சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு அடிமையாதல்

விமர்சனம்

மனப்பான்மை பயிற்சி அல்லது மனப்பயிற்சியுடன் நாம் எதைக் கையாள்கிறோம் என்று பார்த்தால் அதுவே நம்முடைய அன்றாட வாழ்வின் அனுபவம். நாம் நம்முடைய வாழ்வை வாழ்ந்து ஒவ்வொரு கனத்தையும் நமக்கு நாமே அனுபவிக்கிறோம். நாம் என்ன செய்கிறோம் என்று எல்லாவற்றையும் முகநூல் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டால் கூட உண்மையில் அதனை அனுபவிப்பது நாம் ஒருவர் மட்டுமே. 

இன்றைய காலகட்டத்தில், பலரும் குறுந்தகவல்கள் அனுப்பவும் தங்களின் உணர்வுகள் மற்றும் அன்றாடச் செயல்களை முகநூல் மற்றும் ட்விட்டரில் பதிவிடுவதிலும் அடிமையாக இருக்கின்றனர். வேறொருவரின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படையில் இந்த விஷயங்களைப் பற்றி படிப்பதற்கும் நமது சொந்த அன்றாட வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம்? நம்முடைய சொந்த வாழ்க்கை அனுபவத்திற்கும், யாரோ ஒருவர் அனுபவிக்கும் அனுபவத்திற்கும் இடையே தொலைவு உள்ளது, குறிப்பாக அது மிகக் குறைந்த அளவிலான வார்த்தைகளில் அவை விவரிக்கப்படும் போது தொலைவு உண்டாகிறது.

இருப்பினும் மற்றவர்களின் வாழ்வில் என்ன நமக்கிறது, நாம் அனுபவிப்பதைப் போன்றே மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை அல்லது நடுநிலை உணர்வுகள் போன்றவற்றை அவர்கள் கொண்டிருப்பதில்லை என்பதால், நம்மால் மற்றவர்கள் மீது பச்சாதாபம் காட்ட முடியும். மிக அடிப்படை மட்டத்தில், இதுவே நாம் அன்றாட வாழ்வில் கையாளக் கூடிய விஷயம்; சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மகிழ்ச்சியின்றி நாம் உணர்கிறோம். சில நேரங்களில் நாம் எதையுமே அதிகம் உணராதது போலக் கூடத் தோன்றலாம். எப்போதுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினாலும் நிதர்சனத்தில், நம்முடைய மனநிலையானது எல்லா நேரமும் ஏற்ற இறக்கத்துடனே இருக்கிறது. நம்முடைய மனநிலையை நம்மால் அதிகம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது போலவும் அடிக்கடி தோன்றலாம். மனப்பான்மைப் பயிற்சியின் மூலம், நம் வாழ்க்கையின் தருணங்களைக் கடந்து, என்ன நடக்கிறது மற்றும் என்ன செய்கிறோம் என்பதை அனுபவிக்கும்போது, ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்று பார்க்கிறோம்.

வாழ்க்கையை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பார்ப்பதற்கான மிக முக்கியமான இரண்டு மைய விஷயங்கள் இருக்கின்றன இருக்கின்றன: நாம் என்ன உணர்கிறோமோ அதன் முக்கியத்துவத்தை பெரிதுபடுத்துதல் மற்றும் நமக்கான முக்கியத்துவத்தை பெரிதுபடுத்துதல். உதாரணத்திற்கு, மகிழ்ச்சியின்றி இருக்கும் உணர்வை நாம் பெரிய விஷயமாக்குவதால், அது மனநிலையை மேலும் மோசமடையச் செய்யும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால், அதைப் பற்றி பாதுகாப்பின்றி இருந்தால், அதுவே அந்த சந்தோஷத்தை அழித்துவிடும். நாம் நடுநிலையாக உணரும் போது, எப்பொழுதும் பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், நாம் பதற்றமடைகிறோம். அமைதியாகவும் நிம்மதியாகவும் இருப்பதில் நாம் திருப்தியடையவில்லை, ஆனால் தொலைக்காட்சி அல்லது இசை அல்லது எதுவாக இருந்தாலும், எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். சில வகையான தூண்டுதல்கள் தொடர்ந்து தேவைப்படுகின்றன, ஏனெனில் இது வாழ்வதற்கான ஒரு வித உணர்வைத் தருகிறது.

