Study buddhism shantideva

சாந்திதேவா

திபெத்தின் அனைத்து பாரம்பரியங்களிலும் தோன்றிய பௌத்த மத போதனைகளின் மூலாதாரமாக இருந்த இந்தியர் சாந்திதேவா. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் குறிப்பாக 6 பரமிதங்கள்(6 முற்றுபெறு நிலைகளை) நடைமுறைப்படுத்தியவர்.

எட்டாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியாவின் வங்காளப் பகுதியில் உள்ள ஒரு நிலப்பரப்பு அரசனின் மகனாகப் பிறந்தவர் சாந்திதேவா. அவர் அரியணை ஏற இருந்தபோது, மஞ்சுஸ்ரீ அவரது கனவில் தோன்றி, “அரியணை உங்களுக்கு இல்லை” என்று கூறி இருக்கிறார். மஞ்சுஸ்ரீயின் ஆலோசனையைக் கேட்டு, அரியணையைத் துறந்து வனவாசம் சென்றார் சாந்திதேவா. அங்கு அவர் பல்வேறு பௌத்தர் அல்லாத குருக்களைச் சந்தித்து தனது கற்றலைத் தொடங்கினார், தீவிரமாக தியானம் செய்து உள்வாங்கப்பட்ட ஒருநிலைப்படுத்துதலின் மேம்பட்ட நிலைகளை அடைந்தார். ஆனால், ஷக்யமுனியைப் போலவே, ஆழ்ந்த ஒருநிலைப்படுத்துதல் நிலைகளுக்குத் திரும்புவது மட்டுமே  துன்பத்தின் வேர்களை அகற்றாது என்பதை அவர் உணர்ந்தார். மஞ்சுஸ்ரீயின் மீதான நம்பிக்கையால், அவர் இறுதியில் அனைத்து புத்தர்களின் ஞானத்தின் இந்த உருவகத்தின் உண்மையான தரிசனங்களைப் பெற்றார் மற்றும் அவரிடமிருந்து போதனைகளைப் பெற்றார்.

பின்னர் சாந்திதேவா காட்டை விட்டு வெளியேறி நாலந்தா துறவு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு அவர் மடாதிபதியால் துறவியாக நியமிக்கப்பட்டார். பெரிய சூத்திரங்கள் மற்றும் தந்திரங்களை அவர் அங்கே படித்து அவற்றை தீவிரமாக பயிற்சி செய்தார், ஆனால் அவர் தனது பயிற்சிகளை மறைத்தார். உண்பது, உறங்குவது, கழிப்பறைக்குச் செல்வதைத் தவிர அவர் எதுவும் செய்யவில்லை என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், உண்மையில், அவர் எப்போதும் தெளிவான ஒளி தியான நிலையில் இருந்தார்.

கடைசியில், மடத்தின் துறவிகள், அவர் பயனற்றவர் என்று நினைத்ததால், அவரை வெளியேற்ற முடிவு செய்தனர். ஒரு சாக்குப்போக்கிற்காக, அவர் தன்னையே முட்டாளாக்கிக் கொள்வார் என்று நினைத்து, அசல் உரையைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவரால் அடைய முடியாது என்று நினைத்து படிக்கட்டுகள் ஏதும் இல்லாதது போன்ற மிக உயரமான சிம்மாசனத்தை அமைத்தனர். ஆனால் அரியணை சாந்திதேவாவின் நிலைக்கு இறங்கியது, அதனால் அவர் எளிதாக ஏற முடிந்தது.

பின்னர் அவர் போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல், எனும் போதிச்சார்யாவதாரத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். வெற்றிடம் (வெறுமை) என்ற ஒன்பதாவது அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை அவர் சொல்லி முடித்ததும், அவர் மெல்ல வான் நோக்கி எழுந்தார். அந்த வசனமானது:

(IX.34) ஒரு (உண்மையில் இருக்கும்) செயல்பாட்டு நிகழ்வு அல்லது (உண்மையில் இருக்கும்) செயல்படாத ஒன்று (அதன் வெறுமை) இருமை மனத்தின் முன் நிலைக்காதபோது, மற்ற மாற்றுகள் அப்படி இருக்க முடியாது என்பதால், (ஒரு நிலையில்) மன நோக்கம் இல்லாமல் அதில் முழு சமாதானம் இருப்பது (சாத்தியமற்றது).

