் சமநிலையை உருவாக்குவதற்கான வழி இது. 

நமது அணுகுமுறைகளை சமன் செய்வதற்கும் பரிமாறிக் கொள்வற்கும் ஒரு பூர்வாங்கமான அசாதாரண மகாயான சமநிலை

நமது அணுகுமுறைகளை சமன் செய்வதற்கும் பரிமாறிக் கொள்வற்கும் ஒரு பூர்வாங்கமான அசாதாரண மகாயான சமநிலையை சுயமாகவும் மற்றவர்களுக்காகவும் வளர்க்கும் விதமானது இவ்வாறாக பிரிக்கப்படுகிறது:

  • ஒப்பீட்டுக் கண்ணோட்டத்தைப் பொறுத்து சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி
  • ஆழமான கண்ணோட்டத்தைப் பொறுத்து சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி.

ஒப்பீட்டுக் கண்ணோட்டத்தைப் பொறுத்து சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழியானது இவ்வாறாக பிரிக்கப்படுகிறது:

  • நம்முடைய சொந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி
  • மற்றவர்கள் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி

நம்முடைய சொந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி

இது மூன்று விஷயங்களை உள்ளடக்கியது:

  1. அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களும் நம்முடைய பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களாக எண்ணிலடங்கா ஜென்மங்களில் இருந்திருப்பதால், சிலர் நெருக்கமானவர்கள் மற்றவர்கள் தொலைவானவர்கள், இவர் என்னுடைய நண்பர் அவர் எதிரி என்றும் சிலரை வரவேற்று மற்றவர்களை புறக்கணிப்பது பொருத்தமில்லாதது ஆகும். பத்து நிமிடங்களோ, பத்து ஆண்டுகளோ அல்லது பத்து ஜென்மங்களோ பார்க்காமல் இருந்தாலும், அவர் இன்னமும் நம்முடைய தாய் தான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 
  2. இந்த உயிர்கள் நமக்கு உதவிகளை செய்திருக்கின்றன சில நேரங்களிலும் தீங்கும் செய்திருப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது. இருப்பினும் அவர்கள் நமக்கு எத்தனை முறை உதவினார்கள் மற்றும் எந்த அளவிற்கு உதவினார்கள்,என்பதை ஒப்பிடும் போது அவர்கள் நமக்கு செய்த தீங்கானது அற்பமானதாகும். எனவே, ஒருவரை நெருக்கமானவர் என்று வரவேற்பதும் மற்றவரை நெருக்கமில்லாதவர் என்று புறக்கணிப்பதும் முறையற்றதாகும். 
  3. நாம் நிச்சயமாக இறக்கப் போகிறோம், ஆனால் நாம் இறக்கும் நேரம் என்பது முற்றிலும் நிலையில்லாதது. உதாரணமாக, நாளை நாம் தூக்கிலிடப்படப் போகிறோம். நம்முடைய கடைசி நாளை கோபமாகவும் மற்றவர்களை நோகடிப்பதற்கும் செலவிடுவது என்பது அபத்தமானதாகும். அற்பமான ஏதோ ஒன்றை தேர்வு செய்வதனால், நம்முடைய கடைசி நாளில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள எதையாவது செய்வதற்கான வாய்ப்பை இழக்கிறோம். உதாரணமாக, உணர் அதிகாரி ஒருவர் யாரோ ஒருவர் மீது சீற்றம் அடைந்து அடுத்த நாள் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். அன்றைய நாள் முழுவதையும் அவரை எப்படி தண்டிப்பது என்று திட்டமிடுவதிலேயே செலவிட்டார், அடுத்த நாள் காலையில், அந்த அதிகாரி தனது திட்டமிடலை செயல்படுத்துவதற்கு முன்னர், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி மரணம் அடைந்தார். அவருடைய கோபம் முற்றிலும் அபத்தமானது. மறுநாளே மற்றொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதுவே உண்மை. இன்று அவரை காயப்படுத்துவது அர்த்தமற்றது.

மற்றவர்கள் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி

இதுவும் கூட மூன்று விஷயங்களாக பிரிக்கப்படுகிறது. 

