தியானம் : முக்கிய அம்சங்கள்

தியானத்தில் சில பொதுவான வகைகள் உள்ளன. அவற்றில் ஏதேனும் திறம்பட ஈடுபட வேண்டுமானால், நாம் உருவாக்க விரும்பும் சரியான மனநிலையை துல்லியமாகவும் தீர்க்கமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும், இந்த மையப் பொருள் குறித்த விவரங்கள் என்ன, நம்முடைய மனம் அதனுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும், இந்த நிலையை வளர்க்க எது உதவும், அதற்கு என்ன தடையாக இருக்கும், இந்த மனநிலையை அடைந்தவுடன் அதன் பயன்பாடு என்ன? அது எதனை நீக்கும் போன்ற விவரங்களை அறிதலை உள்ளடக்கியது. தியானிப்பதற்கான சரியான நிபந்தனைகள், பொருத்தமான தோரணை மற்றும் இருக்கை மேலும் நம்முடைய அமர்வுகளை எவ்வாறு தொடங்குவது மற்றும் முடிப்பது என்பதையும் கூட நாம் சரியாக அமைத்தல் வேண்டும்.

Top