சம்சாரா துன்பத்தையும், தர்மம் மகிழ்ச்சியையும் தருகிறது

அனைத்து உயிர்களுமே மகிழ்ச்சியை விரும்புகின்றன, மகிழ்வின்றி இருக்க யாரும் விரும்பவில்லை. தர்மம் துன்பத்தில் இருந்து விலகி மகிழ்ச்சியை அடையும் வழிகளை போதிக்கிறது. நாம் பயிற்சிக்கும் தர்மமானது, நிச்சயமாக, நாம் எதையோ பிடித்துக்கொண்டிருப்பதற்கு சமமானது. இதனை பல விதங்களில் விவரிக்க முடியும். அது நம்மை துன்பப்படுவதில் இருந்து பின்வாங்கி மகிழ்ச்சிக்கான அனைத்து உண்மையான ஆதாரங்களை பிடிமானம் கொள்கிறது.

மகிழ்ச்சி என்பது மனம் அல்லது உடல் ரீதியானதாக இருக்கலாம். துன்பங்களிலும் கூட இரண்டு வகைகள் உள்ளன: உடல் மற்றும் மனதளவில். நம்மில் பலர், மகிழ்ச்சியை விரும்பினாலும், அதனை அடைவதற்கான வழிகளை நாம் அறியவில்லை. நாம் பயன்படுத்தும் முறையே நம்முடைய துன்பத்திற்கு வழிவகுக்கிறது.

சிலர் உயிர் வாழ்வாதற்காக கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபடுவார்கள். இது மகிழ்ச்சியை கொடுக்கும் என்று அவர்கள் நினைக்கிறார். நிச்சயமாக இதில் மகிழ்ச்சி இருக்காது. மேலும் பலர் இருக்கிறார்கள் அவர்கள் வியாபாரியாக, உழவராக இருந்து மகிழ்ச்சியை அடைய முயற்சிக்கிறார்கள். இந்த வழிகள் மூலம் பலர் மிகவும் வளமை மற்றும் பிரபலமானவர்களாக மாறி இருக்கலாம். இவ்வகையான மகிழ்ச்சி எப்போதும் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல; இதுவே இறுதி மகிழ்ச்சியுமல்ல. நாம் எவ்வளவு மகிழ்ச்சி அல்லது நல்ல பொருட்களைக் கொண்டிருக்கிறோம் என்பது பெரிதல்ல, நம்மிடம் போதுமானவை இருந்தாலும் நாம் எப்போதும் திருப்தியடைவதில்லை. இந்த நாடே நமக்கு சொந்தமாக இருந்தாலும், நாம் இன்னும் அதிகமாக எதிர்பார்ப்போம்.  

மகிழ்ச்சியை அடைவதற்காக நாம் செய்யும் செயலானது எப்போதும் முடிவையே எட்டாது. நம்மால் முடிந்த பொருட்களான கார், உள்ளிட்டவற்றை சுற்றிச் செல்ல முயற்சிப்போம் –இவ்வகையான நோக்கங்களுக்கு முடிவே இல்லை. அதனால் தான் அவர்கள் சம்சாரிய வாழ்க்கைக்கு முடிவே இல்லை, அது போகும் போகும் போய்க்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் இதனை புரிந்து கொள்ள முடியும்: உலகளவிலான நோக்கங்கள் எப்போதும் முடியாது.  

ஒரு பூ புதிதாக இருக்கும் போது புத்துணர்வாகவும், பழமையானதும் வாடியும் போகிறது. இந்த வாழ்க்கையில் நீங்கள் என்ன அடைந்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படியும் வாழ்க்கை முடிவு காணப் போகிறது. காலம் கடந்து கொண்டே இருக்க முடிவும் வரப்போகிறது, நம்முடைய வாழ்நாளின் இறுதிக் காலத்தில் நமக்கு அதிக துன்பம் மட்டுமே எஞ்சி இருக்கும். எடுத்துக்காட்டாக, காரை எடுத்துக்கொண்டால், பழைய கார்கள் தூக்கி எறியப்பட்ட குப்பைகள் வழியாக நீங்கள் பயணிக்கிறீர்கள்.  இதுவே இறுதி எல்லை, இந்த நிலையில் அனைத்துமே குப்பையாகத் தான் மாறும். கார் நல்ல நிலையில் இருந்தாலும் கூட, நாம் அதைப் பற்றி வருத்தப்படுவோம். அதன் பாகங்கள் உடைந்து போகும், வரி மற்றும் காப்பீடு கட்டணங்கள், உள்ளிட்டவை குறித்து நாம் கவலை கொள்வோம். நாம் எவ்வளவு அதிகம் வைத்து இருக்கிறோமோ, அதனைப் பற்றி அவ்வளவு அதிகம் கவலைப்படுகிறோம். 

