மக்கள் ஏன் பௌத்தத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்?

08:13
நவீன காலத்தில் அதிக அளவிலான மக்கள் ஏன் பௌத்தமதத்திற்கு திரும்புகிறார்கள்? நிச்சயமாக, பல விதமான காரணங்கள் இருக்கின்றன, ஏனெனில் பல விதமான மக்கள் உள்ளனர் மற்றும் ஒவ்வொருவரும் தனித்திருக்கின்றனர், ஆனால் நான் நினைக்கிறேன் தற்போது பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்திற்கு மாறுவதற்கு காரணம் அவர்கள் தங்களது வாழ்வில் அதிக அளவிலான பிரச்னைகள் இருப்பதை உணர்ந்திருக்கலாம்.

இன்று முதல் மக்கள் அனுபவிக்கும் சிக்கல்களின் வகைகள்

இந்த பூலோகத்தில் மக்கள் தோன்றிய காலம் முதல் சில சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, அநேகமாக அதற்கு முன்னரும் கூட, மனிதன் தோன்றுவதற்கு முன்னர் மிருகங்களும் சிக்கல்கள் இருந்திருக்கும்: ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள், கோபம், சண்டைகள் மற்றும் தகராறுகளால் ஏற்படும் சிக்கல்கள். இந்தச் சிக்கல்களை ஒவ்வொருவரும் பெரும்பாலும் எப்போதும் அனுபவிக்கிறோம், எனவே நீங்களோ அல்லது நானோ என்ன அனுபவிக்கிறோம் என்பதில் சிறப்பு ஒன்றும் இல்லை. அதன் பின்னர், நிச்சயமாக, பொருளாதார சிக்கல்கள் மற்றும் போர்ச் சிக்கல்கள் உள்ளிட்ட அண்மையில் நிகழும் சில சிக்கல்கள் விஷயங்களை மேலும் கடினமாக்குகின்றன. எனவே மக்கள் இந்தச் சிக்கல்கள் மேலும் மேலும் அதிகரிப்பதாக கருதுகின்றனர். தன் அளவில் அதனை எவ்வாறு கையாள்வது, குறிப்பாக உணர்வு ரீதியில் மற்றும் மனதளவில் எப்படி எதிர்கொள்வது என அவர்களால் அதற்கான தீர்வைக் காணமுடியவில்லை.  அவர்களிடம் இருக்கும் அனுபவத்தை வைத்து அவர்களால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

ஆனால் நவீன கால அற்புதமான வளர்ச்சி தொலைதொடர்பு, குறிப்பாக நாம் கூறும் தகவல் காலம், அதற்கும் மேலாக சமூக ஊடக காலம். இதன் அர்த்தம் பல்வேறு மாற்று முறைகள் குறித்து நமக்கு மேலும் மேலும் அதிக தகவல்கள் கிடைக்கிறது. புனிதர் தலாய் லாமா போன்று பல்வேறு மிகப்பெரிய பௌத்த மதத் தலைவர்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். பல்வேறு மக்கள் தாங்களே கண்கூடாக பார்த்த சாட்சிகளாக இருக்கின்றனர், தங்களைத் தாங்களே ஒரு அசாதாரண நிலைக்கு முன்னேற்றிக் கொண்டவர்களால் மிகக்கடினமான சூழல்களிலும், நமது நாட்டையே இழப்பது போன்ற சூழலிலும் அமைதி, சாந்தம், அன்பான மனதைப்பெற முடியும்.  வாழும் மனிதர் ஒரு உந்துசக்தியாவதற்கான கூடுதல் தரம் இதுவாகும், இணையதளம் அல்லது புத்தகங்களில் இருந்து நாம் பெறும் தகவல்களைவிட இது கூடுதலானது மேலும் மிகவும் முக்கியமானதாகும்.  

மக்கள் பௌத்த மதத்திற்கு பிரதானமாக திரும்புகின்றனர், ஏனெனில் அவர்கள் சந்திக்கும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்புகிறார்கள், வாழ்வில் சிலவற்றை கையாள்வதற்கான வழிகளை பௌத்தத்தால் வழங்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். பௌத்தம் அவர்களின் சமூகத்திற்கு அந்நியமாக இருக்கலாம் அல்லது அவர்களின் பாரம்பரிய முறையாக இருக்கலாம்.

