தர்மத்தை பின்பற்றி, துன்பத்தைத் தவிர்த்தல்

தர்மம் என்பது சமஸ்கிருத வார்த்தை, ச்சோ (சோஸ்) என திபத்திய மொழியில் சொல்லப்படுகிறது. அதன் அர்த்தம் தாங்கிப்பிடி அல்லது மேல் நோக்கி உயர்த்து. மேல்நோக்கி உயர்த்து அல்லது சரியாக பேணுதல் என்றால் என்ன? துன்பத்தை வெளியேற்றி, மகிழ்ச்சியை அடைதலே. தர்மம் நமக்குமட்டுமல்ல, வாழும் அனைத்து ஜீவராசிகளுக்குமானது.

துன்பத்தை உணர்தல்

இரண்டு வகைகளில் துன்பத்தை உணரமுடியும்: மனிதர்களாகிய நமக்கு உடனே தென்படுவது மற்றும் கூடுதல் புலனறிவு இன்றி உடனே காண இயலாதவை. குழந்தைப்பேறு வலி, கெட்ட சூழலால் நோய் தொற்று ஏற்படுதல், முதிர்வை நோக்கிய பயணத்தால் வயோதீகத்தை அடைதல் மற்றும் மரணத்தின் கொடூரம் என்று நமது முன்னோர் பட்டியலிட்டுள்ளனர்.

மரணத்திற்கு பிறகான வலியை சாதாரணமாக நம்மால் காண இயலாது. மரணத்திற்கு பின் நாம் அனைவரும் மீண்டும் மனிதர்களாக மறு பிறப்பெடுப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அது அப்படிதான் இருக்க வேண்டும் என்பதல்ல. அப்படி பரிணாமம் நடக்கும் என நாம் கருதுவதற்கு சரியாக காரணமும் இல்லை. மரணத்திற்கு பிறகு நாம் மறு பிறப்பு எடுக்காமலேயே போகலாம்.

ஒரு குறிப்பிட்ட மறு பிறப்புக்கு பிறகு அது எப்படி நிகழ்ந்தது என்பதை தற்போதைய அறிவின்பால் அதை உணரமுடியாது. தற்கால வாழ்வில் நேர்மறை கர்மங்களை செய்தால், வருங்காலத்தில் நிச்சயம் மகிழ்ச்சியான வகையில் மறுபிறப்பை எடுப்போம். அதைப்போலவே எதிர்மறை கர்மங்களைச் செய்தால் மகிழ்ச்சியான மறுபிறப்பிற்கு வாய்ப்பில்லை, ஆனால், குறையுடன் கூடிய உயிரினமாக சிரமப்படுவோம். இதுதான் சாத்தியம். மறுபிறப்பு அப்படித்தான் நடக்கிறது. கோதுமையின் விதையை நட்டால் என்ன முளைக்குமோ அதுதான் கோதுமை பயிர். அரிசியை விதைத்தால் அரிசி விளையும். அதைப்போலவே, எதிர்மறை கர்மங்களைக் கொண்டு மறுபிறப்புக்கான விதையை நட்டால், முன்று மடங்கு குறையுடன் நகரம் உருவாகும், பெரும்பசியுடன் இருக்கும் பேய் அல்லது ஒரு விலங்காக பிறப்பெடுப்போம்.

நான்கு வித்தியாசமான நிலை அல்லது நரகத்தின் சாம்ராஜ்யம்: கடுமையான வெப்பம், மிகக் கடுமையான குளிர், நரகத்திற்கு அருகிலான நிலை மற்றும் நிலையற்ற நரகம். அதில் கடுமையான வெப்பம் கொண்ட நரகங்கள் மேலும் எட்டாக பிரிக்கப்படுகின்றன. அதில் முதலானது உயிர்ப்பிற்கும் நரகம். இங்கு குறைவாக துன்பம் இருக்கும். துன்பத்தை அனுபவிப்பது இங்கு தொடங்கிறது, நரகத்தின் தீயில் ஒருவர் சிக்கிக்கொள்வதில் ஆரம்பித்து, இரக்கமற்ற வெப்பம் மிகுந்த நரகத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். உயிர்ப்பிக்கும் நரகத்தில் கீழாக அடுக்கடுக்காக நரகங்கள் இருக்கும், ஒவ்வொன்றாக சித்திரவதையின் கொடூரம் அதிகரிக்கும்.

