உயிரியல் மற்றும் காரணம் அடிப்படையிலான இரக்கம்

ஆக்சிடோசின் ஹார்மோன் காரணமாக விலங்குகள் தன்னுடைய பிறந்த குட்டிகளுக்கு தாய்பாசத்தை காட்டி அனுபவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகள், மனிதன் மற்றும் விலங்கு என அனைவருமே அன்பு, பாசம், அரவணைப்பு தேவை என்று விரும்புவதில் சமமே. இரக்கப்படுவதற்கான விதைகள், அதன் பின்னர் – மற்றவர்கள் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக விரும்புதல் – நம்முடைய உயிரியல் உள்ளுணர்வில் இருக்கிறது, மேலும் நம்முடைய இருத்தல் என்பது இரக்கத்தை மிக அதிகமாக சார்ந்திருக்கிறது இதைப் பொருத்த வரையில் நாம் ஒவ்வொருவரும் சமம் என்று தர்க்க ரீதியில் வலுவூட்டப்படுகிறது.

எந்த ஒரு செயலின் முடிவும் உந்துதல் அடிப்படையிலானது. அதன் பின்னால் இருப்பது சிக்கலான உணர்வா அல்லது நேர்மறையான உணர்வா என்பதன் அடிப்படையில், ஒரே செயல் வெவ்வேறு முடிவுகளைக் கொண்டு வரும்.  இரக்கம் போன்ற அதே பொதுவான உணர்ச்சி ஒரு செயலைத் தூண்டும்போது கூட, அந்த உணர்ச்சியின் மன மற்றும் உணர்வால் விளைவில் கூட தாக்கத்தை ஏற்படுத்தும்.

மூன்று வகைகளான இரக்கம்

இரக்கம்  மூன்று வகைப்படும், அவையாவன: 

  • முதலாவது உறவுகள் மற்றும் அன்பானவர்களால் இயக்கப்படுகிறது. ஆனால், இணைப்பு அடிப்படையில் இருந்தால், இதற்கான நம்பிக்கை என்பது வரையறைக்குட்பட்டது. சில சூழ்நிலையில், மிக வேகமாக அது கோபமாக சொல்லப்போனால் வெறுப்பாகக் கூட மாற முடியும்.
  • இரண்டாவது வகையான இரக்கம் என்பது அனுதாபத்தின் அடிப்படையில் துன்பப்படுபவர்களை நோக்கி இயக்குவது. இவ்வகையான இரக்கத்தால், கீழிறங்கி நாம் அவர்களைப் பார்த்து அவர்களை விட சிறப்பாக உணர்வோம். இந்த இரண்டு வகைகளான இரக்கமானது சிக்கலான உணர்வுகளால் எழுகிறது, இதனால், அவை நமக்கு கஷ்டத்திற்கு வழிநடத்துகிறது. 
  • மூன்றாவது வகையான இரக்கம் என்பது நடுநிலையில்லாதது. இது புரிதல் மற்றும் மரியாதை அடிப்படையிலானது. இதனுடன், நம்மைப் போலவே தான் மற்றவர்களும் என்பதை உணர்வோம் : நம்மைப் போலவே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் துன்பப்படக் கூடாது என்று விரும்புவதற்கு அதே உரிமையை கொண்டவர்கள். அந்தப் புரிதலினால் நாம் நேசித்தல், இரக்கம் மற்றும் அவர்களை நோக்கிய அன்பை உணர்கிறோம் . இந்த மூன்றாவது வகையான இரக்கமே நிலையான வகை. இது பயிற்சி, கற்றல் மற்றும் பகுத்தறிவதால் மேம்படும். அதிக நிலையான இரக்கம், அதன் அதிக பலனைக் கொடுக்கும்.  

இந்த மூன்று வகைகளான இரக்கங்கள் இரண்டு பொதுவான வகைகளின் கீழ் வருகின்றன. முதல் இரண்டு வகைகள் நரம்பியல் சார்ந்த ஏதோ ஒன்றின் அடிப்படையில் தன்னிச்சையாக எழும் உணர்ச்சிகள். மூன்றாவது வகையானது பகுத்தறிவதன் அடிப்படையில் எழும் உணர்ச்சியாகும். 

