உலகின் எட்டு கவலைகள் மற்றும் கருத்தியல் கட்டமைப்பு

உலகின் எட்டு கவலைகள்

நமது அனுபவம் மற்றும் உள்ளார்ந்த மனதில் எழும் எண்ணங்களைத் தாண்டி, வாழ்க்கையின் உள்ளடக்கம் என்று ஒன்று உள்ளது. இங்கேயும் அதே போலத்தான்; அதனை பெரிதாக்குவதற்கு நாம் முயலக் கூடாது. பௌத்த போதனைகள் வாழ்க்கையில் எட்டு நிலையற்ற விஷயங்களின் பட்டியலை வலியுறுத்துகின்றன - "உலகின் எட்டு கவலைகள்" அல்லது "எட்டு உலக தர்மங்கள்" என்று அழைக்கப்படுபவை - எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும், சென்று கொண்டிருக்கும் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் அதே கொள்கையைப் பின்பற்றுகிறது.

லாபங்கள் மற்றும் இழப்புகள்

சில சமயங்களில் நாம் லாபமும், சில சமயங்களில் இழப்பையும் நாம் சந்திக்கிறோம். பொருளாதார ரீதியாக சில நேரங்களில் நாம் பணம் ஈட்டுகிறோம், சில நேரங்களில் பணத்தை இழக்கிறோம். சில சமயங்களில் நாம் சிலவற்றை வாங்குகிறோம், நிச்சயமாக அது நல்லது (அது ஒரு லாபம்), ஆனால் சில சமயங்களில் அது விரைவாக விரயமாகிறது (அதுவே இழப்பு). மீண்டும் சொன்னால், இவை எதைப் பற்றியும் குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை. இது குழந்தைகளின் விளையாட்டு அல்லது சீட்டாட்டம் போன்றது; சில நேரங்களில் நாம் வெற்றி பெறுவோம் சில நேரங்களில் தோற்றுப் போவோம். அதனால் என்ன? இதில் சிறப்பாக ஒன்றும் இல்லை. 

உண்மையில், தோற்றுப் போனால் “நான் ஜெயிக்க வேண்டும்” என்று குழந்தை புரண்டு அழுவதைப் போல நாம் இருக்கக் கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்! ஏன் எப்போதும் நீங்கள் ஜெயிக்க வேண்டும்? எல்லாருக்கும் என்னை பிடிக்கும் என்று நம்புவதைப் போன்றதாகும். பௌத்தத்தில் ஒரு பயனுள்ள சொல்வழக்கு இருக்கிறது, “எல்லோருக்கும் புத்தரைப் பிடிக்காது, எனவே நமக்கு மட்டும் அப்படி நடக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?” நிச்சயமாக இல்லை. நம்முடைய முகநூல் பக்கத்தில் எல்லோருமே “லைக்” பொத்தானை அழுத்தப் போவதில்லை. சிலருக்கு நம்மைப் பிடிக்காது, அதற்கு என்ன செய்ய முடியும்? இது மிகச் சாதாரணம்.

இது எல்லாமே லாபங்கள் மற்றும் இழப்புகள். நாம் ஒருவருடன் உறவு முறையில் இருந்தாலும் கடைசியில் அது முடிவுக்கு வரப் போகிறது. இதற்கு முன்னர் நம்முடைய ஜன்னல் அருகே வந்து செல்லும் வனப் பறவையை நம்முடைய கற்பனைக்காக பயன்படுத்தினோம், சிறிது நேரம் அது வருகிறது ஏனெனில் அது சுதந்திரமாக இருக்கிறது, பின்னர் பறந்து போய்விடுகிறது. உறவுமுறையிலும் அதே தான். “என்னை விட்டு போகாதே, உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது” என்று நீங்கள் சொன்னாலும் அது பெரிய விஷயமல்ல, வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேர்ந்தே இருந்தாலும், யாரோ ஒருவருக்கு முன்னால் மற்றொருவர் இறக்க நேரிடும். நாம் ஒரு நண்பனை சம்பாதித்தோம், ஒரு நண்பனை இழந்தோம், அதைப் பற்றி சிறப்பாக அங்கே ஒன்றுமில்லை. அது தான் வாழ்க்கையின் எளிய வழி. அதற்காக அந்த நண்பன் இருக்கும் போது நம்மால் மகிழ்ச்சியாகவும், அவர்களை இழந்தால் சோகமாகவும் இருக்க முடியாது என்று அர்த்தம் இல்லை - எதையும் உணருவது "எதுவாக இருந்தாலும்" என்ற மனப்பான்மையாக இருக்காது, அது "சிறப்பாக எதுவும் இல்லை" - ஆனால் நாம் உச்சநிலைக்கு செல்ல மாட்டோம், அதனை பெரிய விஷயமாக்க மாட்டோம் என்ற உணர்வு.

லாபங்கள் மற்றும் இழப்புகளுக்கு நாம் எந்த அளவிற்கு பதில் தருகிறோம் என்பதை நமக்கு நாமே பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது. எப்போதுமே என்னையே ஒரு உதாரணமாக எடுத்துகொள்வேன். ஏனெனில் எனது இணையதளத்தில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்; அது நாள் முழுவதும் என் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் ஆக்கிரமித்துள்ளது. அதன் புள்ளிவிபரங்களை நாம் கண்காணிக்கிறோம். அன்றாடம் எத்தனை பேர் அதனைப் படிக்கிறார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியும். ஒரு நாளில் அதிகமானோர் படித்திருந்தால், உண்மையில் அது மிகவும் நல்லது, ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையை படிப்போர்கள் விகிதம் அடையவில்லை என்றாலோ அல்லது நான் நினைத்தபடி இருக்கவில்லை என்றாலோ, அன்றைய தினம் நன்றாக இருக்காது. எனவே லாபமும் இருக்கிறது இழப்பும் இருக்கிறது.

