இந்தியாவில் பிக்குனி கன்னியாஸ்திரிகள் முறையை நிறுவுதல்
முனைவர். அலெக்சாண்டர் பெர்சின்
புத்தரின் தாய்வழி அத்தை மற்றும் பௌத்தத்தை பின்பற்றும் 500 பெண்கள், ஆரம்ப காலகட்டத்தில் கன்னியாஸ்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இரு பாலினர் பிரம்மச்சரியத்தை பின்பற்றும் போது அந்த காலச் சமூகத்தில் இவர்கள் மீது ஏற்படும் ஒழுக்கம் குறித்த சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக துறவறம் வழங்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உறுதி மொழிகள் அளிக்கப்பட்டன.