தியானம் என்பது மூன்று மார்க்க செயல்முறையில் ஒரு பகுதி, அவை போதனைகளைக் கேட்டல், அதனைப் பற்றி சிந்தித்தல், பின்னர் அதை நோக்கி தியானித்தலை குறிக்கிறது. மூன்றாவது நிலையில் இருக்கும் இந்த தியானமானது, உண்மையில் போதனைகளை நாம் நம்முடைய வாழ்வில் எவ்வாறு ஒருங்கிணைக்கிறோம், அவை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. நாம் அடிப்படையில் நேர்மறை மனநிலையை கட்டமைக்கிறோம், மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அதனை அடைய விரும்புகிறோம், ஆகவே அது பழக்கமாக மாறுகிறது.
நாம் போதனைகளைக் கேட்கிறோம், அதில் இருந்து நாம் பாகுபாடு காண்பிக்கும் விழிப்புணர்வைப் பெறுகிறோம், அதனை நாம் வேறுபடுத்தலாம், “ஆம், புத்தரின் போதனை இது தான்”. நாம் இந்த போதனைகளை உத்தேசமாக தொடர்புபடுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்; எல்லா போதனைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை, ஆனால் குறைந்தபட்சமாக நம்முடைய உந்துதல் மற்றும் விருப்பத்தால், வேறுவிதமாக நிரூபிக்கும் வரை அவை சரியாக இருக்கும் என நாம் ஊகிக்கிறோம். ஏதோ ஒன்று சரியல்ல என்று நாம் கண்டறிந்தால், நாம் அதைப் பற்றி மறந்து போகிறோம். குறைந்தபட்சமாக ஏதோ சரி என்று ஊகிக்க திறந்த மனதோடு இருக்க வேண்டியது முக்கியம், மேலும் அது யதார்த்தம் தானா என்பதை பகுப்பாய முடிவு செய்கிறோம். ஊட்டச்சத்துகள் போல அவை பலனுள்ளவையாக என்றும் கூட நாம் ஊகிக்கிறோம். நீங்கள் விஷத்தை உட்கொண்டுவிட்டு, “உண்மையில் அது கொல்கிறதா என்று நாம் பரிசோதித்துப் பார்க்கலாம்” என்று சிந்திக்கிறீர்களா, ஆனால் ஊட்டச்சத்துகளுடன் அவ்வாறு செய்யலாம். எனவே நாம் அதன் பலன்களை ஊகிக்கலாம், ஏனெனில் அது இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள், எனவே நாம் முயற்சிக்கலாம் மேலும் நமக்காக பார்க்கலாம்.
போதனைகள் பற்றி சிந்தித்தால், நாம் அடைய நினைக்கும் இறுதி செயல்முறையான சிந்தனையில் இருந்து வருகிற பாகுபடுத்தும் விழிப்புணர்வில் இருந்து முறையே பகுத்தாய்கிறோம். நாம் போதனையை புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் முழுவதுமாக இங்கு தான் நம்புகிறோம், புத்தர் போதித்தது சரிதான், அதற்கு பலன் இருக்கிறது, நாம் அடைய நினைப்பதை உண்மையில் அடைவது சாத்தியமே. பலரும் செய்வது போல மேலே சொன்ன நிலைகளை மக்கள் விட்டுவிட்டால், கடைசியில் அவர்கள் அலைபாயும் சந்தேகங்களை மட்டுமே கொண்டிருப்பார்கள், இன்னொரு விதமாகச் சொல்வதானால் சந்தேகங்கள், அனைத்தும் உண்மையில் சாத்தியம் தானா என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை. பின்னர் அவர்கள் கைவிட்டுவிடுகிறார்கள்.
விடுதலையடைதல் என்றால் என்ன?
விடுதலை அல்லது ஞானமடைதல், அதனை அடைவதற்கான வழிகள் பற்றி நாம் படித்தால் உண்மையாக விடுதலை என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஞானமடைவதற்கான உண்மையான அர்த்தம் என்ன? அதற்குப் பின்னர் என்ன நடக்கும்? புத்தர் சர்வஞானி எல்லாவற்றையும் சரியாகவும் அதேசமயம் துள்ளியமாகவும் அறிந்தவர் என்கின்றன போதனைகள். ஒவ்வொரு உயிர்களிடத்திலும் புத்தருக்கு சமமான அக்கறை இருந்தது, மேலும் ஒவ்வொன்றுடனும் அவரால் சரியாக தொடர்பு கொள்ள முடிந்தது. எனவே புத்தர் ஒவ்வொருவரிடத்திலும் அவற்றிற்கான சிறந்த வழியில் உதவினார்.