நரகத்தின் உருவங்கள் மற்றும் பசியுடன் இருக்கும் பேய் ஆகியவை நமது கண்களுக்கு புலப்படுவதில்லை, சில விலங்குகள் அவைகளின் கண்களால் அவற்றைக் காணக்கூடும். ஒருவேளை நாமே விலங்குகளாக மறு பிறப்பு எடுத்தால் நாம் சாலையில் சுற்றும் விலங்குகளை பார்ப்போம், இந்தியாவில் நம்மைச்சுற்றிவரும் விலங்குகளை நிபந்தனைகளுடன் கண்போம். இப்படியான துன்பங்களை அனுபவிப்பதிலிருந்தும், கீழான மறு பிறப்பிலிருந்தும் நம்மை தர்மம் பாதுகாக்கிறது. மறுபிறப்பின் ஒட்டுமொத்த நகர்வும், முழுமையாக கட்டுப்படுத்த முடியாத உலகப்பற்றின் வடிவம், அதில் தான் துன்பத்தின் இயல்பு இருக்கிறது. உலகப்பற்றினால் ஏற்படும் துன்பத்திலிருந்து நம்மை பாதுகாப்பதுதான் தர்மம். மேலும், மஹாயானா தர்மம் என்ற கற்றல் நமக்கும், நம்மைச்சுற்றி இருப்பவர்களையும் காக்கும் அற்புத வாகனம்.

சரணடைதலின் பாதுகாப்பான திசை

பெளத்ததில் சரணடைதலின் பொன்னான மூன்று அம்சங்கள் குறித்து நாம் அதிகளவு கேட்டிருப்போம் – புத்தம், தர்மம், சங்கம். இதில் முதலாவது தர்மத்தை போதிப்பதால் உள்ளார்ந்த எழுச்சியை அடைய உதவுகிறது. வாரணாசியில் தன் சீடர்களுக்கு முக்கியமான நான்கு மேன்மையான உண்மைகளை போதித்ததன் மூலம் தர்மத்தின் சக்கரத்தை முதன் முதலில் பெளத்த சாக்யமுனி சுழற்றினார். நான்கு உண்மைகளின் இறுதி – உண்மையான வழி – இது தான் விடுதலையை எட்டுவதற்கான தர்மத்தை பயிற்சிப்பது ஆகும். இதுதான் தர்மத்தின் அதிர்ஷ்டக்கல் எனப்படும் சரணடைதலின் பாதுகாப்பான திசையின் நோக்கம்.

தர்மத்தை கடைபிடித்தல் என்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளன: உலகப்பற்றினால் நிகழும் துன்பங்களின் வேர்களை கண்டறிதல் மற்றும் அதை வேருடன் அழித்தல். பற்றின் வேர் எது? சுயநலத்தின் பேராசை கொள்ளுதல் மற்றும் நம்பமுடியாத உலகப்பற்றின் தொடர்ச்சியுமே அதன் வேர். துன்பத்தை தரும் அந்த பேராசையை வெறுக்கும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்தலுக்கான உலகப்பற்றைப் பெற பேராசை அவசியமில்லை என்பதை நாம் உணரவேண்டும். அதுவே ஒருவரின் தன்னலமற்ற ஞானம் அல்லது சுயஅடையாளமற்றதன்மை எனப்படுகிறது. இந்த தன்னலமற்ற நிலையை உணர்தலே துன்பத்திலிருந்து விடுதலையை கொடுக்கும்.  

உலகப்பற்றினால் ஏற்படும் துன்பம் எந்த ஒரு காரணமும் இன்றி ஏற்படாது என்பதை உணர்கிறோம். அவர்கள் செய்த பாவகாரியங்களால் உண்டாகும் கருமவினைகளால் விளையும் தொல்லைக்குள்ளாக்கும் உணர்வுகள் மற்றும் அரக்கத்தன்மை (புரிதலின்மை) ஆகியவையே முக்கிய காரணிகள். தொல்லைக்குள்ளாக்கும் அனைத்து உணர்வுகளின் ஆணிவேர், அரக்கத்தன்மைக்கு ஒருவரது பேராசையே காரணம். இதை எப்போது நான் புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான், பேராசையின் பிடியிலிருந்து தப்பிப்பது குறித்து யோசிக்கிறோம். மனநலன் காக்க நாம் இன்னும் முயற்சிக்காதது ஏன்? சுயநலத்தை நாம் புரிந்துகொள்ள முடியாதது ஏன்? அதற்கு முக்கிய காரணம் நிலையில்லாத தன்மை குறித்தும், இறப்பு குறித்தும் விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. 

மரணம் மற்றும் நிலையில்லாதன்மை

மரணமே பிறப்பின் ஒரே முடிவு. பிறக்கும் நம் அனைவரும் இறக்கத்தான் போகிறோம். இறப்பைச் சந்திக்காத ஒரு உயிரினம் கூட இப்புவியில் வாழவில்லை. மனிதர்களும் பல வகைகளில் மரணத்திலிருந்து தப்பிக்க பார்க்கிறார்கள், ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை. எந்த மருந்தும் ஒருவரை மரணத்திலிருந்து காப்பாற்றாது. 

