வாழ்க்கை பற்றிய பௌத்தத்தின் கண்ணோட்டம்

அன்றாட வாழ்வில் மிக முக்கியமான விஷயங்கள் என்றால் அழிவுகரமான வழிகளில் நடத்தல், பேசுதல் மற்றும் சிந்தித்தலை தவிர்த்து, இயன்ற வரையில் எல்லா நேர்மறையான ஆக்கப்பூர்வமானவற்றை விதைக்க வேண்டும். இதனைச் செய்ய வேண்டுமானால் யதார்த்தம் குறித்த குழப்பம் மற்றும் நடத்தைக்கான காரணம் மற்றும் தாக்கத்திலும் இருந்து விடுபட்டு நம்முடைய மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். நம்முடைய வாழ்வை நாம் இந்த வழியில் முன்நடத்தினால், நம்முடைய வாழ்வில் பௌத்த கண்ணோட்டத்தைக் கொண்டிருப்போம்.

நம்முடைய தலைப்பு, வாழ்க்கை பற்றிய பௌத்தத்தின் கண்ணோட்டம், அன்றாட வாழ்வில் பௌத்த போதனைகளை நாம் எவ்வாறு பொருத்துகிறோம் என்ற அடிப்படைகளைக் கையாள்கிறது. உண்மையில் அவை நமக்கு என்ன பொருள் தருகின்றன? இது மிகவும் முக்கியமானது. நாம் அன்றாடம் போதனைகளை படிக்கலாம், தினசரி தியானப் பயிற்சியை செய்யலாம், ஆனால் இவை இரண்டையும் நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வாறு தொடர்புபடுத்துவது என்பதில் தெளிவில்லை. நடைமுறையில் அவை உண்மையில் என்ன அர்த்தம் தருகின்றன? அவை எவ்வாறு நம்முடைய வாழ்வை மாற்றுகின்றன அல்லது தனிப்பட்ட முறையில் நமக்கு தாக்கத்தைத் தருகின்றன? பௌத்த பயிற்சிகள் என்பது நாம் செய்யும் ஏதோ ஒரு பொழுதுபோக்கோ அல்லது நம்முடைய வாழ்வின் துன்பங்களில் இருந்து தப்பிப்பதற்கு நம்முடைய தரப்பில் செய்வது போன்றதா? நாம் ஒரு அழகான காட்சிக்குள் அல்லது கற்பனைக்குள் செல்கிறோமா, அல்லது நம்முடைய நடைமுறை மிகவும் பயனுள்ளதா மேலும் உண்மையில் நம்முடைய வாழ்வில் அது உதவிசெய்கிறதா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பௌத்த போதனைகள் இதற்கானது தான், துன்பம் மற்றும் நம்முடைய வாழ்க்கை பிரச்னைகளை வென்று வெளிவர நமக்கு உதவுகிறது.

ஒரு உதவிகரமான வழிகாட்டல்

ஒரு குறுகிய வழிபாடு மூலம் தினசரி வாழ்வில் போதனைகளை பொருத்துவதற்கு நாம் மிக உதவிகரமான வழிகாட்டலை கண்டறிய முடிறம், அவையே தொடர்ந்து செய்ய வேண்டிய மூன்று பயிற்சிகள் என்று அழைக்கப்படுகிறது, பெரும்பாலான போதனைகளுக்கு முன்னர் பொதுவாக ஜெபிக்க வேண்டியவை. அதில், இவ்வாறான மூன்று வரிகள் இடம்பெற்றிருக்கும்:

எதிர்மறையான எதையும் செய்யாதீர்கள்; ஆக்கபூர்வமானதை அற்புதமாகச் செயல்படுத்துங்கள்; உங்கள் சொந்த மனதை முழுமையாக கட்டுப்படுத்துங்கள். இவையே புத்தரின் போதனைகள்.

பௌத்த போதனைகளில் மிக முக்கியமான அம்சங்கள் இவை. முதல் வரியில் இருப்பது, எதிர்மறையான எதையும் செய்யாதீர்கள், எதிர்மறை என்றால் ஏதோ ஒரு சுய-அழிவு, நமக்கு பிரச்னை ஏற்படக் காரணமான ஏதோ ஒன்று மேலும் மற்றவர்களுக்கும் துன்பத்தை தரக்கூடும் அல்லது, நீண்ட கால நோக்கில் நமக்கே மகிழ்ச்சியின்மையைத் தரும். எனவே, பௌத்த பயிற்சியில் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் நமக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு ஏற்படக் காரணமாக இல்லாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இரண்டாம் வரியில் உள்ள, ஆக்கப்பூர்வமானதை அற்புதமாகச் செயல்படுத்துங்கள், ஆக்கப்பூர்வமானது என்றால் ஏதோ ஒன்று நமக்கோ பிறருக்கோ மகிழ்ச்சியை கொண்டுவரவும் அனைத்தையும் சிறப்பான முறையில் எடுத்துச் செல்லவும் காரணமாக இருக்கும்.

இவ்வாறு செய்து கொண்டிருக்கையில், மூன்றாவது வரி சொல்கிறது, உங்களுடைய மனதை முழுமையாக  கட்டுப்படுத்துங்கள். இது நம்முடைய ஆக்கம் மற்றும் அழிவுகரமான இரண்டு செயல்களுக்குமான ஆதாரத்தை குறிப்பிடுகிறது. முன்னால் இருப்பதில் இருந்து விலகி பின்னால் இருப்பதை செயல்படுத்த, நமக்கு நாமே செயலாற்ற வேண்டும் –நம்முடைய நடத்தைகள் மற்றும் நம்முடைய உணர்வுகள் இவை நம் மனதில் இருந்து வருகின்றன. நம்முடைய அணுமுறைகள் மற்றும் உணர்வுகள் நாம் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பில் இருக்கிறோம், எவ்வாறு செயல்படுகிறோம், பேசுகிறோம் மற்றும் வாழ்வில் எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதில் தாக்கத்தை தருகிறது. அதுவே கடைசி வரி, புத்தரின் போதனைகள் இவையே.

யதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல்

நாம் சற்று ஆழமாக பார்த்தால், என்னுடைய பௌத்த ஆசிரியர் நண்பர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியது போல, பௌத்தத்தின் அடிப்படை அணுகுமுறையே யதார்த்தமாக இருத்தல்: யதார்த்தம் என்ன என்று அறிதல் மற்றும் அவற்றை யதார்த்தமான முறையில் கையாளுதல். மற்றொரு வகையில் சொல்வதானால், யதார்த்தம் சார்ந்த விஷயங்களில் நாம் நம்முடைய நடத்தை மற்றும் புரிதலை சார்ந்திருக்க வேண்டும்.

யதார்த்தம் என்றால் என்ன? யதார்த்தம் என்பது காரணம் மற்றும் தாக்கம் அல்லது பொதுவாக குறிப்பிடப்படும் “சார்பு எழுச்சி.”  காரணம் மற்றும் விளைவு அடிப்படையில் விஷயங்கள் எழுகின்றன. மற்றொரு வகையில் சொல்வதானால், நம்முடைய அழிவுகரமான அல்லது ஆக்கப்பூர்வமான செயல்கள் காரணத்தில் இருந்தே வருகின்றன. நாம் நம்முடைய நடத்தையை பார்த்தால், ஒன்று அது நமக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் அல்லது அதிக மகிழ்ச்சியையும் பலனைவும் நமக்கும் பிறருக்கும் ஏற்படுத்தும். ஆனால் நாம் நம்முடைய நடத்தையை தீர்மானமின்றி பார்க்க வேண்டும். வாழ்வை கையாளும் போது தீர்மானமின்றி இருப்பது மிக மிக முக்கியமான விதமாகும். 

பௌத்த நன்னெறிகள் ஆன்மிகவாதிகள் யாரோ கொடுத்தருளிய சட்டங்களோ அல்லது சில அரசியல் சாசனமோ அல்லது ஆட்சியாளரை அடிப்படையாகக் கொண்டதோ அல்ல.  சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிகளைக் கொண்டிருந்தால், நாம் தீர்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். நாம் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றினால், நாம் நல்லதாகக் கருதுகிறோம் மற்றும் சன்மானம் பெறுகிறோம்; நாம் அதனை பின்பற்றவில்லையென்றால் – நாம் சட்டங்களை உடைத்தால் –நாம் கெட்டதாகக் கருதுகிறோம் அதற்காக தண்டனை பெறுவது சரியே என கருதுகிறோம். இது பௌத்த நன்னெறிகளல்ல அல்லது பௌத்த வழியில் வாழ்வை கையாள்வதல்ல. நமக்கு நாமே தீர்மானமாக இருக்கிறோம் என்பதை முதலில் கண்டறிந்து உணர்வுது மிக முக்கியம். நடத்தையில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம் இது நாம் இதனை செய்ய முயற்சிக்க வேண்டியது அவசியம்: நம்மைப் பற்றியே தீர்மானமாக இருப்பதை நிறுத்துதல் – உதாரணத்திற்கு, நாம் கெட்டவர், நல்லவரல்ல, போதுமான நன்மை இல்லை என்றோ அல்லது நாம் என்ன செய்தோமோ அது மிக கொடூரமானது என சிந்தித்தல்.

மாறாக, நம்முடைய வாழ்வை கையாளும் வழியை காரணம் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் காண்பது அவசியம். நாம் சிக்கல்களை ஏற்படுத்தி அதனால் குழம்பினால், காரணம் மற்றும் நிபந்தனைகளின் காரணமாகவே இது எழுந்தது. நாம் கெட்டவர் என்பதால் நிகழ்ந்ததல்ல. நாம் ஆழமாகச் சென்று பார்த்தால், நம்முடைய சூழ்நிலை குறித்து நாம் குழம்பி இருக்கிறோம் என்பதைக் காண முடியும்; நாம் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில் என்ன நடந்ததோ, அது கணிப்புகளே. தேவையற்ற அனைத்தையும் நமக்குள் முன்னிறுத்துகிறோம், நம்முடைய சூழ்நிலைகள் மற்றும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் என நாம் விஷயங்களை மிகைப்படுத்துகிறோம். பின்னர் இந்த முன்னிறுத்தல்கள் அனைத்தும் யதார்த்தத்திற்கு வழிநடத்துகிறது என்று நம்புகிறோம், ஆனால் உண்மையில் அவ்வாறில்லை. நம்மை நாமே பகுத்தாய்ந்தால் நாம் ஏன் இவ்வாறு அழிவுகரமான வழிகளில் செயல்படுகிறோம், இந்த சூழ்நிலையோடு தொடர்புல்ல ஏதோ சில அர்த்தமற்றதை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை கண்டறிந்து நம்முடைய முன்னிறுத்தல்களுக்கே நாம் செயலாற்றுகிறோம் என்பதையும் காணலாம்.

