தியானத்திற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை

நம்முடைய திறன்களை உணர்தல்

எல்லாவற்றையும் அடைவது சாத்தியமா என்று நினைப்பது குறித்து நாம் அதிகம் பேசவில்லை, மேலும் இதனை அடையும் திறன் எனக்கு இருக்கிறதா? இது பௌத்த – இயல்பின் மொத்த கலந்துரையாடலுக்குள் அழைத்துச் செல்லும், புத்தராக நாம் மாறுவதற்கான காரணிகளை இவை குறிப்பிடுகின்றன. முதன்மையானதாக இது மனதின் பண்புகளை இது கையாள்கிறது.

விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா? ஆம். எல்லா நேரமும் ஏதோ ஒன்றில் விழிப்போடு நினைவில் கொள்ளும் திறன் இருக்கிறதா? சிறப்பு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏதோ ஒன்றை பற்றி விழிப்போடு இருக்கலாம், ஆக அதை தொடரமுடியுமா? ஆம். பல வகையான தியானம் மற்றும் பழக்க வழக்கங்களின் மூலம் நம்மால் நீட்டிக்க முடியும், ஆனால் இதில் வெற்றிபெறுவதில் நம்முடைய சொந்த ஆர்வம் மற்றும் உந்துதல் ஆகியவை அடிப்படையில் முக்கியமானவை. அதேநேரம், அவை முக்கியமானதாகவும் நமக்கு பொருந்துவதாகவும் இருக்க வேண்டும்.

பொருள்வாங்க, கடைவீதிக்கு செல்வதற்கு முன்னர் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று விழிப்புடன் இருப்பதைப் போல, ஏனெனில் உங்களால் அதற்கு மேல் செலவு செய்ய முடியாது. மற்ற நேரங்களில், நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்கும் போது உங்களது சட்டைப்பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்பதில் அர்த்தமில்லை. அதே போன்று, போதனைகள் பற்றி நாம் சிந்தித்தால், அவை நமக்கு பொருந்துவதாக இருத்தல் வேண்டும். அது பொருத்தமானது என்று நீங்கள் உணர்ந்தால், அவை ஏன் முக்கியம், என்று அதன் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். "அக்கறையுள்ள அணுகுமுறை" என்று அழைக்கப்படும் ஒரு அடிப்படை மனநிலைக்கு நாம் அதைத் தள்ளுகிறோம், அங்கு நாம் நம்மைப் பற்றி கவலைப்படுகிறோம், நமக்கு என்ன நடக்கிறது, நாம் என்ன உணர்கிறோம் என்றே சிந்திக்கிறோம்.

நம்மைப் பற்றியே அக்கறைப்படுதல்

இந்த அக்கறையுள்ள மனப்பான்மையை மற்றவர்களை நோக்கி இயக்கும் போது அதன் செயல்பாட்டை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். மற்றவர்களைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை என்றால், பின்னர் நான் என்ன சொல்கிறேன் அல்லது செய்கிறேன் அல்லது அவர்கள் என்னை விரும்புகிறார்களா இல்லையா என்பது உண்மையில் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அவர்கள் முக்கியம் என்று நான் கருதினால், பின்னர் என்னுடைய நடத்தை அவர்களிடம் எந்த வகை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் நான் கவனம் கொள்ள வேண்டும். இதே அக்கறையை நம் மீதே கூட நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும், அதாவது, எல்லா நேரத்தையும் நான் வீணடித்தால், என்னுடைய விலைமதிப்பில்லா மனித வாழ்வின் நன்மையை எடுத்துக்கொள்ளாவிட்டால், இந்த மிகப்பெரிய கால விரயத்தை நம்பமுடியாத வருத்தத்துடனேயே ஒரு கட்டத்தில் இறந்துபோவேன்.