பௌத்தத்தின் பகுத்தறிவு பக்கம்

தற்போது, இந்த கட்டமைப்புடன் பௌத்தத்தை தீர்வுகளை வழங்குபவையாக பார்த்தாலும், வெவ்வேறு விதமான மக்களை வெவ்வேறு அம்சங்களால் பௌத்தம் ஈர்க்கிறது. புனிதர் தலாய் லாமா என்ன வலியுறுத்துகிறார் என்று நாம் பார்த்தால், அவர் என்ன வலியுறுத்துகிறார், பகுத்தறிவு, பகுப்பாய்வு மற்றும் பௌத்தத்தின் நடைமுறைகள் பலரால் கவர்ந்திழுப்பதாக காணப்படுகிறது.  ­­­

பௌத்தத்தின் அணுகுமுறையானது அறிவியலின் அணுகுமுறையைப் போன்றது என்ற அவர் சுட்டிக்காட்டுகிறார், அதாவது குருட்டு நம்பிக்கை மற்றும் பக்தியின் அடிப்படையில் வெறுமனே நாம் பல்வேறு கொள்கைகளை நாம் ஏற்பதில்லை, மாறாக தர்க்கம் மற்றும் காரணங்களைப் பயன்படுத்தும் விஞ்ஞான முறைகளோடு, ஆழமான ஆய்வு மற்றும் தாங்களே முயற்சிப்பதற்கான நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுகிறோம் -  பௌத்தத்தில் போதிக்கப்பட்டுள்ள முறைகள் உண்மையிலேயே அவை கூறிய மன அமைதி மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி உள்ளிட்டவற்றில் பலனை ஏற்படுத்துகின்றனவா என்று பரிசோதனை செய்து பார்க்கிறோம். நம்முடைய அணுகுமுறையில் மிகவும் நடைமுறையாக இருத்தல், கருத்தியல் இல்லாமல், ஆனால் யதார்த்தத்திற்கு ஏற்ப நடைமுறை, நம்முடைய அன்றாட வாழ்விற்கு உண்மையில் என்ன உதவி செய்யும்.

இதனுடன் பாரம்பரிய பௌத்த போதனைகள் தவறானவை அல்லது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு போதுமானதல்ல என்று நிரூபிக்கப்பட்டால் – உதாரணத்திற்கு, அண்டத்தின் அமைப்பு பற்றியது – பௌத்த போதனைகள் அனைத்தையும் விடுவித்து அதற்கு மாறாக அறிவியலின் பார்வையை புகுத்த புனிதர் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறார், ஏனெனில் இரண்டிற்கும் பெரிய முரண்பாடு இல்லை. பௌத்தம் கற்பனையை விடுத்து யதார்த்தத்தை வலியுறுத்துகிறது, மேலும் புத்தர் நமக்கு புவியியலை கற்பிக்க வரவில்லை, நம் வாழ்க்கைப் பிரச்னைகளைக் கையாள்வதற்கான வழியை போதிக்க வந்தார்.

இந்தக் கிரகத்தின் அளவு, நம்முடைய பூமியில் இருந்து சூரியன் மற்றும் நிலவுக்கான தூரம் பற்றிய பாரம்பரிய போதனைகள் –இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இதைப் புரிந்துகொண்ட பாரம்பரிய வழிகளில் இந்த வகையான விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவை பற்றிய பாரம்பரிய போதனைகள் உண்மையில் முக்கியமல்ல; பௌத்த போதனைகளுக்கான முக்கிய பொருளும் அதுவல்ல. அவரின் புனிதத்தன்மை விஞ்ஞானிகளை இல்லையென நிரூபிக்க சவால் விடுக்கிறது, உதாரணத்திற்கு, மறுபிறப்பு, வெறுமனே வார்த்தைகளால் "நான் அப்படி நினைக்கவில்லை" என்று சொல்வதன் அடிப்படையில் அதை கருத்தில் இருந்து நிராகரிக்க வேண்டாம். "நான் அப்படி நினைக்கவில்லை" என்பது ஏதோ இல்லை என்று சொல்வதற்கான சரியான காரணம் அல்ல.