என்னுடைய அத்தை ஒருவர் எப்போதும் தொலைக்காட்சிப் பெட்டியை ஓடவிட்டுக் கொண்டே தூங்குவார். உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும் தொலைக்காட்சி ஓடிக் கொண்டு இருக்கும். இரவில் தூக்கத்தில் இருந்து சிறிது கண் விழிக்கும் போது தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருப்பது பிடித்திருப்பதாக அவர் கூறுகிறார். அவர் அமைதியைக் கண்டு முழுமையாக பயப்படுகிறார். இது சற்றே விநோதமானது மட்டுமல்ல, நாம் இதை மிக சோகமானதாகக் கூட காண்கிறேன். 

நான் என்ன நினைக்கிறேன் என்பதில் சிறப்பாக எதுவும் இல்லை

நம்முடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் குறித்த மனப்பான்மையை மேம்படுத்துவதற்கு முதலில் நாம் பார்க்க வேண்டிய விஷயமானது, சிறப்பாக ஒன்றுமில்லை என்பதாகும். குறிப்பாக சிறப்பானது எதுவுமில்லை அல்லது சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாகவும் மேலும் சில சமயங்களில் நல்ல விதமாகவும் சில சமயங்களில் அமைதியாகவும் உணர்வதைப் பற்றி குறிப்பிடும் படியாக ஒன்றுமில்லை. இது முற்றிலும் சாதாரணமானது. இது கடல் அலை போன்றது, சில நேரங்களில் அலை உயர்ந்தெழும், சில நேரங்களில் அலைகளுக்கு இடையே இடைவெளி இருக்கும் மற்றும் சில நேரங்களில் கடல் அமைதியாக இருக்கும். அது இயற்கையின் நியதி இல்லையா, அதில் கவலைப்படுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. சில நேரங்களில் பெரிய, கொந்தளிப்பான அலைகளுடன் கூடிய பெரிய புயல் கூட இருக்கலாம்; ஆனால் முழு கடலையும் அதன் ஆழத்திலிருந்து மேற்பரப்பு வரை சிந்தித்தால், உண்மையில் அதன் ஆழத்தில் தொந்தரவு செய்யாது, இல்லையா? இது வானிலை போன்ற பல காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளின் விளைவாக மேற்பரப்பில் தோன்றும் ஒன்று. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

நம்முடைய மனங்களும் இந்த கடலைப் போன்றது தான். இவ்வாறு சிந்திப்பது பயன்தரக்கூடியது, மேற்பரப்பில் பார்க்கும் போது மகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை, இந்த உணர்ச்சி, அந்த உணர்ச்சி போன்ற ஏற்ற இறக்கமான அலைகள் இருக்கலாம், ஆனால் ஆழத்தில் அதனால் நாம் உண்மையில் தொந்தரவு செய்யப்படவில்லை. இதன் அர்த்தம் நாம் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை கொண்டிருக்க முயற்சிக்கவில்லை என்பதல்ல, ஏனெனில் அது எப்போதும் புயலுக்கு சமமானது. ஆனால் புயல் போன்ற உணர்ச்சி மற்றும் உணர்வுகளின் உச்சநிலை வந்தால், நாம் அதனை பயமுறுத்தும் புயலாக்கக் கூடாது. நாம் அதனை அதன் உண்மை என்னவோ அந்த நிலையிலேயே கையாள வேண்டும்.  

பலரும் பௌத்த முறைகளைப் பயிற்சித்து சில ஆண்டுகளில் அதன் பலன்களான கோபமடையாமல் இருத்தல் அல்லது அதிக பொறாமை கொள்ளாதிருத்தல், மற்றவர்களிடம் பயங்கரமாக நடந்து கொள்ளாமை உள்ளிட்டவற்றை உணர்கின்றனர். பின்னர் மேலும் சில ஆண்டுகள் கழித்து அவர்கள் உண்மையில் கோபமடைதல் அல்லது காதலில் விழுதல் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டிருக்கலாம் மற்றும் தீவிரமான பற்றுதல் மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்பை அனுபவிக்கலாம், இதனால் அவர்கள் சோர்வடையலாம். இந்த சோர்விற்கான ஆதாரமானது சிறப்பாக ஒன்றுமில்லை என்ற முழு அணுகுதலை அவர்கள் மறந்ததேயாகும், ஏனெனில் நம்முடைய போக்குகளும் பழக்கங்களும் மிக ஆழமாக ஊறிப்போய் இருக்கின்றன அவற்றை கடந்து வரும் முயற்சியில் வெற்றிபெற ஏராளமான காலம் எடுக்கும். நாம் அதை தற்காலிகமாக கவனித்துக் கொள்ளலாம், ஆனால் நாம் ஏன் கோபப்படுகிறோம் மற்றும் பலவற்றின் வேர் வரை சென்று பார்க்காவிட்டால், அது அவ்வப்போது மீண்டும் நிகழும். எனவே அது மீண்டும் நிகழும்போது, "விசேஷமாக எதுவும் இல்லை" என்று நாம் நினைப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் இன்னும் விடுதலை பெற்றவர்கள் அல்ல, எனவே நிச்சயமாக பற்றுதலும் கோபமும் மீண்டும் வரப் போகிறது. அதை நாம் ஒரு பெரிய விஷயமாக்கினால், அப்போதுதான் நாம் சிக்கிக் கொள்கிறோம்.

