போதிசிட்டாவிற்கான ஏழு – பகுதி காரணம் மற்றும் பயனுள்ள தியானம்

போதிசிட்டா என்பது சாத்தியம் உள்ள வரை முழுவதுமாக பிறருக்கு உதவி செய்யும் புத்த நிலையை அடையும் நோக்கம் ஆகும். இந்த நோக்கத்தை உருவாக்குவதற்கும், அதன் பின்னர் அதை -வலுப்படுத்துவதற்கும் ஏழு – பகுதி காரணம் மற்றும் விளைவு முறையானது, உணர்ச்சிகள் மற்றும் புரிதல்களின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது, சமநிலையில் தொடங்கி, தாய் அன்பை நினைவுகூருவதற்கும் நம் தாய்மார்கள் என்று அனைவரையும் அங்கீகரிப்பதன் மூலம் நன்றியுணர்வோடு, அந்த அன்பை திரும்ப செலுத்த விரும்புகிறோம். ஒவ்வொருவரிடத்திலும் சமமான அன்பு மற்றும் இரக்கத்தை வளர்க்கவும், விதிவிலக்கான தீர்மானம் மற்றும் இதன் விளைவாக நடைமுறை தொடர்ச்சியான போதிசிட்டா நோக்கத்திற்கு இது வழிநடத்துகிறது.

அறிமுகம்

பௌத்தப் பாதையைப் பின்பற்றுவதற்கு விலைமதிப்பற்ற மனித உயிர்களை கொண்டு இருக்கிறோம். இருப்பினும் இந்த சுதந்திரங்கள் மற்றும் வாய்ப்புகள் நீடித்து இருக்கப் போவதில்லை. எனவே, நாம் கொண்டிருக்கும் வாய்ப்புகளின் முழு பலனையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  

நம்முடைய மனித வாழ்வின் பயனை அடைவதற்கான சிறந்த வழி அதனை போதிசிட்டா நோக்கத்தை வளர்ப்பதற்குப் பயன்படுத்துவதாகும். போதிசிட்டா நோக்கமானது மனமும் இதயமும் நம்முடைய சுய தனிப்பட்ட ஞானமடைதலை நோக்கப்படுத்துவது, அவ்வாறு இது வரை நடந்திருக்காது, ஆனால் நம்முடைய மனத்தொடர்ச்சியின்  கீழ் கணிக்கப்பட்டதன் அடிப்படையில் நம்முடைய புத்த-இயல்பு காரணிகள் அடைதலை தூண்டும். இந்தக் காரணிகள் நம்முடைய நேர்மறை சக்தி மற்றும் ஆழ்ந்த விழிப்புணர்வுகளையும், நம்முடைய பல்வேறு நற்குணங்கள் மற்றும் நம்முடைய மனதில் இயல்பான தூய்மையையும் உள்ளடக்கியதாகும். இந்த போதிசிட்டா நோக்கமானது இரண்டு உள்நோக்கங்களை சேர்ந்தது: சாத்தியமுள்ள வரை மிக விரைவாக ஞானத்தை அடைதல் மற்றும் அதன் மூலம் அனைத்து உயிர்களும் பலனடைதல்.
 
போதிசிட்டாவை வளர்க்கும் போது, நாம் இரண்டு உள்நோக்கங்களை எதிர்மறை வரிசையில் வளர்க்கிறோம். முதலில், மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து வரையறுக்கப்பட்ட உயிர்களும் முழுப் பலனடைவதை நினைவில் கொள்கிறோம். இது நாம் பின்னர் இந்த விரிவுரையில் விவாதிக்கப் போகின்ற நம்முடைய அன்பு, இரக்கம் மற்றும் விதிவிலக்கான தீர்மானத்தில் இருந்து வருகிறது. அவர்களுக்கு மிகவும் திறம்பட பயனளிக்கும் வகையில், நாம் ஞானம் பெற்று புத்தர்களாக மாற எண்ணுகிறோம். நம்முடைய எல்லா வரையறைகள், குறைபாடுகளில் இருந்து வெளியேறுவதற்காக நாம் ஞானத்தை பெற விரும்புகிறோம், ஏனெனில் மற்றவர்களுக்கு சிறந்த வகையில் உதவி செய்யும் பொருட்டு அது நம்மை பாதுகாக்கும் என்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, நாம் மற்றவர்களிடம் கோபமடைந்தால், அந்த நேரத்தில் நம்மால் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? அதே போல, நம்முடைய திறன்களை உணர்வதற்கு நாம் ஞானத்தைப் பெற வேண்டும். எனவே போதிசிட்டா நோக்கத்தை வளர்க்கும் போது, நாம் புத்தர்களாக வேண்டும் என்பது முதலாவதல்ல ஏனெனில் அது உயர் நிலை மற்றும் பின்னர் நாம் கட்ட வேண்டிய சில மோசமான வரியைப் போல மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

போதிசிட்டா நோக்கத்தை வளர்ப்பதற்கு இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றன. ஒன்று ஏழு- பகுதி காரணம் மற்றும் பயனுள்ள போதனை, மற்றொன்று நம்மையும் மற்றவர்களையும் பற்றிய நம்முடைய அணுகுமுறைகளை பகிர்தல் மற்றும் சமன்படுத்துதல் மூலம் செய்தலாகும்.  இங்கே, இரண்டு வழிகளில் முதலாவதைப் பற்றி நாம் கலந்துரையாடுவோம்.

சமநிலையை வளர்த்தல்

ஏழு – பகுதி காரணம் மற்றும் பயனுள்ள போதனை ஆறு நிலைகளைக் கொண்டுள்ளது, அவை ஏழாவதற்கான காரணமாகச் செயல்படுகிறது, போதிசிட்டா நோக்கத்தின் உண்மையான வளர்ச்சி. இது ஏழு எண்ணிக்கையில் சேர்க்கப்படாத ஒரு ஆரம்ப கட்டத்துடன் தொடங்குகிறது. சில உயிரினங்களை நோக்கி நாம் ஈர்க்கப்படுவதையோ அல்லது பற்று கொள்வதையோ, மற்றவர்களிடமிருந்து விரட்டப்படுவதையோ, இன்னும் சிலவற்றில் அலட்சியமாக இருப்பதையோ சமாளிப்பதற்கான சமத்துவத்தின் வளர்ச்சி இதுவாகும். இந்த பூர்வாங்க நடவடிக்கையின் நோக்கம் அனைவருக்கும் சமநிலையோடு திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் சமமாக இருக்கிறோம் என்ற புரிதலுக்கு, ஒவ்வொருவரிடத்திலும் சமமான வெளிப்படைத்தன்மையுடன் இருத்தல் தேவை, அது ஆதி மற்றும் அந்தமில்லாத மனத் தொடர்ச்சி அல்லது மன- ஓட்டத்தை உணர்வதில் இருந்து வருகிறது. எனவே, ஒவ்வொருவருமே சில காலம் நம்முடைய நண்பராக, எதிரியாக, அறியாதவராக இருந்தவர் மேலும் அந்த நிலையானது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த அர்த்தத்தில், அனைவரும் சமமானவர்களே.

இந்த சிந்தனையின் பின்னால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் தொடக்கமற்ற மனம். பௌத்தத்தில் இது ஒரு அடிப்படை அனுமானமாகும். அனுபவத்தின் தொடர்ச்சியைப் பற்றியதே மறுபிறப்பு. மனத் தொடர்ச்சிகள் என்பவை அனுபவத்தின் தொடர்ச்சிகள். மனிதன், விலங்கு, ஆண் அல்லது பெண் போன்ற இயற்கையாய் பெற்ற அடையாளங்கள் இன்றி அவை தனிப்பட்டவை. எந்தவொரு குறிப்பிட்ட மறுபிறவியிலும் மனத் தொடர்ச்சி வெளிப்படுத்தும் வாழ்க்கை வடிவம் மற்றும் பாலினம் முந்தைய கர்ம நடத்தை மற்றும் அதன் பின்விளைவுகளைச் சார்ந்ததாகும்.