தர்மமும் அப்படித்தான் மன மகிழ்ச்சியைக் கொண்டு வரும் வழியை போதிக்கிறது. சில வகையான மன மகிழ்ச்சியை அடைவதற்கு, நாம் உடல் ரீதியில் செயலாற்ற வேண்டாம்: நாம் நம்முடைய மனதுடன் செயலாற்ற வேண்டும். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கும் கூட மனமானது நீரோடையைப் போன்ற நீளமான தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வாழ்க்கையிலும் நாம் உடலைக் கொண்டிருக்கிறோம் மேலும் அந்த உடலுக்கான மகிழ்ச்சியைப் பெற நாம் முயற்சிக்கிறோம், ஆனால் மரணத்திலும் மனம் தொடர்கிறது. எனவே, நாம் விரும்ப வேண்டிய மகிழ்ச்சியானது சிறந்த மற்றும் நிலையானதாக மட்டுமின்றி, மாறாக நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்கும் நீடிக்கக் கூடியதாகவும் தொடர்ச்சியில் இடைவெளி இல்லாததாக இருக்க வேண்டும்.  

நாம் எந்த வகையான செயலைச் செய்கிறோம் என்பது பெரிதல்ல, ஆக்கப்பூர்வமானதோ இல்லையோ, அது தர்மமல்ல, ஆனால் நம்முடைய எதிர்கால நன்மைக்காக நாம் செய்யக் கூடிய நேர்மறை செயல்களே தர்மமாகும்.  

மகிழ்ச்சியோ மகிழ்ச்சியின்மையோ நம்முடைய செயல்களில் இருந்தே வருகிறது. இது போன்ற கர்மச் செயல்களைப் பொறுத்தவரையில், எதிர்மறை செயல்கள் எதிர்மறை முடிவுகளையும், நேர்மறைச் செயல்கள் நேர்மறை முடிவுகளையும் கொடுக்கிறது. மரம் நடுதல் உள்ளிட்ட இந்த வாழ்நாளில் நல்லது எதையேனும் நம்மால் செய்ய முடிந்தால், கடந்த ஜென்மத்தில் நாம் செய்த நேர்மறைச் செயல்களின் முடிவே இவை. நாம் மிகவும் நோய்வாய்ப்பட்டோ, அல்லது மகிழ்ச்சியின்றியோ அல்லது குறுகிய வாழ்நாளைக் கொண்டிருந்தாலோ இது கடந்த காலத்தில் நாம் செய்த எதிர்மறைச் செயல்களின் விளைவாகும். 

எடுத்துக்காட்டாக, இரண்டு வணிகர்கள் இருக்கிறார்கள், ஒருவர் வெற்றியாளர், மற்றொருவரால் ஜொலிக்க முடியவில்லை. இது அவரின் கடந்த கால கர்மாவால் நிகழ்ந்தது. உங்களால் இரண்டு தொழிலதிபர்களைப் பார்க்கிறீர்கள், ஒருவர் மிகக் கடினமாக உழைக்கிறார் ஆனால் வெற்றியடையவில்லை மற்றொருவர் கடினமாக உழைக்காவிட்டாலும் வெற்றி பெறுகிறார். மற்றொரு உதாரணம், நீங்கள் உயிர்களைக் கொன்றால், உங்களுக்கு குறுகிய வாழ்நாள் மற்றும் உடல்சுகமின்மை இருக்கும். இவை அனைத்தைப்பற்றியும் நீங்கள் உங்களுடைய கெஷ்-லாவிடம் கேட்கலாம். 