இரண்டு உண்மைகள்

மக்கள் தங்கள் வாழ்வில் குறைவான பிரச்னைகளுடன் வாழ பழகிக்கொள்ள உதவும் சிறந்த வழி பற்றி புனிதர் தலாய் லாமா அண்மையில் பேசினார். அவர் தன்னை பௌத்த பார்வையாளர்கள் என்ற வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ளாமல், உலகளாவிய அளவில் பேசுகிறார், அதுவே அவருடைய அக்கறை. இரண்டு உண்மைகளை புரிந்து கொள்வதில் இருந்து நாம் தொடங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதுவே சிறந்த அடிப்படை. இரண்டு உண்மைகளை நாம் சௌகரியமான வழியில் பார்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதைவிட அடிப்படையான வழியில் ஒவ்வொருவராலும் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். மற்றொருபுறம், மிகைப்படுத்தலின் அடிப்படையிலான நம்முடைய முன்னிறுத்தல்கள் அல்லது ஒன்றுமே இருக்காது ஆனால் நம்முடைய விகாரமான எண்ணங்கள்; மற்றொரு வகையில் அங்கு யதார்த்தமும் இருக்கும். இவையே இரண்டு உண்மைகள்.

குழம்பிய மனதிற்கு, முன்னிறுத்தல்கள் சரியாகத் தோன்றும், அதாவது, “நான் ஒரு தோல்வியாளன், நான் நல்லவனில்லை, யாருமே என்னை நேசிக்க மாட்டார்கள்,” அல்லது “இது தான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பேரழிவு,” நம்முடைய உணவு கரிந்து போனாலோ அல்லது நாம் ரெஸ்டாரண்ட்டில் கொடுத்த ஆர்டர் வராவிட்டாலோ அல்லது நாம் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டாலோ நாம் வீட்டிற்கு போகப்போவதே இல்லை என்று நினைக்கிறோம்.  நாம் மிகைப்படுத்தி இது வரை நடந்ததிலேயே மிக கொடூரமான விஷயம் இது தான் என்று முன்னிறுத்துகிறோம், உதாரணத்திற்கு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டால், இது தீராத ஒன்று எனக் கருதுகிறோம். நாம் இந்த முன்னிறுத்தல்களை உண்மையானதாக எடுத்துக்கொள்கிறோம். சராசரியான உண்மை: குழப்பமான மனது உண்மையை தவறாக உணர்த்தும்

பின்னர் தான், யதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறது, அதுவே ஆழ்ந்த உண்மை என்று புரிகிறது. யதார்த்தம் என்பது அங்கு போக்குவரத்து இருப்பதற்கு காரணமும் சூழலும் இருக்கிறது; அது நெரிசலான நேரம் மேலும் ஒவ்வொருவருமே வீடு திரும்ப விரும்புகிறார்கள். நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? இது எப்படி இருக்கிறதென்றால் குளிர் காலத்தில் குளிராக இருக்கிறது என்று குற்றம் சொல்வதைப் போன்றது. நாம் என்ன எதிர்பார்த்தோம்? இது குளிர்காலம். அது அப்படித் தான் இருக்கும்.

இரண்டு உண்மைகளுக்கான வித்தியாசங்களை நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும், நாம் அதனை உணர்ந்தால் நாம் மிகைப்படுத்துகிறோம் அர்த்தமற்றவற்றை முன்னிறுத்துகிறோம் என்பதை உணர்ந்து, இந்த முட்டாள்தனத்தை மறுகட்டமைக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், நம்முடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள, நாம் இரண்டு உண்மைகளுக்கான வித்தியாசத்தை புரிந்து கொண்டு, இந்தப் புரிதலை நம்முடைய வாழ்வில் ஒருங்கிணைக்க வேண்டும். இது அத்தியாவசியமானது.

இந்தக்கருத்து அதே கோரிக்கையுடன் அடுத்த வரியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

நட்சத்திரங்கள், மங்கலான, அல்லது ஒரு (சுழலும்) ஜோதி, ஒரு மாயை, பனித்துளிகள், அல்லது குமிழி, ஒரு கனவு, பளிச்சிடும் மின்னல் அல்லது மேகங்கள் போல பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை அப்படியே இருக்க கருதுகின்றன.

நம்முடைய வாழ்வில் நாம் மிகைப்படுத்தி முன்னிறுத்தும் போது ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்துகிறோம் அல்லது ஏதோ மிகச்சிறிய விஷயம் அவை என்பதை நாம் உணர வேண்டும். யதார்த்தமாக தோன்றுபவை மாயை, ஒரு கனவு, ஒரு நீர்க்குமிழி போன்றவை என்பதை நாம் உணர வேண்டும். எனவே, இது யதார்த்தத்தோடு தொடர்புடையது என்று நாம் நம்பப்போவதில்லை. அதனை நம்பாதது நம்முடைய கற்பனையில் பலூனை வெடிக்கச் செய்வது போன்றது.

முன்னிறுத்தல்

அடிப்படையில் இரண்டு விதமான முன்னிறுத்தல்கள் உள்ளன; சில பயனுள்ளவை, மற்றவை சீரழிவானவை. எந்த முன்னிறுத்தல்கள் பயனுள்ளவை? நாம் நேர்மறை அல்லது நடுநிலையான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும்; உதாரணத்திற்கு, நாம் ஒரு பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் திட்டத்தை வைத்திருக்கிறோம். நாம் இங்கிருந்து அங்கு பயணிக்கப் போகிறோம், அதற்கேற்ப சிந்திக்க வேண்டும். இது முன்னிறுத்தல்: நாம் இதை அல்லது அதைச் செய்ய வேண்டும், நம்முடன் இதை அல்லது அதை எடுத்துச்செல்ல வேண்டும், முன்பதிவு உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். இந்த விதமான முன்னிறுத்தல்களை அன்றாட அலுவல் அல்லது பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு செல்லும் போது போடும் பட்டியல் என அனைத்திற்கும் பொருத்தலாம். இவை நம்முடைய நோக்கம் என்ன என்பதை முன்னிறுத்தல்களை குறிக்கின்றன, நாம் ஏதோ ஒன்றை எவ்வாறு பூர்த்தி செய்கிறோம் என்பதற்கான திட்டமிடல். இந்த ஆண்டில் என்ன சாதிக்கப் போகிறோம் என்ற திட்டத்தை தீட்டும் போது நாம் அடிக்கடி இதனை நம்முடைய பணியில் செய்வோம்.

ஆனால், பின்னர் தான் நம்முடைய முன்னிறுத்தல் திட்டம் என்பது ஒரு கனவு போன்றது என்பதை உணர்வோம். நடைமுறையில் அதன் அர்த்தம் என்ன? அதாவது அதற்கு அர்த்தம் எதற்கும் தயாராக இருத்தல். பிரார்த்தனைகளில் சொல்லி இருப்பது போல இவை பாதிக்கப்பட்ட நிகழ்வு, இவை காரணங்கள் மற்றும் நிந்தனைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன; சில நேரங்களில் இவையே “நிபந்தனை நிகழ்வு.” காரியங்கள் அனைத்தும் காரணங்கள் மற்றும் நிந்தனைகளில் இருந்து எழுகின்றன, எனவே நாம் ஒரு திட்டம் தீட்டும்போது, அந்தச் சூழ்நிலையின் காரணங்கள் மற்றும் நிபந்தனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும், அவை மாறவும் கூடும். மாற்றம் என்பதற்கான உதாரணமாக எடுத்துக்கொண்டால் நாம் பயணிக்க வேண்டும் என்று நினைத்திருந்த குறிப்பிட்ட விமானத்தில் இடங்களே கிடைக்காது, எனவே நாம் அந்த பயணத்திட்டத்தை மாற்றியாக வேண்டும். இதற்காக குற்றம்சாட்டிக்கொண்டு வருத்தமடைவதற்கு பதிலாக யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியே பயணிக்க வேண்டுமானால் விமானத்திற்கு பதிலாக நாம் ரயிலில் அந்த பயணத்தை மேற்கொள்ளலாம். நம்முடைய சொந்த திட்டத்திலேயே நின்றுகொண்டு, அந்த திட்டம் ஒரு மாயைப் போன்றது என்பதை உணர்ந்து வளைந்து கொடுக்காமல், அல்லது ஒரு நீர்க்குமிழி, பிரார்த்தனையில் உள்ள அனைத்து ஒப்புமைகளையும் போன்றது என்பதை உணராமல், அதனை இருகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். 

அவை என்ன உற்பத்தி செய்யப்போகின்றன. அவை மிகவும் துக்கமான மனநிலையையே உருவாக்கும். நாம் அதனால் அதிக கோபமோ அல்லது வெறுப்போ அடைவோம். அது நமக்கு பரிதாபகரமான தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும் அந்தச் சூழலில் எதையும் மாற்றாது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும் போது சபிப்பதனால் எந்த உதவியும் நேராது; அதே போன்று ஒலிப்பானை தொடர்ந்து ஒலிப்பது பலன்தராது. உதவி செய்யக்கூடிய ஒரே விஷயம் அந்தச் சூழ்நிலையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அவை மாறும் என்று நம்புவது. உதாரணத்திற்கு, நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய திட்டமிடுகிறோம்; நாம் ரயிலை தவறவிடுவிறோம் அல்லது ரயில் தாமதமாகிறது; நம்மால் அதற்காக எதுவும் செய்ய முடியாது. இப்படித்தான் நாம் போதனைகளை நம்முடைய வாழ்வில் பயனுள்ள அளவில் செயல்படுத்த வேண்டும். 

ஒரு சந்தர்ப்பத்தை சரியான மற்றும் தவறான வழியில் கருதுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தவறான வழி என்பது மாறக் கூடிய நிபந்தனைகள் நிலையானது, நிரந்தரமானது என்று சிந்திப்பதனால் ஏதோ நிலையான தாக்கம் ஏற்படுவதாகக் கருதுவது – சில திட்டம் நிரந்தரமானது என்று சிந்திப்பதைப் போல. அது மிக சாதாரணமானது என்று நினைப்பதைப் போன்றது. நம்முடைய திட்டங்களை மாற்ற தயாராக இருக்க வேண்டும் அவை மாற்றப்படும் போது விஷயங்கள் நாம் திட்டமிட்டது போலவே நடக்காது என்பதே நிதர்சனம். நாம் போக்குவரத்தில் சிக்கிக்கொள்கிறோம், அல்லது ஒரு நபர் தன்னுடைய சந்திக்க கொடுத்த நேரத்தை ரத்து செய்கிறார் போன்ற விஷயங்கள். பௌத்த நடைமுறையில் ஈடுபடும் போது, சாந்திதேவா இந்த சிறந்த ஆலோசனையைத் தருகிறார்:

அதை தீர்க்க முடியும் என்றால், தவறான மனநிலையில் வீழ்வது ஏன்? அதை தீர்க்க முடியாவிட்டால், தவறான மனநிலைக்கு தள்ளப்படுவதால் என்ன பயன்?