இதனை நாம் நம்முடைய அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களை நோக்கியும் செயல்படுத்தலாம். என்னுடைய குழந்தைகளை நான் எவ்வாறு வளர்க்கிறேன், நான் எப்படி என்னுடைய வேலைகளைச் செய்கிறேன் என்பதைப் பற்றியும் அக்கறைப்படுதல்; நான் என்னுடைய பொது மன நிலை மற்றும் உடல் நலன் மீதும் அக்கறைப்படுகிறேன். இந்த வகையான அணுகுமுறையோடு, போதனைகளும் முக்கியமானது என்று நாம் கருத வேண்டும். மெல்ல மெல்ல போதனைகளை மனதில் வைத்திருப்பதன் மூலம், நம்மால் அதனை நினைவில் வைத்திருக்க முடியும், எல்லா நேரமும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் அதிகமான நேரம் நினைவில் கொள்வோம். தியானம் என்பது போதனைகளை மீண்டும் மீண்டும் நமக்குத் தெரிந்துகொள்வதற்கான முறையாகும், இதனால் அவை நம் மனதின் இயல்பான பகுதியாக மாறும், அவற்றை நினைவில் கொள்வதற்கு நாம் பெரிய அளவில் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை.

இந்த நுண்ணறிவுகளைப் பெற நமக்கு திறன் இருக்கிறது என உறுதியாக நம்பினால், அதை முழு மனதுடன் செய்வோம். அப்படி நாம் நம்பவில்லையென்றால், பிறகு வெறும் கைகளால் பறக்க முயற்சிப்பதைப் போன்றது தான்: நீங்கள் ஏன் கவலைப்படுவீர்கள்? தொடக்கத்தில் விடுதலை அல்லது ஞானத்தின் அர்த்தம் என்ன என்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் அதனை புரிந்துகொள்ள வேண்டும் என்பது நமது நீண்ட கால இலக்கு,  எனினும் இறப்பு பற்றிய விழிப்புணர்வு நம்முடைய வாழ்நாளை வீணாகக் கழிக்கக் கூடாது என்பதை உணர உதவுகிறது. 

இரக்கத்திற்கான தியானம்

இப்போது நாம் தியானத்தின் மூன்றாவது செயல்முறையை பார்க்கத் தயாராக இருக்கிறோம். இந்த தலைப்பை அறிமுகம் செய்வதற்கான வழி, மிகப்பெரிய திபெத்திய புத்த குரு சோங்காப்பா எழுதிய அறிவுரை மிகவும் உதவிகரமானது. சூத்திரம் மற்றும் தந்திரத்தை பயிற்சிப்பதற்கான அறிவுரைக் கடிதம், என்பதில் தியானம் செய்ய நமக்குத் தேவை “நாம் அடைய முயற்சிக்கும் மனநிலைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கண்டறியவும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நாம் இரக்கத்தை மேம்படுத்த விரும்பினால், உதாரணத்திற்கு, அதன் வளர்ச்சிக்கு என்ன காரணங்கள் வழிவகுக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இது சார்ந்திருத்தலுக்கான கோட்பாடு – அதாவது மற்றவர்கள் துன்பங்கள் மற்றம் துன்பத்திற்கான காரணங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்தல் (பௌத்தத்தில் இரக்கத்திற்கு இருக்கும் விளக்கம்) நாம் அதனோடு ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். இல்லையென்றால் நாம் அதைப் பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டோம். எனவே நம்முடைய ஒட்டு மொத்த இருத்தலும் கடின உழைப்பு மற்றும் ஒவ்வொருவரின் கருணையும் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் – நமக்கான உணவை உற்பத்தி செய்தவர் யார், நமக்காக சாலை போட்டவர், உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். நம்முடைய வாழ்வில் அனைத்தையும் சாத்தியமாக்க அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, நாம் நன்றியும் பாராட்டும் செய்ய வேண்டும். நேர்மையாகவும் ஆழமாகவும் உணர்ந்தால், நம்முடைய நன்றியுணர்வு இயல்பாகவே இதயப்பூர்வமான அன்பை கொடுக்கும் அவர்களை நாம் உயர்ந்தவர்களாக மனதில் வைத்து அவர்களுக்கு ஏதேனும் பயங்கரம் நடந்தால் அதற்காக மோசமாக உணர்வோம்.  அன்பு இதையே முன்நடத்தும்: அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான விருப்பம் மேலும் அவர்களின் மகிழ்ச்சிக்கான காரணங்களைக் கொண்டிருப்போம். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை நாம் பார்த்தால், நாம் எல்லா வகையான துன்பங்களாலும் பாதிக்கப்படுகிறோம், நாம் இரக்கத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் இரக்கத்தை வளர்ப்பது இந்த எல்லா நிலைகளையும் அவற்றின் சரியான வரிசையில் செலுத்துவதைச் சார்ந்தது. 