சும்மா யோசித்துபாருங்கள், “நான் சாகப்போகிறேன்”, எனவே சாவுக்காக நான் தயாராவது சரியானதுதானா? நிச்சயமாக ஒவ்வொருவரும் சாகத்தான் போகிறோம், ஆனால், அதையே எண்ணிக்கொண்டிருப்பது ஒருபோது ஆற்றலை தராது. இது சரியான முறையும் இல்லை. அதுபோலவே, நாம் சிதையப்போகிறோம், நமது உடல் அழுகிவிடும் என எண்ணுவது போதுமானது அல்ல, நமது வீழ்ச்சியை தடுக்க என்ன செய்யபோகிறோம் என்பதை யோசிப்பதே சரியானது.

மரணம் குறித்து அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பதிலிருந்து தப்பிக்க மரணம் குறித்த தியானம் அவசியமாகிறது, பலனளிக்கிறது. வாழ்வில் எதிர்மறை காரியங்களைச் செய்தவர்கள், தங்களது இறுதி நாட்களில் மிகக்கொடூரமான மரணத்தை அடைவார்கள். அவர்கள் கண்ணீர் வடிப்பார்கள், அந்தக்கண்ணீர் கன்னங்களில் ஓடும், வாய் நடுங்கும், அணிந்திருக்கும் துணியிலேயே இயற்கை உபாதைகளை கழித்திருப்பார்கள் மற்றும் இந்த நிலையை விட இன்னும் மோசமாகும். அழிவு காரியங்களை வாழ்விலய்தவர்களுக்கு இறுதியில் என்ன நடக்கும் என்பதற்காக சாட்சியங்கள்தான் இவை.

இதற்கு மாற்றாக, வாழ்வில் அழிவு காரியங்களை செய்யாமல் இருந்தால், நாம் மரணத்தை எதிர்கொள்வது மிக எளிதாக அமையும். குழந்தை தனது பெற்றோருடன் வீட்டுக்கு திரும்புதலை போல் மிகவும் கொண்டாட்டகரமாக மரணம் அமையும். நம்மை நாமே சுத்திகரித்துக்கொண்டால் மகிழ்ச்சியாக இறப்போம். செய்யக்கூடாத 10 மோசமான காரியங்களை செய்யாமல் இருப்பதும், செய்ய வேண்டிய 10 நல்ல காரியங்களை செய்வதுமே நமக்கு மரணத்தை எளிதாக்கும் அதேபோல் நல்ல முறையாக வலியின்றி மறுபிறப்பும் எடுக்க முடியும். 

நல்ல நிலையிலான மறுபிறப்பை நம்மால் உறுதி செய்ய முடியும். மருத்துவக்குணம் கொண்ட செடியின் விதையை நட்டால், மருத்துவ நற்பலன்கொண்ட மரத்தை நாம் பெறுவோம். விஷச்செடியை நட்டால், விசம் கொண்ட கனியைத்தரும் மரத்தைத்தான் நாம் பெறுவோம். அந்த வகையில், நற்செயல்களைச் செய்தால், எதிர்காலத்தில் நல்ல மறுபிறப்பை அடைவோம். நல்வாய்ப்பாக மனதளவிலும், உடலளவிலும் நல்ல நிலையை நாம் பெற்றுள்ளோம். தர்மத்தின் அடிப்படை கற்றல் – அழிவை நோக்கி இழுத்துச்செல்லும் பேராசைகளை தவிர்த்தல் மற்றும் நல்ல காரியங்களை செய்ய விழைதல் – இந்த முறை பெளத்ததில் மட்டுமல்ல, கிறித்துவம் உள்ளிட்ட பிற பல மதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

நிலையற்ற தன்மையையும், மரணத்தையும் நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? ஏற்கனவே சொன்னபடி, சும்மா யோசித்துப்பாருங்கள், “நான் சாகப்போகிறேன்”, என நினைப்பது எந்தவகையிலும் பயன் தரப்போவதில்லை. அதற்கு பதிலான நாம் இப்படி யோசிக்க வேண்டும்: “10 அழிவுகரமான காரியங்களை நான் செய்திருந்தால், மரணத்தைப்பற்றிய பயம் எனக்கு இருக்கும், மறுப்பிறப்புக்கு எடுக்க வாய்ப்பில்லாமலும் போகலாம். மற்றொரு பக்கம், எனது வாழ்வில் நேர்மறையான காரியங்களை செய்திருந்தால், மரணத்தை எதிர்அகொள்ள கஷ்டப்படமாட்டேன் மற்றும் மேம்பட்ட வகையில் மறுபிறப்பு எடுப்பேன்” – இதுதான் மரணத்தை எதிர்கொள்ள மிகச்சரியான வழி.

