சரியான முயற்சி, மனநிறைவு மற்றும் ஒருமுகப்படுத்துதல்

கண்ணோட்டம்

எண்மார்க்க பாதையை கடைபிடிப்பதன் மூலம் அன்றாட வாழ்வில் மூன்று பயிற்சிகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மூன்று பயிற்சிகள் உள்ளன அவை:

  • நன்னெறி சுய-ஒழுக்கம்
  • ஒருமுகப்படுத்துதல்
  • விழிப்புணர்வை பாகுபடுத்துதல்

நன்னெறி சுயஒழுக்கத்தை மேம்படுத்த நாம் சரியான பேச்சு, செயல், நடத்தை மற்றும் வாழ்வியலை செயல்படுத்த வேண்டும். நாம் இப்போது சரியான முயற்சி, சரியான மனநிறைவு மற்றும் சரியான ஒருமுகப்படுத்தலுக்குத் தேவையான பயிற்சியை பார்க்கலாம்.

சரியான முயற்சி என்பது அழிவுகரமான சிந்தனைகளில் இருந்து விடுபடுவது மற்றும் தியானத்திற்கு உகந்த மனநிலையை வளர்த்தல்.

மனநிறைவு என்பது எதையும் விட்டு விடாமல் பிடிமானமாக இருப்பதற்கான மனப்பசை போன்றது, அது நாம் எதையாவது மறந்து விடாமல் இருப்பதை தடுக்கிறது:

  • நம்முடைய உடலின் உண்மையான தன்மை, உணர்வு, மனம் மற்றும் மனதின் காரணிகளை மறக்காதிருந்தால், அவை நம் கவனத்தை திசை திருப்பாது.
  • நம்முடைய பலவிதமான நன்னெறி வழிகாட்டுநெறிமுறைகள், நல்லொழுக்க நெறியுரை அல்லது நாம் ஏற்றுக்கொண்டவை, சபதங்களுக்கான பிடிமானத்தை இழக்காமலிருத்தல்.
  • செல்ல விடாதிருத்தல் அல்லது கவனம் செலுத்துதலுக்கான பொருளை மறத்தல்.

எனவே நாம் தியானம் செய்தால், வெளிப்படையாக நமக்கு மனநிறைவு தேவை எனவே நாம் கவனம் செலுத்தும் பொருளை இழக்க மாட்டோம். நாம் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தால், அவர் என்ன கூறுகிறார் என்று நாம் அந்த நபரிடமே கவனம் செலுத்த வேண்டும்.

ஒருமுகப்படுத்துதல் என்பது நாம் கவனம் செலுத்தும் பொருள் மீதே மனதை வைத்தல். எனவே நாம் யாரோ பேசுவதை கவனித்தால், நம்முடைய கவனம் அவர்கள் என்ன சொல்கிறார்கள், அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் உள்ளிட்டவை குறித்தே ஒருமுகப்பட்டு இருக்கும். மனநிறைவு ஒருமுகப்படுத்துதலை பராமரிக்க உதவுகிறது, அது ஒரு மனப்பசையாக இருக்கிறது, இதனால் நாம் சோர்வாகவோ அல்லது கவனச்சிதறலுக்கோ உள்ளாக மாட்டோம்.

முயற்சி

ஒருமுகப்படுத்துதலை மேம்படுத்த எண்மார்க்க பாதையில் பயன்படுத்ததப்படும் முதல் காரணி இதுவே. கவனச்சிதறலை ஏற்படுத்தும் சிந்தனைகள் மற்றும் ஒருமுகப்படுத்துதலுக்கு உகந்ததாக இல்லாத உணர்வுகளின் நிலையில் இருந்து விடுபடுவதற்கான விடாமுயற்சியை எடுப்பதோடு, நல்ல குணங்களையும் வளர்த்துக்கொள்ள முயற்சித்தல். பொதுவாகவே நம்முடைய வாழ்வில் நாம் எதையேனும் அடைய நினைத்தால், நாம் விடாமுயற்சி செய்ய வேண்டும். எதுவும் செய்யாமலே எதுவும் கிடைக்காது, மேலும் அது எளிமையானது என்று யாரும் கூறவில்லை. ஆனால், நன்னெறி சுய-ஒழுக்கத்துடன் சிறிது வலிமையையும் வளர்த்துக்கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், பேச வேண்டும், மற்றவர்களைக் கையாள வேண்டும் என்று பணியாற்றினால், அது நம்முடைய மனம் மற்றும் உணர்வுகளின் நிலைக்கான செயல்பாடுகளின் முயற்சியில் வலிமையை கொடுக்கும்.

தவறான முயற்சி

தவறான முயற்சி நம்முடைய சக்திக்கு தீங்கு விளைவிக்கும், அழிவுகரமான சிந்தனைகள் நம் கவனத்தை சிதறச்செய்யும் ஒருமுகப்படுத்த முடியவில்லை என்றால் அனைத்தையும் கடினமாக்கும். அழிவுகரமான வழிகளிளாலான சிந்தனைகள் மூன்று வகைகளில் இருக்கின்றன:

  • பேராசையாக சிந்தித்தல்
  • வன்மத்தோடு சிந்தித்தல்
  • சிதைக்கக்கூடும் பகையுணர்வுடன் சிந்தித்தல்  

பேராசையாக சிந்தித்தல்

பேராசையாக சிந்தித்தல் என்றால் மற்றவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பொருள்களைப் பற்றி பொறாமையோடு சிந்தித்தல். “அதை நான் எப்படி பெற முடியும்?” என்று நீங்கள் சிந்திக்கலாம். இது பிணைப்பில் இருந்து எழுகிறது. யாரோ சிலரிடம் இருப்பவை நம்மடம் இல்லை என்று நாம் நின்று விடக்கூடாது, அது வெற்றியோ, அழகான துணையோ, புதிய வாகனமோ – அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். நாம் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், அது மிகவும் சிக்கலான மனநிலை. அது மொத்தமாக ஒருமுகப்படுத்துதலை பாதுகாக்காது, இல்லையா?

பரிபூரணவாதம் இந்த தலைப்பின் கீழ் வரக்கூடும் - நாம் எப்போதுமே நம்மை எப்படி நம்மை வெளிக்காட்டிக் கொள்ளலாம் என்பதையே பார்க்கிறோம். இது கிட்டத்தட்ட தன்னைப் பற்றியே பொறாமைப்படுதல்!