  1. என்னைப் பொறுத்த வரையில் நான் கஷ்டப்படக் கூடாது, கனவில் கூட துன்பமே வரக்கூடாது, நான் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டிருந்தாலும் பொருட்டல்ல, அது போதும் என்று நான் எப்போதும் நினைத்ததே இல்லை. ஒவ்வொருவருக்கும் இதே விருப்பம் பொருந்தும். சிறு வண்டில் முதல் அனைத்து வரையறுக்கப்பட்ட உயிர்களும் மகிழ்ச்சியை விரும்புகின்றன துன்பப்படவோ அல்லது எந்த பிரச்னைகளைக் கொண்டிருக்கவோ விரும்பவில்லை. எனவே, சிலரை புறக்கணித்து மற்றவர்களை வரவேற்பது பொருத்தமற்றதாகும்.  
  2. ஒரு வேளை பத்து பிச்சைக்காரர்கள் நம் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள். சிலருக்கு மட்டும் உணவைக் கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு இல்லை என்று சொல்வது முற்றிலும் தவறானது மற்றும் நியாயமானது அல்ல. பசியிலும், உணவு தேவை என்பதிலும் அவர்கள் அனைவரும் சமமானவர்களே. அதே போன்று குழப்பத்தின் கறைபடாத மகிழ்ச்சியைப் பொறுத்தவரை - சரி, யார் அதை கொண்டிருக்கிறார்கள்? இருப்பினும் குழப்பத்தின் கறை படிந்த மகிழ்ச்சியிலும் கூட யிலும் கூட – அனைத்து வரையறுக்கப்பட்ட உயிர்களுக்கும் போதுமான வழங்கல் இல்லை. அதாவது ஒவ்வொருவரும் ஏரோ ஒரு தேடலில் ஆர்வமாக இருக்கின்றன. எனவே, சிலரை நெருக்கம் இல்லாதவர்கள் என்று புறக்கணிப்பதும் மற்றவர்களை நெருக்கமானவர்கள் என்று வரவேற்பதும் சரியல்ல. 
  3. மற்றொரு உதாரணமாக, ஒரு வேளை பத்து நோய்வாய்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்ற வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் பரிதாபமாகவும் இரக்கப்படும் விதத்திலும் இருப்பதில் சமமானவர்களே. எனவே சிலருக்கு நன்மை செய்து அவர்களை நல்ல விதமாக நடத்துவதும் மற்றவர்களை மறந்து போவதும் பொருத்தமில்லாதது. இதே போன்று, அனைத்து வரையறுக்கப்பட்ட உயிர்களும் அவற்றின் குறிப்பிட்ட தனிப்பட்ட பிரச்னைகள் மற்றும் கட்டுப்பாடின்றி நிகழும் இருத்தல் அல்லது சம்சாரியத்தின் பொதுவான பிரச்னைகளுடன் சமமான பரிதாபத்திற்குரியவையாகும். அதனால் சிலரை நெருக்கம் இல்லாதவர்கள் என்று புறப்பணிப்பதும் மற்றவர்கள் நெருக்கமானவர்கள் என்று வரவேற்பதும் சரியில்லை மற்றும் பொருத்தமில்லாதது.  

ஆழமான கண்ணோட்டத்தைப் பொறுத்து சமநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி

இதுவும் கூட மூன்று சுற்றுகளிலான சிந்தனைகளை உள்ளடக்கியவை.

  1. நம்முடைய குழப்பத்தினால் எப்படி ஒருவரை நமக்கு உதவுபவர் அல்லது நம்மிடம் நல்ல நிவதமான நடந்து கொள்ளும் உண்மையான நண்பர் என்றும், நாம் வெறுக்கும் ஒருவரை உண்மையான எதிரி என்றும் முத்திரைகுத்துகிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இருப்பினும், அவர்கள் உண்மையிலேயே நாம் முத்திரை குத்தப்பட்ட அந்த விதத்திலேயே தான் இருக்கிறார்கள் என்றால், பின்னர் தஷ்லி கான் புத்தர் தன்னையும் கூட அந்த விதத்திலேயே தான் பார்த்திருக்க வேண்டும். ஆனால், அவர் எப்போதும் அப்படி செய்யவில்லை. சரியான அறிவாற்றல் மனங்கள் பற்றிய வர்ணனையில் (சமஸ்கிருதத்தில்- ப்ரமனவர்த்திகா) தர்மகீர்த்தி கூறி இருப்பதைப் போல, தனது உடல் மீது ஒருபக்கம் பன்னீரைத் தெளிப்பவர்களுக்கும் மற்றொரு புறம் வாலால் வெட்டித்துண்டு போடுபவர்களுக்கு புத்தர் ஒரே இயல்போடு இருந்தார்.” 

    எப்பொழுதும் பொறாமையால் தனக்குத் தீங்கிழைக்க முயலும் தன் உறவினரான தேவதத்தனை புத்தர் எப்படி நடத்தினார் என்ற உதாரணத்தில் இந்த பாரபட்சமற்ற தன்மையைக் காணலாம். எனவே, நாம் எந்த வகைகளில் முத்திரை குத்துகிறோமோ அந்த வகைகளில் அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்று குழப்பத்துடன் சிந்திக்காமல், பக்கச்சார்பற்றவர்களாகவும், அவர்கள் பக்கம் நிற்பதையும் நாமும் தவிர்க்க வேண்டும். யாரும் அப்படி இருப்பதில்லை. உண்மையாக நிறுவப்பட்டு இருப்பவற்றின் மீதான நம்முடைய பிடிமானத்தை நிறுத்துவதற்கு நாம் செயலாற்ற வேண்டும். இந்த பிடிப்பு நம் குழப்பமான மனதில் இருந்து வருகிறது, அது உண்மையில்லாத வழிகளில் நமக்குத் தோன்றும்.
  2.  மேலும், வரையறுக்கப்பட்ட உயிர்கள் உண்மையான இருத்தல்களான நண்பர் பகைவர் என்று வகைபடுத்தப்பட்ட நிறுவலாக இருந்தால், நாம் அதனை பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று, அவையும் எப்போதும் அப்படியே இருக்கும். உதாரணமாக, ஒரு கடிகாரமானது எப்போதும் சரியான நேரம் காட்டுவதாக நாம் உணர்கிறோம். அதன் நிலையைப் பொறுத்து சில நேரத்தில் மாறவும், சில நேரத்தில் தாமதமாக மணி காட்டவும் சாத்தியம் இருக்கிறது, அதே போலத் தான் மற்றவர்களின் நிலையும் எப்போதும் மாறாமல் நிலையாக இருக்காது.