உண்மையில் இது சாத்தியமா அல்லது இது வெறும் கதைகளா? இது பொருத்தமற்றது என்று நாம் சிந்தித்தால், பிறகு நாம் அதனை அடைவதற்காக முயற்சிக்க என்ன செய்கிறோம்? இவை கட்டுக்கதைகள் என்று சிந்தித்தால், நிச்சயமாக இதனை அடைவது சாத்தியம் என்று நம்பமாட்டோம். பௌத்தத்தில் விவாதிக்கப்பட்டிருப்பது போல இலக்குகளை நாம் விமர்சனங்களோடு பார்த்து நம்முடைய சொந்த உந்துதலை பகுப்பாயலாம்.
நம்முடைய இலக்கு என்ன?
“உந்துதல்” இந்த வார்த்தைக்கு பௌத்தத்தில் மிகச் சிறப்பான அர்த்தம் இருக்கிறது. நாம் அடிக்கடி சொல்வோம், “மறுஉறுதிப்படுத்து அல்லது உங்களுடைய உந்ததலை உற்பத்தி செய்”, இவற்றிற்கு இரண்டு பாகங்கள் உள்ளன. ஒன்று நோக்கம் – நாம் கொண்டிருக்கும் இலக்கு – மற்றொன்று, அதற்கு பின்னால் இருக்கம் உணர்ச்சி அல்லது உணர்வு, இலக்கை அடைய அதுவே நம்மை இயக்குகிறது. பொதுவாக ஆங்கிலத்தில், உந்ததல் என்ற வார்த்தைக்கு இரண்டாம் பாகத்துடன் முக்கியமான தொடர்பு இருக்கிறது, எதையாவது செய்வதற்கு நம்மை இயக்கும் உணர்ச்சி.
பௌத்த போதனைகளை பயிற்சிக்கும் பலருக்காக நான் சிந்திக்கிறேன், “தர்மம்” என்றால் நாம் நேர்மையாக இருந்தால், நம்முடைய இழப்பானது இந்த வாழ்க்கையை சிறிதளவேனும் எளிமையாகவோ மேலும் மகிழ்ச்சியாகவோ ஆக்கும் என்பதை காணலாம். இது நல்லதே – இதைத் தான் நான் “யதார்த்தமான பொருள் தர்மம்” என்பதற்கு மாறாக “எளிதான தர்மம்” என்று சொல்கிறேன். இது முதல் நிலை. யதார்த்தமான பொருள் என்பது சிறப்பான மறுபிறப்புகளுக்காக செயலாற்றுதல், அடிப்படையில் வாழ்நாளிற்கு பிறகு விலைதிப்பில்லா மானுட மறுபிறப்பு வாழ்நாளைத் தொடர்ந்து கொண்டிருத்தல். உங்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லையென்றால், உங்களால் எப்படி சிறந்த ஒன்றை பெறுவதற்காக உண்மையான நோக்கம் கொண்டிருக்க முடியும்? மறுபிறப்பை புரிந்து கொள்ள மீண்டும் பிறத்தல் என்றால் என்ன? தொடர்ச்சியான மனதின் இயல்பு, சுய இயல்பு உள்ளிட்டவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே பௌத்தம் மட்டும் மறுபிறப்பு பற்றி பேசுவதில்லை, கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மதத்தினரின் அது குறித்து நோக்கடும்; அது தான், கிறிஸ்துவத்தில், சொர்க்கத்தில் மறுபிறப்பு எடுத்தல்.
அடுத்த இலக்கானது கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைதல். இந்த மதத்தினரின் நோக்கமும் கூட இதுவே. பௌத்த உண்மையில் இந்த விடுதலையின் மூலம் என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதனை அடைவதற்காக கொண்டிருக்கும் வழிகள் என்ன? நிச்சயமாக, இறுதி இலக்கின் நோக்கமானது புத்தரின் ஞான நிலைக்காக – பௌத்தத்திற்கு இது தனித்துவமானது.
படிப்படியாக முன்னேறு!
