தர்ம போதனைகளை கேட்டல்

தியானம் என்ன செய்கிறது?

தியானம் என்பது நம் வாழ்க்கையை மாற்றுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு முறையாகும். எப்படி? நம் வாழ்க்கை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் பாதிக்கப்படும், நமது ஆளுமை மற்றும் மனநிலைகளால் நம் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நாம் வாழ்க்கை பற்றி ஏதேனும் அனுபவத்தை கொண்டிருந்தால், வேலை, செல்வம் மற்றும் நண்பர்கள் போன்ற வெளிப்புற விஷயங்களில் மாற்றங்கள் இருந்தபோதிலும், நம் மனப்பான்மையும் மனநிலையும் ஒரே மாதிரியாக இருந்தால், நமக்கு எப்போதும் ஒரே மாதிரியான பிரச்னைகள் தான் என்பதை நாம் அறிவோம். நாம் எத்தனை நண்பர்களைக் கொண்டிருந்தாலும், நாம் இன்னும் பாதுகாப்பற்றதாக உணர முடியும். நாம் உண்மையிலேயே செல்வந்தர்களாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் இன்னும் கோபமாகவும் விரக்தியுடனுமே இருப்போம். நம்முடைய வெளிப்புற சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் இந்த வகையான விஷயங்கள் மாறாது.

இந்த இடத்தில் தான் தியானம் உதவுகிறது, ஏனெனில் நம்முடைய வாழ்க்கைத் தரத்தில் உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதற்கு, நாம் நம்முடைய மனதோடு மேலும் செயலாற்ற வேண்டும். இது வெறுமனே அறிவார்ந்த குணங்களை மட்டுமோ அல்லது ஒருமுகப்படுத்தலை மேம்படுத்துதலையோ மற்றும் சோம்பேறித்தனத்தை போக்குதலை மட்டுமோ குறிப்பிடுவதில்லை. இவையாவும் நாம் செயலாற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான், ஆனால் நம்முடைய உணர்ச்சி சூழலில் நாம் மேலும் ஆழமாக செல்ல வேண்டும் : நம்முடைய அடிப்படை பாதுகாப்பின்மை மற்றும் வாழ்க்கை பற்றியே குழப்பமே இங்கே குறிப்பிடப்படுகிறது. 

பௌத்த கருத்தாக்கத்தில் தியானம்

தற்போது, பௌத்தம் மட்டுமின்றி பல்வேறு வேறுபட்ட முறைகளினாலும் தியானத்தை அறிய முடிகிறது. பௌத்த கருத்தாக்கத்தில், தியானம் என்பதற்கு நேர்மறையான மன நிலையை திரும்பத் திரும்ப செய்யும் முறையின் மூலம் பெறுதலாகும். இது ஒரு தடகளப் பயிற்சி அல்லது ஒரு இசைக்கருவியைக் கற்பதைப் போன்றதே, நாம் அவற்றை திரும்பத் திரும்ப முயற்சித்துப் பார்க்க வேண்டும்; ஆனால் தியானத்தில் நாம் அதை உருவாக்குவதன் மூலம் ஒரு நேர்மறையான மனநிலையுடன் நம்மை அறிமுகம் செய்கிறோம். ஆரம்பத்தில் அது கட்டாயமாகவும் செயற்கையாகவும் உணரப்படும், ஆனால் காலப்போக்கில் அது மனதின் நிலையை நாம் நன்கு அறிந்திருக்கிறோம், அது உண்மையில் நமக்கு ஒரு இயல்பான அங்கமாக மாறும்.

இந்த வகையில் ஏதாவது உருவாக்கப்படுவதால், அதில் பொருத்தமற்றது எதுவும் இல்லை என்று அர்த்தமல்ல. நாங்கள் ஒரு புதிய மனநிலையை உருவாக்க முயற்சிக்கிறோம் என்றால், அது இயற்கையானது அல்ல என்று நாம் நினைக்கக்கூடாது. தங்களை மாற்ற முயற்சிக்காமல், இயற்கையாக நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதே சிறந்தது என்று ஏராளமான மக்கள் சிந்திக்கின்றனர். ஆனால் நாம் இயற்கையான நிலையிலேயே இருந்தால், முழுக்கால் சட்டையிலேயே தான் இப்போதும் இயற்கை உபாதைகளைக் கழிப்போம். ஆனால் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முறைகளைப் பயிற்சித்திருக்கிறோம். நம்மால் முடியும் இதையே நாம் மனதிற்கும் செய்து பார்க்கலாம்.  

