நம்முடைய அன்றாட வாழ்வில் கர்மாவின் தொடர்பு

கர்மாவை புரிந்து கொள்ளுதல்

நம்முடைய அன்றாட வாழ்வில் கர்மாவை தொடர்புபடுத்துவது குறித்து நான் இன்று பேசப்போகிறேன். கர்மா என்பது என்ன என்று நாம் புரிந்து கொள்வதில் இருந்து நாம் அதனைத் தொடங்க வேண்டும். இரண்டு பொதுவான விளக்கங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கர்மா என்பது கட்டாயப்படுத்தும் மனம் நம்மை உடல் ரீதியாக எதையாவது செய்வதற்கோ, வார்த்தையாக எதையாவது சொல்வதற்கோ, அல்லது மனதளவில் எதையாவது சிந்தித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்களைச் செய்வதற்கு தூண்டுகிறது. இரண்டாவது விளக்கமானது உடல் மற்றும் வார்த்தைச் செயல்பாடுகளில் அக்கறை காட்டும் வித்யாசமான உறுதிபடுத்துதலைக் கொண்டுள்ளது. இவ்வகையான செயல்களுக்கு, கர்மா என்பது நம்முடைய உடல் ரீதியான செயல்பாடுகளுக்கு வலுக்கட்டாயமான வடிவம், நம்முடைய வார்த்தைச் செயல்பாடுகளுக்கு வலுக்கட்டாயமான ஒலி மற்றும் இரண்டு வகையான செயல்களுடன் வரும் வலுக்கட்டாயமான நுட்பமான ஆற்றல் மற்றும் அதன் பிறகு நமது மன தொடர்ச்சியுடன் தொடர்கிறது. கர்மா என்பதற்கான திபெத்திய வார்த்தை "செயல்கள்" என்று பொருள்படும் பேச்சு வழக்க வார்த்தையாக இருந்தாலும், இந்த எந்த விளக்கத்திலும் கர்மா உண்மையான செயல்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு முறை செயல்கள் இந்த வலுக்கட்டாயமான கர்ம பழக்கவழக்கங்களில் மேற்கொள்ளப்பட்டவுடன், அது நமது மன தொடர்ச்சியில் சில வகையான கர்ம விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றில் மிகவும் பரவலாக விவாதிக்கப்படும் நேர்மறை அல்லது எதிர்மறை கர்ம ஆற்றல்கள் மற்றும் கர்மப் போக்குகள் பற்றி பேசலாம். இவை இரண்டிற்கும் இடையில் லேசான ஒரு வித்தியாசம் இருக்கிறது, ஆனால் அதன் தொழில்நுட்ப விவரத்திற்குள் நாம் இப்போது செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த கர்ம ஆற்றல்கள் மற்றும் போக்குகளின் ஒரு அம்சம் போதுமான நிலைமைகள் இருக்கும்போது ஒரு விளைவு அல்லது விளைவை உருவாக்கும் திறன் ஆகும். தொழில்நுட்ப ரீதியில், ஒரு பழத்தைப் போல, அவை "கனிய வைக்கும்."

கர்மத் திறன்கள் மற்றும் போக்குகளில் இருந்து கனியும் வினை என்ன?

இந்தக் கர்மத் திறன்கள் மற்றும் போக்குகளில் இருந்து பல வெவ்வேறு வகையான முடிவுகள் வருகின்றன. மிகப்பொதுவான ஒரு உணர்வு சில மட்டத்திலான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை நம்முடைய அனுபவத்தின் ஒவ்வொரு கணத்தையும் சேர்த்தது. அது மகிழ்ச்சியின்மையாக இருந்தால், அது அழிவுகரமான நடத்தையின் விளைவு, அது மகிழ்ச்சியாக இருந்தால் ஆக்கப்பூர்வமான நடத்தையின் முடிவாகும். 

இதனுடன், ஏற்கனவே செய்த செயல் வகையை மீண்டும் செய்வதற்கான உணர்வும் கூட இருக்கிறது. கர்மாவானது கர்மா வினையில் இருந்து நேரடியாக கனிவதில்லை. முதலில் ஒரு உணர்வு தோன்றுகிறது, யாரையாவது கத்துவதைப் போன்றோ அல்லது அவர்களை கட்டித்தழுவதைப் போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வின் அடிப்படையில், உண்மையில் அதைச் செய்வதற்கான உந்துதல் இருக்கும், அது நம்மை செயலைச் செய்வதற்கு ஈர்க்கிறது. உணர்வுக்கும் தூண்டுதலுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. எதையாவது செய்வதைப் போன்று உணர்வது என்பது விரும்புதல் அல்லது அதனைச் செய்வதற்கு விரும்புதலாகும். ஆனால் நான் நினைக்கிறேன் “உணர்தல்” என்பது குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் வேண்டுதல் அல்லது விரும்புதலை விட சற்றே அதிக விளக்கம் தரும். அது குறைவான திட்டமிடலாகவே இருக்கிறது.  

நாம் முன்பு செய்ததைப் போலவே மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றுகிறது, அதே போல் நமக்கு மீண்டும் ஏதாவது நடக்கும் என்ற சூழ்நிலையையும் பெறுகிறோம். மற்றவர்களிடம் நாம் எவ்வாறு நடந்த கொள்கிறோமோ அப்படியே அவர்களும் நம்மிடம் நடந்து கொள்கிறார்கள், நிச்சயமாக இது நம்முடைய கர்மத் திறன்கள் மற்றும் போக்குகளின் முடிவு இல்லை. தெளிவாகச் சொல்லவேண்டுமானால், இந்தப் பலனானது நம்மிடம் இருந்து வரவில்லை அவர்களின் கர்மத்திறன்கள் மற்றும் போக்குகளில் இருந்து வருகிறது. நம் பக்கத்தில் இருந்து வரக்கூடிய ஒரே உணர்வு அந்த நபரைச் சந்திப்பது போன்ற சூழ்நிலையைப் பெறுவதாகும்.

மற்றொரு கனியும் விஷயமானது, குறிப்பாக நம்முடைய கர்மத்திறன்களில் இருந்து இந்த விவகாரத்தில் கிடைப்பது வாழ்க்கை வடிவம், உடல் மற்றும் நாம் கொண்டிருக்கும் மனச்செயல்பாட்டின் உண்மையான வகை. உதாரணமாக, நாம் மனித மூளை அல்லது நாயின் மூளையைக் கொண்டிருந்தால் நாம் வெவ்வேறு மனத்திறன்களை அனுபவிப்போம். ஒரு குறிப்பிட்ட பாலூட்டிகளின் விந்தணு மற்றும் முட்டையுடன் இணைக்க ஒரு பாலூட்டியாக மறுபிறப்பு ஏற்பட்டால், ஒரு மன தொடர்ச்சியை உண்மையில் கர்ம ஆற்றல்கள் கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாம் எடுக்கும் வாழ்க்கை வடிவம் மற்றும் உடல் வகை கர்மத்திறன்களில் இருந்து கிடைக்கும் முடிவுகளாகும். 

இந்த வாழ்நாளின் கர்மப் பலன்கள் பெரும்பாலும் கடந்த ஜென்ம செயல்களில் இருந்தே வருகிறது

அன்றாட வாழ்வில் நம் அனுபவங்களைப் பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை உணர்வுகள் மற்றும் நாம் செய்யவேண்டிய உணர்வுகள் அல்லது இந்த வாழ்நாளில் நம்முடைய முந்தைய செயல்களிலிருந்து நம்முடைய கர்ம ஆற்றல்கள் மற்றும் போக்குகளில் கனிந்தவை என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட வகையான கர்ம நடத்தைகள் மட்டுமே இந்த வாழ்நாளில் அதன் திறன்கள் மற்றும் போக்குளை கனிய வைப்பதைக் கொண்டு வருகிறது. இவை எதிர்மறையான மற்றும் நேர்மறையான நடத்தை மிகவும் வலுவாக ஊக்குவிக்கப்படுவதையும் உள்ளடக்கியது, குறிப்பாக நம்மிடம் மிகவும் அன்பானவர்களாக இருக்கும் ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் போன்றவர்களை நோக்கியதாக இருந்தால். இந்த வாழ்நாளில் கனிய வைக்கும் மற்றும் இந்த கனிவின் போது நாம் அனுபவித்தவற்றில் பெரும்பான்மையானது முந்தைய வாழ்நாளின் செயல்களால் கட்டப்பட்ட கர்ம ஆற்றல்கள் மற்றும் போக்குகளின் விளைவாகும்.

