சரியான பேச்சு, நடத்தை மற்றும் வாழ்வாதாரம்

மதிப்பாய்வுரை

நன்னெறி ஒழுக்கம், ஒருமுகப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை பாகுபடுத்தும் மூன்று பயிற்சிகளும் எப்போதும் நம்முடைய பிரச்னைகள் மற்றும் நாம் அனுபவிக்கும் எந்த துன்பமாக இருந்தாலும் அதனை வெல்வதில் இலக்குடன் இருக்க உதவுகிறது. இது கஷ்டங்களுக்கான காரணங்களை அடையாளம் காணும் வழிமுறை மேலும் இந்த மூன்றை செயல்படுத்தி பாதிப்புகளை நீக்க முடியும்.

அன்றாட வாழ்வில் நாம் மற்றவர்களைக் கையாளும் போதும் பண்படுத்துவதற்கு இந்த மூன்று பயிற்சிகளும் மிகவும் உதவியாக இருக்கும்.  

 • நன்னெறி ஒழுக்கம் – மற்றவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம், பேசுகிறோம் என்பதை கண்காணித்தல் அவசியம். அழிவுகரமானதாகவோ அல்லது துன்பத்தை ஏற்படுத்தும் ஏதோ ஒன்றை செய்வதில் இருந்து தடுக்க நன்னெறி ஒழுக்கம் நமக்கு தேவை.
 • ஒருமுகப்படுத்துதல் – மற்றவர்களுடன் கலந்துரையாடும் போது நாம் கவனத்துடன் இருந்தால் மட்டுமே அவருக்குள் என்ன நடக்கிறது, அவரின் தேவை என்ன என்பதை நாம் அறிய முடியும். நம்முடைய மனம் அலைபாய்ந்து கொண்டோ, செல்போனை பார்த்துக்கொண்டோ இருந்தால், மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும்.
 • பாகுபாடு – மற்றவர்களை நாம் நன்றாக கவனித்திருந்தால், விழிப்புணர்வு பாகுபடுத்தல் உதவியால் அதற்கான சரியான பதில் என்ன என்பதை அறிய முடியும். இது மீண்டும் மற்றவர்களிடம் சிந்தித்தல், செயல்படுதல் மற்றும் சரியாக பேசவும் வழிவகுக்கிறது.

மூன்று பயிற்சிகளும் ஒன்றோடு ஒன்று கைகோர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, எனவே தான் அவை அனைத்தையும் அடுத்தடுத்து பயன்படுத்த வேண்டும். நாம் மற்றவர்களுடன் இல்லாவிட்டால், நமக்கே கூட இந்த மூன்று பயிற்சிகளும் மிகச்சிறந்தவை:

 • அவை தன்னழிவு பாதையில் செயல்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
 • நம்முடைய மனம் கவனத்துடன் இருப்பதால், நாம் அடைய வேண்டும் என நினைப்பதை அடைய முடியும்.
 • பொருத்தமானது, பொருத்தமற்றது எது என்பதை அடிப்படை நுண்ணறிவை பயன்படுத்தி நம்மால் பாகுபடுத்த முடியும்.

நம்முடைய அன்றாட வாழ்வில் செயல்படுத்தக்கூடிய சிறந்த அடிப்படை கொள்கைகள் போன்றவை இவை, சொந்த சூழ்நிலைகள் மற்றும் சமூகத் தொடர்புகள் இரண்டிற்குமே இது பொருந்தும்.

 எண்வகை மார்க்கம்

மூன்று பயிற்சிகளையும் நாம் பயிற்சிக்கும்போது, இதை எவ்வாறு செய்கிறோம் என்பதற்கான ஒரு விளக்கக்காட்சியே “எண்வகை மார்க்கம்” என்று அழைக்கப்படுகிறது. இவை வெறுமனே எட்டு வகையான நடைமுறைகள், அதில் நாம் பயிற்றுவிப்பது மூன்று அம்சங்களையும் உருவாக்கும்.

நன்னெறி ஒழுக்கத்திற்கான நமது பயிற்சிக்கு, மூன்று பயிற்சிகள் இருக்கின்றன:

 • சரியான பேச்சு – நாம் கருத்துப்பரிமாற்றம் செய்யும் முறை
 • சரியான எல்லைக்குள்ளான செயல்பாடு – நம்முடைய நடத்தை எப்படி இருக்கிறது
 • சரியான வாழ்வாதாரம் – நம் வாழ்வியலை எவ்வாறு அமைத்துக்கொள்கிறோம்

ஒருமுகப்படுத்தலுக்கான நம்முடைய பயிற்சியிலும், மூன்று வகை இருக்கின்றன:

 • சரியான முயற்சி – அழிவுகரமான தொடர் சிந்தனைகளில் இருந்து நம் மனதை வெளியேற்றவும் தியானத்திற்கு உகந்த மனநிலையை வளர்க்கவும்
 • சரியான மனநிறைவுநிலை- நம்முடைய கவனம் மற்றும் இலக்கை எப்போதும் தவறவிடக்கூடாது
 • சரியான ஒருமுகப்படுத்தல் – ஆக்கப்பூர்வமான ஏதோ ஒன்றில் கவனத்துடன் இருத்தல்

விழிப்புணர்வை பாகுபடுத்தும் நம்முடைய பயிற்சியில், இரண்டு விதம் இருக்கின்றன:

 • சரியான பார்வை – எது சரி, தவறு அல்லது எது தீங்கானது மற்றும் உதவுவது என்று சரியாக பாகுபடுத்துவதன் அடிப்படையில் உண்மை என்ன என்று நாம் நம்புகிறோம்.
 • சரியான நோக்கம் (சரியான ஊக்குவிக்கும் சிந்தனை) - நம்முடைய பார்வை முன்நடத்தும் ஆக்கப்பூர்வமான மனநிலை  

இன்னும் விரிவான வடிவத்தில் பார்த்தால், ஒவ்வொரு எட்டு பயிற்சிகளும் அதைப் பயன்படுத்துவதற்கான தவறான வழிகளையும் கொண்டுள்ளன, நாம் நிராகரிக்க விரும்புபவை எவை, அவற்றை சரியான முறையில் செய்து, அதனை பின்பற்ற விரும்புகிறோம்.