அந்த அறிவுரை உண்மையில் அடிப்படையானது, நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று நம்முடைய வாழ்வைக் கையாள்வதற்கான நம்முடைய வழிகளில் ஒரு அங்கமாக்க வேண்டியவை. நம்முடைய வாழ்வில் கடினமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டால் நம்மால் மாற்ற முடியும், எளிதில் அதை மாற்றலாம். நம்மால் மாற்ற முடியாவிட்டால் நம்மால் அதற்காக ஒன்றும் செய்ய முடியாது, அதற்காக வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. உதாரணத்திற்கு, நம்முடைய சுற்றுலாவின் போது பயண உடமை மூட்டையை தொலைத்துவிடுகிறோம், நம்மால் சில நாட்களில் அதை மீட்க முடியவில்லையென்றால் நாம் அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம் கிடைத்தது. நாம் புனிதர் தலாய் லாமாவுடன் போதிப்பதற்காக ஹாலந்துக்கு பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். நான் ஆம்ஸ்டர்டாம் செல்வதற்கான விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறுவதற்கான வரிசையில் காத்திருந்தேன். கணினி பழுதால் அங்கு நீண்ட வரிசையில் பலர் காத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் விமானத்திற்கு செல்ல முடியாது என்று ஒவ்வொருவரும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், எனக்கு முன்னால் வரிசையில் இருந்தவர்கள் தங்களுடைய பயணச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டை கையில் எடுத்து வைத்திருந்தனர், நானும் அப்படியே எடுத்து வைத்திருக்க முற்பட்ட போது தான் நான் கடவுச்சீட்டை எடுத்துவர மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். கடவுச்சீட்டு இல்லாமல் என்னால் விமானத்தில் ஏற முடியாது மேலும் என்னிடம் ஜெர்மன் அடையாள அட்டையும் இல்லை.

என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் இப்படி நடந்தது இதுவே முதன்முறை. நான் என்ன செய்வது? நான் விமான நிலையத்தில் இருக்கிறேன் நான் மீண்டும் என்னுடைய வீட்டிற்கு சென்று கடவுச்சீட்டை எடுத்துக் கொண்டு அதே விமானத்தில் அந்த நேரத்திற்கு வந்து சேருவதற்கு வழியே இல்லை. இது போன்ற விஷயங்களுக்காக நான் வருத்தப்படலாமா? அது எனக்கு உதவாது. நான் இதற்காக கோபப்படலாமா? அதுவும் பலன் தராது.  நான் நேராக தகவல் மையத்திற்கு சென்று அடுத்த விமானம் எப்போது என்று கேட்டேன், அந்த விமான நிலையத்தில் இருந்து அடுத்த விமானம் ஆம்ஸ்டர்மாமிற்கு இல்லை; எனினும் நகரின் மற்றொரு பக்கத்தில் உள்ள இன்னொரு விமான நிலையத்தில் இருந்து இரவு ஒரு விமானம் புறப்படுகிறது. அப்படியானால் நான் அன்று மாலை பங்கேற்க திட்டமிட்டிருந்த நிகழ்வில் பங்கேற்க முடியாது. நான் என்ன செய்தேன்? வீட்டிற்கு சென்று, மற்றொரு விமானத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து, அன்று மாலையே பயணித்தேன், அவ்வளவு தான்.

இது போன்ற அனுபவங்கள் நம்முடைய வாழ்வில் போதனைகளை எவ்வாறு புகுத்துகிறோம் என்பதற்கான சோதனை. இந்த ஒட்டு மொத்த விஷயத்திற்காக எரிச்சலடைந்து கூச்சலிட வேண்டுமா? நாம் கோபப்பட்டால், நம்மை நாமே வெறுப்போது நமக்கே அது சோகமாக அமையும். நாம் அந்த சூழ்நிலையின் யதார்த்தத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இப்படித் தான் நாம் ஒன்றுபட்டு ஆதாயமடைய வேண்டும், நடைமுறையில், நிலையாமை பற்றிய புத்தரின் போதனைகள், திட்டங்களை முன்னிறுத்தல்களுக்கு பதிலாக மாற்று வழிகளை சிந்திக்கச் சொல்கிறது. உதாரணத்திற்கு, நான் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் பயணிக்க திட்டமிட்டேன், ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இருந்து ராட்டர்டாமின்று ரயிலில் பயணித்து அந்த மாலை நிகழ்ச்சிக்கு சென்றேன். அது ஒரு கனவு போன்றது அப்படி நடக்க வழியே இல்லையென்றால். சரி, நாம் இப்போது ஒரு மாற்று திட்டத்தை வகுப்போம்.

இது தியானத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கும் மிக அடிப்படையான அறிவுரையோடு தொடர்புடையவை : நாம் எந்த எதிர்பார்ப்புமின்றி தியானம் செய்ய வேண்டும். நமக்கு எதிர்பார்ப்புகள் இல்லை என்றால், நமக்கு ஏமாற்றம் இருக்காது. பௌத்தத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான மிக அடிப்படை அதுவே.

என்னுடைய சகோதரிக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு பேரப்பிள்ளைகள். அவருடைய மகன்களோ அல்லது பேரப்பிள்ளைகளோ அவரை அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று எப்போதுமே அவருக்கு நான் சொல்லிக்கொண்டிருப்பேன். நாம் அதை எதிர்பார்த்தால், நமக்கு ஏமாற்றமே மிஞ்சும், ஏனெனில் அவர்கள் யாரும் அப்படி செய்யப்போவதில்லை. நாம் யாருடனாவது பேச விரும்பினால், அவர்களை அழைத்து நாமே பேசலாம். இது மிக எளிமையான விஷயம், நாம் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அதை மாற்ற முடிந்தால், மாற்றலாம். நம்மால் மாற்ற முடியாவிட்டால், மாற்ற முடியாது. நாம் இழந்த பயண உடமை மூட்டையை நம்மால் விரைவாக கண்டுபிடிக்க முடியாது அல்லது அதுவாகவும் வராது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் இதுவே நிதர்சனம்.

மீண்டும் சொல்வதானால், இரண்டு வகையான முன்னிறுத்தல்கள் உள்ளன. அதில் பயனுள்ள ஒன்று – நாம் சில திட்டங்களை வகுக்க வேண்டும். நாம் எங்காவது செல்ல விரும்பினால் விமான பயண முன்பதிவு செய்ய வேண்டும். எப்படியாயினும், மற்றவை பயனுள்ளதாக மட்டும் இருக்கப்போவதில்லை, அவை கேடுவிளைவிப்பவையும் கூட.

பிரதிபலிப்பு மற்றும் நடைமுறை செயல்பாடு

நம்முடைய தீங்கான முன்னிறுத்தல்களை பார்ப்பதற்கு முன்னர், நம்முடைய சூழ்நிலையை பிரதிபலிக்க ஒரு நிமிடம் எடுத்துக் கொள்வது ஒரு சிறந்த எண்ணம். நாம் எந்த அளவிற்கு வளைந்து கொடுக்கிறோம்? ஏதோ ஒன்று எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட அட்டவணையிலேயே நாம் எவ்வாறு சிக்கிக்கொள்கிறோம்; உதாரணத்திற்கு, குறிப்பிட்ட இந்த நேரத்தில் இந்தப் பணியை செய்து முடிக்க வேண்டும்; அல்லது நாம் ஒரு உணவு விடுதிக்குச் சென்றால், நாம் விரும்பும் அந்த குறிப்பிட்ட உணவையே வைத்திருக்க வேண்டும், அதை விரைவாக பரிமாற வேண்டும் என நினைப்பது. சில வகையான திட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கும் இடையே நாம் எவ்வாறு ஒட்டிக்கொள்கிறோம்? நாம் ஏமாற்றமடைந்தால் அது எவ்வளவு மகிழ்ச்சியில்லாதது என்பதை அறிய முயற்சிக்க வேண்டும். நம்முடைய எதிர்பார்ப்புகளினால் நாம் ஏமாற்றமடைகிறோம். நம்முடைய திட்டமானது விஷயங்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற யதார்த்தத்துடன் கட்டாயம் ஒத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 

ஆனால் எல்லாமே காரணங்கள் மற்றும் நிபந்தனைகளை சார்ந்தது. நமக்கு தேவையான உணவு ரெஸ்டாரன்டில் இல்லாமல் இருக்கலாம். இவையாவும் காரணங்கள் மற்றும் நிபந்தனைகள். ரயில் தாமதமாக வரலாம்; நாம் போக்குவரத்தில் சிக்கி விமானத்தை தவறவிடலாம். இவையாவும் காரணங்கள் மற்றும் நிபந்தனைகள். நீங்கள் எவ்வாறு வளைந்து கொடுப்பவராக இருக்கிறீர்கள் என்று சில நிமிடங்கள் ஆராயுங்கள். நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா? நிலையாமை பற்றி வெறுமனே கற்பது மட்டும் போதாது அல்லது சுவாசத்தில் கவனம் செலுத்தி, அந்த மூச்சுக்காற்றும் நிலையில்லாதது என்பதை உணர வேண்டும். அது மிக நல்லது, ஆனால் நாம் இதனை நம்முடைய வாழ்வில் எவ்வாறு பொருத்துவது? அதுவே நிலையாமையை புரிந்து கொள்வதற்கான முக்கியமான அம்சமாகும்.

ஒரு நடைமுறை எடுத்துக்காட்டை பாருங்கள், ஒரு தட்டை கீழே போடுகிறீர்கள் அது உடைந்துபோகிறது. அதற்கு உங்களுடைய உணர்வு ரீதியிலான பதில் என்ன? நீங்கள் சமைக்கிறீர்கள் அந்த உணவு கரிந்து போகிறது. அந்த உணர்நிலையை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்? அங்கு தான் நம்முடைய ஆக்கமானது வெளிப்படுகிறது. நாம் கணினியிலோ அல்லது அலைபேசியிலோ ஏதோ செய்ய முயற்சிக்கிறோம் ஆனால் அது செயல்படவில்லை. நீங்கள் உடனடியாக வேறு ஏதாவது முயற்சிப்பீர்களா? அல்லது நீங்கள் வேதனைப்படுவீர்களா? நீங்கள் சபதம் எடுப்பீர்களா?  

இவையே போதனைகளுக்கான நடைமுறை செயல்பாடுகள். நாம் இது போன்ற சூழ்நிலைகளில் எரிச்சலடைந்து, அடுத்த திட்டமான ‘பி’க்கு மாற முடியவில்லை என்றால் – எப்போதுமே ஏரோ ஒன்றை அலைபேசி, கணினி உள்ளிட்டவற்றில் செய்வதற்கு மற்றொரு வழி இருக்கிறது – நாம் எரிச்சலடைந்தால், நாம் இந்த விஷயங்களில் எல்லாம் செயலாற்ற வேண்டி இருக்கிறது என்பதை குறிக்கிறது.

சீரழிவான முன்னிறுத்தல்கள்

மேலே குறிப்பிட்டது போல, இரண்டு வகையான முன்னிறுத்தல்களில், ஒன்று திட்டமிடவும் செயல்படுத்தவும் பயனுள்ளது, மற்றொன்று அழிவுகரமானது. நான் தோற்றுவிட்டேன்; என்னை யாரும் நேசிக்க மாட்டார்கள்; அவர் பயங்கரமான நபர் உள்ளிட்ட விஷயங்களை கற்பனை செய்வது சீரழிவானது. அல்லது ஒரு உணவு கரிந்து போனாலோ அல்லது ரயிலை தவறிவிட்டாலோ அது முழு பேரழிவு என சிந்திப்பது. இது போன்ற சீரழிவான முன்னிறுத்தல்கள் மிகைப்படுத்துதலின் அடிப்படையில் ஏற்படுபவை.