அதாவது நாம் மிக குறைந்த அளவிலான மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். இது நாடகத்தனமானதல்ல. சில வாரங்களுக்கு முன்னர் நாங்கள் ஒரே நாளில் 6,000 பார்வையாளர்களை அடைந்தோம், உண்மையில் அது, “அடடா, 6,000 பேரா, அது மிக அதிகம்!” ஆனால் அதில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சி மிக அற்பமானது. அது மிகப்பெரிய விஷயமல்ல ஏனெனில் உண்மையில் அது எதுவும் செய்யாது. அந்த உணர்வானது, “ஆம் அது நல்லது. இப்போது என்ன? புதிதாக என்ன இருக்கிறது?” மற்றொரு நாள் 4,500 பார்வையாளர்கள் மட்டுமே படித்துவிட்டு சென்றதால், “ஓ, இன்று பலரும் என்னுடைய இணையதளத்திற்கு வந்து படிக்கவில்லை” என்று நான் சற்றே ஏமாற்றமடைந்தேன். ஆனால் மிக முக்கியமாகத் தோன்றுவது என்னவென்றால் சுய- ஆக்கிரமிப்பு, எல்லா நேரத்திலும் நான் புள்ளிவிவரங்களைப் பார்க்க விரும்புவதை நான் ஒப்புக்கொள்கிறேன். சுயத்தைப் பற்றியதை விட மற்றவர்கள் மீதான விஷயங்களில் அக்கறைக் காட்டுவதே வலிமையானது என்று பௌத்தம் சொல்கிறது, "என்னைப்" பற்றி நினைப்பது மிகவும் உள்ளுணர்வாக இருக்கிறது, தன்னைப் பற்றிய இந்த அக்கறை மற்ற விஷயங்களில் அக்கறை காட்டுவதை விட மிகவும் வலிமையானது என்று பௌத்தம் கூறுகிறது. தன்னை மிகவும் அற்புதமானவர் அல்லது சிறந்தவர் அல்லது யாரும் நம்மை நேசிப்பதில்லை என்ற எண்ணம் வெளிப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் இந்த அடிப்படை எண்ணம் எப்போதும் இருக்கும்.

நீங்கள் அனைவரும் உங்களுடைய சொந்த உதாரணங்களான முகநூல் அல்லது தகவல் அனுப்புவதில் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்கலாம்? இன்று நான் எத்தனை தகவல்களைப் பெற்றேன்? என்னுடைய பதிவுகளை இன்று யார் அதிகம் விரும்பினார்கள்? நாம் எத்தனை முறை முகநூலை சரிபார்க்கிறோம் அல்லது நம்முடைய பாக்கெட்டுகளில் இருந்து எத்தனை முறை போனை எடுத்து ஏதேனும் வந்திருக்கிறதா என்று சரிபார்த்தோம்? இணையதளம் உள்ளிட்டவை வருவதற்கு முன்னர், மனிதர்கள் இதையே தான் தபால்காரரை எதிர்பார்த்து செய்து கொண்டிருந்தனர். “இன்று எனக்கு ஏதேனும் கடிதம் வந்திருக்கிறதா?” கடிதங்கள் வரவில்லை என்றால்: “அடக்கடவுளே, யாருக்கும் என் மீது அன்பு இல்லை.” அல்லது இது வெறும் விளம்பரங்கள் நமக்கு அது தேவையில்லை. “சிறப்பாக ஒன்றுமில்லை” என்பதைப் போன்ற அணுகுமுறையானது உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களை மிகக் குறைந்த உச்சநிலைக்கு கொண்டு செல்ல உதவும், ஏனெனில் நாம் அதிக உணர்வின் சமநிலையையும் என்ன நடந்தாலும் ஒரே சீரான நிலையையும் கொண்டிருப்போம். மிகவும் கடினமானது என்னவென்றால், எப்பொழுதும் போனிற்கு என்ன வந்தது என்பதைச் சரிபார்த்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை கையாள்வதாகும்.

நம்முடைய மனப்பான்மையை மாற்றுவது என்பது மெதுவாக நடக்கும் நீண்ட செயல்முறையாகும். விஷயங்கள் அனைத்தும் சட்டென்று மாறிவிடாது, ஆனால் படிப்படியாக மாற்றம் அடையும். உங்களை நீங்களே யதார்த்தமான வழியில் பார்ப்பது மிக சுவாரஸ்யமானது, அங்கே நீங்கள், “நான் கணினி மற்றும் செல்போனுக்கு அடிமையாக இருக்கிறேன், ஏனெனில் எப்போதும் அவற்றையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் எனக்கு பதில் பதிவிட்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் நான் சரிபார்க்கிறேன். நான் ஏன் இப்படி அடிமையாகிவிட்டேன்?” என்பதைப் பார்ப்பீர்கள். சுரங்க நடைபாதையில் இருக்கும் மக்கள் அனைவரையும் பாருங்கள் எத்தனை பேர் எப்போதும் தங்களின் கைகளில் செல்போன் வைத்திருக்கிறார்கள். ஏன்? அங்கே சுய-போற்றுதல் மற்றும் பாதுகாப்பின்மை இருக்கிறது, அதனுடன் “நான் எதையும் விட்டு விடக் கூடாது என்ற மனநிலை”. ஏன்? உண்மையில் எது மிக முக்கியமானது. எதுவுமே முக்கியமல்ல என்று நாங்கள் சொல்லவில்லை, சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் எப்போதும் தொடர்பில் இருப்பதை, எப்போதும் ஆன்லைனில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் மிகைப்படுத்துகிறோம். நம்முடைய சொந்த உணர்வு சமநிலை என்கிற விதத்தில் பகுத்தல் நல்லதாகும். ஆகவே சில நேரங்களில் நாம் வெல்வோம், சில சமயங்களில் நாம் தோற்போம். இது ஒரு தொகுப்பு.