பிறந்த குழந்தைக்கு தாயின் பாசம் மற்றும் உள்ளார்ந்த நெருக்கம்

பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட மற்றும் எந்த சார்பும் இல்லாத இரக்கம் இயற்கையால் வலுப்படுத்தப்படுகிறது. மனிதனோ, பாலூட்டியோ, அல்லது பறவையோ பிறப்பில் நாம் அனைவரும் தானாகவே சார்பில்லாத அன்பை நம்முடைய தாயிடம் உணர்வோம், நமக்கு அவரைத் தெரியாவிட்டாலும் இந்தப் பாசம் இருக்கும். கடல் ஆமைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் ஒரு இயற்கையான இணைப்பு, நெருக்கம் மற்றும் பாசத்தை நாம் அனைவரும் உணர்வோம். தாயும் கூட பிறந்த குழந்தையிடம் தானாக ஒரு இயல்பான நெருக்கம் மற்றும் பாசத்தை உணர்வார். அதனாலேயே அவள் குழந்தையை பாலூட்டி சீராட்டி பராமரிக்கிறார். இந்த பாசமான பராமரிப்பே குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான அடிப்படை.

இதில் இருந்து உயிரியல் அடிப்படையில் நெருக்கம் மற்றும் பாசமே இரக்கத்திற்கான விதைகள் என்பதை நாம் காணலாம். அவையே நாம் எப்போதும் பெறக்கூடிய மிகப்பெரிய பரிசுகள் மேலும் அவை நம்முடைய அன்னையிடம் இருந்து வருகிறது. நாம் இந்த விதைகளை பகுத்தறிவுடன் விதைத்து, கற்றால், அது உண்மையான இரக்கமாக வளர்ச்சி காணும் – சார்பில்லாத ஒவ்வொருவரையும் சமமாக நடத்தும் போக்கு, புரிதல் அடிப்படையில் நாம் அனைவரும் சமம் என உணர்தல்.

இரக்கத்தின் அடிப்படையில் மதச்சார்பற்ற நன்னெறிகள்

குழந்தைக்கு பாசம் என்பது மதம், சட்டங்கள் அல்லது காவல்துறையைக் கொண்டு அமல்படுத்துவது அல்ல. அது இயல்பாகவே வருகிறது. எனவே மதங்களால் போதிக்கப்பட்ட இரக்கம் நல்லதே என்றாலும், உண்மையான விதை, இரக்கத்திற்கான உண்மையான அடிப்படை உயிரியல் ரீதியிலானது. நான் சொல்லும் ‘மதச்சார்பற்ற நன்னெறிகளுக்கு’ அவையே அடிப்படையாகும். மதம் என்பது இந்த விதையை சற்றே வலுப்படுத்துகிறது. 

ஒழுக்க நெறிமுறைகள் கட்டாயமாக தனித்துவமான மத நம்பிக்கை அடிப்படையிலானது என்று சிலர் சிந்திக்கலாம்.  நன்னெறிகளின் உணர்வை பயிற்சியின் மூலம் மேம்படுத்த முடியும் என்று மற்றவர்கள் சிந்திக்கலாம். சிலர் “மதச்சார்பின்மை” என்றால் மதத்தை தள்ளி வைப்பதாக அர்த்தம் என்று நினைக்கலாம். மற்றவர்கள் “மதச்சார்பின்மை” என்றால் எல்லா மதங்களையும் மதித்து, சார்பின்றி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பது போல நாத்திகர்களுக்கும் மரியாதை செலுத்துதல் என்று நினைக்கலாம். இந்த பிற்கால நன்நெறிகள், குறிப்பாக அதன் அடிப்படையில் இரக்கம் ஆகியவை உள்ளுணர்வில் வேரூன்றியுள்ளன. தாய் மற்றும் பிறந்த குழந்தை விஷயத்தில், உயிர்வாழ்தலுக்கான தேவை இருப்பதனால் அது தானாகவே எழுகிறது. உயிரியல் அடிப்படை காரணமாக, அவை மேலும் நிலையாகிறது. 

நாம் அதிக இரக்கத்துடன் இருந்தால், நம்முடைய மனம் மற்றும் இதயம் அதிகம் திறந்திருக்கும் இதனால் நாம் மேலும் எளிமையாக தொடர்பு கொள்ள முடியும்.