வன்மத்தோடு சிந்தித்தல்

வன்மத்தோடு சிந்தித்தல் என்பது ஒருவருக்கு எவ்வாறு தீங்கு ஏற்படுத்தலாம் என்பதைப்பற்றியது, மேலும், “எனக்கு பிடிக்காத ஒன்றை இந்த நபர் கூறினாலோ அல்லது செய்தாலோ நான் அதை ஏற்றுக்கொள்வேன்.” அடுத்த முறை அந்த நபரைப் பார்த்தால் நாம் என்ன செய்யலாம் அல்லது கூறலாம் என்று கூட சிந்திக்கலாம், அவர்கள் நம்மிடம் எதையாவது சொல்லும் போது பதிலுக்கும் நாம் எதுவும் கூற வில்லையோ என்று வருத்தப்படுவோம். இதனை நம் சிந்தனையில் இருந்து அகற்ற முடியாது, நாம் அதைப்பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்

சிதைக்கக்கூடும் பகையுணர்வோடு சிந்தித்தல்

சிதைந்த, பகையுணர்வு சிந்தனை என்பதற்கான உதாரணம், யாரேனும் தன்னை முன்னேற்றிக்கொள்ளவோ அல்லது பிறருக்கு உதவ முயன்றாலோ, “அவர்கள் முட்டாள் – அவர்கள் செய்யும் செயல் பயனற்றது. யாரோ ஒருவருக்கு உதவு முயற்சிப்பது நகைப்புக்குரியது” என்று நாம் சிந்திக்கிறோம்.

சிலருக்கு விளையாட்டு பிடிக்காது, விளையாட்டை விரும்புபவர்கள் தொலைக்காட்சியில் கால்பந்து போட்டியை பார்த்தாலோ அல்லது குழு விளையாட்டை பார்க்கச் சென்றாலோ அவர்கள் முற்றிலும் முட்டாள்கள் என்று நினைக்கிறோம். ஆனால் விளையாட்டை விரும்புவதில் எந்தத் தீங்கும் இல்லை. அது முட்டாள்தனமானது அல்லது நேர விரயம் என்று சிந்திப்பது மிகவும் எதிர்மாறான மனநிலை.

அல்லது, யாரோ ஒருவர் யாசகருக்கு பணம் கொடுத்தால், இவ்வாறு செய்யும் அவர் நிச்சயமாக முட்டாள் என்றே நீங்கள் சிந்திப்பீர்கள். நாம் எப்போதும் மற்றவர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள், அவர்கள் செய்வது பகுத்தறிவற்றது என்பதைப் பற்றியே தொடர்ந்து சிந்தித்தால், நம்மால் ஒருபோதும் ஒருமுகப்படுத்தத முடியாது. இவை நாம் விடுபட விரும்பும் எண்ணங்கள்.

சரியான முயற்சி

சரியான முயற்சி என்பது நம்முடைய சக்தியை தீங்கு விளைவித்தல், அழிவுகரமான சிந்தனைகளில் இருந்து விலக்கி வைத்து, நன்மை பயக்கும் குணாதிசயங்களை மேம்படுத்த வழிநடத்துகிறது. இதற்காக நாம், பாலியின் “நான்கு சரியான முயற்சிகள்” குறித்து பேச வேண்டும். சமஸ்கிருதம் மற்றும் திபெத்திய இலக்கியத்தில், அவை சரியான தவிர்த்தலை அடைவதற்கான நான்கு காரணிகள் என்று அழைக்கப்படுகிறது – மற்றொருபுறம், நம்முடைய குறைபாடுகளில் இருந்து விலகுதல் – “நான்கு தூய்மையான கைவிடுதல்கள்” என்று சொல்லப்படுவது.

  1. முதலாவதாக, இதுவரை நம்மிடம் உருவாகாத எதிர்மறை குணங்கள் எழுவதைத் தடுக்க முயற்சி செய்க வேண்டும். உதாரணமாக, நம்மிடம் மிகவும் அடிமையாக்கும் ஆளுமை இருந்தால், நாம் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களை பார்க்கும் சேவையை தவிர்க்க விரும்புவோம், மாறாக ஒரே ஒரு தொடர் என்று தொடங்கி நாள் முழுவதும் அடுத்தடுத்த தொடர்களை பார்ப்பதில் சென்று முடியும். இது மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும்.
  2. இரண்டாவதாக ஏற்கனவே நம்மிடம் இருக்கும் எதிர்மறை குணங்களில் இருந்து விடுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ளுதல். எனவே நாம் ஊதேனும் ஒன்றிற்கு அடிமையாகி இருந்தால், அதனை கட்டுக்குள் வைக்க முயற்சிப்பது நமக்கு நல்லது தரும். உதாரணத்திற்கு, ஐபாட் பயன்படுத்தும் சிலரை நம் அனைவருக்கும் தெரியும், அவர்களால் இசையைக் கேட்காமல் எங்குமே செல்ல முடியாது. அவர்கள் அமைதியாக இருக்க பயப்படுகிறார்கள், ஏதோ ஒன்றை பற்றி சிந்திக்க அஞ்சுகிறார்கள், எனவே எப்போதும் இசையை கேட்கிறார்கள். நிச்சயமாக, வாகனம் ஓட்டிச் செல்லும் போது சத்தமாக பாடல் கேட்பது உங்களை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்கும் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது வேகத்தை தக்க வைக்க இசை உதவும், ஆனால் யாரோ ஒருவரின் உரையாடலைக் கவனிக்கும் போது இசை நிச்சயமாக ஒருமுகத்தன்மையோடு இருக்க உதவாது. அது கவனத்தை சிதறடிக்கும்.
  3. இதன் பின்னர், நாம் புதிய நேர்மறை குணங்களை விதைக்க வேண்டும்.
  4. பின்னர் நம்மிடம் ஏற்கனவே இருக்கம் நேர்மறை குணங்களை பராமரிக்கவும் மேம்படுத்தவும் முயற்சிக்க வேண்டும்.

இறைக் காண்பதும் புதிய பயிற்சி முறைகளை கண்டறிவதும் மிகவும் விருப்பமானதாக இருக்கும். என்னிடமே நான் கண்ட ஒரு உதாரணம் என்னுடைய வலைதளப் பக்கத்தை எடுத்துக்கொண்டால் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஏறத்தாழ 110 பேர் வலைப்பக்கத்திற்காக பணியாற்றுகிறார்கள், அவர்கள் எனக்கு எப்போதும் மொழிபெயர்ப்புகள் மற்றும் திருத்தப்பட்ட கோப்புகளை மின்னஞ்சல் அனுப்புவார்கள் – நாள்தோறும் எனக்கு பல மின்னஞ்சல்கள் வரும். என்னிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் நான் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து ஒரு தனி கோப்புறையில் போட்டுவிடுவேன், அவற்றை அதற்கான சரியான கோப்புறையில் போட்டால் எனக்கும் என்னுடைய உதவியாளர்களுக்கு எளிமையாக இருக்கும் ஆனால் அதைச் செய்ய மாட்டேன்.