அனைத்தும் நன்று மற்றும் மோசமான நிலை 

இரண்டாவது தொகுப்பானது சிலநேரங்களில் விஷயங்கள் நன்றாகப் போகிறன, சில சமயங்களில் விஷயங்கள் மோசமாகப் போகின்றன. நாம் இதனை பல மட்டங்களில் புரிந்து கொள்ள முடியும், ஆனால் மீண்டும், பதிலானது “சிறப்பாக ஒன்றுமில்லை.” ஒருநாள் நிச்சயம் நன்றாகப் போகும், அடுத்த நாள் முழுவதும் தடையாக இருக்கும், மற்றவர்கள் நமக்கு கடினமான நேரத்தை கொடுக்கலாம் மேலும் எல்லாமே தவறாகச் செல்வதாக நாம் கருதலாம். இது சாதாரணமானது. காலையில் நம்முடைய சக்தியானது மிக அதிகமாகவும், பிற்பகலில் உண்மையில் குறைவாகவும் இருக்கலாம். சில சமயங்களில் நாம் ஆரோக்கியமாகவும், சில சமயங்களில் நோய்வாய்ப்பட்டும் இருக்கலாம். சிறப்பாக ஒன்றுமில்லை. 

பாராட்டு மற்றும் விமர்சனம்

அடுத்த தொகுப்பானது பாராட்டு மற்றும் விமர்சனத்தின் மீது அக்கறை கொள்கிறது. சிலர் நம்மை புகழ்வார்கள் மற்றவர்கள் நம்மை விமர்சிப்பார்கள். நாம் இதனை எப்படி கையாளப் போகிறோம்? எல்லோருமே புத்தரை போற்றவில்லை; சிலர், குறிப்பாக அவருடைய உறவினருக்கு, அவர் மீது மிகுந்த பகை. எனவே நாம் ஏன் ஒவ்வொருவரும் நம்மைப் போற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? 

என்னுடைய சொந்த உதாரணத்தையே நான் மீண்டும் பயன்படுத்தப் போகிறேன். என்னுடைய இணையதளம் பற்றி நான் பல ஈமெயில்களைப் பெறுகிறேன், பெரும்பாலானவர்கள் இந்த இணையதளம் அவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள், அரிதாக சில விமர்சனங்களும் இருக்கின்றன. நிச்சயமாக பாராட்டுகளைக் கையாள்வது எளிது; விமர்சனங்கள் நம்முடைய மனங்களுக்கு மேலும் தொந்தரவை தரக் கூடியதாக இருக்கலாம். 

பாராட்டுகளுடன், நாம் உச்சநிலைக்கு சென்று நாம் மிகவும் உயர்ந்தவர் என்றோ அல்லது அதற்கு அப்படியே எதிராக, “நான் இதற்குத் தகுதியானவன் அல்ல. என்னைப் பற்றிய உண்மையை அவர்கள் அறிந்தால், அவர்கள் என்னை விரும்ப மாட்டார்கள்” என்றோ நினைக்கக் கூடாது. ஆனால் இந்தப் பாராட்டுகளைச் சுமந்து செல்வது மிகவும் எளிதானது. விமர்சனம் மட்டும் ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது? ஏனெனில் நம்மை நாமே போற்றுகிறோம். மனப்பான்மை பயிற்சியுடன், நம்மை விட நாம் அவர்களைப் பார்க்கிறோம், அதனால் நாம் அவர்களுக்கு என்ன செய்தோமோ அதன் விளைவாக அவர்கள் நமக்கு விமர்சனத்தை கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். உதவிக்காக நம்மால் ஏதாவது செய்ய முடிந்தால், அது ஒரு மன்னிப்பாக இருந்தாலும் கூட, “இது உங்களுக்கு கஷ்டமான காலத்தி கொடுத்திருக்கிறது என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். உண்மையில் நான் மிகவும் வருந்துகிறேன், என்னுடைய நோக்கம் அதுவல்ல.” மெல்ல மெல்ல நாம் நம்முடைய கவனத்தை சுய- போற்றுதலில் இருந்து மற்றவர்களை போற்றுவது மாற்றுகிறோம்.  