    சம்சாரியத்தின் கட்டுப்பாடற்ற சூழ்நிலைகளில் நிச்சயமில்லை என்ற உண்மையைப் பற்றிய போதனைகளைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்த்தால், மகன் தந்தையை உண்பது, தாயை அடிப்பது, எதிரியைத் தொட்டிலில் தாலாட்டுவது போன்ற உதாரணம் இங்கே உதவுகிறது. இந்த உதாரணம் ஞானமடையும் பாதையின் (லாம்-ரிம்) தரப்படுத்தப்பட்ட நிலைகளில் ஒரு இடைநிலை உந்துதலை வளர்ப்பதற்கான வழிமுறைகளில் வருகிறது. ஒருமுறை, உயர்நிலை உணர்வாளராக ஆர்ய கத்யாயனா ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தார் அங்கே அவரின் தந்தை குளத்தில் இருக்கும் மீனாக மறுபிறப்பு எடுத்திருந்தார் அவருடைய மகன் அந்த மீனை உண்டு கொண்டிருந்தார். அதன் பின்னர் அந்த மகன் ஒரு நாயை அடித்திருக்கிறார், அந்த நாய் அவனுடைய தாயாக இருந்திருக்கிறார், தன்னுடைய தந்தையான மீன் முள்களுடன் அவருடைய எதிரியாக இருந்தவரை இப்போது அவருடைய கரங்களில் குழந்தையாக தாலாட்டிக் கொண்டிருந்தார். அபத்தமான இந்த மாற்றங்களையும் சம்சாரியத்தில் அலைபாயும் உயிர்களின் நிலையையும் எண்ணி கத்யாயனா நகைத்தார். எனவே, நிலைத்து மற்றும் நிரந்தரமாக இருக்கும் மக்கள் மீதான பிடிமானம் அல்லது பிடிப்புளான நண்பர் அல்லரு பகைவர் என்ற வகைபடுத்துதல் மற்றும் அதன் அடிப்படையில் ஒருவரை வரவேற்று மற்றவரை புறக்கணிப்பதை நாம் நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
  1. பயிற்சிகளின் தொகுப்புகளில் (சமஸ்கிருதத்தில். சிக்ஷாசமுக்கயா), சுயம் மற்றும் மற்றவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதை சாந்திதேவா விவரிக்கிறார். தூரத்தில் மற்றும் அருகில் இருக்கும் மலைகளைப் போல, தொடர்புடைய இடங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. நெருக்கத்தில் இருக்கும் மலையில் நாம் இருந்தால், மற்றொன்று தொலைவிலும் இப்போது இருப்பது அருகிலும் இருப்பதாகத் தோன்றும். மற்றொரு பக்கத்திற்கு சென்றால் இப்போது அருகில் தெரிந்த மலை தொலைவாகவும் தொலைவாகத் தெரிந்தது அருகிலும் இருப்பதாகத் தோன்றும். அதே போன்று தான், நாமும் நம்முடைய சொந்த பக்க்ததில் இருந்து “சுயம்” நிறுவாமல், ஏனெனில் மற்றவர் கண்ணோட்டத்தில் இருந்து நம்மைப் பார்க்கும் போது நாமும் “மற்றவர்” ஆகிறோம். அது போன்றே, நண்பரும் எதிரியும் வெவ்வேறு விதமாக பார்ப்பதனால் அப்படித் தோன்றுகிறார்கள். ஒருவர் ஒருவருக்கு நண்பராகவும் மற்றொருவருக்கு எதிரியாகவும் இருக்கலாம். அருகிலுள்ள மற்றும் தொலைதூர மலைகளைப் போலவே, இது அனைத்தும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்துடன் தொடர்புடையது. 

ஐந்து முடிவுகள்

மேற்கண்ட விஷயங்களைப் பற்றி இப்படிச் சிந்தித்ததிலிருந்து, நாம் ஐந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

நான் பாரபட்சமாக இருப்பதை நிறுத்த வேண்டும்

ஒப்பூட்டு அல்லுது ஆழமான கண்ணோட்டத்தில் இருந்து நாம் பார்த்தாலும், சிலரை நெருக்கமானவர்கள் என்றும் மற்றவர்களை நெருக்கம் இல்லாதவர்கள் என்று கருதுவதில் எந்தக் காரணமும் இல்லை. எனவே நாம் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்: நான் பாரபட்சமாக இருப்பதை நிறுத்த வேண்டும். பாரபட்சமான உணர்வுடன் சிலரை புறக்கணிப்பது மற்றவர்களை வரவேற்பதில் இருந்து என்னை நானே விடுவிக்க வேண்டும். ஏனெனில் விரோதம் மற்றும் இணைப்பு இரண்டும் நிகழ் மற்றும் எதிர்கால ஜென்மங்களில் தற்காலிகமாகவும் இறுதியில் குறுகிய மற்றும் நீண்ட காலங்களுக்கு எந்தப் பயனையும் கொண்டிருக்கப்போவதில்லை. நூற்றுக்கணக்கான வகையான துன்பத்தில் ஆணிவேர் இவையே ஆகும். அவரை பாதுகாவலர்கள் போன்றவர்கள் அதுவே என்னை கட்டுப்பாடின்றி நிகழும் சாம்சாரியப் பிரச்னைகள் என்று சிறைக்குள்ளே என்னை சுற்ற வைத்துக் கொண்டிருக்கிறது. 

