பௌத்த கருத்தாக்கத்தில் தியானம் பற்றி பேசுவதென்பது, நாம் அரிதான குறிப்பிட்ட ஒன்றை பற்றிப் பேசுகிறோம். இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லா வகையான இடங்களிலும் அடிக்கடி கேட்கும் வார்த்தை “தியானம்”, ஏனெனில் இது அதற்கு ஒரு நற்பெயர் உள்ளது, மேலும் பலர் இதனை சோர்வை நீக்கும் மருந்தாகக் கருதுகின்றனர். எவ்வாறாயினும்; உண்மையில் தியானப்பயிற்சிக்கு செல்பவர்களில், பெரும்பாலானோருக்கு தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற புரிதல் இல்லை. அப்படியே புரிதல் இருந்தாலும் நாம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்: ஆனால் அதன் பின் என்ன? இது சுவாசத்தில் கவனம் செலுத்தி கனிவான சிந்தனைகளைக் கொண்டிருப்பதற்கு மேலானதா?
சமஸ்கிருதத்தில் தியானம் என்ற சொல்லுக்கு எதையாவது உண்மையில் யதார்த்தமாக்குவது என்ற அர்த்தம் உள்ளது. திபெத்தியர்கள் இந்த வார்த்தைக்கு ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை கட்டமைப்பது என்று அர்த்தம் கொண்டுள்ளனர். நாம் ஒரு பழக்கத்தை கட்டமைக்கும் போது, நாம் அதனை நமக்குள் ஒரு அங்கமாக்குகிறோம், அதைத் தான் நாம் தியானத்திலும் செய்ய முயற்சிக்கிறோம். நாம் நமக்குள்ளேயே ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம் அதுவே பலன். முதலில் நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி, நாம் ஏன் மாற்ற்ததை விரும்புகிறோம்? ஏனெனில் நாம் வாழும் வாழ்வில் நாம் மகிழ்ச்சியாக இல்லை, அல்லது நாம் விரும்பும் வகையில் வாழ்க்கை அமையவில்லை, அல்லது மற்றவர்களுடனோ அல்லது நம்முடைய பணியில் தொடர்பு இல்லாமல் இருப்பது. இந்தப் பட்டியல் இப்படியே நீண்டு கொண்டே போகும், ஆனால், நம்மில் பெரும்பாலானோர் கொண்டிருக்கும் நோக்கம் நம்முடைய வாழ்வை மேம்படுத்துதல்.
பிரச்னைகளில் இருந்த தப்பிப்பதற்கு பதிலாக அதனைக் கையாளுதல்
இது ஒரு முக்கியமான விஷயம் : நாம் மாற்றவும் மேம்படுத்தவும் விரும்புவது. தியானத்தின் மூலம் ஏதோ மாய கற்பனை உலகத்திற்கு தப்பித்து விடுவதென்பது அர்த்தமல்ல; இவ்வாறான நிலைக்கு போதை, மது என பல வழிகள் உள்ளன, நாம் அதனை செய்து கொண்டும் இருக்கிறோம். மற்றவற்றை பற்றி சிந்திக்காமல் இருப்பதற்கு நாள் முழுவதும் இசையை கேட்கிறோம். எப்போதும், இது போன்றவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் போது, நம்முடைய பிரச்னைகள் வலுவாகவோ அல்லது உண்மையாகவோ நமக்குத் தோன்றாது. ஆனால் பிரச்னைகள் எப்போதும் திரும்ப வந்து கொண்டே இருக்கும், ஏனெனில் உண்மையில் நாம் அதனை கையாளக் கற்று வைத்திருக்கிறோம். பலர் தியானத்தை போதைப்பொருள் போல பயன்படுத்துகின்றனர், ஆனால் இவ்வாறு கருதினால் அது மிகப்பெரிய அளவில் நீண்ட நாட்களுக்கு நீடித்த பலனைத் தராது. பௌத்த டிஸ்னிலேண்ட் போன்றது - நாம் மணிகள் அடிக்கலாம் மற்றும் டிரம்ஸை ஒலிக்கலாம், ஆனால் அது உண்மையில் நமக்குள் எந்த மாற்றத்தையும் தூண்டாது: இது ஒரு தப்பித்தலே.