பேச்சு

நாம் பிறரிடம் என்ன பேசுகிறோம் என்பதே நம்முடைய சொந்த மனநிலையை பிரதிபலிக்கிறது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் எப்படி மதிப்பு வைத்து, நம்மிடம் பதிலுக்கு நடந்துகொள்கிறார்கள் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே எந்த வகையில் பேசுவது உதவியாக இருக்கும் எது தீங்கை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 தவறான பேச்சு

தவறான பேச்சு துன்பம் மற்றும் பிரச்னைகளுக்கான காரணங்களின் வகை:

 • பொய்உரைத்தல்- பொய்யானதைக் கூறி மற்றவர்களை ஏமாற்றுதல். நாம் பொய் உரைப்பவராகவோ அல்லது மற்றவர்களை நம்முடைய பேச்சால் ஏமாற்றுபவராக இருந்தால், யாரும் நம்மை நம்பவோ, அல்லது நாம் சொல்வதை காது கொடுத்தோ கூட கேட்க மாட்டார்கள். இது மகிழ்ச்சியில்லாத சூழலை உருவாக்கும்.
 • பிரிவினை தரும் வகையில் பேசுதல் – மற்றவர்களைப் பற்றி அவர்களின் நண்பர்கள் அல்லது கூட்டாளிகளிடம் தீய விஷயங்களைச் சொல்லுதல், அவர்களின் உறவுமுறையை கெடுக்க முயற்சித்தல். நமக்குப் பின்னாலும் இப்படித்தான் கூறி இருப்பாரோ என்று மற்றவர்களை வியக்க வைக்கும், இதனால் நம்முடைய சொந்த உறவுமுறைகளும் அழிந்துபோகும். 
 • கடுமையாகப் பேசுதல் - கொடூரமான முறையில் பேசுவது, அல்லது மற்றவர்களிடம் கூச்சலிடுதல். நம்முடைய பேச்சால் மற்றவர்களை நாம் துஷ்பிரயோகம் செய்யும்போது,அவர்கள் நம்முடன் அதேபோன்று பேசத் தொடங்குவார்கள், அவர்கள் அடக்கிக் கொடுமை படுத்தி இன்படையும் மசோசிஸ்டுகளை போல் எப்போதும் கத்திக்கொண்டே இருக்கும் ஒருவரைச் சுற்றி இருக்க விரும்புவதில்லை.
 • அர்த்தமின்றி பேசுதல் – எப்போதும் உளறிக்கொண்டே இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்து அர்த்தமில்லாமல் பேசுதல் அல்லது வதந்தி பேசுதல். இதன் விளைவு யாரும் நம் பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை, நம்முடன் இருப்பது வலியைத் தரும் என்று மக்கள் நினைப்பார்கபள். நாம் நம்முடைய நேரத்தையும் மற்றவர்கள் நேரத்தையும் வீணடிக்கிறோம்.

 சரியான பேச்சு

மேலே கூறப்பட்டுள்ள நான்கு வகை தவறான பேச்சுகளில் இருந்து விடுபட ஆக்கப்பூர்வமான பேச்சு உதவி செய்யும். முதல் அளவில் ஒழுக்கமானது, பொய்யானதைக் கூறும்போதோ, மற்றவர்களிடம் கத்தும் போதோ அல்லது அரட்டை அடிக்கும் போதோ எவ்வாறு உணர்கிறோம், இது அழிவுகரமானது, துன்பத்திற்கான காரணம் என்பதை உணர்ந்து, அதன் விளைவாக இதனை செய்யக் கூடாது என்று கடுமையாக முயற்சிக்கிறோம்.

அது எளிமையானதல்ல, வலுக்கட்டாயமாக ஒன்றை சொல்வதற்கு முன்னர் அந்த நொடியே அது தவறு என்பதை நீங்கள் உணர்ந்து உங்களை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு துண்டு கேக் சாப்பிட விரும்பும் போது, சில சமயங்களில் இரண்டாவது துண்டும் கிடைக்கிறது, ஆனால் உணர்ச்சிவசப்பட்டு மற்றொரு துண்டு கேக்கை எடுக்கும் முன்னர், “எனக்கு அது தேவை என்றாலும், நான் அதை எடுக்கக் கூடாது. எனக்கு அந்த கேக் தேவையில்லை; அது என்னை பருமனாக்கும், நான் உடல் எடை குறைக்க வேண்டும்”, என்று நினைக்கிறோம். இதைத் தான் நாம் ஒழுக்கம் என்ற வகையில் பேசிக்கொண்டிருக்கிறோம்.

நாம் இது போன்ற செயல்களை செய்ய நினைத்தால், ஒரு மரத்துண்டை போல இருந்துவிட வேண்டும் என்று பழமையான இந்திய குரு சாந்திதேவா அறிவுறுத்தியுள்ளார். கத்த வேண்டுமென்றோ அல்லது அசிங்கமாக எதையோ சொல்ல நினைக்கிறோம், ஆனால் இது தன்னையும் மற்றவர்களையும் கஷ்டப்படுத்தும் என உணர்ந்து, அதனைச் சொல்லவில்லை. ஒரு மரத்துண்டு போல இருந்துவிடுகிறோம். சில முட்டாள்தனமான நகைச்சுவையோ அல்லது மோசமான குறிப்பையோ சொல்ல நினைத்து, ஆனால் இது வெறுமனே அரட்டை தான் என்பதை உணர்ந்து எதுவும் சொல்லவில்லை. அது போன்ற ஒரு விஷயம் தான் இது.

இரண்டாவது கட்ட ஒழுக்கமென்பது உண்மையிலேயே ஆக்கப்பூர்வமான ஏதோ ஒன்றை செய்தல் – அதனால், பலன் தரும் வகையில் பேசுதல். இதனைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு சூழலையும் மனதிற்கு இதமானதாக அமைத்தல். நாம் செய்யவேண்டியது என்னவென்றால் காரணம் மற்றும் விளைவை பற்றி சிந்திக்க வேண்டும்.

சரியான பேச்சை விதைக்க மிகுந்த உணர்வு நிலை முயற்சி, தக்க நேரத்தில், பொருத்தமான அளவில் கனிவாக, அன்பாக, உண்மையை உறுதியாக பேச வலுவான தீர்மானம் தேவைப்படுகிறது மற்றும் எது அர்த்தமுள்ளவையோ அவை மட்டுமே:

 • மற்றவர்கள் விஷயத்தில் எப்போதும் குறுக்கிட்டுக்கொண்டே இருக்க முயற்சிக்கக் கூடாது அல்லது தொடர்ந்து தொலைபேசியில் அழைப்பது அல்லது குறுஞ்செய்தி அனுப்புதல், குறிப்பாக அற்ப விஷயங்களான காலை உணவு என்ன சாப்பிட்டாய் என்றோ அல்லது வீண்பேச்சோ கூடாது. இது அர்த்தமில்லாதது மற்றவர்கள் விஷயத்தில் குறுக்கிடுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
 • பொருத்தமான அளவு என்பது எங்கே இருக்கிறது, மற்றவர்களிடம் நாம் பேசினால், அதிகம் பேசாமல் அல்லது சில விஷயங்களில் அவர்களை மனமாற்றம் செய்ய முயற்சிக்காமல், குறிப்பாக ஏற்கனவே அவர்கள் நம்முடன் உடன்படிந்துள்ளவை பற்றி பேசாமல் இருத்தல்.