உண்மையிலேயே இது மிகவும் கெட்ட பழக்கம், ஏனெனில் இந்த கோப்புகளை முறைப்படுத்துவதில் நான் சரியாக கவனம் செலுத்தாதனால் அவற்றை கண்டறிவதிலேயே ஏராளமான நேரம் வீணாகிறது. எனவே இங்கே நேர்மறை குணம் என்னவாக இருக்கும்? இதற்கான ஒரு முறையை ஏற்படுத்துவதென்றால் ஏதேனும் கோப்புகள் வந்தால், உடனடியாக அதனை அதற்குரிய சரியான கோப்புரையில் சேர்ப்பது. சோம்பேறியாக இருப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் போட்டு வைக்காமல், விஷயங்களைத் தொடங்குவதற்கு சரியான இடத்தில் எப்போதும் வைக்கும் பழக்கத்தை இது உருவாக்குகிறது.

இந்த உதாரணத்தில் நாம் கண்ட எதிர்மறை குணம், பயனில்லாத பழக்கம் மற்றும் நேர்மறை குணம். எனவே நாம் எதிர்மறை குணத்தை தவிர்த்தலுக்கான முயற்சியை செய்து சரியான கோப்பு முறையை உருவாக்கினால், குழப்பம் தொடர்வதில் இருந்து பாதுகாக்கலாம். இதைப்பற்றித் தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், மிகவும் எளிமையான அளவிலான பயிற்சி.

ஒருமுகப்படுத்தலுக்கான ஐந்து தடைகளைக் கடத்தல்

சரியான முயற்சி என்பது ஒருமுகப்படுத்தலுக்கான ஐந்து தடைகளை வெல்வதற்கான பணிகளையும் உள்ளடக்கியது, அவை:

விரும்பத்தக்க உணர்ச்சி பொருள்களின் ஐந்து வகைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்தொடர்வதற்கான நோக்கங்கள்

ஐந்து விரும்பத்தக்க உணர்ச்சிப் பொருள்கள் அழகான காட்சிகள், ஒலிகள், வாசனை திரவியங்கள், சுவைகள் மற்றும் உடல் உணர்வுகள். நாம் ஏதோ ஒன்றின் மீது கவனம் செலுத்துவதற்கு தடையாக இருப்பதை கடக்க முயற்சிக்கிறோம், உதாரணமாக நாம் ஒரு வேலையாக இருக்கிறோம், ஆனால் "நான் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புகிறேன்" அல்லது "நான் குளிர்சாதனப்பெட்டியில் இருக்கதை எடுக்க செல்ல விரும்புகிறேன்" போன்ற எண்ணங்களால் நம் கவனமானது திசைதிருப்பப்படுகிறது. எனவே இங்கே நாம் சாப்பிட விரும்புவது, இசையைக் கேட்பது போன்ற உணர்ச்சிகரமான இன்பங்களை அல்லது ஆசைகளைப் பார்க்கிறோம். இதுபோன்ற உணர்வுகள் எழும்போது அவை தொடராமல் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும், இதனால் நாம் ஒருமுகத்தன்மையோடு கவனம் செலுத்த வேண்டும்.

துரதிஷ்ட விருப்பங்களின் எண்ணம்

யாரையோ வெறுப்பதைப் பற்றி சிந்தித்தல். நாம் எப்போதுமே பொறாமையான விதத்தில் “இவர் எனக்கு தீங்கு ஏற்படுத்தினால், எனக்கு அவரை பிடிக்கவில்லை, நான் எப்படி பழிவாங்குவது?” என்றே சிந்தித்தால் – ஒருமுகப்படுத்துதலுக்கு இது மிகப்பெரிய தடையாகும். மற்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, நம்மைப் பற்றியும் மோசமான தீங்கு விளைவிக்கும் விதத்திலான எண்ணங்களை சிந்தித்தலை தவிர்ப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

மந்த – புத்தி மற்றும் மதிமயக்கம்

இந்த நிலையில் நம்முடைய மனம் கலக்கத்தில் இருக்கும், நாம் விலகி இருப்போம் தெளிவாக சிந்திக்க முடியாது. மதிமயக்கம் என்பது, வெளிப்படையாக நாம் உறக்கத்தில் இருக்கும் நிலை. நாம் இதனை எதிர்த்து சண்டையிட முயற்சிப்போம். ஒரு குழம்பி அருந்தியோ அல்லது புத்துணர்வான காற்றை சுவாதித்தோ, பெற நாம் முயற்சிப்போம். ஆனால், ஒருமுகப்படுத்தலுக்கு உண்மையில் இது மிகவும் கடினமாக இருந்தால், நாம் ஒரு எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்து பணியாற்றினால், “ஒரு குட்டித்தூக்கம் அல்லது இருபது நிமிடங்களுக்கு இடைவெளி எடுங்கள்.” நீங்கள் அலுவலகத்தில் இருந்தால், “பத்து நிமிடங்களுக்கு தேநீர் நேர இடைவெளி எடுங்கள்.” ஒரு இடைவெளி நேர எல்லை வடிவமைத்து அதன் பின்னர் உங்கள் பணிக்குச் செல்லுங்கள்.

மனதின் திடீர் ஆசை மற்றும் வருத்தங்கள்

மனதின் திடீர் ஆசை என்பது உங்களின் மனம் முகநூல் அல்லது யூ டியூப் அல்லது ஏதோ ஒன்றின் பக்கம் பறத்தல். வருத்தப்படும் உணர்வானது நம்முடைய மனம் குற்ற உணர்வுக்கு ஆளாகுதல், “நான் இதை அல்லது அதை செய்ததற்காக உண்மையில் மிகவும் மோசமாக உணர்கிறேன்.” இவை நமது கவனத்தை மிகவும் சிதைக்கின்றன, உண்மையில் நாம் கவனம் செலுத்துவதைத் தடுக்கின்றன.

நிலையற்ற சந்தேகம் மற்றும் ஐயம்

கடைசியாக நாம் கடந்து வரமேற்கொள்ள வேண்டிய முயற்சியானது நிலையற்ற சந்தேகம் மற்றும் ஐயம். “நான் என்ன செய்ய வேண்டும்?” நான் மதிய உணவாக என்ன சாப்பிடுவது? நான் இதை சாப்பிடலாமா. அல்லது அதை சாப்பிடலாமா?” உங்களது மனதை தயார்படுத்த முடியாததால் ஏராளமான நேரம் வீணாகிறது. நாம் எப்போதுமே சந்தேகங்கள் மற்றும் தீர்மானமாக இல்லாமல் இருந்தால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது, எனவே இதனை தீர்ப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

சுருக்கமா, சரியான முயற்சி என்பது இவற்றிற்கு முயற்சித்தல்:

  • குழப்பமாக மற்றும் அழிவுகரமாக சிந்திக்கும் வழிகளைத் தவிர்த்தல்
  • தீய பழக்கங்கள் மற்றும் குறைபாடுகளை நம்மிடம் இருந்து விலக்குதல்
  • ஏற்கனவே நம்மிடம் உள்ள நல்ல குணங்களையும், குறைபாடுள்ளவைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்
  • ஒருமுகப்படுத்தலுக்கான தடைகளை நீக்குதல்.