நாம் இயல்பாகவே இருக்கலாம் ஏனெனில் அப்போதும்  எல்லாமே சிறப்பாக இருக்கும் என்ற வாதத்தை நாம் பயன்படுத்த முடியாது. இயல்பாகவே இருப்பதனால் எப்போதுமே முடிவு சிறந்ததாக இருக்காது. ஒரு குழந்தை அழுதால் அதற்காக நாம் பொறுமை இழந்து, இயல்பில் உணர்வது போல அந்தக் குழந்தையை அடித்தால் அழுகை நின்றுவிடும் என்று நினைப்பதைப் போன்றது; நல்லது, அது ஒன்றும் பெரியதல்ல, இல்லையா? குழந்தையை அடிப்பது இயல்பாகவே இருந்தாலும், அது நள்ளிரவில் அழத் தொடங்கும் போது வரும் முதல் எண்ணமாக இருக்கலாம் என்றாலும், அவ்வாறு செயல்படுவது சரியான வழி அல்ல என்பதை நாம் அறிவோம்.

எனவே நம்மிடம் தியானம் உள்ளது, பௌத்த மத ஆய்வு மற்றும் நடைமுறையில் நம்பமுடியாத முக்கிய பங்கை தியானம் வகிக்கிறது. படிப்பும் தியானமும் இரண்டு தனித்தனி விஷயங்கள் என்று பெரும்பாலானவர்கள் தவறாக நினைக்கிறார்கள், ஆனால் பௌத்த போதனைகளில் அது அப்படியல்ல.

நன்மை தரும் பழக்கங்களை உருவாக்குதல்

நன்மை பயக்கும் பழக்கங்களை வளர்ப்பதற்கு, அவை என்ன என்பதை நாம் படிக்க வேண்டும், ஆனால் இந்த கற்றல் அதற்குள்ளாகவே இருக்கும் ஒரு முடிவல்ல. நாம் அதனை ஒன்றிணைத்து நம்முடைய ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும், அதைத்தான் தியானம் செய்கிறது. எதையாவது நம் வாய்க்குள் வைக்காவிட்டால், அதை மெல்லவும் முடியாது, அவற்றை ஜீரணிக்கவும் முடியாது, அதே போலத் தான் போதனைகளை நம் மனதில் வைத்து அவற்றைப் பற்றி சிந்திக்காவிட்டால், அவற்றை தியானத்தின் மூலம் ஜீரணிக்க எந்த வழியும் இல்லை. உணவைப் பொருத்தவரையில், மென்று துப்புவதில் எந்தப் பலனும் இல்லை. உணவின் பயனை அடைய அதனை விழுங்கி ஜீரணிக்க வேண்டும்.  

நாம் எவ்வாறு தியானிக்கத் தொடங்குவது? நாம் ஏற்கனவே பார்த்தது போல, தியானம் என்பது மூன்று நிலைகளாலான மூன்று பகுதி செயல்முறை. இந்த முறையிலான வடிவத்தை இந்து பாரம்பரிய உபநிஷதங்களில் இருப்பது போல அனைத்து இந்திய முறைகளிலும் காணலாம். பௌத்தத்தில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான முறைகள் பல்வேறு பாரம்பரிய இந்திய அமைப்புகளுடன் பொதுவானவை என்பதால் பலரும் பாராட்டுவதில்லை. ஆனால் முறைகள் பொதுவானதாக இருந்தாலும், பௌத்தத்திற்கு தனித்துவமானது என்னவென்றால்: நமது நோக்கம் என்ன? யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதல் என்ன? நமது உந்துதல் என்ன?

அந்த மூன்று பாகங்கள் என்பவை கேட்டல், சிந்தித்தல் அல்லது ஆழ்ந்து நினைத்தல், பின்னர் தியானித்தல். நாம் ஒரு பௌத்த கருத்தாக்கத்தில் தியானத்தை பயிற்சி செய்கிறோம் என்றால், பௌத்த போதனைகளை ஜீரணிக்க அவற்றைப் பயன்படுத்துகிறோம்.