நிச்சயமாக நாம் பாகுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணத்திற்கு, உண்மை சொல்வதாகக் கருதி, யாரேனும் அழுக்கான சட்டையோ அல்லது ஆடையோ உடுத்தி இருந்தால், அவர்களிடம் அப்படியே,”உங்களுடைய உடை பார்ப்பதற்கு அழுக்காக இருக்கிறது” என்று அப்பட்டமாக சொல்லத்தேவையில்லை, இது அவர்களை கஷ்டப்படுத்தும். சில நேரங்களில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஆனால் இந்தக் கருத்துகளை எப்படி சொல்வது என்பது மனிதர்களைச் சார்ந்தது. என் சகோதரி என்னை பார்க்க வந்திருந்தார், நாங்கள் வெளியே சென்றிருந்தோம், அவர் அணிந்திருந்த ரவிக்கை சிறிது விரிந்திருந்தது, அந்த உடை அவருக்கு சரியாக பொருந்தவில்லை, ஆனால் அவர் என்னுடைய சகோதரி என்பதால் பார்ப்பதற்கு இது மோசமாக இருக்கிறது என்று நான் அவரிடம் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் நம் குடும்பத்தினர் தவிர மற்றவர்களிடம் இது போன்று சொல்வது சற்றே கடினமானது! உங்களுடைய புதிய பெண் தோழியிடம் இதை நீங்கள் சொல்ல முடியாது, “நீ அணிந்திருக்கும் ரவிக்கை நன்றாக இல்லை, வேறு அணிந்து கொள்!” என்று உண்மையாகவே இருந்தாலும் அதை சொல்ல முடியாது.

கடுமையாகச் சொல்வதென்றால், சில சமயங்களில் நீங்கள் வலுவாகச் சொல்ல வேண்டும். உங்களுடைய குழந்தை தீப்பெட்டி அல்லது லைட்டர் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றுடன் விளையாடிக்கொண்டிருந்தால், அப்போது நீங்கள் திடமாகப் பேச வேண்டும். அது உண்மையில் கடுமையான பேச்சாக கணக்கில் கொள்ளப்படாது, ஏனெனில் உங்களுடைய நோக்கம் கோபப்படுவதல்ல. ஆகவே, இந்த நோக்கம் உண்மையில் மிக உயர்வானது.

தவறான பேச்சுக்கான மற்ற உதாரணங்கள்

அழிவுகரமான வகையில் பேசுவதை மற்றவர்களுக்கும் மட்டுமே வழிநடத்தாமல், நம்மை நாமே வழிநடத்தும் விஷயங்களுக்குக் கூட விரிவாக்கம் செய்யலாம். அழிவுகரமான வகையில் பேசுவது குறித்து சற்றே விரிவாக நாம் சிந்திக்க வேண்டும். 

நம்முடைய உணர்வுகளைப் பற்றி அல்லது அவர்கள் மீதான நம்முடைய விருப்பம் என்பது குறித்து பொய் சொல்வதும் கூட பொய்களின் உள்ளடக்கம். நாம் யாரோ ஒருவருக்கு மிகவும் நல்லவராக இருக்கலாம், அவரை விரும்புவதாக சொல்லலாம் – அதை நம்பிக்கொண்டு நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளலாம் – நம்முடைய தேவையெல்லாம் பணமோ அல்லது வேறு ஏதோ ஒன்று. ஒரு வகையில் இது மோசடி. நிச்சயமாக நாம் அவரிடம் சென்று “உண்மையில் நான் உன்னை விரும்பவில்லை, என்னுடைய தேவையெல்லாம் உன்னுடைய பணம்” என்று சொல்வதில்லை, அது சற்றே பொருத்தமில்லாதது. ஆனால் நம்முடைய உணர்வுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து உண்மையாக இருந்தால் நம்மை நாமே பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

பிளவுபடுத்தும் பேச்சு நாம் மிகவும் அருவருப்பான விஷயங்களைச் சொல்லும் இடமாக இருக்கக்கூடும், அது நம் சொந்த நண்பர்களையே நம்மை விட்டு விலகச் செய்யும். சிலர் எப்போதுமே புகார் செய்கிறார்கள் அல்லது தொடர்ந்து எதிர்மறையாக இருக்கிறார்கள், என்றால் இது அனைவரையும் அவர்களிடமிருந்து விலக்குகிறது. நாமும் அப்படி இருந்தால், யார் நம்முடன் இருக்க விரும்புவார்கள்? அல்லது மற்றவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு தராமல் இடைவிடாமல் பேசினால் – மற்றவர்கள் விலகிச்செல்ல காரணமாகிறது. அதுபோன்றவர்களை நாம் அனைவரும் அறிவோம், குறிப்பாக அப்படியானவர்களை நாம் அடிக்கடி சந்திக்க விரும்புவதில்லை. முடிந்தவரை மற்றவர்களைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்வது நல்லது, நேர்மறையாக இருங்கள்.

பிறரை துன்புறுத்தும் போதோ அல்லது நம்மை நாமே துஷ்பிரயோகம் செய்யும் போதோ கடுமையான வார்த்தைகள் வரும். மற்றவர்களிடம் அவர்கள் முட்டாள்தனமானவர்கள் அல்லது பயங்கரமானவர்கள் என்று கூறினால், நிச்சயமாக அது கொடூரமானது. நம்மை நோக்கியே அது திரும்பும் போது அது கொடூரமாகவே இருக்கும். நிச்சயமாக இது எந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தாது, எனவே நம்மிடத்திலும், நம்மை நாமே எவ்வாறு நடத்துகிறோம் மற்றும் நம்முடைய மனதுடன் எவ்வாறு பேசுகிறோம் என்பதில் நல்ல நடத்தையை கொண்டிருப்பது முக்கியம்.