மனநிறைவு

எண்மார்க்க பாதையில் ஒருமுகப்படுத்தலோடு இணைந்துள்ள மற்றொரு அங்கம் சரியான மனநிறைவு:

  • மனநிறைவு என்பது அடிப்படையில் மனப்பசை. நீங்கள் ஒருமுகப்படுத்தும்போது, உங்கள் மனதிற்கு ஒரு பொருளைப் பிடிக்கும். இந்த பிடிப்பு, மனநிறைவு, உங்களை முன்னேறிச் செல்ல விடாமல் தடுக்கிறது.
  • உங்களின் கவனம் அலைந்து திரிகிறதா, அல்லது நீங்கள் தூக்கமாகவோ அல்லது மந்தமாகவோ இருந்தால் கண்டறிந்து, விழிப்புணர்வுடன் இருக்கும்.
  • அதன் பின்னர் நாம் நம்முடைய கவனத்தை பயன்படுத்தி, நாம் எப்படி கருதுகிறோம் அல்லது ஒரு பொருளின் மீதான கவனம் எப்படி இருக்கிறது.

இங்கு நாம் நம்முடைய உடல், உணர்வுகள், மனம் மற்றும் பல்வேறு மனதின் காரணிகளை எவ்வாறு கருதுகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோம். நம் உடலையும் உணர்வுகளையும் கருத்தில் கொள்வதற்கான தவறான வழிகளுக்கான பிடிமானத்தைத் தவிர்க்கவே நாம் விரும்புகிறோம், ஏனென்றால் நாம் போக விடாதபோது, நாம் திசைதிருப்பப்பட்டு கவனம் செலுத்த முடியாமல் போகிறோம். எனவே இங்கே, தவறான மற்றும் சரியான வடிவிலான மனநிலையை மாறி மாறி பார்ப்போம்.

நம் உடல் குறித்து

நம் உடலைப் பற்றி பேசினால், பொதுவாக இதன் அர்த்தம் நம்முடைய மெய் உடல் மற்றும் பல்வேறு உடல் உணர்வுகள் அல்லது உடலின் அம்சங்கள். உடல் பற்றிய தவறான கணிப்பு என்பது இயற்கையினால், நம்முடைய உடல் மகிழ்ச்சி தருவது, அல்லது சுத்தமானது மற்றும் அழகானது. நம்முடைய கேசம் மற்றும் ஒப்பனை, எவ்வாறு ஆடை உடுத்தி இருக்கிறோம் உள்ளிட்ட நாம் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட்டே பெரும்பாலான நேரத்தில் கவனம் சிதறுகிறோம். நிச்சயமாக பார்ப்பதற்கு சுத்தமாகவும், அழகாகவும் இருக்கலாம், ஆனால் உடல் தோற்றமளிக்கும் விதம் மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் அது எப்போதும் சரியானதாக இருக்க வேண்டும் என்றும் இதனால் மற்றவர்களை ஈர்க்க முடியும் என்றும் நாம் நினைக்கும் தீவிரத்திற்குச் செல்லும்போது, அதிக அர்த்தமுள்ள எதிலுமே கவனம் செலுத்த நேரமில்லாமல் போய் விடுகிறது.

உடலை அதன் யதார்த்த தன்மையோடு பாருங்கள். நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், உங்களுக்கு அது அசவுகரியமாக இருந்தால், நகரலாம். நீங்கள் படுத்திருக்கும் போது, ஒரு பக்கம் உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால் மற்றொரு பக்கம் படுக்கலாம். நம் உடல்நிலை சரியில்லாமல் போகும்; உடலுக்கு வயதாகும். உடலை பராமரிப்பது முக்கியம், சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியினால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யுங்கள், ஆனால் நீங்கள் உடல் குறித்தே அதிக கவனத்துடன் இருந்தால் – நீடித்த மகிழ்ச்சிக்கு உடல் தான் ஆதாரம் என்ற எண்ணம் – சிக்கலை ஏற்படுத்தும். 

பொருந்தாத இந்த மனநிறைவில் இருந்து நாம் வெளிவர வேண்டும். நம்முடைய தலைமுடி தான் எப்போதும் முக்கியமான விஷயம் என்ற எண்ணத்தில் இருந்தோ அல்லது நாம் முழுவதும் நிற –ஒருங்கிணைப்புடன் இருந்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் இருந்தோ கடந்து செல்ல வேண்டும். இவ்வாறான பிடிமானங்களை நிறுத்திக்கொண்டு, சரியான மனநிறைவை விதையுங்கள், என்னுடைய தலைமுடி மற்றும் ஆடைகள் உண்மையில் மகிழ்ச்சிக்கான ஆதாரமல்ல என்பதை உணருங்கள். முடி மற்றவற்றை பற்றி சிந்தித்தல் என்பது நம்முடைய நேரத்தை விரயம் செய்யும், அர்த்தமுள்ளவற்றில் கவனம் செலுத்த விடாமல் தடுக்கிறது. 

நம்முடைய உணர்வுகளை பொருத்தமட்டில்

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சி மற்றும் துன்பத்திற்கான உணர்வுகள் துன்பப்படுதலுக்கான ஆதாரத்தோடு தொடர்புடையது. நாம் மகிழ்ச்சியின்றி இருந்தால், நம்மிடம் “தாகம்” என்ற ஒன்று இருக்கும்- மகிழ்ச்சியின்மைக்கான முடிவில்லா ஆதாரத்திற்கான தாகம் அது. அதே போன்று நமக்கு சிறு மகிழ்ச்சி இருந்தாலும், உங்களின் தாகம் மேலும் அதிகரிக்கும். அடிப்படையில் இதுவே பிரச்னைகளுக்கான ஆதாரம்.  

மகிழ்ச்சியின்மையே இந்த உலகில் மிக மோசமானது என்று நாம் கருத்தில் கொண்டால், இது ஒருமுகப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும். எப்படியென்றால்? “நான் சிறிது அசவுகரியமாக இருக்கிறோம்,” அல்லது “நான் நல்ல மனநிலையில் இல்லை,” அல்லது “நான் மகிழ்ச்சியாக இல்லை”, நல்லது அதனால் என்ன? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதையே தொடர்ந்து செய். உண்மையில் உங்களின் மோசமான மனநிலையே இந்த உலகத்தில் கெட்டது என்று நினைத்தால், அதையே பிடித்துக்கொள்ளுங்கள், நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மீதான கவனத்தில் பலத்த தடையை உருவாக்கும்.