போதனைகளைக் கேட்டல்

முதல் பகுதியை நாம் "கேட்டல்" என்று ஏன் அழைக்கிறோம்? முதலாவதாக, புத்தரின் காலத்தில், போதனைகள் எதுவும் எழுதப்படவில்லை, எனவே நீங்கள் அவற்றைக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரே வழி, யாரோ அவர்களின் நினைவிலிருப்பவற்றை விளக்க நாம் கேட்பது மட்டுமே. இப்போதெல்லாம், நாம் போதனைகள் அனைத்தையும் படிக்க முடியும், எனவே அவற்றைக் கேட்பதில் ஏதேனும் நன்மை உண்டா? ஆம், நன்மை என்னவென்றால், இது ஒரு உயிருள்ள ஆசிரியருடன் எங்களுக்கு நேரடி தொடர்பை அளிக்கிறது, அவர் மாணவர்கள் புரிந்து கொள்ள  வேண்டும் என்று விரும்புகிறார். அவர்களால் பல்வேறு வழிகளில் விஷயங்களை விளக்க முடியும், உங்களுக்கு கேள்விகள் இருந்தால் அதனைக் கேட்கலாம், புத்தகத்தைப் போல அதில் இருப்பவற்றை மட்டும் படிக்க வேண்டியதில்லை. 

கேட்டலில் உள்ள குறைபாடு என்னவென்றால், நீங்கள் கவனிக்காவிட்டால், உங்களால் ஒரு பக்கத்தைத் தவிர்க்கவோ அல்லது முன்னோக்கிச் செலுத்தியோ பார்க்க முடியாது. நீங்கள் ஒரு பெரிய கூட்டத்தில் இருந்தால், நீங்கள் கவனிக்காத ஒரே காரணத்திற்காக ஆசிரியரிடம் ஏற்கனவே கூறியதைத் திரும்பக் கூறுமாறு கேட்பது தர்மசங்கடமாக இருக்கும். நீங்கள் பின்னால் உட்கார்ந்திருக்கலாம், அவ்வளவு அவரிடம் போதனை உங்களுக்கு கேட்காமல் இருந்திருக்கலாம். அறை மிகவும் சூடாக இருக்கலாம், நீங்கள் உறங்கி இருக்கலாம். எனவே இதில் தீமைகளும் உள்ளன. ஆனால் நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்று அர்த்தம், இது பௌத்த போதனைகளில் வளர்க்கப்பட வேண்டிய ஒரு குணம். பௌத்த மதத்தைக் கற்றுக்கொள்வதும் பின்பற்றுவதும் ஒரு செயலற்ற முறை அல்ல.

ஒரு ஆசிரியருக்கான வழிமுறைகள் என்றால் உண்மையில் நீங்கள் மாணவருக்காக மிகவும் எளிதாக்கக் கூடாது, முதல் முறையிலேயே விஷயங்களை மிக தெளிவாக விளக்கக்கூடாது. என்னைப் போன்ற சிலருக்கு இது மிகவும் கடினம், ஏனென்றால் நான் மிகவும் தெளிவாக இருக்க விரும்புவேன். நான் மொழிபெயர்ப்பாளராக இருந்தபோது எனது ஆசிரியர் செர்காங் ரின்போச்சின் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக எனக்குக் கற்பித்தார், “தொடக்கத்திலேயே தெளிவாக விளக்க வேண்டாம், ஏனென்றால் உண்மையில் ஆர்வமுள்ளவர்கள் யார்? வேறு சில காரணங்களால் அங்கு இருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் பிரித்தரிய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் அதிக கேள்விகளைக் கேட்பார்கள், மேலும் மாணவர்கள் மேலும் அறிய தங்கள் சொந்த விருப்பத்தை வளர்த்துக் கொள்வது முக்கியம்” என்று அவர் கூறினார்.