இந்தப் புள்ளியானது நம்மில் பலருக்கும் புரிந்து கொள்வதற்கும் கூட மிகவும் கடினமாக இருக்கலாம். மேற்கத்தியர்களான எங்களில் பெரும்பாலானவர்கள் கடந்த மற்றும் எதிர்கால ஜென்மங்களை எப்போதும் நம்பியதில்லை. அது தனிப்பட்ட விவகாரம், துரதிஷ்டவசமாக, கடந்த மற்றும் எதிர்கால ஜென்மங்களை ஆராய்வதற்கு இந்த சமயத்தில் நமக்கு நேரமில்லை பிறகு எப்படி நாம் அவற்றை நம்புபவராக மாறுவோம். இருப்பினும், மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கூட, கர்மா பற்றிய ஒட்டுமொத்த விவாதமும் நம்முடைய வாழ்க்கையோடு மிக உறுதியான தொடர்பு கொண்டவை மேலும் அப்படி என்ன நமக்கு நடந்தாலும் நாம் அதனை எவ்வாறு கையாள்கிறோம் என்பதும் தொடர்புடையது.   

நமது வலுக்கட்டாய நடத்தையைக் கவனித்தல், நினைவாற்றல் மற்றும் பாகுபடுத்தும் விழிப்புணர்வை வளர்த்தல்

நம்முடைய வாழ்வில் நாம் என்ன அனுபவிக்கிறோம் என்பதுடன் அதனைத் தொடங்கி கையாள்வதற்கு, நாம் கவனித்தலை மேம்படுத்த வேண்டும். கவனித்தல், அல்லது கவனத்தை ஈர்த்தல் நம்முடைய மனச்செயல்பாட்டை ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நோக்கி ஈடுபடுத்துதலாகும். ஒவ்வொரு கணமும் நான் என்ன அனுபவிக்கிறோமோ அந்தப் பொருளாக இருந்தால், மேற்கத்திய வட்டத்தில் அதனை “நினைவாற்றல்” என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் பௌத்த அர்த்தத்திலான மனக்காரணி “மனநிறைவு” அல்ல. நம்முடைய வாழ்க்கையில் மனம் மற்றும் உணர்ச்சியில் என்ன நடக்கிறது என்பதில் நாம் கவனத்துடன் இருக்கும்போது, மனநிறைவு என்பது மனக் காரணியாகும், இது ஒரு மனப் பசை போல, அது கவனத்தை இழப்பதைத் தடுக்கிறது. நாம் மேலும் மேலும் கவனிப்பவராக மாறினால், நாம் எதையாவது செய்வதைப் போலவோ அல்லது எதையாவது சொல்வதைப் போலவோ உணர்ந்தால் அதனை சிறப்பாக அடையாளம் காண்பவராக நாம் மாறுவோம். அந்த எழுதலின் போது நம்மால் உணர முடியும் எதைச் செய்வதாகத் தோன்றுகிறதோ அதற்கும் வலுக்கட்டாயமான தூண்டுதல் நம்மை கொண்டு செல்லும் குறிப்பிட்ட நடத்தைக்கும் இடைப்பட்ட ஒரு இடத்தை நம்மால் அடையாளம் காண முடியும். 

ஆங்கிலத்தில், சொல்வழக்கில், யோசிக்காமல் அவர்கள் தலையில் வரும் முதல் விஷயத்தை அப்படியே சொல்கிறார்கள் என்று நாம் சிலரை விவரிப்போம். அவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது என்ன சொல்கிறோர்கள் என்ற உள்ளார்ந்த தணிக்கை இருக்காது. என்ன வருகிறதோ, மனக்கிளர்ச்சியுடன் அதை அப்படியே செய்வது அல்லது சொல்வது. ஆனால் உள்உணர்வு தோன்றுவதற்கும் அந்த உணர்வின் அடிப்படையில் செயல்படுவதற்கும் இடையில் இருக்கம் இடத்தை நாம் அடையாளம் கண்டால், “பாகுபடுத்தும் விழிப்புணர்வு” என நாம் சொல்வதை எப்படி பயன்படுத்தலாம், அந்த உணர்விற்கு செயல்படுவதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கும் நம்மை அனுமதிக்கும். ஒரு செயல் உதவிகரமானதா அல்லது வெறுமனே ஏராளமான பிரச்னைகளுக்கு காரணமானதா என்பதை நாம் பாகுபடுத்தலாம். அது ஏராளமான பிரச்னைகளை கொண்டு வரப்போவதற்கான காரணமென்றால், அது அழிவுகரமானது என்று புரிந்து கொண்டு நாம் அதற்கு செயல்படக் கூடாது. உதாரணமாக நாம் யாரிடமும், “நீங்கள் என்ன அழுக்கான ஆடையை அணிந்திருக்கிறீர்கள்” என்று சொல்லக் கூடாது, உண்மையில் அது உதவாது இல்லையா?

விஷயமென்னவென்றால் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுதல் அல்லது பேசுவதைப்போன்ற உணர்வுகள் பழக்கங்களில் இருந்து வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் – நான் இங்கே “பழக்கங்கள்” என்ற பொது சொல்லை கர்மத்திறன்கள் மற்றும் போக்குகளுக்காக பயன்படுத்துகிறேன். இந்த பழக்கங்கள் இந்த வாழ்நாள் அல்லது கடந்த ஜென்மத்தில் இருந்து வந்ததா என்பது உண்மையில் தொடர்பில்லாததாக மாறுகிறது. முக்கியமானது என்னவென்றால் கடந்த கால மாதிரிகள், கடந்த கால பழக்கங்கள் அடிப்படையில் நாம் வலுக்கட்டாயமாகச் செயல்படுகிறோம், அவற்றிற்கு நாம் ஏன் அடிமையாக இருக்க வேண்டும் அதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் மனிதர்கள், உள்ளுணர்வால் எந்தக்கட்டுப்பாடும் இன்றி செயல்பட நாம் விலங்குகளல்ல. மனிதர்களான நாம் அறிவாற்றலை கொண்டிருக்கிறோம்; இதன் அர்த்தம் எது உதவிகரமானது எது தீங்கானது என்று இரண்டையும் பாகுபடுத்தும் திறன் இருக்கிறது. கடந்த ஜென்மம் இருக்கிறதோ இல்லையோ, நம்முடைய தீங்கான பழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவது உண்மையில் முட்டாள்தனமானது என்பதை நாம் பார்க்க முடியும், அது நமக்கு மேலும் மேலும் பிரச்னைகளையே கொண்டு வரும். நமக்கு நாமே அதிகமான பிரச்னைகளை விரும்ப மனமின்றி, தீய பழக்கங்களின் வலுக்கட்டாயமானச் செயல்களால் அவற்றை வென்று வர நாம் முயற்சிக்கிறோம்.
சில வழிகளில், நாம் மீண்டும் மீண்டும் கட்டாய நடத்தை முறைகளை அடிமையாக்குவது போல் பார்க்க வேண்டும். நாம் மது, சிகரெட் அல்லது போதைப் பொருளுக்கு அடிமையாக முடியும். அதே சமயம் நம்மால் சூதாட்டம், அல்லது களவி, அல்லது மற்றவர்களிடம் சண்டையிடுதல் போன்ற செயல்களிலும் அடிமையாக முடியும். அடிமையை வென்று வர பௌத்தம் மற்றும் பௌத்தமல்லாததிலும் பல்வேறு முறைகள் இருக்கின்றன. நாம் இந்த முறைகளை மனசாட்சியுடன் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் நாம் கட்டுப்பாட்டை இழந்து மேலும் மேலும் பிரச்சனைகளை உருவாக்குகிறோம்.