நாம் மகிழ்ச்சியாக இருந்தால், மகிழ்ச்சி மேலும் வளர வேண்டும், எப்போதும் இருக்க வேண்டும் என்று கவனம் திசைதிரும்பிவிடக்கூடாது. தியானிக்கும் போது இது நடக்கலாம் இது உண்மையில் நல்லது என்று உணரத் தொடங்கலாம், இது எவ்வளவு அற்புதமானது என்று நீங்கள் திசை திருப்பப்படலாம். அல்லது நீங்கள் விரும்புபவருடன் இருக்கும் போதோ அல்லது சுவையான ஏதோ ஒன்றை உண்ணும்போதோ, தவறான மனநிலையானது “இது மிக அற்புதமாக இருக்கிறது” என்று அங்கேயே நிற்கச் செய்கிறது, இதனால் நீங்கள் திசைதிருப்பப்படுகிறீர்கள். அது என்னவோ அதை அனுபவியுங்கள், அதை விடுத்து அதற்காக பெரிய ஒப்பந்தம் எல்லாம் செய்யத் தேவையில்லை.

நம்முடைய மனதை பொருத்தமட்டில்

கோபம் அல்லது முட்டாள்தனம் அல்லது அறியாமை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட நம் மனதை அதன் இயல்பாகவே கருதாமல், நம் மனதில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது குறைபாடு இருப்பதாக நினைத்துக்கொண்டால் கவனம் செலுத்துவது கடினம். நாம் நல்லவராக இல்லை என்ற அடிப்படையில் அடிக்கடி நம்மைப் பற்றி சிந்திக்கிறோம்: “நான் இதுவல்ல. நான் அதுவும் அல்ல. நான் ஒன்றும் இல்லை.” அல்லது “என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்று முன்கூட்டியே நாம் சோர்ந்துவிடுகிறோம். இவ்வாறான எண்ணங்களை நாம் பிடித்துக் கொண்டிருந்தால், அது நன்மதிப்பையின்மை. மாறாக சரியான மனநிறைவோடு, நாம்,” தற்காலிகமாக நான் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், தற்காலிகமாக நான் குழப்பம் அடைந்திருக்கலாம், ஆனால் என்னுடைய இயல்பான மனநிலை அதுவல்ல என்று சிந்தித்தால், அதன் மூலம் செயல்பட ஒருமுகப்படுத்தலை பயன்படுத்த நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.

நமது மனதின் காரணிகளை பொருத்தமட்டில்

நான்காவது மனதின் காரணிகளான அறிவாற்றல், இரக்கம், பொறாமை உள்ளிட்டவை அடிப்படையிலானது. தவறான மனநிலை என்பது நாம் ஒன்றில் பொருந்திவிட்டோம் என்று சிந்திப்பது மேலும் நான் இப்படித்தான், என்னை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை மாற்றவோ அல்லது புதியவற்றை வளர்க்கவோ என்னால் முடியாது. “சரியான மனநிலை என்பது இந்த காரணிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அளவில் அப்படியே உறைந்து நின்றுவிடாது, அவை வளரலாம், மேலும் ஒருமுகப்படுத்தலுக்காக அவை உருவாக்கப்படலாம்.

நம்மை நாமே கட்டுப்படுத்துதல்

உண்மையில் மோசமான மனநிலையிலோ அல்லது குற்றஉணர்வாக இருக்கும் போதோ நாம் அதனை எவ்வாறு கையாள்கிறோம் என்று நம்மை நாமே ஆராய்ந்தால், நாம் அந்த மனநிலையை பிடித்துக்கொண்டு அங்கேயே நின்று விடுகிறோம் என்பதை கண்டறியலாம். இது விநோதமானது. அல்லது குற்றஉணர்வுடன், நாம் அந்த செய்த தவறில் சிக்கிக் கொள்கிறோம். நாம் அனைவரும் மனிதர்கள் நாம் அனைவருமே தவறு செய்கிறவர்கள். தவறான மனநிறைவென்பது நாம் அதையே பிடித்துக்கொண்டு கடந்து செல்ல விடாமல் இருப்பது, நாம் எவ்வளவு மோசமாக சிந்தித்திருக்கிறோம் என்று நம்மை நாமே அடித்துக்கொள்வது. சரியான மனநிறைவென்பது மனநிலை மாறும் என்பதை அறிந்து கொள்ளுதல், ஏனெனில் காரணங்கள் மற்றும் நிலைகளால் அவை எழுகின்றன, அவை அனைத்துமே எப்போதும் மாறக்கூடியவை; எதுவுமே மாறாமல் தொடரப்போவதில்லை.

பௌத்த போதனைகளில் நாம் கண்டறிந்துள்ள ஒரு மிகவும் உதவிகரமான அறிவுரை என்னவென்றால் அடிப்படையில், “உங்களை நீங்களே கட்டுப்படுத்துங்கள்.” அதாவது படுக்கையில் இருந்து நீங்களே எழுவது போல, நீங்கள் மெத்தையில் படுத்திருக்கிறீர்கள், உண்மையில் எழுந்திருக்க மனதிருக்காது ஏனெனில் மெத்தையின் சுகம் மற்றும் உங்களுக்கு உறக்கத்தை தொடர விருப்பம் இருக்கும். உங்களை நீங்களே கட்டுப்படுத்தி, எழுந்திருங்கள், உங்களால் முடியாதா? நாம் செய்யக்கூடிய திறன் இருக்கிறது, இல்லையென்றால் நம்மில் பாதிபேர் காலையில் எழுந்திருக்கவே மாட்டார்கள்! இதே போலத் தான் நாம் மோசமான மனநிலையில் இருந்தால் அல்லது நாம் சற்று குறைவாக உணர்ந்தால். நம்முடைய கட்டுப்பாட்டை நாமே கையில் எடுக்க வேண்டும் – “வா, இதைச் செய்து முடி!” – அதை விட்டுக்கொடுக்காமல், ஆனால் நாம் செய்ய வேண்டியதைப் பெறுங்கள்.

மனநிறைவின் இதர அம்சங்கள்

பொதுவாகவே, மனநிறைவு என்பது உண்மையில் மிகவும் முக்கியம். நாம் விஷயங்களை மறப்பதில் இருந்து அது நம்மை பாதுகாக்கிறது. நாம் செய்ய வேண்டிய பணிகள் இருந்தால், சரியான மனநிறைவு அதில் கவனம் செலுத்த உதவுகிறது. மனநிறைவு நியாபகப்படுத்துதலோடு செயல்படும், எனவே இன்று இரவு உங்களுக்கு விருப்பமான தொலைக்கட்சி தொடரையும் கூட நினைவில் வைத்துக்கொள்ளக்கூடும். ஆனால் இது முக்கியமில்லாத ஏதோ ஒன்றில் பிடிமானம் கொள்வதாகும், இதனால் மற்ற முக்கியமான விஷயங்களை மறக்கச் செய்யும்.