ஒரு மாணவராக இருந்தால், ஆசிரியர் தெளிவாக விளக்கவில்லை என்று நீங்கள் குற்றம்சாட்டக் கூடும், எனவே நீங்கள் திரும்பிச்செல்ல விரும்பாமல், ஆசிரியரின் தரம் என்ன என்பதை நீங்கள் ஆராய வேண்டும். ஆசிரியர் உண்மையில் தகுதியற்றவரா மற்றும் தெளிவாக விளக்கத் தெரியாதவரா? இது போன்ற பல உள்ளன. அல்லது விடாமுயற்சியையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ள உங்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர் உங்களுக்கு அனைத்து விவரங்களையும் வேண்டுமென்றே கொடுக்கவில்லையா? கேட்டலின் முழு நோக்கத்திற்கான இரண்டாவது படி, அதாவது போதனைகளைப் பற்றி சிந்தித்தல். ஆசிரியர் உடனடியாக பதிலைக் கொடுக்கவில்லை என்றால் அது மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது முதலில் அதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது, இது போதனைகளை நீங்களே ஆராயும் குணத்தை உருவாக்கும்.

போதனைகளை ஆராய்தல்

போதனைகளை ஆராய்ந்து அவை உங்களுக்கு புரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பாருங்கள், அதன் பின்னர் உங்கள் எண்ணங்களைப் பற்றிய கருத்துகளைப் பெறுங்கள். ஒரு பெரிய குழுவில் இருக்கும் போது இது கடினம், மேலும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உங்கள் ஆசிரியரைப் பார்த்தால் மிகவும் கடினம். இங்கே நான் சீர்மையைப் பற்றி பேசுகிறேன். எப்போதும் ஆசிரியர் இல்லாத பல பௌத்த மையங்களில், நீங்கள் வாசிப்பு மற்றும் கேட்பொலி பொருட்களை நம்பியிருக்க வேண்டும், அதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாகும். இதனை ஒரு நாவல் போலவோ அல்லது கழிப்பறையில் நீங்கள் ஏதோ ஒன்றைப் படிப்பதைப் போல கருதக்கூடாது; நீங்கள் அவற்றை மரியாதைக்குரிய மனநிலையில் படிக்க வேண்டும். நாம் அவற்றை மெல்லப் படித்து அதன் அம்சங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.  நீங்கள் ஆசிரியர் இல்லாத மையத்தில் இருந்தால், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி ஒவ்வொன்றாகப் படித்து விவாதிக்கலாம். சிலருக்கு அதிகமாக புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு நுண்ணறிவை புகட்டலாம். நாம் "வீடற்ற பயிற்சியாளர்களாக" இருந்தால், எந்தவொரு பௌத்த மையத்திற்கும் செல்லாதவர்கள் அல்லது வீடுகளில் நமக்கு அருகில் யாரும் இல்லை என்று உணராதவர்களாக இருந்தால், இணைய வழி பௌத்த கலந்துரையாடல் நமக்கு பொருத்தமானது என்று கருதினால்அந்தக் குழுவில் இணைவது மிகவும் உதவியாக இருக்கும்.

மற்றவர்களுடன் இந்த வகையிலான கலந்துரையாடல் மிகவும் உதவியாக இருக்கும், இல்லையெனில் போதனைகளைக் கற்பதென்பது வெறும் மிகுந்த அறிவுசார்ந்ததாகவே இருக்கும், யதார்த்த வாழ்க்கையை ஒப்பிடாது. நாம் இது குறித்து தீவிரம் கொண்டிருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் சிரிக்காமல் விரைப்பாக உட்கார்ந்திருப்பதல்ல, ஆனால் அதன் உண்மையான அர்த்தம் தர்மம் குறித்து ஆழமாக பேசுதலாகும். யாரேனும் நகைச்சுவையாக ஏதேனும் கூறினாலோ அல்லது தவறாக ஏதேனும் செய்தாலோ சிரிக்கலாம்.  

மேற்கத்திய மக்கள் சிலருக்கு ஒரே நேரத்தில் நிம்மதியாகவும், தீவிரமாகவும் இருப்பது மிகவும் கடினம். போதனைகளை உங்களது வாழ்வில் ஒருங்கிணைக்கிறீர்கள் என்பதற்கான குறியீடு அவை. எல்லாவற்றிற்கும் மேலாக இதன் அடிப்படை நோக்கம் என்பது ஒன்றே ஒன்று தான் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது. நாம் இப்போதும் வழக்கமாக இருப்பது போல நாம் ராணுவத்தில் இருக்கிறோம், அது மகிழ்ச்சியான மனநிலை என்று நினைக்கிறோம். நம்மால் நிறைவாக இருக்க முடியாது என்று அஞ்சுகிறோம் அதனால் தவறு செய்து தண்டனையையோ அல்லது வேறு எதையோ பெறுகிறோம். அது பௌத்தமல்ல! 