இரக்கம் என்பது துறவை கொண்டிருப்பதைப் பொறுத்தது, அதாவது நம்முடைய சொந்த துன்பங்களை அடையாளம் கண்டு, அவற்றில் இருந்து விடுபட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது, பின்னர் அனைவருக்கும் ஒரே மாதிரியான துன்பங்களும் அதே விருப்பமும் இருப்பதை உணர்ந்து கொள்வது. துறவு என்பது துல்லியமாக - துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உறுதி. இரக்கமும், மற்றவர்களின் துன்பங்களை நோக்கி அதே உறுதியைப் போற்றுதல், முதலில் நம்மீது அதே உறுதியைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே, நமது தியானத்தில் நாம் இரக்க நிலையை முயற்சித்து உருவாக்க விரும்பினால், இந்த சார்புநிலை மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இறுதியில் ஒரு பெரிய நடைமுறை மற்றும் பரிச்சயத்துடன் நாம் அதை உடனடியாக உருவாக்க முடியும், தொடக்கத்தில் நமக்குத் தேவை நாம் உண்மையிலேயே நேர்மையாக உணரும் ஒரு நிலைக்கு நம்மை உருவாக்குவதற்கான படிகள் மூலம் செல்ல வேண்டும். உண்மையில் இரக்கத்தைப் பற்றி தியானிக்க, அது சார்ந்திருக்கும் படிகள் அல்லது காரணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் “அம்சங்களை அறிந்து கொள்வது” அவசியம் என்று சாங்காப்பா எப்போதும் கூறுவார், இதன் அர்த்தம் நாம் இரக்கத்தை உருவாக்கும் முனைப்பில் இருந்தால், அனைவரும் துன்பங்கள் மற்றும் அதற்கான காரணங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், அனைத்து வெவ்வேறு விதமான துன்பங்களின் அம்சங்கள் மற்றும் வெவ்வேறு துன்பப்படுதலுக்கான காரணங்களின் அம்சங்களையும் அறிய வேண்டியது அவசியம். மற்றவர்களுக்கு ஒரு வேலையையோ அல்லது சாப்பிட நல்லதையோ கண்டுபிடிப்பதில் உதவுவது மட்டுமல்ல - கட்டுப்பாடில்லாமல் நிகழும் தொடர்ச்சியான மறுபிறப்பின் அனைத்து பரவலான துன்பங்களையும், சம்சாரியத்தில் நிலைத்திருப்பதற்கான இருத்தலை உருவாக்கும் யதார்த்தத்தைப் பற்றிய மிக அடிப்படையான அறியாமை மற்றும் குழப்பத்தைப் பற்றியும் பேசுகிறோம். அன்பு மற்றும் இரக்கத்திற்காக தியானிக்கும் போது, நீங்கள் வெறுமனே அங்கே அமர்ந்து கொண்டு “ஆஹா, நான் எல்லோரையும் நேசிக்கிறேன், இது எவ்வளவு அருமையாக இருக்கிறது” என்று நினைப்பதில்லை. இது தெளிவற்ற வழியும் கூட – நாம் உருவாக்க நினைக்கும் மனநிலை மிகக் குறிப்பிடும்படியானது. நாம் செயலாற்ற முயற்சிக்கும் மனநிலையை குறிப்பிட உதவும் அனைத்து விஷயங்களையும் சாங்காப்பா குறிப்பிடுகிறார் 