நாம் சில பயிற்சி முறைகளைப் பின்பற்றினால், அங்கு சரியான மனநிறைவு இருக்கும் அதனை பற்றிக்கொள்ள. நாம் உடற்பயிற்சி செய்தால், தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதற்கான பிடிமானம் இருக்க வேண்டும். நாம் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தால், நம் மனது முழுவதும் அதனை வைத்துக்கொள்ள வேண்டும் எனவே நமக்கு கேக் கொடுக்கப்பட்டாலும் கூட அதிலிருந்து ஒரு துண்டைக் கூட எடுக்க மாட்டோம்.

மனநிறைவு என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிக் கொண்டிருக்கிறது, மேலும் அனைத்து முக்கியமற்ற விஷயங்களிலிருந்தும் திசைதிருப்பப்படுவதில்லை.

குடும்பத்தாருடன் இருக்கும் போது மனநிறைவை தொடர்தல்

பலருக்கு அவர்களின் நண்பர்கள் அல்லது தெரியாதவர்களுடன் இருப்பதை விட குடும்பத்தாருடன் இருக்கும் போது மனநிறைவு நன்னெறிகளைப் பின்பற்றுவது மிகக்கடினமாக இருக்கிறது. நமக்கு அதுபோன்ற நிலை இருந்தால், பொதுவான அறிவுரை என்பது தொடக்கத்திலேயே மிக வலுவான நோக்கத்தை அமைத்துக்கொள்ளுதல். நீங்கள் உங்களது உறவினர்களை பார்க்கச் செல்கிறீர்கள், நீங்கள் ஒரு நோக்கத்தை உருவாக்க வேண்டும், “நான் என்னுடைய கோபத்தை கட்டுப்படுத்துவேன். அவர்கள் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்வேன். அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் நான் அவர்களை நடத்தும் விதம் அவர்களின் உணர்வுகளை பாதிக்கும்.” தொடக்கத்தில் இது மிகவும் முக்கியம்.

அவர்களும் மனிதர்களே என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நாம் அவர்களை வெறுமனே அம்மா, அப்பா, சகோதரி, சகோதரன் அல்லது உங்களுக்கு அவர்களுடன் என்ன உறவுமுறையோ அப்படி மட்டுமே அடையாளம் காணக்கூடாது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் அவர்களைப் பிடித்துக் கொண்டு, ஒரு தாய் அல்லது தந்தை என்றால் யார் என்பது பற்றிய நமது எல்லா திட்டங்களுடனும், அவர்களுடன் நமக்கு இருக்கும் அனைத்து வரலாறு மற்றும் எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்களுடனும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு நாம் எதிர்வினையாற்றுகிறோம். மற்றவர்களுக்கு அவர்கள் ஒரு மனிதர்கள் என்று தொடர்புபடுத்துவது சிறந்தது. அவர்கள் இதைப் பற்றி கவலைப்படாமல், இன்னும் ஒரு குழந்தையைப் போலவே நடத்துகிறார்கள் என்றால், நாங்கள் ஒருவருக்காக செயல்படும் முறைக்குள் வரமாட்டோம். அவர்கள் ஒரு மனிதர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், மேலும் இதில் விளையாட்டு வேண்டாம்; எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு டேங்கோ நடனமாட இரண்டு பேர் தேவை.

அண்மையில் என்னுடைய மூத்த என்னை சந்திப்பதற்காக ஒரு வாரம் வந்திருந்தார். அவர் இரவில் சீக்கிரமாகவே உறங்கச்சென்றுவிடுவார், அதுவே அவர் என்னுடைய அம்மாவாக இருந்து, என்னிடம் “இப்போது நீ தூங்கச் செல்” என்று கூறுகிறார். ஆனால் நான் ஒரு குழந்தை போல, “இல்லை இது மிகச் சீக்கிரம், நான் இப்போதுதூங்க விரும்பவில்லை, நான் விழித்திருக்கவே விரும்புகிறேன், நீங்கள் ஏன் என்னை தூங்கச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டால் வாக்குவாதம் ஏற்படுவதைப் போன்றது. நாங்கள் இருவருமே இதனால் வருத்தமடைவோம். ஆகவே எனக்கு நானே நினைவு படுத்திக்கொள்ள வேண்டும், அவர் என் மீதான அக்கறையில் தான் இந்த அறிவுரையை எனக்குத் தருகிறார், என்னை கோபப்படுத்துவதற்காக அவ்வாறு கூறவில்லை. சீக்கிரமே தூங்கச் செல்வது எனக்கு சிறந்ததாக இருக்கும் என்று அவர் சிந்தித்திருப்பார். எனவே நம்முடைய எண்ணங்களை வெறுமனே வெளிப்படுத்தாமல் நடப்பவை குறித்த யதார்த்தமான பார்வையையும் பார்க்க முயற்சிக்க வேண்டும்.

எனவே நம்முடைய குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்கு முன்னதாக, நம்முடைய உந்துசக்தியில் மனநிறைவோடு இருத்தல் வேண்டும், அதாவது:

  • நம்முடைய இலக்கு: நாம் அக்கறை செலுத்துபவர் மற்றும் நமக்காக அக்கறைப்படும் நம் குடும்பத்தினருடன் சுமூகமான கலந்துரையாடல் நடத்துவது இலக்கு.
  • உடன் இருக்கும் உணர்வுகள்: மனிதர்களாக, நம் குடும்பத்தார் மீது அக்கறை செலுத்துதல்.

இதை ஒரு பயங்கரமான சோதனையாக நினைப்பதற்குப் பதிலாக, அதை எதிர்கொள்வதற்கான மற்றொரு வழி, அதனை வளர்ச்சிக்கான ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும்: “எனது மனநிலையை இழக்காமல் எனது குடும்பத்தினருடன் இரவு உண்டு களிக்க முடியுமா?”

உங்கள் பெற்றோர் அடிப்படி செய்வது போல, உங்களுடைய குடும்பத்தார் “நீ ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது? நீ ஏன் இதை விட சிறந்த வேலையை தேடக்கூடாது? உனக்கு ஏன் குழந்தை இல்லை?” என்று உங்களை வம்பிழுத்தால், (என் சகோதரி என்னைப் பார்த்ததும் சொன்ன முதல் விஷயம் “நீ சிகையலங்காரம் செய்ய வேண்டும் என்பது தான்) அவர்கள் இந்த மாதிரியான கேள்விகைக் கேட்பதற்கு காரணம் அவர்களுக்கு நம் மீது இருக்கும் அக்கறை என்பதை உணர வேண்டும், வெறுமனே நாம் அவர்களிடம் “என் மீது அக்கறையுடன் இருப்பதற்கு நன்றி” என்று சொல்லலாம்.