தலைகீழான ஜாடி, அழுக்கான ஜாடி, உடைந்த ஜாடி

எனவே, மீண்டும் கேட்டலுக்கு திரும்பிச் செல்வோம். ஒரு ஜாடியைப் போல இருப்பதை தவிர்ப்பதன் அடிப்படையில் போதனைகளை எவ்வாறு கேட்க வேண்டும் என்று நாம் அறிவுரை பெற்றிருக்கிறோம். முதலில், நாம் தலைகீழான ஜாடியைப் போல இருக்கக் கூடாது, ஏனெனில் அதற்குள் எதுவுமே செல்லாது; நமக்கு திறந்த மனதோடு இருக்க வேண்டும். நாம் உடைந்த ஜாடியைப் போல இருக்கக் கூடாது, அங்கு எல்லாமே உள்ளே சென்றாலும் துவாரத்தின் வழியே அனைத்தும் வெளியேறிவிடும். கடைசியாக நாம் அழுக்கான ஜாடி போலவும் இருக்கக் கூடாது, அங்கு முன்கூட்டியே பல உண்ணங்கள் இருப்பதனால் போதனைகள் முற்றிலும் குழம்பிப் போகின்றன.

பௌத்த போதனைகளைக் கேட்கத் தொடங்கினால், உண்மையில் நீங்கள் மற்ற முறைகளோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். “இந்துத்துவம் இதைச் சொல்கிறது, தாவோயிசம் இதைச் சொல்கிறது” என்று நீங்கள் சிந்திக்கலாம். “இரண்டு பொருள்களை ஒப்பிட்டு பார்க்க நீங்கள் முயன்றால், இரண்டைப் பற்றியும் நீங்கள் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை, அதற்கு அர்த்தமே இல்லை” என்று என்னுடைய ஆசிரியர்களில் ஒருவர் அடிக்கடிச் சொல்வார். உங்களுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சும். “நீங்கள் இரண்டு முறைகளையும் அச்சுபிசாமல் உணர்ந்திருந்தால், பின்னர் நீங்கள் எது பயனுள்ளது என்று ஒப்பிடலாம். அப்படியில்லாமல் நீங்கள் பௌத்த போதனைகளை புரிந்துகொள்ளவில்லையென்றால், முதலில் "இது இதுதானா அல்லது அதுதானா" என்ற எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, போதனைகளை அவர்களே கேட்க வேண்டும். இல்லையெனில், உங்கள் முன்நிபந்தனைகளில் சிக்கிக்கொண்டு, இது தவறாக இருக்கலாம் என்று மட்டுமல்ல, பொருத்தமற்றது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

உடைந்த ஜாடி போல இருக்கக் கூடாது என்று அறிவுரை கூறினால், அது நாம் கற்றதை நினைவில் வைக்கக் கூடாது என்பதை குறிப்பிடவில்லை. குறிப்புகள் எடுப்பதை பயனுள்ளதாக பலரும் கண்டிருக்கிறார்கள், அது நல்லது தான் ஆனால் நீங்கள் எடுத்த குறிப்பை பின்னர் திருப்பிப் பார்க்க வேண்டும். நமக்கு நல்ல நினைவுத் திறன் இருக்கிறது, என்றாலும் முக்கியமான அம்சங்களை குறிப்பெடுத்துக் கொள்வது சிறந்த திட்டம். 

மேற்கில் இருக்கும் உளவியல் சிந்தனைகளைப் பார்ப்பது சுவாரஸ்யமானது, நாம் தேர்வு எழுதப் போகிறோம், ஆனால் கற்பதற்கு எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்பதை கற்று வைத்திருக்கிறோம். நம்மால் ஏமாற்ற முடியும் என்றால், ஏன் செய்யக் கூடாது? ஆனால் அது இங்கே கைகொடுக்காது. இங்கு தேர்வோ அல்லது நற்சான்றிதழோ அல்லது ஆசிரியரின் ஒப்புதலோ இல்லை. மொத்த அம்சமுமே நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம், புத்தர் போதித்த ஏதோ ஒன்று அது – உண்மையில் நமக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தால் – மற்றவர்களுக்கு பயன்தருவதற்காக. மற்றவர்களுடன் எந்த போட்டியும் இல்லை, நாம் இந்த போதனைகளை நமக்கானதாக மட்டுமே சிந்திக்க வேண்டும். “அவர் கோபமாக இருக்கிறார், எனக்கு இல்லை” என்றெல்லாம் சிந்திக்கக் கூடாது. தர்மத்தின் கண்ணாடி என்பது உங்களை நீங்களே பார்ப்பது, வெளியே இருப்பதை பார்ப்பதல்ல. 