பௌத்த போதனைகளைப் பார்த்தால், அவை நிலைகளில் இருப்பவை என்பதை நம்மால் காண முடியும். ஒவ்வொரு உள்ளுணர்வும் மற்றொன்றை பின்பற்றுகிறது, அதனை மதிக்க வேண்டியது அவசியம் ஏனெனில் நாம் வெறுமனே, “நான் புத்தராக வேண்டும் அதனால் எல்லா உணர்ச்சி பிணைப்புகளுக்கும் உதவ முடியும்” என்று அதற்கான எந்த அடிப்படையுமின்றி சொல்லலாம், அதன் பிறகு அது வெறும் அர்த்தமில்லாத வார்த்தைகளே. உண்மையிலேயே விடுதலையும், உலகில் இருக்கும் ஒவ்வொரு பூச்சிக்கு ஞானத்தை கொண்டுவருவதுமே நம்முடைய நோக்கமா? வாய்ப்பில்லை. உண்மையில் இந்த நோக்கத்திற்காகவும் அதற்கான யதார்த்தமான அர்த்தத்தை பெறுவதற்கும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மனநிலை தேவை, எனவே மெல்ல மெல்ல நாம் அதனை கட்டமைக்கிறோம். ஒவ்வொரு போதனைகளையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நாம் அதனை செய்கிறோம் நான் இங்கு “நான்கு கோட்பாடுகளை” எதையோ பகுப்பாய்வதற்கான நான்கு விதமான பார்வை என்று மொழிபெயர்க்கிறேன், மேலும் நாம் தர்மத்தின் பெரும்பாலான அடிப்படையிலான அம்சங்களைக் கொண்டு தொடங்கலாம்.
உதாரணமாக, நான்கு கோட்பாடுகளை பயன்படுத்துவதன் மூலம், மரணம் மற்று நிலையாமை பற்றி தியானிப்போம், சிந்திப்போம். நான் இதைத் தேர்ந்தெடுத்ததற்கு சுயநலமான காரணமும் கொஞ்சம் இருக்கிறது, ஏனெனில் என்னுடைய நெருங்கிய நண்பர் கடந்த வாரம் காலமானார். எப்படியாயினும், நான்கு கோட்பாடுகள் என்பவை:
- சார்ந்திருத்தலுக்கான கோட்பாடு - நாம் உருவாக்க விரும்பும் மனநிலை, மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு எதைச் சார்ந்தது?
- செயல்பாட்டிற்கான கோட்பாடு - இந்த மனநிலையை நாம் அடைந்தால், அது என்ன செய்கிறது மற்றும் அதில் இருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் என்ன?
- காரணத்திற்கான கோட்பாடு - போதனை உண்மையா என்பதை தீர்மானிக்க நாம் அதை ஆராய்ந்தால், அது புத்தரின் மற்ற போதனைகளுடன் பொருந்திப்போகுமா? இது தர்க்கரீதியானதா? நாம் அதை முயற்சிக்கும்போது, அதில் கூறப்பட்டிருக்கும் விளைவை உருவாக்குகிறதா?
- இயற்கையின் கோட்பாடு - மரணம் என்பது பொருட்களின் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டா? எல்லோரும் இறக்கிறார்களா?
நாம் செய்வது வேண்டியது என்னவென்றால், மரணத்தைப் போன்ற ஒரு குறிப்பிட்ட போதனையை எடுத்துக் கொண்டு, இந்த நான்கு கோட்பாடுகளின் பார்வையில் இருந்து பகுப்பாய்வு செய்து, நமக்குத் தேவையான நேரத்தை செலவிடுவது. இதற்கு நீங்கள் பத்து நிமிடங்களையும், இருபது நிமிடங்களையும் செலவிட வேண்டும் என்று எந்த சூத்திரமும் இல்லை. ஆனால் விரைவாகச் செல்லாமல் இருப்பது நல்லது, ஏனென்றால் பெரும்பாலும் நீங்கள் எதன் மீது கவனம் செலுத்துகிறீர்களோ அதற்கு அர்த்தமில்லாமல் போகும். எதிலாவது மூழ்க விட அனுமதிப்பது நல்லது, மேலும் அதனுடன் உண்மையிலேயே செயலாற்றுங்கள்.
ஒரு முழுமையான புரிதலைப் பெறுதல்
அடிப்படையில் நாம் தலைப்பைப் புரிந்துகொண்டதாக நம்பிக்கையோடு இருக்க விரும்புகிறோம், நாம் திரும்பவும் அங்கு சென்று விஷயங்கள் எவ்வாறு இருக்கின்றன என்று வியக்க விரும்புவதில்லை. இதனால்தான் திபெத்தியர்கள் தங்களது கல்வி முறையில் விவாதத்தைக் கொண்டுள்ளனர், இது நமது புரிதலைக் கேள்விக்குள்ளாக்குகிறது. எல்லோரும் அதைச் செய்ய வேண்டும் - நீங்கள் வகுப்பில் கடைசியில் அமைதியாக உட்கார முடியாது. ஒரு நபர் எதையாவது கூறுவார், எதிராளி அதை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். இவை அனைத்திற்குமான விஷயம் பதிலைக் கண்டுபிடிப்பது அல்ல, ஆனால் ஒரு தலைப்பைப் பற்றிய நமது புரிதலில் உறுதியைப் பெறுவது. இது ஒரு சிறந்த முறையாகும், ஏனென்றால் நமக்கு நாமே விடுத்துக்கொள்ளும் சவாலை விட மற்றவர்கள் நம் சிந்தனைக்கு அதிக சவால் விடுவார்கள். விவாதங்களின் போது, மக்கள் மிகுந்த வேடிக்கையாக இருப்பதோடு, பெரும்பாலும் மிகப்பெரிய அளவிலான ஆற்றலைக் கொண்டுள்ளனர், மற்றவர்கள் தங்களுக்கு முரணாக இருக்கும்போது அவர்கள் ஏராளமாக சிரிக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் நல்ல நகைச்சுவையுடன் செய்யப்படுகின்றன, எல்லோரும் அதை ரசிக்கிறார்கள்.