அவர் எந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும், அதாவது பல நண்பர்கள் கேட்பார்கள், “உங்கள் மகன் என்ன செய்கிறார்? உங்கள் மகள் எப்படி வளர்ந்திருக்கிறார்?” அவர்களுக்கு தங்கள் நண்பர்களுடன் சமூக உரையாடல் நடத்த வேண்டும்.

நீங்கள் ஏன் இன்னும் தீங்கிழைக்கவில்லை என்று அவர்கள் கேட்கவில்லை, ஏனெனில் அவர்கள் உங்கள் மகிழ்ச்சியைப் பற்றி கவலைப்படுகின்றனர். இதற்கான முதல் படி இதை ஒப்புக்கொள்வதும், அவர்களின் கவலையைப் பாராட்டுவதும் ஆகும். நீங்கள் விரும்பினால், நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதையும் அமைதியாக விளக்கலாம்!

பொருத்தமற்ற மனநிறைவால், நாம் பெரும்பாலும் பலனளிக்காத விஷயங்களையே பிடித்து வைத்திருக்கிறோம். “நீ ஏன் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் செய்தாய்?”  அல்லது “30 வருடங்களுக்கு முன்னர் நீ அப்படி சொன்னாய்” என்பது போன்ற பழங்கதைகளைப் பேசுவது. நாம் அதையே பிடித்துக் கொண்டிருக்கிறோம் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று கவனம் செலுத்துவதையும் தடுக்கிறோம். “என் பெற்றோர் வரப்போகிறார்கள். இது மோசமாக இருக்கப்போகிறது” என்று நாம் முன்கூட்டியே முடிவு செய்து விடுகிறோம். இது மோசமாக இருக்கப்போவதாக முன்னரே முடிவு செய்துவிடுகிறோம். இதனால் இரவு உணவிற்கு முன்னரே பதற்றமாகிவிடுகிறோம்! அதுவே நாம் சரியான மனநிறைவோடு இதை ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும், முன்கூட்டியே தீர்மானிக்காமல் நமக்குள் இதுவரை சரிவராத சூழல்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பாக கருதலாம். 

மனநிறைவை தொடர செயல்முறை அறிவுரை

கடினமான சூழ்நிலைகளில் நம் நினைவாற்றலை எவ்வாறு பராமரிப்பது? நாம் விதைக்க வேண்டியவை:

  • நோக்கம் - மறக்க முயற்சிக்காத வலுவான நோக்கம்
  • பரிச்சயம் - ஒரே செயல்முறையை திரும்பத் திரும்பச் செய்வதால் அதை தானாக நினைவில் கொள்கிறோம்
  • விழிப்புணர்வு - நாம் நினைவாற்றலை இழக்கும் போது கண்டறிந்து எச்சரிக்கும் முறை.

இவை அனைத்தும் ஒரு அக்கறையுள்ள அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை, உங்கள் மீதும் மற்றவர்களிடமும் நீங்கள் அக்கறைப்படுவதற்கும் உங்கள் நடத்தையின் தாக்கம் பற்றியது. நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதில் உங்களுக்கு அக்கறை இல்லையென்றால், அது மனநிறைவை பராமரிக்கப் போவதில்லை, ஏனெனில் அங்கு எந்த ஒழுக்கமும் இருக்காது. நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனென்றால் நீங்கள் ஒரு மனிதர். உங்கள் தாயும் தந்தையும் மனிதர்கள். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். யாரும் மகிழ்ச்சியடைய விரும்பவில்லை. நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்வதும் பேசுவதும் அவர்களின் உணர்வுகளை பாதிக்கிறது, எனவே நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.

நம்மையும் நம் உந்துதலையும் ஆராய வேண்டும். நம்மைப்போலவே மற்றவர்களும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற விரும்பினால், இது சற்று சிறுபிள்ளைத்தனமானது. இது கொஞ்சம் வேடிக்கையானதும் கூட. கவனத்துடன் இருப்பதற்கும், நினைவாற்றலைப் பேணுவதற்கும் சிறந்த காரணம், அக்கறையுள்ள அணுகுமுறையின் அடிப்படையில் மற்றவர்களைப் பற்றி நாம் அக்கறை காட்டுகிறோம்.

ஒருமுகப்படுத்துதல்

எண்மார்க்கப் பாதையில் இருக்கும் மூன்றாவது அம்சம் ஒருமுகப்படுத்தலுக்கு நாம் பொருத்த வேண்டியது சரியான ஒருமுகப்படுத்துதல் (ஆம், ஒருமுகப்படுத்துதலே).  ஒரு பொருளின் மீதே மனஓட்டம் இருப்பதே உண்மையான ஒருமுகப்படுத்துதல். நாம் கவனம் செலுத்த விரும்பும் எந்தவொரு விஷயத்திலும் நாம் பிடிமானமாக இருந்தால், நினைவாற்றல் அதை அங்கேயே வைத்திருக்கிறது, எனவே அதை இழக்க மாட்டோம். ஆனால் முதலில் பொருளில் பிடிமானம் வேண்டும் என்பதையே ஒருமுகப்படுத்துதல் கூறுகிறது.

ஏதோ ஒன்றை ஒருமுகப்படுத்த நாம் கவனத்தை பயன்படுத்துகிறோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, இப்போதெல்லாம் மேலும் மேலும் என்ன நடக்கிறது என்றால் நாம் கவனத்தை பிரித்துக்கொண்டிருக்கிறோம், எனவே நாம் ஒருபோதும் முழுமையாக கவனம் செலுத்துவதில்லை. டிவியில் நீங்கள் செய்திகளைப் பார்க்கும்போது, திரையின் நடுவில் ஒரு நபர் அந்த நாளின் செய்திகளை வாசிக்கிறார், அதே நேரத்தில் மற்ற செய்திகள் ஸ்க்ரோலிங் செய்யப்படுகிறது, பின்னர் மூலைகளிலும் பிற விஷயங்கள் இருக்கலாம். எதிலுமே நாம் கவனம் செலுத்தவோ அல்லது முழுமையாக கவனம் செலுத்தவோ முடியாது. நாம் சகலகலா வல்லவர் பல்திறமை கொண்டவர் என்று நினைத்தாலும், யாராலும் செய்ய முடியாது - நீங்கள் ஒரு புத்தராக இல்லாவிட்டால் - நீங்கள் பல்திறமை கொண்டவராக இருந்தாலும் எல்லாவற்றின் மீதும் 100% கவனம் செலுத்த முடியாது.