1959 திபெத் எழுச்சிக்குப் பின்னர் அங்கே வசித்தவர்களை உதாரணமாக எடுத்து சிந்தியுங்கள். தங்களின் மடாலயங்கள், செல்வம், உடைமைகள், வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவற்றுடன் இணைப்பு இருந்தவர்களால் அவற்றை விட்டுவிட்டு வெளியேற முடியவில்லை. இதன் விளைவாக, அவர்களின் பிணைப்பால் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைகளிலோ அல்லது வதை முகாம்களிலோ அடைக்கப்பட்டனர். இத்தகைய பாரபட்ச உணர்வுகள் நம்மை மகிழ்ச்சியற்ற நரகத்தின் நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் படுகொலைகள். இரவில் தூங்க விடாமல் தடுக்கும் நமக்குள் இருக்கும் சீற்றம் கொண்ட பேய்கள் அவை. நாம் எல்லா வகையிலும் அவற்றை வேரறுக்க வேண்டும்.

மற்றொருபுறம், ஒவ்வொருவரிடத்திலும் சமமான அணுகுமுறையுடன் அனைத்து வரையறுக்கப்பட்ட உயிர்களும் மகிழ்ச்சியாக அவற்றின் பிரச்னைகள் மற்றும் துன்பங்களில் இருந்து பிரிய விரும்புவது, தற்காலிகமாகவும் இறுதியாகவும் எந்த கண்ணோட்டத்தில் இருந்தாலும் மிக முக்கியமானவை.  அனைத்து புத்தர்களும் போதிசத்துவர்களும் தங்கள் சாதனைகளை அடைய பயணிக்கும் முக்கிய பாதை இதுவாகும். இது முக்கால புத்தர்களின் எண்ணமும் உள்ளார்ந்த விருப்பமும் ஆகும். எனவே எந்த வரையறுக்கப்பட்ட உயிராக இருந்தாலும் அவற்றின் பக்கத்தில் இருந்து எனக்கு எந்த தீங்கை அல்லது எதவியை செய்திருந்தாலும் அது ஒரு விஷயமல்ல என்று நாம் சிந்திக்க வேண்டும், என்னுடைய பக்கத்தில் இருந்து நான் ஒரு மாற்று வைத்திருக்கிறேன். நான் கோபப்படவோ அல்லது பற்றுதலுடனோ இருக்க மாட்டேன். சிலரை நெருக்கம் இல்லாதவர்கள் மற்றவர்களை நெருக்கமானவர்கள் என்று கருத மாட்டேன். சூழ்நிலைகளைக் கையாள அதைத் தவிர வேறு எந்த வழியும் முறையும் இருக்க முடியாது. நான் நிச்சயமாக முடிவு செய்திருக்கிறேன். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை விரும்புகின்றனர் எப்போதும் துன்பப்பட விரும்பவில்லை என்பதால், மற்றவர்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் அவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதில் சமமான அணுகுமுறையை நான் கொண்டிருக்கிறேன். நான் செய்யக் கூடிய சாத்தியமான முயற்சி இதுவாகும். ஓ ஆன்மிக வழிகாட்டியே, சாத்தியம் உள்ள சிறப்பானவற்றை செய்வதற்கு எனக்கு தயவு செய்த ஊக்கம் தாருங்கள். இந்தப் பயிற்சியுடன் தொடர்புடைய குரு பூஜை – லாமா சோபாவின் ஐந்து வரிகளை முதலில் ஜெபிக்கும் போது நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சிந்தனைகள் இவை: 

மற்றவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சிந்திப்பதன் மூலம் மற்றவர்களின் சவுகரியம் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்க எங்களை ஊக்குவியுங்கள்: யாருமே சிறிய துன்பத்தை கூட விரும்பவும் இல்லை அல்லது அவன் அல்லது அவளுக்கு கொண்டிருக்கும் மகிழ்ச்சியால் திருப்தி அடையவும் இல்லை. 

எனவே, முதல் சரணத்துடன் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கும் சம அளவில் துன்பத்தை போக்குவதற்கும் நம்முடைய செயல்கள் அல்லது சிந்தனையில் யாருடனும் நெருக்கமான அல்லது தொலைவான உணர்வை கொண்டிருக்காத சம அணுகுமுறையை வளர்க்க நாம் பிரார்த்திப்போம். இது போன்ற சமநிலை அணுகுமுறையானது சமநிலை வகையின் விரிவாக்கம் அல்லது சமநிலை அணுகுமுறையுடன் நம் மீதே நாம் இங்கே அக்கறை செலுத்த முடியும். ஒரு கடையில் அற்புதமான ஒரு பொருளை பார்த்து அதனை வாங்குவதற்கு முடிவு செய்வதைப் போல அந்த அணுகுமுறையை வளர்க்கவும் அடையவும் நாம் தீர்க்கமான முடிவை உருவாக்குகிறோம்.