நாம் மனநிலையை மேம்படுத்த முயற்சிக்கும்போது நாம் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பதை அறிவது மிகவும் முக்கியம். நம் மனதில் என்ன தோன்ற வேண்டும்? இரக்கத்துடன், நாம் மற்ற உயிரினங்கள் பற்றியும் மற்றும் அவர்களின் துன்பங்களிலும் கவனம் செலுத்துகிறோம். மேலும் இங்கே அது வெறும் இரக்கம் மட்டுமல்ல, ஆனால் “பெரிய இரக்கம்,” அது எல்லோரிடத்திலும் சமமாக வழிநடத்தப்படுகிறது. அவை ஏராளமான உயிரினங்கள் – உண்மையில் இது எல்லோருக்குமானது. “உலகத்தில் உள்ள எல்லா பூச்சிகளுக்கும் நான் உதவப்போகிறேன்” நினைத்து பார்க்கவே நம்ப முடியாது பெரிய நோக்கம். 

ஒவ்வொரு தனி நபரின் மனநிலையின் தொடர்ச்சியைப் பற்றி நாம் இங்கு பேசுகிறோம், அவர்களின் கர்ம வினை காரணமாக தற்போது ஒரு பூச்சியின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. இதன் அர்த்தம் அவர்கள் எப்போதும் பூச்சிகளாக இருப்பதில்லை – இந்த ஜென்மத்தில் பூச்சியைப் போல இருப்பவர்களை விடுவிக்கப் போகிறோம், ஆனால் கடந்த ஜென்மத்தில் அவர் என்னுடைய அம்மாவாக இருந்திருப்பார். இந்த ஜென்மத்தில் என்னுடைய தாயை நாம் விடுவிப்போம், அவர் கடந்த ஜென்மத்தில் ஒரு புழுவாக இருந்திருக்கலாம்.

ஒவ்வொரு உயிரினத்திற்காகவும் காட்சிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, ஆனால் மஹாயனா பௌத்த நடைமுறையின் பரந்த – மனதுடன் நம்முடைய பயிற்சிகளை நாம் செய்யும் போது நம்மைச் சுற்றி ஏராளமான பார்வையாளர்கள் இருப்பதாக கற்பனை செய்ய முயற்சிக்கிறோம். மேலும் ஒவ்வொருவரின் துன்பங்களையும் நாம் நிவர்த்தி செய்கிறோம். தொடக்கத்தில் பல மஹாயனா சூத்திரங்கள், சுற்றி இருக்கும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு, நம்பிக்கைக்கான எண்ணத்தை வழங்குவதை விவரிக்கிறது.

இந்த வகையிலான உலகளாவிய இரக்கத்தை சரிசமமாக எல்லோருக்குமானதாக பகிர்ந்தளித்தல் என்பது உண்மையில் நம்பமுடியாதது. இதற்கு அடிப்படை சமநிலை, நாம் நமது மனதை எல்லோருக்குமானதாக திறந்து வைக்கிறோம். இரக்கம் தொடர்பாக முறையாக தியானம் செய்தால் இவை அனைத்தையும் நம்மால் முறைப்படி அறிந்து கொள்ள முடியும்.  

இதன் கூடவே, நாம் கொண்டிருக்கும் இலக்குடன் மனம் எவ்வாறு தொடர்புபட்டிருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் இரக்கத்திற்காக தியானம் செய்தால், அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்ப வேண்டும், அதே போன்று துன்பத்திற்கான அனைத்து காரணங்களும் அழிக்கப்பட விரும்ப வேண்டும். வேறு யாராவது அவர்களுக்கு உதவ முன்வருவார்கள், அல்லது துன்பம் தானாக விலகிவிடும் என்ற விருப்பம் அல்ல, ஆனால் அதைக் கடக்க அவர்களுக்கு நாமே உதவ முயற்சித்தல்.