கோபத்தோடு, நாம் சில எதிர்மறை குணங்களை மிகைப்படுத்தி பெரிதுபடுத்துகிறோம். பலரும் சுரங்கப்பாதையிலோ பெருநகரத்திலோ இதை அனுபவித்திருப்பார்கள்: நாம் படிக்கட்டில் இருந்து இறங்கவும் ரயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்படவும் சரியாக இருக்கும். நாம் அதனை எவ்வாறு எதிர்கொள்வோம்? நாம் சூளுரைப்போமா? ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பாத்திருப்பது ஒன்றும் இந்த உலகத்திலேயே மோசமான விஷயமல்ல. ஆனால் நாம் விஷயத்தை ஊதி பெரிதாக்கி, கோபத்தை வெளிப்படுத்தி, வேதனையடைகிறோம். இது நமக்கு துன்பத்தை ஏற்படுத்துகிறது, அது நமக்கு உதவாது, அப்படித்தானே?

பேராசை மற்றும் பிணைப்புடன், நாம் சிலவற்றை இந்த உலகத்திலேயே மிக அற்புதமான விஷயம் என்று நினைக்கிறோம் அல்லது நாம் மிக அற்புதமானவருடன் இருப்பதாக நினைக்கிறோம். நாம் மிகைப்படுத்துகிறோம்,அன்பில் விழுந்து அந்த நபரின் நல்ல பக்கங்களை மட்டுமே மிகைப்படுத்திப் பார்க்கிறோம். அந்த நபர் நம்முடைய மிகைப்படுத்தலுக்கு ஏற்ப வா வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் யாரும் அப்படியில்லை. அதற்காக நாம் பின்னர் ஏமாற்றமடைகிறோம்.

இது போன்ற நடத்தைகள் சிக்கலானவை. அடிக்கடி என்ன நடக்கிறதென்றால் நாம் விஷயங்களை மிகவும் குறுகலான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். இது நடக்கக் கூடும், உதாரணத்திற்கு, நம்முடைய வாழ்வில் சில பின்னடைவுகளைக் கொண்டிருக்கிறோம், அல்லது யாரோ ஒருவர் நம்மை நிராகரிக்கிறார், யாரோ ஒரு நமக்கு மகிழ்ச்சியில்லாத ஒன்றை செய்கிறார். நம்முடன் உறவில் இருக்கும் ஒருவர் நமக்கு விருப்பமில்லாதவருடன் இருக்கிறார், பிறந்தநாளிற்கு நம்மை அழைக்கவில்லை அல்லது கோபப்படுகிறோம் மற்றும் அவர்களுடன் கூச்சலிடுகிறோம் அல்லது இது போன்ற ஏதோ ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது. நாம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். நாம் அந்த முழு உறவு எனும் பெரிய வரைபடத்தைப் பார்ப்பதில்லை. நாம் அவர்களை இந்த குறுகிய வளையத்திற்குள் அடையாளம் காண்பதோடு நாம் மிகவும் கோபப்படுகிறோம். 

நமக்கு கஷ்டமாகவோ அல்லது உடல் சுகமில்லாவிட்டாலோ, “நான் ஒரு ஏழை; எனக்கு மட்டுமே இது போன்ற கஷ்டம்” என்று நாம் நினைக்கக் கூடும். மீண்டும் சொல்வதானால் இது மிக குறுகிய கண்ணோட்டம். பெரிய தொலைநோக்கை பார்க்காததற்கான முன்னிறுத்தலின் அடிப்படை இது. உதாரணத்திற்கு, “என்னை யாரும் நேசிக்க மாட்டார்கள்.” நம்முடைய மொத்த வாழ்வையும் ஸ்கேன் செய்தால், நம்முடைய வாழ்க்கை மொத்தத்திலும் யாராவது நம்மை எப்போதும் நேசித்திருக்கிறார்களா? நம்முடைய நாய் நம்மை நேசித்திருக்காது? யாருமே நம்மிடம் எப்போதும் நல்லவராகவோ அல்லது அக்கறையானவராகவோ இருந்திருக்க மாட்டார்? மற்றொரு உதாரணம், “நான் மிகப்பெரிய தோல்வியாளன்.” அது உண்மையா? நாம் நாம் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்பது உண்மையா? எவ்வாறு நடப்பது அல்லது கழிப்பறை பயிற்சியை நாம் கற்றுக்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கிறோம், எனவே நாம் நிச்சயமாக ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

மீண்டும் சொல்கிறேன், நம்முடைய முன்னிறுத்தல்கள் யதார்த்தத்திற்கு தொடர்பில்லாதது; ஆனால் நாம் அவற்றை தொடர்புபடுத்த விரும்புகிறோம், அதனால் அது அவ்வாறே இருக்கும் என்றும் நம்புகிறோம். நம்முடைய இணை இந்த உலகிலேயே சிறந்த மனிதர் மிகவும் அற்புதமானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒரு நல்ல உதாரணம், அன்டார்டிகாவில் இருக்கும் பென்குயின்கற் மேலும் அவை தன்னுடைய வாழ்விற்காக எவ்வாறு ஜோடி சேருகின்றன. நமக்கு அவை அனைத்தும் எல்லாமே ஒன்றைப்போல இருக்கும், ஆனால் பென்குயினுக்கு, மற்ற பென்குயின்களினும் சிறந்த ஒன்றே அதன் ஜோடி. நிச்சயமாக, பென்குயின்களின் பார்வையில், மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி தோன்றுவார்கள்; ஆனால், நமக்கு, வேறு யாராவது நேசித்தால் அது ஒரு பொருட்டல்ல. இல்லை நீங்கள் மட்டுமே – மிகவும் சிறப்பு வாய்ந்தவர் – அதற்காக நீ என்னை நேசிக்க வேண்டும். இது போன்ற மிகைப்படுத்தல்கள் உதவாது.  

யதார்த்தத்தை தவிர்த்தல்

சீரழிவான முன்னிறுத்தலின் மற்றொரு மாறுபாடு யதார்த்தத்தை தவிர்த்தல், மற்றவர்களின் யதார்த்த நிலையை பார்க்காமல் அதனை மறுப்பது. நாம் மனிதர்களை அவர்களும் உணர்வுள்ள உயிரினங்கள் என்று கருதாமல் காட்சிப்பொருளாக்கி அவர்களை பொருட்களாக மாற்றும் போது இது நடக்கும். பௌத்தத்தில் ஒரு மிகப் பிரபலமான வசனம் உள்ளது: “எல்லோருமே மகிழ்ச்சியை விரும்புகின்றனர் யாருமே துன்பப்பட விரும்பவில்லை.” மற்றவர்களைப் பொருத்தமட்டில் நாம் இதனை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறோம்? அடிக்கடி நாம் இதனை தவிர்த்திருப்போம் நாம் மற்றவர்களை எவ்வாறு நடக்குகிறோம் அல்லது பேசுகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்று செயல்படுகிறோம்.  இதைப் பொருத்தவரையில் காரணமும் விளைவும் இங்கே பொருந்தாது, யாருக்குமே உணர்வுகள் இல்லை. 

உதாரணத்திற்கு, நம்முடைய அலுவகத்தில் ஒருவர் மிகவும் வெறுக்கத்தக்கவராகவும், விரும்பத்தகாதவராகவும் இருக்கிறார். எனினும், அந்த நபர் மகிழ்ச்சியை விரும்புகிறார், துன்பப்பட விரும்பவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு தங்களைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் மற்றவர்களுக்கு அவர்களைப் பிடிக்காமல் போவதை விரும்பவில்லை. அவர்கள் விரும்பத்தகாத வகையில் செயல்படுவதற்கான காரணம் அவர்களுக்கு எது மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் மிகவும் குழப்பமடைந்திருக்கிறார்கள்.  திரும்பப் பார்த்தால், இது தீர்மானம் இல்லாமல் இருப்பதற்கே அழைத்து செல்கிறது. சாந்திதேவா கூறியது போல, நாம் நம்முடைய மகிழ்ச்சியை நம்முடைய எதிரியைப் போல அழிக்கிறோம். மற்றொரு வகையில் சொல்வதானால், நாம் மகிழ்ச்சியின்மைக்கான காரணத்தை நோக்கி ஓடுகிறோம். யாரோ ஒருவர் கொடரமான சுயநல பாதையில் செயல்பட்டால், எல்லோரும் அவரை ஒதுக்கிவைப்பதற்கான காரணத்தை அது ஏற்படுத்தும். அவர்கள் செயல்படும் விதத்தை யாரும் விரும்பமாட்டார்கள், ஆனால் அந்த நபர் இந்தச் செயல் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்று நினைக்கிறார்.  

இது மிக முக்கியமானது: நாம் மற்றவர்களை சந்திக்கும் போது, “நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், என்னைப்போலவே. உங்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது, என்னைப்போவலே. நீங்கள் துன்பப்பட விரும்பவில்லை, அனைவருக்கும் பிடித்தவதாக இருக்க விரும்புகிறீர்கள் என்னைப்போலவே. உங்களை யாரும் வெறுப்பதையோ அல்லது நிராகரிப்பதையோ விரும்பவில்லை நான் விரும்பாதது போலவே” என்பதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். நாம் பேருந்தில் இருந்தாலோ அல்லது போக்குவரத்தில் இருந்தாலோ இந்த நடைமுறை மிக உதவியாக இருக்கும். எல்லோருமே அவர்களது சென்றிடத்தை அடைய விரும்புகிறார்கள் யாருமே போக்குவரத்தில் பல மணி நேரம் காத்துக்கிடக்க விரும்பவில்லை, நாம் விரும்பாதது போலவே. இதற்காக மற்றவர்களிடம் கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எல்லோருக்கும் உணர்வுகள் உள்ளது, நம்மைப்போலவே.

ஒரு மிகவும் உதவிகரமான வரி: “எல்லோருக்குமே புத்தரை பிடிக்கவில்லை; எனவே எல்லோருக்குமே நம்மை பிடித்திருக்க வேண்டும் என்று ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்?” அல்லது, “அவர்கள் கிறிஸ்தவை சிலுவையில் அறைந்தார்கள், எனவே நமக்காக நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? அனைவரும் நம்மை நேசிக்கப் போகிறார்களா? நம்மை யாரேனும் விரும்பாவிட்டாலோ அல்லது நாம் விரும்பும் வகையில் நேர்மறையான வழியில் நமக்கு பதில்தராவிட்டாலோ அது மிக உதவிகரமானது. இந்த வரிகள் வாழ்வின் நடைமுறை அளவில் நம்முடைய யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னிறுத்தல்களை எதிர்கொள்ள நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். “நான் எப்போதும் சரியாக இருக்கிறேன் எல்லோரும் என்னை கவனிக்க வேண்டும்” என்று நாம் சிந்திக்கக்கூடும். ஆனால் அப்படி ஏன் நடக்க வேண்டும்?

எது யதார்த்தமானது, யதார்த்தமில்லாதது என்ற வேறுபாட்டை உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனை சிறப்பாக, மேம்படுத்த, அதிக ஒருமுகப்படுத்தலோ அல்லது வேறு எதுவாயினும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருப்போம். சிறப்பாக செய்ய, உண்மையில், யதார்த்தத்தின் எதிர்பார்ப்பில் நம்மால் அதனை செய்ய முடியும். ஆனால் நாம், “வாழ்வில் நான் மட்டுமே எப்போதும் முக்கிய நபராக இருக்க வேண்டும். நீ எப்போதும் எனக்காக மட்டுமே இருக்க வேண்டும்” என்று நினைக்கிறோம், எனவே நம்முடைய இணையர் அலுவகத்தில் இருந்து வீடு திரும்பியதும் அவருடைய வாழ்வில் அன்றைய தினம் எதுவுமே நடக்கவில்லை, ஒன்றுமில்லாமல் அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள், எனவே அவர் இப்போது தன்னுடைய முழு நேரத்தை என்னுடன் செலவிடுவார் – என்று கருதுவது யதார்த்தமில்லாத எதிர்பார்ப்பு, இல்லையா?  