இது போன்ற எதிர்மறைச் செயல்களில் இருந்து உங்களை நீங்களே விலக்கிக்கொண்டால், நீங்கள் தாழ்ந்த உலகினில் பிறக்காமல் மாறாக மனிதராகவோ அல்லது கடவுளின் உலகினிலோ பிறப்பெடுப்பீர்கள். நீங்கள் மனிதராகவோ அல்லது கடவுளாகவோ பிறப்பெடுத்தாலும் கூட இறுதியில் அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப்போவதில்லை – இவை அனைத்துமே துன்பப்படும் இயல்கில் இருக்கிறது. அது ஏன் அப்படி இருக்கிறது? நீங்கள் உயர் நிலையை அடைந்தால் தாழ்ந்த நிலைக்கு வீழ்வீர்கள்; நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்தால், உயர்ந்த நிலைக்கு எழுவீர்கள். இதில் இருந்து துன்பப்படுதலுக்கு ஒரு பெரிய சவால் இருக்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் பசியாக இருந்தால், நீங்கள் உணவு உண்பீர்கள்; ஆனால் நீங்கள் அதிகம் சாப்பிட்டால், அதற்கான விளைவைப் பெறுவீர்கள். நீங்கள் குளிராக உணர்ந்தால், வெப்பத்தை இயக்கி அதிக வெப்பத்தை பெறுவீர்கள்; அதன் பின்னர் நீங்கள் அமைதி கொள்வீர்கள். இது போன்ற அனைத்து வகையான துன்பப்படுதல்களும் இருக்கின்றன.

சம்சாரா (கட்டுப்பாட்டின்றி நிகழும் இருத்தல்) இது போன்ற துன்பப்படுதல்களை உள்ளடக்கியுள்ளன. இது கர்மா மற்றும் பல்வேறு சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளின் முடிவு. நாம் வெற்றிடத்தின் ஞானஒளி அல்லது அடையாளமற்ற தன்மையை மேம்படுத்த வேண்டும் (பாகுபடுத்தும் விழிப்புணர்வு).

சம்சாராவின் எல்லையை அடைந்தவர்களை நாம் உதாரணங்களாக பார்க்கலாம், பதினாறு அருகதர்கள் மற்றும் பல்வேறு இதர ஆர்யாஸ்கள் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். நம்முடைய சொந்த சம்சாரிய இருத்தலுக்கு நம்மால் முடிவு வைக்க முடியும் என்றாலும், இதனைச் செய்வதற்கு அது போதுமானதல்ல, ஏனெனில் அனைத்து வரையறைக்குட்பட்ட உயிர்களையும்(உயிரினங்கள்) விட நம்மிடம் யாரும் அன்பாக இருக்கப்போவதில்லை.  நாம் மாமிசத்தை மகிழ்ந்து உண்கிறோமென்றால் அது விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதில் இருந்து வந்தாலும் அவை ஆரோக்கியமானவை. குளிர்காலத்தில், நாம் கம்பளி மற்றும் விலங்கின் மென்மயிரால் ஆன கோட்களை அணிகிறோம் அவையும் விலங்குகளில் இருந்தே வருகிறது. அவை மிகுந்த அன்புடன் இவற்றை நமக்குத் தருகின்றன. நமக்கு நாமே புத்தரின் நிலையை அடைவதன் மூலம் இந்த அன்பை நாம் அனைத்து உயிரினங்களுக்கும் திரும்ப செலுத்த வேண்டும் – பின்னர் நம்மால் அனைத்து வரையறைக்குட்பட்ட உயிரினங்களின் நோக்கங்களையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியும். 

சிராவகர்கள் மற்றும் அருகதர்களால் அனைத்து மட்டுப்படுத்தப்பட்ட உயிரினங்களின் நோக்கங்களையும் பூர்த்தி செய்ய முடியாது. இதனைச் செய்யக் கூடிய ஒரே ஒருவார் யாரென்றால் அவர் புத்தர், எனவே தான் அவர்களுக்கு உண்மையில் உதவும் வகையில் முறையே இதனை நாம் அவசியம் செய்ய வேண்டும். நமக்கு நாமே புத்தர்களாக வேண்டும். 

நாம் இதனை எப்படிச் செய்யலாம்? தர்மத்தை பின்பற்றுவதன் மூலம். இந்தியாவில், மிகவும் திறமையான மகாசித்தர்கள் இருந்தனர், அவர்களில் 80 பேரின் வாழ்க்கைக்கதைகள் நம்மிடம் இருக்கின்றன, ஆனால் உண்மையில் அவற்றில் இவை எண்ணிலடங்காதவை. திபெத்தில், மிலரேபாவின் உதாரணம், மற்றும் கெக்யூ, நிங்மா, சக்யா மற்றும் கெலுக் பள்ளிகளின் பல இதர பெரிய குருக்களின் உதாரணங்கள் உள்ளன.