தொடக்கமற்ற மனம் பற்றிய இந்தப் புள்ளியானது ஒரு அடிப்படையாகும், போதிசிட்டாவை வளர்ப்பதற்கு தேவைப்படும் புரிதல், ஏனெனில் இந்தப் புரிதலின் அடிப்படையில், நேசமிகு இரக்கத்தை சரியாக அனைவருக்குமானதாக மேம்படுத்த சாத்தியமுள்ளதாக மாறும். நாம் மற்றவர்களை ஒரு கொசுவைப் போல பார்க்கக் கூடாது, உதாரணத்திற்கு இந்த வாழ்நாளில் அதன் கர்மாவின் காரணமாக ஒரு கொசுவின் வடிவத்தைக் கொண்டிருக்கும் முடிவில்லாத நீண்ட தனிப்பட்ட மனத் தொடர்ச்சியாக நாம் இதைப் பார்க்கிறோம்; அது இயல்பிலேயே ஒரு கொசு அல்ல.  போதிசிட்டாவின் சக்தியானது, அதன் மூலம், நாம் அனைவரும் பயனடைய விரும்புகிறோம் என்பதிலிருந்து பெறப்பட்டது. நிச்சயமாக, இது எளிதானது அல்ல.

அனைவரையும் நம்முடைய தாயாக அங்கீகரித்தல்

ஒரு முறை சமநிலையுடன், அனைத்து உயிர்களும் தனிப்பட்ட தொடக்கமில்லாத மனத்தொடர்ச்சிகள் - அவற்றால் இந்த வாழ்நாளில் கொண்டிருக்கும் வடிவத்தை மறுக்க முடியாது என்பதை நம்மால் பார்க்க முடிந்தால் - 7 - பகுதி காரணம் மற்றும் பயனுள்ள தியானத்தின் முதல் அடியை எடுக்க நாம் தயாராக இருக்கிறோம். ஏதோ ஒரு புள்ளியில் ஒவ்வொரு உயிரும் நம்முடைய தாயாக இருந்திருக்கிறது என்பதை அங்கீகரிப்பதாகும் இது. இந்த வரியின் காரணமானது இந்த வாழ்நாளில் நாம் தாயைக் கொண்டிருக்கிறோம், இதே போன்று ஒவ்வொரு ஜென்மத்திலும் நாம் ஒரு கருவில் இருந்தோ அல்லது முட்டையில் இருந்தோ பிறக்கப் போகிறோம், நாம் தாயை கொண்டிருக்கப் போகிறோம். தொடக்கமில்லாத மறுபிறப்பு என்ற தர்க்கத்தில் இருந்து உண்மை என்பது வரையறுக்கப்பட்டது, அதே சமயம் எண்ணிலடங்கா உயிரினங்கள் இருந்தாலும், ஒவ்வொருவரும் தொடக்கமில்லாத காலங்களில் கூட நம் தாயாக இருந்திருக்கிறார்கள் - நாமும் அவர்களுக்குத் தாய்களாக இருந்தோம். அவர்கள் நம்முடைய தந்தைகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் பலவையாக இருந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் நம்முடைய தாயாக இருந்தவர்கள் என்று பார்ப்பதில், நம் தாய் என்பதை யாருடைய உள்ளார்ந்த அடையாளமாகப் பார்க்காமல் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதுவும் சற்று சிக்கலாகிவிடும். வெற்றிடத்தை (வெறுமை), உள்ளார்ந்த நிலையான அடையாளங்களின் பற்றாக்குறையை ஒருபோதும் இழக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

அனைவரையும் நம்முடைய தாயாக இருந்தவர்கள் என்று அங்கீகரித்தல் மற்றவர்களுடன் நாம் பழகும் விதத்தில் அடியோடு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இங்கே, நாம் அனைவரிடத்திலும் சமநிலையை கொண்டிருக்கிறோம் என்பதை கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.  எல்லோருடனும் மிக நெருக்கமான, அன்பான, நேசமான உறவை கொண்டிருந்தோம் - இன்னும் கொண்டிருக்க முடியும் என்பதை நாம் காண்கிறோம்.

தாய் அன்பின் கருணையை நினைவு கூர்தல்

ஏழு நிலைகளில் இரண்டாவது என்பது தாய் அன்பின் கருணையை நினைவு கூர்தலாகும். பல மேற்கத்தியர்களுக்கு, தியானத்தில் இது ஒரு சிக்கலான நிலையாகும், ஏனெனில் இந்தியர்களும் திபெத்தியர்களும் இந்த வாழ்நாளில் நம்முடைய தாய் என்பவரையே எப்போதும் உதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். அது போன்ற சமூகத்தில், பெரும்பாலான மக்கள் மேற்கத்திய சமூகங்களை விட தங்கள் தாய்மார்களுடன் குறைவான எதிர்மறை எண்ணங்களை  நரம்பியல் மற்றும் குறைவான கடினமான உறவுகளைக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. அது உண்மையோ இல்லையோ, உண்மையில் ஒவ்வொருவரின் விஷயத்திலும் மாறுபடும். ஆனால் 29 ஆண்டுகள் திபெத் மற்றும் இந்திய சமூகத்தில் வாழ்ந்த என்னுடைய புரிதலில் இருந்து என்னால் சொல்ல முடியும், அதாவது அங்கு வளர்ந்த குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் இடையிலான உறவு மேற்கத்தியர்களை விட மிகக் குறைவான எதிர்மறை எண்ணம் கொண்டதாகத் தெரிகிறது.

தியானத்தில் இந்த நிலையானது நம்முடைய தாய் எவ்வளவு கருணை மிகுந்தவராக இருக்கிறார் - அல்லது இருந்தார், அவர் இறந்து விட்டால் -  நம்மை வயிற்றில் சுமந்தபடியே திரும்பிச் செல்கிறாள். பிறகு, முந்தைய வாழ்க்கையில் எல்லோரும் இதேபோன்ற கருணையை நமக்கு எப்படிக் காட்டினார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க நாம் இதனை விரிவுபடுத்தலாம்.

பலர், மேற்கத்தியர்களுக்கு இதனை போதிக்கும் போது, உங்களுடைய தாயுடன் நீங்கள் பிரச்னைகளைக் கொண்டிருந்தால், பரவாயில்லை, நீங்கள் உங்களது தந்தை, நெருங்கிய நண்பர் அல்லது உங்களிடம் அதிக கருணையை காட்டி யாரைப் பற்றி வேண்டுமானாலும் மாற்றி சிந்திக்கலாம் என்று கற்றுத் தருகிறார்கள். இந்த தியானத்தை செய்யும் போது நீங்கள் இந்த விதத்தில் தடுமாறமாட்டீர்கள். நான் நினைக்கிறேன் இது ஒரு உதவிகரமான அணுகுமுறை.  இருந்தாலும், நம்முடைய தாயுடனான உறவில் சிக்கலைக் கொண்டிருந்தால், அதனை வெறுமனே கடந்து செல்லாமல், அதற்கு தீர்வு காண்பதைப் பற்றி சிந்திப்பதும் மிக முக்கியமாகும். நம்முடைய தாயுடன் ஆரோக்கியமான உறவுமுறையைக் கொண்டிருக்க முடியாவிட்டால், மற்ற யாருடனும் ஆரோக்கியமான நேசமிகு உறவுமுறைக் கொண்டிருப்பது மிகவும் கடினமாகிவிடும். அது எப்போதும் சிக்கலாகவே இருக்கப் போகிறது. எனவே, நம்முடைய தாயுடனான உண்மையான உறவுமுறை மீது கவனம் செலுத்துவதும் அவரின் கருணையை அங்கீகரிக்க முயற்சிப்பதும் மிகவும் முக்கியமானது, அந்த உறவுமுறை எவ்வளவு கடினமாக இருந்தது அல்லது இப்போது இருக்கிறது என்பது பொருட்டல்ல என்று நான் நினைக்கிறேன்.