இந்த தியானம் வெறுமனே இருண்ட, அவநம்பிக்கை தரும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை, “நான் சாகத்தான் போகிறேன், அதில் என்னால் எதையும் செய்ய முடியாது”. இப்படி யோசிப்பதற்குபதில், நாம் சாகும் போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.  “சாவுக்கு பிறகு நான் எங்கு செல்வேன்? என்ன மாதிரியான பாதிப்புகளை நான் ஏற்படுத்தியுள்ளேன்? எனது மரணத்தை நான் மகிழ்ச்சிக்குறியதாக மாற்றிக்கொள்ள முடியுமா? எனது மறுபிறப்பையும் மகிழ்ச்சிகரமானதாக்க முடியுமா? எப்படி?”

எதிர்கால மறுபிறப்புகளைப் பற்றி சிந்திக்கும் போது, உலகப்பற்றில் எந்த இடமும் நிலையில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த உடலில் நாம் பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல, அதுவும் நாளடைவில் அழியக்கூடியதுதான். சிலர் 100 ஆண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நாம் வரலாற்றில் படித்திருப்போம். இந்த கணக்குகள் எவ்வளவு அற்புதமானவை என்றாலும், இறுதியில் அந்த நபர் எப்படியாவது இறந்துதான் ஆகவேண்டும். உலகப்பற்றுடன் வாழும் ஒவ்வொரு உடலும் இறந்து போகும் பொருள்தான்.

அல்லது எங்கு சென்றால் மரணத்திலிருந்து தப்பிக்க முடியும். நாம் எங்கிருந்தால் என்ன? குறிப்பிட்ட நேரம் வந்தால் நாம் மரணித்துதான் ஆக வேண்டும். வகை வகையான மருந்துகளோ, மந்திரங்களோ, முறைகளோ எவையும் நம்மை உதவப்போவதில்லை. அறுவை சிகிச்சைகள் சில நோய்களிலிருந்து நமது உடலை காப்பாற்றும், ஆனால் எவையும் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றாது.

என்ன மாதிரியான மறுபிறப்பு எடுத்தாலும், அதுவும் மரணம் சம்பவிக்கும் பிறப்பே. அது தொடர்ந்து நடக்கும் செயல். நமது செயல்பாடுகளால் நீண்ட கால விளைவுகளை எதிர்பார்க்கலாம், பிறப்பு, வாழ்க்கை, மரணம் மற்றும் மறுபிறப்பு எப்படி அமைகிறது என்பதை சிந்திப்பது நேர்மறையான கர்மாவை உண்டாக்க உதவுகிறது.

 நாம் சில சமயங்களில் தர்மத்தை கடைபிடிக்க திட்டமிட்டலும், வழக்கமாக நாளையிலிருந்து, நாளை மறுநாளிலிருந்து எனத் தள்ளிப்போடுவோம். எப்படியிருந்தாலும், மரணம் எப்போது சம்பவிக்கும் என்பதை யாராலும் சொல்லமுடியாது. நூறு ஆண்டுகள் வாழ்வோம் என்று உறுதி அளிக்கப்பட்டால், அந்த நடைமுறையை பயிற்சிக்க முயற்சிப்போம். ஆனால், எப்போது மரணிப்போம் என்பதை யாராலும் கிஞ்சித்தும் சொல்லமுடியாது. பயிற்சியை/ நடைமுறையை தள்ளிப்போடுவது மிகவும் முட்டாள் தனமானது. சில மனிதர்கள் பிறப்பிற்கு முன்பே தாயின் கருப்பையிலேயே உயிரிழக்கிறார்கள், மேலும் சிலர் நடை பழகும் முன்பே சிறு குழந்தை பருவத்தில் மரணத்தை சந்திக்கின்றனர். நீண்ட நாள் வாழ்வோம் என்பதற்கு எந்த வழியும் இல்லை.