நாம் என்ன அனுபவிக்கிறோமோ அல்லது உணர்கிறோமோ அதைப் பற்றி சிறப்பாக ஒன்றுமில்லை என்று நாம் புரிந்து கொண்டு மாறும் எண்ணமானது, பின்னர் எப்போது அப்படி நடந்தாலும், அது சில அசாதாரண நுண்ணறிவாக இருந்தாலும் கூட நீங்கள் அதனைக் கையாள்வீர்கள். இருட்டாக இருந்தால் நீங்கள் உங்களது பாதத்தை மேசையின் மீது மோதினால், வலியை அனுபவிக்க நேரிடும். அதைத் தவிர வேறு என்ன நீங்கள் எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக மோதிக்கொண்டால் உங்கள் பாதத்தில் வலி உண்டாகும். எலும்பில் ஏதேனும் அடிபட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து விட்டு நீங்கள் முன்னேறிப் போகலாம். அதில் பெரிய சவால் ஒன்றுமில்லை. மேலும் கீழுமாக குதித்து, அம்மா வந்து பார்த்து ஒரு முத்தமிட்டால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை.  எனவே நாம் நம்முடைய வாழ்க்கையை இந்த எளிய நிம்மதியான வழியில் நடத்த முயற்சிக்கலாம். என்ன நடந்தாலும் அல்லது நாம் என்ன உணர்ந்தாலும் அது பெரிய விஷயமல்ல என்று நாம் அமைதியாக இருப்பதற்கு அது உதவி செய்யும். 

என்னைப் பற்றி சிறப்பாக ஒன்றுமில்லை

பெரிதுபடுத்துதலும் கூட இரண்டாவது விஷயம். இந்த முறை நம்முடைய உணர்வுகளுக்குப் பதிலாக, நம்மைப் பற்றிய முக்கியத்துவத்தை நாம் பெரிதுபடுத்துகிறோம். அணுகுமுறை பயிற்சி(மனப்பயிற்சி) போதனைகள் தலைப்பில் இது உண்மையில் முக்கியமானது, ஏனெனில் நம்முடைய கஷ்டங்கள் மற்றும் சிக்கல்கள் உள்ளிட்டவை ஒரு விஷயத்தில் இருந்து வருகிறது: அது சுய-போற்றுதலாகும். இதன் அர்த்தம் நாம் எப்போதும் “நான்” என்பதிலேயே கவனம் செலுத்தி வெறித்தனமாக இருக்கிறோம், உண்மையில் நாம் அக்கறை காட்டும் ஒரே ஒரு நபர் நாம் மட்டுமே.  இது அகங்காரம் மற்றும் அகங்காரத்தின் ஒரு அம்சத்தையும், அத்துடன் சுயநலம் மற்றும் சுய அக்கறையையும் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை மற்றும் அதனுடன் வரும் விஷயங்களை விவரிக்க பல வழிகள் உள்ளன.

நாம் ஏதோ ஒன்றாகவோ அல்லது சிறப்பு வாய்ந்தவராகவோ மாறும்போது, இதுவே உண்மையில் நமது பிரச்சனைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. “நான் மிக முக்கியமானவர். எனவே நான் என்ன உணர்கிறேன் என்பது உண்மையில் முக்கியம்” என்று நாம் சிந்திக்கிறோம். “நான், நான், நான்” என்று நாம் எப்போதும் நம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டால் பிறகு நிச்சயமாக இந்த “நான்” மகிழ்ச்சியாக இருக்கிறதா அல்லது மகிழ்ச்சியின்றி இருக்கிறதா அல்லது எதையும் உணரவில்லையா என்பதைப் பற்றியே கவலைபட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்.  

நம்முடைய உணர்வுகளை நாம் ஏன் சமூக வலைதளங்களில் பகிர்கிறோம்?