இந்த வகையிலான கற்றல் பாணியில் நமக்கு இருக்கும் மற்றொரு நன்மை என்னவென்றால், நீங்கள் யாராக இருந்தாலும், ஒரு கட்டத்தில் முட்டாள்தனமாக எதையாவது சொல்லி நீங்களே முரண்படுவீர்கள், இது ஈகோ மற்றும் வெட்டிப்பெருமையை தோற்கடிக்க நல்லது. இது கூச்சத்தையும் வெல்லும் - நீங்கள் நிச்சயமாக சபைக்கு முன்னால் எழுந்து நின்று விவாதிக்க வெட்கப்பட மாட்டீர்கள்.
“ஓ, இது அறிவுசார் விஷயங்கள்; நான் உள்ளுணர்வுடன் இருக்க விரும்புகிறேன், தியானிக்க வேண்டும்" என்று விவாதத்தை நாம் தவிர்க்கக் கூடாது. தியானம் செய்ய விவாதம் உங்களுக்கு உதவுகிறது, இதுவே முழு நோக்கமாகும். விவாதத்திற்குப் பிறகு, உங்களுக்கு அதிக சந்தேகங்கள் இல்லை, உங்கள் புரிதலில் நீங்கள் உறுதியாகிவிட்டீர்கள், பின்னர் இந்த நுண்ணறிவை முழுமையான நம்பிக்கையுடன் ஒருங்கிணைக்க நீங்கள் தியானிக்கலாம். இல்லையெனில், உங்கள் தியானம் அவ்வளவு உறுதியானதாக இருக்காது. நிச்சயமாக, நீங்கள் இங்கு ஒருவருக்கொருவர் முறையாக விவாதிக்கக்கூடாது, ஆனால் பெருமை அல்லது ஆணவம் இல்லாமல், தற்காப்பு இல்லாமல், மற்றவர் நம்மை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார் என்று நினைக்காமல் போதனைகள் பற்றி விவாதிப்பது மிகவும் நல்லது.
"ஒரு உண்மையை உண்மை என்று நம்புவது" மற்றும் "உறுதியான நம்பிக்கை" இரண்டும் பௌத்ததின் தொழில்நுட்ப சொற்கள். நாம் உண்மை என்று நம்பும் ஏதோ ஒன்று தவறானதாக இருக்கலாம், ஆகவே, போதனைகளை ஆராய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டும், நமக்கு சரியான புரிதல் இல்லாத போது சரியான புரிதலைக் கொண்டிருக்கிறோம் என்கிற முடிவுக்கு வரக்கூடாது. உறுதியான நம்பிக்கை என்பது நம்முடைய நம்பிக்கையை முற்றிலுமாக சிதைக்க முடியாது என்று நாம் உறுதியாக நம்பும்போதுதான், இதைத்தான் நாம் உண்மையில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
போய்க்கொண்டே இருங்கள்
இவை அனைத்தும் பிடிவாதமாகவும் நெருக்கமான மனநிலையிலும் சிதைந்து போகக்கூடும். நமக்கு தவறான புரிதல் உள்ளது, நம்மை யாரும் திருத்த முடியாத அளவிற்கு பிடிவாதமாக இருக்கிறோம் - இது சில நேரங்களில் "தவறான பார்வை" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. நாம் எதையாவது தவறாக புரிந்து வைத்திருக்கிறோம், அந்தக் கருத்திலேயே மிகவும் பிடிவாதமாக இருந்து கொண்டு, விரோதமாக இருக்கிறோம், வேறு ஏதாவது சொல்ல முயற்சிப்பவர்களை எதிர்க்கிறோம்.
