இந்தியாவில் பிக்குனி கன்னியாஸ்திரிகள் முறையை நிறுவுதல்

02:29

முதல் துறவிகளை புத்தர் தாமாகவே "ஏஹி பிக்கு (இங்கே வாருங்கள், துறவி)" என்ற வார்த்தைகளைக் கூறி அழைத்தார். போதுமான எண்ணிக்கையில் துறவிகள் இந்த முறையில் நியமனம் செய்யப்பட்டபோது, அவர் பிக்குகளை வைத்து அவர்களுக்காகவே ஒரு முறையை (bsnyen-par rdzogs-pa,சமஸ். உபசம்பதா, பாலி: உபசம்பதா) நிறுவினார்.

பல்வேறு பாரம்பரியங்களின் அடிப்படையில் பார்த்தால் புத்தரின தாய்வழி அத்தையான, மஹாபிரஜபதி கௌதமி (Go’u-ta-mi sKye-dgu’i bdag-mo chen-moSkye-dgu’i bdag-mo, பாலி: மஹாபஜபதி கோதமி) அவரை கன்னியாஸ்திரியாக நியமிக்க புத்தரிடம் கோரிக்கை வைத்த போது, முதலில் அவர் அதை மறுத்தார். இருந்தாலும், மஹாபிரஜபதி, 500 பெண் சீடர்களுடன் சேர்ந்து, தலையை மொட்டையடித்து, மஞ்சள் அங்கி உடுத்தி, நாங்கள் வீடற்ற துறவிகள் என்று புத்தரை பின்பற்றத் தொடங்கினர் (rab-tu byung-ba, சமஸ். பிரகூரஜிதா, Pali: பப்பாஜ்ஜா). இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையும் கூட அவர் நியமனத்திற்காக கேட்ட போது மீண்டும் அவர் மறுத்தார், புத்தரின் சீடர் ஆனந்தா (Kun-dga’-bo) மஹாபிரஜபதி சார்பாகப் பரிந்து பேசியும் கூட புத்தர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

நான்காவது முறையாக கோரிக்கை வைக்கப்பட்ட போது, அவரும் வருங்கால கன்னியாஸ்திரிகளும் எட்டு கடுமையான கட்டுப்பாடுகளை (lci-ba'i chos, சமஸ். கருதம்மா, பாலி: கருதம்மா) கடைப்பிடிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகளின் சபதங்கள் எவ்வளவு காலம் கடைப்பிடிக்கப்பட்டாலும், கன்னியாஸ்திரிகளின் மூப்பு வரிசையானது துறவிகளை விட எப்போதும் குறைவாக இருக்கும். புத்தர் தனது காலத்தில் இந்தியாவின் கலாச்சார மதிப்புகளுக்கு இணங்க, சமூகத்தால் தனது இனத்திற்கும், அதன் விளைவாக தனது போதனைகளுக்கும் அவமரியாதை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினார். பாமர மக்களிடம் இருந்து கன்னியாஸ்திரிகளைப் பாதுகாப்பதற்காகவும், மக்களிடம் இருந்து அவர்களுக்கு மரியாதை செய்வதை உறுதிப்படுத்தவும் புத்தர் இவ்வாறு செய்தார். 

பண்டைய இந்தியாவில், பெண்கள் முதலில் தங்கள் தந்தையின் பாதுகாப்பு / மேற்பார்வையின் கீழ் இருந்தனர், பின்னர் அவர்களின் கணவர்கள் மற்றும் இறுதியாக அவர்களின் மகன்களின் பாதுகாப்பில் இருந்தனர். ஒற்றைப் பெண்களை விபச்சாரிகள் என சமூகத்தினர் கருதினர், ஆண் உறவினரின் பாதுகாப்பில் இல்லாத காரணத்தால் கன்னியாஸ்திரிகளையும் கூட விபச்சாரிகள் என்று அழைக்கும் வழக்கம் வினயாவில் உள்ளது. பிக்குளி சங்கத்தை பிக்கு சங்கத்துடன் இணைத்ததன் மூலம் அவர்களின் தனித்திருக்கும் அந்தஸ்து சமுதாயத்தின் கண்ணில் மரியாதைக்குரியதாக மாறியது.