எனினும், நாம் தியானத்தை பௌத்த பாரம்பரியம் வகுத்துள்ள வழியில் பயிற்சித்தால், நாம் நம்முடைய பிரச்னைகளில் இருந்து தப்பி முயற்சிப்பதில்லை, ஆனால் அதனை கையாளவும் வென்று வரவும் முயற்சிப்போம். உண்மையில் இது மிகவும் தைரியமானது மற்றும் இதற்கு ஏராளமான முயற்சி தேவை, ஏனெனில் இது எளிதான காரியமல்ல. நாமும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் ஏனெனில் அது நிச்சயமாக வேடிக்கையாக இருக்கப்போவதில்லை. இதை நாம் உடற்பயிற்சியோடு ஒப்பிடலாம், அது கடினமாக இருக்கும் நம்முடைய தசைகள் சோர்வடையும், ஆனாலும் நாம் உறுதியும், ஆரோக்கியமும் பெற அந்தக் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
தியானம் செய்வதும் அப்படியே, நாம் உடலால் செயலாற்றுவதற்கு பதிலாக மனதால் செயலாற்றுகிறோம். பௌத்தத்தில் சில வடிவங்கள் இருக்கின்றன, தற்காப்பு கலை போன்றவை, அங்கு தியானம் என்பது உடல் செயலாற்றலையும் உள்ளடக்கியதாக இருக்கும், ஆனால் திபெத்திய பாரம்பரியத்தில் அவ்வாறு இல்லை. உடலுக்கு பயிற்சி எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை, உண்மையில் இது மிகவும் பயனுள்ளது. எனினும், இங்கு முக்கிய கவனம் மனம், நம்முடைய அறிவாற்றல் அல்ல நம்முடைய உணர்வுகள் மற்றும் இருதயம். மூத்த பௌத்த குருக்கள் பௌத்த பயிற்சியை தொடங்கும் போது, மிக அடிப்படையான விஷயம் மனதை கட்டுப்படுத்துவது என்று வலியுறுத்துகின்றனர், ஏனெனில் நாம் செயல்படும் விதம், நடத்தை மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ளும் அனைத்தும் நம்முடைய மனநிலையால் கட்டுப்படுத்தப்படுகிறது.
நம்மை நாமே நேர்மையாக காணுதல்
நம்முடைய வாழ்வில் கஷ்டங்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்கிறோம், நம்முடைய மனதிற்குள் இருக்கும் ஒருவித அதிருப்தியே இதற்கான ஆதாரம் என்பதை நாம் காண்கிறோம். நாம் உண்மையாக, நேர்மையாக நம்மை நாமே பகுப்பாய்ந்தால், கோபத்தில் இருந்து பேராசை, சுயநலம், பொறாமை, பிணைப்பு, பிடிவாதம், அப்பாவித் தனம் என்று நீண்டு கொண்டே செல்லும் ஏராளமான தொந்தரவு தரும் உணர்வுகளை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை காணலாம். நாம் மேலும் ஆழமாகச் சென்றால், நம்முடைய வாழ்க்கை பற்றி ஏதோ பாதுகாப்பின்மை மற்றும் குழப்பம் இருப்பதைக் காண முடியும். இது போன்ற தொந்தரவான உணர்வுகள் நம்முடைய மனநிலையை அதிகாரம் செய்து, நம்முடைய நடத்தை பேச்சு மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் விதம் என அனைத்திலும் நமக்கும் மற்றவர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்த அவை காரணமாக அமைந்துவிடுகின்றன. நாம் தனிமையில் இருந்தாலும், நம்முடைய மனம் அசவுகரியமாகவும், அனைத்து வகையான தொந்தரவான சிந்தனைகளுடன் பந்தயமிடுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் நாம் உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை.
இந்தச் சூழலுக்கு மாற்றத்தை ஏற்படுத்த உதவி செய்வதே தியானத்தின் நோக்கம். ஏதோ போதைப்பொருளை எடுத்துக்கொள்வதைப் போன்றது, எனவே நாம் எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டோம் என்று அர்த்தமல்ல. ஒரு சிலர் தியானத்தை அவ்வாறு பார்த்தாலும், அது தீர்வும் அல்ல. நீங்கள் வெறுமனே உட்கார்ந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டால் எல்லாவற்றையும் வெளியேற்றி விடலாம், பிரச்னைகள் அனைத்தும் அப்படியே மறைந்துவிடும் என்று நினைக்காதீர்கள். இது பலனளிக்காது. மாறாக, நாம் நம்முடைய பிரச்னைகளை எதிர்த்து தாக்க வேண்டும்.
உண்மையான எதிரியை கண்டறிதல்
நம்முடைய தொந்தரவான உணர்வுகளே நம்முடைய உண்மையான எதிரி என்று பௌத்த இலக்கியம் மிக வலுவாக சுட்டிக்காட்டுவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். நாம் அச்சப்படவோ அல்லது சித்தபிரமை பிடித்தவராகவோ மாற்றும் வகையிலோ, அது அவர்களை ஒருவித அசுரனாக மாற்றுவதில்லை. அதற்கு மாறாக நாம் செயலாற்ற வேண்டியது இது தான் என்பதை நாம் உணர வேண்டும். நம்மிடம் மிக அழகான பௌத்த புத்தகங்கள் உள்ளன, அவை இது போன்ற பிரச்னைவாதிகளிடம் “எனக்கு எல்லா பிரச்னைகள் மற்றும் துன்பங்களையும் ஏற்படுத்திவிட்டாய், உன்னிடம் இருந்து கிடைத்த எல்லாமே போதும்” என்று கூறுகின்றன. எனவே நாம் நம்முடைய சட்டைக்கையை சுருட்டி விட்டுக்கொண்டு, ஒரு இடத்தில் அமர்ந்து மனதை மாற்ற முயற்சிக்கிறோம். உண்மையில் தியானம் என்றால் இதுதான்.