நாங்கள் புத்தர்களாகும் வரை, விஷயங்களை மேலும் மேலும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, “நீங்கள் புத்தராகும் வரை நீங்கள் எப்போதும் ஆழமாகச் செல்லலாம், எப்போதும் உயர்ந்ததை அடையலாம், ஏனெனில் உங்கள் புரிதலின் அளவிலும், உங்கள் சாதனையின் அளவிலும் ஒருபோதும் திருப்தி அடைய வேண்டாம்” என்று நமக்கு எப்போதும் கூறப்படுகிறது. ஆகவே, நமக்கு சரியான புரிதல் இருந்தாலும் கூட, அது ஆழமான புரிதலாக இருக்காது. புனிதர் தலாய் லாமாவின் ஆசிரியர்களில் ஒருவரான திரிஜாங் ரின்போச்சே, “நான் லாம்-ரிம் சென்-மோவை (சோங்க்காபா எழுதிய பாதையின் தரப்படுத்தப்பட்ட நிலைகளின் பிரம்மாண்ட விளக்கம் - ஒரு அடிப்படை மற்றும் பெரிய உரை) நூறு முறைகள் படித்தேன், ஒவ்வொரு முறையும் நான் அதைப் படிக்கும்போது, வித்தியாசமான மற்றும் ஆழமான புரிதலைப் பெற்றேன்”. தொடங்குவதற்கு சரியான புரிதல் கிடைத்தாலும், நாம் மேலும் மேலும் ஆழமாகச் செல்ல வேண்டியது எப்படி என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மரண தியானம்
மரண தியானத்தைப் பொறுத்தவரை நாம் இப்போது நான்கு புள்ளிகளைப் பார்க்கலாம், அவை எதைக் குறிக்கின்றன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டும் இருக்கிறது. நிச்சயமாக, மரணம் மற்றும் மரண தியானம் குறித்த போதனைகளைப் பெற்ற பின்னரே இதைச் செய்வோம். மரணத்தைப் பார்க்கும்போது, நாம் செயலாற்ற வேண்டிய மூன்று அடிப்படை உண்மைகள் உள்ளன:
- மரணம் தவிர்க்க முடியாதது.
- மரணிக்கும் நேரம் நிச்சயமற்றது.
- இறக்கும் போது, தர்மத்தைத் தவிர வேறு எதுவும் உதவாது
நாம் அனைவருமே இறக்கப்போகிறோம். இது தவிர்க்க முடியாதது - நான், நீங்கள், நாம் தனிப்பட்ட முறையில் தெரிந்த அனைவரும், மற்றவர்களும் கூட. மரணம் எப்போது தாக்குகிறது என்பதும் நமக்குத் தெரியாது, நாம் இறக்கும் போது, நாம் கட்டியெழுப்பிய நேர்மறையான பழக்கங்கள் மற்றும் நமது மன தொடர்ச்சியின் ஒரு பகுதியாக்கி இருப்பதைத் தவிர வேறு எதுவும் உதவப் போவதில்லை.
மரணம் தவிர்க்க முடியாதது, ஆனால் இது எதைச் சார்ந்தது (சார்பிற்கான கோட்பாடு)? இதை நாம் பல நிலைகளில் பகுப்பாய்வு செய்யலாம். முதலாவதாக, மரணம் வாழ்க்கையைப் பொறுத்தது. உயிருடன் இல்லாமல், நீங்கள் இறக்க முடியாது. ஒவ்வொரு நாளும், நாம் வயது மூப்பு அடைகிறோம், ஆரம்பத்தில் மிகவும் வலுவாக இருந்த நம் உடல்கள் பலவீனமாகின்றன. எனவே மரணம் என்பது உடல் நோய்வாய்ப்படுதல், ஒரு காரில் அடிபடுதல் உள்ளிட்ட பலவற்றைச் சார்ந்தது.
இறப்பை பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?
சார்புநிலையின் இந்த கோட்பாட்டைப் பற்றி ஆழமான அளவில் கருத்தில் கொள்ள, மரண தியானத்திற்கு முன் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் அற்புதமான, விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையைக் கொண்டிருக்கிறோம். மரணத்தின் விழிப்புணர்வு இந்த விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையின் நன்மையை இப்போது பயன்படுத்திக்கொள்ள நம்மை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. நமது வாழ்க்கையையும், நமக்கு நாமே செயலாற்றுவதற்கான வாய்ப்பையும் நாங்கள் பாராட்டவில்லை என்றால், வாழ்க்கையை இழப்பதைப் பற்றி நாம் உண்மையில் சிந்திக்கப் போவதில்லை. ஏனென்றால், “நான் உயிருடன் இருக்கிறேன், ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்வதில் எனது உடலையும் மனதையும் பயன்படுத்த முடியும்” என்று பெரும்பான்மையான மக்கள் பாராட்டுவதில்லை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். எனவே, மரண விழிப்புணர்வு உண்மையில் வாழ்க்கையின் விழிப்புணர்வைப் பொறுத்தது.