அதன் பிறகு, மீதமுள்ள உரையை வாசிக்கும், அவரது குரல் மட்டுமே கேட்டது. அவருடைய பார்வையில் இருந்தே அவர் மறைந்தார். துறவிகள் பின்னர் தங்கள் நினைவில் இருந்ததை வைத்து உரையை எழுதினர்.

சாந்திதேவா தனது போதனையில், நாலந்தாவில் அவர் எழுதிய மற்ற இரண்டு நூல்களைக் குறிப்பிட்டார்: (1) பயிற்சிகளின் தொகுப்பு, ஷிக்ஷாசமுக்காயா மற்றும் (2) சூத்திரங்களின் தொகுப்பு, சூத்ரசமுக்காயா, ஆனால் அவை எங்கு காணப்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாது. ஒரு குறிப்பிட்ட துறவியின் அறையின் மேற்கூரையின் விட்டங்களில் தான் மறைந்திருப்பதாக சாந்திதேவா தோன்றிக் கூறியதாக யாரோ ஒருவர் இறுதியாகச் சொன்னார். அந்த தரிசனத்தில் தான் திரும்பி வரப்போவதில்லை என்று சாந்திதேவா கூறி இருக்கிறார்.

சூத்திரங்களின் தொகுப்பு சூத்திரங்களின் முக்கிய புள்ளிகளை சுருக்கமாகக் கூறுகிறது, அதே நேரத்தில் பயிற்சிகளின் தொகுப்பு சூத்திர நடைமுறைகளை சுருக்கமாகக் கூறுகிறது.  திபெத்திய மொழிபெயர்ப்பின் இரண்டாம் நூலும், போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதலும் கூட  இந்திய வர்ணனைகளின் திபெத்திய மொழிபெயர்ப்புகளின் தொகுப்பான தெங்யூரில் காணப்படுகிறது. குனு லாமா ரின்போச்சின் கூற்றுப்படி, சூத்திரங்களின் தொகுப்பு திபெத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால் அது தெங்யூரில் காணப்படவில்லை.

போதிசத்வ நடத்தையில் ஈடுபடுவதற்கு, குறிப்பாக ஒன்பதாவது அத்தியாயத்தில் பல வர்ணனைகள் எழுதப்பட்டுள்ளன. திபெத்தியர்கள் அனைத்து மரபுகளிலிருந்தும் வந்தவர்கள், இந்த உரை திபெத்தில் உள்ள பௌத்த மதத்தின் அனைத்து பள்ளிகளையும் மையமாகக் கொண்டு உள்ளது. கெலுக் பாரம்பரியத்தில், சோங்காபாவின் பாதையின் தரப்படுத்தப்பட்ட நிலைகளின்(லாம்(லாம்-ரிம் சென்-மோ) மிகப்பெரிய வழங்கல் பயிற்சிகளின் தொகுப்பு மற்றும் போதிசத்வ நடத்தையில் ஈடுபடுவதை மிகவும் சார்ந்துள்ளது, குறிப்பாக சுயம் மற்றும் மற்றவர்களின் பரிமாற்றம் பற்றிய போதனைகளில் சார்பு அதிகம் இருக்கிறது.

போதிசத்வ நடத்தையில் ஈடுபடுவதற்கு சோங்காபா ஒரு தனி வர்ணனையை எழுதவில்லை என்றாலும், பாதையின் தரப்படுத்தப்பட்ட நிலைகள் பற்றிய அவரது மிகப்பெரிய வழங்கலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை உள்ளடங்கி இருக்கிறது. விளக்கக்கூடிய மற்றும் உறுதியான அர்த்தங்களின் சிறந்த விளக்கத்தின் அவரது சாராம்சம் (Drang-nges legs-bshad-snying-po) அத்தியாயம் ஒன்பதில் பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது.

14வது தலாய் லாமா, புத்தகயா, இந்தியா, ஜனவரி 1978, "போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல்" என்ற சொற்பொழிவின் பகுதி, டாக்டர் அலெக்சாண்டர் பெர்சினால் மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்பட்டது.
படஉதவி: himalayanart.org
Top