நடுநிலை வழியை பின்பற்றுவது சிறப்பானது என்பதைவிட எப்போதுமே இரண்டு உச்சநிலைகளைத் தவிர்ப்பதைப் பற்றி பௌத்தம் பேசுகிறது. ஒரு உச்சநிலையானது எல்லாமே “எனக்கு” என்று அதனை பெரிய விஷயமாக்கி, அந்த உணர்வை மொத்த உலகிற்கும் காட்ட வேண்டும் என்று எல்லோரும் உண்மையில் அக்கறை காட்டுவார்கள் என்று நினைக்கிறோம். உண்மையில் காலையில் நான் என்ன சிற்றுண்டி சாப்பிட்டேன், அல்லது எனக்கு அது பிடித்திருந்ததா பிடிக்கவில்லையா என்று யாருக்கும் கவலையில்லை. ஆனாலும் இது முக்கியம் என்று நாம் நினைக்கிறோம். மேலும் பின்னர் மக்கள் நம்முடைய பதிவுகளை விரும்புகின்றனர். ஆனாலும் நான் என்ன காலையில் சிற்றுண்டி சாப்பிட்டேன் என்பதற்கு எத்தனை பேர் லைக் போட்டிருக்கிறார்கள் என்று நாம் ஏன் அக்கறைப் பட வேண்டும்? அது என்ன நிரூபிக்கப் போகிறது? அதைப் பற்றி சிந்திப்பதற்கு இது சுவாரஸ்யமான விஷயம். 

நிஜ வாழ்வில் மற்றவர்களுடன் பேச வாய்ப்பில்லாதவர்கள் வேண்டுமானால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பகிர்ந்து கொள்ள விரும்பலாம்? ஆம், உண்மையில் அவர்கள் தனிமை உணர்வில் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். ஆனால் இந்த விதத்தில் செயல்படுவது உங்களை மேலும் யதார்த்த வாழ்வில் மற்றவர்களுடன் உரையாடுவதில் இருந்து தள்ளி வைக்கப் போகிறது, உங்களுடைய கணினி அல்லது செல்போன் மிகவும் பாதுகாப்பான சூழல் என்று நினைத்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதனைச் செய்கிறீர்கள். 

உண்மையில் நான் பரிந்துரைப்பது என்னவெனில் நாம் என்ன உணர்கிறோம் என்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் ஏன் உணர்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும்? ஒருபுறம், எல்லோரும் நம் மீது அக்கறை காட்டுவார்கள் என்று நாம் நினைக்கிறோம் அதனால் காலையில் நான் என்ன சிற்றுண்டி சாப்பிட்டேன் அது எனக்கு பிடித்ததா பிடிக்கவில்லையா என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக இது சிறுபிள்ளைத் தனமான உதாரணம், இருப்பினும், போதுமான லைக்குகளைப் பெறவில்லை என்றால், நாம் சற்றே மனதளவில் குறைவாக உணர்கிறோம். நான் என்ன செய்கிறேன், நான் என்ன உணர்கிறேன் – குறிப்பாக மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், இங்கே “நான்” என்பதை நாம் மிக முக்கியமாக்குகிறோம். தன்- நம்பிக்கையோடு இருந்து வாழ்வுடன் இயைந்து போவதற்குப் பதிலாக, அனைத்தையும் நாம் மொத்த உலகிற்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம், நாம் மிக முக்கியமானவர்கள் என்பதால் எல்லோரும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்முடைய பதிவைப் படிப்பார்கள் என்று நாம் நினைக்கிறோம். நம்முடைய முக்கியத்துவத்தை பெரிதுபடுத்துவது இல்லையா இதுநம்முடைய முக்கியத்துவத்தை பெரிதுபடுத்துவது இல்லையா இது? எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பாதுகாப்பின்மையை கொண்டிருக்கிறோம், அது மிக அமைதியான மன நிலையல்ல. பின்னர் நாம் எப்போதும் மற்றவர்களை தொடர்ந்து சரிபார்த்துக் கொண்டே இருக்கிறோம், எதையும் விட்டுவிடவில்லை என்பதை நாம் உறுதிபடுத்துகிறோம். 

எப்படி இருந்தாலும், நாம் தவிர்க்க வேண்டிய இரண்டு உச்சநிலைகளானது எப்போதுமே நாம் மிகமுக்கியமானவர்கள் என்றோ அல்லது அடிப்படையில் நாம் ஒன்றுமில்லை என்றோ சிந்தித்தலாகும். நாம் என்ன உணர்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்தாலும், அவர்கள் அக்கறை கொண்டாலும் இல்லாவிட்டாலும், நாம் நம்முடைய உணர்வுகளை முற்றிலுமாக தவிர்க்க போகிறோமா. 