ஒரு முறை நாம் புத்தரின் நிலையை அடைந்தால், நம்முடைய தர்ம முயற்சிகள் முடிவுக்கு வருகின்றன. நாம் செய்யும் தர்மப் பணியானது தொடக்கத்தில் மிகவும் கடினமாகவும், ஆனால் போகப் போக எளிமையாகவும் நாம் செய்யச் செய்ய நாம் மேலும் மேலும் மகிழ்ச்சியைனவராக மாறுவோம். நம்முடைய தர்மப்பணியை முழு மகிழ்ச்சி நிலையில் நாம் முடிப்போம். உலகச் செயலானது நமக்கு அதிக துன்பத்தை மட்டுமே கொடுக்கும்.  

எடுத்துக்காட்டாக, மக்கள் இறக்கும் போது, அவர்களின் வாழ்க்கை உச்சத்தை அடைகிறது அல்லது மரணத்தின் இறுதிப்புள்ளியானது துக்கம் மற்றும் துன்பத்திற்கு மட்டுமே காரணங்களாகின்றன, அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் விட்டுச்செல்பவர்களுக்கும் கூடத் தான், உதாரணமாக அவர்களின் இறுதிச்சடங்குகள். நாம் இதைப் பற்றி சிந்தித்து சில வகை தர்மப் பணியைச் செய்ய வேண்டும். உச்சத்தை அடைதல் அல்லது ஞானமடைதலுடன் தர்மத்தின் இறுதிப்புள்ளி நமக்கு மட்டுமின்றி மற்ற அனைவருக்கும் கூட மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது. 

பத்து எதிர்மறை செயல்களைச் செய்ய ஒப்புக்கொள்வதில் இருந்து விலகி இருக்க வேண்டும். நாம் நேர்மறைச் செயல்களைச் செய்தால், மகிழ்ச்சியை அனுபவிப்போம், மேலும் நாம் எதிர்மறைச் செயல்களைச் செய்தால், மகிழ்ச்சியின்மையை அனுபவிப்போம். நம்முடைய செயல்களின் முடிவுகளை நாம் பகுப்பாய வேண்டும், நமது செயல்களின் காரணங்களான நம்முடைய சொந்த மனதையும் பகுப்பாய வேண்டும். நாம் ஆராயும் போது, நம்மிடம் மூன்று விஷத்தனமான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகள் இருப்பதை பார்க்கலாம்: ஆசை, விரோதம் மற்றும் குறுகிய மனப்பான்மையின் அறியாமை (அப்பாவித்தனம்).

இவற்றில் இருந்து, நாம் 84,000 வகையான சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளைப் பெறலாம். இந்த 84,000 மனக்குழப்பமே நம்முடைய முக்கிய எதிரிகள், எனவே நாம் அதற்குள் நாம் பார்க்க வேண்டும், எதிரிகளை நம்மைச் சுற்றி தேடக் கூடாது. இந்த 84,000-க்குள் முக்கியமான ஒன்று என்றால் இந்த மூன்று விஷங்கள், மேலும் மோசமான ஒன்று என்றால் குறுகிய மனதின் அறியாமை அல்லது அப்பாவித்தனம், சரியானது என்றால் அது நம்முடைய சொந்த மன – நீரோட்டங்கள். 

சுருக்கமாகச் சொன்னால், நமக்குள்ளாகவே நாம் பார்த்து இந்த உள்ளார்ந்த எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும். அதனால் தான் புத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள் “உள்ளார்ந்தவர்கள்” (நங்-பா) என்று அழைக்கப்படுகிறார்கள். நம்முடைய மனதின் தொடர்ச்சிகளில் இந்த சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு நாம் முற்று வைத்தால், பிறகு நம்முடைய அனைத்து துன்பத்திற்கும் முடிவு காண முடியும். இதனைச் செய்வதற்காக செயலாற்றுபவர் யாரோ அவரே தர்மத்தை பின்பற்றுபவராவார்.