இரக்கத்தை மேம்படுத்த நமக்கு எது நன்மை மற்றும் உதவப்போகிறது என்பதையும் எது கேடு விளைவிக்கும் மற்றும் தீங்கானது என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று சாங்கப்பா மேலும் சுட்டிக்காட்டுகிறார். இரக்கத்தை வளர்ப்பதற்கு எது நமக்கு உதவாது, ஆனால் முற்றிலும் இன்றியமையாதது என்னவென்றால், மக்கள் துன்பத்திலிருந்து விடுபடுவது உண்மையில் சாத்தியம் என்பதை நம்புவதுதான். இது சாத்தியம் என்று நாம் நம்பாவிட்டால், பிறகு எப்படி அதனை விரும்புவது அதற்காக செயலாற்றுவது? இதற்கு அடிப்படை தேவை துன்பங்களில் இருந்து நான் விடுபடுவதோடு மற்றவர்களும் வென்று வர முடியும் உறுதியான நம்பிக்கை.  

இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும், புத்தராக இருந்தாலும் கூட அவரால் என்ன செய்ய முடியும். இரக்கத்தை மேம்படுத்துவதில் கேடுவிளைவிப்பது என்னவென்றால், சுய- மையப்படுத்துதல் மற்றும் சுயநலம் மட்டுமல்ல, ஊக்கத்தை கெடுத்தல் மற்றும் தன்நம்பிக்கை இன்மையும் கூடத் தான். எல்லாவற்றிற்கும் மேலாக, துன்பம் என்பது காலில் தைத்திருக்கும் முள்ளை அகற்றுவது போன்றதல்ல என புத்தர் கூறி இருக்கிறார். புத்தரால் கூட பாதை மட்டுமே காட்ட முடியும், ஆனால் மற்றவர்கள் தான் தேவைக்கேற்ப தாங்களாகவே கடினமுயற்சி செய்ய வேண்டும். புத்தரையே விஞ்ச முடியும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? 

சுருக்கமாகச் சொன்னால், இரக்கம் போன்ற ஒரு குறிப்பிட்ட மனநிலையை உருவாக்குவதற்கான சிறப்பம்சங்களை நாம் புரிந்த கொள்ளாவிட்டால், நாம் வெகு தூரம் செல்ல முடியாது. இந்த வழியில் தியானம் என்பது உண்மையில் எவ்வளவு துல்லியமானது மற்றும் அதிநவீனமானது என்பதை நாம் பாராட்ட தொடங்கலாம்; நாம் அதை "மனதின் அறிவியல்" என்று கூட அழைக்கலாம்.

தியான அமர்வுகளுக்கு இடையில்

தியான அமர்வுகளுக்கு இடையேயான காலமும் மிக முக்கியம் என்று சாங்கப்பா சுட்டிக்காட்டுகிறார். நாம் தியானிப்பதைக் கையாளும் பல்வேறு வேத நூல்களைப் படிக்க அவர் அறிவுறுத்துகிறார். இவ்வாறு செய்வதனால் ஒருபுறம், நாம் என்ன செய்கிறோமோ அவை தான் உண்மையிலேயே புத்தர் கற்பித்தது என்பதையும், மறுபுறம், பெரிய குருமார்கள் என்ன அடைந்திருக்கிறார்கள் என்பதைப் படிப்பதன் மூலம் இது நமக்கு உத்வேகம் அளிக்கும் என்பதையும் உறுதிப்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, தூய்மைப்படுத்தும் பயிற்சிகள் மூலம், நம்முடைய நேர்மறையான சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் எதிர்மறை சக்திகளிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று சோங்காபா கூறுகிறார்.