மனித உடல்கள் விரைவில் அழியக்கூடியவை. கல் அல்லது இரும்பில் செய்யப்பட்ட உடலாக இருந்தால் கூட கொஞ்சம் நிலைத்தன்மை பெற்றிருக்கும். ஆனால், முறையாக புலனாய்வு செய்தால், மனித உடல் மிகவும் பலவீனமானது என்பதை காணமுடியும். உடலில் மிக எளிதில் கோளாறு ஏற்பட்டுவிடும். மிகச்சிறிய எண்ணிடலங்காத பாகங்களைக் கொண்ட மிக அற்புதமான கைக்கடிகாரம் போன்றது உடல். அதில் நம்பத்தகுந்தது என்று எதுவுமில்லை. பல சூழ்நிலைகள் உயிரிழப்பை ஏற்படுத்தும்: விஷம் கலந்த உணவு, சிறிய விஷப் பூச்சிகளின் கடி அல்லது ஒரு சிறிய நச்சு முள். இப்படிப்பட்ட சிறியவைகளும் நம்மைக் கொல்லலாம். உயிர்வாழ பயன்படும் உணவு, நீர் ஆகியவை கூட ஒரு கால கட்டத்தில் நாம் மரணிக்க காரணமாக அமையலாம். எந்த சூழ்நிலையில், எந்த தருணத்தில், என்ன காரணத்தால் உயிரிழப்போம் என்பதில் எந்த உறுதியும் தெளிவும் இல்லை.

நம்மில் சிலர் 100 ஆண்டுகள் வாழ்வோம் என்று உறுதியாக உணர்ந்தாலும், அதில் பல ஆண்டுகளை கடந்துவிட்டோம், ஆனாலும், இன்னும் எதையும் சாதிக்க முடியவில்லை. இறங்கும் இடத்தை தொடர்ந்து நெருங்கிவரும் ரயில் பெட்டியில் தூங்கும் மனிதனைப்போல மரணத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். மரணத்தை நிறுத்த நாம் எதுவுமே செய்ய முடியாது. தொடர்ந்து நாம் மரணத்தை நெருங்கிச் செல்கிறோம்.

எத்தனை கோடி பணம், ஆபரணங்கள், வீடுகள் அல்லது விலையுயர்ந்த துணிமணிகளை நாம் சேர்த்துவைத்துள்ளோம் என்பதில் எந்த அர்த்தமும் கிடையாது, மரணிக்கும் போது இவை எதுவும் பயன்படவும் போவதில்லை. எப்போது நாம் இறக்கிறோமோ அப்போது வெறும் கையோடுதான் செல்கிறோம். மிகச்சிறிய பொருட்களைக் கூட நம்முடன் எடுத்துச்செல்லமுடியாது. உடலைக்கூட விட்டுச் செல்ல வேண்டிய நிலை. உடலும், மனதும் பிரிந்துவிடுகிறது மற்றும் மன ஓட்டம் அதன் பாட்டில் தொடர்கிறது. அதுமட்டுமல்ல, உடலை நம்மால் சொந்தம் கொண்டாட முடியாது, வாழ்நாள் முழுவதும் நமது உடல் என்று சொல்லும் அதைக்கூட நம்மால் எடுத்துச் செல்லமுடியாது. 

கர்மம்

மரணத்திற்கு பிறகு என்னென்ன நடக்கும்? நமது உடலை மட்டுமல்ல, நமது நண்பர்களையும், சொத்துக்களையும் விட்டுச்செல்ல வேண்டியதிருக்கும். வழித்துணையாக உதவி செய்ய யாராவது வருவார்களா? அல்லது நமது சுயநினைவை எதிர்கால வாழ்விற்கு எடுத்துச் செல்ல இயலுமா?

மரணத்திற்கு பிறகு உணர்வதற்கு எதோ இருக்கிறது: அதுதான் நாம் வாழ்நாள் முழுவதும் வளர்த்தெடுத்த கர்ம மரபுகள். ஒருவேளை நாம் 10 எதிர்மறை கர்மவினைகளை செய்திருந்தால், எதிர்மறை கர்ம மரபுகள் உண்டாகும், அல்லது கர்மக் கடன்கள் நமது மனஓட்டத்துடன் பயணித்து எதிர்கால மறு பிறப்புக்குச் சென்றுவிடும். பிறரைக் கொலை செய்தல், மற்றவர்களின் சொத்தை அபகரித்தல், பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்தல் ஆகியவற்றால் விளையும் உடலின் எதிர்மறை மன ஓட்டங்களில் பதியும். பொய் சொல்லுதல், பிறரைப்பற்றி இழிவாக பேசுதல், மக்களிடையே ஒற்றுமையை குலைத்தல், வார்த்தைகளால் பிறரைக் காயப்படுத்துதல் அல்லது அர்த்தமின்றி பேசுதல் ஆகிய எதிர்மறை கர்மவினைகள் அனைத்தும் நமது இறப்புவரை நம்முடன் பயணிக்கும். ஒருவேளை அதிக பேராசை இருந்தால், மற்றவர்களின் சொத்துக்களை அடைய நினைப்பீர்கள், மற்றவர்களை நோக்கி தவறான விருப்பத்தை கொண்டிருப்பீர்கள், அவர்களை நோகடிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு எதாவது கெட்டது நடக்க வேண்டும் என விரும்புவீர்கள்; அல்லது “கடந்த கால வாழ்க்கையும் இல்லை எதிர்கால வாழ்வும் இல்லை,” காரணம் மற்றும் விளைவுகள் என்பதுமில்லை,” “சரணடைதலின் பாதுகாப்பான திசையுமில்லை,” என ஒருதலைப் பட்சமாக எதிர்பதமாக முடிவு செய்துகொள்வீர்கள். மனதின் இந்த எதிர்மறை கர்ம நிகழ்வுகள் நேரடியாக மனதில் பதிவாகி எதிர்கால மறுபிறப்புக்குச் செல்லும்.