இந்த விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை நம்மிடம் உள்ளது என்பதையும், உயிருடன் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்வதிலிருந்து நம்மைத் தடுக்கக்கூடிய மோசமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவதையும் நாம் உணர்கிறோம். பார்க்கும் எவரும் காலால் மிதிக்க நினைக்கும் கரப்பான் பூச்சியாக நாம் பிறக்கவில்லை. ஒரு பெரிய மீனால் உயிருடன் சாப்பிடும் சிறிய மீனாக நாம் பிறக்கவில்லை. நாம் ஒரு பூச்சியாகப் பிறக்கவில்லை. இப்படி யோசித்துப் பாருங்கள், நாம் பூச்சியாகப் பிறந்தால் என்ன செய்ய முடியும் அல்லது சாதிக்க முடியும்? அதிகம் இல்லை, நம் வாழ்நாள் முழுவதும் மலம் மற்றும் குப்பைகளை நோக்கி ஈர்க்கப்பட்டிருப்போம்!
ஆகவே, மரணத்தை அறிந்திருப்பதன் நோக்கம் (செயல்பாட்டின் கோட்பாடு) மனச்சோர்வடைவது மட்டுமல்ல, “ஓ எவ்வளவு கொடுமை! நான் நிச்சயமாக இறக்கப்போகிறேன்!” என்பது விஷயம் அல்ல. செயல்பாடு என்னவென்றால், இப்போது நம்மிடம் உள்ள பொன்னான நேரத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம், ஏனென்றால் அது எப்போது முடிவடையும் என்று நமக்கே தெரியாது. கடந்த வாரம் இருந்த எனது நண்பரைப் போல, அவர் மிகவும் ஆரோக்கியமானவர், குறிப்பாக வயதானவர் அல்ல. அவர் புகைக்கவோ அல்லது மது அருந்தவோ மாட்டார், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை, ஏராளமான உடற்பயிற்சி செய்தார், அவர் ஒரு தீவிர தியானி மற்றும் பயிற்சியாளர். கடந்த வாரம் ஒரு நாள் காலையில், அவர் குளிக்க சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு மிகச் சாதாரணமாக இறந்து போனார்.
இந்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை எப்போது இழப்போம் என்பதில் எந்தவிதமான உறுதியும் இல்லை, மரணம் பொதுவாக எதிர்பாராத விதமாக வரும். நீங்கள் வயதானவராக இருக்கத் தேவையில்லை, இறப்பதற்கு முன்னர் நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கத் தேவையில்லை. எனவே மரணத்தை அறிந்திருப்பதன் முக்கிய நோக்கம் சோம்பல் மற்றும் தள்ளிப்போடுதல் ஆகியவற்றை வெல்வது, நாளை வரை என்று எப்போதும் விஷயங்களைத் தள்ளி வைப்பது. இறந்து போன என்னுடைய நண்பர் ஆலன் ஒரு நல்ல உதாரணத்தை தந்திருக்கிறார். அவரது தாயார் மிகவும் வயதானவர், உடல்நிலை சரி இல்லாதவர், அவருக்கு உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆலன் உதவ விரும்பினார். எனவே அவர் எப்போதும் ஒவ்வொரு வார இறுதியிலும் சென்று தனது தாயை பார்த்துக் கொள்ள உதவுவார் – கடைகளுக்குச் செல்வது உள்ளிட்டவை. தனது தாயார் இறந்தவுடன், அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, முதலில் தூய்மைபடுத்தலுக்கான பின்னடைவிற்காக ஒரு வருட வஜ்ரசத்வாவும், பின்னர் சில நீண்ட பின்வாங்கல்களையும் செய்யப்போவதாக எப்போதும் கூறினார். இதுவே அவரது நோக்கமாக இருந்தது.
நான் ஏற்கனவே சொன்னது போல, அவர் மிகவும் தீவிரமான பயிற்சியாளர், ஆனால் அவர் ஒருபோதும் தியானத்தை விட்டுச் செல்லவில்லை, ஏனென்றால் அவர் தனது தாய்க்கு உதவி செய்ய விரும்புவதால் அவர் வேலை செய்ய வேண்டியிருந்தது. அவர் தனது தாய்க்கு உதவ தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டுமா, அல்லது அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது மற்றவர்கள் தாயை கவனித்துக் கொள்ளட்டும் என்று பின்வாங்கினாரா? தர்மம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது? மரணம் குறித்த போதனைகள் நம்மை என்ன செய்ய தூண்டுகின்றன? அந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்வேன்? என்று சிந்திப்பது நல்லது.
