நம்மைப் பற்றியோ, நமது உணர்வுகள் குறித்தோ சொல்ல எந்தச் சிறப்பும் இல்லை

அறிமுகம்

திபெத்தியத்தில் லொஜாங், என்று சொல்லப்படும் மனப்பயிற்சி அல்லது அணுகுமுறை பயிற்சியானது, ஒரு மிகப்பெரிய பரந்துபட்ட தலைப்பு, நம்முடைய வாழ்வை நாம் எப்படி உணர்கிறோம் என்பதையும். நாம் என்ன அனுபவிக்கிறோமோ அதனால் எப்படி நம்முடைய அணுகுமுறைகளை மாற்ற முடியும் என்பதனையும் கையாள்கிறது. வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுடன் கூடியது அது அவ்வளவு எளிதானதல்ல என்பது நம் அனைவருக்குமே தெரியும். பல நேரங்கள் நமக்கு பல விஷயங்கள் நடந்திருக்கின்றன, மேலும் இவை அனைத்துமே மிகவும் பரந்த காரணங்கள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் நடக்கிறது. 

ஒரு எளிய உதாரணமாக, இந்த மாலை வேளையில் நாம் அனைவரும் இங்கே ஒன்று கூடி இருப்பதையே எடுத்துக் கொள்வோம். உங்களை எது இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது? பிரயாணம், போக்குவரத்து நெருக்கடி, நீங்கள் நகரத்தில் வசிக்கிறீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது, அதன் பிறகு உங்களுக்கு ஆர்வமானவை என்னென்ன இருக்கின்றன, உங்களுடைய குடும்பம், பணி மற்றும் வாழ்வில் பொதுவாக என்ன நடக்கிறது என்று ஒட்டுமொத்தமாக எல்லா விஷயங்களும் இருக்கின்றன. ஏராளமான காரணங்கள் மற்றும் நிபந்தனைகளின் முடிவாக, நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம், ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பின்புலம் மற்றும் வெவ்வேறு வகையான காரணங்கள் மற்றும் காரணிகளின் அடிப்படையில் இருந்து வந்திருக்கிறோம்.

நாம் இங்கே அமர்ந்திருக்கிறோம், நீங்கள் அனைவரும், நான் மற்றும் மொழி பெயர்ப்பாளரும் இருக்கிறார். அதே போன்று வீடியோ கேமரா ஒன்றும் நம்முடைய நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்னை பார்ப்பதற்கும் கேமரா என்னை பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நம்மைப்போலவே, பல்வேறு காரணங்கள் மற்றும் நிபந்தனைகளால் கேமராவும் இங்கே இருக்கிறது: யாரோ ஒருவர் அதனை உருவாக்கி இருக்கிறார், யாரோ ஒருவர் வாங்கி இருக்கிறார், இருப்பினும் மற்ற யாரோ ஒருவர் அதனை பொருத்தி இருக்கிறார். கேமராவும் நாமும் தகவல்களை உள்வாங்குகிறோம். இருப்பினும் உண்மையான வித்தியாசம் என்பது, நாம் உள்வாங்கும் தகவல்களின் அடிப்படையில் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை என்கிற மட்டத்தில் உணர்வுகளை வளர்க்கிறோம். கேமராக்களும், கணினிகளும் அவை உள்வாங்கும் தகவலை அனுபவிப்பதில்லை.

மகிழ்ச்சி என்றால் என்ன?

வாழ்வின் அடிப்படை கொள்கையே நாம் அனைவரும் மகிழ்ச்சியையே விரும்புகிறோம் மகிழ்ச்சியின்மையை வெறுக்கிறோம்.”உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன? உண்மையில் நாம் விரும்புவது என்ன?” என்பதை இதுவே நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.

மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு, அதனை நாம் அனுபவிக்கும் போது, இயல்பாகவே அதில் இருந்து விலகி வர விரும்புவதில்லை; நாம் அதனை விரும்புகிறோம் மேலும் அது தொடர்ந்தால் திருப்தியடைகிறோம் என்று பௌத்தத்தில் பார்வையில் விளக்கப்படுகிறது.  

நம் உடல் அறிவாற்றலுடன் சேர்ந்து எதையோ அல்லது யாரையோ பார்ப்பதைப் போன்ற அது ஒரு மன அனுபவம் அல்லது மன அறிவாற்றலைப் போல எதையாவது அல்லது யாரைப்பற்றியாவது சிந்திப்பது. அதிகமாக இல்லை நாம் என்ன பார்க்கிறோம் அல்லது என்ன சிந்திக்கிறோமோ அதை விரும்புகிறோம்; இல்லாவிட்டால், அதனை பார்க்கும் போதோ அல்லது சிந்திக்கும் போதோ நாம் எப்படி உணர்கிறோம். ஆனால், மகிழ்ச்சி என்பது இன்பத்தின் உடல் உணர்வைப் போன்றதல்ல: அது ஒரு மனநிலை. சாக்லேட், நமது இளமை அல்லது சென்று விடக் கூடாது என்று விரும்புகிற மகிழ்ச்சியும் கூட இது போன்றவற்றின் நற்குணங்களை பெரிதுபடுத்திச் சொல்வதைப் போன்ற சிக்கலான உணர்ச்சியுடன் ஒட்டிக்கொண்டிருப்பதை போன்ற அதே உணர்ச்சியும் அல்ல. 

எதையாவது பார்க்கும் போது நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியின் அளவானது, உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தை வைத்துக் கொள்வோம், அது குறைந்த அளவில் இருக்கலாம், ஆனாலும் சில நிமிடங்களுக்குப் பிறகு நாம் இன்னும் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதை பார்க்காமல் இருக்க வேண்டாம் என்றுஎன்று நினைப்பதில்லை, இது நாம் என் உணர்கிறோம் என்பதில் இருந்து நாம் திருப்தி அடைந்துவிட்டோம் அதில் இருந்து பிரிந்து வர விரும்பவில்லை என்பதை குறிக்கிறது. “அதனைப் பார்ப்பதனால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நாம் சொல்லலாம்.” அது பற்றி நாம் மகிழ்ச்சியின்றி இருந்தால் – நாம் அனுபவிக்கும் அந்த மகிழ்ச்சியில்லாத உணர்வில் இருந்து விலக விரும்புவது இயற்கை -  நம்முடைய அனுபவத்தை மாற்றுவதற்காக வேறு பக்கம் கவனத்தை திசை திருப்ப வழக்கமாக முயற்சிப்போம். பின்னர், நிச்சயமாக சில சமயங்களில் எதில் இருந்தாவது விலகுவதா வேண்டாமா என்பதில் கலவையான உணர்வைக் கொண்டிருப்போம்; நாம் அலட்சியமாக இருப்போம். 

இருப்பினும், பெரும்பாலும் நாம் “மகிழ்ச்சி” மற்றும் “மகிழ்ச்சியின்மை,” என்கிற விதத்தில் சிந்தித்தால், நாம் உச்சநிலையான நம்முடைய முகத்தில் அதிக மகிழ்ச்சி, அல்லது சோகம் மற்றும் அழுத்தம் என்கிற விதத்தில் சிந்திப்போம். மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையின் உணர்வுகள், வியக்கத்தக்கதாக இருக்கத் தேவையில்லை ஏனெனில் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை என்கிற மட்டத்தில் அனுபவிக்கிறோம், இதில் அதிகமான கணங்கள் வியத்தக்கதாக இல்லை.

வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்

ஒவ்வொரு கணமும், நாம் எல்லா விதமான விஷயங்களையும் அனுபவிக்கிறோம், நாம் இங்கே இருப்பதைப் போல, அவையும் கூட மில்லியன் காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் ஒன்றுசேர்ந்து வந்திருக்கின்றன. நம்மைச் சுற்றியோ அல்லது நம்முடைய மனங்களிலோ, நடப்பவை பற்றிய தகவல்களை நாம் உள்வாங்குகிறோம், மேலும் இப்படி நடக்கும் போது நாம் பல மட்டங்களிலான மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கிறோம். இந்த நிலையை நாம் பெரும்பாலும் நம்முடைய மன நிலை நல்ல விதமா இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா என்பதன் அடிப்படையில் விவரிக்கிறோம்.  

எல்லா நேரமும் ஏற்ற இறக்கம் இருப்பது வாழ்வின் இயல்புதான் இல்லையா? நாம் இருக்கும் மனநிலையானது எப்போதும் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது, நாம் என்ன செய்கிறோம் என்ன தகவலை உள்வாங்கிக்கொள்கிறோம் என்பதோடு ஒத்துபோவதில்லை. உதாரணமாக, நமக்கு பிடித்த சாதாரண ஒரு விஷயத்தை நாம் செய்கிறோம், ஆனால் நாம் மோசமான மனநிலையில் இருப்பதால் நாம் மகிழ்ச்சியாகவும் இல்லை அதனை மகிழ்ச்சியாக செலவிடவும் இல்லை. அல்லது உடல் பயிற்சி போன்ற வேடிக்கை இல்லாத ஒன்றைச் செய்யலாம், ஆனாலும் உடற்பயிற்சி செய்யவும் அதனைத் தொடரவும் நாம் விரும்புவோம். உண்மையில் நாம் செய்வதற்கும் நம்முடைய மனநிலை எப்படி எப்போது ஒத்துப்போவதில்லை என்பதை பார்ப்பது சுவாரஸ்யமானது. 

ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவிக்கும் போது, அது பற்றி நாம் குறிப்பிட்ட அணுகுமுறையை எப்போதும் கொண்டிருக்கிறோம். அணுகுமுறை என்பதைப் பற்றியே நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம், அதனால் அணுகுமுறை என்றால் என்ன? அணுகுமுறை என்பது நாம் எதையாவது எப்படி கருதுகிறோம் என்பது தான். நாம் பலவிதமான மனப்பான்மைகளைக் கொண்டிருக்கிறோம், அதன் அடிப்படையில், நாம் எந்த விதமான மனநிலையில் இருக்கிறோம் என்பதில் அது அதிக தாக்கங்களை ஏற்படுத்துகிறது. பொதுவான சூழல்களில், வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் அனுபவிக்கும் ஏற்ற இறக்கங்களை மாற்றுவதற்கு நம்மால் உண்மையில் எதையும் அதிகம் செய்ய முடியாது. சில விதமான தியானத்தை நீங்கள் செய்தாலும் கூட அது உங்களை நல்ல விதமாக உணர வைக்குமே தவிர, நீண்ட கால நோக்கில் பார்த்தால் ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் போகிறது, சரிதானே? இருப்பினும் நம்மால் செயலாற்றக் கூடிய விஷயம் மனப்பான்மை ஆகும். 

நம்முடைய மனப்பான்மையை பயிற்சித்தலைப் பற்றி நாம் இப்போது பேசினால், அவை இரண்டு அம்சங்களாக இருக்கின்றன. அதில் முதலாவது விஷயங்கள் மீது அழிவுகரமான மனப்பான்மையை கொண்டிருப்பதை நிறுத்துதல் அல்லது அதனை தூய்மையாக்க முயற்சித்தலாகும். “அழிவு” என்பது சற்றே கடினமான வார்த்தையாகத் தோன்றலாம், எனவே நாம் “ஆக்கமில்லாத” என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். அர்த்தத்தில் அது சுய-அழிவாக இருந்தாலும், இந்த மனப்பான்மைகள் நம்மை மோசமாக உணர வைக்கும். மற்றொரு அம்சமானது அதிக ஆக்கப்பூர்வமான வழியில் விஷயங்களைப் பார்ப்பதற்கு நம்மை நாமே பயிற்சித்தலாகும். 

“அனைத்துமே அற்புதம்; அனைத்துமே சிறந்தது மற்றும் சரியானது!” என்பது போன்ற அதிக நம்பிக்கையைக் கொண்டிருக்கும் “நேர்மறை சிந்தனையின் சக்தி”யைப் பொதுவாக மக்கள் எப்படி வழக்கத்தில் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை என்பதை நாம் முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சிந்தித்தலும் உதவும் என்றாலும் இது சிறிய மற்றும் எளிய அளவிலானது. நம்முடைய மனப்பான்மையை சரியாகக் கையாள்வதற்கான உண்மையான சிறந்த முறையானது, நாம் மேலும் ஆழமாகப் பார்த்தல் வேண்டும். 

நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி சிறப்பாக எதுவுமில்லை

முதலில் நாம் நம்முடைய உணர்வுகளைப் பற்றிய நம்முடைய மனப்பான்மையின் மீது கவனம் செலுத்துவோம், அதாவது நாம் உணரும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை அளவு பற்றிய நம்முடைய மனப்பான்மை. இந்தப் பிரச்னையை பெருவாரியான மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்ற சூழலில் நாம் இதனைப் பார்ப்போம் – அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதன் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்துதல். 

நம்மைப் பற்றி நாமே ஒரு பெரிய விஷயத்தை உருவாக்குகிறோம் – “நான்” என்ற மிகப்பெரிய ஒன்று – நாம் என்ன நினைக்கிறோம் என்பதை பெரிதாகக் கருதுதல். எல்லாவற்றையுமே நாம் இரட்டை சாத்திய வழியில் அனுபவித்தல் வேண்டும். உதாரணமாக, “நான்” என்ற பார்வையை ஒரு பக்கத்திலும் மகிழ்ச்சியின்மை என்பதை மற்றொரு பக்கத்திலும் நாம் பார்க்கிறோம். மகிழ்ச்சியின்மை என்பதைப் பார்த்து பயப்படுகிறோம் நம்மை அதில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் அதில் இருந்து வெளியேறவும் முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தால் உண்மையில் அது நம்மை எவ்வாறு உணர வைக்கும்.  அது அனைத்தையும் மோசமாக்கிவிடும், இல்லையா?

இதைப்பற்றி ஒரு நிமிஷம் சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் கெட்ட மனநிலையில் மகிழ்ச்சியின்றி இருக்கிறீர்கள் அப்போது உங்களுடைய மனப்பான்மை என்ன? உண்மையில் நீங்கள் சோகமாக இருப்பதையோ நீங்கள் அழும்போதோ இருக்கும் மனப்பான்மையை நாம் குறிக்கவில்லை, சாதாரணமாக உங்களது வேலையை செய்து கொண்டு உட்கார்ந்திருக்கும் போதோ தொலைக்காட்சி பார்க்கும் போதோ, அல்லது ஏதோ ஒன்று செய்யும் போது, “அய்யோ, நான் மோசமாக உணர்கிறேன்” என்று நினைப்பதை குறிப்பிட்டு கேட்கிறேன். நாம் உட்கார்ந்திருக்கும் போது ஒரு கருமேகம் நம்மை சுற்றி வந்து சூழ்கிறது, அப்போது நம்மை நாம் கவசமிட்டு “எனக்கு இது வேண்டாம்!” என்று பாதுகாத்துக்கொள்ள விரும்புவதாக நாம் சிந்திக்க வேண்டுமா: இது உங்கள் அனுபவத்தில் ஒரு அங்கமா? பெரும்பாலும் கெட்ட மனநிலை வரும் போது அது எப்போதுமே வேண்டாம் என்று நாம் விரும்புகிறோம். அதைவிட அது எவ்வளவு மோசமானது என்று நாம் அதன் மீது அதிக கவனம் செலுத்துவதால், அது மேலும் மோசமாகிறது. இங்கே பிரச்னை என்னவென்றால் நடப்பதை நாம் இரண்டு விதங்களில் பெரிதுபடுத்துகிறோம் –  ஒரு பக்கத்தில் “நான்” என்ற எண்ணம் மற்றொரு பக்கம் கெட்ட மனநிலை. 