சுய- போற்றுதலில் இருந்து என்னை நானே விடுவிக்க வேண்டும்

அடுத்ததாக, சுய-போற்றுதல் அணுகுமுறையை கொண்டிருப்பதன் தவறுகள் பற்றி சிந்திப்போம். சுயநலத்தில் அக்கறை கொண்ட சுய-போற்றுதல் அணுகுமுறையுடன், நாம் அழிவுகரமாக செயல்பட்டு, பத்து அழிவுகரமான செயல்களைச் செய்து இறுதியில் நம்மை நாமே நரக மறுபிறப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கிறோம். அதில் இருந்து, ஞானமடையாத அர்கத நிலை (விடுபட்ட உயிர்கள்) வரை - இதுபோன்ற சுயநல அக்கறை காரணமாக அனைத்து மகிழ்ச்சி மற்றும் அமைதியை இழக்க காரணமாகிறது. போதிசத்வாக்கள் ஞானமடைதலுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், சிலர் மற்றவர்களை விட நெருங்கியவர்கள். அவர்கள் இன்னமும் கொண்டிருக்கும் சுயொண்டிருக்கும் சுய-போற்றுதல் அளவைக் கொண்டு அவர்களிடையேயான வேறுபாடானது வருகிறது. நாடுகளுக்கு இடையேயான பூசல்களால் ஆன்மீக குருக்கள் மற்றும் சீடர்கள், குடும்பத்தினருக்குள், அல்லது நண்பருக்கள் இடையிலான ஒவ்வாமை அனைத்து சுய-போற்றுதலில் இருந்தே வருகிறது. எனவே, நான் இந்த குழப்பமான சுயநலம் மற்றும் எனக்குள் இருக்கும் சுய- போற்றுதலில் இருந்து வெளியேறாவிட்டால், நான் எப்போதும் எந்த ஒரு மகிழ்ச்சியையும் அனுபவிப்பதற்கான வழி இல்லை. எனவே, என்னை எப்போதும் இந்த சுய- போற்றுதலுக்குக் கீழேவர நான் விடமாட்டேன். ஓ ஆன்மீக வழிகாட்டியே, என்னுடைய அனைத்து சுயநலத்தில் இருந்தும் நான் வெளியேறுவதற்கு எங்களை ஊக்குவிக்கவும். இரண்டாவது சரணத்துடன் வரக்கூடிய சிந்தனைகள் இவையேயாகும்: 

சுயநலம் என்ற இந்த நாட்பட்ட நோயானது, நாம் எதிர்பார்க்காத துன்பங்களுக்குக் காரணம் இதனால், கொடூரமான அரக்கனை அழிக்க அந்த வெறுப்பின் மீது என்ன குற்றம் சுமத்துவது என்பதைக் காண எங்களை ஊக்குவிக்கவும். 

ஆகவே, இரண்டாவது வசனத்துடன், நம்முடைய சுய, இரண்டாவது வசனத்துடன், நம்முடைய சுயநல அக்கறையுடனான சுய- போற்றுதல் அணுகுமுறைகளில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கான உறுதியான முடிவை நாம் உருவாக்குவோம்.  

மற்றவர்களை போற்றுவதையே என்னுடைய முக்கிய பயிற்சியாக கொண்டிருப்பேன்

அடுத்ததாக, மற்றவர்களை போற்றுவதைப் பின்பற்றுவதன் பலன் மற்றும் நற்குணங்கள் பற்றி நாம் சிந்திப்போம். இந்த ஜென்மத்தில், அனைத்தும் மகிழ்ச்சியாக நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது; எதிர்கால வாழ்வில், மனிதர்களாகவோ அல்லது கடவுள்களாகவோ பிறக்கப் போகிறேன்; பொதுவாக, ஞானமடையும் வரையிலான அனைத்து மகிழ்ச்சியும் மற்றவர்களைப் போற்றுவதில் இருந்து வருகிறது. நாம் இதனை பெரிய துர்வு என்ற விதத்தில் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, மிக விரும்பப்படும் அதிகாரியின் புகழானது அவருடைய போற்றுதல் மற்றும் மற்றவர்கள் மீது அக்கறையுடன் இருப்பதால் வருகிறது. நம்முடைய நன்னெறி சுயம் மீது அக்கறையுடன் இருப்பதால் வருகிறது. நம்முடைய நன்னெறி சுய – ஒழுக்கமானது மற்றொருவரின் உயிரைப் பறிப்பதில் அல்லது திருடுவதில் இருந்து தடுத்து மற்றவர்களை நாம் நேசிப்பதிலிருந்து பெறப்படுகிறது, இதுதான் நம்மை மனிதர்களாக மறுபிறப்பு எடுக்கவைக்கிறது. 

உதாரணமாக, புனிதர் தலாய்லாமா, எல்லா இடங்களிலும் ஒவ்வொருவரின் நலன் குறித்து எப்போதும் சிந்திக்கிறார், அவருடைய அனைத்து நற்குணங்களும் மற்றவர்களை போற்றுவதில் இருந்து வருகிறது. டோக்மே-சங்போ போதிசத்வா ஆசையின் கடவுளான காமத்தால் எந்தத் துன்பத்திற்கும் ஆளாகவில்லை, அதுவே அவர் தலையிடுவதற்கு புறப்பட்டு செல்வதற்கு காரணமானது. இந்த மிகப்பெரிய திபெத்திய பயிற்சியாளர் எந்த வகையான மனிதர் என்றால், ஒரு பூச்சி நெருப்புக்குள் விழுந்தால் உடைந்து அழுபவர். உண்மையான அவர் அனைத்தைப் பற்றியும் அக்கறைப்படுவார் அதனால் பேய்களாக இருந்தால் கூட அந்த குறுக்கீடுகள் இவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தாமல் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தும். இது எதனால் என்றால், அவர் நமக்கு பலன் தருபவை மற்றும் போற்றுதலுக்கு உரியவற்றை பற்றி மட்டுமே எப்போதும் சிந்திக்கிறார், ஆத்மாக்கள் கூட தங்களுக்குள் சொல்லிக் கொள்கின்றன.