எந்த வகை அடிமைத்தனமாக இருந்தாலும் அதன் முதல் அடி அதனை உணர்தல் மற்றும் நாம் அதற்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை ஒப்புகொள்ளுதலாலும். உண்மையில் இது கட்டாயமானது. நாம் ஒரு பிரச்னையை வெளியேற்றுவதற்காக செயல்படுவதற்கு மன்னர் அதனை அடையாளம் காண வேண்டும். ஆனால் சில அடிமைத் திட்டங்கள் அவர்கள் அடிமையாக இருப்பது சரியே, மாறாத அடையாளம் மற்றும் மேலும் அடிமையாக இருப்பதில் இருந்து உண்மையில் யாராலும் வெளிவர முடியாது என்று நம்ப வழிநடத்துகிறது; நம்முடைய அடிமை நடத்தையின் சரியான நிறுத்தத்தை நம்மால் எப்போதும் அடைய முடியாது. பௌத்த பார்வையில் இருந்து, நம்மால் அனைத்து அடிமைத்தனங்களில் இருந்தும் சுய- அழிவு வகையான நடத்தை உள்ளிட்ட நம்முடைய அடிமைத்தனங்கள் சரியான நிறுத்தத்தை அடைய முடியும், அதனால் அவை மீண்டும் எது. பௌத்த பயிற்சியாளர்களாக அதுவே நம்முடைய நோக்கமாகும். 

கட்டாய நடத்தைக்கான எங்கள் வடிவங்களை துறத்தல்

நம்முடைய வலுக்கட்டாயமான நடத்தையின் அடிமைத்தன வடிவங்களை வென்று வருவதற்கு துறத்தல் இங்கிருந்தே வருகிறது. துறத்தல் என்பதன் தீர்மானம் எதில் இருந்தோ விடுபடுவது அல்லது எதையாவது கைவிடுவதற்கான ஆவல் ஆகும். அதனுடன் தொடர்புடைய உணர்ச்சி உணர்வு முழு வெறுப்பு மற்றும் சலிப்பு: நம்முடைய நடத்தை அடிமைத்தனங்களுடன் நாம் சற்றே சலிப்புற்றிருக்கிறோம், அவை சுய–அழிவுகரமான எதிர்மறை அடிமைத்தனங்களோ அல்லது நரம்பியல் சார்ந்த நேர்மறையானவையோ. உதாரணமாக, நாம் எப்பொழுதும் பொறுமை இழந்து சத்தமிடுகிறோம் அல்லது கைகளை கழுவி சலித்துவிட்டோம். ஆகவே, கத்துவதைப் போன்றோ அல்லது நம்முடைய கைகளை மீண்டும் கழுவுவதைப் போன்றோ உணர்ந்தால் அவற்றை கழுவினாலும் கூட, அது போன்ற உணர்வுகளிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்கான உறுதியை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். முதல் படியாக, குறைந்தபட்சம் இதுபோன்ற உணர்வுகளைச் செய்யக்கூடாது என்ற உறுதியை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம், பின்னர் நாங்கள் சுய கட்டுப்பாட்டை பயிற்சிக்கிறோம், அப்படிச் செய்யாதீர்கள். மாறாக நிச்சயமாக சுய கட்டுப்பாடே முதல் நிலை. நம்முடைய வலுக்கட்டாயமான நடத்தையின் ஆழமான காரணத்தை நீக்குவதற்கு நாம் ஆழமாக செல்ல வேண்டும்.

கர்மாவைப் பற்றிய தவறான புரிதல்கள்

நம்முடைய அன்றாட வாழ்வில் கர்மாவின் போதனைகளை செயல்படுத்த முயற்சிக்கும் போது, அதன் தவறான புரிதல்களையும் நாம் பார்க்க வேண்டும் நமக்கு இது தேவை தான் மேலும் நாம் அனுபவிப்பது நம்முடைய கர்மாவின் பலனே. இந்த தோல்வி மனப்பான்மையுடன், கடந்த காலத்தில் நாம் கெட்ட பையன் அல்லது பொன்னாக இருந்திருக்கலாம் அதனால் நமக்கு இப்போது என்ன நடக்கிறதோ அது எனக்கு கிடைக்க வேண்டிய தண்டனையே என்று நினைக்கிறோம். நாம் இலக்கை நிர்ணயிக்கவில்லை என்றால், யாரும் அதை நோக்கி அம்பு எய்க்க மாட்டார்கள் என்ற சாந்திதேவாவின் போதனைகளை நாம் கண்டோம். கடந்த ஜென்மத்தில் நாம் அழிவுகரமான செயல்பட்டிருக்காவிடில், இப்போது மற்றவர்கள் நம்மிடம் கோபம் அடைவதை நம்மை மோசமாக நடத்துவதை அனுபவிக்க மாட்டோம். சாந்திதேவா கூறுவது மற்றவர்கள் மீது குறை கூறாமல், மாறாக நம் மீதே நாம் குற்றத்தை சுமத்திக் கொள்ள வேண்டும். 

நாம் ஒரு மோசமான நபர் என்ற உணர்ச்சியின் உச்சத்திற்கு செல்ல வேண்டியதல்ல, நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு நாங்கள் தகுதியானவர்கள் என்று அர்த்தம் இல்லை, எனவே நாம் வாய்மூடி, புகார் செய்யாமல், நம்முடைய தண்டனையை ஏற்க வேண்டும். கர்ம போதனைகளை நாம் கையாள்வதற்கான ஆரோக்கியமான வழியல்ல அல்லது அவற்றை பயிற்சிக்கு கொண்டு வருவதற்கான வழியும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இந்த அபாயகரமான பார்வையை விட, கர்ம போதனைகளின் இதர அம்சங்கள் நம்முடைய அன்றாட வாழ்வில் அதில் இருந்து எப்படி பலனடையலாம் என்பதை ஆராய வேண்டும். நமக்கு இப்போது ஏதோ நடப்பதை நாம் அனுபவித்தால், கர்ம போதனைகளில் இருந்து இதற்கான காரணம் நம்முடைய கடந்த கால நடத்தை என்பதை நாம் அனுமானிக்க முடியும். பல போதனைகள் நாம் என்ன அனுபவிக்கிறோம் மற்றும் முந்தைய அனுபவத்திற்கு இடையிலான தொடர்பை விவரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, எப்போதுமே நாம் நீடித்திருக்காத உறவுமுறையை அனுபவிக்கிறோம், நாம் நேசிக்கும் ஒருவருடன் இருக்க முடியவில்லை, அல்லது நம்முடன் எப்போதுமே மற்றவர்கள் உறவை முறித்துக்கொள்கிறார்கள் என்றால், மற்றவர்களைப் பற்றி பிரித்தாளும் பேச்சின் முடிவே அது. நம்முடைய சொந்த நண்பர்களே நம்மை விட்டுச் செல்வதை அனுபவித்தால், இது நம்முடைய கர்ம வினையாகும், அதில் நாம் அனுபவிக்கும் சூழல்களில் மற்றவர்கள் நம்மைப் போலவே ஏதேனும் செய்திருப்பார்கள்.

பிரித்தாளும் விதமாகப் பேசுவதில் இருந்து கனியும் கூடுதலான விஷயம் அந்த வகை நடத்தையை மீண்டும் செய்ய வலியுறுத்தும் வலுக்கட்டாயமான உணர்வு. கொடுக்கப்பட்ட இந்த விஷயத்துடன், நம்முடைய கர்மாவை ஆக்கப்பூர்வமான ஆயுதமாக புரிந்து கொள்ள, நம்மை நாமே நேர்மையாக பகுப்பாய வேண்டும். விமர்சிக்கும் திறன் நமக்கு இருக்கிறதா அல்லது மற்றவர்கள் பற்றி அவர்களின் விருப்பம், பணி, படிப்பு அல்லது அவர்களுடன் நட்பாக இருக்கும் மோசமான விஷயங்களைப் பேசலாமா.? நாம் அதிகமாக விமர்சிப்பதை காணக்கூடும். யாரையாவது பற்றி அரிதாகவே நல்ல விஷயங்களை சொல்லி இருப்போம் மேலும் அதிகமாக அவர்களைப் பற்றி தீய விஷயங்களை மட்டுமே சொல்லி இருப்போம். இது மிகப் பொதுவானது இல்லையா? மற்றவர்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட அதைப்பற்றி மற்றவர்களிடம் கூற மற்றும் அவர்களைப் பற்றி குற்றம்சாட்ட உண்மையில் நாம் ஆவலுடன் இருப்போம். ஆனால் மற்றவர்களின் நற்குணங்களில் நாம் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம் மேலும் மற்றவர்களிடம் அவர்களைப் பாராட்டுகிறோம்? நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது சற்றே அரிது. 