‘தகுதி’ என்ற வார்த்தை தவறான எண்ணம் என்பதால் அதற்கு பதிலாக நான் ‘நேர்மறை சக்தி’ என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். ‘தகுதி’ என்ற சொல் நீங்கள் புள்ளிகளை சேகரிக்கிறீர்கள், நூறு அடைந்து விட்டால் நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்ற அர்த்தத்தைத் தருகிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால் செல்போன் பேட்டரிக்கு மின்சாரம் பாய்ச்சுவதுபோல உண்மையில் நேர்மறை பொறுப்பை கட்டமைக்கிறோம், அதில் இருந்தே நீங்கள் செயலாற்றுவதற்கு போதுமான சக்தியைப் பெறலாம். அங்கே உணர்ச்சிகளின் தடைகளும் கூட இருக்கும். நேர்மறை சக்தியை கட்டமைப்பதோடு பல்வேறு தூய்மை பயிற்சிகளைச் செய்வதனால் இது போன்ற தடைகளைத் தகர்த்து உள்ளுணர்வு மற்றும் புரிதலைப் பெற முடியும்.

பயிற்சி அளவில் என்றால் அதன் அர்த்தம் என்ன? பயிற்சி அளவில் என்பதன் அர்த்தம்: நாம் எதையாவது புரிந்து கொள்ள முயற்சித்தால், நம்முடைய பணியாக கூட இருக்கலாம், நமக்கு புரியவில்லை என்றால் ஒரு இடைவேளை எடுக்கலாம். ஒரு வகையில் நாம் சென்று மற்றவர்களுக்கு ஏதேனும் உதவிகரமானதை செய்ய முயற்சிக்கலாம். அல்லது மற்றொன்று அவ்வாறு செய்வதனால், நீங்கள் வழக்கமாக திரும்பி வரும் போது, உங்களுடைய மனம் மேலும் நேர்மறையாகவும், வெறுப்பிற்கு பதிலாக சற்று மேம்பட்ட நிலையிலும், சுய-மதிப்புக்கான உயர்ந்த உணர்வோடு, வழக்கத்தை விட சற்று சிறப்பாக புரிந்து கொள்ள முடியும். எனவே நாம் யார் என்பது முக்கியமல்ல, கட்டாயமாக நாம் ஈடுபடும் ஒரு செயல்களில் மற்றவர்களுக்கு நன்மை இருக்க வேண்டும், நம்முடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது, தனிமையில் இருக்கும் உங்களது வயதான உறவினரை சந்திக்கச் செல்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நேர்மறையான ஏதோ ஒன்றை செய்வது மிகவும் முக்கியம். நாம் செய்யக்கூடிய பல சடங்கு நடைமுறைகள் இருந்தாலும், ஒரு உண்மையான வாழ்க்கை நடைமுறை மிகவும் வலுவானது.

நம்முடைய முன்னேற்றத்தை சரிபார்த்தல்

நம் முன்னேற்றத்தை சரிபார்க்கக்கூடிய தனிப்பட்ட ஆசிரியர் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை, ஆனால் லோஜோங் அல்லது மனதைப் பயிற்றுவிக்கும் போதனைகள் எப்போதும் நமக்கு நாமே சிறந்த சாட்சி என்று கூறுகின்றன. நாம் நன்றாக கவனம் செலுத்த முடிந்ததா இல்லையா, அல்லது நமக்கு நிறைய மன உளைச்சல் இருக்கிறதா இல்லையா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் - இதை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது! போதனைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் நம்முடைய சொந்த உணர்ச்சி நிலைகளை மேம்படுத்துவதற்கும், நமக்கு நாமே செயலாற்றுவதற்கும் நோக்கமாக உள்ளன. ஆகவே, நாங்கள் இன்னும் கோபப்படுகிறோமா, அல்லது கோபமாக இருக்கிறோமா என்று பார்க்க சிறந்த நீதிபதி நாமே தான்.