புத்தரின் கடந்த ஜென்மங்கள் ஒன்றில் அவர் கடவுள்களின் அரசனான இந்திரனாக பிறந்த போது, கடவுள்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஒரு போர் நடந்தது. அசுரர்கள் வென்றதால் இந்திரர் தன்னுடைய ரதத்தில் சென்றுவிட்டார். அவர் சாலையில் ஒரு இடத்திற்கு வந்த போது அங்கே பல புறாக்கள் கூடி இருந்தன, அவற்றில் எதன் மீதாவது ரதத்தை ஏற்றிவிடுவோம் என்று பயந்து இந்திரர் ரதத்தை நிறுத்தினார். இதைப் பார்த்த, அசுரர்கள் இந்திரன் மீண்டும் வந்து தங்களைத் தாக்குவார்கள் என நினைத்து அவர்கள் தப்பியோடினர். நாம் இதனை பகுப்பாய்ந்தால், அவர்கள் பயந்து ஊடியது இந்திரனின் மற்றவர்களைப் போற்றும் குணத்தால் என்பதைக் காணலாம். இதைப் போலவே பல வழிகளில், மற்றவர்களை போற்றுவதற்கான பயன்களைப் பல கோணங்களில் இருந்து நாம் சிந்திக்க வேண்டும். 

ஒரு நீதிபதியோ அல்லது ஏதோ ஒரு அதிகாரி தன்னுடைய அலுவலகத்தில் மிக நேர்த்தியாக அமர்ந்திருக்கிறார்கள், அவருடைய நிலை மற்றும் அதைப் பற்றிய அனைத்துமே மற்றவர்களின் இருப்பில் இருந்து வந்தது. இந்த உதாரணத்தில், மற்றவர்களின் கருணை உண்மையில் அவர்கள் இருப்பதைக் கொண்டுள்ளது. தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்றால், அவர் ஒரு நீதிபதியாக இருக்க முடியாது. அவர் செய்யவும் எதுவும் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் இருந்தாலும், யாரும் அவரிடம் நீதி கேட்டு வரவில்லை என்றால், இந்த நீதிபதி ஒன்றும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டியது தான். மற்றொரு புறம், அவர் முன்னால் பலர் வந்து நின்று கொண்டு, தங்களின் பிரச்னைகளை அவர் தீர்க்க வேண்டும் என்று பார்த்தால், பின்னர் அவர்களைச் சார்ந்து அவர் நல்லவிதமாக உட்கார்ந்து அவர்களுக்கு சேவையாற்றலாம். லாமாவிற்கும் இதுவே பொருந்தும். மற்றவர்களைச் சார்ந்து அவர் அமைதியாக அமர்ந்து போதிக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த பொறுப்பும் மற்றவர்கள் இருந்து அவருக்கு உதவுவதனால் வருகிறது. அவர்கள் பலன் அடைவதற்காக அவர் தர்மத்தை போதிக்கிறார், அதனால் அவருடைய உதவியானது மற்றவர்களைச் சார்ந்து இருத்தலான அவர்களின் கருணையை நினைவுபடுத்துவது உள்ளிட்டவற்றில் இருந்து வருகிறது.

அதே போன்று, இது அன்பு மற்றும் இரக்கத்தின் மூலம், மற்றவர்களை போற்றுவதில் இருந்து, நம்மால் விரைவாக ஞானமடைய முடியும். உதாரணத்திற்கு, ஒரு எதிரி நம்மை கஷ்டப்படுத்தினால், நாம் பொறுமையை வளர்க்கிறோம், அதன் மூலம் நாம் ஞானத்திற்கு மிக நெருக்கமாக வருகிறோம், நாம் மற்றவரை நேசிப்பதால் இது நிகழ்ந்தது. இவ்வாறு, வரையறுக்கப்பட்ட உயிரினங்கள் எல்லா மகிழ்ச்சிக்கும், நலனுக்கும் அடிப்படையாகவும், வேராகவும் இருப்பதால், எதனையும் தவிர்த்து, அவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் எனக்கு எப்படித் தீங்கு விளைவித்தாலும், நான் எப்பொழுதும் மற்றவர்களை நேசிப்பேன் என்று முடிவு செய்ய வேண்டும். மற்ற உயிர்கள் எல்லாம் நம்முடைய ஆன்மீக வழிகாட்டிகள், புத்தர்கள் அல்லது விலைமதிப்பில்லாத நவரத்தினங்கள் போன்றவை அவற்றில் நான் அவர்களைப் போற்றுவேன், அவர்களுக்கு தவறாக எதாவது நடந்தால் எதையோ இழந்ததைப் போல உணர்ந்து என்ன நடந்தாலும் எப்போதும் அவர்களை புறக்கணிக்க மாட்டேன். ஓ ஆன்மீக வழிகாட்டியே, தயவு செய்து, அத்தகைய இதயத்திலிருந்தும் மற்றவர்களுக்கான உணர்விலிருந்தும் ஒரு கணம் கூட பிரிந்துவிடாமல் இருக்க என்னை ஊக்குவிக்கவும். மூன்றாவது சரணத்தின் பொருள் இதுதான்:

நம் தாய்மார்களைப் போற்றி, அவர்களைப் பேரின்பத்தில் பாதுகாக்கும் மனமே எல்லையற்ற நற்பண்புகளுக்கு வழிவகுக்கும் வாசல் என்பதையும், இவ்வாறு அலைந்து திரியும் உயிரினங்களை நம் உயிரைவிட அதிகமாகப் போற்றுவதற்கும், அவர்கள் நம் எதிரிகளாகத் தோன்றினாலும், அவர்களைப் போற்றுவதற்கும் எங்களை ஊக்கப்படுத்துங்கள்.