பயனற்ற உரையாடலைப் பொருத்தவரையில், நாம் கண்மூடித்தனமாக நம்முடைய சொந்த விஷயங்கள், நம்முடைய சந்தேகங்கள், கவலைகள் உள்ளிட்டவற்றை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது. மற்றவர்களிடம் எளிதில் பகிர்ந்து கொள்ள முடியாத அல்லது பகிரக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, யாரோ ஒருவர் அவர் ஓரினச் சேர்க்கையாளர் அல்லது புற்றுநோயாளி என்று சொல்லி ரகசியம் காக்கச் சொன்னால், நீங்கள் அதைச் செய்ய வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கையை கெடுப்பது பயனற்ற உரையாடலில் இருந்து வருகிறது.  

சரியான பேச்சு என்பது உண்மையில் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான சூழலில், பொருத்தமானவை குறித்து பேசுதல். சில நேரங்களில் நாம் முறையாகவும் சில நேரங்களில் முறைசாராமலும் பேச வேண்டி இருக்கும். மற்றவர்களை சவுகரியமாக வைக்கும் விதமாக நாம் பேச வேண்டும். உங்களுடைய குழந்தைக்கு ஏதோ ஒன்றை விளக்கும் போது, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும், இது அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்கள், மற்ற கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படுவது நல்லது.

செயல்களுக்கான எல்லைகள் (நடத்தை)

எண்வகை மார்க்கத்தில் இரண்டாவது செயல்களுக்கான சரியான எல்லைகள் பற்றியது, இது தொழில்நுட்ப ரீதியிலானது. எல்லைகள் பற்றி நாம் பேசும் போது, நாம் சில வரையறை பற்றியும் இவ்வாறாக பேசுகிறோம்,”என்னுடைய எல்லை வரை நான் செயல்படுகிறேன், ஆனால் அதை மீறி எதுவும் செய்ய முடியாது”.

தவறான நடத்தை

எல்லையைத் தாண்டிப் போவதென்பது மூன்று வகையான அழிவுகரமான நடத்தையை குறிக்கிறது:

 • உயிரை பறித்தல் – உயிருள்ளவை ஏதோ ஒன்றை கொலைசெய்தல்
 • நமக்கு கொடுக்கப்படாததை எடுத்தல் – நமக்கு உரித்தாக இல்லாத ஏதோ ஒன்றை எடுத்தல், திருடுதல்
 • முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுதல்

கொலை செய்தல்

எளிதாகச் சொல்வதானால், ஏதோ ஒன்றின் உயிரைப் பறித்தல். இது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை, எல்லா வகையான உயிரினங்களான விலங்குகள், மீன், பூச்சிகள் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியது.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வேட்டையாடுதல் அல்லது மீன்பிடித்தலை விடுதல் என்பது கடினமானதாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன். சிலருக்கோ, பூச்சிகளைக் கூட கொள்ளாமல் இருப்பது சற்றே கடினமாக இருக்கலாம். கடந்த மற்றும் எதிர்கால வாழ்க்கை, சிந்தனைகளில் தலையிடாமல் இதனை அணுக பல வழிகள் இருக்கிறது, “இந்த பூச்சி கடந்த ஜென்மத்தில் நம்முடைய அம்மாவாக இருந்திருக்கும்.” இதில் முக்கியமானது என்னவென்றால், நமக்கு எரிச்சலூட்டும் எதாவது இருந்தால், உள்ளுணர்வினால் முதலில் அதைக் கொல்ல நாம் விரும்புவதில்லை.  இந்த எண்ணமே நாம் விரும்பாத எதையும் வன்முறை வழியில் அழிக்க விரும்பும் பழக்கத்தை உருவாக்குகிறது, உங்கள் முகத்தை சுற்றி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கம் ஈக்கு அப்பாற்பட்ட அளவிற்கு இது வருகிறது. கூச்சலிடும் ஏதோ ஒன்றை அமைதியான முறையில் கையாள முயற்சிக்க வேண்டும். எனவே கொசுவோ அல்லது ஈயோ, சுவற்றின் மீது அமர்ந்தால் அதன் மீது ஒரு டம்ளரை வைக்கலாம், ஒரு துண்டு பேப்பரை வைத்து, அதனை வெளியேற்றலாம். நாம் விரும்பாத ஏதோ ஒன்றை பல சூழல்களில், நாம் மிக அமைதியாக, வன்முறையில்லாத வழியில் கையாள்வதை கண்டறியலாம்.

நீங்கள் இந்தியாவில் வசித்தால், நான் செய்தது போல, பூச்சிகளுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவில் இருக்கும் எல்லா பூச்சிகளிடமிருந்தும் விடுபடுவதென்பது எளிதான வழியல்ல. சுற்றுலா ஏஜென்ட்டுகளுக்காக நான் ஒரு விளம்பர பிரச்சாரமும் கூட கற்பனை செய்து வைத்திருக்கிறேன்: “ உங்களுக்கு பூச்சிகள் பிடிக்குமென்றால், இந்தியாவும் பிடிக்கும்!” நான் முதலில் இந்தியா சென்றபோது, எனக்கு பறவைகள் பிடிக்காத என்ற பின்புலம் இருந்தது, ஆனால் நான் அறிவியல் புனைக்கதைகளுக்கு மிகப்பெரிய ரசிகன். தொலைவில் இருக்கும் ஒரு கோளுக்கு பயணம் செய்தால் அங்கு இந்தப் பூச்சிகளின் வடிவிலான வாழ்க்கைமுறை இருந்தால், அது மிக மோசமானதாக இருக்கும் நான் அவற்றை பார்த்ததும் அதனை பிழிந்தெடுக்கவேண்டும் என்றே விரும்புவேன். உங்களை அந்த பூச்சியின் இடத்தில் நீங்கள் இருப்பதாக யோசிக்கத் தொடங்கினால், அவை அவற்றின் சொந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றன – என்பதை உணர்ந்தால் உங்களுக்கு அதன் வாழ்க்கை முறை மீது மரியாதை ஏற்படும்.

சில கொடூரமான பூச்சிகளும் இருப்பது உண்மைதான், மோசமான மனிதர்களைப் போலத் தான் அவையும், சில நேரங்களில் கடுமையான முறைகளைக் கையாண்டு அவற்றைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் மனித மோதல்களோ அல்லது வீட்டில் இருக்கும் எறும்பு அல்லது கரப்பான் பூச்சியோ எதுவாக இருந்தாலும் அமைதியான வழிமுறையை முதலில் முயற்சிப்பது சிறந்தது.  