எனவே இது மிகவும் பகுத்தறிவு மனம் கொண்ட மக்களை நிச்சயமாக ஈர்க்கும் ஒன்று. நாம் அழைக்கும் மறு கருவுயிர்ப்பு புனிதர் தலாய் லாமா தலைமையிலான பௌத்த தரப்பினருக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குறிப்பாக மருத்துவத் துறையில், ஏனெனில் இது சம்பந்தமாக பௌத்த போதனைகளால் கூறப்படும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நமது உடல்நிலை நம் மனநிலையால் மிகவும் பாதிக்கப்படுகிறது.

நாம் மிகவும் அவநம்பிக்கை உடையவர்களாக இருந்தால் – மிகவும் எதிர்மறையாக, எப்போதும் நான், நான், நான் என்று தன்னைப்பற்றியே கவலைப்படுகிறோம் - அது நம்முடைய எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது நம்முடைய உடல்நிலை மோசமடைவதோடு, நாம் அதில் இருந்து விரைவில் குணமடைய முடிவதில்லை. இதைவிட நாம் நம்பிக்கையோடு, மற்றவர்களைப் பற்றியும் இதே போன்ற வகையிலான நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் நம்முடைய குடும்பத்தினர் உள்ளிட்டவை பற்றியும் சிந்தித்தால், நாம் எப்போதும் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதில்லை. நம்முடைய மனம் மற்றும் இதயம் அதிக அமைதியோடு இருக்கும் மேலும் இது நம்முடைய நோய்எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. இந்த விஷயங்கள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு புலனாய்வுகளை செய்து இது உண்மை தான் என்று நிரூபித்திருக்கின்றனர், எனவே பல்வேறு மருத்துவமனைகளிலும் கூட இந்த முறைகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

பௌத்தத்தில் இருக்கும் பல வழிமுறைகள் வலிகளை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஏற்கனவே வலி என்பது மிகவும் மோசமானது, அதோடு உங்களின் பயமும் சேரும் போது, உள்ளுக்குள் உணர்வு ரீதியாக மேலும் மேலும் இருக்கமடையும் போது, வலி மேலும் மோசமடைகிறது. பௌத்த போதனையில் சுவாச தியானத்துடன் பல்வேறு முறைகள் இருக்கின்றன அவை வலியை சிறப்பான வழியில் கையாள உதவுகின்றன, மேலும் இவை பரிசோதிக்கப்பட்டு, பல மருத்துவமனைகளில் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முறைகளைப் பின்பற்ற முழு பௌத்த முகவரி என்பது தேவையில்லை.  இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்காக பௌத்த போதனைகள் மக்களுக்கு எந்த விதத்திலும் விரிவாக விளக்கப்பட தேவையில்லை. எந்தவொரு நம்பிக்கை முறையிலும் எவரும் பின்பற்றக்கூடிய வகையில் உலகளவில் கிடைக்கக்கூடிய முறைகள் இவை. ஆனால் அவை பௌத்த போதனைகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், மக்கள் இந்த பௌத்த போதனைகள் எதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது என்பதில் கொஞ்சம் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்கும் நபர்களிடமும் இதே மாதிரியான நிகழ்வைக் கண்டோம். பௌத்த சமூகங்களில் வளர்ந்த தற்காப்புக் கலைகள், அவற்றைப் பயிற்சி செய்த பலர் இந்த போதனைகளின் பின்னணிகள் என்ன என்பதில் ஆர்வம் காட்டினர்.

ஆன்மிக குருமார்களிடம் இருந்து உத்வேகம்

ஆனால், நிச்சயமாக, வாழ்க்கையை அணுகுவதில் பலர் மோசமான பகுத்தறிவு நோக்குடையவர்களாக இருப்பதில்லை, மிகவும் விஞ்ஞான ரீதியாக நோக்குடையவர்கள் இல்லாதவர்கள் பலர் உள்ளனர், எனவே பௌத்த மதத்தின் வெவ்வேறு அம்சங்கள் அவர்களுக்கு முறையிடப்படுகிறது. நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய ஒரு அம்சம் சிறந்த ஆன்மீக குருமார்களிடமிருந்து உத்வேகம் பெறுதல்:

உலகம் முழுவதிலும் அதிகமான ஆன்மீக குருமார்கள் பயணம் செய்வதோடு, அவர்களின் போதனைகள் இணையத்தில் புத்தகங்கள் மற்றும் கேட்பொலி மற்றும் காணொளி பதிவுகளில் கிடைப்பதால், அதிக பக்தி சார்ந்த நபர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத் துறையில், அரசியல் துறையில், அல்லது எதுவாக இருந்தாலும், அவர்கள் கேள்விப்பட்ட அல்லது சந்தித்த பல்வேறு தலைவர்கள் மீது பலர் அதிருப்திஅடைந்தபோது - அதனால் அவர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர் - அவர்கள் இந்த பௌத்த குருமார்களை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள், இங்கே அவர்கள் மிகவும் தூய்மையான ஒருவரை கண்டறிவார்கள்.