மருத்துவத்துடனான ஒப்பீடு

போதனைகளை எவ்வாறு கேட்பது என்பதற்கான மற்றொரு வழிமுறை உங்களை நோயாளியாக நினைத்துக் கொள்ளுங்கள், புத்தர் மற்றும் ஆசிரியர்களே மருத்துவர்கள் மேலும் புத்தரின் போதனைகளே மருந்து. அதிகம் உணர்ந்தவர்களை நாம் செவிலியர்களாகக் கூட பார்க்கலாம் ஏனெனில் அவர்களும் நமக்கு உதவுவார்கள். இதைவிட எளிதாகச் சொல்வதானால், “எனக்கு பிரச்னை இருக்கிறது” என்ற அடையாளத்துடன் நாம் பௌத்த பயிற்சிக்குள் நுழைகிறோம். நமக்கு வியாதி இருக்கிறது, அது நம்முடைய சுயநலமோ அல்லது கோபமோ, எதுவாக இருந்தாலும் நாம் அதில் இருந்து நிவாரணம் பெற விரும்புகிறோம். புத்தர் தான் முதன்மை மருத்துவர், நான் இந்த அற்புதமான மருந்தைப் பெறப் போகிறேன், அதுபற்றி மறந்து போக மட்டுமல்ல, ஆனால் நான் அவற்றை வழிமுறைகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப் போகிறேன்.  நான் ஒரு நாளைக் கூட தவறவிடாமல் இருக்க முயற்சிக்கிறேன், மேலும் ஒட்டுமொத்த குடுவையில் இருக்கும் மருந்தையும் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பௌத்தத்தை பயிற்சிப்பது என்பது சற்றே உயிர் எதிரியை எடுத்துக்கொள்வதைப் போன்றது தான்! நீங்கள் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பாதியிலேயே நிறுத்திவிட்டாலோ அல்லது எடுத்துக்கொள்ள வேண்டிய நாட்களை தவிர்த்தாலோ அது அந்த அளவிற்கு பயன் தராது. பௌத்தத்தை மருத்துவச் சூழலில் பார்ப்பதற்கான ஒரு வழிமுறை இதுவாகும்.

மற்றொரு வழிமுறையானது நாம் போதனைகளை பெற்றுவிட்டோம், நாம் ஒரு புனிதமான நிலத்தில் இருப்பதாக கற்பனை செய்யலாம், அங்கு ஆசிரியர் புத்தர் மேலும் நாம் தூய்மையான போதனைகளைப் பெறகிறோம். அந்த ஆசிரியர் புத்தர் தான் என்று நாம் அர்த்தம் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை, மாறாக அவர்களிடத்தும், நம்மிடத்துமே மற்றும் போதனைகளிலும் மாரியாதை உணர்வை கொண்டிருக்கலாம்.  நாம் ஏதோ ஒன்றை தீவிரமாகச் செய்கிறோம், அதற்காக நாம் சோகமான முகத்தோடு அமர்ந்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, ஆனால் நாம் சூடான காற்றோட்டம் இல்லாத அறையை தவிர்த்து திறந்த மனதோடு நமக்கு என்ன கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்தலாம். 

திறந்த மனதோடு இருத்தல்

போதனைகளை நாம் தங்கம் வாங்கும் போது பகுப்பாய்வு செய்வது போல செய்ய வேண்டும் என்று புத்தர் உறுதியாகச் சொல்கிறார். நாம் எதையும் எடுத்த எடுப்பில் நம்புவதில்லை, அவர்கள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே அது நடக்கும். இதற்கு நமக்கு திறந்த மனம் தேவை, அதே போன்று ஊகமாக புத்தர் ஏதோ முட்டாள்தனமானவற்றை கேளிக்கைக்காக கற்றுத்தரவில்லை. அது போன்ற மனமிருந்தால், போதனைகள் என்ன அர்த்தப்படுத்துகின்றன என்பதை நாம் பகுப்பாய்ந்து பார்க்கலாம். பின்னர் நாம் சரியானவை மற்றும் பயனுள்ளவற்றை கண்டறிந்து தழுவ முடியும். கடந்த மற்றும் நிகழ்காலம் பற்றி ஊகங்களை நான் உதாரணமாகச் சொல்கிறேன். 