குழந்தைகள் ஒன்றாக விளையாடும் போது அவர்கள் மதம், இனம், அரசியல் அல்லது குடும்பப் பின்னணி பற்றி சிந்திப்பதில்லை. தன்னுடன் விளையாடும் இணையின் சிரிப்பையே பாராட்டுகின்றனர், அவர்கள் யார் என்பதெல்லாம் விஷயமல்ல, பதிலுக்கு அவர்களும் நல்ல விதமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களின் மனங்கள் மற்றும் இதயங்கள் திறந்திருக்கின்றன. மற்றொரு புறம், பெரியவர்கள், பொதுவாக மற்ற விஷயங்களை வலியுறுத்துகின்றனர் – இனம் மற்றும் அரசியல் வித்தியாசங்கள் உள்ளிட்டவை. இதனாலேயே அவர்களின் மனங்கள் மற்றும் இதயங்கள் குறுகி இருக்கின்றன. 

இரண்டிற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பாருங்கள். நாம் அதிக இரக்கத்துடன் இருந்தால், நம்முடைய மனங்கள் மற்றும் இதயங்கள் அதிகம் திறந்திருக்கும் நம்மால் மிக அதிகமாக எளிதில் தொடர்பு கொள்ள முடியும். நாம் சுய – மையப்படுத்தி இருந்தால், நம்முடைய மனங்கள் மற்றும் இதயங்கள் மூடி இருக்கின்றன இதனால் மற்றவர்களிடம் நாம் தொடர்பு கொள்வது கடினமாகிறது. கோபம் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது, ஆனால் இரக்கம் மற்றும் கருணையுடைய இதயம் நம்முடைய எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. கோபம் மற்றும் பயத்துடன், நம்மால் தூங்க முடியாது அப்படியே தூங்கினாலும் நமக்கு கனவுகள் வந்து நிம்மதியாக தூங்க விடாது. நம்முடைய மனங்கள் அமைதியாக இருந்தால், நாம் நன்றாக உறங்கலாம். அமைதிப்படுத்துவதற்கு நமக்கு எதுவும் தேவையில்லை – நம்முடைய சக்தி சமநிலையில் இருக்கும். பதற்றத்துடன், நம்முடைய சக்தியானது நம்மை அழுத்துவதால் நாம் பதட்டமாக உணர்கிறோம். 

இரக்கம் அமைதி, திறந்த மனதை கொண்டு வருகிறது

பார்க்கவும் தெளிவாக புரிந்து கொள்ளவும், நமக்கு அமைதியான மனம் தேவை. நாம் குழப்பத்துடன் இருந்தால், நம்மால் யதார்த்தத்தை பார்க்க முடியாது. சர்வதேச அளவிலும் கூட அதிக பிரச்னைகள் மனிதனால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளே. யதார்த்தத்தை பார்க்காமல் சூழ்நிலைகளை தவறாகக் கையாள்வதில் இருந்து அவை எழுகின்றன. நம்முடைய செயல்கள், இரக்கம், கோபம் மற்றும் பதற்றம் அடிப்படையிலானது. அங்கே அதிக அழுத்தம் இருக்கிறது.  நம் மனம் ஏமாற்றப்படுவதால் நாம் புறநிலையாக இல்லை. இந்த எதிர்மறை உணர்வுகளே குறுகிய – மனப்பான்மை மற்றும் பிரச்னைகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது, அது எப்போது திருப்திகரமான முடிவுகளை கொடுக்காது. 

மற்றொரு புறம், இரக்கம் திறந்த மற்றும் அமைதியான மனதை கொடுக்கிறது. அனுடன், நாம் யதார்த்தத்தையும், யாரும் விரும்பாததை முடிப்பதற்கும், அனைவரும் விரும்புவதைக் கொண்டுவருவதற்கும் என்ன முறைகள் உள்ளன என்பதைப் பார்க்கிறோம். இது ஒரு முக்கியமான விஷயம் மற்றும் காரணம் அடிப்படையிலான இரக்கத்தின் மிகப்பெரிய பலனும் கூட. எனவே மனித மதிப்புகளை உயிரியல் அடிப்படையில் உயர்த்துவதற்கும் காரணத்தின் மூலம் ஆதரிப்பதற்கும், தாய் மற்றும் குழந்தை இடையிலான உள்ளார்ந்த அன்பு மற்றும் பாசம் முக்கிய பங்காற்றுகிறது.

Top