இப்போது மகிழ்ச்சி என்றால் என்ன? இதை அனுபவிக்கவும் நாம் இரட்டிப்பு வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும், “ஒரு பக்கத்தில் “நான்” மற்றொரு பக்கத்தில் மகிழ்ச்சி – அதன் பின்னர் அதை இழந்து விடுவோம் என்ற பயத்தில் நாம் அதனுடன் ஒட்டிக்கொண்டு அதனை இறுக பிடித்துக் கொள்ள முயற்சிப்போம். ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏனெனில் இது கடந்து போய்விடும், நான் அதை இழக்கப்போகிறேன் என்ற பயம்; நாம் நல்ல விதமாக உணர்ந்து கொண்டிருப்பதை நிறுத்தப் போகிறோம். மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது மகிழ்ச்சியாக நிம்மதியாக இருப்பது மிகக் கடினம், இந்த பாதுகாப்பின்மையானது உண்மையில் அனைத்தையும் அழித்துவிடும், இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, “நான் இந்த மகிழ்ச்சிக்குத் தகுதியானவன் அல்ல” என்பதைப் போன்ற எல்லா விதமான கஷ்டங்களும் இருக்கின்றன. 

அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கத் தொடங்கினால், நமக்குள் இருக்கும் மிருகம் அவ்வபோது எட்டிப் பார்ப்பது தெரியும். நாய்களைப் பாருங்கள் அவற்றிற்கு உணவு கிடைத்தாலும் அதனை மகிழ்ச்சியாக உண்ணாமல், யாராவது வந்து எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்று அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு சற்று பதற்றத்துடனே எப்போதும் இருக்கிறது. உங்களுக்கு எப்போதாவது அந்த உணர்வு இருந்திருக்கிறதா? நாமும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம் ஆனால் யாரோ ஒருவர் வந்து உங்களை கண்டு பிடித்து அதனை உங்களிடம் இருந்து எடுத்துச் சென்று விடுவார் என்று அச்சம் கொள்கிறீர்கள். அது ஒரு விசித்திரமான வகையாகும். 

பின்னர் அங்கே ஒரு நடுநிலையான உணர்வு இருக்கிறது, திரும்பவும் இரட்டை கண்ணோட்டத்தில் இருந்து “நான்” மற்றும் நடுநிலை உணர்வு. நடுநிலையான உணர்வை ஒன்றுமில்லை, கடைசியில் எந்த உணர்வும் இல்லை என்று நாம் பெரிதுபடுத்துகிறோம். நடுநிலை உணர்வை ஒன்றும் இல்லை, எந்த உணர்வும் இல்லை என்று பெரிதுபடுத்துகிறோம். இது அடிக்கடி நிகழ்கிறது, அங்கு நாம் எதையும் உணரவில்லை என்று உணர்கிறோம். அது உண்மையில் நாம் உயிருடன் இல்லை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த நடுநிலை உணர்வு உண்மையில் நம்மை சற்று மகிழ்ச்சியற்றதாக உணர வைக்கிறது. உண்மையில் நாம் எதையும் உணர விரும்பவில்லை.

மகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை மற்றும் நடுநிலை என்ற ஒவ்வொன்றின் சாத்தியங்களையும் நாம் மிகைப்படுத்தி அதை மிகப்பெரிய விஷயமாக்குகிறோம், உண்மையில் அது நம்மை மேலும் மகிழ்ச்சியின்மைக்கு ஆளாக்குகிறது. இதனால் நம்முடைய உணர்வுகள் பற்றிய நம்முடைய மனப்பான்மையானது நம்முடைய அனுபவம் நெருக்கடிக்குள்ளாவதற்கு மிக முக்கியக் காரணமாகிறது. மகிழ்ச்சியான, மகிழ்ச்சியற்ற அல்லது நடுநிலை உணர்வை சற்று விசேஷமான ஒன்றாக பார்க்க முனைகிறோம், மேலும் பொதுவாக அதை நம்மிடமிருந்து தனித்துப் பார்க்கிறோம்.

உங்களின் முன்னால் மூன்று வகையான உணவுகள் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒன்று மிக பயங்கரமாக இருக்கிறது, மற்றொன்று அறுசுவையாகவும் வேறு ஒன்று சுவையற்றதாகவும் இருக்கிறது; இதுவும் மகிழ்ச்சியின்மை, மகிழ்ச்சி மற்றும் நடுநிலை உணர்வுகளைப் போன்றதே. நாம் இதனை உணர்ந்தால், நாம் அவற்றை நமக்குள் கொண்டு செல்வதைப் போன்றதாகும், அதாவது நாம் அவற்றை “உண்ணுகிறோம்.” மேலும் ஒரு வகையில், நாம் சாப்பிட வேண்டாம் என்று தேர்வு செய்வது போல் இருக்கிறது, ஆனால் உங்களால் உண்மையில் அதைச் செய்ய முடியாது, உங்களால்முடியுமா, - "எனக்கு எந்த உணர்வும் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று உணர்வீர்களா. அப்படி இருந்தால் நாம் உயிருடன் இருப்பதாக உணர மாட்டோம், அதனால் அது திருப்தியற்றது. இங்கே "நான்" என்ற இந்த இருமைப் பொருள் நம்மிடம் இருக்கிறதா என்பதையும், அங்குள்ள மனநிலை, உணர்வு, நம்மிடமிருந்து பிரிந்திருக்கிறதா என்பதையும் நாம் சரிபார்க்கலாம்.

அதைச் செய்து பாருங்கள்

நம்முடைய மனப்பான்மைகளை பயிற்சிக்கும் போது நாம் செய்ய வேண்டிய முதல் விஷயமானது, “சிறப்பாக ஒன்றுமில்லை” என்ற அணுகுமுறையைக் கொண்டிருத்தல். இது அதிகம் உணர்த்தாவிட்டாலும் மிக ஆழமானது. “நான் இப்போது என்ன உணர்கிறேன் என்பதைப் பற்றி சிறப்பாக ஒன்றுமில்லை” – வாழ்வில் ஏற்ற இறக்கம் இருக்கும், சில சமயங்களில் நல்ல மனநிலையிலும் சில சமயங்களில் மோசமான மனநிலையிலும் இருப்போம் சில சமயங்களில் எதுவுமே திட்டமிட்டபடி நடக்காது. அதைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை நம்மைப் பற்றி சிறப்பாகவும் எதுவும் இல்லை, ஆனால் நாம் சில வழிகளை உணர வேண்டும், மற்ற உணர்வுகளை உணரக்கூடாது. முக்கிய விஷயம் என்னவென்றால், நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல் நம் வாழ்க்கையைத் தொடர வேண்டும்.