கர்மா பற்றிய இந்த போதனைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தக்கூடிய மிகவும் பயனுள்ள புள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். நம்முடைய வழக்கமான நடத்தையில் நாம் நடப்பதை அனுபவிக்கும் விஷயங்களின் வகைக்கு ஒத்த வடிவங்களைக் காணலாம். “மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு, என்னுடைய கடந்த காலத்தில் நான் மோசமாக இருந்திருக்கிறேன், நான் இதற்குத் தகுதியானவனே” என்ற வீழ்த்தும் அணுகுமுறையில் வீழ்வதற்கு பதிலாக இப்போது நம்முடைய நடத்தையை நோக்கி செயல்படுவதில் கவனம் செலுத்தலாம். யாரோ ஒருவரைப் பற்றி மோசமான ஏதோ ஒன்றை சொல்ல வேண்டும் போன்ற உணர்வு இருக்கும் இடத்தில் அதற்கு பதிலாக, நாம் அவர்களின் நற்குணங்கள் பற்றி அதிகம் சிந்தித்து அவர்களை போற்றலாம்.  

நாம் அடையாளம் காணக்கூடிய வெவ்வேறு வகையான கர்ம நோய்க்குறிகளுக்கான பல உதாரணங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நாம் ஏழைகளாக இருக்கலாம். நாம் எப்போதும் பலன் எடுத்துக்கொள்கிறோம் மற்றவர்களின் பொருட்களை பயன்படுத்துகிறோம், அவர்களைச் சுரண்டுகிறோம், யாருக்கும் எப்போதும் கட்டணம் செலுத்துவதில்லை, அவர்கள் நமக்கும் சேர்த்து கட்டணம் செலுத்துவார்கள் என்று எப்போதும் எதிர்பார்ப்பது – போன்றவற்றை பகுப்பாய்வின் மூலம் நாம் கண்டறியலாம். ஒருவரின் அனுமதியின்றி அவரின் உடைமைகளை பயன்படுத்திக் கொள்பவர்களை நான் குறிப்பாகச் சொல்கிறேன், அனுமதி கேட்காமலே மற்றவரின் குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவை எடுப்பதைப் போன்ற வகையான விஷயம். நம்முடைய உணர்வுகள் மற்றும் ஒத்த வழிகளில் செயல்படும் போக்குகளுடன், நமக்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அனுபவிப்பதில் இந்த தொடர்புகளை நாம் கவனிக்க முடியும். இந்திய குரு தர்மரக்ஷிதா, அவருடைய வீல் ஆஃப் ஷார்ப் வெப்பன்ஸ் மனப்பயிற்சி புத்தகத்தில் இது போன்ற பல தொடர்புகளை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

கூடுதலாக, விளைவுகள் எப்போதும் ஒரே ஒரு காரணத்தில் இருந்து வருவதில்லை என்பதை நாம் உணர வேண்டும். ஒரு வாளி முதல் சொட்டு அல்லது கடைசி சொட்டு நீராலும் நிறைந்து விடாது என்று புத்தர் கூறுவார். அது அனைத்து நீர்த்துளிகளின் தொகுப்பால் நிறைந்தது. நாம் அனுபவிக்கும் துன்பமானது கடந்த காலத்தில் நாம் செய்த ஒரே ஒரு மோசமான அல்லது சில மோசமான விஷயங்களின் திரட்டல்களின் முடிவல்ல. மாறாக, நாம் ஏதாவது அனுபவிக்க கிட்டத்தட்ட எண்ணிலடங்கா காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் ஒன்றாக வர வேண்டும். 

ஒரு காரில் நமக்கு அடிபட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். கார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் யாருக்காவது காயத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதல்ல. உண்மையில் நம்மை யார் காயப்படுத்தினாலோ அந்த நபரின் கர்மத் திறன்கள் அனைத்தும் கூட இதில் உள்ளடங்கும். அதன் பின்னர் காலநிலை, போக்குவரத்து நிலைகள் மற்றும் அந்த நேரத்தில் நாம் வெளியே சென்ற காரணங்களும் இருக்கின்றன. சாலையை கட்டமைத்தவர்களும் அங்கே இருக்கின்றனர். உண்மையில் காரில் அடிபடுவதை நாம் அனுபவிக்க ஏராளமான காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் ஒன்றாக வர வேண்டும்.

காரணம் மற்றும் விளைவுக்கான நம்முடைய பார்வையை விரிவுபடுத்தி குறிப்பிட்ட சில முடிவு வருவதற்கு பல காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் ஒன்று சேர்ந்து வரவேண்டும் என்று புரிந்து கொண்டால், பின்னர் இப்போது நமக்கு நடப்பது ஏற்றது தான் குற்றஉணர்வுக்கு ஆளாகும் திடமான “என்னை” மறுகட்டமைக்கத் தொடங்குவோம் இது முற்றிலும் நம்முடைய தவறு. நிச்சயமாக நாம் தான் பொறுப்பு, ஆனால் ஒருபுறம் நம்முடைய நடத்தைக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கும் மற்றொரு புறம் திடமாக இருக்கும் “என்னை” அடையாளம் காணுதல், குற்றஉணர்வு, மோசமான ஒன்று யாருடைய தவறு இது.

கர்மாவுடன் தொடர்புடைய வெற்றிடத்தை புரிந்துகொள்ளுதல்

காரணம் மற்றும் விளைவுக்கான நம்முடைய பார்வையை விரிவாக்கம் செய்வதுடன், இதனுடன் சேர்ந்துள்ள “மூன்று வட்டங்கள்” என்று அழைக்கப்படுவதை நாம் மறுகட்டமைக்க வேண்டும். இந்த மூன்று வட்டங்களை சூத்திரப்படுத்த பல வழிகள் இருக்கின்றன, ஆனால் கர்ம வினை என்ற சூழலுக்குள் நாம் அதனை கர்ம வினையை அனுபவிக்கும்“நான்” என்று சுட்டிக்காட்டமுடியும், கர்மாவின் வினை என்னவோ அது நாம் இப்போது அனுபவிப்பவை மற்றும் கடந்த காலத்தில் என்ன செய்தோமோ அந்த வினைக்கு காரணம் கர்மாவே. 

மூன்று வட்டங்கள் ஒன்றையொன்று சார்ந்து எழுவது மற்றும் சுயாதீனம் அற்றவை என்பதை நாம் புரிந்து கொள்ளாதபோது, அவை சார்ந்து எழுந்த எல்லாவற்றிலிருந்தும் சுயாதீனமாக, நாம் திடமான "என்னை" மனதளவில் உருவாக்கிப் பற்றிக் கொள்கிறோம். கடந்த காலத்தில் மிக மோசமாக இருந்திருக்கிறோம் அதனால் இப்போது நடப்பதற்கு தகுதியானவரே. ஒரு விதத்தில் நாம் சாட்சியாக மாறுகிறோம், அல்லது தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளியாக மாறுகிறோம், மேலும் திடமான அடையாளத்தை பிடித்துக்கொள்கிறோம். இது மிக மகிழ்ச்சியில்லாத மனநிலை, இல்லையா? 

நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருப்பதை மிகவும் கொடூரமானதாகக் கருதுகிறோம், கடந்த காலத்தில் நாம் செய்ததையும் மிகவும் கொடூரமானதாக மாற்றுகிறோம். முழு விஷயமும் குற்ற உணர்ச்சியுடன் நிறைவுற்றது மற்றும் நம்மை நினைத்தே நாம் வருத்தப்படுவோம். இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கையின் அனுபவத்தை மிக மிக மோசமாக்குகிறது.

 
எனவே, வெற்றிடம் பற்றிய சில புரிதலை கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. அது இல்லையெனில், விஷயங்கள் மிகவும் திடப்படுத்தப்படுகின்றன, மேலும் நாம் விவரிப்பது போல் அதிக சிக்கல்களையும் துன்பங்களையும் ஏற்படுத்தும் உச்சநிலைக்குச் செல்வது மிகவும் எளிதானது. ஆனால், வெற்றிடத்தைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லாவிட்டாலும், நாம் என்ன நினைத்தாலும், சொன்னாலும், செய்தாலும் அது கர்ம விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இதை மனதில் கொண்டு, நாசகரமான வழிகளில் செயல்படுவதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான பழக்கவழக்கங்களில் நடந்து கொள்ள வேண்டும், அதைச் செய்யுங்கள்.