தியானம் என்பது நல்ல பழக்கங்களை கட்டமைக்க நம்மை நாமே பயிற்சிக்கும் ஒரு முறை மேலும் தீயவற்றை மாற்றுவதாகும். பழக்கங்கள் என்பத நாம் சிந்திக்கும் முறை, உணரும் முறை மற்றம் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் போன்றவை. இதற்கு பயிற்சியும், செய்ததையே செய்தலும் தேவை – இது ஒரு விஞ்ஞானப்பூர்வமான முறை. ஒரு தடகள வீராராக அல்லது இசைக்கருவியை வாசிப்பது அல்லது நடனமாட நம்மை நாமே பயிற்சிப்பத போன்றது, தொடக்கத்தில் இது செயற்கையானதாகத் தோன்றலாம். ஆனால் பழகப்பழக அது நமக்கு மிகவும் பரிட்சயமானதாகிப் போகும். இதே தான் நம்முடைய மனம் மற்றும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளுக்கும் செய்யச் சரியானவை.
மாற்றம் சாத்தியமா?
இப்போது ஒரு மிகப்பெரிய கேள்வி எழும். நம்மால் உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? உண்மையில் நம்மை நாமே மாற்றுவதற்காக செயலாற்றும் போது, முதலில் நாம் இது சாத்தியப்படக்கூடியதே என்று நம்ப வேண்டும். “நான் இப்படித்தான், அதோடு விட்டுவிடு; அதை மாற்ற என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவே அதோடு வாழப் பழகிகொண்டேன்” என்று அடிக்கடி இப்படிச் சொல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நாம் எதனுடனாவது மிக வலுவாக அடையாளம் காணப்பட்டால், இயல்பாகவே அதனை மாற்றுவது கடினமாகிவிடும்.
நம்மை நாமே நேர்மையுடன் உள்நோக்க வேண்டும். நாம் ஏன் சிலவற்றுடன் அடையாளம் காணப்படுகிறோம். உண்மையில் நாம் கோபமான நபரா, நம்மால் எல்லா நேரமும் கோபமாக இருக்க முடியுமா? நாம் மற்றவர்களையும் குற்றம் சொல்லக்கூடும்: என்னுடைய அப்பாவும் அம்மாவும் இதைச் செய்ததால் நான் கோபமாக இருக்கிறேன் என்று சொல்வது உண்மையில் உதவியாக இருக்காது. நாம் ஆழமாகப் பார்த்தால், இந்த உணர்ச்சிகள் எங்கிருந்த வருகின்றன என்பதை நம்மால் காண முடியும். “கோபப்படக்கூடாது, பேராசைப்படக் கூடாது, சுயநலமாக இருக்கக் கூடாது” என்று தினமும் நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அதனை நிறுத்துவது மிகக் கடினம், அப்படித்தானே? எனவே நாம் உணர்ச்சிவசப்பட்டவராக உணரும் போது அதனை மாற்றுவதற்கு அனுமதிக்கும் ஒரு வழியை நாம் காண வேண்டும்.
நம்முடைய நடத்தை எல்லாவற்றையும் பாதிக்கும்
நமது உணர்ச்சி நிலைக்கு அடித்தளமாக இருப்பதையே நாம் “அணுகுமுறை” என்று அழைக்கிறோம். அதாவது நாம் விஷயங்களை பார்க்கும் விதம். நாம் பணியை இழந்து விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இதை ஒரு மிகப்பெரிய பேரழிவாகக் கருதி, நாம் கோபப்படுகிறோம் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். ஏன்? ஏனெனில் அந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே நடந்த மிக மோசமான விஷயம் இது தான் என்று நாம் நினைக்கிறோம்.