நீங்கள் உங்கள் குழந்தையை பராமரிக்க வேண்டுமெனில், உதாரணமாக, நீங்கள் நல்ல மனநிலையில் இருந்தாலும் கெட்ட மனநிலையில் இருந்தாலும், நீங்கள் உங்கள் கடமையைச் செய்து தான் ஆக வேண்டும். நீங்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் நீங்கள் தான் உங்களுடைய காரை ஓட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல வேண்டும். நம்மைப் பற்றி எவ்வளவு அதிகம் கவனித்து நாம் எப்படி உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் மகிழ்ச்சியற்றவராக மாறுகிறோம். நாம் எதையும் உணர்வதை நிறுத்துகிறோம் என்பதல்ல இதன் அர்த்தம், மாறாக இது முக்கியமல்ல என்பதே பொருள். நாம் என்ன உணர்கிறோம் என்பதைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மகிழ்ச்சியின்மை உணர்வைக் கண்டு சிலர் உண்மையில் அஞ்சுகிறார்கள், ஏனெனில் அது முழுமையாக அவர்களை ஆட்கொண்டு விடும் என்று நினைக்கிறார்கள். யாராவது இறந்து போனால், அல்லது உண்மையில் பயங்கரமான ஏதாவது நடந்தால், மகிழ்ச்சியின்றி உணர்வதில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ள விரும்புகிறார்கள்,ஏனெனில் அது மிகுந்த கனத்தை கொடுக்கும் என்று நினைப்பதைப் போன்றதாகும். அது சுயநினைவில்லாததாக இருக்கலாம்; உணர்வை மறைக்கக் கூடிய நினைவு நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ வெளிப்புறத்தில் இருந்து உள்ளே நுழைய முயற்சிப்பது போல நாம் அதை நிராகரிக்க விரும்புகிறோம். மற்றொருபுறம், மகிழ்ச்சிக்கு தாங்கள் தகுதியில்லாதவர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். விஷயங்கள் நன்றாகவே போய்க்கொண்டு இருந்தாலும், அடிப்படையில் எந்த நல்லதும் நடக்காது என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். பின்னர் நடுநிலையாக உணர முடியாத நிலையை நீங்கள் பெறுகிறீர்கள், தொடர்ச்சியாக இசையைக் கேட்பதைப் போன்று எல்லா நேரமும் பொதுபோக்கை கொண்டிருப்பவர்கள். அது அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் மகிழ்ச்சியாக்குவதாகவும் உணர்கிறார்கள், இதனால் அமைதி எனும் நடுநிலை உணர்வைக் கண்டு அஞ்சுகிறார்கள். அந்த அர்த்தத்தில் பார்த்தால் நாம் பெரும்பாலும் உணர்வுகளைக் கண்டு அஞ்சுகிறோம், ஏன்? மிக எளிதாகச் சொன்னால்  அதன் முக்கியத்துவத்தை பெரிதுபடுத்தி அதனை பூதாகரமாக்குகிறோம். ஆனால் உணர்வுகள் எல்லாம் வாழ்வின் பகுதியில் சாதாரணமானவை; ஒவ்வொரு கனத்தையும் நாம் எப்படி இயல்பாக அனுபவிக்கிறோம் என்பதைப் பற்றியது.  இது வீடியோ கேமராவிலிருந்து நம்மை வேறுபடுத்துகிறது, எனவே சிறப்பு எதுவும் இல்லை. இது எளிமையானதாகத் தெரிகிறது, ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல.

ஜன்னலில் வனப்பறவை வந்தமரும் உதாரணம்

நமக்குத் தேவை ஒரு நுட்பமான சமநிலை. நிச்சயமாக நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், ஆனால் அதனுடன் இப்போது இருக்கும் மகிழ்ச்சியை அழிக்க விரும்பாத உணர்வு இன்னும் வரலாம், எனவே நாம் அதையே பற்றிக் கொண்டு பாதுகாப்பற்றதாக உணர்கிறோம். நம்முடைய சொந்த அனுபவத்தில் இருந்து, நிச்சயமாக நாம் இப்போது அனுபவிக்கும் மகிழ்ச்சியானது கடந்து போய் விடும் என்பது நமக்குத் தெரியும். அது நீடித்திருக்காது, ஏனெனில் வாழ்வின் இயல்பே ஏற்ற இறக்கத்துடன் செல்வது தான். நாம் அதை தெரிந்து கொண்டால், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது இருக்கும் வரை மகிழ்ச்சியை அனுபவிக்க நம்மை அனுமதிக்கிறது.

சில நேரங்களில் நான் இதற்காகப் பயன்படுத்தும் ஒரு அருமையான உதாரணம் இருக்கிறது. உங்களுடைய ஜன்னலுக்கு அருகில் ஒரு மிக அழகான வனப்பறவை வந்து அமர்ந்து சிறிது நேரம் ரீங்காரமிடுகிறது. இப்போது நாம் அந்தப் பறவையின் அழகைக் கண்டு மனம் மகிழ்கிறோம், ஆனால் அது வனப்பறவை அது எப்படியும் பறந்து சென்று விடும் என்பது நமக்குத் தெரியும். நாம் அதனைப் பிடித்து கூண்டிற்குள் அடைக்க முயற்சித்தால், அந்தப் பறவை மிக மிக மகிழ்ச்சியின்றி இருக்கும், அதனைப் பிடிக்கும் முயற்சியில், அந்தப் பறவையானது பயந்து பறக்க முயற்சிக்கும் திரும்ப வரவே வராது. மாறாக, நாம் அமைதியாக இருந்து அந்தப் பறவை இருக்கின்றன அழகை ரசித்தால் யாரும் பயப்படப் போவதில்லை யாரும் மகிழ்ச்சியின்றி இருக்கப் போவதும் இல்லை, அதே போல அந்தப் பறவையும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து செல்லும். 

மகிழ்ச்சியும் ஏறத்தாழ இதைப் போன்றது தான், இல்லையா? நமக்கு மிகவும் பிடித்தவருடன் நாம் இருப்பதைப் போன்றது தான். அவர்கள் நம்மை எப்போது பார்க்க வந்தாலும், “இன்னும் கொஞ்ச நேரம் நீங்கள் இருக்கக் கூடாதா?” என்கிற மனப்பான்மையை நாம் எப்போதும் கொண்டிருப்போம் அவர்கள் கிளம்பத் தயாராகும் போதே “நீங்கள் எப்போது மீண்டும் வருவீர்கள்?” என்பது போன்ற வகையான விஷயம் நம்முடைய மகிழ்ச்சியை நாமே அழித்துக் கொள்ளும் ஒருவகையான வழியாகும். 

சிறப்பாக ஒன்றுமில்லை. சிறப்பாக எதுவுமே இல்லை. ஒரு பறவை நம்முடைய ஜன்னலுக்கு வருவதும், நண்பர் ஒருவர் நம்மை பார்க்க வருவதும்; நம்முடைய நண்பர்களின் அழைப்பில் சிறப்பாக ஒன்றுமில்லை. அந்த மகிழ்ச்சி இருக்கும் வரை மகிழ்ந்திருங்கள், எப்படி இருந்தாலும் நிச்சயமாக அது முடிவுக்கு வரப்போகிறது. அதனால் என்ன, நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ஆம், நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். நாம் மகிழ்ச்சியின்றி இருந்தால், நாம் இப்போது என்ன அனுபவிக்கிறோமோ அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கே சிறப்பாகவோ அல்லது அதேனைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கோ ஒன்றுமில்லை. அந்த மகிழ்ச்சியின்மையும் கூட கடந்து சென்று விடும். நீங்கள் அதனை தள்ள முயற்சித்தால், அது மேலும் மோசமடையும். 