நிச்சயமாக, நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும்: ஒரு பௌத்த பின்னணியில் இருந்து வரும் ஒவ்வொரு ஆன்மீக ஆசிரியரும் முற்றிலும் தூய்மையானவர்கள் அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மைப்போல அவர்களும் மனிதர்களே. எனவே அவர்களுக்கும் வலுவான, பலவீனமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அவர்களில் மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் உண்மையில் மிகவும் அசாதாரணமானவர்கள். எனவே மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர் – சிலரை நான் சொல்ல வேண்டும் - இந்த குருமார்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் முதன்மையானவர்கள், நான் சொன்னது போல், புனிதர் தலாய் லாமா. ஆகவே, அவர்களின் மனதிலும், இதயத்திலும் தோன்றும் விஷயம் என்னவென்றால்: “நான் அப்படி ஆக விரும்புகிறேன்.” நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக எதை அடைய முடியும் என்பதற்கு அவை ஒரு மாதிரியாக செயல்படுகின்றன. ஏனென்றால், புனிதர் தலாய் லாமா எப்போதும் சொல்வது போல, "என்னிடம் சிறப்பாக எதுவும் இல்லை." உண்மையில், புத்தரும் இதையே சொன்னார், “என்னிடம் சிறப்பாக எதுவும் இல்லை. நானும் உன்னைப் போலவே தொடங்கினேன்.

மனம், இதயம், மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதற்கான அடிப்படை மனித விழுமியங்கள் உள்ளிட்ட உங்களிடம் இருப்பது போன்ற செயலாற்றும் அம்சங்களே என்னிடம் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்தேன், நீங்களும் கடினமாக உழைத்தால் அவற்றை வளர்த்துக் கொள்ள முடியும். ஆகவே, புனிதர் தலாய் லாமா போன்றவர்கள் அவரை வழிநடத்துவதை ஊக்குவிக்க முயற்சிக்க மாட்டார்கள், ஏதேனும் சிறப்பான- புனித வழியை மேம்படுத்த வேண்டும், அவரைப் போல நம்மோடு தொடர்பு கொள்ளவோஅல்லது ஆகவோ முடியாத ஒன்று. எனவே மிகவும் பக்தி சார்ந்தவர்களாகவும், வாழ்க்கைக்கான அணுகுமுறையில் அவ்வளவு விஞ்ஞான ரீதியாகவும் இல்லாதவர்களை மிகவும் ஈர்க்கும்.

 பௌத்த நடைமுறையின் பாரம்பரியத்தை புதுப்பித்தல்

பாரம்பரியமாக பௌத்த மதமாக இருந்த இடங்களில், பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக, பௌத்த பயிற்சிகள் கிடைக்கும் தன்மை குறைந்துவிட்டது, பின்னர் நவீன காலத்தில் பௌத்த மதத்தின் மற்றொரு முறையீடு பாரம்பரியத்தை புதுப்பிக்க முயற்சிப்பதாகும். இது மிகவும் முக்கியமான மற்றும் சரியான அணுகுமுறையாகும், ஏனெனில், நவீனமயமாக்கலின் சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது,தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். நம் முன்னோர்கள் நம்பிய அனைத்தும் முற்றிலும் முட்டாள்தனம் என்றும், நவீன உலகில் நாம் உண்மையிலேயே நுழைய விரும்பினால், அதையெல்லாம் மறந்துவிட வேண்டும் என்றும் கருதினால், நம்மைப் பற்றியும் நம் முன்னோர்களைப் பற்றியும் நாம் மிகக் குறைவாகக் கருதுகிறோம்.  நாம் நல்லவர்கள் அல்ல, ஏதேனும் ஒரு விதத்தில் நாம் முட்டாள் என்று உணர வைக்கிறது.