எதிராக செய்தாலும் நல்லது நடக்க வாய்ப்புள்ளது. நல்ல காரியங்களைச் செய்தால் கெட்ட மனநிலை உருவாவதை தடுக்க முடியும், கர்ம மரபுகளின் நேர்மறை எண்ணங்கள் மனஓட்டத்தில் பயணித்து எதிர்கால மறுபிறப்புக்கு தேவையான நல்ல சூழலை ஏற்படுத்தும். 

நான் இப்போது இருக்கும் சூழலை உணர்ந்துதான், நேர்மறை காரியங்களை செய்ய முயற்சிப்போம், அதேபோல் எதிர்மறை காரியங்களை தவிர்ப்போம். நமக்குள் இருக்கும் எதிர்மறை கர்மங்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க முயற்சிப்போம், எதிர்காலத்தை பாதிக்கும் ஒரு சிறிய கர்மக்கடனைக் கூட வைக்க கூடாது.

காரணம் மற்றும் பாதிப்பு இடையே எதுமாதிரியான பின்விளைவுகள் நடக்கின்றன என்பதை நாம் உற்று கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மனிதனை எடுத்துக்கொள்வோம், அவர் மிக நல்ல பழக்கங்களை கொண்டவர் என்றாலும், பேச்சில் அவசரக்காரர். ஒரு முறை பக்கத்தில் உள்ளவரைப் பார்த்து “நீ நாயைப்போல் பேசுகிறாய்” என்று கூறிவிட்டார். அதன் தாக்கம் என்னவென்றால், அவர் 500 முறை நாயாக மறுபிறப்பெடுத்துள்ளார். பார்த்தவரைக்கும் சிறிய நடவடிக்கை கூட பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் உண்மை.

அதைப்போலவே, சின்ன நேர்மறை காரியம் நல்ல முடிவையும் கொடுக்கிறது. உதாரணத்திற்கு குழந்தை ஒன்று பணிவாக மண்டியிட்டு புத்தரை வழிபட்டது, அதன் விளைவாகத்தான் அக்குழந்தை மிகச்சிறந்த பேரசர் அசோகராக மறுபிறப்பு எடுத்தது. அவர்தான் ஆயிரக்கணக்கான புத்த நினைவிடங்களை கட்டி, பல நூறு அற்புதமான காரியங்களை செய்தவர்.

துறவு மற்றும் இரக்கம்

நாம் செய்த கெட்ட காரியங்களின் தாக்கத்தின் அடிப்படையிலேயே நல்வாழ்வும், மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. கெட்ட காரியங்களைச் செய்தால் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என நாம் முடிவு செய்துகொள்ள வேண்டியதுதான், அப்படிபட்ட துன்பமில்லாத மறுபிறப்பு நடக்க வேண்டும் என மிக உறுதியாக விரும்ப வேண்டும், அதற்காக உருவாக்கப்பட்டதுதான் “துறவு”.

இது குறித்து எந்த வகையிலும் நாம் நமக்குள் சிந்திப்பதே தியானம் தான். முதலில், நாம் எதிர்கொண்டுவரும் துன்பம் குறித்து முழுமையாக விழிப்புணர்வு அடைய வேண்டும். பிறகு அந்த விழிப்புணர்வை மற்றவர்களிடயே பரப்பவேண்டும். எந்த ஜீவராசியும் துன்பப்பட விரும்புவதில்லை, இக்கட்டான துன்ப வலையில் இன்னும் சிக்கவில்லை. இந்த வகையான சிந்தனைதான் இரக்கத்தை நோக்கி இட்டுச்செல்கிறது. சொந்த துன்பங்களிலிருந்து நாம் விடுதலை அடைய விரும்பவில்லை என்றால், மற்றவர்கள் துன்பங்களிலிருந்து விடுதலையடைவதை நாம் எப்படி செய்யப்போகிறோம்? நமது துன்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஆனால் அதுமட்டுமே போதுமானதில்லை. நாம் பெற்ற நன்மையை மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் அனைவரும் அடைய வேண்டும். அனைவரும் துன்பங்களிலிருந்து விடுதலையடைய வேண்டும் என நாம் நமது மன அளவில் பயிற்ச்சிக்க வேண்டும், விரும்ப வேண்டும். இதுதான் அனைவருக்குமான, அதிக பலன் தரக்கூடிய சிந்தனையாக இருக்கும்.