ஒரு நிமிடம் எண்ணிப்பாருங்கள், நாம் யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். இது போன்று எத்தனை யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம் நாம் அதனை எந்த அளவிற்கு அவசியமாக உணர்ந்து வைத்திருக்கிறோம்? அவை தீங்கு ஏற்படுத்தும், அவற்றை நம்பினால் அது சீரழிவைத் தரும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? அவை எவ்வாறு உணர்வுப்பூர்வமான வலிக்கு காரணமாகின்றன என்பதைப் பார்க்கிறோமா? அவற்றை தலாய் லாமா நம்முடைய உள்ளார்ந்த பிரச்னையாளர்கள் என்று அழைக்கிறார்.

மேற்கு நாடுகளில் பலர் அதன் தீர்ப்பு சார்ந்த தத்துவங்களால் பாதிக்கப்படுகிறார்கள். நம்மில் பலருக்கு நான் நல்லவனாக இல்லை என்ற மிக முக்கியமான பிரச்னைக்குரிய சிந்தனைகள் உள்ளன. இது மிக தீர்மானமாக இருக்கிறது. நம்மை யாரும் தீர்மானிக்கக் கூடாது என்பதை உணர வேண்டும் மேலும் நம்மை நாமே தீர்மானம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. நாம் குழப்பமாக இருக்கலாம்; ஆனால் அதற்காக நாம் லாகயக்கற்றவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது அர்த்தமல்ல. இது மிக சுய-அழிவான முன்னிறுத்தல் எனப்படும்.

இரண்டு உண்மைகளுக்கும் இடையேயான வேறுபாடை அறிவது அத்தியாவசியம். எது நமக்கு உண்மை என்று தோன்றுகிறதோ- அதாவது நான் அவ்வளவு நல்லவனல்ல என்று – அது உண்மையில் தவறு என்பதே உதாரணம். நாம் அவ்வாறு நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை, எனவே நாம் அவ்வாறு நம்புவதை நிறுத்த வேண்டும் அதோடு வாழ்வை காரணம் மற்றும் விளைவுக்கு ஏற்ப முன்நடத்த வேண்டும். நாம் எதையாவது அடைய விரும்பினால், நாம் அது பற்றிய காரணங்களைக் வெளிக்கொணரை வேண்டும். அது சாத்தியமென்றால், அதைச் செய்யுங்கள்; அப்படி அது சாத்தியமில்லையென்றால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, நாம் நல்ல வேலையை பெற விரும்கினால், நாம் அதனைத் தேடி வேண்டும் அதை விட்டுவிட்டு வானத்தில் இருந்து கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் அல்லது யாரேனும் கொண்டு வந்து நம் கையில் கொடுப்பார்கள் என்று காத்திருக்கக் கூடாது. எல்லாவற்றிற்குமே காரணமும் விளைவும் இருக்கிறது.  

வாய்ப்புகளை ஏற்க நாம் தயாராக இருப்பதோ அதன் நன்மையை எடுத்துக்கொள்ள வேண்டும், சூழ்நிலைக்கை தியாகிக்கொண்டு அதுமிகக் கொடூரமானது என்று எண்ணினால், நம்மால் முன்னேறவே முடியாது, அதனால் எதுவும் நடக்கப்போவதும் இல்லை. இந்த வகையிலான சிந்தனை மிகவும் எதிர்மறையானது. பிரார்த்தனை சொல்வது போல: எதிர்மறையான எதையும் எப்போதும் செய்யாதே. இது செயல் மற்றும் பேச்சிற்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் பொருந்தும். நம்மையும் மற்றவர்களையும் நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதும் இதில் அடங்கும்.

 நான்கு மேன்மையான உண்மைகள்

யதார்த்தத்தை முன்னிறுத்தலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் இந்த அணுகுமுறை என்பது நான்கு மேன்மையான உண்மைகளை நாம் எவ்வாறு நம்முடைய வாழ்வில் செயல்படுத்துகிறோம் என்பதை குறிப்பிடுகிறது. புனிதர் வலியுறுத்தியுள்ளது போல, நாம் இரண்டு உண்மைகளில் இருந்த நான்கு உண்மைகளுக்குச் செல்ல வேண்டும். நாம் முதலில் நம்முடைய பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டியது முதலாவது மேன்மையான உண்மை, காரணத்தில் இருந்து வருகிறது இரண்டாவது மேன்மையான உண்மை. நாம் இந்த முன்னிறுத்தல்களைக் கொண்டிருக்கிறோம், அதோடு இதுபோன்ற முன்னிறுத்தல்கள் யதார்த்தத்திற்கு ஒத்துபோகாது என்ற உண்மையான விழிப்புணர்வோ அல்லது அறியாமையும் உள்ளது. நாம் அந்த நிறுத்தத்தை அடைய விரும்பினால் – மூன்றாவது மேன்மையான உண்மை – அதில் இருந்து வெளியேறுதல், யதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல் – நான்காவது மேன்மையான உண்மை – நம்முடைய கற்பனை பலூனை உடைத்தெறியுங்கள்.

இதனை செயல்படுத்த நாம் பௌத்தராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தலாய் லாமா கூறுவது போல, இது ஒரு உலகளாவிய அணுகுமுறை, நாம் இதனை நான்கு மேன்மையான உண்மைகள் என்று பொருத்திப் பார்க்கத் தேவையில்லை. நாம் அதனை எப்படியும் அழைக்க வேண்டியதில்லை. இந்த வகையில், அவை என்ன என்று சொல்லாமலே இது உண்மையில் மூன்று ஆபரணங்களிற்கு வழிநடத்திச் செல்கிறது. நம்முடைய பிரச்னைகளுக்கான காரணங்களை நாம் தகர்த்தால், பிரச்னைகள் தானாக போய்விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   எல்லா பிரச்னைகளும் காரணங்களும் சென்று விடும் என்ற புரிதலைக் கொண்டு வரும் அந்த நிலையே தர்ம ஆபரணம். இவையே மூன்றாவது மற்றும் நான்காவது உண்மைகள். புத்தர்கள் என்பவர்கள் இதனை முழுவதுமாக செய்தவர்கள் மேலும் சங்கம் என்பவர்கள் இதில் ஒரு பகுதியை செய்தவர்களாவர்.

இந்த வகையில், நாம் இரண்டு உண்மைகள், நான்கு உண்மைகள் மற்றும் மூன்று ஆபரணங்களைக் கொண்டிருக்கிறோம் இதனைக் கடைபிடிக்க நாம் பௌத்தராக இருக்க வேண்டியதில்லை. பௌத்தராக இருப்பதற்கான பிரித்தல் வரிசையின் நோக்கமானது எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக செயல்படுதலாகும். எவ்வாறாயினும், இந்த அணுகுமுறைக்கு கடந்த கால மற்றும் எதிர்கால வாழ்வின் நம்பிக்கை தேவைப்படுகிறது.

புனிதர் சுட்டிக்காட்டுவது போல, நம்முடைய பாரம்பரிய சூத்திர அணுகுமுறை திபெத்தில் அதிஷா லாம் – ரிம்மாக இருந்த போது மூன்று மட்டங்களிலான உந்துதல் அறிமுகம் செய்யப்பட்டது. இவை எதிர்கால வாழ்வை மேம்படுத்தவும், கட்டுப்பாடின்றி நிகழும் எதிர்கால வாழ்வில் இருந்து விடுதலை எனும் பயன் பெறவும், அதன் பின்னர் ஞானமடைந்து மற்றவர்களும் எதிர்கால வாழ்வில் இருந்து விடுதலை பெறுவதற்கு சிறப்பான உதவியைச் செய்ய முடியும். இந்த ஒட்டு மொத்த அமைப்பும் எதிர்பால வாழ்க்கை மற்றும் மறுபிறப்பை சார்ந்தது. நான்கு சிந்தனைகளுடன் மனமானது தர்மமாக மாறும் அதே பொருள் –மறுபிறப்பு. இந்தப் பாதை முழுவதும் மறுபிறப்பு என்ற ஒன்று இருந்கிறது என்கிற நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டது.

மேற்கத்தியர்களுக்கு அல்லது அதிகமானவர்களின் பொது அணுகுமுறைக்கு, இரண்டு உண்மைகள், நான்கு உண்மைகள் மற்றும் மூன்று ஜெம்களில் இருந்து தொடங்குவது சிறந்தது. இதற்குப் பின்னர், நாம் காரணம் மற்றும் தாக்கம் குறித்த விவாதத்தை அறிமுகம் செய்யலாம்; சரியான தொடக்கத்தை மேற்கொண்டால், காரணம் மற்றும் தாக்கம் எந்த அர்த்தத்தையும் கொடுக்காது.  இது தொடக்கமில்லாத மனநிலையை வழிநடத்துகிறது; தொடக்கமில்லாத மனநிலையை நாம் புரிந்து கொண்டால், நாம் மறுபிறப்பை புரிந்து கொள்வோம்.

இந்த கட்டத்தில், எதிர்கால வாழ்க்கைக்கு பயனடையவும், சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெறவும், கட்டுப்பாடில்லாமல் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கும் நாம் உண்மையிலேயே விரும்புகிறோம். மறுபிறப்பு மீதான நம்பிக்கையின் அடிப்படையில் லாம்-ரிம் அளித்த பாதையில் நாம் மணஉறுதி கொண்டிருந்தால், அது நிலையானதல்ல. இதற்கு அர்த்ம் லாம்-ரிம்மின் பயிற்சிகளை இந்த அடிப்பமையில் நடைமுறைபடுத்துவது பயனற்றது என்பதல்ல; ஆனால் பாரம்பரியமாக திபெத்தியர்கள் தொடங்கும் இடத்தைப் பிடிக்க முடிந்தால் அது இன்னும் நிலையானதாக இருக்கும், அதாவது மறுபிறப்பில் உறுதியுடன்.

இந்த இரண்டு உண்மைகளின் திட்டம் உள்ளிட்டவை இந்த போதனைகளை நம்முடைய வாழ்வோடு ஒருங்கிணைப்பதற்கான பாதையை சுட்டிக்காட்டுகின்றன. முன்னிறுத்தல்களுக்கும் யதார்த்தத்திற்கும் இடையேயான வேறுபாடுகளில் இருந்து அது தொடங்குகிறது, நம்முடைய முன்னிறுத்தல்களையும், அதில் நம்முடைய தவறான முன்னிறுத்தல்களையும் அடையாளம் காணுதல். இவையெல்லாவற்றையும் அடைய தீர்மானம் இல்லாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, “நீங்கள் அதற்காக எனக்கு உதவி செய்வீர்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்யவில்லை” அல்லது “நீங்களே அதை நேராகச் செய்வீர்கள் என்று எண்ணினேன் ஆனால் நீங்கள் செய்யவில்லை.” நம்முடைய வேலையில் நாம் யாரோ ஒருவருக்கு அவர் அதனை நல்ல முறையில் செய்து முடிப்பார் என்ற ஒருவித எதிர்பார்ப்புடன் பணியை ஒதுக்கி இருப்போம் ஆனால் அவர் அப்படி செய்திருக்க மாட்டார். நாம் என்ன செய்ய முடியும்? நாமே அதை செய்திருக்கலாம். இதற்காக நாம் அந்த நபரிடம் கோபம் கொள்ள வேண்டுமா? அது பயன் தராது. எதிர்காலத்தில் அவருக்கு அந்தப் பணியைத் தராதீர்கள் அல்லது எப்படி சரியாக செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். யதார்த்தமாக கையாளுங்கள். எந்த வழிகாட்டுதல்களும் இல்லாமலே அவர் அந்தப் பணியை கணக்கச்சிதமாக செய்து முடிப்பார் என்று நாம் எதிர்பார்க்கிறோம் அது நடக்காதபட்சத்தில் நாம் வருத்தப்படுகிறோம். அவர்களால் முடியும் என்று நம்பிக்கை வைக்கலாம்; அது வேறுவகையானது. எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றங்களும் இருக்காது.