இந்த நம்பிக்கையால், உணர்ச்சிபூர்வமான நம்பிக்கையால் நமக்கு சுய மதிப்பு அல்லது தன்னம்பிக்கை போன்ற எந்த உணர்வும் இல்லை; நாம் வளர்வதைப் பற்றி பெருமிதம் கொள்ள நமக்கு ஒரு அடிப்படை இல்லை. எனவே நமது பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு திரும்புவதும் அவற்றை புதுப்பிப்பதும் மிக முக்கியமான பகுதியாகும், மேலும் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான உணர்ச்சிபூர்வமான அடிப்படையை நமக்கு வழங்குவதாக நான் நம்புகிறேன்.

நிச்சயமாக, எந்தவொரு பாரம்பரியத்திலும் வலுவான விஷயங்களும் இருக்கும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பலவீனங்களும் இருக்கும், அந்த வலுவான விஷயங்களை வலியுறுத்துவது முக்கியம். நவீன உளவியல் பள்ளி ஒன்றில், விஸ்வாசத்திற்கான கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம், அவர்களின் குலம், மதம், எதுவாக இருந்தாலும் அதில் விஸ்வாசமாக இருக்க வேண்டும்.  விஸ்வாசம் இரண்டு திசைகளில் செல்லக் கூடும், ஒன்று நேர்மறையான குணங்களுக்கு விஸ்வாசமாக இருப்பது அல்லது எதிர்மறை குணங்களுக்கு விஸ்வாசமாக இருப்பது. உதாரணமாக, ஒரு பாரம்பரியம் மற்ற மரபுகளுக்கு எதிரான சகிப்புத்தன்மை குறித்து எதிர்மறையான தரத்தைக் கொண்டிருந்தால், அந்த பாரம்பரியத்தைப் பற்றி இதுதான் வலியுறுத்தப்பட்டிருந்தால், அந்த பாரம்பரியத்தை நிராகரிக்கும் மக்கள் அந்த சகிப்பின்மை மனப்பான்மைக்கு விஸ்வாசமாக இருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள், அவ்வாறு நம்பக்கூடியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் மிகவும் சகிப்புத்தன்மையற்றவர்களாகிறார்கள். இது எதிர்மறை விசுவாசம் அல்லது தவறான விசுவாசம். மறுபுறம், ஒருவர் ஒரு பாரம்பரியத்தின் பலவீனங்களை, பலவீனமான புள்ளிகளை மறுக்கவில்லை, ஆனால் மீண்டும், நேர்மறையான அம்சங்களை வலியுறுத்துகிறார் என்றால், பலவீனமான விஷயங்களை நோக்கி கண்மூடித்தனமாக இல்லாமல் மக்கள் அந்த நேர்மறையான அம்சங்களுக்கு விசுவாசமாக இருக்க முடியும். அவை மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடும். எனவே இது பௌத்தத்தின் மற்றொரு முறையீடு குறிப்பாக இது பாரம்பரிய முறையாக இருந்த பகுதிகளில். இது நம் கலாச்சாரத்தைப் பற்றி, நம் முன்னோர்களைப் பற்றி, நம்மைப் பற்றி சுய மதிப்பின் உணர்வை புதுப்பிக்கவும் வளர்க்கவும் உதவும் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

பௌத்தத்தின் தனிச்சிறப்புடைய பக்கம்

மற்றொரு மக்கள் குழுவினர் இருக்கின்றனர், அவர்கள் தங்களது சொந்த கற்பனையின் அடிப்படையில் பௌத்தத்தை ஈர்ப்பதாக கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு தங்களது வாழ்வில் சிக்கல்கள் இருக்கின்றன, அதற்கு தனிச்சிறப்புடைய தீர்வைப்பெறும் சில மந்திரஞாலத்தை தேடுகின்றனர். மேலும் பௌத்தம் – குறிப்பாக திபெத்தியம்/மங்கோலியம்/கல்மிகி பதிப்பு அனைத்து விதமான தனிச்சிறப்புடைய அம்சங்களாலும் நிரம்பி இருக்கிறது: பல்வேறு தெய்வங்கள் அவர்களின் முகம், கைகள் மற்றும் கால்கள், மந்திரங்கள் மற்றும் பல. அவை கொஞ்சம் மாயச் சொற்களைப் போலவே தோன்றுகின்றன - நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை ஒரு பத்து லட்சம் முறை பாராயணம் செய்தால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். கடவுள்களின் கை மற்றும் கால் வடிவங்களில் ஏதாவது மந்திரம் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே அவர்கள் பௌத்தத்தை மகிழ்ச்சியைப் பெறுவதற்கான ஒரு முறையாகப் பார்க்கிறார்கள், மேலும் நான் சொன்னது போல், மந்திர வகை முறைகளைத் தேடுகின்றனர்.