நிச்சயமாக சில சூழ்நிலைகள் இருக்கின்றன அந்த நேரத்தில் நாம் என்ன உணர்கிறோம் என்பதை தெரியப்படுத்துவது முக்கியமாகும், அதாவது நாம் யாருடனாவது உறவுமுறையில் இருக்கையில் அந்த உறவில் மகிழ்ச்சியற்று இருந்தால் அதனை தெரியப்படுத்துவது அவசியமாகும். நாம் எப்படி உணர்கிறோம் என்பதை யாராவது அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கும் போது அதனை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் வெளியே சொல்வது நல்லது: “உண்மையில் நீங்கள் சொன்னது என்னைக் காயப்படுத்திவிட்டது” போன்றவற்றை வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஆனால் நாம் அதை மிகைப்படுத்தாத சமச்சீரான வழியில் செய்யலாம், அதே சமயம் நாம் அதை மறுக்கவும் இல்லை. நிச்சயமாக நாம் ஒரு உறவைப் பற்றி பேசுகிறோம் என்றால், இரண்டு பேர் அங்கே இருக்கிறார்கள், அதில் மற்றவர் என்ன உணர்கிறார் என்பதும் முக்கியமானது.

அணுகுமுறை பயிற்சியைப் பற்றி நாம் பேசினால், அது என்னுடைய அணுகுமுறை மட்டுமல்ல இந்தச் சூழ்நிலையில் சேர்ந்திருக்கிற ஒவ்வொருவரின் அணுகுமுறையும் கூட. மற்றொரு விதமாகச் சொன்னால், என்னுடைய பார்வை மட்டுமே ஒரே பார்வை இல்லை, சரிதானே? குடும்ப சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஒன்று இதுவாகும், அங்கே ஒவ்வொரு உறுப்பினரும் வீட்டில் இருப்பதை எப்படி அனுபவிக்கிறார்கள் என்றதை தொடர்புபடுத்துகிறோம். எனவே, பெற்றோர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டால், அது குழந்தைகளை எப்படி பாதித்திருக்கிறது என்பதை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அவர்களுக்கு அது தெரியவராது. அவர்களின் சொந்தக் கண்ணோட்டங்கள் மட்டுமே குடும்பத்திற்குள் இந்தக் கட்டமைப்பில் நடக்கின்ற விஷயங்கள் அல்ல.

சுய-போற்றுதலை வெல்வதற்கான வழிகள்

அப்படியானால், பாரம்பரிய மனப்பான்மைப் பயிற்சி அல்லது மனப் பயிற்சியில் முக்கியமானது என்னவென்றால், நாம் வழக்கமாக "சுய-அபிமானம்" என்று அழைக்கும் இந்த சுய-போற்றுதலைக் கடந்து, மற்றவர்களைப் பற்றி சிந்திக்க நாம் வெளிப்படையாக இருத்தலாகும். சில வழிகளில் இது நடக்கும் என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், அதாவது நம்மை ஒருபக்கமும் மற்றவர்களை மற்றொரு பக்கமும் கற்பனை செய்து, “யார் அதிக முக்கியமானவர்கள்? தனிநபராக நானா அல்லது ஒன்று சேர்ந்து இருக்கும் மற்றவர்களா?” என்று சிந்தித்தல் மேலும் நாம் போக்குவரத்து நெரிசல் உதாரணத்தையும் பயன்படுத்தினோம், “நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் எல்லோரையும் விட நான் மிக முக்கியமானவனா மற்ற எல்லோரைப் பற்றியும் கவலைப்படாமல் நான் போக வேண்டிய இடத்திற்குஎப்படியாவது நெரிசலில் இருந்து சென்று விட வேண்டுமா?” 

முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் சிந்திக்க திறந்த மனமுடன் இருந்தால், அது உண்மையில் யதார்த்தம் அடிப்படையிலான. அனைவருமே போக்குவரத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். நாம் மட்டுமே சிக்கிக் கொண்டிருக்கவில்லை, இல்லையா? எனவே நம்முடைய அணுகுமுறையை மேம்படுத்துவதைப் பற்றி நாம் பேசினால், நாம் அதனை யதார்த்தம் அடிப்படையில் செய்கிறோம்; நிதர்சனம் என்ன என்று நாம் பார்க்கிறோம், மேலும் நம்முடைய அணுகுமுறையை அதனுடன் உடன்படுத்துகிறோம். பௌத்த ஆசிரியரான என்னுடைய நண்பர் ஒருவர், பௌத்த அணுகுமுறையின் தொகுப்பை ஒற்றை வார்த்தையில்: “யதார்த்தம்” என்று நீங்கள் தொகுக்கலாம் என்று கூறினார். 