தொந்தரவு செய்யும் உணர்வுகள்

எப்போதும் எதிர்மறையானவற்றை செய்யக் கூடாது என்ற வரியை நாம் பின்பற்ற வேண்டுமானால், நாம் செயல்படுவது, பேசுவது அல்லது சிந்திக்கும் வழி அனைத்தும் தொந்தரவு செய்யும் உணர்வுகளின் தாக்கத்தில் இருந்து ஏற்படுகிறது என்பதை அடையாளம் காண வேண்டும். தொந்தரவு செய்யும் உணர்வின் வரையறை என்னவென்றால், வளர்ந்த பின்னர், மன அமைதியையும் சுய – கட்டுப்பாட்டையும் இழக்கும் மனநிலையாகும். நாம் கோபமடைந்தால், நம்மிடம் மன அமைதி இருக்காது, பின்னர் வருத்தப்படக்கூடியவற்றை நாம் சொல்லியும், செய்தும் இருப்போம். நாம் பேராசையுடனோ அல்லது யாரையோ பற்றிக்கொண்டோ இருந்தால், அது அமைதியான மனநிலையில்லை, அதன் பின்னர் பொருத்தமே இல்லாத விஷயங்களைச் சொல்கிறோம்.  எப்போதும் மற்றவர்களை மிக அதிகமாக கோரியும், பற்றிக்கொண்டும் இருப்பதனால் அவர்களை விரட்டி விலக்குகிறது.    

தொந்தரவு செய்யும் உணர்வின் தாக்கத்தினால் நாம் செயல்படும் போது அதனை அடையாளம் காண வேண்டும். நம்முடைய சொந்த சக்திக்கே நாம் சிறிது உணர்ச்சிமிகுதியடைந்தால், சில அடிப்படை விரோதம் அல்லது கிரகிப்பு இருக்கும்போது, நாம் சிறிது பதற்றமடைந்திருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியும். இந்த அழிவுகரமான தொந்தரவான உணர்வுகள் நம்முடைய அறியாமை மற்றும் விரிப்புணர்வின்மையில் இருந்து வருகிறது. நாம் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி விழிப்பின்றி இருக்கிறோம். அதற்காக நாம் முட்டாள் என்று அர்த்தமில்லை; காரியங்கள் காரணம் மற்றும் விளைவுகளில் இரந்த வருகிறது என்ற விழிப்புணர்வின்றி இருக்கிறோம், மேலும் நம்முடைய முன்னிறுத்தல்கள் யதார்த்தத்திற்கு ஒத்துபோகாது என்ற விழிப்புணர்வுமின்றி இருக்கிறோம்.  

ஏழு – அம்ச மனப் பயிற்சி நிலைகள் சுருக்கமாக:

எல்லா குற்றச்சாட்டுகளையும் சுய – போற்றுதல் என்னும் ஒரே விஷயத்தில் வையுங்கள்.

இதற்கு அர்த்தம் நாம் எப்போதும் நம்முடைய வழியில் வருகின்ற விஷயங்களைப் பற்றிக்கொண்டு, அவை நாம் விரும்பும் வகையில் இருக்க விரும்புகிறோம். “நான் தான் முதலில்” என்ற நடத்தை அது: “நான் முன்னிறுத்தும் வழி மற்றும் அவை அவ்வாறே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது.” இது மாதிரியான நடத்தைகளின் போது நம்முடைய பிரச்னைகளை குற்றம்சாட்டுவது மிகவும் பயனுள்ள அறிவுரை. அதற்கு சில உதாரணங்கள்: “இந்த உணவு விடுதி மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” அல்லது “என்னிடம் நீ இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” இவையெல்லாமே “நான், நான், நான்” என்பதில் இருந்து வருகிறது. நாம் நம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் மற்றவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. யாரோ ஒருவருக்கு இன்றைய தினம் கடினமானதாக இருக்கும் அல்லது ஏதோ ஒரு விஷயத்தில் முன்கூட்டியே நேரம் செலவிட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் சிந்திப்பதில்லை. “நான்” மட்டுமே நமக்கு என்ன வேண்டும் என்பது மட்டுமே பிரதானம். இந்த வகையிலான சிக்கல்களில் தான் நாம் கவனம் செலுத்தி நம்முடைய அன்றாட வாழ்வில் அதனை மாற்ற வேண்டும். வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்னைகளுக்கும் குற்றம்சாட்ட வேண்டியது சுய- போற்றுதலே என்கிறது பௌத்த மேற்பார்வை. இதற்கு அர்த்தம் எப்போதும் சுயநலமாக, சுய –மையப்படுத்தியே இருத்தல். நம்முடைய எல்லாத் தேவைகளையும் நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை, ஆனால் நம்முடைய தேவைகள் மட்டுமே பொருட்டு மற்றவர்களின் தேவைகளை நிராகரிக்கலாம் என்பதல்ல. இது ஒரு அடிப்படையான அணுகுமுறை.

ஆக்கப்பூர்வமானவற்றை அற்புதமாக நிகழ்த்துவதன்  அர்த்தம் என்னவென்றால் கோபம், பேராசை அல்லது தேவையின்றி புரிந்து கொண்டு செயல்படுதல். யாரோ ஒருவரின் அங்கீகாரம் தேவை மற்றும் எப்போதும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதை நாம் தவிர்க்க வேண்டும். இத போன்ற நடத்தைகளின் கட்டுப்பாட்டில் செயல்படத் தொடங்கினால், நாம் பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுவோம், இல்லையா? யதார்த்தமில்லாதவற்றை பிறரிடம் கோருவோம், கடைசியில் ஏமாற்றமடைவோம். ஆக்கப்பூர்வமாக செயல்படுதல் என்றால் மேலே கூறிய குணாதிசயங்கள் செயல்படுதலாகும். இவ்வாறான தொந்தரவான உணர்வுகள் மற்றும் நடத்தைகளிடம் இருந்து நாம் உண்மையான நிறுத்தத்தை ஆழ்ந்த அளவில் அடைந்துவிட்டோம் என்று பொருளல்ல; ஆனால் நாம் அவற்றின் உறுதியான கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதைத் தவிர்க்க முடியும்.

வாழ்க்கையே நமது பயிற்சிக் களம்

நாம் அப்பாவியாகவோ மற்றவர்களின் குணங்களை அங்கீகரிக்காமலோ இருக்க வேண்டியதில்லை. நமக்கும் உணர்வுகள் இருக்கிறது, மற்றவர்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். நாம் எப்படி நிராகரிக்கப்படவோ அல்லது புறக்கணிக்கப்படவோ விரும்புவதில்லையோ, மற்றவர்களும் அவ்வாறே நிராகரிக்கப்படவோ புறக்கணிக்கப்படவோ விரும்புவதில்லை. இவையே நம்முடைய வாழ்வில் நாம் மனதில் இருந்து உண்மையாக உணர வேண்டியவை. இவற்றை செய்ய, நாம் நம்முடைய மனதை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், இதுவே பிரார்த்தனையில் மூன்றாவது வரியாகும்.

நம்முடைய வாழ்வை பயிற்சிக்களமாக பார்ப்பது மிகவும் உதவிகரமானது. பயிற்சி எனப்படுவது இதுவேயாகும். அழகான சூழலில், மெழுகுவர்த்திகள், ஊதுபத்தி மணம், அமைதி மற்றும் நிச்சயமாக அழுது கொண்டே இருக்கும் குழந்தைகளின்றி மெத்தையில் அமர்ந்துகொண்டிருப்பது போன்றது என்று உறுதியாக நாம் வரையறுத்துவிட இயலாது.

நான் ஒரு முறை பௌத்த மையத்திற்கு சென்றிருந்தேன், அங்கு என்னுடைய மாணவர் போதித்து கொண்டிருந்தார், அங்கு வந்திருந்தவர் தன்னுடைய இரண்டு வயது குழந்தையை உடன் அழைத்து வந்திருந்தார். போதனை நடந்து கொண்டிருந்த போதே அந்த இரண்டு வயதுக்கு குழந்தை அறையை சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. நாம் என்ன செய்ய முடியும் இரண்டு வயதுக் குழந்தை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அந்தக் குழந்தையை வகுப்பிற்கு அழைத்து வந்தது சரியே என்று போதகர் சுட்டிக்காட்டினார்; இது ஒரு அற்புதமான சவால் ஒரு சிறு குழந்தை அறையை சுற்றி ஓடிக்கொண்டு சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தாலும் நாம் தியானிக்க முயற்சிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். இதுவே உண்மையான பயிற்சி. வருத்தமடையாமலோ அல்லது கவனம் சிதறாமலோ நம்மால் பயிற்சி செய்ய முடியுமா? அதே சமயம் காயம் பட்டால் பராவில்லை என்று பெற்றோர் குழந்தை மீது கவனம் செலுத்தவில்லை என்பதும் பொருளல்ல. ஆனால் வெளியே போக்குவரத்து இரைச்சலோ அல்லது நாம் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டாலோ நம்மால் பயிற்சி செய்ய முடியுமா?

இதுவே வாழ்க்கை, வாழ்க்கைக்கு பயிற்சிக்கான பகுதி தேவை, புறக்கணிப்பு, விழிப்புணர்வின்மை மற்றும் தொந்தரவான உணர்வுகளுக்கு எதிரான உண்மையான போர்க்களம். போதிசத்வாவின் ஜெம்களின் பூமாலையில், அதிஷா இதனை தெளிவாக் குறிப்பிடுகிறார்:

பல பேர் மத்தியில், நான் என்னுடைய உரையை சரிபார்க்கிறேன். தனிமையில், நான் என்னுடைய மனதை சரிபார்க்கிறேன்.

இது மிகவும் உதவிகரமானது. நாம் மற்றவர்களுடன் இருக்கும் போது, அவர்களிடம் எவ்வாறு பேசுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அது வெறும் வார்த்தைகளை மட்டும் கவனிப்பதல்ல, பேச்சின் பின்னால் இருக்கும் நம்முடைய குரலின் தொனி, உணர்வுகள் மற்றும் நடத்தைகளையும் பார்த்தல். நாம் விரோதமாகவோ அல்லது பிடிவாதமாகவோ பேசுவதைக் கண்டறிந்தால், அந்தத் தொனியை குறைக்கலாம். நாம் தனிமையில் இருக்கும் போது நம்முடைய மனதையும் அவ்வாறே செயல்படுத்தலாம். நாம் என்ன சிந்திக்கிறோம் என்று கவனித்தல், ஒட்டுமொத்தமாக “நான் வறியவன், யாரும் என்னை பாராட்டவில்லை” என்ற நோய்.