நாம் ஏன் சக ஜீவராசிகள் பற்றி கவலைப்பட வேண்டும்? ஏனென்றால் நாம் அவர்களிடம் இருந்தான் அதிகளவு பெறுகிறோம். உதாரணத்திற்கு, நாம் அருந்தும் பால் மாடு மற்றும் எருமைகளிடம் இருந்து கிடைக்கிறது, கடும் குளிரிலிருந்து நம்மக் காக்கும் வெதுவெதுப்பான ஆடைகள் செம்மறியாடுகளிடம் இருந்து கிடைக்கிறது, இதுமாதிரி பலவற்றை சொல்லலாம். நாம் ஏன் அவர்களின் துன்பத்தை போக்க விழைய வேண்டும் என்பதற்கு இந்த சில உதாரணங்களே போதுமானது. 

எதுமாதிரியான பயிற்சிகளை செய்கிறோம் என்பதில் பெரிதாக எதுவுமில்லை – என்ன மத்திரத்தை உச்சரிக்கிறோம் என்பதிலுமில்லை – எப்போதும் நம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டியது, “இவை அனைத்து ஜீவராசிகளுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்” என்பதுதான். இதுவே நாம் உட்பட அனைவருக்கும் நல்லதைத் தரும். இப்படி செய்வது சாதாரண வாழ்வில் நமக்கு நல்ல பாராட்டுதலை பெற்றுத்தரும். உதாரணத்திற்கு, சுயநல எண்ணம் கொண்டவர் தன்னலத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படும் அவரை யாரும் விரும்ப மாட்டார்கள். மற்றொரு பக்கம், ஒருவர் எல்லோரிடத்திலும் அன்பாகவும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருந்தால், அனைவராலும் விரும்பப்படுவார். “எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அல்லது ஒருவரும் துன்பப்படக்கூடாது” என்பதை நமது அடிமனதில் பதியவைக்க வேண்டும்.  இதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவதன் மூலம் நமது சுயசிந்தனையில் பதிய வைக்க வேண்டும். இது மிகப்பெரியளவு நன்மை பயக்கும். இதுபோன்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள் பிற்காலத்தில் மிக அருமையான பெளத்தர்களாவும், போதிசிட்டாக்களாகவும், துறவர்களாகவும், இந்த உலகத்தில் வலம்வருகின்றனர். இதைச் செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட அருமையான விளைவுகள் உண்டாகும்! 

அன்புக்குரியவர்களை காக்க பிறரை துன்புறுத்தும் கர்மா

யாரவது நம்மை தாக்கும்போது நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் அறிவுறுத்துகிறோமா?

இந்தக்கேள்வி நமக்கு விரிவான பாடத்தை அறிமுகம் செய்கிறது. ஒருவர் உங்களது தலைப்பகுதியை குச்சி அல்லது மரக்கட்டையால் தாக்க முற்படுகிறார் என்றால் உங்களது முந்தைய கர்ம காரியத்தால் இப்படி நடக்கிறது என கண்ணை மூடி தியானம் செய்வதே சரியான பதிலடியாக இருக்கும். அப்படி செய்யும் இந்த நபர், எதிர்காலத்தில் நடக்கும் என நினைக்காமல், தனது கர்ம மரபை இப்போதே முதிர்வடைய முயற்சிக்கிறார். உங்களது மனஓட்டத்திலிருந்து எதிர்மறை கர்மக்கடனை நீக்கிய உங்களை தாக்கவந்தவருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

எனது கட்டுப்பாட்டில் உள்ள மனைவி அல்லது குழந்தையை ஒருவர் தாக்கினால்? அவர்களை நான் பாதுகாக்க வேண்டுமா? அப்படி செய்வது எதிர்மறை கர்ம காரியமா?

மனைவியையும், குழந்தையையும் காப்பற்றி காக்க வேண்டியது உங்களது கடமையும் மற்றும் பொறுப்பும், எனவே புத்திசாலித்தனமாக சாத்தியமான வகையில் செயல்பட வேண்டும். அதிபுத்திசாலித்தனமாக நீங்கள் நடந்து கொள்ளவேண்டும். தாக்க வந்துள்ளவர் மீது எதிர்தாக்குதல் நடத்தாமல் குழந்தை, மனைவியை காப்பாற்ற வேண்டும். வன்முறையற்ற வழியில் அவர்களை காப்பற்ற முயல வேண்டும். 