சில சமயங்களில் பௌத்தம் முன்வைக்கப்படும் விதத்தின் காரணமாக, பௌத்தம் என்பது டிஸ்னிலேண்ட் போன்ற அற்புதமான காட்சிப்படுத்தல்கள் மற்றும் சம்பிரதாயங்கள் என்று பெரும்பாலும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் பௌத்தத்தின் முக்கிய உந்துதல் அல்ல. அந்த விஷயங்கள் உள்ளன, அதை மறுப்பதற்கில்லை, ஆனால் அவை யதார்த்தத்திற்கு இணங்க முயற்சிப்பதற்கான ஒரு முறையாகும். நீங்கள் இந்த முறைகளைப் பயன்படுத்தும்போது, உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசத்தையும் கற்பனையின் சக்தியையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

நாம் மனிதர்கள், எனவே நம்மை விலங்குகளிடம் இருந்து வித்தியாசப்படுத்துவது என்ன? நாம் குறிப்பிட்டு சொல்வதற்கு ஏராளமானவை இருக்கின்றன, ஆனால் முக்கியமான விஷயமென்பது நாம் அறிவாற்றலும் கற்பனைத் திறனும் கொண்டிருக்கிறோம். இரண்டையும் பயன்படுத்த நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு உதாரணம் நீங்கள் யார் மீதாவது தீராத மோகத்தை கொண்டிருக்கிறீர்கள். இது நிச்சயமாக தொந்தரவு தரக்கூடியது. எனவே நாம் இதனை நம்முடைய அறிவாற்றல் மற்றும் கற்பனை சக்தியைக் கொண்டு நம்மால் அதை மாற்ற முடியும். 

சிறந்த இந்திய பௌத்த குரு ஆர்யதேவா தனது 400 வசனங்கள் கொண்ட கட்டுரையில் (சமஸ்கிருதத்தில்.  சதுசதக-சாஸ்ட்ரா-காரிகா) (III.4) இப்படி எழுதினார்:

எவரும் வேறு யாரையும் கவர்ச்சியாகக் கண்டு அவர்களுடன் மோகம் கொண்டு அவர்களின் அழகில் மகிழ்ச்சியடையலாம். ஆனால், நாய்களுக்கும் கூட இது பொதுவானது என்பதால், அட மந்தமான புத்திசாலியே, நீ ஏன் உன் மீது மிகவும் பற்று கொண்டிருக்கிறாய்?

மற்றொரு விதமாகச் சொல்வதானால், ஒரு நாயோ அல்லது பன்றியோ தன்னுடைய பாலியல் துணையை மிக ஈர்ப்பானதாகக் கண்டால், நம்மை எது மிக சிறப்பானதாக்குகிறது? பாலியல் ஈர்ப்பின் தரம் என்பது மொத்தமான ஒருவரின் தனிப்பட்ட மனதில் இருந்து வருவதாகும்; இது பொருளின் ஈர்ப்பில் உள்ளார்ந்து ஒன்றும் அல்ல. இல்லாவிடில், ஒரு பன்றி நம்முடைய துணையை மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் காணும், மேலும் பன்றியின் துணையை நாம் கவர்ச்சியாகப் பார்ப்போம். அறிவுப்பூர்வமாக, இது முற்றிலும் சரியானது. நமது கற்பனை மூலம், சொல்லப்பட்ட பன்றிகளை கற்பனை செய்கிறோம், அது அர்த்தமுள்ளதாக இருக்க உதவுகிறது. எனவே நாம் கவர்ச்சிகரமானவராக ஒருவரைப் பார்ப்பதைப் பற்றி உண்மையில் சிறப்பாக எதுவும் இல்லை. நான் இந்த நபரை கவர்ச்சியாகக் காண்கிறேன், நீங்கள் அந்த நபரை கவர்ச்சியாகக் காண்கிறீர்கள். இது ஒரு உணவகத்தில் இருப்பது போன்றது: மெனுகார்டில் இருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவை விரும்புவதைப் போன்றது. அதனால் என்ன? எதிலும் சிறப்பாக எதுவும் இல்லை.

இவ்வகையான சிந்தனையை நீங்கள் விரிவாக்கம் செய்தால், அது மிக சுவாரஸ்யமானதாக மாறுகிறது. ஏன் எல்லோரும் நான் எப்படி செய்கிறேனோ அப்படியே செய்ய வேண்டும்? நிச்சயமாக இந்த சிந்தனைக்குப் பின்னால் இருக்கும் சுய-போற்றுதலே: “நான் செய்கின்ற விதமே சரியானது.” அதன் பிறகு யாராவது நம்முடைய மேஜையையோ அல்லது கணினியில் இருக்கும் கோப்புகளையோ வேறு விதமாக அடுக்கி வைத்தால் நாம் கோபப்பட்டு கத்துகிறோம்: “அது மிகவும் தவறு!” பலவிதமான பாலியல் ஈர்ப்புப் பொருள்கள் இருப்பதைப் போலவே, விஷயங்களைச் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்வது நல்லது.