நாம் பணியை இழந்து விட்டோம் என்பதே நிதர்சனம். நம்மால் அதை மாற்ற முடியாது. நம்மால் மாற்ற முடிந்தது அந்தப் பணியிழப்பை நாம் எப்படி கருதுகிறோம், அதுவே அணுகுமுறை எனப்படுகிறது. எனவே நாம் அதனை வேறு விதமாகப் பார்க்க வேண்டும் – இப்போது நாம் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிட முடியும் அல்லது நம்முடைய தொழிலை மாற்றலாம் என்று சிந்திக்கலாம். பொருளாதார ரீதியில் இந்த சிந்தனை உதவாது, ஆனால் பணியிழப்பை பற்றி நாம் அவ்வளவு மோசமாக உணரவாவது மாட்டோம். எனவே இவ்வாறாக தியானத்தின் மீதும் நாம் கவனம் செலுத்தலாம் – நாம் விஷயங்களை எவ்வாறு கருதுகிறோம், ஏனெனில் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதில் இவையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
என்னுடைய நெருங்கிய நண்பர் கடந்த வாரம் காலமானார். இது துக்கமானது. நானும் அவரது இழப்பால் சோகமடைந்தேன் – அது ஆரோக்கியமானது; அதில் எந்தத் தவறும் இல்லை. நிச்சயமாக, அவர் இறந்ததில் எனக்கு மகிழ்ச்சி இல்லை! ஆனால் நான் இங்கு என்னுடைய மனநிலையோடு எவ்வாறு செயல்பட முடியும்? ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் இறந்து விட்டார், எனக்கு அவரை அழைக்க வேண்டும் போன்ற ஒரு உணர்வு இருந்தது, ஆனால் அவர் என்னைச்சுற்றி இல்லாததால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நலமாக இருந்த அவர், குளிக்கச்சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு குளியலறையிலேயே மயங்கி விழுந்து இறந்தார். இது முற்றிலும் எதிர்பாராமல் சட்டென்று நடந்தவை. ஒரு வாரத்திற்கு முன்னரே இது போன்ற அவரிடம் பேசாததை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, அல்லது என் மீதே எனக்கு கோபம் வந்தது, எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு அவர் இறந்து போய்விடுவார் என்று எனக்கு தெரிந்திருந்தால் நான் முன்கூட்டியே எல்லாவற்றையும் பேசி இருப்பேன் என்று நினைப்பது. இவ்வாறான சிந்தனைகள் நம்முடைய உணர்வுகளை மேலும், மேலும் மோசமாக்கிவிடும்.
மாறாக, இருவரும் சேர்ந்து ஒன்றாக செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்தினேன், எவ்வளவு அற்புதமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் – நாங்கள் 35 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்திருக்கிறோம் – இவ்வளவு அற்புதமான ஒரு மனிதருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது எவ்வளவு பெருமைக்குரியது. அவர் மிக உண்மையான மற்றும் நான் அறிந்த மேற்கத்தியர்களிலேயே நம்பத்தகுந்த தர்மா பயிற்றுநர். என்னுடைய சொந்த பயிற்சியில் நான் மேலும் வலுப்பெற என்னை அழைத்து செல்லும் மிகப்பெரிய உந்து சக்தியாக அவரைக் கருதினேன். அவர் தனது மனைவியைப் பார்த்துக் கொண்டதைப் போலவே, நான் இப்போது அதைச் செய்கிறேன் என்று அவருக்குத் தெரிந்தால் அவர் மிகவும் ஆறுதலடைவார் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் அதைச் செய்கிறேன்.
தியானத்தின் பலன் இதுவே. நீங்கள் மாயாஜால சக்திகளையோ அல்லது ஏதோ வெளியில் இருந்து எதையோ பெறப்போவதில்லை. உங்களுக்கு கிடைக்கப் போவதெல்லாம் கடினமான சூழ்நிலைகளில், உங்களை நீங்களே எதிர்மறையான எண்ணங்களுக்குள் சிக்காமல், சோகமான மனநிலையை அடையாமல், முதலில் இவ்வாறான அம்சங்களை சுமந்து கொண்டிருந்தால் அவை அனைத்தையும் மேலும் மோசமானதாக்கும் என்ற போதுமான புரிதல் இருக்க வேண்டும். இது போன்ற கடினமான சூழ்நிலைகளை புரிந்து கொள்ள நாமே மேலும் சிறப்பான வழிகளை அறியலாம், போதுமான பயிற்சியால், நாம் விஷயங்களை பார்க்கம் விதத்தை முற்றிலுமாக மாற்றலாம். எனது நண்பரை இழந்தபோது நான் இருந்தது போலவே நாம் இன்னும் சோகத்தை உணரக்கூடும், ஆனால் அந்த சோகத்தை மென்மையாக்க, ஒரு குறிப்பிட்ட மகிழ்ச்சியை சேர்க்கும் கருத்துக்களை நம்மால் இணைக்க முடிகிறது.