நாம் இதனை நம்முடைய அன்றாட வாழ்வில், மற்றவர்களுடனான தினசரி கலந்துரையாடல்களில் கொண்டு வர முடியும். சில சமயங்கள் அவர்கள் நம்முடன் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள், சில சமயம் அப்படி இருக்க மாட்டார்கள். மனிதர்கள் நம்முடன் மகிழ்ச்சியாக இருந்தால், அது எளிதானது. நம்முடைய வாழ்வில் சிலர் இருக்கிறார்கள் அவர்களைக் கையாள்வது கடினம், அவர்கள் எப்போதுமே நம்மை விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது நம்மிடம் எதிர்மறையாக நடந்துகொள்பவர்கள். அவர்களிடம் நம்முடைய மனப்பான்மை என்ன? அவர்கள் மிகக் கடினமானவர், மகிழ்ச்சியில்லாதவர் என்று நாம் அவர்களை அடையாளப்படுத்த முடியுமா? அல்லது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவர்கள் என்று நம்மால் அடையாளப்படுத்த முடியுமா? நிச்சயமாக இது போன்றவர்கள் உங்களுடைய வாழ்விலும் இருக்கிறார்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன். அவர்கள் உங்களை மதிய உணவிற்கு சந்தித்து சாப்பிட விரும்பி அழைக்கிறார்கள், அது 100% தங்களைப் பற்றி பேசுவதும் குறை சொல்வதுமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். "அச்சச்சோ, மீண்டும் இவரா" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியாது!

அவர்களுடன் இருப்பதும் அவர்கள் கூறும் குறைகளை கேட்பதும் எவ்வளவு மகிழ்ச்சியின்றி இருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்திப்பது நம்முடைய பதிலாக இருந்தால், நாம் நம்முடைய பார்வையை மாற்ற வேண்டும்: இவர் எல்லா நேரமும் குறை கூறிக் கொண்டு இருக்கிறார், ஏனெனில் அவர் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியின்றி, தனிமையில் இருப்பதாகவும் கூட உணர்கிறார். பொதுவாக குறை கூறுபவர்கள் யாரென்றால், உண்மையில் அவர்களுடன் யாரும் இருக்க விரும்பாதவர்கள். எனவே நாம் அவர்களுடன் சில நேரத்தை செலவிட வேண்டுமெனில், நாம் அதிக அனுதாபத்தை வளர்க்க வேண்டும் மேலும் அது ஒரு பயங்கரமான அனுபவமல்ல ஏனெனில் நாம் அவர்களுக்காக சிந்திக்கப் போகிறோம், ‘எனக்காக’ என்கிற கோணத்தில் அல்ல.   

நல்ல மற்றும் கெட்ட செய்தியை கேட்டல்

நான்காவது தொகுப்பானது நல்ல மற்றும் கெட்ட செய்திகளைக் கேட்டல். இது முந்தைய தொகுப்பைப் போன்றதே: எல்லாமே எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் போகிறது. நிச்சயமாக, நான்கு தொகுப்புகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது மற்றும் “சிறப்பாக ஒன்றுமில்லை” என்கிற கொள்கை ஒவ்வொன்றும் இந்த எட்டிற்கும் பொருந்தும். நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ எதைக் கேட்டாலும் அதில் சிறப்பாக ஒன்றுமில்லை, அதுவே ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கிறது. 

இப்போது, சிலர் இந்த வகையான பயிற்சியை எதிர்க்கிறார்கள், அவர்கள் உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டரில் இருப்பதை விரும்புவதாகக் கூறுகிறார்கள், ஏனென்றால் உங்களிடம் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்றால், நீங்கள் உண்மையில் உயிருடன் இல்லை. ஆனால் இது உதவும் மனப்பான்மையா என்பதை நாம் ஆராய வேண்டும்.

முதலில், நாம் உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டரில் இருக்கிறோமோ இல்லையோ, நாம் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். அதுவே ஒரு சிறு எதிர்ப்பு. எனவே நாம் உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டரில் இருந்தால் என்ன நடக்கும்? சரி, நாம் உண்மையில் பகுத்தறிவுடன் சிந்திக்கவில்லை, ஏனென்றால் நாம் உணர்ச்சிகளால் மூழ்கிவிடுகிறோம். நாம் மிகவும் அமைதியாக இருந்தால், நம்முடைய வாழ்க்கை அவ்வளவு வியத்தகு முறையில் இல்லை, மேலும் சூழ்நிலைகளை மிகச் சிறப்பாக சமாளிக்க முடியும். நீங்கள் தெளிவாக சிந்திக்காமல் கோபமடைந்தால், நீங்கள் சொன்ன விஷயத்திற்காக பின்னால் வருத்தப்படுவீர்கள். நம் உணர்ச்சிகளின் அடிப்படையில் சமமாக இருப்பதன் அர்த்தம், நாம் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய மாட்டோம் என்பதாகும். எல்லோரும் மகிழ்ச்சியை விரும்பும் வகையில், இந்த வகையான அமைதியான, நிசப்தமான மகிழ்ச்சி நாடகத்தனமான "ஓ ஹூப்பீ!"ஐ விட மிகவும் நிலையான ஒரு வகையான மகிழ்ச்சியாகும்.

“சிறப்பாக ஒன்றுமில்லைலை” என்பதற்கான கருத்தியல் கட்டமைப்பு

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த மனப்பான்மைக்கு இந்த அடிப்படை அல்லது கருத்தியல் கட்டமைப்பைப் பாருங்கள். அங்கே கருத்தியல் சிந்தனைகளைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். கருத்தியல் சிந்தனை என்றால் என்ன? கருத்தியல் சிந்தனை என்பது விஷயங்களைப் பார்த்தல் அல்லது ஒரு வகையின் மூலம் விஷயங்களை அனுபவித்தல், அது “சிறப்பான ஒன்றை” போன்றதாகும். இது ஒருவித மனப் பெட்டியைப் போன்றது, நாம் எதையாவது அனுபவித்து, அதை "சிறப்பான ஒன்று" என்ற மனப் பெட்டியில் வைக்கிறோம்.