ஆனால் உங்களது விளைச்சலை உண்ணும் வெட்டுக்கிளிகளை கவனிப்பது அவசியம். மிகப்பெரிய ஒப்பந்தங்கள் உந்துதலுடன் தொடர்புடையது.  புத்தரின் கடந்த காலமே இதற்கு ஒரு உதாரணம், அப்போது அவர் கப்பல் மாலுமியாக இருந்தார். கப்பலில் இருந்தவர்களில் யாரோ ஒருவர் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், இந்த பெருந்திரளான படுகொலையை தடுக்க புத்தரிடம் அமைதி வழி எதுவும் இல்லை; இதனை தடுக்க ஒரே சாத்தியமான வழி அந்தக் கொலைக்காரனை கொல்வதே. ஆகையால் புத்தர் அவனைக் கொன்றார், ஆனால் இரக்கம் எனும் நோக்கத்துடன் - பயணிகளைக் காப்பாற்றுவதுடன், எதிர்மறை கர்மாவை வளர்த்துக்கொள்வதில் இருந்து அந்த மனிதனை காப்பாற்றவும், இதில் கோபமோ பயமோ இல்லை. எனினும் புத்தர் தான் ஒருவரைக் கொன்றதை ஏற்றுக்கொள்கிறோர், நோக்கம் இல்லாவிட்டாலும் இது ஒரு அழிவுகரமான செயல், “இந்த செயலுக்கான கர்மா விளைவுகளை மற்றவர்களுக்குப் பதிலாக நானே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் முடிவுசெய்தார்.

எனவே தேவைப்பட்டால் பயிர்களைக் காப்பதற்காக வில்லனான வெட்டுக்கிளியைக் கொலை செய்யலாம் – கோபம் அல்லது பயத்தினால் அல்ல, அல்லது பயிர்களை விற்று அதிகம் பணம் ஈட்டலாம் என்றும் அல்ல – மாறாக இரக்கத்தினால் இதனை செய்யலாம், இதனால் கோபத்தினால் செய்யும் போது ஏற்படுவதை விட குறைவான விளைவே ஏற்படும். எனினும், புத்தரைப் போல, எதிர்மறை செயலாக இருந்தாலும் அதனை ஏற்பது மிக முக்கியம், அதனால் வரப்போகும் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

களவாடுதல்

பெரும்பாலான மக்கள் தங்களிடம் இருப்பதை விட தங்கள் வாழ்க்கை முறையோடு மிகவும் பிணைப்புடன் இருக்கிறார்கள், எனினும் நுங்கள் மற்றவர்களின் உடைமைகளை எடுக்கும் போது, அது இரண்டு தரப்பினருக்குமே துன்பத்திற்கான மிகப்பெரிய காரணமாக அமைந்துவிடும். குறிப்பாக திருடனுக்கு “நான் அகப்பட்டுவிடுவேனோ” என்ற மோசமான உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

தற்போது, நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் நம்முடைய பிரச்னைகளை நாமே தவிர்க்க வேண்டும். மீனையோ அல்லது பூச்சியையோ நீங்கள் கொன்றால், நிச்சயமாக, அவற்றிற்கு அது பிரச்னையே. அதே சமயம் தொந்தரவு செய்யும் பூச்சிகளால் பிரச்னைதான், எப்போதுமே நம்முடைய இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுவால் கவலையாக இருப்போம், நடு இரவில் எழுந்து கொசு வேட்டை நடத்துவோம். இது அமைதியில்லாத மனநிலை. இவற்றை கையாள அமைதியான வழிமுறையை நாம் பொதுவாகக் கையாண்டால், நம்முடைய மனமும் இலகுவாக இருக்கும்.

களவாடுதலிலும் இதே தான், நீங்கள் பதுங்கி இருக்க வேண்டும், அகப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் ஆட்கொள்ளும்.  மிக வலுவான விருப்பத்தின் அடிப்படையில், நீங்கள் செய்யும் வேலைக்குத் தேவையானதை வாங்குவதற்கு போதுமான பொறுமை கூட இல்லாததால், யாரோ ஒருவருடையதை திருடுகிறீர்கள்.

கொலை மற்றும் களவாடுதலுக்கு எதிர்மறை உந்துதல்கள் காரணமான சில உதாரணங்களும் இருக்கின்றன.

 • மாமிசம் அல்லது மீன் சாப்பிட வேண்டும் என்ற பேராசை காரணமாகவும் நீங்கள் கொலை செய்யலாம், உண்பதற்கு அதைத் தவிர வேறு எதுவும் இல்லையென்றால் அது ஒன்றே வழி, ஆனால் அதற்கு மாற்று இருக்கும்பட்சத்தில், அதைச் செய்யலாம்.
 • யாரையோ துன்புறுத்த வேண்டும் என்று கோபத்தின் காரணமாக திருடலாம், மற்றவர்களின் உடமைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

தகாத பாலியல் நடத்தை

இது மிக கடினமான தலைப்பு, ஏனெனில் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நம்முடைய பாலியல் நடத்தைக்குப் பின்னால் இருக்கம் வலுவான உந்துதல் ஆசை. தவிர்க்க வேண்டியவை எவை என்று பௌத்தம் அடிப்படை வழிகாட்டுதல்களை விளக்குகிறது, அவை:

 • பலாத்காரம் மற்றும் வரம்பு மீறுதல் உள்ளிட்ட நம்முடைய பாலியல் நடத்தையால் தீங்கு விளைவித்தல்.
 • நம்முடைய இணையராக இருந்தாலும் அவர்கள் விரும்பாத போது பாலுறவு கொள்ள வற்புறுத்துதல்
 • மாற்றாரின் இணையருடன் பாலுறவு கொள்தல் அல்லது, நம்முடைய இணையர் இருக்கும் போதே பிறருடன் பாலுறவு வைத்தல். நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறோம் என்பது பொருட்டல்ல, எப்போதுமே இது துன்பத்தை முன்நடத்தும், இல்லையா?

