மத குருக்கள்

நிஜமான புத்த பயிற்றுமுறை எதுவென்றால், புத்தரின் வழியொற்றி இடைவெளியின்றி பரம்பரை பரம்பரையாக கற்றுத்தரப்பட்டவை. இதில் நமக்கு நம்பிக்கை இருந்தால், சரியான புரிதலுடன் முறையாகப் பயன்படுத்தும்போது, ​​அவை நாம் விரும்பும் முடிவுகளை கொணரும்.

ஷக்யமுனி புத்தா

இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிகப்பெரிய போதகர் ஷக்யமுனி புத்தா, அவர் ஞானநிலை அடைந்த பின்னர் பிறரும் அதை பின்பற்றுவதற்கு வழிகாட்டினார்.

நாகார்ஜுனா

நாகார்ஜுனா, ஒரு முன்னோடி இந்திய குரு, புத்தரின் போதனையான வெற்றிட நிலை பற்றி விளக்கியவர்.

ஆர்யதேவா

ஆர்யதேவா(மத்தி 2-3ம் நூற்றாண்டு பொ.ஊ) நாகார்ஜுனாவின் பிரதான சிஷ்யை. குருவின் வெற்றிடநிலை போதனைகளை விரிவாகவும், விளக்கமாகவும் போதித்தவர்.

சாந்திதேவா

போதிசத்துவர்களின் நடைமுறையையும் நடத்தையையும் விளக்கிய சிறந்த இந்திய மாஸ்டர் சாந்திதேவா.

அதிஷா

தற்காலிக வீழ்ச்சியை சந்தித்த புத்த மதத்தை, அதிஷா இந்தியாவில் இருந்து மீண்டும் திபெத்திற்கே கொண்டு சென்றார்.

14வது தலாய் லாமா

திபெத்திய பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவர் 14வது தலாய் லாமா. 1989ம் ஆண்டு நோபல் பரிசை வென்றவர். அகிம்சை மற்றும் இரக்கத்திற்கு உலக அடையாளமாகத் திகழ்பவர்.

யோங்சின் லிங் ரின்போச்சே

14வது தலாய் லாமாவின் மூத்த ஆசிரியர் யோங்சின் லிங் ரின்போச்சே. 97வது காண்டன் த்ரிபாவான இவர், கெலுக்பா பாரம்பரியத்தின் ஆன்மீகத் தலைவர்.

சென்சாப் செர்காங் ரின்போச்

சென்சாப் செர்காங் ரின்போச் 14வது தலாய் லாமாவின் போதகர்களில் ஒருவர், விவாதங்களில் பங்குவகிக்கும் குருக்களில் முக்கியமானவர். திபெத்திய பௌத்தம் குறித்து முழுமையாக அறிந்த ஆசான்.

சென்சாப் செர்காங் ரின்போச்சே II

சென்சாப் செர்காங் ரின்போச்சே II என்பது சென்சாப் செர்காங் ரின்போச்சேவின் "துல்கு" மறுபிறவி ஆகும்.

கேஷே நாகவாங் தர்கியே

இந்தியாவின் தர்மசாலாவில், திபெத்திய படைப்புகள் மற்றும் காப்பகங்களின் நூலகத்தில் மேலை நாட்டினருக்கான பௌத்த மதத்தின் முன்னோடி ஆசிரியராக கேஷே நாகவாங் தர்கியே இருந்தார்.
Top