ஆகவே நாம் நம்முடைய உணர்வுகளை பகுப்பாய்ந்து நமக்கு உண்மையில் அச்சத்தைத் தருவது என்ன என்பதை ஆராய முடியும். மகிழ்ச்சியின்றி இருப்பதற்கு நான் அஞ்சுகிறேனா? மகிழ்ச்சியான உணர்வைக் கண்டு கூட நான் இதற்குத் தகுதியில்லாதவன் என்று பயப்படுகிறேனா? பின்னர் அங்கே ஒன்றுமே இருக்காது என்பதனால் நடுநிலையான உணர்வைக் கண்டு நான் அஞ்சுகிறேனா? நாம் எதைப்பார்த்து பயப்படுகிறோம்?

கூர்உணர்வு பயிற்சி எனப்படுவதை நான் வளர்த்துக்கொண்டேன், அதன் ஒரு பயிற்சியானது மக்கள் தங்களின் பய உணர்வை வென்று வருவதற்கு உதவுகிறது. இது மிக எளிதானது; நீங்கள் உங்களது கையை தட்டி, கிள்ளி பின்னர் அதை பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்று நல்ல உணர்வு, மற்றொன்று அவ்வளவு நல்லதல்ல, ஒன்று நடுநிலையானது. ஆனால் எதைப்பறியும் குறிப்பாக சொல்வதற்கு சிறப்பாக ஒன்றுமில்லை, இருக்கிறதா? அவை வெறும் உணர்வுகளே. அதனால் என்ன? நாம் வளர்க்க வேண்டிய மனப்பான்மை வகை இதுவேயாகும். நான் நல்ல மன நிலையில் இல்லை -அதனால் என்ன? அதில் சிறப்பாக ஒன்றுமில்லை. நாம் மோசமான மனநிலையில் இருப்பதை ஒப்புகொண்டு அதனை மேம்படுத்துவதற்கு ஏதேனும் செய்ய முடியும் என்றால் ஏன் அதைச் செய்யக் கூடாது? அப்படி எந்த வழியும் இல்லாவிட்டால் வெறுமனே அதனைக் கையாளுங்கள். உண்மையில், நீங்கள் அதைச் சமாளிக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைச் செய்து கொண்டே செல்லலாம். அந்த உணர்வை நாம் அனுபவிக்கும் விதத்தை நாம் உண்மையில் மாற்ற விரும்பினால், அதைப் பற்றிய நமது அணுகுமுறையை மாற்றுவதற்கான பிற வழிகளைப் பார்க்க வேண்டும்.

“சிறப்பாக ஒன்றுமில்லை,” என்கிற இது முதல் அளவு. நாம் உணரும் விதம் பற்றி குறிப்பாக சிறப்பானதாக எதுவுமில்லை, மேலும் நான் சிறப்பானதாக எதுவுமில்லை, மேலும் இந்த உணர்வுகளில் இருந்து தனித்த நாம் அரண் போட வேண்டிய “நான்” என்ற ஒன்றே இல்லை. ஏற்ற இறங்கங்கள் இருக்கின்றன, வாழ்க்கை செல்லும் பாதை இதுவேயாகும். 

என்னைப் பற்றி சிறப்பாக ஒன்றுமில்லை

உணர்வுகளைப் பற்றி சிறப்பாக ஒன்றுமில்லை என்பதோடு தொடர்புடையது “என்னைப் பற்றியோ நான் இப்போது என்ன உணர்கிறேன் -சிறப்பாக எதுவும் இல்லை” என்பதாகும். இது பௌத்தத்தில் நாம் சொல்லும் சுய- போற்றுதல் என்னும் தலைப்புக்கு அழைத்துச் செல்கிறது. நாம் எல்லாவற்றையும் சுய – போற்றுதல் என்னும் பொருளிலேயே அனுபவிப்போம். உண்மையில் அதன் அர்த்தம் என்ன? இதாவது அதன் பொருளானது நம்மைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுதலாகும். நாம் நம்மைப் பற்றியும் இப்போது நாம் என்ன உணர்கிறோம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி மற்றவற்றை புறக்கணிக்கிறோம்: “அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பெரிதல்ல.”

மீண்டும், சிந்திப்பதில் ஒரு வித்தையானது நம்மைப் பற்றி நமக்கே சிறப்பாக ஒன்றுமில்லை மற்றும் நாம் என்ன சிந்திக்கிறோம் என்பதிலும் சிறப்பாக ஒன்றுமில்லை. “நான்” என்ற ஒன்றை பற்றிக் கொண்டிருப்பதனால் நம்முடைய மனம் குறுகி, மகிழ்ச்சியில்லாம் நாம் உருவாகிறோம். அது ஒரு சதைப் போலத்தான், அது மிக இறுக்கமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. நம்முடைய மனதில் “நான், நான், நான்” என்று இருப்பதைப் போன்று – ஆனால் நாம் இந்த புவியில் இருக்கும் எண்ணிலடங்கா விலங்குகள் ஏழு கோடி மனிதர்களைப் பற்றி சிந்தித்தால், நாம் என்ன உணர்கிறோம் என்பது ஒன்றுமில்லை. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை உணர்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியாகவும், சிலர் மகிழ்ச்சியின்றியும் சிலர் நடுநிலையாகவும் உணர்கிறார்கள், ஒவ்வொருவரை பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. என்னைப் பற்றியோ நான் இந்த நேரத்தில் என்ன உணர்கிறேன் என்பதைப் பற்றியோ சிறப்பாக என்ன இருக்கிறது என்கிற இந்த விதத்தில் நாம் பார்க்க வேண்டும். 

நீங்கள் பயங்கரமான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். நம்மைப் போலவே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு இது அற்புதமான நேரமா? மேலும் அவர்களுக்கு இது சந்தோஷமான நேரமா? “நான், நான், நான்” என்று நாம் அதிகம் சிந்தித்து -நான் இங்கே இருக்கிறேன், நான் மாட்டிக்கொண்டேன் என்னால் வெளியே போகமுடியவில்லை, எவ்வள மோசமானது!” என்று யோசித்து நாம் மகிழ்ச்சியற்றவராக மாறுகிறோம், இல்லையா? போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும் எல்லோரைப் பற்றியும் நீங்கள் சிந்தித்தால் பின்னர் தானாகவே உங்களுடைய மனம் வெளிப்படையாகவும், அமைதியாகவும் இருப்பதற்கு அது வழிவகுக்கும். 

எனக்கு நினைவிருக்கிறது நான் இன்று இங்கே வரும் போது, வாகனங்கள் நகரவே இல்லை, நாங்கள் இருந்த தெருவில் இந்த போக்குவரத்து வரிசையில் சேர விரும்பி மேலும் பல கார்கள் இருந்தது. இந்த கார்கள் எங்கள் பாதையின் குறுக்கே சென்று மற்றொரு திசையில் செல்லும் பாதையில் செல்ல விரும்பின, அதுவும் நகரவில்லை, எப்படியாவது எங்கள் திசையில் உள்ள பல்வேறு பாதைகளைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டும். நிச்சயமாக, மக்கள் அவர்களை செல்ல அனுமதிக்கவில்லை, " கடவுளே, அவர்கள் எப்படி கடந்து செல்லப் போகிறார்கள்?" நீங்கள் நினைக்கிறீர்கள். வழியில் அங்குலம் அங்குலமாக நுழைந்து காரின் முகப்பை உள்ளே நுழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள் உண்மையில் இது மிக சுவாரஸ்யமாகப் போகிறது. அதன் பின்னர் பார்த்தால் எங்களுக்கு முன்னார் இருந்தவர், முன்னே நகர்ந்து சென்றாலும் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் கவனம் செலுத்தவே இல்லை. அதனால் அவர் நகரவில்லை, இதனால் அவருக்கு பின்னால் இருந்த கார்கள் மிக நெருக்கடியாக இருந்தன. 

இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென, “நான் பாவம், எப்படி இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்” என்று நீங்கள் சிந்திக்கக் கூடாது. நமக்கும் நாடகம் அனைத்தையும் நீங்கள் கவனிப்பதைப் போன்றதாக அது மாறிவிடும். ஆச்சரியமாக இருக்கிறது, “அவர்கள் எப்படி நுழைந்து செல்வதற்கு பாதை எப்படி கிடைக்கும்? அவர்கள் எப்படி தங்களின் பாதையை கண்டறியப் போகிறார்கள்?” நீங்கள் உங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. நீங்கள் உங்களது மனப்பான்மையை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.  “நான்” என்ற ஒன்றை நீங்கள் பெரிதுபடுத்த மாட்டீர்கள். “நான் மிகச் சிறப்பானவன். இந்த நெரிசலில் நான் சிறப்பான ஒருவன்” - “நான்” என்பதை பெரிதுபடுத்துவதை நிறுத்தினால் - பின்னர் நாம் அனுபவிக்கும் சூழ்நிலையின் மொத்தமும் மாறிவிடும். அதைப் பற்றி சிந்தியுங்கள். 

சுய-போற்றுதலின் சிக்கல்

மிகப்பெரிய திபெத்திய ஆசிரியர் என்று அழைக்கப்படும் குனு லாமா, பரிந்துரைத்துள்ள ஒரு பயிற்சியானது மிகவும் உதவிகரமானதாகும். உங்களை ஒரு புறமும் மற்றவர்களை இன்னொரு புறமும் கற்பனை செய்து கொண்டு, ஒரு பார்வையாளராக தனித்துப் பாருங்கள். இந்தக் கற்பனையின் ஒரு பக்கத்தில் இருக்கும் “நான்” மகிழ்ச்சியற்றதாக, இருந்தால் அதற்காக மற்றொரு புறத்தில் மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்களா. அல்லது நீங்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் அதனால் இந்த மற்ற அனைவருக்கும் சிக்கிக்கொண்டு இருக்கிறார்களா. இப்போது, ஒரு நடுநிலை பார்வையாளராக பார்த்தால் யார் அதிக முக்கியமானவர்கள்?  "நான்" என்ற ஒரு நபர் எல்லோரையும் விட முந்திச் செல்வதா அல்லது மொத்த கூட்டமும் நெரிசலில் சிக்குகிறதா? அதை முயற்சிக்கவும்.

நிச்சயமாக, மிகப்பெரிய கூட்டத்தைவிட ஒற்றை நபர் மிக முக்கியமானவர், இல்லையா? அதற்காக நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று அர்த்தமல்ல. உண்மையில், நாம் அனைவரைப் பற்றியும் அக்கறை காட்டி கவனம் செலுத்தினால், அந்த “அனைவர்” என்பதற்குள் நாமும் இருக்கிறோம். நாம் எல்லோரையும் விட சிறப்பு வாய்ந்தவர்கள் அல்ல, குறிப்பாக நம் உணர்வுகளின் அடிப்படையில்.

ஆகவே, தொடர்ச்சியான இந்த “நான், நான், நான். நான் மிக முக்கியம்,” என்ற சுய-போற்றதலே இங்கே சிக்கலாகும். நாம் மகிழ்ச்சியின்றி இருந்தால், நாம் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கும்போது, இந்த மேகம் நம் மீது இருப்பதாகவும், அதிலிருந்து தனித்தனியாக ஒரு "நான்" இருப்பதாகவும் நினைத்துக் கொள்கிறோம், "நான்" என்பதன் சுய-முக்கியத்துவம் இதுதான். நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அதுவும் "நான், நான், நான்." நம்முடைய எலும்பை எடுத்துச் செல்ல பெரிய நாய் வருவதை நாம் விரும்பவில்லை. பின்னர் சில நேரங்களில் நாம், "நான், நான், நான் என்பதைக் கொண்டிருக்கிறோம். நான் எதையும் உணரவில்லை. என்னுடைய பொழுது போக்கப்படவில்லை. நான் பொழுதுபோக்கப்பட வேண்டும்."

மற்றவர்களைப் போற்றுவதற்கு திறந்த மனதுடன் இருத்தல்

இந்த சுய-கவனம், “நான்” என்ற இந்த வரையறுக்கப்பட்ட விதத்திலேயே உன்னிப்பாக இருக்கும் நான் என்ன உணர்கிறேனோ அதுவே சிக்கல். நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இந்த பார்வையை மாற்றி அனைவருக்குமாக சிந்தித்து எல்லோருக்குமான உந்துதலைக் கொண்டிருத்தலாகும்: “முடிந்தால் எல்லோரும் இந்த நெரிசலில் இருந்து வெளியேற வேண்டும்”, இவ்வாறு நீங்கள் சிந்தித்தால், நாம் மட்டும் எப்படி இந்த நெரிசலில் இருந்து வெளியேற முடியும், இவ்வாறு நீங்கள் சிந்தித்தால், நாம் மட்டும் எப்படி இந்த நெரிசலில் இருந்து வெளியேற முடியும்? போக்குவரத்தை அகற்ற வேண்டும், மேலும் இது இங்கு உள்ள அனைவரையும் உள்ளடக்கியது. உங்கள் கவலை அனைவருக்குமான பெரிய நோக்கமாக இருந்தால், நாம் மிகவும் நிதானமாக இருக்கலாம். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருப்பதற்காக நாம் எரிச்சலாகவோ அல்லது வெறுத்தோ போகவில்லை. அந்த நெரிசலில் இருந்து நாம் இறுதியாக வெளியேறும்போது, “ஆஹா அற்புதம், நான் வெளியேறி விட்டேன்!” என்று மட்டும் நினைக்க வேண்டாம். மாறாக "இது அற்புதம், எல்லோரும் எங்கு செல்ல வேண்டுமோ அதற்கான வழி கிடைத்தது" என்ற அடிப்படையில் சிந்தியுங்கள். பின்னர் நம்மிடம் இருக்கும் சந்தோஷம் எனும் எலும்புத் துண்டை யாரோ எடுத்துச் சென்றாலும் நாம் அதில் பற்றுதல் கொண்டிருக்க மாட்டோம். 

இதைத் தான் அடிப்படையில் நாம் இரக்கம் என்று சொல்கிறோம், அதாவது மற்றவர்களின் மகிழ்ச்சியின்மை பற்றி சிந்தித்து, நம்முடைய சொந்த பிரச்னைக்காக எப்படி அக்கறை கொள்கிறோமோ அதே விதத்தில் அதைப் பற்றியும் அக்கறை கொண்டு, அதில் சிறப்பாக எதுவும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரும் அந்த மகிழ்ச்சியின்மை நிலையை கடந்து வருவதற்கு உதவுவதற்கான பொறுப்பை ஏற்பதாகும். உலகில் நடக்கும் எல்லா பயங்கரங்களையும் நினைத்து, மனச்சோர்வடைவதில் அர்த்தமில்லை. இது இயற்கையானது மற்றும் எல்லா நேரத்திலும் நடக்கும்; ஆனாலும், எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது, இல்லையா?