எல்லா நேரமும் நாம் இதைச் செய்கிறோம், ஏனெனில் நாம் எவ்வாறு விஷயங்களை புரிந்து கொண்டு செயல்படுத்துகிறோம் என்பதைப் போன்றதாகும். “பெண்” மனப்பெட்டி என்ற ஒன்றும் இருக்கிறது. நான் ஒருவரைப் பார்த்து அவரை “பெண்” என்ற மனப்பெட்டியில் வைக்கிறேன். இதே போன்று, நாம் அனுபவிக்கும் பல்வேறு விஷயங்களை வெவ்வேறு மனப் பெட்டிகளில் ஒன்றாக வைக்க முடிகிறது. உதாரணமாக, "ஆண்" அல்லது "பெண்" என்று நாம் வைக்கும் அதே நபர் "இளைஞர்" அல்லது "வயதானவர்" அல்லது "பொன் நிற முடி" அல்லது "கருமையான முடி" ஆகியவற்றிற்கும் பொருந்தும். பல பெட்டிகளும் கூட அங்கே இருக்கின்றன.

உண்மையில், மனப் பெட்டிகளில் விஷயங்கள் இல்லை. இது வெளிப்படையாகத் தோன்றினாலும், உண்மையில் புரிந்துகொள்வதும் ஜீரணிப்பதும் மிகவும் கடினமான விஷயம். உதாரணமாக, நாம் ஒருவரை "பயங்கரமான நபர்" என்ற மனப்பெட்டியில் வைக்கலாம், ஆனால் பயங்கரமான நபர் என்று யாரும் இல்லை, ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே அப்படி இருந்திருந்தால், எல்லோரும் அவர்களை அப்படித்தான் பார்ப்பார்கள், மேலும் அவர்கள் குழந்தையாக இருந்ததில் இருந்தே அப்படி இருந்திருக்க வேண்டும்.

இந்த மனப் பெட்டிகள் நமக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன, மேலும் மற்றவர்களைப் பற்றிய நமது அணுகுமுறை நாம் விஷயங்களை வைக்கும் மனப் பெட்டியின் வகையால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மனப் பெட்டிகள் வெறுமனே ஒரு மனக் கட்டமைப்பாகும், அவற்றைக் குறிப்பிட வேண்டாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில் - அங்கே பெட்டிகள் இல்லை, இல்லையா?!

நாம் இந்த மனப் பெட்டிகளை எப்படி உருவாக்குகிறோம்?

விஷயங்களை இந்த வகையான மனப் பெட்டி அல்லது அந்த வகையான மனப்பெட்டியில் வைக்க வேண்டியவை என்று எப்படி அடையாளம் காண்கிறோம் என்பதை இப்போது பார்க்கலாம். மற்ற விஷயங்களில் இருந்து வேறுபடும் ஒரு பொருளின் குறிப்பிட்ட அம்சத்தின் அடிப்படையில் நாம் அதைச் செய்கிறோம். இதனை தொழில்நுட்ப ரீதியில் "வரையறுக்கும் பண்பு" என்று அழைக்கலாம். ஒரு எளிய உதாரணமானது “சதுரம்” என்ற பெட்டிக்குள் நாம் வைக்கும் வரையறுக்கும் பண்பு என்ன என்பதைப் பார்ப்பதாகும். சரி, இது நான்கு சமமான பக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் - எனவே இது போன்று கொண்டிருக்கும் விஷயங்களை நாம் "சதுரம்" என்று அழைக்கப்படும் மனப் பெட்டியில் வைக்கிறோம்.

இது ஒரு எளிமையான வகை, ஆனால் ? “எரிச்சலாக்கும் நபர்” எந்த வகையைச் சேர்ந்தவர்?  அந்த நபரின் பக்கத்தில் இருந்து என்ன சிறப்பம்சம் அவரை “நீங்கள் எரிச்சலாக்கும் நபர்” என்று நம்மை பார்க்க வைத்து அந்தப் பெட்டிக்குள் வைக்கிறது”? அது என்ன எரிச்சலூட்டும் என்பதை முயற்சி செய்து பார்ப்பது சுவாரஸ்யமானது. உங்கள் தலையைச் சுற்றி சலசலக்கும் ஈக்கும் இந்த நபருக்கும் பொதுவானது என்ன, அதுவே அவர்கள் இருவரையும் "எரிச்சலூட்டும்" பெட்டியில் வைக்கிறது?

நான் என்ன சொல்ல முடியும் என்றால் இரண்டுமே என்னுடைய உணர்வு சமநிலை, மன அமைதி மற்றும் நிசப்தமான மனநிலையை இழக்கச் செய்ய காரணமாக இருக்கின்றன. ஆனவே உண்மையில், நாம் மனப்பெட்டியை நான் என்ற விதத்தில் விளக்குகிறோம், உண்மையில் அவர்கள் என்கிற ரீதியில் பார்ப்பதில்லை, ஏனெனில் எரிச்சலூட்டுவதாக நான் பார்த்ததை நீங்கள் எரிச்சலூட்டுவதாக பார்க்கவில்லை. என் மன அமைதியை இழக்கச் செய்யும் விஷயங்களைப் பொறுத்தவரை, அது நான் முற்றிலும் ஈர்க்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம், அது என்னைப் பைத்தியமாக ஆக்குகிறது. எனவே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாம் எப்படி விஷயங்களை வரையறுத்து அவற்றை பெட்டிகளில் வைக்கிறோம் என்பது உண்மையில் நம்மைப் பற்றிய கவலையாக இருக்கிறது. 