நம் சுய திறனை நம்புதல்
எனவே நாம் கேட்கலாம், நாம் விஷயங்களைப் பார்க்கும் விதத்தை நம்மால் மாற்ற முடியுமா? இதற்கான விடை ஆம். நம்முடைய குழந்தைப் பருவத்தில் எது நமக்கு மிக சுவாரஸ்யமாகவும், அற்புதமாகவும் தெரிந்ததோ, அவை இப்போது சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்தனமாகவும், சளிப்பாகவும் தோன்றலாம். நாம் வளர்ந்த பிறகு நம்முடைய அணுகுமுறைகள் ஏராளமாக மாறிவிட்டன. இந்த நிலையை மேலும் மாற்ற முடியும் என்று நாம் நம்பினால், உண்மையில் அதற்கான சில வழிகளை நம்மால் கற்க முடியும். இவை மூன்று வழிகளை உள்ளடக்கியுள்ளன:
- சரியான தகவலை ஈட்டுதல் - எது மிக பயனுள்ள பழக்கம் என்பதை நாம் கற்ற வேண்டும், அதில் இருந்து அவை பற்றிய கேட்டல், கற்றல் அல்லது படித்தல் வருகிறது. இதன் அர்த்தம் நாம் கட்டாயமாக புரிந்து கொள்ள வேண்டுமென்பதல்ல, ஆனால் அவற்றை நாம் பௌத்த முறையில் பாகுபடுத்த முடியும்.
- அதன் அர்த்தத்தை சிந்தித்துப் பார்த்தல் – நாம் ஈட்டிய தகவலை நாம் கருதிப் பார்த்தல் வேண்டும், அது பற்றி சிந்தித்து, பல கோணங்களில் அதனை ஆராய்ந்தால், நாம் அதனை புரிந்து கொள்ள முடியும். நாம் ஏதோ குப்பையானதை பார்க்கவில்லை, சரியானதைத் தான் பார்க்கிறோம் என்ற உணர்வு வரும். இதனால் நமக்கு பலனிருக்கிறது என்று நாமும் நம்ப வேண்டும், அப்போது தான் அதனை நம்முடைய வாழ்வில் நம்மால் இணைக்க முடியும்.
- தியானித்தல் – நாம் என்ன கற்றோம், மேலும் பயனுள்ள பழக்கத்தை புரிந்து கொண்டு அதனை கட்டமைக்கவும் நாம் இப்போது தியானிக்கத் தயாராக இருக்கிறோம்.
சரியான தகவல் மற்றும் சிந்தனை
சரியான தகவலைப் பெறுதல் என்பது நாம் நினைப்பது போல அவ்வளவு சுலபமல்ல. அதிகாரப்பூர்வமான பௌத்த வழிமுறைகளை போதிப்பவர்கள் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஏராளமானவர்கள் உள்ளனர்; ஏதோ ஒரு புத்தகத்தை எழுதி பிரசுரித்து விட்டால், அவர் சொல்வது எல்லாமே சரியென்று ஆகிவிடாது. அதே போல அந்த போதகர் மிக பிரபலமாக இருக்கிறார் அல்லது அனைவராலும் கவரப்படுகிறார் என்பதால் அவருடைய போதனைகள் அனைத்தும் சரி என்று அர்த்தமல்ல. ஹிட்லர் மிகவும் கவர்ந்திழுக்கக்கூடியவர், மிகப்பிரபலமானவர், ஆனால் அவர் போதித்தவை சரியானதல்ல.
எனவே, நம்முடைய அறிவாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று பௌத்தம் வலியுறுத்துகிறது. விலங்குகளிடம் இருந்து நாம் எப்படி வேறுபடுகிறோம்? விலங்குகளுக்கு பயிற்சி தந்தால் பல விஷயங்களைச் செய்யும் ஆனால் நமக்கு அவற்றை விட அறிவாற்றல் என்ற ஒன்று இருக்கிறது. எது பயனுள்ளது எது பயனற்றத என்று நம்மால் பாகுபடுத்த முடியும். முதலில் நமக்கு சில புரியவில்லையென்றாலும், நாம் என்ன செய்ய வேண்டும் நாம் எந்த போதனைகளை கேட்க அல்லது படிக்க வேண்டும் என்று நம்முடைய அறிவாற்றலை பயன்படுத்தி அதனைச் செய்யலாம்.
புத்தர் போதித்த அனைத்துமே மற்றவர்களுக்கு பயன் தரும் நோக்கம் கொண்டவை. ஆனால் நமக்கு நாமே இதனை பரிசோதிக்கலாம், அவரின் போதனைகள் பயனுள்ளவையா? இல்லையா? இதற்காக, நாம் நீண்ட கால தாக்கத்தையும் பார்க்க வேண்டும், ஏனெனில் குறுகிய கால நோக்கத்திலானவை மிகவும் மகிழ்ச்சியானதாக இல்லாமல் இருக்கலாம். இது சில மருத்துவ சிகிச்சைகளைப் போன்றது, அது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்காது, ஆனால் நீண்டகால பலன் இருக்கும், புற்று நோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சை போன்றது.