இந்த அணுகுமுறை பயிற்சி பற்றி நாம் படித்தாலோ அல்லது கேட்டாலோ அதன் முக்கிய அம்சமானது சுய- போற்றுவதலை நிறுத்தி மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதாகும், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுகிறோம் என்ற எண்ணத்தின் முழு உச்சத்திற்கு அதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நிச்சயமாக நம்மால் முடியும், ஏற்கனவே நாம் சொன்னது போல, “பூமியில் இருக்கும் எண்ணிலடங்கா விலங்குகள் மற்றும் பூச்சிகள் உள்பட 7 கோடி மனிதர்களில் நானும் ஒருவன். அனைவருமே மகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை அல்லது நடுநிலையான உணர்வை கொண்டிருக்கிறார்கள், எனவே என்னைப் பற்றி சிறப்பாக ஒன்றுமில்லை.” அனைவரின் சூழலில் நாம் என்ன உணர்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கிறோம், மேலும் வழக்கமான "நான், நான், நான்" என்பதற்கு பதிலாக நம் மனம் மிகவும் திறந்திருக்கும். இது புவி வெப்பமடைதல் போன்றது; இது ஒருவரைப் பற்றியது அல்ல, ஏனெனில் இது அனைவரையும் எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், சுய – போற்றுதலில் இருந்து மற்றவர்களை போற்றச் செல்வதற்கு, உண்மையில் ஒரு நன்மை பயக்கும் மாற்றத்தை செயல்படுத்துவதற்கு நாம் அவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை. நமது உடனடிச் சூழலைப் பார்த்து, "இந்த உறவில் நான் மட்டும் இல்லை" அல்லது "இந்தக் குடும்பத்தில் நான் மட்டும் இல்லை" என்பதைப் பார்த்து, அதை மிகவும் அடக்கமான அளவிலும் செய்யலாம். இந்த விதத்தில் நாம் மெல்ல மெல்ல பெரிய குழுவின் மீது அதிக அக்கறை காட்டுகிறோம். ஒருவேளை நம்மால் பிரபஞ்சத்தில் உள்ள அனைவரையும் இன்னும் சேர்க்க முடியாவிட்டாலும், இந்த வகையான அளவில் இருந்து நாம் தொடங்கலாம், பேஸ்புக் லைக்குகள் என்ற மேலோட்டமான மட்டத்தில் மட்டுமில்லாமல், மற்றவர்களுடனான உண்மையான தனிப்பட்ட சந்திப்புகளிலும் நடைமுறைப்படுத்தலாம்.

இது வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம், ஏனெனில் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களை விட சமூக ஊடகத்தில் அதிகமான பலரை சென்றடையலாம். ஆனால் மெய்நிகர் சமூக வலைதலம் உண்மையில் மனிதர்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் உறவுமுறைகளை மாற்றிப் போடுவதில் இருந்தே பிரச்னைகளானது தொடங்குகிறது. நீங்கள் யாருடனாவது இருக்கலாம், ஆனால் உண்மையில் அங்கே இருக்க மாட்டீர்கள், ஏனெனில் நீங்கள் மற்றவருடன் குறுந்தகவல் பரிமாற்றத்தில் இருக்கிறீர்கள். பதின் பருவத்தினர் இடையில் மட்டுமல்ல குழந்தைகளும் கூட மிகவும் நிராகரிக்கப்பட்டதாக உணரும் புகாரை கொடுப்பது இப்போது பொதுவான விஷயமாகிவிட்டது, ஏனெனில் அவர்களின் பெற்றோர் தொடர்ந்து குறுந்தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதுடன் குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு செவி மடுப்பதில்லை.

மனதை பயிற்சிப்பதற்கான வெவ்வேறு வழிகள்

மனதை நாம் பயிற்சிப்பதற்கு பல அளவுகள் இருக்கின்றன. இதற்கு எந்தவிதமான கவர்ச்சியான நடைமுறையையும் உள்ளடக்கியிருக்க வேண்டியதில்லை; நமக்குத் தேவையானதெல்லாம், நாம் யதார்த்தமாகக் கருதும் வகையில் நமது சொந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதுதான். யதார்த்தமானது என்னவென்றால், பிரபஞ்சத்தில் நாம் மட்டும் அல்ல, பிரபஞ்சத்தில் நாம் மிக முக்கியமான நபர் அல்ல, நிச்சயமாக நாம் ஒன்றும் இல்லாதவரும் அல்ல. பிரபஞ்சத்தில் இருக்கும் பல உயிரினங்களில் நாமும் ஒருவர், நாமும் அதன் ஒரு அங்கம். மற்றவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உணர்வுகள் மற்றும் அவர்கள் விஷயங்களை அனுபவிக்கும் விதத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்ய, பச்சாதாபத்தின் அடிப்படையில் நம் கற்பனையைப் பயன்படுத்தலாம்.