அவர் எனது குழந்தையை தாக்குவார் ஆனால் நான் அவரை தாக்க கூடாதா? காண்டுமிராண்டிதனமான, கொடூரமான செயல்களிலிருந்து எனது குழந்தையைக் காப்பது கடமையல்லவா? உயிரை விட்டுவிட வேண்டுமா?

தைரியத்துடன் சரியான புத்திசாலிதனத்துடன் இந்த சூழலை எதிர்கொள்ள வேண்டும். இதுமாதிரியான சூழலை கையாள, புத்தரின் முந்தைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நாம் கவனிக்க வேண்டும், புத்தர் அந்த பிறப்பில், புதையலைத்தேடி அலைந்த 500 பேர் கொண்ட கும்பலுக்கு கடல் வழிகாட்டியாக இருந்தார். அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மிகவும் பேராசை பிடித்தவராக இருந்தார். புதையலில் கிடைக்கும் பொன் ஆபரணங்கள் அனைத்தையும் அவரே எடுத்துக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டார்.  அதனால், 500 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டார். போதிசிட்டா (ஷக்யமுனி என்பது புத்தரது முன்பிறப்பு) இது குறித்து அறிந்துவைத்திருந்தார் மேலும் ஒருவர் 500 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த தவறான சூழல் உண்டாகியிருந்ததை அவர் உணர்ந்திருந்தார். எனவே 500 பேரையும் கொல்ல நினைத்தவரை கொலை செய்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மறுபிறப்பின் போது நரகத்திற்கு சென்றாலும் பரவாயில்லை என்று கருதுவது மிகப்பெரிய தைரியமான செயல். இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டு புத்தரைப்போல நீங்களும் உயிரை விடலாம்.

இதுமாதிரியான சூழ்நிலையில் கொலை செய்வது பாவம் ஆகாதா?

இந்தியவைச் சேர்ந்த மஹாயான புத்த ஞானி நாகர்ஜுனா தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் பிறரை காப்பாற்றவேண்டும் என்ற பெயரில் ஒருவர் பிற துன்ப காரியங்களைச் செய்தால், அவர் அந்த காரியங்கள் குறித்து விளக்க வேண்டியதிருக்கும். குழந்தை, மனைவியை காப்பாற்றும் பின்விளைவுகளை அறிந்தோ, அறியாமலோ சுயநலமின்றி செய்யும் காரியங்களில் வேறுபாடு இருக்கும். உங்களது எதிரியை நோகடித்தால் மறுபிறப்பின் போது துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே, அந்த சூழல்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும், “அந்த துன்பத்தை நான் ஏற்றுக்கொள்வேன், எனது குழந்தையும், மனைவியும் துன்பப்பட மாட்டார்கள்”. 

பெளத்தத்தின்படி இவை எதிர்மறை செயலா?

உங்களது குழந்தை, மனைவியை காப்பற்றுவது நேர்மறையான செயல்தான், ஆனால் எதிரியை துன்புறுத்துவது அழிவு காரியம், எதிர்மறையான செயல். சம்பவங்களின் பின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். 

நீங்கள் சொன்னபடி, ஒருவர் எதிர்மறை கர்மாவை உண்டாக்கினால், அவர் எதிர்காலத்தில் துன்பப்படுவார், ஒருவர் நல்லது செய்தால், மகிழ்ச்சியில் திளைப்பார். நற்காரியங்கள் மூலம் முழுமையாக இரட்சிப்பு கிடைக்குமா

இரட்சிப்பை எட்ட விரும்பினால், நீங்கள் பெளத்த கற்றல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு, கிறிஸ்துவத்தின் பாதையை பின்பற்றினால், நீங்கள் கிறிஸ்துவத்தின் கற்றலை முழுமையாக பின்பற்றவேண்டும். கிறிஸ்துவத்தில் இரட்சிப்பு சாத்தியமானது. நமது பாவங்களிலிருந்து இயேசு மட்டுமே காப்பாற்ற மாட்டார்; நம்மால் முடிந்தவற்றை செய்தாக வேண்டும். ஏன் பாவத்தை இயேசு எதிர்க்கிறார்? இயேசு சொன்னதை முழுமையாக பின்பற்றினால், கிறிஸ்துவத்தில் இரட்சிப்பு சாத்தியம். அதேபோல், புத்தரின் கற்றலை முறையாக பின்பற்றினால் பெளத்த “இரட்சிப்பு” – விடுதலை – சாத்தியம்தான்.

Top