தகாத பாலியல் நடத்தை பல்வேறு வகைகள் இருக்கின்றன, ஆனால் இதற்கு பின்னர் இருக்கும் எண்ணம் -நாம் விலங்குகளைப் போல செயல்படக் கூடாது. விலங்குகள் தனக்கு தேவை இருக்கும் போது மற்ற விலங்குகள் மீது பாய்ந்து பாலுறவு கொள்ளும், சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலை கொள்வதில்லை. இது முழுவதும் ஆசை மற்றும் இச்சையின் கட்டுப்பாட்டினால் நிகழ்பவை – இதைத் தான் நாம் தவிர்க்க வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும், சில எல்லைகளை வகுத்து நம்முடைய பாலியல் இச்சைகளை அதற்குள் தீர்வு காண வேண்டும், அதனை கடந்துவிடக் கூடாது. நாம் நிர்ணயிக்கும் அந்த எல்லைகள் எத்தனை முறை பாலுறவு கொள்தல், பாலியல் செயல்களின் வகைகள், பாலியல் நிலைகள் அல்லது வேறெதுவாக இருந்தாலும் அனைத்தையும் கையாளும்.  இங்கு புரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய பாலியல் வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும், நாம் நினைப்பதையெல்லாம், எல்லா நேரத்திலும், எந்த இடத்திலும், மிருகங்களைப் போல யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளக் கூடாது என்பதற்காகவே சில வழிகாட்டு நெறிமுறைகள். நன்னெறி சுயஒழுக்கத்திற்கு இது உண்மையில் மிக முக்கியம். சுய – ஒழுக்கம் என்பது நாம் வகுத்திருக்கும் எல்லையை கடக்காமல் இருப்பது, ஏனெனில் அதனைக் கடந்து போவதென்பது வெறும் இச்சையே என்பதை நாம் உணர வேண்டும், இச்சையே கணக்கிலடங்கா பிரச்னைகளுக்கான காரணம்.

போதைப்பொருள் உட்கொள்தல்

போதைப்பொருட்களை உட்கொள்ளுதல் அழிவுகரமான செயலில் சேர்க்கப்படாது, ஆனால் அதனை விட்டொழிப்பது நம்முடைய முன்னேற்றத்திற்கு மிக முக்கியம்.

ஒருமுகப்படுத்துதலை நாம் மேம்படுத்த நினைத்தால், ஒழுக்கத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். நாம் மது அருந்தினால், ஒழுக்கத்தை இழக்கிறோம், நாம் அப்படியில்லையா?  மதிமயக்கும் போதைகள் அல்லது கஞ்சாவை உட்கொள்வதால் நினைவை இழக்கிறோம். நம்முடைய மனம் அலைபாய்வதோடு கற்பனை உலகில் மிதக்கும். பலவிதமான போதைப்பொருள்கள் அல்லது மதுவின் விளைவுகளைப் பார்த்தால், நம்முடைய சொந்த முன்னேற்றத்தில் நாம் சாதிக்க விரும்புவது என்ன என்பதை ஒப்பிட்டால், உயரச் செல்வது அல்லது மது அருந்துதல் இரண்டும் முரண்படுகிறது. மது அருந்தும் சமயத்தில் மட்டும் அது தடங்கலை ஏற்படுத்துவதில்லை, அதற்குப் பிறகும் மிஞ்சி இருக்கிறது – அது தான் ஹேங் ஓவர்!  இந்தப் பழக்கத்தை முற்றிலும் விட்டு விடுவது நல்லது, அல்லது சில வரையறைகளை வகுத்துக்கொள்வது நிச்சயமாக நல்லது.

சரியான எல்லைக்குள்ளான செயல்பாடுகள் (சரியான நடத்தை)

சுய-ஒழுக்கத்தின் ஒரு தோற்றம் அழிவுகரமான நடத்தைகளின் வகைகளில் இருந்து விலகிக்கொள்தல். மற்றொரு வகை ஆக்கப்பூர்வ வழிகளிலான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்தல், இது தான் “சரியான நடத்தை” என்றழைக்கப்படுகிறது.

எனவே, மற்றவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, வாழ்வை பாதுகாக்க உதவலாம். இதன் விரிவான செயலாக்கம் சுற்றுச்சூலை அழிக்காதிருத்தல், அதனை பேணிப்பாதுகாத்தல், எனவே விலங்குகள் மற்றும் மீன்கள் சுதந்திரமாக வாழ முடியும். உங்களிடம் பன்றிகள் இருந்தால், அவற்றிற்கு உணவிடுதல், அவை எடை அதிகமாக இருந்தால் நீங்கள் நிறைய மாமிசம் உண்ணலாம் என்ற எண்ணத்தில் இல்லாமல் அவை செழிக்க வளர்த்தால் அது அவற்றின் வாழ்வை பாதுகாப்பதாகும். நாய்க்கு உணவளித்தல் – அதுவும் வாழ்வை பாதுகாப்பதற்கான ஒரு வழி! உடல்நலமில்லாதவர்களை பராமரித்தல் அல்லது காயப்பட்டவர்களுக்கு உதவுதல் இவையாவும் கூட இவற்றில் அடங்கும்.

உங்களுடைய அறைக்குள் ஒரு ஈ அல்லது வண்டு ரீங்காரமிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அதற்கு அங்கு இருக்கத் தேவையில்லை, அது வெளியே செல்லத் தான் விரும்புகிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லை, உங்களுடைய அறைக்குள் பறந்து வந்த சிறு குற்றத்திற்காக அதை நீங்கள் கொல்ல வேண்டுமா, அது நன்றாக இருக்காது இல்லையா? ஜன்னலைத் திறந்து விட்டு “ச்சூ” என்றோ அல்லது வேறு ஏதாவது சொல்லியோ அது வெளியே செல்ல உதவலாம். அந்த வண்டும் வாழ விரும்புகிறது! ஒரு பறவை தவறுதலாக உங்களுடைய அறைக்குள் பறந்து வந்துவிடுகிறது, உடனடியாக ஒரு துப்பாக்கியை எடுத்து அதைச் சுட்டுவிடுவதில்லை நீங்கள் அப்படித்தானே? வண்டும், பறவையும் தோற்றத்திலும், அளவிலும், எழுப்பும் ஓசையிலும் வித்தியாசமானவை. உங்களுடைய அறைக்குள் ஈக்கள் வருவதை நீங்கள் விரும்பவில்லையா – ஜன்னல்களைத் திறக்காதீர்கள் அல்லது திரைச்சீலை போட்டுவிடுங்கள்!

திருடாமல் இருப்பதற்கான, சரியான செயல், மற்றவர்களின் உடைமைகளைப் பாதுகாத்தல். யாரேனும் உங்களுக்கு கடனாக எதையாவது கொடுத்திருந்தால், அதனை சேதப்படுத்தாமல் இருக்க முயற்சியுங்கள். மற்றசர்களும் நல்ல பொருள்களை வைத்திருக்க உதவ முயற்சியுங்கள்.

தகாத பாலுறவு கொள்வதை விட, உஷ்ணம் தலைக்கேறியதும் செயல்படும் நாயைப்போல அல்லாமல் மற்றவர்களுடன் பாலுறவு கொள்ளும் போதும், உங்களுக்குள்ளான உறவிலும் கூட நீங்கள் அன்பானவராக, கனிவானவராக இருப்பது அவசியம்.