சில பாரம்பரியங்களின்படி, எட்டு கருதம்மாக்களை ஏற்றுக்கொள்வது முதல் நியமனமாக அமைந்தது. மற்ற பாரம்பரியங்களின்படி, புத்தர், மஹாபிரஜாபதி மற்றும் அவரது ஐநூறு பெண்களைப் பின்பற்றுபவர்களின் ஆரம்ப நியமனத்தை ஆனந்தா தலைமையிலான பத்து பிக்குகளிடம் ஒப்படைத்தார். இரண்டிலும், பிக்குனிகளை நியமிப்பதற்கான ஆரம்பகால முறையானது பத்து பிக்குகள் கொண்ட குழுவாகும். இந்த முறையானது பொதுவாக "ஒற்றை பிக்கு சங்க நியமனம்" (pha'i dge-'dun rkyang-pa'i bsnyen-par rdzog-pa) ஆகும். 

நியமன நடைமுறையானது, அந்த நபரிடம் தடைகள் (பார்-சாட்-கி சோஸ், ஸ்கெட். அந்தரயிகாதர்மா, பாலி: அந்தரயிகாதம்மா) தொடர்பான கேள்விகளின் பட்டியலை உள்ளடக்கி கேட்கப்படும், அது அவர் முழு சபதங்களைக் கடைப்பிடிப்பதில் தடையாக இருக்கலாம். பிக்குவாக நியமிக்கப்பட இருக்கும் விண்ணப்பதாரர்களிடம் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளோடு, ஒரு பெண்ணாக அவரது உடற்கூறியல் தொடர்பான கூடுதல் கேள்விகளும் கேட்கப்படும்.

சில பிக்குனிகள் இதுபோன்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மிகுந்த அசௌகரியத்தை வெளிப்படுத்தியதால், புத்தர் "இரட்டை சங்க முறையை" (gnyis-tshogs-kyi sgo-nas bsnyen-par rdzogs-pa) நிறுவினார். இங்கே, பிக்குனி சங்கம் முதலில் பிக்குனியாக மாறுவதற்கு அந்தப் பெண்ணிற்குள்ள தகுதியைப் பற்றிய கேள்விகளைக் கேட்கிறது. அன்றைய நாளின் பிற்பகுதியில், பிக்குனி சங்கம் பிக்கு சங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டு கூட்டத்தை கூட்டுகிறது. பிக்கு சங்கத்தினர் நியமனத்தைக் கொடுக்கிறார்கள், அதே சமயம் பிக்குனி சங்கத்தினர் அதற்கு சாட்சியாகச் செயல்படுகின்றனர். 

முதலில், துறவற சமூகத்திற்கான சபதங்களில், "இயல்பில் பரிந்துரைக்கப்பட முடியாத செயல்கள்" மட்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை என்று சேர்க்கப்பட்டது (ரங்க்-பிஜின் கா-னா-மா-தோ-பா) -அதாவது உடல் மற்றும் வாய்மொழி செயல்கள், அனைவருக்கும் அழிவுகரமானவை, அது சாதாரணமாக இருந்ததாகவோ அல்லது நியமிக்கப்பட்டதாகவோ எதுவாக இருந்தாலும் சரி. இருப்பினும், நியமிக்கப்பட்ட நபர்களுக்கு, இவை பிரம்மச்சரியத்தின் சத்தியங்களை உள்ளடக்கியது.

காலப்போக்கில், "தடைசெய்யப்பட்ட பரிந்துரைக்க முடியாத செயல்கள்" (bcas-pa'i kha-na ma-tho-ba) தொடர்பான கூடுதல் உறுதிமொழிகளை அறிவித்தார் – அந்த உடல் மற்றும் வாய்மொழி நடவடிக்கைகள் இயல்பில் அழிவுகரமானதல்ல, ஆனால் பௌத்த துறவி சமூகம் மற்றும் புத்தரின் போதனைகளுக்கு சமூகத்தால் அவமரியாதை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட நபர்களுக்கு இந்தக் கூடுதல் உறுதிமொழிகள் ஆகும். இத்தகைய தடைகளை அறிவிக்கும் அதிகாரம் புத்தருக்கு மட்டுமே உண்டு. துறவிகளை விட கன்னியாஸ்திரிகள் கூடுதல் சபதங்களைப் பெற்றனர், ஏனென்றால் ஒவ்வொரு கூடுதல் சபதமும் ஒரு துறவி அல்லது கன்னியாஸ்திரியின் சரியில்லாத நடத்தை சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது. கன்னியாஸ்திரிகளின் சபதங்களில், துறவிகளுடனான தொடர்புமுறையின் போது கன்னியாஸ்திரிகளின் முறையற்ற நடத்தைகள் அடிப்படையில் நிறுவப்பட்ட உறுதிமொழிகளும் அடங்கும், அதே சமயம் துறவிகளின் சபதங்களில் இது போன்ற பரஸ்பர நிபந்தனைகள் இல்லை.

Top