நாம் பயன்படுத்தக் கூடிய மிகப்பெரிய இரண்டு ஆயுதங்கள் நம்முடைய நுண்ணறிவு மற்றும் கற்பனைத் திறன். நாம் நம்முடைய நுண்ணறிவை தர்க்கத்துடன் பயிற்சித்து, நம்முடைய கற்பனையை காட்சிப்படுத்துதல் போன்ற கற்பனையுடன் பயிற்சிக்கலாம், நம்முடைய நுண்ணறிவை பயன்படுத்தும் கணிணியாக மாறுவதோ அல்லது அற்புதமான அனைத்தையும் கட்சிப்படுத்தி தங்கப்பதக்ம் செல்வதோ அல்ல, மாறாக நம்முடைய சொந்த வாழ்வில் கஷ்டங்கள் மற்றும் பிரச்னைகளை வென்று வருதல். ஒரு பரந்த நோக்கத்தில், மற்றவர்களும் இதைச் செய்ய உதவுவதற்காக நாம் இதைச் செய்கிறோம். ஒவ்வொருவருக்கும் நடந்தவை, தற்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது, எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன நிகழக்கூடும் என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்ளவும், பச்சாதாபம் பார்க்கவும் இந்த பரந்த, மிகவும் பரந்த நோக்கத்தைக் கொண்டிருப்பது நல்லது. இது சிறந்த புத்திசாலித்தனம் மற்றும் கற்பனை இரண்டையும் உள்ளடக்கியது!

நம்முடைய அன்றாட வாழ்வில் பல விதங்களில் நம்மால் இதனை கொண்டு வர முடியும். எளிய அளவானது “சிறப்பாக ஒன்றுமில்லை” என்ற இந்த உணர்வை கொண்டிருத்தல், இதன் பொருளானது என்ன நடந்தாலும் நன்மையோ தீமையோ அல்லது இரண்டிற்கும் பொதுவானதோ எதுவாக இருந்தாலும் குறிப்பிடும்படியாக சிறப்பானது எதுவுமில்லை என்பதாலும். வரலாறு முழுவதிலும், குறைந்தபட்சம் பண்டைய கிரேக்கர்கள் முதல் இப்போது வரை, "மிகவும் மோசமான காலங்கள் இது: இளைய தலைமுறை முற்றிலும் சீரழிந்து, கொடூஞ்செயல்கள் மற்றும் ஊழல் மலிந்துவிட்டது " என்று ஒவ்வொருவரும் கூறி வருகின்றனர். கடந்த கால இலக்கியத்தை நீங்கள் பார்த்தால், எல்லோரும் இதைச் சொல்கிறார்கள், ஆனால் அது உண்மையில் உண்மை இல்லை. என்ன நடக்கிறது என்பதில் சிறப்பாக எதுவும் இல்லை, என்னைப் பற்றி சிறப்பு எதுவும் இல்லை, நான் என்ன உணர்கிறேன் என்பதிலும் சிறப்பாக எதுவும் இல்லை. இது ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் எண்ணிலடங்கா காரணங்கள் மற்றும் நிலைமைகளால் இயக்கப்பட்டு, தொடர்ந்து ஓடுகிறது. நம்முடனும் மற்றவர்களுடனும் பச்சாதாபம் கொள்ள நமது புத்திசாலித்தனத்தையும் கற்பனையையும் பயன்படுத்தி, முடிந்தவரை நன்மை பயக்கும் விதத்தில் அதைச் சமாளிக்க வேண்டும்.

சுருக்கம்

இந்த கிரகத்தில் உள்ள எழுநூறு கோடிக்கும் அதிகமான மனிதர்களில் நாமும் ஒருவரே, ஆனால் நம்மில் யாரும் மற்ற யாரையும் விட வித்தியாசமானவர்கள் இல்லை. நம்முடைய சுய-போற்றுதல் மனப்பான்மையைக் கடக்க முயற்சிக்கும்போது, நாம் தானாகவே மிகவும் யதார்த்தம் ஆகிவிடுகிறோம்: எல்லோரும் நமக்கு எதிராக இருப்பதை விட, நாம் அனைவரும் எப்படி ஒன்றாக இருக்கிறோம் என்பதைப் பார்க்கிறோம். நம்மைப் பற்றி குறிப்பிடும்படியாக சிறப்பு எதுவும் இல்லை, இது நமது உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் மற்றவர்களுடனான தொடர்புகளின் தரத்தில் பரந்த முன்னேற்றத்தைக் கொண்டுவருகிறது.

Top