சரியான மற்றும் தவறான நடத்தைக்கான பிற உதாரணங்கள்

நம்முடைய உரையாடலின் தொடர்ச்சியாக நீங்கள் பார்த்தால், இந்த மூன்று விதமான நடத்தைகள் பலவிதமான தோற்றங்களில் தொடர்புடையது என்பதை காண முடியும்.

உதாரணத்திற்கு, கொலை செய்யாதே என்பதன் விரிவாக்கம் மற்றவர்களை உடல் ரீதியில் கடுமையாக நடத்துவதை நிறுத்து. இது அவர்களை அடிப்பதை மட்டும் குறிக்காது, அவர்களிடம் அதிகம் வேலைவாங்காதிருத்தல் அல்லது உடல் வேதனை ஏற்படுத்தும் விதமான கடினமான வேலைகளைச் செய்ய வற்புறுத்துதல். நாம் இதனை நமக்கே கூட செயல்படுத்தலாம் – நமக்கு நாமே அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தாமல், நன்றாக சாப்பிடாமல் அல்லது குறைவான நேரமே உறங்குதல் உள்ளிட்ட உடலுக்கு தீங்கானதை செய்யாதிருத்தல். நாம் எப்போதும் நம்முடைய நடத்தை மற்றவர்களுக்கு எவ்வாறு செயல்படுகிறது என்றே சிந்திப்போம், ஆனால் அதனை நாமும் செயல்படுத்துவது முக்கியம்.

களவாடுதலைப் பொறுத்தவரையில், வெறுமனே மற்றவர்களின் உடைமைகளை எடுத்தல் என்பதல்ல, அவர்களைக் கேட்காமல் அவர்களது பொருட்களை பயன்படுத்துதலும் அடங்கும். யாரோ ஒருவரின் செல்போனை எடுத்து மணிக்கணக்கில் பேசி கட்டணத்தை அதிகரிப்பது அல்லது மற்றவரின் பிரிட்ஜில் இருக்கும் பொருளை அவரைக் கேட்காமலே எடுத்துக்கொள்வது. டிக்கெட் வாங்காமல் தியேட்டருக்குள் புகுந்த படம் பார்ப்பது, அல்லது – மக்கள் காது கொடுத்து கேட்கவே விரும்பாதது – உங்களுடைய வரியைக் கட்டாமல் இருப்பது! இதுவும் திருட்டு தான்.

“நான் என்னுடைய வரியைக் கட்ட விரும்பவில்லை ஏனெனில் இது நிதி மற்றும் வாங்கும் திறனுக்கு இடையே நடக்கும் போர்” என நாம் வாதிடலாம். ஆனால் யதார்த்தத்தில் அந்த நிதியானது சாலைகள் அமைக்கவும், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கும் செல்கிறது. உங்களுக்கு அவையாவும் தேவையெனில், நீங்கள் வரி கட்ட வேண்டும்.

உரிமம் பெறாத அல்லது கொள்ளையடிக்கப்பட்ட மென்பொருள் அல்லது வீடியோக்களைப் பதிவிறக்குவது பற்றி என்ன சொல்வது, இது திருட்டா? குறிப்பாக, “பணம் செலுத்தாமல் இதைப் பதிவிறக்க வேண்டாம்” என்று வெளிப்படையாகச் சொன்னால் அது மிகவும் தெளிவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இது திருட்டு இல்லை என்று சொல்வதற்கு வழி இல்லை. எனினும் கொள்கையானது, எல்லைகளை வரையறை செய்யாமலே இருப்பதற்கும், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், நீங்கள் விரும்பும் எதையும் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. திருடுவதைப் பொறுத்தவரையில், நாம் சொல்லலாம், நான் வங்கியை கொள்ளையடிக்கப்போவதில்லை அல்லது கடையில் இருந்து திருடப்போவதில்லை, கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்கிறேன்? உண்மையில் என்னால் இதை தற்போது தவிர்க்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு எல்லையையாவது இது உருவாக்கும், ஆனால் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்வதும் திருட்டு தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பணமிருந்தும் கட்டணம் செலுத்தாமல் பதிவிறக்கம் செய்வதற்கும் பணம் இல்லாமல் அதைச் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. உங்களால் கட்டணம் செலுத்த முடியும் ஆனால் நீங்கள் கட்டவில்லையென்றால் அது அதி தீவிரமானது, மலிவானவராக அல்லது மோசமானவராக இருப்பதைப் போன்றது. இது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.

திருடுதல் என்ற புள்ளியில், நம்மை நாமே பார்க்க வேண்டும் – மூன்று விதங்களில் பணத்தை விரயம் செய்வதை நிறுத்தலாம். சூதாடுதல், உதாரணத்தின்று, நம்முடைய சொந்த உடைமைகளை தவறாக பயன்படுத்துதல். நம்மால் வாங்க முடியும் என்றால், கஞ்சத்தனமாக இருத்தல் கூடாது. சரியான உணவை உட்கொள்ள பணம் இருக்கிறதென்றால், நல்ல உணவுப்பொருளை வாங்குங்கள், ஆனால் உங்களுடைய கஞ்சத்தனத்தால் மலிவான பொருளை வாங்கினால், தரக்குறைவான உணவே கிடைக்கும். இது உங்களை நீங்களே திருடிக்கொள்வதற்கு சமமானது.

தகாத பாலியல் நடத்தை என்று வரும் போது, நம்மை நாமே மற்றவர்களோடோ அல்லது அவர்களின் இணையர்களோடு உறவுவைக்க அழுத்தம் தருவதோடு நின்றுவிடுவதில்லை, நம்முடைய சொந்த உடல் நலன் அல்லது உணர்வுகளின் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படும் பாலியல் செயல்களில் ஈடுபடுவதையும் நிறுத்துகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் ஈர்த்த ஒருவரை சந்திக்கிறீர்கள், அவருடன் பாலுறவு கொள்ள விரும்புகிறீர்கள், அவ்வாறு நடந்து கொண்டால், மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை உணர்கிறீர்கள். உங்களுடைய சொந்த உடல்நலனை கருத்தில் கொண்டு நீங்கள் உறவில் ஈடுபடவில்லை. யாரோ ஒருவர் அழகாக இருப்பதற்காக நம்முடைய இச்சை நம்மை இயக்க வைக்கக் கூடாது.