முதலில், நாம் சிறந்த தாய் அன்பைப் பார்க்க வேண்டும். பழங்கால நூல்கள் இதற்கான விளக்கங்களால் நிரப்பப்பட்டுள்ளன: உதாரணமாக, பல விலங்குகளில் நீங்கள் அதைக் காண்கிறீர்கள். தாய்ப் பறவையானது தன்னுடைய முட்டையின் மீது அமர்ந்து அடைகாக்கிறது அது எவ்வளவு குளிர் அல்லது வெப்பமாக இருந்தாலும் தாய்ப்பறவை பொருட்படுத்துவதில்லை, குஞ்சு பொறித்த பின்னர் தாய்ப்பறவை பூச்சிகளை வாயில் பிடித்து அதனை மென்று தின்னாமல் அப்படியே எடுத்து வந்து தன்னுடைய குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்கிறது. நிச்சயமாக இது அசாதாரணமான ஒன்று. 

அதேசமயத்தில் விலங்குகள் மற்றும் பூச்சிகள் உலகத்தில் தாயே பிள்ளைகளை உண்ணுகின்றன என்ற உதாரணங்களும் இருக்கின்றன, இருப்பினும் அவை ஜீரணிப்பதற்கு தாயானது கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கிறது. நம்முடைய உயிரியல் தாயோ அல்லது வாடகைத் தாயோ யாராக இருந்தாலும் நம்மை ஒருவர் கருவில் சுமந்து இருக்கிறார். நாம் சோதனைக் குழாயில் கருவாகி இருந்தாலும், யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்து சரியான வெப்பத்தில் நம்மை வைத்திருந்திருக்கிறார். நம்மை சுமப்பதற்கு தாய் விரும்பினாரா இல்லையா என்பது பொருத்தம் இல்லாதது. நம்மை கருச்சிதைவு செய்யாமல் கருவில் சுமந்து கொண்டிருந்தது வியத்தகு கருணையாகும்; நம்மை கருவில் சுமப்பது அவருக்கு சவுகரியமானதல்ல. நம்முடைய பிறப்பின் போது அவர் ஏராளமான வலியை அனுபவித்திருப்பார். மேலும், நாம் சிசுவாக இருந்த போது, நடுஇரவில் எழுந்து யாராவது நமக்கு பாலூட்ட வேண்டும் நம்மை பராமரித்து பார்த்துக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், நம்மால் உயிர் பிழைத்திருக்க முடியாது. இந்த மாதிரியான விஷயங்கள் அனைத்தும் பழங்கால நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நம்முடைய தாயுடன் கஷ்டங்கள் இருந்தால், ஐந்தாவது தலாய் லாமாவின் லாம் - ரிம் புத்தகத்தில் உள்ள குரு தியானங்களில் இருந்து இதனை எவ்வாறு அணுகுவது என்பதற்கான ஒரு குறிப்பை நாம் எடுத்துக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். பல தொடக்க கால நூல்கள் நற்குணங்களை மட்டுமே கொண்ட ஒரு ஆன்மீகக் குருவை கண்டறிவது என்பது சாத்தியமில்லாதது என்று கூறுகின்றன. எந்த ஆன்மீக குருவும் சிறந்தவராக இருக்கப் போவதில்லை; ஒவ்வொருவரும் வலுவான மற்றும் பலவீனமான விஷயங்களின் கலவையைக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீக குரு மீதான தியானத்தில் நாம் செய்ய விரும்புவது, மிகப்பெரிய மரியாதை, உத்வேகம் மற்றும் பாராட்டு ஆகியவற்றை வளர்ப்பதற்காக ஆசிரியரின் நல்ல குணங்கள் மற்றும் இரக்கத்தின் மீது கவனம் செலுத்துவதாகும். இந்த நல்ல குணங்களையும் கருணைகளையும் நாமே வளர்த்துக் கொள்ள இது நம்மைத் தூண்டும்.

இதனைச் செய்யும் போது, குருவின் குறைபாடுகள் மற்றும் தவறுகளை நாம் மறுக்க வேண்டிய அவசியமில்லை என்று ஐந்தாவது தலாய் லாமா விளக்குகிறார். அது அப்பாவித்தனமாக இருக்கும். அந்த குறைபாடுகளை நாம் ஏற்று, அந்த தருணத்தில் அதனை புறந்தள்ளி வைத்துவிடலாம், ஏனெனில் குருவின் தவறுகளைப் பற்றி சிந்திப்பது புகார் கூறுதல் மற்றும் எதிர்மறை அணுகுமுறைக்கு மட்டுமே வழிவகுக்கும். அது உத்வேகமாக இருக்காது. நல்ல குணங்கள் மற்றும் கருணையின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே நாம் உத்வேகம் பெறுகிறோம்.

எனவே நாம் முதலில், குறைபாடுகளை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இவை உண்மையான குறைபாடுகள்தானா அல்லது நமது பகுதிகள் மீதான கணிப்புகளா என்பதை நாம் நேர்மையாக ஆராய வேண்டும். குறைபாடுகள் மட்டுமே முன் நிறுத்தப்பட்டாலும் உண்மையாக இல்லாவிட்டால், அவற்றை முழுமையாக கைவிடுவோம். கற்பனையில் இல்லாத குறைகள் தற்போது ஆசிரியரிடம் உள்ளவையா அல்லது நாம் விட்டுவிட விரும்பாத பழைய வரலாறா என்பதை நாம் ஆராய வேண்டும். தவறுகள் தற்போது இல்லை எனில், நாம் அவற்றைப் பற்றி பேசுவதை நிறுத்துவோம்: அவை இனி பொருந்தாது. தற்போதைய தவறுகள் உண்மையில் என்ன என்பதை நாம் தெளிவாக அறிந்தவுடன், சரி, அவை அவருடைய தற்போதைய தவறுகள் என்று கூறுகிறோம். பிறகு, அவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல குணங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம்.