சோதனைகளும் அவை நம் வாழ்வில் தொடர்புபடுத்துபவற்றையும் நமது சொந்த அனுபவத்தையும் நாம் மேற்கொண்டு பகுப்பாய்வு செய்யாவிட்டால், பிறகு உண்மையில் அதற்காக நாம் எவ்வாறு தியானிக்க முடியும்? இது எப்படியென்றால் நமக்கு அதற்கான தேவை இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலே ஒரு பொருளை வாங்கிவதைப் போன்றது, உண்மையில் அதனால் எதாவது நன்மை இருக்கிறதா.
முறையான தியானம்
நிச்சயமாக, போதனைகள் பற்றி சிந்திக்கும் செயல் முறையானது மிகவும் பயனுள்ளது சிலர் இதனை தியானத்தின் ஒரு அங்கம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் “தியானம்” என்று நாம் முறையாக சொல்ல முடியுமென்றால், இந்த மிகவும் பயனுள்ள மனநிலையை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கான வாழ்தலுக்காக ஒருங்கிணைத்தலாகும். இது இரண்டு நிலைகளை உள்ளடக்கியது:
- விவேகமான தியானம் - இந்த முதல் கட்டமானது “பகுப்பாய்வு தியானம்” என்று அடிக்கடி அழைக்கப்படுகிறது, இதில் நம்மிடம் இருக்கும் மேம்படுத்தப்படாத அணுகுமுறை, விவேகமான அனைத்து விவரங்கள் மற்றும் ஆதரிக்கும் காரணிகள் குறித்த விவரங்களில் கவனம் செலுத்தலாம்.
- நிலையாக்கல் தியானம் – இரண்டாவது கட்டத்தில் நாம் அனைத்து விவரங்களையும் நாம் சுறுசுறுப்பாக காணப்போவதில்லை, ஆனால் நம்முடைய பொருளின் மீது மேலும் அழுத்தமான கவனத்தை செலுத்தி நம்முடைய பகுப்பாய்வின் முக்கிய முடிவை அதற்கான நம்முடைய அணுகுமுறையாக கொள்ளுதலாகும்.
பலர் தியானிக்கத் தொடங்கும் முன்பு சுவாசிப்பதில் கவனம் செலுத்த கற்றுக்கொள்கின்றனர். நம்முடைய மனதை கட்டுப்படுத்தி, சுவாசம் மேலும் கீழும் வந்து செல்வதில் கவனம் செலுத்துகிறோம். இது கேட்பதற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் செயல்படுத்துவது உண்மையில் நம்பமுடியாதது. நாம் சுவாசத்தில் கவனம் செலுத்தும் போது நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? முதலில், நம்முடைய தலையில் இருந்து சப்தங்களை அமைதிப்படுத்துகிறோம், ஏனெனில் அதுவே நமக்கு அனைத்து வகையான தொந்தரவான உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளைத் தருகிறது. இது நம்முடைய பின்னணியில் இருப்பதில் இருந்து வெளியேறுவதைப் போன்றது. ஆனால் அதே சமயம், நாம் கேள்விப்பட்ட, சிந்தித்துப் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி அறிந்து கொண்டு சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். இங்கு தான் விவேகமான மற்றும் நிலையாக்கல் தியானம் வருகிறது. உதாரணத்திற்கு சுவாசிப்பதை நாம் நிலையாமைக்கான விளக்கமாகக் கருதக்கூடும்: எல்லா நேரமும் மாறக்கூடியது அது. அல்லது உண்மையை நாம் பார்க்க வேண்டும் சுவாசத்தில் இருந்து “நான்” என்ற ஒன்றை தனியே பிரித்தெடுக்க முடியாது – எல்லாவற்றிற்கும் மேலாக யார் சுவாசிக்கிறார்? ஆனால் இது போன்ற பகுப்பாய்வுகள் தொடக்கநிலையாளர்களுக்கு சற்றே கடினமானதாக இருக்கும்.
நாம் மீண்டும் தொடங்க வேண்டிய சிறந்த இடம், நம்மை நாமே காணுதல். நம்முடைய பணி, குடும்பங்கள், பொதுவாக சமூகம் என்று நாம் எப்போதும் மிகப்பெரிய அழுத்தத்தை கையாள்வதன் கீழேயே இருக்கிறோம் – எனவே நம்முடைய மனமும் எப்போதும் கவலைகள் மற்றும் பிரச்னைகளை ஏற்படுத்தும் சிந்தனைகளோடே பந்தயம் செய்கின்றன. எனவே ஆசுவாசமாக இருப்பதென்பது கடினம்! எனவே நம்மால், எளிதில் அதிக ஆசுவாசமாகவும் அதிகமாக புமியுடன் ஒன்றி இருப்பதாகவும் உணர முடியும் என்றால் அது மிகவும் பயனுள்ளதாகும்.