நாம் வகுக்கும் எல்லையை கடக்கும் போது என்ன செய்ய வேண்டும்

நம்முடைய நடத்தைக்காக நாம் நிர்ணயிக்கும் எல்லைகளை நிமிடத்திற்கு நிமிடம் தாண்டுவது என்பது இயல்பானது, எனவே பௌத்தம் இத்தகைய சூழல்களை கையாள்வதற்கான எதிராளிகளாக சிலவற்றை வரையறுக்கிறது:

 • என்ன செய்தாயோ அதை ஏற்றுக்கொள். உனக்கு நீயே நேர்மையாக இரு
 • நீ விரும்பாதது எதுவாக இருந்தாலும் அதைச் செய்ய மறு. குற்றஉணர்வில் இருந்து இது வேறுபடுகிறது, அங்கு நீ உன்னை மட்டுமே மோசமானவராக நினைத்து, அதைச் செல்ல விடுவதில்லை.
 • இதே செயலை திரும்ப செய்ய முயற்சிக்க மாட்டேன் என்று தீர்மானம் எடுங்கள்.
 • எல்லைகளைக் கடப்பதில்லை என்று உங்களுடைய நோக்கத்தை மறுஉறுதிப்படுத்துங்கள், ஏனெனில் அவை துன்பம் மற்றும் பிரச்னைகளுக்கான காரணங்களையே முன்நடத்தும். 
 • எதிர்பதத்தை செயல்படுத்துங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரிடமோ கூச்சலிட்டால், மோசமான மனநிலையில் இருந்தேன் என்று விளக்கமளித்து. நேர்மையாக அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

 வாழ்வாதாரம்

சில நன்னெறி வழிகளில், இது நம்முடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்பதைப் பற்றியது

தவறான வாழ்வாதாரம்

தீங்கு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து பணம் சம்பாதிப்பதை தவிர்ப்பது அல்லது நமக்கும் மற்றவர்களுக்கும் தீங்கான வழியில் சம்பாதித்தல். உதாரணத்திற்கு:

 • ஆயுதங்களைக் கையாளுதல் அல்லது உற்பத்திசெய்தல்
 • விலங்குகளைக் கொள்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பூச்சிகளை அழித்தல்
 • மதுபானங்கள் அல்லது போதை வஸ்துகளை பரிமாறுதல், உற்பத்தி அல்லது விற்பனை செய்தல்
 • சூதாட்ட அரங்கத்தை இயக்குதல்
 • ஆபாச படங்களை வெளியிடுதல் மற்றும் விநியோகித்தல்

இந்த வகையிலான வாழ்வாதாரம் பிறருக்கு தீங்கு ஏற்படுத்தும் அல்லது ஆபாசங்கள் போன்றவை, இச்சையை ஏற்படுத்தும், ஆசையை அதிகரிக்கும். நாம் நமது அன்றாட பணியிலேயே ஈடுபட்டிருந்தாலும், நேர்மையாக இருக்க வேண்டியது முக்கியம், நேர்மையற்றவராக இருப்பதை தவிர்க்கவும்:

 • வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தல், முடிந்தவரை அவர்களிடம் இருந்து அதிக பணம் பெற முயற்சித்தல்
 • மோசடி, உங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வியாபாரத்தில் இருந்து நிதி எடுத்தல்
 • மிரட்டி பணம் பறித்தல், அவர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக மற்றவர்களை அச்சுறுத்துதல்
 • லஞ்சம்
 • மற்றவர்களை சுரண்டுதல்
 • தவறான விளம்பரம்
 • பணம் சம்பாதிப்பதற்காக உணவு அல்லது பொருள் கலப்படம் செய்தல்

வாழ்வாதாரத்திற்காக நேர்மையற்ற பல வழிகள் இருக்கின்றன. நன்னெறி சுய-ஒழுக்கத்தை செயல்படுத்தி இந்த வகையிலான வாழ்வாதாரத்தை நாம் தவிர்க்க வேண்டும்.

சரியான வாழ்வாதாரம்

நேர்மையான வழியில் நம்முடைய வாழ்க்கையை அமைக்கவே நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும், அது நம் சமூகத்திற்கும் பயன் தர வேண்டும், உதாரணத்திற்கு:

 • மருத்துவம்
 • சமூகப்பணி
 • வெளிப்படையான வர்த்தகம்
 • மற்றவர்களின் நலன் கருதி பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனை மற்றும் சேவை

ஆரோக்கியமான சமூக செயல்பாட்டிற்காகவும், மற்றவர்களின் நலனுக்காகவும் செய்யும் எந்த பங்களிப்புமே சிறந்தது. இவற்றிற்கு முன்னதாக, நாம் செய்ய வேண்டியவை:

 • மற்றவர்களை ஏமாற்றக் கூடாது, அதிக கட்டணம் வாங்கக் கூடாது
 • வெளிப்படையான விலை நிர்ணயம், இதனால் லாபம் பெறலாம், ஆனால் கணிசமானது மட்டுமே
 • ஊழியர்களுக்கு நல்ல ஊதியம், இதனால் நாம் அவர்களை சுரண்டுவதில்லை

கேள்விகளில் அடிக்கடி எழும் ஒன்று தேவை பற்றியது. ஒரு முறை நான் ஆஸ்திரேலியாவில் திபெத்திய ஆசிரியருக்கு மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன், அங்கு ஏராளமான ஆடுகள் இருந்தன, யாரோ ஒருவர் கேட்டார், “நான் வசிக்கும் நகரத்தில், இருக்கும் ஒரே வேலை ஆடுகளை வளர்ப்பது, அது பின்னர் இறைச்சிக்காகவும், கம்பளிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நான் என்ன செய்வது? என்னால் வேறு நகரத்திற்கு இடம் பெயர்ந்து வேறு வேலை கண்டறிய முயற்சிக்கவும் முடியாது என்றார். திபெத்திய லமா அவரிடம் சொன்னார், “இதில் முக்கியமானது உங்களுடைய பணியில் நேர்மையாக இருங்கள், மற்றவர்களை ஏமாற்றாதீர்கள், ஆடுகளை இழிவாக நடத்தாமல் அன்பாக நடத்துங்கள், அவற்றிற்கு நல்ல உணவளித்து, நன்றாக பராமரித்துக்கொள்ளுங்கள்.” எனவே, இதில் முக்கியமான அம்சம், அன்பாகவும், நேர்மையாகவும் இருப்பது.

சுருக்கம்

எண்வகை மார்க்கத்தில் இருந்து நாம் பெற்ற அறிவுரைகளைப் பார்த்தால், அவை நம்மை கட்டுப்படுத்தும் ஒரு சில விதிமுறைகள் என்று எடுத்துக்கொள்ளாமல், நமக்கும் பிறருக்கும் தீங்கை ஏற்படுத்தும் எதிர்மறை செயல்களில் இருந்து நம்மை விடுவிக்கும் எல்லைகளாக பார்க்க வேண்டும்.

Top