சில நேரங்களில் நாம் யாருடனோ இருக்கிறோம் அவர்கள் நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் போது நம்முடைய மனமானது நம்முடைய செல்போன் மீதே இருக்கும். இது தவறான இடத்தில் மனம் இருப்பது ஏனெனில் நம்மிடம் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் அவரிடம் கவனம் செலுத்தவில்லை. எதையாவது மனதில் வைத்திருந்தாலும், அதைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம். நாம் இப்போது மிக விரைவாக மாறும் விஷயங்களுக்கு பழக்கப்பட்டுவிட்டோம், ஒன்று போனால் மற்றொன்று என்றும் பார்க்கிறோம், இதனால் எளிதில் சளிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் - இதில் சில தருணங்கள், அதில் சில தருணங்கள் – என்று ஒருமுகத்தன்மையோடு இருப்பது ஒரு தடையாகும். இது தவறான ஒருமுகப்படுத்துதல். முறையான ஒருமுகப்படுத்துதல் என்பது சலிப்படையாமல், நமக்கு நீடித்த ஆர்வம் இல்லை என்பதால் அதைவிட்டு நகராமல், தேவைப்படும் வரை கவனம் செலுத்த முடிவதேயாகும்.

ஒரு முக்கியமான தடை என்பது நாம் கேளிக்கைகளை விரும்புகிறோம். இது தவறான மனநிறைவுக்கு கொண்டு செல்கிறது, தாகத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக தற்காலிக மகிழ்ச்சி நமக்கு திருப்தி அளிக்கும் என்று நினைக்கிறோம். சமூக விஞ்ஞானிகள் நாம் என்ன செய்ய முடியும் மற்றும் பார்க்க முடியும் என்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர் - மேலும் இணையம் இந்த எல்லையில்லா சாத்தியங்களை வழங்குகிறது - அதிக சலிப்பு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை நாம் உண்மையில் பெறுகிறோம். நீங்கள் எதையாவது பார்க்கும்போது, இன்னும் சுவாரஸ்யமான ஒன்று இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அதை நீங்கள் இழக்க நேரிடும் என்று பயப்படுகிறீர்கள். இப்படியே நுங்கள் சென்று கொண்டிருப்பதால் ஏதோ ஒன்றின் மீது நிலைத்து கவனம் செலுத்த முடிவதில்லை.  இது கடினம் என்றாலும், உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது எளிது, ஒரே நேரத்தில் பல விஷயங்கள் நடப்பதில்லை. உங்கள் ஒருமுகத்தன்மை வளர்ச்சியடையும் போது, நீங்கள் சமாளிக்கக்கூடியவற்றின் நோக்கத்தை அதிகரிக்க முடியும்.

உங்களுக்கு சரியான ஒருமுகப்படுத்துதல் இருந்தால், உங்களால் இதில் கவனம் செலுத்த முடியும், அதன் பின்னர் அதில்; ஆனால் கவனம் சிதறாமல் ஒரு நேரத்தில் ஒன்றின் மீது மட்டும் கவனம் இருக்கும். ஒரு மருத்துவரைப் போல, அவர் ஒரு நேரத்தில் ஒரு நோயாளியை மட்டுமே கையாள முடியும், அந்த நேரத்தில் அந்த நோயாளி மீது மட்டுமே கவனம் இருக்கும், முந்தையவரைப் பற்றியோ அடுத்த நோயாளியைப் பற்றியோ சிந்திப்பதில்லை. ஒரு நாளில் பல நோயாளிகளை மருத்துவர் பார்த்தாலும், அவர்கள் எப்போதும் அந்த நேரத்தில் வரும் நோயாளி மீது முழு கவனம் செலுத்துவார்கள். ஒருமுகப்படுத்துதலுக்கு இதுவே சிறந்த உதாரணம்.

இருப்பினும் இது மிகவும் சவாலானது. என்னைப் பொறுத்தவரை, வலைதளம் மற்றும் வெவ்வேறு மொழிகள் என்று பலவிதமான பணிகளை நான் கையாள்கிறேன். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் வருகின்றன. ஒரு சிக்கலான வியாபாரத்தில் இருக்கும் எல்லோருக்கும் இதே நிலை தான். ஆனால் ஒருமுகப்படுத்துதல் என்பது நிலைகளில் உருவாக்கப்படலாம்.

சுருக்கம்

ஒருமுகப்படுத்துதலுக்கான தடைகளை நீக்குவது மிகவும் பரந்த அளவில் உள்ளது. ஒரு எளிய முறை, நீங்கள் பணிபுரியும் போது உங்கள் செல்போனை அணைத்து வைப்பது அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என மின்னஞ்சல்களைச் சரிபார்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுப்பது, இதனால் நாம் செய்ய வேண்டியவற்றில் முழுமையாக கவனம் செலுத்த முடியும். இது ஒரு மருத்துவர் அல்லது பேராசிரியருக்கு இருக்கும் அலுவலக நேரம் போன்றது; நீங்கள் எல்லா நேரத்திலும் வெளியே வர முடியாது, அவற்றிற்கென சில மணிநேரங்கள் உள்ளன. நம்மாலும் இதை செய்ய முடியும், செய்ய வேண்டும், ஏனெனில் இது நம் ஒருமுகப்படுத்துதலை வளர்க்க உதவும்.

சமூக வளர்ச்சியைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. முந்தைய காலங்களில், ஒருமுகப்படுத்தலுக்கான முக்கிய தடைகள் நம்முடைய சொந்த மன நிலைகளேயாகும் – மனம் அலைபாய்தல், பகல் கனவு போன்றவை. இப்போது இன்னும் நிறைய இருக்கிறது, இவற்றில் பெரும்பாலானவை செல்போன்கள், பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் போன்ற வெளி ஆதாரங்களிலிருந்து வந்தவை. இது அனைத்தையும் அதிகமாகப் பார்க்காமல் இருக்க முயற்சி எடுக்கிறது, இதைச் செய்ய நாம் உண்மையில் இந்த ஊடகங்களின் தீங்கு விளைவிக்கும் அம்சங்களை அங்கீகரிக்க வேண்டும்.

பலரின் மிகத்தெளிவான அனுபவம் என்பது, கவனத்தை ஈர்ப்பது குறைந்து கொண்டே வருகிறது. ட்விட்டரில் எழுத்துகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன மற்றும் முகநூல் ஊட்டம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது மிக வேகமாக நடக்கிறது, இது ஒரு பயங்கரமான பழக்கத்தை உருவாக்குகிறது, இது ஒருமுகப்படுத்துதலுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனென்றால் நீங்கள் எதையும் உங்கள் கவனத்தில் வைத்திருக்க முடியாது; எல்லாம் தொடர்ந்து மாற வேண்டும். இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

Top