பின்னர் நாம் இந்த அனைத்து உணர்வுகளையும் கொண்டிருக்கிறோம். இப்போது இது மேலும் சுவாரஸ்யமாக மாறப் போகிறது (ஏற்கனவே கூட இது சுவாரஸ்யமாக இருக்கலாம்). ஆகவே நாம் “மகிழ்ச்சி” எனும் மனப்பெட்டியை கொண்டிருக்கிறோம். விஷயங்களை நீங்கள் எப்படி “மகிழ்ச்சி” எனும் பெட்டிக்குள் வைக்கிறீர்கள். சொல்வதற்கு அது மிகவும் கடினமானது. சிலர் நம்மிடம் “நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” என்று கேட்கிறார்கள் அதற்கு என்ன பதில் சொல்வது என்று கூட நமக்குத் தெரியாது. “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?” என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டால் கூட – அதன் அர்த்தம் என்ன என்று உண்மையில் எனக்குக் கூடத் தெரியாது?  எனவே மகிழ்ச்சியாக இருப்பதற்கான வரையறை என்ன? நாம் அதிகம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. இது விநோதமானது, இல்லையா? வரையறை என்னவென்றால், நீங்கள் அதை அனுபவிக்கும் போது, நீங்கள் அதிலிருந்து பிரிந்து செல்ல விரும்பாத ஒன்று; நீங்கள் தொடர விரும்புகிறீர்கள். பௌத்த இலக்கியத்தில் நாம் காணும் வரையறை இதுதான், எனவே அது நமக்குச் சிறிது உதவுகிறது.

முகநூலைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? “பிடித்தவை” என்று விஷயங்களை நாம் எப்படி வரையறுக்கிறோம்? அது நம்மைச் சிரிக்க வைக்கும் மற்றும் நம்மை நல்லதாக உணர வைக்கும் ஏதோ ஒன்றாகும். ஆனால் ஒரு நாள் முழுகூதும் அதையே பார்த்துக் கொண்டிருந்து வேறு எதையும் பார்க்காவிட்டால், நாம் அதை விரும்பமாட்டோம், விரும்புவோமா? ஆக அது விசித்திரமானது, இல்லையா?

நீங்கள் ஒரு கருத்தியல் சிந்தனையைக் கொண்டிருக்கும்போது, அந்த வகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மனப் உருவம் எப்போதும் இருக்கும். எனவே நீங்கள் ஒரு “நாயை” பற்றி சிந்தித்தால், நாயின் உருவம் போன்ற மன உருவ வகையை நீங்கள் கொண்டிருப்பீர்கள், நிச்சயமாக அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதே போன்று தான் ஒருவர் ஈர்ப்பானவர் அல்லது கூச்சலிடும் நபர் என்பதைக் குறிக்கும் மன உருவத்திற்கும் இது பொருந்தும். 

எனவே நான் விரும்பும் ஒன்றை குறிப்பது என்ன? அது மிகக் கடினமானது. “எனக்கு இந்த ஸ்டைல் பிடிக்கும், எனக்கு இந்த வகை உணவு பிடிக்கும், எனக்கு இந்த வகை படம் பிடிக்கும், அந்தப் பெண் எனக்கு ஒத்தவர் அல்ல, அந்த ஆண் எனக்கு பொருத்தமானவர் அல்ல” போன்ற இவ்வகையான உரையாடலை நாம் கொண்டிருக்கிறோம், இல்லையா. நமக்கு என்ன பிடிக்கிறது என்பதை எது குறிக்கிறது? ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு படத்துடன், அதை நாம் விரும்புவதைப் பற்றிய அனுபவத்துடன் ஒப்பிட்டு, அதை நமது"லைக்" வகைக்குள் வைப்போமா? இவை அனைத்தும் நம் மனதின் பக்கத்திலிருந்து வருகிறது, பொருளிலிருந்து அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பொருளில் இருந்து ஏதாவது ஒரு உண்மையான விருப்பம் வருவதைப் போல இருந்தால், எல்லோரும் அதை விரும்புவார்கள். எனவே இது அனைத்தும் அகநிலை.

“சிறப்பு” என்பதை வரையறுத்தல்

அடுத்த நிலையானது ஏதோ ஒன்றை சிறப்பாக்குவது எது என்று பார்ப்பதாகும். அந்தப் பொருளின் பக்கத்தில் இருந்து சிறப்பானதாக ஏதேனும் இருக்கிறதா அல்லது “சிறப்பான ஏதோ ஒன்று” என்ற நமக்கு நாமே வரையறுக்கும் மனப்பெட்டிக்குள் இருக்கிறதாக்கிறதா? எதையாவது சிறப்பானதாக்குவதைப் பார்க்கும்போது, "சிறப்பு எதுவும் இல்லை" என்பதற்கான தத்துவார்த்த அடிப்படையைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறோம். பொருளின் பக்கத்தில் சிறப்பு எதுவும் இல்லை. "சிறப்பு" பற்றிய எந்தவொரு யோசனையும் முற்றிலும் நமது சொந்த யோசனைகளிலிருந்து, "சிறப்பு" என்ற நமது சொந்த மனப் பெட்டியிலிருந்து வருகிறது. இது ஒரு வடிகட்டியாகும், இதன் மூலம் நாம் இது சிறப்பு மற்றும் அது இல்லை என்ற விஷயங்களை உணர்கிறோம்.