தனக்குள்ளாகவே சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளை அகற்றுவதற்காக ஒரு செயலாற்றும் தர்மச் செயலானது ஹினாயனா வாகனத்தின் தர்மச் செயலாகும். நாம் நம்முடைய மனக்குழப்பங்களை அகற்றுவதற்கு நம்முடைய சொந்த துன்பத்தில் இருந்து மட்டும் வெளியேறக் கூடாது, மாறாக மற்றவர்களையும் மிக முக்கியமானவர்களாகப் பார்த்து நம்முடைய குழப்பத்தை வெல்வதற்கு பாடுபட்டால் அவர்களின் மனதில் இருந்தும் கூட சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளை அகற்ற அவர்களுக்கு உதவ முடியும், பின்னர் நாம் மஹாயனா பயிற்சியாளர்களாகிறோம். உடல் அடிப்படையில் செயலாற்றும் போது, நாம் மஹாயனர்களாக மாற முயற்சிக்க வேண்டும் இதன் முடிவு நம்மால் புத்தரின் ஞானநிலையை அடைய முடியும். 

இதன் முக்கியப் புள்ளியானது எப்போதும் அனைவருக்கும் பலன் தர முயற்சிக்க வேண்டும் மேலும் யாருக்கும் எப்போதும் தீங்கு ஏற்படுத்த காரணமாக இருக்கக் கூடாது. “ஓம் மணி பத்மே ஹம்” என்பதை பாராயணம் செய்தால், “இதனைச் செய்வதன் நேர்மறை சக்தியானது அனைத்து மட்டுப்படுத்தப்பட்ட உயிரினங்களுக்கு பலன் தர வேண்டும், என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். 

செயலாற்றுவதன் அடிப்படையில் நாம் கொண்டிருக்கும் இந்த உடல்கள் கிடைப்பது கஷ்டம் : மனிதனாக பிறப்பது எளிதில் வருவதல்ல. எடுத்துக்காட்டாக, உலகைப் பாருங்கள். அதில் பெருவாரியானது கடல்பகுதி, இந்த அனைத்து பெருங்கடல்களிலும் எவ்வளவு மீன் இருக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள். அதிக எண்ணிக்கையிலான உயிர் வாழ் உருவங்கள் விலங்குகள் மற்றும் பூச்சிகள். ஒட்டு மொத்த கிரகத்தை பற்றியும் அதில் இருக்கும் விலங்குகள் மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கை நாம் சிந்தித்தால், மனிதனாகப் பிறப்பது எவ்வளவு அரிது என்பதைக் காணலாம்.   

சுருக்கம்

தர்மத்தில், உணர்தல் மற்றும் உள்ளுணர்வுகள் மிக தாமதமாகவே வரும். சில நாட்கள், வாரங்கள், அல்லது மாதங்களில் நிகழாது. வெகு சில மனிதர்களே உண்மையில் தர்மத்தை பற்றி சிந்திக்கிறார்கள், அவர் மட்டுமே அதனை உணர்கிறார்கள். நாம் நீண்ட காலத்திற்கு அதிலேயே செயலாற்ற வேண்டும். உங்களுக்கு இங்கே மிக-தகுதிவாய்ந்த கெஷ் இருக்கிறார் அவர் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பார். நீண்ட காலத்திற்கு, புத்த தர்மம் தொடர்ந்து வளர்ச்சிகண்டு பரவலாக்கப்படும். இன்னமும் இது அதிகரிக்கிறது மிகவும் உயிர்ப்புடன் இருக்கிறது. தனக்கு ஐந்து சீடர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று முதலில் புத்தர் நினைத்தார். அது அவர்களிடம் இருந்து பரவி தற்போது இவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறது. 

ஷக்யமுனிக்கு சமமான ஒருவர் இப்போது நம்முடன் இருக்கிறார், புனிதர் தலாய் லாமா, அவர் அக்டோபரில் இங்கே இருப்பார். புனிதர் என்ன போதனையைக் கொடுத்தாலும், அதனை இதயத்திற்கு எடுத்துச் சென்று நேர்மையுடன் அதனை பயிற்சியுங்கள். போதனையின் சாராம்சமானது எந்த உயிருக்கும் எப்போதும் தீங்கு  ஏற்படுத்தாமை மற்றும் தீங்கான சிந்தனைகளைக் கொள்ளாமல் இருத்தல் – அவர்களுக்குப் பலனை மட்டுமே தர முயற்சியுங்கள். இதுவே முக்கிய புள்ளி. நீங்கள் இவ்வாறு செயல்பட்டால், எதிர்காலத்தில் அது உங்களுக்குப் பெரிய பலனைக் கொண்டு வரும். 

Top