நீங்கள் தானாக முன்வந்து பொறுப்புணர்வுடன் செயல்படும்போது, "நான் எல்லோரையும் பற்றி கவலைப்படுகிறேன், எல்லோரும் அவர்களின் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று நினைக்கும் போது, நாம் ஒரு மகத்தான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கிறோம். புனிதர் தலாய் லாமா அடிக்கடி பேசும் விஷயம் இது. நாம் நம்மைப் பற்றியும் நமது சொந்த மகிழ்ச்சியற்ற தன்மையைப் பற்றியும் மட்டுமே நினைத்தால், நாம் உண்மையில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். ஆனால் மற்றவர்களைப் பற்றியும் அவர்களின் மகிழ்ச்சியற்ற தன்மையைப் பற்றியும் தானாக முன்வந்து சிந்திக்க பெரும் பலம் தேவை. இது பலவீனத்தின் அடையாளம் அல்ல, ஆனால் நம்பமுடியாத தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கும் வலிமையின் அடையாளம். இந்த நேர்மறை மனப்பான்மை தானாகவே மகிழ்ச்சியாக உணர வழிவகுக்கிறது. "அட பாவமே, நான் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டேன்" என்ற முழுமை அங்கே இல்லை.  மாறாக, அந்த நெரிசலில் சிக்கித் தவிக்கும் அனைவரைப் பற்றியும் நாம் நினைத்து, அவர்கள் அனைவரும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புகிறோம். போக்குவரத்து நெரிசலில் இருக்கும் அனைவரையும் நினைத்துப் பார்ப்பது மிகவும் தைரியமானது, பிறகு நம்மைப் பற்றிய நேர்மறையான உணர்வையும் பெறுவோம். நாம் பலவீனமாகவோ அல்லது போக்குவரத்தால் ஒடுக்கப்படவோ இல்லை; நாம் வலுவாக இருக்கிறோம்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும் நம்மைப் பற்றி மட்டுமே நினைக்காமல் மற்றவர்களைப் பற்றி நாம் சிந்தித்தால், மறைமுகமாக அது மற்றவர்களுக்கு உதவுவதாகும். உதாரணமாக நாம் கோபமடைய மாட்டோம், தொடர்ந்து ஹாரனை அடித்துக் கொண்டிருக்க மாட்டோம் (எப்படி இருந்தாலும் யாரும் நகர முடியாத நிலையில் ஹாரனை அடிப்பதில் பலனில்லை).  பக்கத்துத் தெருவில் அந்த கார் உள்ளே நுழைந்து நம்மைக் கடந்து முன்னேறிச் செல்லும் போது, சில ஆபாசமாக திட்டுவதற்கு ஜன்னலைத் திறக்க மாட்டோம். இதனால் இருவருமே நிம்மதியாக இருக்கிறோம். ஆனால், நம்மால் அதிக செல்வாக்கு செலுத்த முடியாது.

வாழ்க்கையின் இயற்கையான ஏற்ற தாழ்வுகளை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதன் தரத்தை மாற்ற, நமது அணுகுமுறையை எவ்வாறு மாற்றலாம் என்பதற்கு இது ஒரு எளிய எடுத்துக்காட்டு. நாம் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள், நாம் நினைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்ற உணர்வை முறியடிப்பதற்கும், ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகச் செய்வதற்கும் பயிற்சி மற்றும் கொஞ்சம் தைரியம் தேவை.

கோபத்தை கையாளுதல்

நாம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டால், யாராவது நம்மைக் கடந்து சென்றால், நாம் கட்டுப்படுத்த முடியாத கோபத்தை உணரலாம். நம் மனப்பான்மையை மாற்றுவதற்கான மற்றொரு வழி, இந்த நிலைமையை ஏற்படுத்திய பல்வேறு காரணங்களைப் பற்றி சிந்திப்பது, ஒருவேளை காரில் நோய்வாய்ப்பட்ட குழந்தை இருக்கலாம் அதனை மருத்துவமனைக்குச் செல்ல முயற்சிக்கலாம். இவ்வாறு சிந்திப்பது நாம் மிகவும் அமைதியாக உணர உதவும்.

ஆனால் விஷயம் என்னவென்றால், கோபத்தின் இந்த ஆரம்ப கொந்தளிப்புகள் எல்லா நேரத்திலும் தொடர்கின்றன. கோபத்தின் போக்குகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கடக்க இது மிகவும் நீண்ட செயல்முறையாகும். இந்த எடுத்துக்காட்டில் இருப்பதைப் போல, அவசரத்தில் இருப்பவர் அவ்வாறு இருப்பதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கலாம் என்று நினைப்பதன் மூலம் நமது அணுகுமுறையை மாற்றுவது, கோபத்தைக் கையாள்வதற்கான ஒரு தற்காலிக வழி. கோபத்தின் வேர்களை வெளியே இழுக்க நாம் மிகவும் ஆழமாகச் செல்ல வேண்டும், அது நம்மையும் மற்றவர்களையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதோடு தொடர்புடையது.

வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறிய சம்பவத்தின் மூலம் நம்மையும் மற்றவர்களையும் அடையாளம் காண முனைகிறோம். உதாரணமாக, போக்குவரத்து நெரிசலில் இருக்கும் வரை, நம்மைக் கடந்து செல்ல முயற்சிப்பவரை ஒரு பயங்கரமான நபராகப் பார்க்கிறோம், அந்த நபரைப் பற்றி அவ்வளவுதான் நாம் நினைக்கிறோம். எனவே அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு விஷயத்தை நாம் அடையாளம் காண்கிறோம், குறிப்பாக அது எப்படியாவது நம்மை உள்ளடக்கியிருக்கும் போது. நம்மைப் பற்றிய உறுதியான அடையாளத்தை நாம் அவர்களுக்கு வழங்குகிறோம். பின்னர் நமக்குள் இருக்கும் திடமான "நான்" கோபமாக இருக்கிறது.

எதையுமே அவர்களையும் என்னையும் அடையாளம் காணாத அளவுக்கு, இதைத் தளர்த்த முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இது ஒரு ஆழமான மற்றும் நீண்ட செயல்முறை. ஒருவரின் நிலையான படத்தை நினைத்துப் பாருங்கள். இது அந்த நபரின் ஒரு கணம், ஆனால் அவரைப் பற்றிய அனைத்துமே அந்த ஒரு படத்தில் இல்லை. எனவே நம்மையும் நம் வாழ்க்கையையும் மற்றவர்களையும் ஸ்டில் போட்டோக்களாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். எல்லாமும் எல்லா நேரமும் மாறிக்கொண்டே இருக்கிறது. விஷயங்களைப் பற்றிய நமது ஏமாற்றும் பார்வையை நாம் தளர்த்தியதும், நாம் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், ஏனென்றால் போக்கு எப்போதும் இறுக்கமாக இருக்கும். இறுதியில் கோபம் அல்லது பொறாமை அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அந்த இறுக்கத்தைப் பெறாமல் இருப்பது முற்றிலும் சாத்தியமாகும்.