அழிவுகரமான நடத்தையில் இருந்து விலகுதல்

பௌத்த நூல்களில் போதித்திருப்பதைப் போன்று எந்த விதமான அழிவுகரமான நடத்தைகளிலிருந்தும் விலகுவதற்கான வழக்கமான காரணி அதை செயல்படுத்துவதன் தீமைகள் பற்றி சிந்திக்க வேண்டியதாகும். ஏனெனில் அந்த நடத்தையின் முடிவாக துன்பத்தை அனுபவிக்க நாம் விரும்புவதில்லை, அதன் பின்னர் அழிவுகரமாக எதையாவது சொல்வது அல்லது செய்வதைப் போன்ற உணர்வு எழுந்தால், அதைச் செய்வதில் இருந்து நாம் விலகுவோம். ஆனால், பெரும்பாலான நேரம், நாம் உண்மையில் அந்த வழிகளில் சிந்திப்பதில்லை. அழிவுகரமான எதையாவது செய்வது சரியல்ல என்று நாம் உணர்ந்து விலகுகிறோம். உண்மையில் இது மிகவும் சுவாரஸ்யமானதாக மாறுகிறது, ஏனெனில் சில குறிப்பிட்ட வகைகளான எதிர்மறை நடத்தைகளான மோசடி, காழ்ப்புணர்ச்சி உள்ளிட்டவை சரியானதல்ல என்று நாம் எளிதில் உணர்கிறோம். அப்படித்தான் என்றால் அது சரியானதே. எதிர்மறையான விளைவுகளைப் பற்றி நாம் தீவிரமாக சிந்திக்காமல் இருக்கலாம், ஆனால் நாம் இன்னும் இன்னும் அந்த நடத்தைகளில் ஈடுபடவில்லை. 

இருப்பினும், கொசுக்களை கொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமானது கொசுவை அடிப்பது, அல்லது ஆப்ரிக்கா காட்டில் சவாரி வருவது போல அதைச் சுற்றி வருவது, வேட்டையாடுவது இறுதியில் என்னுடைய அறையில் அந்தக் கொசுவைக் கொல்வது போன்ற செயல்பாடு இரவு முழுவதும் என்னை விழித்திருக்கச் செய்கிறது. அது சரியாகத் தோன்றலாம். கொசுவிற்கு எதிராக நாம் ஒரு சவாரி செய்வது எவ்வளவு அபத்தனமானது என்பதை நாம் உணர்ந்தாலும் கூட, அதை பொருட்படுத்தாமல், நாம் தொடர்ந்து கொசுவைச் சுற்றி வருகிறோம், இல்லையா? பொருத்தமில்லாத உதாரணங்கள் பற்றி சிந்திப்பது இந்த விஷயத்தில் உண்மையில் மிக உதவிகரமானதாக இருக்கும்.  

இவ்வகையான அழிவுகரமான நடத்தைக்கு, பொறுமையின்றி கொசுவைக் கொல்வதால் வரப்போகின்ற தீமைகள் பற்றி சிந்திப்பது மிகத் தேவையான ஒன்றாக இருக்கும். இதற்கு அர்த்தம், கட்டாயமாக, நாம் நம்முடைய ரத்தத்தை கொசுவிற்கு தானமாக கொடுக்க வேண்டும் என்பதல்ல, மாறாக அமைதியான வழியை பயன்படுத்தி கொசுவை கையாள முயற்சிக்க வேண்டும். சுவற்றில் கொசு அமர்ந்தவுடன் ஒரு ஜாடி போட்டு மூடிவிட்டு ஒரு துண்டு பேப்பரை அடியில் வைத்து நம்முடைய அறையை விட்டு வெளியே எடுத்துச்சென்று கொசுவை விட்டுவிடலாம். இது மிக நடைமுறையான வழிமுறை, ஆனால் இதற்கும் கொசுவைச் சுற்றி நாம் சவாரி செல்லவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஜாடி மற்றும் துண்டு காகிதத்தைப் பயன்படுத்தும் போது நாம் இன்னும் மனதளவில் ஒரு சவாரி சென்று கொண்டிருக்கலாம்.   

உண்மையில், இந்தச் சூழ்நிலை பகுப்பாய்வதற்கு ஏற்றது. கொசு கடிப்பதனால் ஏற்படும் அறிப்பை நாம் விரும்பாததால் நம்முடைய அறையை விட்டு கொசுவை வெளியேற்றுகிறோமா, அல்லது கொசுவிற்காக நாம் சிந்திக்கிறோமா? நிச்சயமாக, நாம் கொசுவின் உணவை பிடுங்குகிறோம். தொடர்ச்சியாக நாம் கொசுக்கள் அல்லது பூச்சிகளைக் கொன்று கொண்டிருப்பதை கருத்தில் கொள்ளுங்கள், அல்லது அது எப்படி இருந்தாலும், நாம் எந்த வகை பழக்கத்தை கட்டமைக்கிறோம்? நாம் கட்டமைக்கும் பழக்கமானது நம்மை ஏதேனும் கோபப்படுத்தினால், நம்முடைய முதல் பதில் அவற்றை கொல்வது. ஒரு அமைதியான வழியைப் பயன்படுத்த முயற்சிப்பதை விட, எரிச்சலிலிருந்து விடுபட வன்முறை வழிகளைப் பயன்படுத்தும் போக்கு. ஆகவே, கொசுவை ஒரு ஜாடி மற்றும் துண்டு காகிதத்துடன் வேட்டையாடும் போது, குறைந்தபட்சம் வெறுப்புடன் அதை செய்யாமல் இருங்கள்.  இது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கை வடிவம், அது நம் இடத்தை ஆக்கிரமித்துள்ளதால் நாம் அதை அகற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.

அந்தக் கொசு கடந்த ஜென்மத்தில் நம்முடைய தாயாக இருந்திருக்கலாம் என்பது போன்ற நாம் செயல்படுத்தக்கூடிய கூடுதல் மேன்மையான பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, இதை நேர்மையாகச் செய்வது சற்றே கடினமானதாகும். முக்கிய விஷயம் என்னவென்றால், சில விஷயங்களுக்கு அழிவுகரமாக செயல்படாமல் இருப்பது சரியென உணர்தல், ஆனால் மற்ற விஷயங்களுக்கு நாம் உண்மையிலேயே நம் உந்துதலை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். 

கர்ம போக்குகள் மற்றும் திறன்களைத் தூண்டும் காரணிகள்

நான் குறிப்பிட விரும்பும் மற்றொரு விஷயம், நமது கர்மப் போக்குகள் மற்றும் ஆற்றல்களைச் செயல்படுத்தி அவை கனிய வைக்கும் குறிப்பிட்ட காரணிகளைப் பற்றியது. மரணத்தின் போது கர்ம ஆற்றலைச் செயல்படுத்தும் காரணிகளின் அடிப்படையில் எழும் சார்பின் பன்னிரண்டு இணைப்புகள் பற்றிய போதனைகளில் அவை விவாதிக்கப்படுகின்றன. இந்தக் காரணிகள் நம்முடைய மனத்தொடர்ச்சியை எதிர்கால மறுபிறப்புக்கு “வீசுகின்றன.”

இந்தக் காரணிகளில் முதலாவது ஏக்கத்திற்கான இணைப்பு. இந்த இணைப்புக்கான திபெத்திய வார்த்தையின் மொழியாக்கம் “ஏக்கம்”, ஆனால் சரியான சமஸ்கிருத வார்த்தை உண்மையில் அர்த்தப்படுத்துவது “தாகம்” என்பதாகும். மற்றொரு காரணியானது பொதுவாக “இறுகப்பிடித்தல்” என்று மொழியாக்கப்படுகிறது. அது தெளிவான மொழிபெயர்ப்பு அல்ல ஏனெனில் “இறுகப்பிடித்தல்” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படும் வேறு சில வார்த்ததைகளும் உள்ளன, அதுவே “சரியான இருத்தலை இறுகப்பிடித்தல்” இந்த இதர வார்த்தைகளும் இதுவும் ஒன்றல்ல. இங்கே சொல்லப்படும் இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் “எதையாவது அடைதல்” அல்லது “எதையாவது பெறுதல்.” “பெறுபவர்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதையே நான் பரிந்துரைக்கிறேன். இது பெறுபவரின் அனுபவம் அல்லது பெறுபவரின் அணுகுமுறை, நாம் அதனை மேம்படுத்தினால், எதிர்கால மறுபிறப்பை நாம் பெறுவோம் அல்லது நமக்காக பெற்றுக் கொடுக்கும். பன்னிரண்டு இணைப்புகளின் பின்னணியில் இவை எதிர்கால மறுபிறவிக்கு கர்மா வீசுவதை செயல்படுத்துவதாக விளக்கப்பட்டாலும், அவை ஒவ்வொரு தருணத்திலும் நமது கர்ம ஆற்றல்களையும் போக்குகளையும் செயல்படுத்தும் மாற்று விளக்கங்கள் உள்ளன. 