அப்படியானால் சிறப்பு என்பதை நாம் எப்படி வரையறுப்பது என்று நம்மை நாமே கேட்கலாம்? தனித்துவமான ஏதோ ஒன்று இருக்கிறது என்ற சிலர் சொல்கிறார்கள்: “உண்மையில் இது சிறப்பான ஓவியம்” அல்லது “இது ஒரு சிறப்பான உணவு.” ஆனால் எல்லாமே தனித்துவமானதா? இல்லை இரண்டு விஷயங்கள் ஒரே மாதிரியானவை. முட்டைக்கோஸ் குவியலில் உள்ள ஒவ்வொரு முட்டைக்கோசும் ஒரு தனித்துவமான முட்டைக்கோஸ் ஆகும்.

அப்படியானால், “விஷயங்கள் வேறுபட்டு இருக்கலாம். சிறப்பாக இருக்க, அவை வித்தியாசமாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவை எப்படி வித்தியாசமாக இருக்கின்றன? சாதாரணத்திற்கும் சிறப்பிற்கும் மத்தியில் நாம் எங்கே எப்படி கோடிடுகிறோம்? நம்மால் எப்படி தீர்மானிக்க முடிகிறது?

சிறப்பான ஏதோ ஒன்றில், புதிதாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அது எனக்கோ இந்த பிரபஞ்சத்திற்கோ புதிதானதா? பொதுவாகவே நாம் எல்லாவற்றையும் “நான் என்ற விதத்திலேயே வரையறுக்கிறோம், நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு அனுபவதும் புதிதானது, இல்லையா? நேற்று என்ன அனுபவம் எனக்கு கிடைத்ததோ அந்த அனுபவமே இன்று எனக்கு கிடைக்கவில்லை. இன்று நேற்றாக முடியாது. அதாவது, எல்லாமே சிறப்பு என்பது ஒன்றுமே சிறப்பு இல்லை என்பதை உண்மையில் அர்த்தப்படுத்துகிறது. எல்லாமே தனித்தன்மை வாய்ந்தது, எல்லாமே வித்தியாசமானது, எல்லாமே தனிப்பட்டது, எனவே நாம் சிறப்பு என்று எதுவும் கூற முடியாது. நாம் விரும்புவதால் ஏதாவது சிறப்பு என்று சொன்னால், நாம் விரும்புவது எல்லா நேரத்திலும் மாறுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்; நாம் அதை அதிகமாகப் பெற்றால், அது இனி நமக்குப் பிடிக்காது, அதிக நேரம் வைத்திருந்தால், நாம் சலிப்படைகிறோம்.

விஷயங்களை “சிறப்பு” பெட்டி என்பதற்கு வைப்பதற்கான அடிமைத்தனத்தில் இருந்து வென்று வர உதவும் நாம் செயலாற்றக் கூடிய விஷயங்கள் இவையே. “நான் இப்போது என்ன உணர்கிறேனோ அது மிக முக்கியம். அது ஏன் இந்த “முக்கியம்” என்ற பெட்டிக்குள் இருக்கிறது? எனவே நாம் செய்ய முயற்சிப்பது என்னவென்றால் தேவையில்லாத எதையும் மனப்பெட்டிக்குள் காணாமல் இருப்பதாகும். நிச்சயமாக அங்கே பயனுள்ள, தேவையான பெட்டிகளும் இருக்கின்றன; அவை இல்லாமல் நம்மால் மொழியை புரிந்து கொள்ள முடியாது. ஒரே வார்த்தையை மனிதர்கள் வெவ்வேறு ஓசைகளுடன் வெவ்வேறு உச்சரிப்பு மற்றும் சப்தத்துடன் கூறுகிறார்கள், அந்த வார்த்தைக்கான மனப்பெட்டியை கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே நம்மால் அவற்றை புரிந்து கொள்ள முடியும். 

எனவே, எல்லாப் பெட்டிகளையும் நாம் தூக்கி எறியக் கூடாது. குறிப்பிட்ட மனப்பெட்டிகள் பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் அவை முற்றிலும் அகநிலை, "ஏதோ சிறப்பு" போன்றவை. நீங்கள் அதை பகுப்பாய்வு செய்யத் தொடங்கும் போது, அவை அனைத்தும் நமது அணுகுமுறையில் உள்ளது: சிறப்பு என்ன என்பதை நம்மால் வரையறுக்க முடியாவிட்டாலும், சிறப்பானது என்று நாம் நம்புகிறோம்.

இந்த விதத்தில், "நான் எதையும் விசேஷமாகப் பார்க்கப் போவதில்லை" என்று கூறுவதற்கு நாம் சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை மட்டும் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் அதைச் செயல்படுத்துவது உண்மையில் மிகவும் கடினம். ஆனால் புரிந்துகொள்வதன் மூலம், இது ஒரு மன அமைப்பு என்பதால், உண்மையில் எதுவும் சிறப்பு இல்லை என்பதை நாம் காணலாம்.