மகிழ்ச்சியாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை

நம்முடைய உணர்வுகளிலோ அல்லது நமக்கோ எதனையும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும், நாம் உட்பட எவருக்கும் நிலையான, வரையறுக்கப்பட்ட அடையாளங்களை முன்னிறுத்தாமல் இருப்பதற்கும் இந்தப் பயிற்சி, நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் கடினமான சூழ்நிலைகளைச் சமாளிப்பது மிகவும் எளிதாகிறது, எனவே வாழ்க்கை ஒரு போராட்டம் அல்ல. நாம் மிகவும் சமநிலை உணர்ச்சிவசப்பட்டு, மகிழ்ச்சியான நபராக மாறுகிறோம்.

மற்றவர்களைப் பற்றியும், அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைப் பற்றியும் சிந்திப்பது ஒரு பெரிய நோக்கம். நாம் ஒரு குடும்பத்தில் வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்றிருந்தால், நமக்கு நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் இருந்தால், நாம் எப்போதும் மோசமான மனநிலையில் இருந்தால், "பாவம் நான்" மற்றும் அது போன்ற விஷயங்களைத் தொடர்ந்து நினைத்தால், நம்மால் அவர்களுக்கு உதவ முடிந்தாலும், நாம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறோம், உண்மையில் அது அவர்களை மகிழ்ச்சியற்றவர்களாக்குகிறது. எனவே, நமது மனநிலையை எப்படியாவது சிறப்பாகச் சமாளிக்க விரும்புகிறோம், ஏனென்றால் அது மற்றவர்களைப் பாதிக்கும், அது நம் குடும்பத்தைப் பாதிக்கும் மற்றும் பலவற்றைப் பாதிக்கும், மேலும் நாம் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறோம். நமக்குள்ளாகவே நாம் செயலாற்றவும் இது மற்றொரு காரணம்.

மகிழ்ச்சிக்கான உந்துதல் கிட்டத்தட்ட ஒரு உயிரியல் விஷயம் மற்றும் மகிழ்ச்சியாக இருப்பதில் தவறில்லை, மேலும் நாம் மகிழ்ச்சியை அடைய முயற்சிக்க வேண்டும். ஆனால் நம்மிடம் அது இருக்கும்போது, அதன் இயல்பை நாம் அடையாளம் காண வேண்டும், அதாவது அது கடந்து போய்விடும், எனவே அதை அப்போதே அனுபவிக்கவும். நாம் எவ்வளவு நிதானமாக இருக்கிறோமோ, அவ்வளவு அடிக்கடி நாம் மகிழ்ச்சியாக இருப்போம். சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்போம், அதனால் என்ன? நாம் என்ன எதிர்பார்க்கிறோம்? பெரிதாக எந்த விஷயமும் மில்லை. சிறப்பாக எதுவும் இல்லை.

என்ன நடக்கிறது என்பதில் சிறப்பு எதுவும் இல்லை என்று நாம் நினைக்கும் போது, அதுவே மகிழ்ச்சியாக இருப்பதற்கான மிகவும் நிதானமான வழியாகும். விஷயம் என்னவென்றால், நாம் கவலைப்படவில்லை, இந்த நிலையான காரணத்தின் உந்துதல் அங்கே இல்லை: "நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நான் எப்போதும் மகிழ்ந்திருக்க வேண்டும், நான் எப்போதும் என் சொந்த வழியில் செல்ல வேண்டும்." இந்த வகையான சிந்தனை உண்மையில் விரும்பத்தகாதது. நாம் என்ன சொன்னோமோ அதை நினைவில் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருப்பது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கு ஒத்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் அதையே செய்து மகிழ்ச்சியாகவோ, மகிழ்ச்சியற்றதாகவோ அல்லது நடுநிலையாகவோ வேறு நாட்களில் உணரலாம். நீங்கள் எப்படி கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. 

நான் ஒரு உதாரணம் தருகிறேன். பல் மருத்துவரிடம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் எனது பல் மருத்துவர் ஒரு சிறந்த மனிதர், மேலும் நாங்கள் மிகவும் நட்புடன் பழகுவோம், எப்போதும் நகைச்சுவையாக பேசுவோம். "அவர் என்னுடைய பல்லில் துளையிடுவார் என்றோ அல்லது அதனால் வலிக்கும் என்றோ நான் மிகவும் கவலைப்படுவதில்" கவனம் செலுத்தாததால் அங்கு செல்வது இனிமையானது. அங்கு பதட்டம் இல்லை. "அட அருமை, நான் நாளை என் நண்பரைப் பார்க்கிறேன்" என்று நான் அதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்.

நான் சற்று வித்தியாசமானவன் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஒருமுறை ரூட் கேனல் செய்து முடித்த பிறகு, நான் அதை முழுமையாக மகிழ்ச்சியாகக் கடந்தேன். இது சுவாரஸ்யமாக இருந்தது, ஏனென்றால் என் வாய் திறந்திருந்தது, அவர்கள் மேலும் மேலும் கருவிகளை வைத்துக்கொண்டே இருந்தார்கள், மேலும் அவை எவ்வளவு அதிகமாக ஒட்டிக்கொள்ளும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாமல் நான் சிரிக்க ஆரம்பித்தேன். நினைவில் கொள்ளுங்கள், நான் நோவோகைன் எனும் மறுத்துப் போகும் மருந்து கொடுக்கப்பட்டிருந்தேன், அதனால் நான் எதையும் உணரவில்லை!

நிச்சயமாக நோவோகைன் ஊசி வலித்தது, அதனால் என்ன? நீங்கள் அதை போட்டுக் கொள்ளாமல் இருக்க விரும்புகிறீர்களா மற்றும் ரூட் கால்வாயின் போது 30 நிமிட வலி வேண்டுமா அல்லது ஒரு ஊசிக்கு சில நொடி வலியோடு இருக்க வேண்டுமா? வலி ஏற்பட்டாலும் அந்த ஊசி போடுவதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள், ஏனென்றால் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே.

எல்லாமே நம் மனோபாவத்தைப் பொறுத்தது. இது அணுகுமுறை பயிற்சி. இது செயலாற்றி நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. நமக்கு ரூட் கேனல் தேவைப்பட்டால், அது சித்திரவதையாக இருக்க வேண்டுமா அல்லது அது மோசமானதாக இல்லாமல் இருக்க வேண்டுமா? நாம் அதை அனுபவிக்க வேண்டும், வேறு வழியில்லை, எனவே நாம் அதை முடிந்தவரை ஒரு நல்ல அனுபவமாக மாற்றலாம். இதன் பின்னணியில் உள்ள கொள்கை இதுதான்.

சுருக்கம்

பிரச்சனைகளுடனோ, துன்பங்களுடனோ இருக்க வேண்டும் என விரும்பி யாரும் காலையில் எழுவதில்லை; நாம் செய்யும் அனைத்தும் நம்மை மகிழ்ச்சியாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆயினும்கூட, இந்த மழுப்பலான இலக்கு ஒருபோதும் நெருங்கிவிடுவதாகத் தெரியவில்லை. நம்மீது கவனம் செலுத்துவதன் மூலமும், நாம் யார், நாம் என்ன செய்கிறோம், என்ன உணர்கிறோம் என்பதன் முக்கியத்துவத்தை பெரிதுபடுத்துவதன் மூலமும், நம்மிடம் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கத் தவறிவிடுகிறோம் அல்லது நாம் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களில் வாழ்கிறோம். மற்றவர்களையும் அவர்களின் உணர்வுகளையும் அதிகம் உள்ளடக்கிய நமது அணுகுமுறையைப் பயிற்றுவிப்பதன் மூலம், மிகவும் நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க ஒரு கதவைத் திறக்கிறோம்.

Top