கர்மா பற்றிய போதனைகள் நம் அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு பொருத்தமானவை என்ற நமது தலைப்புக்கு இது மிகவும் பொருத்தமானது. முதலில் ஏக்கம் என்றால் என்ன? இந்த தாகம் எனப்படுவது என்ன? இது நாம் உணரும் ஒருவித மகிழ்ச்சி அல்லது துரதிர்ஷ்டத்தை இலக்காகக் கொண்ட ஒரு மனக் காரணியாகும், இது ஒரு பெரிய விஷயமாக உருவாக்குகிறது; அது மிகைப்படுத்துகிறது. மகிழ்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம், நாம் அது முடிவடையக் கூடாது என்ற தாகத்தை கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியின்மை அல்லது துன்பம் என்கிற ரீதியில், அது முடிவடைய வேண்டும் என்று தாகம் கொள்கிறோம். ஒரு நடுநிலை உணர்வைப் பொறுத்தவரை, இது அதிக அளவில் உள்வாங்கப்படும்போது நாம் அனுபவிப்பதை குறிக்கிறது.

மொத்த ஒருநிலைபடுத்தல் நிலைகளே, தியானங்கள் என்று அழைக்கப்படுகிறது. அந்த நிலைகளில், நடுநிலை உணர்வு குறையக் கூடாது என்று நாம் தாகம்கொள்கிறோம். வெளிப்படையாக, நம்மிடம் உள்ள தாகம் மற்றும் பிடித்தலில் வெவ்வேறு நிலைகள் இருக்கலாம். 

சிக்கலான உணர்வுகள் மற்றும் சிக்கலான அணுகுமுறைகளின் பட்டியலை பெறுபவர்கள் குறிக்கின்றனர். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை, தாகத்துடன் இணைந்து, நமது கர்ம ஆற்றல்கள் மற்றும் போக்குகளின் செயல்பாட்டைத் தூண்டுகின்றன. இந்தப் பட்டியலிலிருந்து நமக்குள்ளே இருக்கும் மிக முக்கியமான ஒன்று "நான்" என்ற உண்மையான இருத்தல், இது நம் உடலுக்குள் நாம் அனுபவிக்கும் ஒன்று - நம் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் பலவற்றைப் போன்றது - அல்லது உண்மையிலேயே இருக்கும் உரிமையாளராக அது "என்னுடையது."

சுருக்கமாகச் சொன்னால், தாகம் என்பது ஒரு மட்டத்திலான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை நோக்கப்படுத்துகிறது, பெறுபவரின் அணுகுமுறையானது அதனை அனுபவிக்கும் “நான்” என்பதை நோக்கப்படுத்துவது. உணர்வுகளின் வெற்றிடம் மற்றும் "நான்" என்ற வெற்றிடத்தைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லாவிட்டாலும் கூட, நம் கர்ம ஆற்றலைச் செயல்படுத்துகின்ற இந்த பகுப்பாய்வை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம். ஒவ்வொரு கனமும் நாம் குறிப்பிட்ட அளவிலான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை உணர்கிறோம். உதாரணமாக "எட்டு உலக தர்மங்கள்" என்று அழைக்கப்படும் போதனைகளை நாம் இன்னும் அவற்றிற்கு பயன்படுத்தலாம்.

“உலகியல்” என்று மொழிபெயர்க்கப்படும் திபெத்திய வார்த்தை, ஜிக்டென் (‘ஜிக் ர்டென்), உலகியல் தர்மங்கள் என்னும் வார்த்தை இரண்டு அசைகளால் உருவானது. டென் என்பதன் அர்த்தம் ஒரு அடிப்படை, ஜிக் என்பதன் அர்த்தம் விழுந்து அழுகிப்போகும் பொருள் என்பதாகும். எட்டு உலகியல் தர்மங்கள் அல்லது எட்டு உலகியல் அக்கறைகள் நம் வாழ்வில் நடக்கும் அழிந்துபோகும் அடிப்படையிலான விஷயங்களுக்கான அணுகுமுறைகளைக் குறிக்கிறது. ஒரு நிலையான அடிப்படை இல்லாத மற்றும் தற்காலிகமான வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் அல்லது முற்றிலும் மனச்சோர்வடைகிறோம். 

கர்ம ஆற்றல்களின் இந்த செயல்பாட்டாளர்களின் விஷயத்தில், சம்பந்தப்பட்ட உலகியல் தர்மங்கள் நாம் மகிழ்ச்சியானவர்களாக இருக்கும்போது மகிழ்ச்சியாகவும் உண்மையில் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கும் போது மனச்சோர்வாகவும் உணர்கிறோம். இந்த சந்தர்ப்பங்களில், ஒரு நிலையற்ற அடிப்படை என்ன? அது நாம் உணரும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை. நிலையான அடிப்படை இல்லாததால், அவை நிலையற்றவை. ஆனால் அவர்கள் திடமாக இருப்பதைப் போல நாம் ஒரு பெரிய தீர்வை உருவாக்கி, அவை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நினைப்பதால், அவை நிகழும்போது மிகுந்த மகிழ்ச்சியோடு அல்லது முற்றிலும் மனச்சோர்வடைந்து மிகைப்படுத்துகிறோம். தாகமான மனிதனைப் போல ஒரு சிப் தண்ணீர் பெற்றதும், மகிழ்ச்சியின் சுவையை அனுபவித்ததால் மிக்க மகிழ்ச்சியடைகிறோம், அதை எப்போதும் இழந்து விடக் கூடாது என்று விரும்புகிறோம். மேலும் தாகத்துடன் இருக்கும் மனிதனைப் போன்று தண்ணீரே கிடைக்காவிட்டால் துன்பப்படுகிறோம், நாம் மகிழ்ச்சியற்றவராக உணரும் போத அனைத்து மனச்சோர்வையும் பெறுகிறோம் மேலும் அது மறைந்து போக வேண்டும் என்று ஏங்குகிறோம். 

மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற உணர்வுகள் நோக்கிய சமநிலை

இந்திய குரு சாந்திதேவா இந்த அணுகுமுறைகளை சிறுபிள்ளைத்தனமானவை என்று குறிப்பிடுகிறார். நாம் உணரும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை மிகைப்படுத்தும் இவ்வகையான சிறுபின்னைத்தனமானவற்றை நாம் வென்று வர வேண்டும். இதனைச் செய்வதற்கு, நாம் சமநிலையை மேம்படுத்த வேண்டும். “சமநிலை” என்பதன் பொருள் மகிழ்ச்சி போன்ற எந்த வகை உணர்வாக இருந்தாலும் நாம் எதனை அனுபவித்தாலும் மிகைபடுத்தாமல் இருக்க வேண்டும், ஏனெனில் எளிய மொழியில் இதனை புகுத்திச் சொல்வதானால், சமாசாரியத்தின் இயல்பு அது ஏற்ற இறக்கங்களுடன் செல்லும். சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியான உணர்வோம் மேலும் சில நேரங்களில் மகிழ்ச்சியின்மையை உணரலாம். அது இயல்பான ஒன்று தான். நாம் எப்போது மகிழ்ச்சியாக அல்லது மகிழ்ச்சியின்மையாக உணர்வோம் என்பதை அனுமானிக்க முடியாது. வெளிப்படையான காரணமின்றி நம்முடைய மனநிலை சட்டென்று மாறலாம். நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையின் மட்டம் வியத்தகு நிலையில் இருக்க வேண்டியதில்லை. அது மிகத் தாழ்வான நிலையில் இரக்கலாம். இங்கே சொல்லப்படும் முக்கியமான வார்த்தைகள், நாம் எப்படி உணர்கிறோம் என்பது பொருட்டல்ல, “இதில் சிறப்பாக ஒன்றுமில்லை”.