குறுகிய பின்வாங்கல்களைச் செய்யவும், அதே சமயம் உங்களுடைய தாய்க்கு உதவவும் ஒரு திட்டம் இருக்கிறது. பின்வாங்கல்கள் முழு நேர செயல்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை – நாம் காலை மற்றும் மாலை அமர்வாக செய்யலாம், பகல் பொழுதில் நாம் யாரை பராமரிக்க வேண்டும் அதனை செய்யலாம். பின்வாங்குதலைச் செய்தல் நல்லது, ஆனால் போதனைகள் எப்போதுமே எல்லா உயிரினங்களின் அன்பையும் திருப்பித் தருவது முக்கியம் என்று கூறுகின்றன, குறிப்பாக நமக்கு உண்மையிலேயே உயிரைக் கொடுத்த தாய். உங்கள் பெற்றோரை நீங்கள் கவனித்துக் கொள்ளும்போது, குறிப்பாக மனக்கசப்பு இல்லாமல், "அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார்கள், ஏனெனில் நான் என் வேலையை வெறுக்கிறேன், நான் ஓய்வு பெற விரும்புகிறேன்" என்று நீங்கள் பெருமளவு நேர்மறையான திறனை வளர்த்துக் கொள்கிறீர்கள். பெற்றோரைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றால், நிச்சயமாக நம் வாழ்க்கையை நம்மால் முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும், திபெத்திய லாமாக்கள் மேற்கத்திய தர்ம மாணவர்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் நம்மில் பலருக்கு உண்மையில் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பும் இல்லை மற்றும் பல திபெத்தியர்கள் வைத்திருக்கும் அதன் மதிப்பின் உண்மையான பாராட்டும் இல்லை. மேற்கத்தியர்கள் பெரும்பாலும் தங்கள் மனப்பான்மையுடன் மிகவும் நிதானமாக இருக்கிறார்கள், "நான் இன்று சோர்வாக இருக்கிறேன், அடுத்த முறை அந்த போதனைக்குச் செல்வேன்" என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம் உண்மையிலேயே தீவிரமாக இருந்திருந்தால், மரணம் பற்றிய விழிப்புணர்வும், நம்மிடம் உள்ள இந்த விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையும் இருந்தால், அது நாம் எப்படி உணர்ந்தாலும், கிடைக்கும் ஒவ்வொரு நாளும் போதனைகளுக்குச் செல்ல வைக்கும்.
இறப்பு வந்து கொண்டிருக்கிறது: நிதானம்!
நம்முடைய விலைமதிப்பில்லாத வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது. அது எப்போது என்று நமக்கு தெரியாது. குளித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விழலாம்; பேருந்து நம்மை மோதலாம். நாம் நம்முடைய வாழ்வை பாழாக்க விரும்பவில்லை. மரணம் பற்றிய விழிப்புணர்வு சோம்பேறித்தனத்தை வெல்ல உதவுவதோடு, நமக்கு இருக்கும் எல்லா வாய்ப்புகளின் முழு நன்மையையும் எடுத்துக்கொள்ள நம்மை அனுமதிக்கிறது. ஆனால் இவ்வாறு செய்யும் போது, அழுத்தத்துடனோ அல்லது பதற்றத்துடனோ இல்லாமல் இருப்பது முக்கியம். நாம் பெரும்பாலும் முக்கியமற்ற, அற்பமான விஷயங்களுக்காக மிகுந்த பதற்றப்படுகிறோம், அழுத்தத்திற்கு ஆளாகிறோம், நாங்கள் தர்மத்தோடு கடினமாக இருக்கிறோம். நம்முடைய பயிற்சியில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும், ஆனால் ஒரு நிதானமான வழியில் - இதற்கு சோம்பேறி என்று அர்த்தமல்ல. நீங்கள் நேர்மறையான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளும்போது, மரணத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது, ஏனென்றால் அந்த பழக்கங்கள் உங்களுக்கு உதவும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இறப்பு என்பது வாழ்வின் தர்க்க ரீதியிலான முடிவு
நமது கற்றல், புத்தர் போதித்ததுடன் (காரணத்திற்கான கோட்பாடு) ஒத்துப் போகின்றனவா என்பதை ஒரு சில காரணங்களால் நிறுவுகிறோம். இதைச் செய்ய நாம் வழக்கமாக சில போதனைகளைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது தெரிந்து கொள்ள ஏராளமான பௌத்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். பௌத்த போதனைகள் நிலையாமையைப் பற்றி பேசுகின்றன, எனவே புத்தர் என்ன போதித்தாரோ அதனுடன் இவை ஒத்துப்போகின்றன.