இருப்பினும் இந்த முறைகளைப் பயிற்சிப்பதனால் அவை சில பலனைப் பெறலாம் (பௌத்தத்தை இந்த இலட்சியவாத, யதார்த்தமற்ற முறையில் நாம் அணுகினாலும், சில நன்மைகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை), புனிதர் தலாய் லாமா இது உண்மையில் யதார்த்தமல்ல என்று எப்போதுமே வலியுறுத்துகிறார். இதனால் சிறிது பலன் இருக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கென பார்த்தால் நீங்கள் அதிருப்தி அடைவீர்கள், ஏனெனில், துரதிஷ்டவசமாக எந்த மாய மந்திரத் தீர்வும் இல்லை. உண்மையிலேயே மன அமைதியைப் பெற விரும்பினால், வாழ்வில் நம்முடைய பிரச்னைகளை கடந்து வர முடிந்தால், எதிர்கொள்ள வேண்டிய வசதியான அல்லது வசதியான அந்த அம்சங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

நம்முடைய கோபம், நம்முடைய சுயநலம், பேராசை, நம் இணைப்புகள் போன்றவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். சில மாய தீர்வைத் தேடுவதும், இந்த தனிப்பட்ட சிக்கல்களைப் புறக்கணிப்பதும் உண்மையில் பெரிதும் உதவப் போவதில்லை. ஆனால், நிச்சயமாக, இந்த தனிச்சிறப்புடைய அம்சங்களால் பௌத்தம் ஈர்க்கப்படுவதை இன்னும் பலர் காண்கிறார்கள்.

சுருக்கம்

சுருக்கமாகச் சொன்னால், பௌத்தத்தின் பல்வேறு அம்சங்கள் மக்களை கவரக்கூயதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பதைக் காண்கிறோம், ஆனால் அவை அனைத்தும் பௌத்த முறைகளில் காணப்பட வேண்டிய அடிப்படை விருப்பத்திலிருந்து பெறப்பட்டவை, அவை வாழ்க்கையிலும் துன்பத்திலும் உள்ள சிக்கல்களைச் சமாளிக்க உதவும். பௌத்தத்தின் மூலம் வாழ்க்கையை கையாள்வதற்கான சில வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு எது நம்மை ஈர்க்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், புத்தரின் போதனைகளில் எல்லோரும் விரும்புவது என்னவென்றால், எல்லோரும் விரும்பும், இது உண்மையில் சிக்கல்களைப் போக்க உதவும் நோக்கங்களைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை நமக்கு வழங்குகிறது.

இரண்டரை ஆயிரம் ஆண்டுகள்அனுபவமுடைய வாழும் பாரம்பரியம் இது, இன்னும் சில மக்கள் இதனைப் பின்பற்றி பலனைப் பெறுகின்றனர். எனவே இந்த முறைகளைப் பின்பற்றுவது ஒரு சாதாரண விஷயம்; இவை அனைத்தும் தீட்டப்பட்டுள்ளன. புத்தர் கற்பித்துள்ள ஒரு முறை மட்டுமல்ல, பல, பல வகையான முறைகள் எல்லோரும் தனிப்பட்டவர்கள், வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு முறைகளை மிகவும் பயனுள்ளதாகக் காண்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது.

சிலர் இது மிகவும் அருமையானது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் முழு விதமான பௌத்த முறைகளும், ஒரு உணவகத்தின் மிகப் பெரிய மெனுவைப் போன்றது, பொதுவாக நமக்குப் பொருத்தமான ஒன்றைக் காணலாம்; நாம் ஒன்றை முயற்சித்தாலும் அது நமக்குப் பொருந்தவில்லை என்றால், இன்னும் பல உணவுகள் நமக்கு கிடைக்கின்றன. தகவல் யுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதன் பொருள் என்னவென்றால், நாம் எங்கு வாழ்ந்தாலும் இந்த முறைகளில் பெரிய மற்றும் பெரிய எண்ணிக்கையிலான முறைகள் நமக்குக் கிடைக்கின்றன.

Top