பதினான்காவது தலாய் லாமா (1935 - தற்போது வரை) திபெத்திய பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவர். 1989 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். தலாய் லாமா தனது மூன்று முக்கிய கடமைகளை ஊக்குவிப்பதற்காக, உலகெங்கும் அயராது பயணம் செய்கிறார்: ஒரு மனிதனாக, கருணை, மன்னிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் சுய ஒழுக்கம் ஆகிய அடிப்படை மனிதப் பண்புகளை ஊக்குவித்தல். ஒரு மத பயிற்றுநனராக மத நல்லிணக்கம் மற்றும் புரிதலை உருவாக்குதல். ஒரு திபெத்தியராக திபெத்தின் பௌத்த கலாச்சார அமைதி மற்றும் அகிம்சையை பாதுகாத்தல்.