கருத்தியல் சிந்தனையை புரிந்து கொள்வதன் மூலம் மனதை பயிற்சித்தல்

மனப் பயிற்சியின் மூலம் நமது அணுகுமுறைகளுடன் செயல்படக்கூடிய பல நிலைகள் உள்ளன. வெவ்வேறு மனப் பெட்டிகள் மூலம் நாம் விஷயங்களை உணர முடியும், மேலும் நாம் உணரும் பொருட்களை ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு மாற்றலாம். எனவே ஒருவரை எனவே ஒருவரை “கோபமான, குறைகூறுபவர்” என்ற பெட்டிக்குள் வைப்பதற்குப் பதிலாக அவர்களை நாம் “மகிழ்ச்சியில்லாத தனிமையில் இருப்பவர்,” என்ற பெட்டிக்குள் வைக்கலாம், இதன் மூலம் அவரை அணுகும் முறையில் முற்றிலும் மாற்றத்தை கடைபிடிக்கலாம்.  அந்த நபரின் பக்கத்தில் உள்ளார்ந்த எதுவும் இல்லை என்பதை நாம் உணர்கிறோம், ஆனால் அவர்களை நாம் எப்படி உணர்கிறோம் என்ற நமது மனப்பான்மையே அவர்களை எப்படி அனுபவிக்கிறோம் மற்றும் சமாளிக்கிறது என்பதைப் பாதிக்கிறது.

சில மன வகைகளான “சிறப்பு” போன்றவற்றால் எந்தப் பயனும் இல்லை. சிறப்பானவர்கள், சிறந்த சந்தர்ப்பம் உள்ளிட்ட அனைத்து வகையானவை இருக்கின்றன. ஆனால் பிறந்தநாள் அல்லது புத்தாண்டு போன்றவற்றை நாம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக நினைக்கும் போது அது எவ்வளவு தன்னிச்சையானது என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? அதனை சிறப்பாக்குவது என்ன? அது சிறப்பு என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். ஜனவரி 1ம் தேதிக்கு குறிப்பாக சிறப்பு எதுவும் இல்லை, மேலும் அந்த தேதி வானியல் ரீதியில் எதற்கும் பொருந்தாது. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, உங்களால் ஒரு தொடக்கத்தை வைக்க முடியாது: "ஆ! இது ஆண்டின் முதல் நாள். முதலில் என்று எதுவும் இல்லை, அதனால்தான் ஒவ்வொரு கலாச்சாரமும் அதற்கென சொந்த புத்தாண்டை கொண்டுள்ளது. அதில் சிறப்பு எதுவும் இல்லை. நீங்கள் புத்தாண்டைக் கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்தால், அது முட்டாள்தனமனது என்று நினைக்கத் தேவையில்லை, ஆனால் அதிக உற்சாகம் அடைந்து விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

மனப் பெட்டிகள் மற்றும் பிரிவுகள் மற்றும் இந்த வரையறுக்கும் குணாதிசயங்கள் அல்லது அம்சங்களுடன், கருத்தியல் சிந்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பதன் அடிப்படை இயல்பை நாம் புரிந்து கொள்ளும்போது, அது பயனுள்ளதாக இருக்கும் போது அதைப் பயன்படுத்தலாம் மற்றும் இல்லாதபோது அதை கைவிடலாம்.

இறுதியாக, நம்மால் நமது அணுகுமுறைகளை மேம்படுத்தி மாற்ற முடியும், அதற்கு சில உந்துதலும் ஏராளமான பொறுமையும் தேவை. திரும்பத் திரும்பப் பயிற்சி செய்வதன் மூலம் மாற்றத்தை நாம் எவ்வளவு அதிகமாகப் பழக்கப்படுத்துகிறோமோ, அவ்வளவு இயல்பாக நம் அன்றாட வாழ்வில் வரும். நாம் மகிழ்ச்சியற்றதாக உணரும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், "ஏய், நான் என்னைப் பற்றி, என்னைப் பற்றி, என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று நம்மை நினைவுபடுத்துவதுதான். மனப்பான்மை பயிற்சி ஒரு நீண்ட செயல்முறை, ஆனால் மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

சுருக்கம்

ஒவ்வொரு காலையிலும் ஒரே குறிக்கோளுடன் எழுகிறோம்: சிறந்த, மகிழ்ச்சியான எதிர்காலத்தை நாம் விரும்புகிறோம். இதில் நாம் அனைவரும் ஒன்றே. "நான்" பிரபஞ்சத்தின் மையம் என்று நினைப்பதில் நாம் அனைவரும் சமமாக இருக்கிறோம், இது நமக்கு சொல்லப்படாத பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. "என்னை" கவனித்துக்கொள்வதால் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் சுய-போன்றுதல் காரணமாக, நாம் உண்மையில் மகிழ்ச்சியின்மையை நோக்கி ஓடுகிறோம், மேலும் நாம் விரும்பும் மகிழ்ச்சியிலிருந்து விலகிச் செல்கிறோம். நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது, விஷயங்கள் உண்மையில் இருக்கும் விதத்தில், இவை அனைத்தும் திரும்பும். வாழ்க்கை மேலும் கீழும் செல்கிறது, அது எப்போதும் அப்படித் தான் இருக்கும்; இதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நம்மால் கட்டுப்படுத்தக்கூடியது நமது சொந்த மனப்பான்மை: ஒவ்வொரு கணமும், நாம் அனுபவிக்கும் விஷயங்களுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம். முயற்சியால், நம் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றலாம்

Top