நம்முடைய தாயின் கருணையை பார்க்கும் போது இதே முறை சரியாக இருக்கும் மற்றும் சிறப்பாக செயல்படும் என்று நான் நினைக்கிறேன். யாருடைய தாயும் சிறந்தவர் அல்ல. நாமே பெற்றோராகும் போது, சிறந்த பெற்றோராக இருப்பது நம்பமுடியாத கஷ்டமானது என்பதை நாம் அறிவோம், எனவே நம்முடைய பெற்றோர் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க மாட்டோம். பின்னர், நம் தாய்மார்களுக்கு இருக்கும் அல்லது கொண்டிருந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளைப் பார்ப்போம், மேலும் இந்த குறைபாடுகளை ஏற்படுத்திய காரணங்கள் மற்றும் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். எந்த மனத் தொடர்ச்சியும் இயல்பாகவே ஒரு கொசு அல்ல (அதுவும் இயல்பாகவே எரிச்சலூட்டுவதில்லை) என்பது போல, அவள் இயல்பிலேயே கெட்டவள் அல்ல. நாம் நம்முடைய தாய்மார்கள் மீது குறைபாடுகளை முன்வைக்கவில்லை அல்லது பழங்கால வரலாற்றில் வாழ்கிறோம் என்பதை உறுதிசெய்கிறோம், பின்னர் அனைத்து கற்பனையான தவறுகளையும், கடந்த கால மற்றும் தற்போதைய தவறுகளையும் ஒதுக்கி வைக்கிறோம். சரி இருக்கட்டும், அவரிடம் தவறுகள் உள்ளன அல்லது இருந்தன, ஆனால் மற்றவர்களைப் போல அவரும் ஒரு மனிதர்: நம் அனைவரிடத்திலும் தவறுகள் உள்ளன என்று கருதி அவர் நமக்குக் காட்டிய நல்ல குணங்களையும் கருணையையும் பார்க்கிறோம்.

மேற்கத்திய தர்ம ஆசிரியர் ஒருவர் - யார் என்று சரியாக நினைவில் இல்லை - தியானிக்கும் ஒரு முறையை பரிந்துரைக்கிறார், அது மிகவும் பயனுள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்த கட்டத்தில், நமது தாய்மார்களின் எதிர்மறையான குணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஐந்து அல்லது பத்து வருட கால ஓட்டத்தில் நம் வாழ்க்கையை கடந்து செல்வோம். ஐந்து நிமிடங்கள், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் அல்லது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிட்டு, ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து வருட காலத்திலும் நம் தாய்மார்கள் நமக்காகச் செய்த எல்லா வகையான விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். முதலில், நாம் கருவில் இருந்தது முதல் நமக்கு ஐந்து வயதாகும் வரை, அவர் நம்முடைய அசுத்தமான டயபர்களை மாற்றியது, பாலூட்டியது, நம்மை குளிக்க வைத்து, மற்ற அனைத்து விஷயங்களையும் செய்ததை நினைவு கூருவோம். அதன் பின்னர் ஐந்தில் இருந்து பத்து வயதில் நடந்தவற்றை நினைவுபடுத்துவோம். அவர் நம்மை பள்ளிக்கு அழைத்துச் சென்றார் - வீட்டுப்பாடத்தில் நமக்கு உதவாமல் இருந்திருக்கலாம், உதவியும் செய்திருக்கலாம், ஆனால் நிச்சயமாக நமக்காக சமைத்து நமது ஆடைகளை தூய்மை செய்து கொடுத்திருப்பார். நாம் பதின்பருவம் அடைந்த பின்னர், நாம் செலவு செய்வதற்காக பணம் கொடுத்திருக்கலாம். நம்முடைய தாய்மார்கள் எவ்வளவு மோசமாக இருந்தார்கள் என்பது விஷயமல்ல, சந்தேகமே இன்றி நம்முடைய ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பல கருணையை நமக்கு காட்டி இருக்கிறார்கள்.

பின்னர் இதையே நம்முடைய தந்தைகள் மற்ற உறவினர்கள், நண்பர்கள், உள்ளிட்டோர்களுடன் நாம் செய்து பார்க்கலாம். தியானத்திற்கு இது மிகவும் உதவிகரமானது. "நம்மை யாரும் நேசிக்கவில்லை" என்று நாம் சிந்திக்கும் போது சில சமயங்களில் மனஅழுத்தமாக உணரும் போது இது சிறந்த எதிர்ப்பு மருந்தாகும். இந்த விதத்தில், நம்முடைய தாய்மார்களின் கருணையை இந்த வாழ்வில் நம்மால் பார்க்க முடிந்தால், ஒவ்வொருவருமே அதே போன்ற கருணையுடன் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை நாம் அங்கீகரிக்க இது உதவுகிறது. யாருமே சிறந்த தாய் இல்லை - நிச்சயமாக, மற்றொரு ஜென்மத்தில் அவரே நம்மை உண்டிருப்பார், இருப்பினும் அவர் நம்மிடம் கருணை காட்டி இருக்கிறார்.

தாய் அன்பின் கருணையை திரும்பசெலுத்துதல்

ஏழு பகுதிகளைக் கொண்ட ஐந்தறிவு போதனையின் மூன்றாவது நிலையானது, நாம் பெற்ற தாய் அன்பின் கருணையைத் திருப்பிச் செலுத்துவதற்கான விருப்பத்தை வளர்ப்பதாகும். இதற்காக, நம் தாய்மார்கள் பார்வையற்றவர்களாகவும், முற்றிலும் குழப்பமடைந்தவர்களாகவும், முற்றிலும் வருத்தமடைந்தவர்களாகவும், ஒரு குன்றின் விளிம்பில் நின்று, துன்பப் படுகுழியில் விழப் போவதாகவும் கற்பனை செய்யுங்கள். மேலும் இதையும் கற்பனை செய்யுங்கள், நாம் அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களுக்கு அடுத்ததாக நிற்கிறோம், அவர்கள் விழுவதை தவிர்க்க எப்படி உதவுவது என்பதை நாம் அறிந்தவர்கள். நாம், அவர்களின் குழந்தைகள், நாமே அவர்களுக்கு உதவவில்லை என்றால், யார் உதவி செய்வார்கள்? அவர்கள் யாரை நோக்கி திரும்பிச் செல்ல முடியும்? எல்லாவிதமான துன்பங்களில் இருந்தும் அவர்களை விடுவிக்க உதவுவதன் மூலம் அவர்களின் கருணையை திருப்பி செலுத்துவதற்கான இந்த இதயப்பூர்வமான விருப்பத்தை வளர்க்க இத்தகைய எண்ணங்கள் நமக்கு உதவுகின்றன.

நம்முடைய விருப்பத்தை வலுப்படுத்துவதற்காக, நமக்கு காட்டப்பட்ட அன்னையின் கருணையை நினைவில் கொள்வது குறித்து நாம் கோடிட்டுக் காட்டிய தியானத்தில் இருந்து மேலும் தழுவலாம். மீண்டும், நாம் நம் வாழ்வின் ஐந்து அல்லது பத்து வருட காலங்களை கடந்து, எந்த வழிகளில் நம் தாய்மார்களிடம் கருணை காட்டினோம் என்பதை ஆராய்வோம். நம் தந்தையர், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களிடமும் நாம் அவ்வாறே செய்யலாம்.

நாம் எவ்வளவு அன்பையும் உதவியையும் பெற்றிருக்கிறோம், எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், நம்மில் பெரும்பாலோர் நாம் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அர்த்தம் குற்ற உணர்வு  கொள்வதல்ல, இது பொதுவாக மேற்கத்திய நாடுகளில் எதிர்மறை சிந்தனை அதிகம் இருக்கிறது. போதிசிட்டா தியானத்தின் அடுத்த நிலையுடன் நமக்கு உதவுவதே முக்கியமான விஷயம், அதாவது, நாம் பெற்ற கருணையை அங்கீகரித்து, ஆழ்ந்த நன்றியுணர்வை வளர்த்து, அந்தக் கருணையைத் திருப்பிச் செலுத்த விரும்புகிறோம்.