ஏழு அம்ச மனப் பயிற்சியில் இந்த விஷயமானது இவ்வாறாக வழிநடத்தப்பட்டு மூன்று கடினமான காரியங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது: எதிராளிகளிடம் மனநிறைவோடு இருத்தல் – மனநிறைவு என்றால் அவற்றை நினைவில் வைத்தல் – மனநிறைவோடு அவற்றை செயல்படுத்துதல் மற்றும் மனநிறைவோடு அவற்றை பராமரித்தல். மனநிறைவோடு இருப்பதற்கு மிகவும் கடினமான மற்றும் முக்கியமான காரியம் இதுவேயாகும். மனநிறைவுப் பயிற்சியைப் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம், ஆனால் மேற்கத்திய கருத்தியலில் புரிந்து கொண்டிருப்பது போல நாம் நிகழ்காலத்தில் இருக்கும் நிமிடம் என்பது மட்டுமே இதற்கு அர்த்தமல்ல. “மனநிறைவு” என்ற சொல் நினைவில் கொள்ள வேண்டிய சொல்லாகும். நாம் முன்னிறுத்துவது ஒரு குப்பை போன்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இந்த உணர்தலைச் செயல்படுத்தி அதை வைத்திருங்கள். இதுவே அன்றாட வாழ்க்கைக்கான உண்மையான பயிற்சி.  

 கருத்தியல் அல்லாத மற்றும் கருத்தியல் நிலைகள்

கருத்தியல் அல்லாத மற்றும் கருத்தியலோடு இல்லாமல் இருப்பதைப் பற்றிய அனைத்து பௌத்த அறிவுரைகளையும் நாம் கேட்டிருக்கிறோம். இதன் அர்த்தம் என்ன? நிச்சயமாக அதற்கான தொழில்நுட்ப வரையறை மற்றும் பகுப்பாய்வை நாம் செய்ய முடியும்; ஆனால் இதனை நடைமுறை அளவில் பார்த்தால், நாம் கொண்டிருக்கும் இலக்கை அடைய இது போன்றவற்றை செயல்படுத்துவதைப் பற்றி சிந்திப்பதில்லை. இதுபோன்ற சூழலில் நாம் விமானத்தையோ அல்லது ரயிலையோ தவறவிட்டுவிட்டால், நோக்கமானது நிலையாமை பற்றி சிந்திப்பதல்ல, காரணங்கள் மற்றும் நிபந்தனைகளால் அனைத்தும் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது, மேலும் நாம் கோபமடைந்தால் அது நமக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது.  நாம் இந்த அம்சங்களை முதல் படியாக யோசிக்க வேண்டும்; ஆனால் நாம் என்ன விரும்புகிறோம் எல்லாமே தானாக நடக்க வேண்டும். நாம் இதைப்பற்றி சிந்திப்பதில்லை; அது அங்கேயே தான் இருக்கிறது. தானியங்கியாக நாம் மிகைப்பட்டு செயல்படுவதற்கு பதிலாக வளைந்து கொடுக்கலாம்.

இதைத் தான் நாம் இலக்காக கொண்டுள்ளோம். இது ஏதோ மாய நிலை அல்ல. வேண்டுமானால் இது முழுமையான ஆழ்ந்த கருத்தியல் அல்லாத நிலையாக இருக்கலாம், ஆனால் தொழில்நுட்பம் அல்லாத வழியில், இதனை அடையத் தான் நாம் பயிற்சி செய்கிறோம். நமக்கும் பிறருக்கும் மேலும் மேலும் துன்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் எல்லா போதனைகளையும் நம்முடைய வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான பயிற்சியை செய்கிறோம். இவையெல்லாமே அதைப்பற்றியது தான்.

கேள்விகள்

திட்டத்தை அடைய நாம் எப்போது வளைந்து கொடுக்க வேண்டும்

நான் வளைந்து கொடுத்து செல்வதாக நினைக்கிறேன், யதார்த்தத்தை எதிர்கொள்ள விரும்புகிறேன், ஆனால் இது எப்போதும் சரியல்ல. யதார்த்தத்தை அறிந்து கொள்வதில் நான் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் என்னவென்றால், எப்போது கைவிட வேண்டும், எப்போது ஒரு திட்டத்தை கை விட்டுவிடக்கூடாது, எதை மாற்றலாம் மற்றும் மாற்ற முடியாது என்பதை அறிவது. உதாரணத்திற்கு, நான் ரயிலை தவறவிட்டு விட்டு ஓடிப்போய் டாக்ஸி எடுத்துக்கொண்டு அடுத்த நிறுத்தத்தில் ரயிலைப் பிடிக்கிறேன். நம்முடைய திட்டத்திற்காக சண்டையிடுவதை பயனுள்ளது என்று நாம் எவ்வாறு  தீர்மானம் செய்வது?

ஒரு திட்டத்தை அடையவோ அல்லது விட்டு கொடுக்கவோ சில காரணிகள் அதில் உள்ளடங்கியுள்ளது. அவற்றை மாற்ற முடியுமென்றால், மாற்று வழிகளைக் கொண்டிருக்கிறதா என்பதைக் காண வேண்டும். உதாரணத்திற்கு ரயிலை தவறவிட்டாலும் டாக்ஸியை பிடித்துச் சென்று அடுத்த நிறுத்தத்தில் ரயிலில் ஏறியது போல. டாக்ஸிகளும் கிடைக்கவில்லை என்றால் நாம் அந்த பயணத்திட்டத்தை கைவிடலாம். அதுவே நடைமுறை அளவிலான உதாரணம். ஆனால் அடுத்த மட்டத்தில் பார்க்கும் போது, நாம் ஒரு பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பம் செய்திருக்கிறோம், இந்த ஆண்டு சேர்க்கை நிராகரிக்கப்படுகிறது. நாம் விட்டு கொடுத்துவிட வேண்டுமா அல்லது அடுத்த ஆண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டுமா? நாம் மதிப்பிட வேண்டும். நமக்கு வேறு எங்கும் சேர்க்கை கிடைக்காத போது அடுத்த ஆண்டும் அதே பள்ளியில் விண்ணப்பிப்பதில் எதிர்மறையாக எதுவும் இல்லை. யதார்த்தமானது எது என்ற சூழ்நிலையை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.  நம்முடைய திறமைகள் மற்றும் தகுதியை நாம் மிகைப்படுத்துகிறோமா இல்லையா? மற்றவர்களின் விருப்பத்தையும் கேட்பது நல்லது.

ஒவ்வொரு தனித்துவமான தேர்வுக்கும் பகுப்பாய்வு தேவை; எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே ஒரு காப்புரிமை பதிலாக இருக்காது. நமது நோக்கங்களை நிறைவேற்றுவது எதைப் பொறுத்தது என்பதை நாம் ஆராய வேண்டும், ஏனென்றால் காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக விஷயங்கள் எழுகின்றன. அந்த காரணங்களையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய முடியுமா? இப்போது அவற்றை சந்திக்க முடியாவிட்டால், எதிர்காலத்தில் சந்திக்க வாய்ப்பு உள்ளதா? மாற்று வழிகள் உள்ளதா? இந்த முடிவுகளையும் மாற்றங்களையும் நாம் மிகவும் பகுத்தறிவு முறையில் அணுக வேண்டும்.

 மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இருத்தல்

நான் எப்படி என்னை ஒரு துன்பத்தில் வைத்திருக்கிறேன் என்பதைப் பார்ப்பது எனக்கு புதியது. என்னுடைய முன்னிறுத்தல்கள் பகுத்தறிவானவை இல்லை என்பதை நினைவில் வைக்க முயற்சிக்கிறேன், ஆனால் எனது உணர்வுகள் வேறுபட்டவை, நான் பின்வாங்கிக் கொண்டிருக்கிறேன். நினைவில் கொள்வது இப்போது கடினமாக இருப்பதால், என்னை மதிப்பிடாமல் பயிற்சி செய்ய நான் என்ன செய்ய முடியும்?

பெரும்பாலும், எது உதவியாக இருக்கும், எது சிறந்தது என்று நமக்குத் தெரியும், ஆனால் நமது உணர்ச்சிகள் மிகவும் வலுவானவை, என்பதால் உண்மையில் அது தொடர்பான எதையும் செய்வது கடினம். இது உண்மையில் மிகவும் பொதுவான நிகழ்வு. நாம் மிகவும் தீர்மானமாக இருக்க முயற்சிக்க வேண்டும், அதாவது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வருத்தப்படுகிறேன் என்றாலும், அதை நான் தீவிரமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று நம்பவைக்கிறோம்.

இதன் அர்த்தத்தை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பது முக்கியம். நாம் மிகவும் வருத்தமாகவோ அல்லது ஏதோ ஒன்றால் நகர்ந்து போயிருக்கலாம்; ஆனால் இவையும் கடந்து போகும். மனநிலை மற்றும் உணர்வுகள் கடந்தும் மாறியும் போகும். நாம் அதனை பற்றிக்கொண்டு அதோடு அடையாளப்பட வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு, “நான் மிகவும் வருத்தத்தோடு இருக்கிறேன் ஏனெனில் நான் மீண்டும் குழம்பி இருக்கிறேன், என்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப என்னால் வாழ முடியவில்லை. நான் நல்லவனல்ல” என்று நாம் சிந்திக்கக் கூடாது. இவ்வாறு நாம் சிந்தித்தால் நாம் மனநிறையோடு அடையாளம் காணப்படுகிறோம் அதனால் நாம் அதனை பற்றிக்கொண்டு இருக்கிறோம்.

நாம் நினைப்பது மிகவும் முக்கியமானது அல்லது சிறப்பானது என்று கருதுகிறோம், ஆனால் அப்படி இல்லை. இது ஒரு கடந்து செல்லும் மனநிலை. அது உண்மையில் நாம் விரும்புவதல்ல என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும். இந்த மனநிலை கடந்து போகும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும், அது அப்படியே கடந்து செல்லட்டும். அது நமக்கு இருந்த ஒரு நம்பத்தகாத எதிர்பார்ப்பு என்பதை ஆழமாக புரிந்துகொள்கிறோம். நாம் காயப்படுகிறோம், ஆனால் அந்த காயம் கடந்து போகும். உலகமே முடிந்து போவது போல அந்த காயத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

காலம்காலமாக, மனநிலை என்பது வானத்தில் இருக்கும் மேகம் என்றே வரையறுக்கப்படுகிறது, அது கடந்து போய்விடும். அதைச் சமாளிக்கத் தொடங்குவதற்கான ஒரே வழி இதுதான். மேலும், உணர்ச்சிகள் மேலும் கீழும் செல்லப் போகின்றன என்பதை நாம் உணர வேண்டும். நம்மில் சிலர் மற்றவர்களை விட மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள், இருக்கட்டும், அவர்களைப் பற்றி நாம் தீர்மானிக்க வேண்டியதில்லை. இது யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாகும். உண்மை என்னவென்றால், இப்போது நாம் இங்குதான் இருக்கிறோம்; நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எளிதில் வருத்தப்படலாம், ஆனால் நாம் அதையே பற்றிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. யதார்த்தம் என்ன என்பதைப் பற்றி உறுதியாக நம்புவதற்கு மேலும் மேலும் செயலாற்றுங்கள்.