இது தர்க்கரீதியானதா? ஆம், ஒவ்வொரு நாளும் நாம் மரணத்தை நெருங்குகிறோம். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஆட்டம் முடிந்து போகிறது. மரணம் வரப்போவது நிச்சயம், ஏனெனில் மரணம் நிகழும் போது அதனை புறந்தள்ளுவதற்கான எந்த சூழலும் இல்லை. நம்முடைய வாழ்நாள் நீட்டிக்கப்படுவதில்லை, எஞ்சிய நம்முடைய வாழ்நாளானது ஒவ்வொரு நாளும், நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி குறைகிறது. இதற்காக உண்மையில் உணர்ச்சி ரீதியில் ஆழமாக மூழ்கினால், ஆழ்ந்த நிலையில், மனக்குழப்பம் இன்றி சிந்திக்க முடியும். உயிருடன் இருக்கும் போது தர்மத்தை கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்காமல் இருந்தாலும் நாம் மரித்துபோகலாம். உயிருடன் இருக்கும் போது வாழாதவர்கள் ஏற்கனவே மரணித்தவர்கள்தாம்.
பலன் தரும் முடிவுகள்
முடிவு எப்படி இருக்கும்? மரணம் வரப்போகிறது என்று நாம் உண்மையில் நம்பினால், விலைமதிப்பில்லாத மனித வாழ்வில், சோம்பலைக் குறைத்து, நமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்வோம். இது நம்முடைய சொந்த அனுபவத்தில் இதை உணர முடியும்.
பொருட்களின் இயல்பு மற்றும் உயிருடன் இருக்கும் அனைத்தும் இறக்கப்போகின்றன என்பதை குறிக்கிறது நான்காவது கோட்பாடு. இப்படித்தான் இருக்கும், இதுதான் உண்மை என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்த உதாரணத்தின் மூலம் நம்முடைய சொந்த அனுபவத்தோடு தொடர்புடைய இந்த நான்கு கோட்பாடுகளை நாம் எவ்வாறு பயன்படுத்தி, போதனைகளை ஆராயப்போகிறோம் என்பதைப் பார்க்கலாம். இது ஒரு நடந்து கொண்டிருக்கும் செயல்முறை, இதற்காக ஏராளமாக செயலாற்றினால் 100% நம்பலாம், மேலும் அதனை நம்முடைய வாழ்வோடு ஒருங்கிணைக்கலாம். அறிவுசார்ந்து நம்புவது எளிது, ஆனால் உணர்ச்சி ரீதியில் நம்பகத்தன்மை அடைவது மிகக் கடினம். மனமும் உடலும் கூட வித்தியாசமானவை – உதாரணத்திற்கு என்னுடைய நண்பரின் இறப்பை பொறுத்தவரையில், உணர்ச்சி, மனதளவில், அமைதியடைந்துவிட்டதாக உணரலாம், ஆனால் என்னுடைய உடல் அதிக சக்தியை இழந்ததாக உணர்கிறது.
எனவே உடல் ரீதியில் சோகம் இருக்கிறது, ஏனெனில் அந்த உணர்வை உடல் அளவில் பெறுவது கடினம் “எல்லோருமே இறக்கப்போகிறார்கள்.” நேரத்திற்கு நேரம் சோகம் மனதளவில் எழுகிறது ஏனெனில் அது இயற்கையானது. நாம் புத்தர்களல்ல; நாம் விடுதலை பெற்ற உயிர்கல்ல. நாம் எல்லா தொந்தரவான உணர்ச்சிகள் அல்லது துன்பங்களில் இருந்து இன்னும் விடுபடவில்லை. ஆனால் நம்முடைய இலக்கு அது தான்.
சுருக்கம்
விடுதலை மற்றும் ஞானமடைதல் என்றால் என்ன என்று ஒருதரம் நாம் அறிந்து கொண்டால், நம்மால் நமது இலக்கை நிர்ணயிக்க முடியும். நாம் செயலாற்றினால் உண்மையில் என்ன விரும்புகிறோம், நாம் படிகளை ஏறி அந்த நிலையை அடைய செயலாற்ற முடியும். நாம் செய்யும் செயல்களில் நிலைத்தன்மையை பெற நான்கு கோட்பாடுகள் பயனுள்ள வகையில் நமக்கு உதவும்.
நாம் இறப்பிற்காக தியானித்தால், நிஜத்தில் எல்லோருமே இறக்கப்போகிறோம் என்ற புரிதல் வரும், அது எப்போது நிகழும் என்று யாருக்குமே திட்டம் இல்லை, உண்மையிலேயே நடக்கும் விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள் நாம் தூண்டப்படுகிறோம். இறப்பு பற்றிய விழிப்புணர்வு நம்பமுடியாத மாற்றத்தை நமக்குள் கொண்டு வரும், இதனால் சோம்பேறித்தனமோ அல்லது அழுத்தமோ சூழ்வதை அது அசாத்தியமாக்குகிறது.