இறுதியில் இது நம்முடைய பிரச்னைகளுக்கான தீர்வு அல்ல என்றாலும், இது ஆக்கப்பூர்வமான முதல் அடியாகும். நம்முடைய சுவாசத்தில் கவனம் செலுத்துவதனால், நம்முடைய உடலின் யதார்த்த நிலையான “நான் உயிரோடு இருக்கிறேன்!” என்பதை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். சுவாசிப்பது அதற்கான நல்ல அறிகுறி, ஏனெனில் நாம் இறக்கும் வரை சுவாசித்தல் நீண்டு கொண்டே செல்லும். நம்மால் அது குறித்து மேலும் விழிப்போடு இருக்க முடிந்தால், வாழ்க்கை தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ள அது நமக்கு உதவுகிறது; வாழ்க்கை எப்படி போகிறது என்பதெல்லாம் பெரிய பொருட்டல்ல. என்னுடைய நண்பர் இறந்த போது கூட எனக்கு இது உதவியாக இருந்தது, ஏனெனில் எப்படியாயினும் வாழ்க்கை போய்க்கொண்டுதான் இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
எனவே நாம் இந்தத் தகவலைக் கொண்டிருக்கிறோம், நாம் அது பற்றி கற்றுக்கொண்டிருக்கிறோம், அதனை புரிந்து கொண்டிருக்கிறோம் மேலும் இது அர்த்தத்தை கொடுக்கும் என்று நம்பத்தொடங்குகிறோம். வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது, மேலும் நம்முடைய உடலுடன் அதிக தொடர்பில் இருக்கிறது, முழுவதுமாக என்னுடைய பயம் மற்றும் அழுத்தத்திற்குரிய சிந்தனைகளில் தொலைந்து போகவில்லை என்பதைக் காண முடிகிறது இது பயன் தருமா? ஆம், இது பயன் தரக்கூடும். என்னால் கவனத்துடனும், சுவாசிப்பதில் விழிப்புடனும் இருக்க முடியுமா? ஆம், நம்முடைய மற்ற செயல்களை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நிறுத்தினாலும், நம்முடைய சுவாசத்த நம்மால் உற்றுநோக்க முடியும்: அது எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே, நாம் மிக ஆழமான அல்லது அதிநவீன அளவிலான புரிதலை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நிச்சயமாக, இந்த ஆழ்ந்த மட்டமே, சிறந்தது, ஆனால் தொடக்க நிலைக்கு இது போதுமானது.
தியான செயல்முறை
நாம் இரண்டு மனதின் காரணிகளைக் கொண்டிருக்கும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துவது பற்றிய புரிதலுக்கு வருகிறோம், அவை நம் கவனத்துடன் வரும் மன நிலைகள்:
- அடிப்படையில் கண்டறிதல் – கடுமையான அளவில் இருக்கும் ஒன்றை குறிப்பிடுவது
- நுட்பமான விவேகம் – மிக விரிவான அளவில் ஒன்றை புரிந்து கொள்ளுதல்
இந்த இரண்டு மனநிலைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை விவரிக்க பழமையான எடுத்துக்காட்டான ஒரு ஓவியத்தை பார்ப்பதை பயன்படுத்துவோம். மொத்த கண்டறிதல் உடன், ஒரு சிலரைப்போல நாம் அதனை ஓவியம் என்று குறிப்பிடலாம். இதைப் பார்த்தால், மனம் சொல்லி அதை நாம் ஓவியம் என்று கூறவில்லை, அது பார்த்தவுடனேயே தெரிகிறது. இதைத் தான் நாம் மிகப் பொதுவான மொழியில் “புரிதல்” என்று அழைக்கிறோம். நுட்பமான விவேகத்துடன், நாம் அந்த ஓவியத்தை மேலும் விவரமாக பார்த்தால், அந்தப் படம் இந்த அல்லது அந்த நபரின் சில தோற்றங்களை கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதையே தான் நாம் சுவாசிக்கும் போதும் கவனம் செய்ய வேண்டும். சுவாசம் என்பது எப்போதும் செயல்படுவது, அது மூக்கில் இருந்து உள்ளேயும் வெளியேயும் வந்து சென்று கொண்டிருக்கிறது என்ற விவேகமான விவரத்தையும் நாம் கண்டறிந்து புரிந்து கொள்ள வேண்டும். என்ன நடந்தது என்பது பெரிதல்ல, நாம் உயிரோடு இருக்கும் வரை இது தொடரும், எனவே அந்த அர்த்தத்தில் இது நிலையானது, பாதுகாப்பானது மற்றும் சார்ந்திருக்கிறது. எனவே தான் இதை நாம் “விவேகமான தியானம்” என்று அழைக்கிறோம், ஏனெனில் இது நாம் தீவிரமாக கவனிக்கும் ஒன்று. நாம் அதனை பகுப்பாய்வு செய்யவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட பார்வையில் இருந்து ஒரு குறிப்பிட்ட வழியில் அதைப் புரிந்துகொள்வோம்.