நான் கோடிட்டுக் காட்டிய தியானத்திற்கான இந்த தழுவல் உண்மையில் நம் இதயங்களை நகர்த்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் கண்டறிந்தேன், அதனால் நாம் உண்மையில் எதையாவது உணர்கிறோம். இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அன்பு மற்றும் இரக்கத்தின் தியானங்களைச் செய்கிற, வெளியே சென்று மற்றவர்களுக்கு உதவுகிற, எத்தனையோ மேற்கத்திய பௌத்தர்களை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவர்கள் தங்கள் பெற்றோருடன் மோசமான உறவைக் கொண்டு இருக்கின்றனர் மேலும் அதில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த உறவை சிறப்பாக்க செயலாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அது கடினமானது என்பதால் அதைத் தவிர்த்துவிட வேண்டாம்.

பயிற்சியை செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட முறை

இந்த ஒவ்வொரு நிலைகளிலும் முக்கியமான விஷயம் வெளிப்படையாகவும் நம்முடைய பயிற்சியை அனைத்து உயிர்களுக்குமான நம்பிக்கையாக விரிவாக்க முயற்சிப்பதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும், நம்மால் சிறிதாகத் தொடங்கி, பின்னர் படிப்படியாக நம்முடைய நம்பிக்கையை விரிவாக்கம் செய்ய வேண்டும். நாம் இதனை சமநிலை அடிப்படையில் செய்யலாம், அனைவரையும் தனிப்பட்ட மன அலைவரிசை என்று காணலாம். இதனைச் செய்வதற்கான பயனுள்ள வழியாக, நான் கண்டறிந்தது, வெறுமனே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து தியானம் செய்யலாமல், "அனைத்து உணர்வுள்ள உயிர்களுக்குமாக" சிந்திக்கலாம். சமச்சீர் உணர்ச்சிகளை வளர்ப்பதற்கு உணர்திறன் பயிற்சியில் நான் பரிந்துரைக்கும் முறையைப் போலவே பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மற்றொரு வகையில் சொல்வதானால், முதலில் இந்த நேர்மறை அணுகுமுறைகளை பலவிதமானவர்களை நோக்கி செயல்படுத்துவதற்கு முன்னர் அவர்களின் புகைப்படங்கள் - நண்பர்கள், நாம் விரும்பாதவர்கள் மற்றும் அறியாதவர்களிடம் வளர்க்க முயற்சிக்கவும். அதன் பின்னர் தியானக் குழுவில் நம்மைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து வளர்க்க முயற்சியுங்கள். அதன் பின்னர் சுரங்கப்பாதை அல்லது பேருந்தில் இருப்பவர்களுடன் முயற்சித்துப் பாருங்கள். இந்த விதத்தில், நாம் உண்மையில் நாம் வளர்க்க முயற்சிக்கும் நேர்மறை அணுகுமுறைகளை மற்றவர்களிடத்தில் செயல்படுத்தலாம்.

அதே போன்று நாம் இதனை விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றிடமும் செயல்படுத்த முயற்சிக்கலாம் - வெறுமனே நம்முடைய மனதில் கோட்பாடு அளவில் செயல்படுத்தாமல், உண்மையில் நாம் அவற்றை பார்க்கும் போது செயல்படுத்தலாம். அப்படி செய்யும் போது, திபெத்தியர்களிடத்தில் காணப்படுவது போல உச்ச நிலைக்குச் செல்வதை நாம் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு மனிதர்களிடத்தில் இருப்பதை விட பூச்சிகள் இடத்தில் கருணையுடன் இருப்பது எளிதானது. கோயிலின் நடுவில் ஒரு எறும்பு இருந்தால், அது காயமடையாமல் பார்த்துக் கொள்வதற்காக எல்லோரும் மிகவும் தீவிரமான நிலைக்குச் செல்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலும், அவர்கள் ஒரே மாதிரியான அக்கறையையும் கருணையையும் மனிதர்களிடம் காட்டுவதில்லை, உதாரணமாக இந்தியர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் அவர்களின் கோயில்களுக்குச் சென்று, அவர்கள் அங்கு பார்ப்பதைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இங்கே நாம் சரியான கண்ணோட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு உதவுவதைவிட ஒரு எறும்புக்கு உதவுவது எளிமையானது என்று சிலர் சொல்கிறார்கள். ஏனெனில் அந்த எறும்பு உங்களை புறம் பேசாது, உங்களுக்கு கடினமான காலத்தை கொடுக்காது, ஆனால் மனிதர்கள் இதை அதிகம் செய்கிறார்கள். எறும்பை எடுத்து வெளியே தூக்கி எறிந்து விடலாம், ஆனால் கூச்சலிடும் மனிதரை உங்களால் அப்படி செய்ய முடியாது. எவ்வாறாயினும், நிறைய பேர் இந்த தியானங்களை மிகவும் சுருக்கமான முறையில் செய்கிறார்கள் - "அனைத்து உணர்வுள்ள உயிரினங்களும்" - மேலும் இது "உண்மையான உலகில்" உண்மையான நபர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது என்பதே எனது கருத்து. இது பாதையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் பெரும் சிக்கலை உருவாக்குகிறது.

பேரன்பு

ஒவ்வொருவரும் நம்முடைய தாயாக இருந்தவர் என்று நாம் அங்கீகரித்து, தாய் அன்பின் கருணையை நினைவு கூர்ந்து, நன்றியுணர்வுடன், அந்தக் கருணையை திரும்பச் செலுத்த நினைத்தால், இயல்பாகவே நாம் மனதைக் கவரும் அன்பைக் கொண்டிருக்கிறோம். நாம் சந்திக்கும் யாராக இருந்தாலும்  தானாகவே அவருடனான நெருக்கம் மற்றும் அரவணைப்பு உணர்வு எழும். இந்த உணர்வை வளர்க்க தனி தியான நிலை தேவையில்லை. இது நேசத்துக்குரியது, அக்கறையுள்ள அன்பு என்றும், நாம் ஒருவரைப் போற்றும் அன்பு என்றும், அவரது நலனில் அக்கறை கொண்டவர்கள் என்றும், அவருக்கு அல்லது அவளுக்கு ஏதேனும் கெட்டது நடந்தால் மிகவும் வருத்தமாக இருக்கும் என்றும் அழைக்கப்படுகிறது.
மனதைக் கவரும் அன்பின் அடிப்படையில், பேரன்பு தியானத்தின் நான்காவது நிலைக்கு நாம் செல்லலாம். அன்பு என்பது மற்றவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை, பொதுவாக நாம் விரும்பும் ஒருவர். எவ்வாறாயினும், பேரன்பு என்பது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மற்றும் மகிழ்ச்சிக்கான காரணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பம். அது மகிழ்ச்சியாகவும் அதன் காரணங்களாகவும் இருப்பது மிகவும் முக்கியம். இதன் பொருள், மகிழ்ச்சியானது காரணங்களில் இருந்து வருகிறது என்ற நமது முழுப் புரிதலுடன் உள்ளது, அது கடவுள்களின் தயவு அல்லது அதிர்ஷ்டம் மட்டுமல்ல - அதற்குக் காரணம் நான் அல்ல.

மகிழ்ச்சிக்கான காரணங்கள் கர்ம போதனைகளில் கொடுக்கப்பட்டுள்ளது: இணைப்பு, கோபம் உள்ளிட்டவையின்றி மக்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், அவர்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். எனவே, நாம் இங்கே சிந்திக்க வேண்டும், " மகிழ்ச்சியையும் மகிழ்ச்சிக்கான காரணங்களையும் நீங்கள் கொண்டிருக்கலாம். நீங்கள் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான விதத்தில் உண்மையில் செயல்படலாம், அதனால் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்."