நான் ஒரு அச்சு அசல் மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தேன், பௌத்தத்தை முதலில் படிக்கத் தொடங்கும் போது நான் கடந்த மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை எனக்கு இல்லை. இது மேற்கில் பெரும்பாலான மக்களின் சிந்தனைக்கு அந்நியமானது; அவர்கள் ஒரு பிற்பட்ட வாழ்க்கையைப் பற்றி நினைத்தால், அது பெரும்பாலும் கிறிஸ்தவ சொர்க்கத்திலோ அல்லது நரகமாகவோ இருக்கலாம். ஆனால் எல்லோரும் முந்தைய வாழ்க்கையில் எனது தாயாக இருந்ததாக நினைப்பது அனைத்தும் போதனைகளில் உள்ளது, எனவே நீங்கள் அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீச முடியாது.

ஆரம்பத்தில் நான் இதை அணுகிய விதம், “இப்போது எனக்கு அது புரியவில்லை என்றாலும் மறுபிறப்பு குறித்த இந்த யோசனை சரியானது என்று நான் கருதினேன். நான் இதைப் பற்றி சாக்குப்போக்கு கூறவோ அல்லது கம்பளத்தின் கீழ் சறுக்கவோ போவதில்லை, ஆனால் அதை முயற்சிக்கவும் புரிந்துகொள்ளவும் என் நேரத்தை எடுத்துக் கொண்டேன்”. காலப்போக்கில், மறுபிறப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அனைத்தும் உண்மையில் நன்மை பயக்கும் மற்றும் சரியானவை என்பதை நான் கண்டேன், எனவே மறுபிறப்பு பற்றிய யோசனை உண்மையாகவும் இருக்கலாம்.

புத்தரின் போதனைகள் என்ன வலியுறுத்துகின்றன மறுபிறவி என்ன என்பது பற்றி உங்களுக்குத் தெரியாதபோது, மறுபிறப்பை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது என்பதை நீங்கள் பின்னர் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அந்த ஆழமான நிலைக்குச் செல்ல வேண்டும், அங்கிருந்து, நரகம் மற்றும் பேய் பகுதிகள் மற்றும் பலவற்றைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். மனதின் தன்மையை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவை எதுவுமே எந்த அர்த்தத்தையும் கொடுக்காது. ஆகவே, போதனைகளின் ஒரு பகுதியை உடனடியாக நிராகரிக்காமல் இருப்பது முக்கியம், ஏனென்றால் நமக்கு புரியவில்லை அல்லது அது மிகவும் விசித்திரமாக தெரிகிறது. திறந்த மனதுடன் இருப்பதும், இந்த பாகுபாடான விழிப்புணர்வைக் கொண்டிருப்பதுமே அதன் பொருள்: “ஆம், இதுதான் புத்தர் கற்பித்தார். புத்தர் மறுபிறப்பு பற்றி கற்பித்தார். மன்னிக்கவும், எனக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அது அங்கே இருக்கிறது, நான் பௌத்த மதத்தில் மேலும் ஆழமாக செல்ல விரும்பினால் அதைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ”

சுருக்கம்

பௌத்த நூல்களில் நாம் காணும் அறிவுரைகள் பௌத்தத்தைப் படிக்கும்போது மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையிலும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு அழுக்கு அல்லது விரிசல் ஜாடியைப் போல இருப்பது ஒருபோதும் நல்லதல்ல! பௌத்தத்தை நம் வாழ்வில் பயன்படுத்துவது ஒரு செயலூக்கமான செயல்முறையாகும், இது கேட்பதில் இருந்து தொடங்குகிறது. இதைச் செய்தவுடன், நாம் ஒரு வைர மோதிரத்தை வாங்குவதைப் போலவே, போதனைகளை உண்மையிலேயே ஆராயலாம், நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத அந்த தலைப்புகளுக்கு மனதை திறந்து வைத்திருங்கள்.

Top