உதாரணமாக, "நான் சற்று பின்னே சென்றேன், எனக்கு அற்புதமான ஒருமுகப்படுத்தல் இருக்கிறது என்று நினைத்தேன், ஆனால் என்னுடைய மனம் எல்லா விஷயத்திலும் அலை பாய்ந்தது." சரி. ஆகவே நமக்கு ஒரு நம்பத்தகாத எதிர்பார்ப்பு இருந்தது. நிச்சயமாக, மனம் அலையப்போகிறதென்றால், கண்டிப்பாக, அது இன்னும் சிறப்பாக இருக்காது. எதிர்பார்ப்பைக் குறைத்து, அதைப் பற்றி நேர்மையாக உணருங்கள். எடுத்துக்காட்டாக, “என்னால் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும், ஆனால் காரணம் மற்றும் விளைவைப் பொறுத்து இது வரப்போவதில்லை. நான் கடினமாக உழைக்க வேண்டும்.”

அதே போல, நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால், அந்த போக்கை மாற்றி, நேர்மறையான உணர்ச்சிகளை உருவாக்க பயன்படுத்தலாம். அந்த விஷயத்தில் நாம் வலுவான அன்பையும் இரக்கத்தையும் உணர முடிகிறது. இந்த வகையில், உணர்ச்சிவசப்படுவது ஒரு நேர்மறையான விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் பகுத்தறிவுள்ள சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு எந்த உணர்ச்சியையும் உணருவது மிகவும் கடினம். அவர்களைப் பொறுத்தவரை, அன்பையும் இரக்கத்தையும் உணருவது மிகவும் கடினம். நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தால், நேர்மறையான ஒன்று ஏற்கனவே உள்ளது, அதை மாற்ற வேண்டியது தான் விஷயம். நீங்கள் காரணத்தையும் விளைவையும் பயன்படுத்தினால் அது படிப்படியாக நடக்கும்.

நமக்கு சவுகரியமானவற்றில் இருந்து வெளியே செயலாற்றுதல்

இந்த பயிற்சியையெல்லாம் நாம் செய்கிறோம், சமூகத்தில் பல சூழ்நிலைகளில் மக்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருப்பதையும் நாம் காண்கிறோம். நமக்கு சவுகரியமான பக்கத்தில் இருந்து வெளியேறி, உணர்வு ரீதியாக நமக்கு சவால் விடுக்கும் விஷயங்களைச் சமாளிக்க இந்த வழியில் முன்னேற நாம் தயாராக இருக்கிறோம் என்பது எப்போது நமக்குத் தெரியும்?

இது ஆக்கபூர்வமான அல்லது அழிவுகரமானவற்றுடன் தொடர்புடையது. நமது சவுகரியமான பகுதியில் இருந்து வெளியேறி சிறைக்கு செல்வது போன்றது, எடுத்துக்காட்டாக, குடிகாரர்களுடன் ஹேங்கவுட் செய்வது ஆக்கபூர்வமானதாக இருக்காது. மனிதர்களுக்கு உதவ ஒரு போதிசத்வா நரகத்திற்குச் செல்வார் என்று நாம் கூறலாம், ஆனால் அது நம்மைப் போன்ற ஒருவருக்கு சற்று கடுமையானதாக இருக்கலாம். ஆனால் நம்முடைய செளகரியமான பகுதிக்கு வெளியே சென்று ஆக்கப்பூர்வமான சிலவற்றை செய்கிறோம், அதாவது வீடற்று வீதியில் இருப்பவர்களிடம் அன்பான வார்த்தைகளில் பேசுவது, சற்றே வித்யாசமானது. 

நாம் வேறுபடுத்த வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நாம் எதைச் சாதிக்க முயற்சிக்கிறோம் என்பதன் அடிப்படையில் நாம் சவுகரியமான பகுதிக்கு வெளியே செல்வது எவ்வளவு உதவியாக இருக்கும். சில இளைஞர்கள் ஒரு கிளப்புக்குச் சென்று காலை வரை டெக்னோ இசைக்கு நடனமாடலாம். நம்முடைய செளகரியமான பகுதிக்கு வெளியே சென்று நாமும் அதையே செய்வது நமக்கு ஏதாவது பயனளிக்குமா? இது ஒரு சவுகரியமான பகுதியில் இருந்து வெளியேறுகிறது, ஆனால் எதிர்மறையான தீர்ப்பு மனப்பான்மையை முறியடிக்க முயற்சிக்காவிட்டால், அதற்கு சாதகமான நேர்மறையானவை எதுவும் இல்லை. ஆனால் காலை வரை நடனமாடுவதை வென்று இசையின் சப்தத்தை காதில் கேளாதவராக மாற்ற நாம் செயலாற்றினால் முடியும். எவ்வாறாயினும், சரணாகதியடைபவர்களுடன் பணியாற்றுவது போன்ற நம்முடைய சவுகரியமான பகுதிக்கு வெளியே சில விஷயங்களும் இருக்கின்றன. நம்முடைய சவுகரியமான பகுதிக்கு வெளியே சென்று செயலாற்றும் போது அவை ஆக்கப்பூர்வமானதாகவும், நேர்மறையாகவும் பெருந்தன்மையை வளர்த்தெடுக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும்.

பெர்லினில் எனக்கு சிறிய கலந்துரையாடல் வகுப்பு இருந்தது. நாங்கள் அனைவரும் நண்பர்கள் நாங்கள் வகுப்பு முடிந்தது சாப்பாட்டிற்கு ஒன்றாக வெளியே செல்வோம். தர்மா அவர்களின் அன்றாட வாழ்வில் எவ்வாறு உதவுகிறது என்று அவர்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன். வகுப்பில் இருந்த என்னுடைய மாணவர் ஒருவர் தான் தன்னுடைய சவுகரியமான பகுதியில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சியை எடுப்பதாகத் தெரிவித்தார்,

அவர் பெரும்பாலும் நன்கு பார்க்கும்படியாக இருப்பவர்களுடனேயே பழகுவாராம். அப்படியானால் அவர் மற்றவர்களைவிட அழகான தோற்றமுடையவர்களுக்கு அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறார். எனவே தான் பணியாற்றும் இடத்தில் அதிக பருமனாக இருப்பவர்கள், தங்கள் முகத்தில் வினோதமாக ஏதோ இருப்பவர்கள் மற்றும் கவரத்தக்க வகையில் இல்லாதவர்களுடன் நட்பு பாராட்டத் தொடங்கி இருக்கிறார். மனிதர்கள் என்றால் இவர்கள் தான் எப்போதும் மகிழ்ச்சியை விரும்புபவர்கள், அனைவராலும் நேசிக்க விரும்புபவர்கள் யாரும் வெறுப்பதையோ அல்லது புறக்கணிப்பதையோ வேண்டாதவர்கள் என்பதை அவர் உண்மையில் காண விரும்பி இருக்கிறார். இவர் ஒரு ஜெம்மாக, புதிய சிறந்த நண்பராக மாறுவார்.  அவர் அந்த நபரை புறக்கணிக்கக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறார். நம்முடைய சவுகரியமான பகுதியில் இருந்து வெளியே செல்லும் போது இது போன்ற ஏதோ நேர்மறையானவை தொடர்பாக நடப்பது சிறந்த நல்ல உதாரணமாகும். இது போன்ற விஷயங்கள் மிகவும் செய்யக்கூடியவை. நாம் நம்முடைய சாதாரண வரம்புகளுக்கு அப்பால் செல்லப் போகிறோம் என்றால், அதை அணுக முடியாத மற்றும் சாத்தியமில்லாத வகையில் செய்யுங்கள்.

மற்றொரு நண்பர் தீவிர நிலைக்கே சென்றுவிட்டார். அவர் எல்லா நேரமும் தன்னுடைய சவுகரியமான பகுதியில் இருந்து வெளியேற விரும்புகிறார், உதாரணத்திற்கு அவர் பூங்காவில் போதைப்பொருட்களை விற்பவர்களையே தேடிச்சென்றிருக்கிறார். அத்தகையவர்களுடன் இருப்பது அசவுகரியமாக இருந்ததால் அவர் அதனைச் செய்தார். இதில் எந்த நன்மையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நம்முடைய சவுகரியமான பகுதியில் இருந்து எப்படி வெளியே செல்வது என்பது சுவாரஸ்யமான கேள்வி மேலும் உண்மையில் சவுகரியமான மண்டலம் என்பதன் அர்த்தம் என்ன? நமது சவுகரியமான பகுதிக்குள் நாம் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று நினைப்பது எந்த அளவிற்கான முன்னிறுத்தல்? சவுகரியமான பகுதி என்றால் என்ன? அது நமக்குள் பகுப்பாய்வு செய்ய வேண்டிய ஒன்று. எந்தவொரு நபருடனும் எந்த சூழ்நிலையிலும் நாம் வசதியாக இருக்க முடியுமா?

இதற்கான திறவுகோல், ஒரு விஷயத்தில் குற்றச்சாட்டை வைப்பது: சுய- போற்றுதல். மற்றவர்களுடனோ அல்லது சூழ்நிலைகளுடனோ நாம் அசவுகரியமாக இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் “நான், நான், நான்” என நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். எடுத்துக்காட்டாக, “நான் இதை விரும்பவில்லை, அதை என்னால் கையாள முடியாது” என்று நாம் நினைக்கிறோம், மற்றவர்களைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவதும், நாம் அனைவரும் மனிதர்கள் என்பதைப் பார்ப்பதும் ஒரு காரியம் தான்.

சுருக்கம்

சில மிக அடிப்படையான கொள்கைகள் இவை. நாம் சுயநலவாதிகளாகவும், சுய - மையப்படுத்துபவராகவும் இருப்பதை நிறுத்த முடிந்தால், நாம் மகிழ்ச்சியாக இருப்போம். நாம் வேறொரு நபருடன் இருக்கும்போது, நம்மைப் பற்றி மட்டுமே பேசுவதற்குப் பதிலாக, அந்த நபர் மீது உண்மையான அக்கறை காட்டி, அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்களிடம் கேட்டால், நாம் மேலும் மகிழ்ச்சியாக இருப்போம், நிச்சயமாக மற்ற நபரும் மகிழ்ச்சியாக இருப்பார். இவை வாழ்க்கையுடனும் மற்றவர்களுடனும் கையாளும் வழிகளில் அடிப்படை மற்றும் நடைமுறை மாற்றங்கள். நாம் அடைய நினைக்கும் மனநிறைவு இதுவே என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் சுயநலமாகவோ அல்லது நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்போதோ இந்த ஆலோசனையைப் செயல்படுத்த முயற்சிக்க நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மற்ற நபர் வேலையாக இருப்பதால், அங்கிருந்து செல்ல விரும்புகிறார், ஆனால் நாம் அவர்களை இடைமறித்து தொடர்ந்து பேசுகிறோம். நாம் சொல்வது மிகவும் முக்கியமானது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். மற்ற நபர் உண்மையில் அதைக் கேட்க விரும்புகிறாரா? இல்லை, ஆனால் அவர்கள் அதை நின்று கேட்பார்கள் என்று நாம் முன்னிறுத்துகிறோம். நாம் தர்மத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் வாழ்க்கை.

Top