இந்த போதிசிட்டா தியானங்களில் நாம் அனைவருக்கும் உதவும் புத்தர்களாக மாற முயற்சிக்கிறோம், ஆனால் அவர்களுக்கு உதவுவதில் நாம் வகிக்கக்கூடிய பங்கை உயர்த்தாமல், இந்த நிலையில் இருந்து முயற்சிக்கிறோம் என்பது ஏற்கனவே தெளிவாகிறது. நாம் மற்றவர்களுக்கு வழி காட்ட முடியும், ஆனால் அவர்கள் தாங்களே மகிழ்ச்சிக்கான காரணங்களை உருவாக்க வேண்டும்.

பெரும்இரக்கம்

பின்னர் வருகிறது ஐந்தாவது நிலையான, பெரும் இரக்கம்: ஒவ்வொருவரும் துன்பம் மற்றும் துன்பப்படுவதற்கான காரணங்களில் இருந்து விடுபடுவதற்கான விருப்பம். அவர்களின் துன்பம் காரணங்களால் ஏற்படுகிறது என்பதையும், அவர்களின் துன்பத்தை நீக்குவதற்கு அந்த காரணங்களை அவர்கள் அகற்ற வேண்டும் என்பதையும் இது முழுமையாகப் புரிந்துகொள்வதாகும். மீண்டும், இது ஒரு மிகவும் யதார்த்தமான பார்வை. "அனைவரும் துன்பப்படுகிறார்கள் நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன்" என்ற உணர்ச்சிகரமான உணர்வைப் போன்றதல்ல பேரன்பு மற்றும் பெரும் இரக்கம். மாறாக, அவை நடத்தை காரணம் மற்றும் அதன் பயனின் புரிதலுடன் இணைந்ததாகும். 

பெரும் இரக்கம் சாதாரண இரக்கத்தை பல இதர வழிகளில் மீறுகிறது.

  • சிலவற்றை மட்டும் அல்ல, அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களையும் சமமாகக் கருதும் நோக்கமாகக் கொண்டது இது.
  • பேரன்பைப் போலவே, தன் குழந்தை மீது அன்பு காட்டி அதனை பாதுகாத்து அரவணைக்கும் விருப்பம் கொண்ட தாயைப் போல் இதுவும் ஒவ்வொரு உயிருக்கும் மகிழ்ச்சி மற்றும் அக்கறையை உள்ளடக்கியது.
  • பரவலான துன்பம் நிறைந்தவராக மீண்டும் மீண்டும் இருப்பதில் இருந்து விடுபட வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பம் மேலும் கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பு திரட்டப்படுவதில் இருந்து வருகின்ற குழப்பம், குழப்பத்துடன் கலந்தவை, மேலும் குழப்பத்தை உருவாக்குதல் இதனால் துன்பம் நிலைத்து இருக்கிறது. எனவே, மற்றவர்கள் துன்பத்தின் வலி அல்லது மாற்றத்தின் துன்பத்தில் விடுபட வேண்டும் என்பது வெறும் விருப்பம் மட்டுமல்ல. மாற்றத்தின் துன்பம் ஒரு சாதாரண உலக மகிழ்ச்சி, அது ஒருபோதும் நிலைக்காது மற்றும் திருப்தி அடையாது. அந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல பெரும் இரக்கம்.
  • அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களும் தங்கள் எல்லாப் பரவலான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவது சாத்தியம் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. இது ஒரு நல்ல விருப்பம் மட்டுமே அல்ல.

இரக்கம் என்பது எப்போதுமே விடுபடுவதில் தீர்மானமாக இருக்கும் துறவு அணுகுமுறையை ஒத்ததாகவே விவரிக்கப்படுகிறது. துறவு என்பது நம்முடைய சுய துன்பம், அதன் காரணங்கள் மற்றும் அதில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று விரும்பும் அணுகுமுறையாகும். நம்முடைய சுய துன்பங்கள் மற்றும் அதற்கான காரணங்களில் இருந்து விடுபடுவதில் உறுதியாக இருப்பதன் அடிப்படையில், நாம் மற்றவர்களுக்காக அனுதாபத்தை வளர்க்க முடியும். நாம் செய்ய வேண்டியது என்னவெனில் அதே அணுகுமுறையை மற்றவர்களை நோக்கி செயல்படுத்துதல், அவர்களின் துன்பம் மற்றும் துன்பப்படுவதற்கான காரணங்கள், அதில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கான விருப்பம் என நமக்குத் தேவை என்று விரும்புகிற அனைத்தையும் அதே தீவிரத்துடன் மற்றவர்களுக்காகவும் செயல்படுத்துதல். 

நம்முடைய சொந்த துன்பம் பற்றி சிந்தித்து அதில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று விரும்பாவிட்டால் மற்றவர்களுக்காக உண்மையாக வருந்துவதும் அனுதாபப்படுவதும் நமக்கு கஷ்டமான விஷயம் என்று எப்போதும் சொல்லப்படுகிறது. நம்முடைய சொந்த துன்பம் நம்மை எந்த அளவிற்கு கஷ்டப்படுத்துகிறதோ அதே போன்று மற்றவர்களும் அவர்களின் துன்பத்தில் இருந்து வலியையும் கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களின் வலியை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். நம்மிடம் கருணையோடு இருந்த நம்முடைய தாய்மார்கள் மகிழ்ச்சியாகவும் துன்பத்தில் இருந்தும் விடுபட நாம் விரும்புகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய தாய்மார்கள் உள்ளிட்டோருடன் நாம் தியானத்தை தொடங்குகிறோம், எனவே தியானத்திற்கு உண்மையில் சில உணர்வு இருக்கிறது. 

குறைவான சுயமதிப்பைத் சமன்செய்ய உதவும் முறையை விரிவுபடுத்துதல்

நூல்கள் சொல்வதைப் போல துன்பம் மற்றும் அதன் காரணங்களில் இருந்து நம்மை நாமே விடுவித்து கொள்வதற்கு முதலில் விரும்பினால் மட்டுமே இரக்கம் நேர்மையாக வளர்ச்சியடையும், இதே கொள்கையை அக்கறையான அன்பிற்கும் நம்மால் சூத்திரப்படுத்த முடியும் என நான் நினைக்கிறேன். இது குறிப்பாக நம்மில் குறைவான சுய-மதிப்பால் துன்பப்படுவோருக்குப் பொருந்தும். குறைந்த சுய- மதிப்பு என்பது குறிப்பாக மேற்கத்திய நிகழ்வு, திபெத்தியர்கள் அல்லது இந்தியர்கள் மத்தியில் அதிகம் இந்த எண்ணம் இருப்பதில்லை. மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மகிழ்ச்சிக்கான காரணங்களை கொண்டிருக்க வேண்டும் என்று நேர்மையாக விருப்பப்படுவதற்கு முன்னர், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதற்கான காரணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நேர்மையாக விரும்ப வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க நாம் தகுதி இல்லாதவர் என்று நினைத்தால், மற்றவர்க எப்படி மகிழ்ச்சிக்கு தகுதியானவராக இருப்பார்?

நாம் மகிழ்ச்சியாக இருக்க நமக்கு நாமே விரும்புதலே, குறைந்த சுய-மதிப்பில் இருந்து துன்பப்பட்டால் நாம் பாதுகாப்பாக தியானத்தின் நிலையில் சேர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இது மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவர்கள் என்ற இவ்வகையான சிந்தனைக்குள் செல்ல, புத்தர்-இயற்கையை நமக்கு நினைவூட்ட உதவுகிறது. நாம் அனைவரும் கெட்டவர்கள் அல்ல; யாரும் கெட்டவர்கள் இல்லை. நாம் அனைவரும் புத்தர்களாக மாறுவதற்கும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மற்றும் பல திறன்களைக் கொண்டுள்ளோம்.