உண்மையில் அது மிகவும் ஆழமான விஷயம். “சிறப்பாக ஒன்றுமில்லை” என்பதன் அர்த்தம் வியத்தகு விஷயம் ஒன்றுமில்லை, அசாதாரணமாக ஒன்றுமில்லை. நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக, விஷயங்கள் மேலும் கீழுமாக சென்ற கொண்டிருக்கும், அதனால் நாம் அதில் விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. நாம் வாழ்வில் என்ன அனுபவித்தாலும், சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் மேலும் சில நேரங்களில் மகிழ்ச்சியின்றி இருப்போம். கட்டாயமாக, மகிழ்ச்சியின்மையானது அழிவுகரமாக செயல்படுவதில் இருந்து வருகிறது, மகிழ்ச்சி ஆக்கப்பூர்வமான செயல்களில் இருந்து வருகிறது என்பதை நாம் உணர்வோம். ஆனால் நாம் மிகவும் அற்புதமாகவோ அல்லது பயங்கரமானதாகவோ உணர்கிறோம். "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" அல்லது "பாவம், நான் மிகவும் பரிதாபமாக இருக்கிறேன்" என்பது போல ஒரு பெரிய திடமான "என்னை" உடன் நாம் ஒட்டிக்கொள்ள தேவையில்லை.

தெளிவாக, வழக்கமாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், மகிழ்ச்சியற்றவராக இருக்க விரும்பவில்லை. இதனுடன், வழக்கமாக, நம்முடைய பௌத்த பயிற்சிகளுடன் நாம் விடுதலை மற்றும் ஞானமடைதலை நோக்கமாகக் கொள்கிறோம், அதில் நாம் மகிழ்ச்சியின்மை மற்றும் துன்பப்படுதலில் இருந்து விடுபடுகிறோம். ஆனால் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இது தான் இங்கே விஷயம். நம் அன்றாட வாழ்வில் கர்மா குறித்த இந்த போதனைகளின் தொடர்பையும் அது நமக்கு அதிக மன அமைதியைத் தருவதையும் இது குறிக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் கடக்கும் நம்முடைய மாறும் மனநிலைகளில் சமநிலையை கொண்டிருப்பதில் இருந்து மன அமைதியானது வருகிறது, ஏனெனில் இயல்பாகவே சில நேரங்களில் மகிழ்ச்சியையும், சில சமயங்களில் மகிழ்ச்சியின்மையையும் நாம் அனுபவிக்கப் போகிறோம். அது சம்சாரியத்தில் ஒரு பகுதி; அதில் என்ன எதிர்பார்ப்பது. நாம் இப்போது செய்து கொண்டிருக்கும் தர்ம பயிற்சி வகையை தொடர்ந்தாலே போதும். எந்த நேரத்திலும் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இல்லையெனில், அதனால் என்ன?

வாழ்வின் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்கள்

நாம் எந்த உணர்ச்சி கொண்டிருப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம், நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது மகிழ்ச்சியற்றவராகவோ, எப்போதும் உணர்ச்சிகளற்ற ஒருவராக மாற வேண்டும் என்பதோ அல்ல. நிச்சயமாக இப்படி இருக்க வேண்டியதில்லை. மகிழ்ச்சியாக அல்லது மகிழ்ச்சியற்று இருப்பது பரவாயில்லை. நல்லதாக எதாவத நடந்தால், நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். நல்லதாக எதாவது நடக்காவிட்டால் நாம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. உதாரணமாக, நாம் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறோம், அங்கே நமக்கு பிடித்த உணவை சாப்பிட விரும்புகிறோம், ஆனால் அவர்களிடம் அந்தப் பண்டம் இல்லை. அவர்களிடம் அந்த உணவு விற்றுத் தீர்ந்துவிட்டால் நாம் அவ்வளவு மகிழ்ச்சியடைவதில்லை. அது மோசமானது, ஆனால் நாம் அதனை பெரிதுபடுத்துவதில்லை. மகிழ்ச்சியின்றி உணர்வது பரவாயில்லை, ஆனால் அதையே பிடித்துக்கொண்டு மோசமான மனநிலையில் இருப்பது சரியல்ல.    

அது ஒரு சிறுபிள்ளைத்தனமான உதாரணமாக இருக்கலாம், ஆனால் மிகப் பொருத்தமான உதாரணம் நம்முடைய நேசத்திற்குரியவரின் இறப்பு. நாம் சோகமாகவும் மகிழ்ச்சியின்றி உணர்வது சற்றே இயல்பானது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில், துக்கம் அனுசரிக்காவிட்டால் மிக ஆரோக்கியமற்றது. ஆனால் அந்த துக்கத்தையே பிடித்துக்கொண்டு அந்த சோகத்துடன் பெரிய திடமான “நான்” என்ற உண்மையான அடையாளமாக இருத்தல் மிகவும் அபாயகரமானது. மற்றொரு பார்வையில் இருந்து பார்த்தால், நாம் யாருடனாவது தொடர்ந்து இருந்து கொண்டு, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் மிகச் சிறப்பான நேரத்தை கொண்டிருக்கிறோம் இல்லையா? என்று சொல்வது ஒட்டு மொத்த மனநிலையையும் அழிக்கும், சரிதானே? வாழ்வின் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களை வெறுமனே அனுபவியுங்கள். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ இல்லையோ – அது பெரிய விஷயமல்ல, சிறப்பாகவும் எதுவும் இல்லை.

இந்த சமநிலையுடன், மற்றொரு அணுகுமுறை மற்றும் வெளித்தோற்றம் நாம் மகிழ்ச்சியற்றவராக விஷயங்கள் மோசமாக சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் இதன் கர்மக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். நாம் ஏற்கனவே கலந்தாலோசித்ததைப் போல, நாம் பகுப்பாய்ந்த அதன் வடிவத்தை பார்க்க முயற்சிக்கலாம், அதே போன்ற ஒன்றை நாம் எப்படி திரும்பத்திரும்பச் செய்கிறோம் என்று பாருங்கள் அதில் செயலாற்றுங்கள். 

லாம்-ரிம்மின் தரப்படுத்தப்பட்ட நிலைகளில் உள்ள மூன்று மட்டங்களிலான உந்துதல்

நான் குறிப்பிட விரும்பும் மற்றொரு விஷயம் அக்கறைபடுத்துவது தரப்படுத்தப்பட்ட பாதையின் நிலைகளான லாம் – ரிம்மில் வழங்கப்பட்டுள்ள மூன்று மட்டங்களிலான உந்துதல். பொதுவாக, கர்மா பற்றிய போதனைகள் உந்துதலின் ஆரம்ப நிலை நம்பிக்கையுடன் வழங்கப்பட்டுள்ளது. அழிவுகரமாக செயல்படுவதில் இருந்த நாம் விலகுகிறோம் ஏனெனில் அவ்வாறு விலக்காவிட்டால் துன்பப்படும் விளைவுகரள நாம் அனுபவிக்க நேரிடும் என்று அஞ்சுகிறோம். நம்முடைய செயல்களின் விளைவாக மற்றவர்கள் என்ன அனுபவிக்கப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாத. அவற்றின் தாக்கம் பற்றி அவர்களுக்கு நாம் உத்திரவாதம் தர முடியாது. ஆனால், நம் பக்கத்தில் இருந்து, நம்முடைய அழிவுகரமான செயல்களில் இருந்து அதன் விளைவாக உண்மையில் நாம் துன்பப்படுதல் மற்றும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்க விரும்பவில்லை. நாம் பயம் அல்லது அச்சம் கொள்கிறோம், ஆனால் நாம் அதனை ஆரோக்கியமான வரியில் செய்கிறோம். தண்டனைக்கான பயத்தை பற்றி நாம் பேசவில்லை. உண்மையில் நாம் துன்பப்படுதல் மற்றும் மகிழ்ச்சியின்மையை தவிர்க்க விரும்புகிறோம். கூடுதல் குறிப்பாக, எதிர்கால வாழ்வில் துன்பப்படுதல் மற்றும் மகிழ்ச்சியின்றி இருத்தலை தவிர்ப்பதற்கு நாம் விரும்புகிறோம். இது தொடக்க நிலை நம்பிக்கை உந்துதலாகும்.

இடைமட்ட அளவில், அனைத்து வகையான வலுக்கட்டாயமான கர்ம நடத்தையை தவிர்ப்பதற்கு நாம் விரும்புகிறோம், ஏனெனில் நாம் விடுதலை பெற விரும்புகிறோம். நாம் விடுதலை பெறவில்லையெனில், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையின் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எவ்வளவு பயங்கரமானது அது. 