இவ்விதத்தில், மற்றவர்களை மதிக்கும் நடைமுறையை நமது மைய நோக்கமாக எடுக்க நாம் முடிவு செய்கிறோம்.

நான் நிச்சயமாக என்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் எனது அணுகுமுறைகளை பரிமாறிக் கொள்ள முடியும்

நம்மைப் போற்றுவதில் உள்ள பல தவறுகளைப் பற்றியும், பிறரைப் போற்றுவதன் பல குணங்களைப் பற்றியும் சிந்திக்கும் நுழைவு வாயிலை நம்பி, நாம் யாரை மதிக்கிறோமோ அந்த மதிப்புகளை மாற்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவற்றை உண்மையில் மாற்ற முடியுமா என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். நிச்சயமாக நம்மால் முடியும். நம்மால் நம் அணுகுமுறைகளை மாற்ற முடியும் ஏனெனில் நாம் ஞானமடைவதற்கு முன்னறர், புத்தரும் நம்மைப் போலத் தான் இருந்தார். அவரும் கூட அலையும் மறுபிறப்பில் இருந்து கட்டுப்பாடின்றி நிகழும் சூழ்நிலைகளில் மறுபிறப்பு மற்றும் சம்சாரியத்தின் பிரச்னைகளைக் கொண்டிருக்கிறார். ஆயினும்கூட, திறமையான புத்தர் யாரை நேசித்தார் என்பதைப் பற்றிய தனது அணுகுமுறைகளை பரிமாறிக் கொண்டார். பிறரைப் போற்றுவதை உறுதியாகக் கடைப்பிடிப்பதன் மூலம், அவர் தனது சொந்த மற்றும் பிறரின் நோக்கங்களை நிறைவேற்றும் உச்சத்தை அடைந்தார்.

மாறாக நாம் நம்மைப் போற்றி மற்றவர்களை புறக்கணிப்பதை மட்டுமே கொண்டிருக்கிறோம். பிறருக்கு நன்மை பயக்கும் எதையும் சாதிப்பதை ஒதுக்கி வைத்தால், நமக்கான சிறு நன்மையைக் கூட நம்மால் நிறைவேற்ற முடியாது. நம்மைப் போற்றுவதும் மற்றவர்களைப் புறக்கணிப்பதும் நம்மை முற்றிலும் உதவியற்றவர்களாக ஆக்கிவிட்டன, உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த எதையும் சாதிக்க முடியாது. நமது பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான உண்மையான துறவு அல்லது உறுதியை நாம் உருவாக்க முடியாது. மறுபிறப்பின் மிக மோசமான நிலைகளில் ஒன்றில் விழுந்து விடாமல் நம்மை நாமே தடுக்க முடியாது. இந்த வழிகளில், நம்மைப் போற்றுவதன் தவறுகளைப் பற்றியும் மற்றவர்களைப் போற்றுவதன் நன்மைகளைப் பற்றியும் சிந்திக்கிறோம். புத்தரால் தனது அணுகுமுறையை மாற்ற முடிந்தால், அவரும் நம்மைப் போல் தொடங்கி இருந்தால், நாமும் நமது அணுகுமுறையை மாற்ற முடியும்.

அது மட்டுமின்றி, போதுமான பரிச்சயம் இருந்தால், நம் உடலைப் பார்த்துக்கொள்வது போலவே மற்றவர்களின் உடலையும் போற்றுவது கூட சாத்தியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் மற்றவர்களின் உடலில் இருந்து விந்துத் துளிகள் மற்றும் முட்டையில் இருந்து வந்தவர்கள், அதாவது நமது பெற்றோர், இப்போது நாம் அவர்களை நமது சொந்த உடலாகப் போற்றுகிறோம். முதலில், அவர்கள் நம்முடையவர்கள் அல்ல. எனவே, என்னுடைய அணுகுமுறையை மாற்றுவது சாத்தியம் இல்லாதது அல்ல என்று நாம் சிற்திக்க வேண்டும். என்னால் என்னிடமும் மற்றவர்களிடமும் அணுகுமுறைகளை மாற்ற முடியும். எனவே, நான் அதைப் பற்றி யோசித்தாலும், நான் என் மீதும் மற்றவர் மீதும் வைத்திருக்கும் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாத வரை அது நடக்காது. இது என்னால் செய்யக்கூடிய ஒன்று, என்னால் செய்ய முடியாத ஒன்று அல்ல. எனவே, என் ஆன்மீக வழிகாட்டியே, அதைச் செய்ய என்னைத் தூண்டுங்கள். இதுவே நான்காவது சரணம்.

சுருக்கமாகச் சொன்னால், சிசுக்கள் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே அடிமையாகி விடும் தவறுகளுக்கும், பிறருக்காக மட்டுமே உழைக்கும் முனிவர்களின் ராஜாக்கள் கொண்டிருக்கும் நற்பண்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் மனதை வளர்த்து, அதனால் சமன் செய்ய எங்களைத் தூண்டுங்கள். மற்றவர்கள் மற்றும் நம்மைப் பற்றிய நமது அணுகுமுறைகளை பரிமாறிக்கொள்ளுங்கள்.

எனவே, இங்கே நாம் எடுக்கும் முடிவு என்னவென்றால், சுயத்தையும் மற்றவர்களையும் நேசிப்பது பற்றிய நமது அணுகுமுறைகளை நிச்சயமாக பரிமாறிக்கொள்ள முடியும்.