நாம் நினைவில் கொள்ள வேண்டிய கொள்கை என்னவென்றால், வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், எனவே முன்னேற்றம் ஒருபோதும் நேர்கோட்டுத் தன்மையானது அல்ல. இது ஒவ்வொரு நாளையும் ஒருபோதும் மேலும் மேலும் சிறப்பானதாக்காது. நாம் விடுவிக்கப்பட்ட ஜீவனாக மாறும் வரை, ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். நாம் நீண்ட நேரம் பயிற்சி செய்தாலும், பொதுவாக கோபப்படாவிட்டாலும், சில நேரங்களில் நாம் இன்னும் கோபப்படுவோம். ஆனால் அது ஊக்கமளிக்க எந்த காரணமும் இல்லை. ஒருபுறம், நம்மை மேம்படுத்துவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும், ஆனால் மறுபுறம், நீங்கள் நெறி பிறழும் போது நம்மை நாமே தண்டிக்கவோ அல்லது  குற்ற உணர்ச்சியாகவோ உணரக் கூடாது. நாம் செய்த முன்னேற்றத்தை ஒரு வாரத்திற்குள்ளேயே பார்க்காமல், ஐந்து வருட காலத்தையும் நாம் பார்க்க வேண்டும் என்று புனிதர் தலாய் லாமா கூறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விஷயங்களை நாம் எவ்வாறு கையாண்டோம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இப்போது நாம் செய்த முன்னேற்றத்தை தெளிவாகக் காணலாம்.

சுருக்கம்

தியானிக்க சிறப்பான இடம் தேவையில்லை, அமைதியாகவும் சுத்தமாகவும் அந்த இடம் இருந்தாலே போதும், ஆனால் அது கிடைக்காவிட்டாலும் கூட, அது பரவாயில்லை. என் நண்பர் ஒருவர் தனது தாயுடன் ஒரு சின்ன குடியிருப்பில் வசித்து வந்தார். அதில் ஒரு அறை மட்டுமே இருந்தது, அதில் அவருடைய தாயின் தொலைக்காட்சி மற்றும் வானொலி இருந்தது, அங்கு அவர் தியானிக்க முயன்றால் அல்லது அது போன்ற ஏதாவது செய்தால் அவளுடைய தாய்க்கு இடையூறாக இருக்கும். அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கழிவறையில் அமர்ந்து தியானிப்பதே. அங்குதான் அவர் ஒவ்வொரு நாளும் தனது பயிற்சியைச் செய்தார், அதுவும் நன்றே.

உங்களுக்கு மெழுகுவர்த்திகள் அல்லது தூபங்கள் போன்ற எதுவும் தேவையில்லை - அவை “பொருட்கள்” மட்டுமே. முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் நம் மனதைக் கொண்டு என்ன செய்கிறோம், தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட மனநிலையைப் பயிற்சி செய்கிறது, இது எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும் செய்யக்கூடிய ஒன்று. நாம் சுரங்கப்பாதையில் அல்லது பேருந்தில் இருக்கும்போது சில மனநிலைகளை உருவாக்குவது எளிதாக இருக்கும். நாம் பொறுமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் போது, அனைவரும் மகிழ்ச்சியையே விரும்புகின்றனர், மகிழ்ச்சியின்மையை விரும்பவில்லை என்பதை பார்க்க வேண்டும், அதற்கு அறையில் தனியாக உட்கார்ந்து மக்களை கற்பனை செய்வதை விட, நெரிசலான பேருந்தை விட சிறந்த இடம் எதுவாக இருக்கும்?

தியான பயிற்சியில் முக்கியமானது என்னவென்றால், நாம் அதை ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்கிறோம். பல் துலக்கவோ அல்லது கழிப்பறைக்குச் செல்லவோ நீங்கள் மறக்க மாட்டீர்கள், எனவே நீங்கள் தியானிக்கவும் மறக்கக்கூடாது. ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தாலும், அதை நம் வாழ்வின் நிலையான பகுதியாக மாற்ற முடியும். நாம் யாராக இருந்தாலும், அது பொருட்டல்ல, இதற்கேற்ப நாம் அனைவரும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருக்கலாம். இது சில சோதனையாக இருக்கத் தேவையில்லை, அதற்கு பதிலாக அது ஒரு பெரிய ஸ்திரத்தன்மையைச் சேர்க்கலாம் – இன்றைய நாள் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக இருந்திருந்தாலும், தொடர்ச்சியை வழங்கும் இந்த நேரம் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.

Top