சிந்தனைகளை அமைதிப்படுத்துதல்

06:06
கருத்தியல் ரீதியிலான சிந்தனை இன்றியமையாதது. அச்சிந்தனையின்றி கடையில் உள்ள பொருட்களை ஆப்பிள் அல்லது பேரிக்காய் என வேறுபடுத்திப் பார்க்க முடியாது, மேலும் "காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகளை எனக்குக் கொடுங்கள்" என்ற சொற்றொடரையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். அன்றாட வாழ்வில் நமக்கு கருத்தியல் சிந்தனை தேவை, சில நேரங்களில் அது தடையாக இருக்கலாம். உதாரணமாக, தியானத்தில் ஒருநிலைப்படுத்தும் போது, நாம் அனுபவிக்கும் அனைத்து மனபிதற்றல்கள் மற்றும் முன்கருத்துகளை அமைதிப்படுத்த வேண்டும்.

மனதை அமைதிப்படுத்துதல்

ஒருநிலைப்படுத்துதலை அடைவதற்கு நம்முடைய மனதை சாந்தப்படுத்த வேண்டும். சில தியான வழிமுறைகள் விளக்குவதைப் போல, நாம் மேலும் அதிக இயல்பான மன நிலையை அடையலாம். தெளிவாகச் சொல்வதனால், முற்றிலும் ஒன்றுமில்லாத, சோம்பி போன்ற மனநிலையை அடைய விரும்பவில்லை. அதாவது ஒரு ரேடியோவை அணைத்துவிடுவதைப் போன்றதல்ல, இதற்கு தூங்கிவிடுவதே மேல்!  பதற்றத்துடன் இருத்தல், கவலைப்படுதல் அல்லது அச்சப்படுதல் போன்ற மிக சிக்கலான சில உணர்வுகளின் சிக்கலான மனநிலைகளை அமைதிப்படுத்துவதே நம்முடைய இலக்காகும். 

நம்முடைய மனதை நாம் அமைதிப்படுத்துவதனால் நாம் தெளிவான மற்றும் எச்சரிக்கும் மனநிலையை அடையலாம், அங்கு நம்மால் அன்பு மற்றும் புரிதலை உருவாக்க முடியும், அல்லது நாம் அனைவரும் கொண்டிருக்கும் இயல்பு, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தலாம். இதற்கு ஆழ்ந்த நிம்மதி தேவை, வெறுமனே உடலில் இருக்கும் தசைகள் அல்ல மாறாக மன மற்றும் உணர்ச்சிகளின் இறுக்கத்தில் இருந்தும் ஆழ்ந்த நிம்மதி தேவை, அதுவே இயல்பான அரவணைப்பு மற்றும் மனத்தெளிவு அல்லது வேறு எந்த உணர்வாக இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். 

சிலர் தியானித்தல் என்பதன் அர்த்தம் நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் சிந்திப்பதை நிறுத்துவதற்குப் பதிலாக, தியானித்தல் அனைத்து தேவையற்ற சிந்தனைகளையும் தடுத்து நிறுத்துகிறது, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளான ("இரவு உணவிற்கு நான் என்ன சாப்பிடப் போகிறேன்?"), எதிர்மறை சிந்தனை ("நேற்று நீ என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டாய். நீ பயங்கரமானவன்!") என்பன போன்ற சிந்தனைகளை நிறுத்துகிறது. இவை அனைத்து மனம் அலைபாய்தல் மற்றும் சிக்கலான உணர்வுகள் வரிசையின் கீழ் வருகின்றன. 

அமைதியான மனநிலையை கொண்டிருக்க, இது வெறும் ஆயுதம் என்றாலும் அதுவே இறுதி இலக்கல்ல. நாம் அமைதியான, தெளிவான மற்றும் அதிக திறந்த மனதை கொண்டிருந்தால், அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம். நாம் அதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடியும், மேலும் நாம் அதனை நாம் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது பயன்படுத்த முயற்சித்து நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலையின் சிறந்த புரிதலைப் பெற முடியும். சிக்கலான உணர்ச்சிகளில் இருந்தும் புறம்பான சிந்தனைகளில் இருந்தும் விடுபட்ட மனதுடன், நாம் மேலும் தெளிவுடன் முக்கியமான தலைப்புகளான "என்னுடைய வாழ்வில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இந்த முக்கியமான உறவுமுறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இது ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியம் இல்லாததா?" என்று தெளிவாக சிந்திக்க முடியும். நம்மால் பகுப்பாய முடியும் -இதுவே சுயபரிசோதனையாகும். இவ்வகையான பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கும் ஆக்கப்பூர்வமான வழியில் சுயபரிசோதனை செய்யவும் நமக்கு தெளிவு தேவை. நமக்கு சலனமில்லாத அமைதியான மனநிலை தேவை நம்மை இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரு ஆயுதமே தியானமாகும்.

Top