இரண்டாவது படி, தியானத்தை உறுதிப்படுத்துவது, இந்த வழியில் நாம் தீவிரமாக உணர வேண்டியதில்லை, அது நமக்கு தெரியும். எதையாவது தீவிரமாக புரிந்துகொள்வதற்கும் அதை அறிவதற்கும் இடையில் இது மிகவும் மாறுபட்ட மனநிலையாகும். நாம் தியானம் செய்கிறோம், அதன் விளைவாக நாம் மிகவும் அடித்தளமாக, மேலும் நிலையானதாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறோம். நாம் பயிற்சி செய்தால் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, மேலும் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.
நம்முடைய பயிற்சியை அன்றாட வாழ்வில் செயல்படுத்துதல்
நாம் இந்த பயிற்சியை குறிப்பான நாம் எப்போதெல்லாம் வருத்தமாக உணர்கிறோமோ அப்போது நினைவில் கொள்ள முயற்சிக்கலாம். நிச்சயமாக இது கடினம், இதற்கு முன்னர் நாம் உடற் பயிற்சியின் ஒப்புமைகளைப் பயன்படுத்தினோம், ஆனால் இறுதியில் புரிதல் நம்மில் ஆழமாக பொறிக்கப்பட்டுள்ளது, அது எல்லா நேரமும் நமக்குத் தெரியும்.
நமக்கு எப்போதும் தெரியும் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கும், ஆழ்ந்த அளவில் பார்த்தால், என்ன நடந்தாலும், அது ஒரு பிரச்னையாகவே இருக்காது. இது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டதை நாம் ஆழ்ந்த அளவில் அறியலாம் இதனால் நாம் வாழ்க்கையை பார்க்கும் விதத்தையும் மாற்றி இருக்கிறது. தியானத்தின் முடிவு இதுவே. நாம் அதனை மறந்த போனால், நாம் எப்போதும் நம்முடைய சுவாசத்தில் மீண்டும் கவனம் செலுத்தி நம்மை நாமே புத்துணர்வாக்கிக் கொள்ள முடியும். நம்மால் என்ன செய்ய முடியும் என்றால் உண்மையாகவே நம்முடைய மன நிலைகளில் சரியான மாற்றத்தை ஏற்படுத்தலாம், நம்முடைய அன்றாட வாழ்வில் அதனை எவ்வாறு கையாள்கிறோம் என்பனவற்றில் இது தெளிவாகிறது. நம்முடைய பிரச்னைகளில் இருந்து தப்பித்து ஒரு கற்பனை உலகிற்கு செல்லாமல், ஒரு தீவிரமான செயல்முறை பின்கற்றி நம்முடைய மனநிலை மற்றும் உணர்ச்சிகளின் நிலையை மேம்படுத்தி இறுதியில் அதற்கேற்ப சூழ்நிலைகளை நமக்குள்ளாகவே கண்டறிதலாகும்.
நாம் இப்போது பார்த்திருப்பது உளவியலின் மிகவும் அதிநவீன முறையாகவும் காணப்படுகிறது. இதனை இவ்வாறு காண்பது நல்லது, ஆனால் இதுவே பௌத்தம் என்பது உளவியலின் மற்றொரு வடிவம் என்று நினைக்காதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும் -பௌத்தம் இவையெல்லாவற்றையும் விட அதிகமானது. பௌத்த மதத்தில் இதைவிட அதிகமானவற்றை நாம் நோக்கமாக வைத்திருக்கிறோம் - ஞானம், அனைவருக்கும் உதவுதல் - ஆனால் இந்த மிக முக்கியமான முதல் படியையும் நாம் கடந்து செல்ல வேண்டும்.
சுருக்கம்
நம்முடைய பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது மிகவும் எளிது, நாள் முழுவதும் இசையை கேட்பது அல்லது நம்மை எப்போதும் ஏதோ ஒரு பணியில் ஈடுபடுத்திக்கொண்டே இருப்பது, எதையாவது பருகுவது அல்லது எல்லாவற்றையும் மறப்பதற்கு மது அருந்துவது. இந்த தற்காலிக செயல்கள் அவ்வளவாக பயன் தராது மேலும் பிரச்னையும் எப்போதும் மீண்டும் எழும். தர்மத்தைப் பற்றி உண்மையிலேயே சிந்தித்து தியானிப்பதன் மூலம், நம்மைப் பார்க்கும் விதத்தையும், மற்றவர்களையும், நாம் அனுபவிக்கும் அனுபவங்களையும் நாம் முழுமையாக மாற்ற முடியும். இது நம்முடைய பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக மறைந்துவிடாது என்றாலும், அவற்றைச் சமாளிக்க நாம் பலமாக இருக்கிறோம் என்ற அறிவைக் கொண்டு அவற்றை எதிர்கொள்ள இது உதவுகிறது.