மற்றொரு விஷயம்: அன்பு மற்றும் இரக்கம் தேரவாத மற்றும் இதர ஹினாயன பள்ளிகளிலும் கூட வளர்கிறது. இருப்பினும், காரணங்கள் அடிப்படையில் அன்பு மற்றும் இரக்க உணர்வை கட்டமைக்க நமக்கு உதவுவதைப் போல, தாயின் கருணையை நினைவுகூர்தலைப் போன்று இங்கே இருக்கும் ஏழு பகுதிகள், அங்கே இருக்கும் தியான முறைகள் தரப்படுத்தப்பட்ட நிலைகளை பின்பற்றுவதில்லை.  இருப்பினும், அன்பு மற்றும் இரக்க தியானம் தேரவாத பாரம்பரியத்தில் இல்லை என்று நாம் நினைக்கக் கூடாது. எப்படியாயினும், போதிசிட்டா தியானத்திலுள்ள அடுத்த நிலைகள் அங்கே இல்லை.

விதிவிலக்கான தீர்வு

வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் அடுத்த ஆறாவது நிலையை பல விதங்களில் வழங்குகிறார்கள். சில அதனை "தூய்மையான தன்னலமற்ற விருப்பம்" என்று அழைக்கிறார்கள். புனிதர் தலாய் லாமா "உலகளவிலான பொறுப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். எனினும் நான் எனக்கே உரிய வித்தியாசமான விதத்தில் அதனை மொழிபெயர்க்கிறேன், "விதிவிலக்கான தீர்வு" என்பதை நான் இந்த கணத்தில் பரிந்துரைக்கிறேன். பெரும் இரக்கத்துடன் அனைத்து உயிர்களுக்கும் உதவும் முழு விருப்பம் மற்றும் நோக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். இங்கே நாம் உறுதியான தீர்மானம் எடுக்கிறோம், நிச்சயமாக நாம் அதைச் செய்யப் போகிறோம். மற்றவர்களின் துன்பத்தை போக்குவதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று உண்மையில் நமக்கு நாமே பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம். யாராவது ஏரியில் மூழ்கிக்கொண்டிருந்தால்; நாம் கரையில் நின்று கொண்டு, "கடவுளே இப்படி நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று சொல்லாமல், தண்ணீருக்குள் குதித்து அந்த நபருக்கு உண்மையில் உதவ முயற்சிக்க வேண்டும். அதே போலத் தான் இங்கே போதிசிட்டா தியானத்திலும், அனைத்து உயிரினங்களுக்கும் சாத்தியம் அதிகம் இருக்கும் விதத்தில் உதவ உலகளாவிய பொறுப்பை எடுப்பதற்கு நாம் முழுவதுமாக தீர்மானிக்கிறோம்.

போதிசிட்டா நோக்கம்

இந்த ஆறு-நிலை வளர்ச்சியின் அடிப்படையில், ஏழாவது நிலையானது போதிசிட்டா நோக்கத்தை உருவாக்குகிறது. நம்முடைய தற்போதைய வரையறைகள் மற்றும் சிக்கலான உணர்ச்சிகள் மற்றும் அணுகுமுறைகளுடன் நாம் எப்படி மற்றவர்களுக்கு சிறந்த பலனை அளிக்க முடியும் என்று ஆராய்ந்தால், நாம் அதிகம் உதவி செய்யப் போவதில்லை என்பதை நாம் உணரலாம். நாம் சுயநலவாதியாகவோ, பொறுமியின்றி, சிலரின் மீது பற்றுதலும் மற்றவர்கள் மீது கோபமும் பெற்று, சோம்பேறியாக, எல்லா நேரமும் சோர்வடைந்தால், என்னால் உண்மையில் மற்றவர்களை புரிந்து கொள்ள முடியாவிட்டால், என்னால் சரிவர பரிமாற்றம் செய்யமுடியாவிட்டால், மற்றவர்களைப் பார்த்து பயப்பட்டால், வெறுக்கப்படுவேன் அல்லது நிராகரிக்கப்படுவேன் என்று பயந்தால் - அனைத்து விஷயங்களும் சாத்தியம் இருக்கும் அதிக உதவி செய்வதில் இருந்து என்னை தடுக்கிறது. உண்மையில் நான் உதவ விரும்புகிறேன், உண்மையில் இந்த விஷயங்களில் இருந்து நானே வெளியேற வேண்டும். உண்மையில் எனக்குள்ளே நான் செயலாற்ற வேண்டும் அப்போது தான் இந்த விஷயங்களில் இருந்து வெளியேறி உண்மையில் என்னுடைய திறமைகள், சாத்தியங்கள் மற்றும் புத்த - இயல்பு குணங்களைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பலனடையச் செய்ய முடியும். "முடிந்தவரை" - நாம் சர்வ வல்லமையுள்ள கடவுள்களாக மாறப் போவதில்லை என்பதை எப்போதும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். இந்த சிந்தனையின் அடிப்படையில், அனைவருக்கும் முடிந்தவரை முழுமையாக உதவுவதற்காக புத்தராக மாற வேண்டும் என்று நம் மனதையும் இதயத்தையும் அமைக்கிறோம். இதுவே போதிசிட்டா நோக்கத்தின் வளர்ச்சி. அதைக் கொண்டு, இன்னும் அடைந்திடாத நமது தனிப்பட்ட ஞானத்தில் கவனம் செலுத்தி, அதை விரைவில் அடைய வேண்டும் என்ற முழு நோக்கத்துடன் செயல்பட்டு, அந்த அடைதலுடன் மற்றவர்களுக்கு உதவுகிறோம்.

போதிசத்வ நடத்தை

ஒரு முறை போதிசிட்டா வளச்சியை நாம் அடைந்துவிட்டால், நம்முடைய வரையறைகளைக் கடந்து இப்போது இருப்பதை விட நம்மால் முயன்ற அதிக அளவில் மற்றவர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், 7-பகுதி காரண மற்றும் விளைவு போதிசிட்டா தியானத்தின் முந்தைய நிலைகளில் இருந்து கட்டமைக்கப்பட்ட உதவிக்கான பொறுப்பை ஏற்கும் விதிவிலக்கான தீர்மானம் நம்மிடம் உள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், நாம் மற்றவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருப்பதைக் காணும் போதெல்லாம், உதாரணமாக வீடற்றவர்களாக இருந்தால், அவர்களை வீடற்றவர்களாக மட்டும் பார்க்க மாட்டோம். நாம் அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் இயல்பாகவே ஏழைகள், சோம்பேறிகள் அல்லது நாம் முன்நிறுத்தக்கூடிய மதிப்புமிக்க தீர்ப்புகளின் அடிப்படையில் நாம்  நினைக்க மாட்டோம். மாறாக, இந்த ஜென்மத்தில் இந்த வாழ்நாளின் குறிப்பிட்ட காலத்தில், அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்வோம். இருப்பினும், மனத்தொடர்ச்சிகள் தொடக்கமில்லாதலை, சில காலம் அவர்கள் நம்முடைய தாய்மார்களாக இருந்து நம்மை கருணையோடு பராமரித்திருக்கலாம். அவர்கள் நம்மை கருவில் சுமந்திருக்கலாம், நம்முடைய அசிங்கமான டயபரை மாற்றி இருக்கலாம், உண்மையில் நன்றியுணர்வோடு இருந்து அந்தக் கருணையை உண்மையில் நாம் திருப்பியளிக்க விரும்புகிறோம். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மகிழ்ச்சிக்கான காரணத்தை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் விரும்பலாம், மேலும் அவர்கள் அவர்களுடைய பிரச்னைகள் மற்றும் பிரச்னைக்கான காரணங்களில் இருந்து விடுபட வேண்டும். அதற்காக எதையாவது செய்ய முயற்சிப்பதற்கான பொறுப்பை நாம் எடுத்துக் கொள்கிறோம்.

நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் வீட்டிற்குச் சென்று நம்முடைய குறைபாடுகளை வெல்வதற்காக தியானம் செய்ய வேண்டும், துன்பப்படுவோருக்கு உதவுவதற்காக உண்மையில் எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, நாம் அதிகமாக தியானம் செய்ய வேண்டும், இருப்பினும், இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய இது நம்மைத் தூண்ட வேண்டுமெனில், நமது கூச்சம், தயக்கம் மற்றும் கஞ்சத்தனம் ஆகியவற்றைக் கடந்து, உண்மையில் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும், குறைந்தபட்சம் அவர்களைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என தியானிக்க வேண்டும் - குறைந்தபட்சம் ஏதாவது செய்யுங்கள்.

மற்றொரு விதத்தில் சொல்வதானால், நம்மால் முடிந்தவரை நம்முடைய வரம்புகளை சமாளிக்கவும், இப்போது உதவுவதற்கு நம்மால் முடிந்தவரை நமது திறனைப் பயன்படுத்தவும் இப்போது நம்மை நகர்த்துவதற்கு நாம் நம்முடைய விதிவிலக்கான தீர்மானத்தைப் பயன்படுத்துகிறோம். நிச்சயமாக, நாம் வீட்டிற்குச் செல்லும்போது, நாம் அதிகமாக செயலாற்ற செய்ய வேண்டும், ஆனால் வீடற்ற நபர்களைப் பற்றி மறந்துவிடாமல், வீட்டிற்குச் சென்று தியானம் மட்டுமே செய்யக் கூடாது. நமது தீர்மானம் உண்மையாக இருந்தால், அது நம்முடைய நினைவாற்றலில் வைத்திருக்கும்.

உதவி தேவைப்படும் பிற உயிரினங்களை நாம் சந்திக்கும் போது ஒவ்வொரு தருணத்திலும் நமக்குள்ளாகவே நாம் செயலாற்றுவதற்கான வலுவான உந்துதல் வருகிறது. குளிர்காலத்தில் குளிர்ந்த தரையில் ஒரு வயதான பெண்மணி சுரங்கப்பாதையில் பிச்சை எடுப்பதைப் பார்க்கிறோம், அது என் அம்மாவாக இருந்தால் என்ன செய்வது என்று நாம் நினைக்கிறோம்? இந்த ஜென்மத்தில் உண்மையில் அவர் என்னுடைய அம்மாவாக இருந்து குளிர்ந்த தரையில் அமர்ந்து பிச்சை எடுப்பதை பார்த்து விட்டு நடந்து செல்வோமா? அல்லது சுரங்கப்பாதையில் இருக்கும் வீடற்றவர்களுக்கு இளைஞர் செய்தித்தாள்களை விநியோகித்து தற்காலிகமாக உதவுவது பற்றி என்ன நினைப்போம், அது நம் சொந்த மகனாக இருந்தால் நாம் எப்படி உணர்வோம்? இந்த பையனுக்கு பெற்றோர் உள்ளனர். இது மிகவும் முக்கியமானது. இந்தியாவில், தொழுநோயாளிகள் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளை நாம் பார்க்கிறோம், பொதுவாக இந்த தொழுநோயாளிகளுக்கு குடும்பங்கள் இருப்பதாக நாம் ஒருபோதும் நினைப்பதில்லை. அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. அவர்களை மனிதர்களாகப் பாவியுங்கள்.

நிச்சயமாக, இந்த வீட்டற்றவர்களின் இக்கட்டான சூழ்நிலையை வேறுபடுத்த நமக்கு பாகுபடுத்தும் விழிப்புணர்வு தேவை. சிலர் போதைப்பொருள் அல்லது மதுபானம் வாங்க பணத்திற்காக மக்களை விரட்டுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பௌத்தம் "திறமையான வழிமுறைகள்" என்று அழைப்பதை நாம் பயன்படுத்த வேண்டும். நமக்கு உதவ விருப்பம் உள்ளது, அவர்களின் துன்பத்திற்கான காரணம் என்ன, அவர்களின் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன என்பது பற்றி நமக்கு சில யோசனைகள் உள்ளன. பின்னர், அவர்களுக்கு உண்மையில் என்ன உதவியாக இருக்கும் என்பதை செய்ய நாம் முயற்சிக்கிறோம். அவர்களுக்கு பணம் கொடுப்பது நிச்சயமாக உதவியாக இருக்காது,ஏனெனில் அந்தப் பணத்தை மேலும் அதிக போதைப்பொருளோ அல்லது மதுவோ வாங்க அவர்கள் பயன்படுத்துவார்கள், அதனால் நாம் பணம் கொடுக்க மாட்டோம். நம்மிடம் உணவு இருந்தால் அதைக் கொடுக்கலாம். ஆனால், எப்படியே நாம் அவர்களுக்கு நம்முடைய அக்கறை அணுகுமுறையை கொடுத்து அவர்கள் பயங்கரமான குடிகாரர்கள் அல்லது போதை ஆசாமிகள் என்று நினைக்காமல் அவர்களை மதிக்கிறோம். அவர்களும் மனிதர்களே, துன்பப்படும் மனிதர்கள்.

ஒருவருக்கு உதவும் சிறந்த வழி என்ன என்று முடிவு செய்வது எளிதான விஷயமல்ல. நாம் இப்போது வரையறைக்குள் இருக்கிறோம் என்பதைப் பார்க்கிறோம். உண்மையில் எது சிறந்தது என்று நமக்குத் தெரியாது. அதனை அறிந்து கொள்ள நாம் புத்தர்களாக மாற வேண்டும், ஆனால் இப்போது நம்மால் முடிந்ததை முயற்சிக்கிறோம், சில நேரங்களில் நாமும் தவறுகளை செய்யப் போகிறோம் என்பதை உணர்கிறோம். இருந்தாலும் நாம் குறைந்தபட்சம் முயற்சியாவது செய்கிறோம்.

சுருக்கம்

7-பகுதி காரணம் மற்றும் விளைவு முறை மூலம் நம்மைப் பயிற்றுவிப்பதனால் ஒரு போதிசிட்டா நோக்கத்தை நாம் வளர்த்துக் கொண்டால், மற்ற அனைவருக்கும் சிறந்த உதவியாக இருக்கும் புத்த நிலையை அடைவதற்கான நமது நோக்கமானது பல தனிப்பட்ட உணர்வுகளை ஒன்றிணைக்கும் வலுவான உணர்ச்சி நிலையை ஆதரிக்கிறது. இது ஒவ்வொருவருடனான நெருக்க உணர்வு மற்றும் சமமாக அவர்களுடன் உறவுபேணுதல், மற்றவர்கள் காட்டு கருணையை பாராட்டுதல், ஆழ்ந்த நன்றியுணர்வு, அக்கறை, அன்பு மற்றும் இரக்கத்தை உள்ளடக்கியது, இதனுடன் முடிந்தவரை ஒவ்வொருவருக்கும் அதிக உதவியை செய்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் உறுதியான தீர்மானத்தை எடுத்தல். இத்தகைய உணர்வுகள் அதற்கு அடிப்படையாக இருப்பதால், நமது போதிசிட்டா நோக்கம் வலிமையானது, இதயப்பூர்வமானது மற்றும் நிலையானது.

Top