நான் நிச்சயமாக என்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் எனது அணுகுமுறைகளை பரிமாறிக் கொள்வேன்

சுயபோற்றுதலின் தவறுகள் மற்றும் பிறரைப் போற்றுவதன் நன்மைகளைப் பற்றி நாம் மீண்டும் சிந்திப்போம், ஆனால் இந்த நேரத்தில் அவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து மாறி மாறிச் செய்கிறோம். மற்றொரு விதமாகச் சொன்னால், நாம் பத்து அழிவுகரமான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களை ஒவ்வொரு பட்டியலில் இருந்தும் ஒவ்வொன்றாக மாற்றியமைக்கிறோம், மேலும் அவற்றின் முடிவுகளை சுயநலம் மற்றும் மற்றவர்களைப் போற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கிறோம். உதாரணமாக, நான் என்னை நேசித்தால், மற்றவர்களின் உயிரைப் பறிக்கவும் நான் தயங்க மாட்டேன். இதன் விளைவாக, நான் மகிழ்ச்சியற்ற நரகத்தில் மீண்டும் பிறப்பேன், பின்னர் ஒரு மனிதனாகப் பிறந்தாலும், நோய் நிறைந்த குறுகிய வாழ்நாளே எனக்கு இருக்கும். மறுபுறம், நான் மற்றவர்களை நேசித்தால், மற்றவர்களின் உயிரைப் பறிப்பதை நிறுத்திவிடுவேன், அதன் விளைவாக, நான் ஒரு சிறந்த நிலையில் மீண்டும் பிறப்பேன், நீண்ட ஆயுளைப் பெறுவேன், மற்றும் பல. பின்னர், திருடுவது மற்றும் திருடுவதைத் தவிர்ப்பது, தகாத பாலியல் நடத்தையில் ஈடுபடுவது மற்றும் அத்தகைய செயலைத் தவிர்ப்பது போன்றவற்றிலும் இதே நடைமுறையை மீண்டும் செய்யலாம். சுருக்கமாக, ஐந்தாவது சரணம் சொல்வது போல்:

நம்மைப் போற்றுவது எல்லா வேதனைகளுக்கும் வாசல் என்பதால், நம் தாய்களைப் போற்றுவது எல்லா நன்மைகளுக்கும் அடித்தளம் என்பதால், மற்றவர்களை நமக்காகப் பரிமாறிக்கொள்ளும் யோகாவை நமது முக்கிய பயிற்சியாக மாற்ற எங்களை ஊக்குவிக்கவும்.

ஐந்தாவது முடிவானது, நான் நிச்சயமாக என்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் எனது அணுகுமுறைகளை பரிமாறிக் கொள்வேன். நிச்சயமாக, இப்போது நான் தான் நீ, நீயே நான் என்று முடிவெடுப்பது என்று அர்த்தமல்ல. மாறாக, நாம் யாரை மதிக்கிறோமோ அவர்களைப் பற்றிய பார்வைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். நம்மைப் போற்றுவதற்குப் பதிலாக, மற்றவர்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, இப்போது நாம் நம்முடைய சுயநலக் கவலைகளைப் புறக்கணித்து மற்ற அனைவரையும் போற்றுவோம். இதைச் செய்யத் தவறினால், நாம் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் இந்த பரிமாற்றத்தை நாம் நமது அணுகுமுறைகளில் செய்தால், அதன் அடிப்படையில், நேர்மையான அக்கறையுள்ள அன்பையும் இரக்கமுள்ள அனுதாபத்தையும் வளர்ப்பதற்கான ஒரு வழியாக, நமது மகிழ்ச்சியை மற்றவர்களுக்குக் கொடுப்பது மற்றும் அவர்களின் துன்பங்களை எடுத்துக்கொள்வது போன்ற காட்சிப்படுத்தல்களுடன் பயிற்சி பெறலாம். அதனடிப்படையில், அனைவரின் பிரச்சனைகளையும் துன்பங்களையும் களைந்து அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கான விதிவிலக்கான உறுதியையும், போதிசிட்டாவின் அர்ப்பணிப்புள்ள இதயத்துடன் நாம் ஏங்கும் ஞானத்தை அடைவதற்கு சாத்தியமானதை நம்மால் உருவாக்க முடியும்.

சுருக்கம்

இந்த போதனைகளுக்கான ஆதாரமானது சாந்திதேவாவின்போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் (சமஸ்கிருதத்தில்- போதிசர்யவதரா), கடம்பா குருக்களின் போதனைகள் மற்றும் நான்காவது பன்சென் லாமாவின் குரு பூஜா  - லாமா சோபா. தலாய் லாமாவின் மறைந்த ஜூனியர் ஆசிரியரான கியாப்ஜே ட்ரிஜங் டோர்ஜெச்சாங்கின் கலெக்டட் ஒர்க்ஸ் என்ற புத்தகத்தில் எண்ணிடப்பட்ட பிரிவுகளுடன் இந்த வடிவத்தில் அவை தோன்றும். இருப்பினும், மேலோட்டம் மற்றும் அதில் உள்ள எண்களில் அதிக ஆர்வம் காட்டுவது, நமக்கு முன்னால் ஏழு மோமோஸ் (டம்ப்லிங்) இருக்கும் போது, அவற்றை சாப்பிடுவதற்குப் பதிலாக, எத்தனை உள்ளன, இந்த வடிவத்திற்கான ஆதாரம் என்ன உள்ளிட்டவற்றிற்கு யாராவது சான்றளிக்க வேண்டும் என்று நாம்விரும்புகிறோம். நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்!

Top