மேம்படுத்தப்பட்ட உந்ததல் நோக்கத்துடன், நாம் அனைத்து வகைகளான வலுக்கட்டாயமான கர்ம நடத்தையில் இருந்து விலக விரும்புகிறோம் ஏனெனில் அவை மற்றவர்களுக்கு நாம் உதவும் திறனை உண்மையில் பாதிக்கின்றன. எப்போதும் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களுடன் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தால் மேலும் மகிழ்ச்சியில்லாத சில விஷயங்கள் தொடர்ந்து நமக்கு நடந்து கொண்டே இருந்தால் நம்மால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்? மற்றவர்களை பாதிக்கும் என்பதைப் பற்றி உண்மையில் நாம் மனிதாபிமான வழியில் சிந்திப்பதில்லை. அவர்களுக்கு உதவும் நமது திறனுக்கான இடையூறுகள் பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோம்.

நெறிமுறை நடத்தை பற்றிய பௌத்த மனப்பான்மைக்கும் மேற்கத்திய மனிதாபிமான அணுகுமுறைக்கும் "நான் செய்யும் செயல்களால் யாரையும் காயப்படுத்தாத வரை பரவாயில்லை" என்ற வித்தியாசம் உள்ளது. அந்த அணுகுமுறையில் எந்த தவறும் இல்லை, தவிர மற்றவர்கள் மீது நம் நடத்தையின் விளைவு என்ன என்பதை நாம் உண்மையில் உத்தரவாதம் அளிக்க முடியாது. உதாரணமாக நாம் யாருக்காகவாவது எதையாவது திருடலாம், அவர்கள் அதற்காக சந்தோஷப்படலாம் ஏனெனில் அது பயங்கரமான சூழ்நிலை மேலும் அவர்கள் காப்பீட்டை வசூலிக்க முடியும். மற்றொரு புறம், நாம் யாருக்காவது பெரிய அளவிலான பணத்தை கொடுக்கலாம் அவை திருடு போகலாம் மற்றும் அவர் பணத்திற்காக கொல்லப்படலாம். 

நிச்சயமாக நாம் பௌத்தத்தில் அன்பு மற்றும் இரக்கத்தை மேம்படுத்தலாம், நாம் மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், மேம்பட்ட உந்துதல் நம்பிக்கையுடன், மற்றவர்களுக்கு உதவுவதற்கான நமது திறனைக் கட்டுப்படுத்தும் எதையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை என்பதே முக்கியமானதாகும். அந்த வகை உந்துதல் ஞானத்தை நோக்கி செயல்படும் மொத்த பௌத்த ஆன்மிகப் பாதைக்கும் நன்றாக பொருந்திப் போகிறது மேலும் அதனால் நமக்கு சாத்தியப்படும் முழு அளவில் மற்றவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். பௌத்தத்தில் கர்மா பற்றிய ஆலோசனைக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

நமது தினசரி நடத்தையின் அடிப்படையில், இந்த மகாயன உந்துதலின் பொருத்தமானது, இது நமது நெறிமுறை சுய ஒழுக்கத்திற்கு வலிமை சேர்க்கிறது. நாம் அழிவுகரமாக செயல்பட்டால், நம்மால் உண்மையில் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்? உதாரணமாக, நாம் எப்பொழுதும் பெருமை பேசுகிறோம் அல்லது மற்றவர்களை ஏமாற்றினால், யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். பிறகு என்படி நம்மால் யாருக்காவது உதவ முடியும்? கூடுதல் குறிப்பாக, ஆசிரியர்களான நாங்கள், எங்களுடைய கர்ம வினையை எங்களுடைய மாணவர்கள் சட்டென்று எங்களை விட்டுச் செல்லும் வடிவத்தில் அனுபவிக்கிறோம் –நம்முடைய கடந்த உதாரணத்தை பயன்படுத்தி – நம்மால் உண்மையில் எப்படி உதவ முடியும்? நம்முடைய மாணவர்கள் நம்மோடு எப்போதும் இருப்பதில்லை. அவர்கள் எப்போதும் விட்டுச் சென்றுவிடுகிறார்கள். மற்றவர்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டு, மாறாக மற்றவர்களின் நற் குணங்களைப் பற்றி பேசலாம் என்று உறுதியாக, தெளிவாக நமக்கு உந்துதல் தருகிறது. 

ஆக்கப்பூர்வமான நடத்தையுடன் வழங்கப்படும் இரண்டு மனக்காரணிகள்

ஒரு இறுதிப் புள்ளி அங்கே இருக்கிறது. மிகப்பெரிய இந்திய குரு வசுபந்து அபிதர்மகோஷத்தில், அறிவின் சிறப்புத் தலைப்புகளின் புதையல் - பெட்டகத்தில் எந்த ஆக்கபூர்வமான செயலுடனும் எப்போதும் இரண்டு மன காரணிகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும், அசங்கா தன்னுடைய நூலில், இந்த மனக்காரணிகளை மற்றொரு வழியில் விவரிக்கிறார், நாம் வசுபந்துவின் விளக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காரணிகளில் முதன்மையானது நல்ல குணங்கள் மற்றும் அவற்றைக் கொண்டவர்களுக்கு மரியாதை அளிப்பதாகும். இரண்டாவது அழிவுகரமான திமிர்தனத்தை விலக்க வேண்டும். “திமிர்த்தனம்” என்பதன் பொருள் நாம் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதாகும். நாம் எந்த சுய- கட்டுப்பாட்டையும் பயிற்சிக்கப் போவதில்லை. நாம் கவலைப்படவில்லை அதனால் நாம் எப்போதும் அழிவுகரமாக இருப்பதில் இருந்து விலகுவதில்லை. நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதனை செய்கிறோம்.  

ஆக்கப்பூர்வமான நடத்தையுடன், நாம் எதிர்மறை அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறோம்: நேர்மறை குணங்களுக்கு நாம் மரியாதை கொண்டிருக்கிறோம் மேலும் அதனை யார் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சுய-கட்டுப்பாட்டை பயிற்சிக்கிறார்கள். நம்முடைய செயல்கள் எப்போதும் அழிவுகரமான மற்றும் திமிர்த்தனமானதாக இருக்கக் கூடாது; நாம் என்ன சொல்கிறோம் மற்றும் செய்கிறோம் என்பதைப் பற்றி அக்கறைப்பட வேண்டும். "அதைச் சரியாக உணர்கிறோம்" என்பதை ஒருவேளை நமக்கு அது நினைவூட்டுகிறது. 

இது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதை வலியுறுத்த வேண்டும் மற்றும் எப்போதும் நமக்கு நினைவூட்ட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. பொறுமை மற்றும் இரக்கம் போன்ற நல்ல குணங்களுக்காகவும், அந்த குணங்கள் உள்ளவர்களுக்காகவும் நாம் நமது மிகுந்த மரியாதையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். மிகப்பெரிய உத்வேகத்திற்கு அவை ஆதாரங்கள். கூடுதலாக, நாம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம் என்பதையும், நாம் சொல்வதையும் செய்வதையும் கவனித்துக் கொள்ள விரும்புகிறோம் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும், மேலும் முற்றிலும் அழிவுகரமாகவும் கொடூரமாகவும் செயல்பட வேண்டாம். 

முடிவுரை குறிப்புகள்

கர்மாவைப் பற்றியும், இந்த போதனைகளை நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பொருத்தமானதாக ஆக்குவது என்பதையும் பற்றி நாம் நிறையப் பார்த்தோம். இந்த இரண்டு காரணிகளையும் ஜீரணிக்க சிறிது நேரம் ஒதுக்குவோம். சுருக்கமாகச் சொன்னால், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், நாம் நல்ல பையன் அல்லது நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே அதனை எளிமையாகச் செய்ய வேண்டாம். அது அடிப்படையல்ல. மாறாக, நல்ல குணங்கள் மற்றும் அவற்றைக் கொண்டவர்களுக்கு மரியாதை அடிப்படையில் ஆக்கபூர்வமாக செயல்படுகிறோம், மேலும் எந்த சுயக்கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படையாக அழிவு செய்பவர்களாக இருப்பதைத் தவிர்ப்பது சரியானது. நாம் அதை செய்ய வேண்டும் மற்றும் அது போல் செயல்பட வேண்டும்!

Top