நன்னெறி சுய - ஒழுக்கத்தின் பரிபூரணம்: சிலா பரமிதா

ஒழுக்கம். இந்த வார்த்தையானது பலருக்கு பள்ளிகளில் போடப்பட்ட தடுப்புக்காவல் சம்பவங்கள் அல்லது சிலருக்கு கட்டுப்பாடான உணவுமுறைகளை நினைவுபடுத்தலாம். பௌத்தத்தில், நன்னெறி சுய - ஒழுக்கம் என்பது நம்முடைய நடத்தையின் விளைவு நம்மிடத்திலும் மற்றவர்களிடத்திலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அறிந்து விழிப்புடன் இருப்பதற்கு நம்மை அனுமதிக்கிறது. நம்மை கட்டுபடுத்துவதற்குப் பதிலாக, நன்னெறி சுய- ஒழுக்கத்தை பின்பற்றுவது நாம் சுதந்திரமாக இருப்பதற்கான சிறந்த பலனை நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் தருகிறது.

அறிமுகம்

ஆறு தொலைதூர - அடைதல் அணுகுமுறைகளில் (பரிபூரணங்கள்) இரண்டாவது நன்னெறி சுய-ஒழுக்கம் ஆகும். இது ஒன்றும் ஒரு இசைக்கருவை கற்றுக் கொள்வதற்கு அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குவதற்காக தேவைப்படும் வகையிலான ஒழுக்கம் அல்ல, மாறாக நம்முடைய நன்னெறி நடத்தையுடன் செய்ய வேண்டியதாகும். அதே போன்று மற்றவர்களை அதிகாரத்துடன் மிரட்டுவது, உங்களது நாயை பயிற்சிப்பது, அல்லது ராணுவத்தில் வீரர்களை கட்டுப்படுத்துவதைப் போன்றது அல்ல. நாம் நம்முடைய சொந்த ஒழுக்கம் பற்றி மட்டுமே பேசுகிறோம், அவற்றில் நாம் மூன்று வகைகளைக் கொண்டிருக்கிறோம். 

அழிவுகரமான செயல்களில் இருந்து விலக்குதல்

நன்னெறி சுய-ஒகுப்பத்தில் முதல் வகையானது அழிவுகரமான செயல்களைச் செய்வதில் இருந்து விலக்குதலாகும், இது நாம் எப்படி செயலாற்ற, பேச மற்றும் சிந்திக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.  கொலை, திருட்டு, பொய் உரைத்தல் உள்ளிட்ட பத்து அழிவுகரமான செயல்களில் இருந்து நிம்மை விலக்குதல் என்று பொதுவாக அர்த்தப்படுத்தப்படுகிறது, நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் நடத்தையை தவிர்க்க நாம் சபதம் எடுக்க வேண்டுமெனில் நாம் இந்த சபதங்களை கொண்டிருக்கலாம். 

குறிப்பிட்ட அழிவுகரமான நடத்தையை தவிர்த்தல் பற்றி நாம் பேசினால், அவை இரண்டு வகைகளாக இருக்கின்றன. முதலாவது இயல்பாகவே அழிவுகரமாக இருக்கும் நடத்தை, அதாவது கொலை செய்தல் மற்றும் திருடுதல் போன்றவை, இவற்றை எளிதில் புரிந்து கொள்ள முடியும். தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளாத நடத்தைகளும் உள்ளன, ஆனால் குறிப்பிட்ட நபர்களுக்காக அல்லது சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என்று புத்தர் கூறினார். உதாரணமாக துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இரவில் சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும், ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. இந்த உண்மையானது நிதர்சனத்தின் அடிப்படையில் வந்ததாகும், இரவில் தெளிவான மனதையும், காலையில் மன அமைதியுடன் தியானத்தில் ஈடுபட வேண்டுமெனில், இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்ததாகும். துறவி அல்லது கன்னியாஸ்திரிக்கு கொடுக்கப்படும் அறிவுரையின் மற்றொரு உதாரணம், அவர்கள் நீண்ட முடி வைத்திருக்கக் கூடாது, ஏனெனில் அது ஒருவரின் சொந்த அழகில் இணைப்பை அதிகரிக்க முடியும் மேலும் அன்றாடம் சிகையலங்காரம் செய்வத நேர விரயம்! நிச்சயமாக இந்த அறிவுரை எல்லோருக்குமானது அல்ல, மாறாக துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கானதாகும். 

ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுதல்

நன்னெறி சுய- ஒழுக்கத்தின் இரண்டாவது வகையானது நேர்மறை மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுதலாகும், அவை நாம் ஞானமடைவதற்கான நேர்மறை சக்தியை கட்டமைக்கும். இதன் பொருள் என்னவெனில் போதனைகனை கற்க செல்ல வேண்டும், சிந்திக்க வேண்டும் தர்மத்தை நோக்கி தியானித்தல், மற்றும் நம்முடைய கோந்த்ரா பயிற்சிகளான (மேம்பட்ட தந்திர பயிற்சியின் தொடக்க நிலைகள்) மண்டியிடல், அளித்தல் உள்ளிட்டவற்றை முழுமையாக்குவதற்கான ஒழுக்கத்தை கொண்டிருத்தலாகும். 

மீண்டும் சொல்வதானால், நன்னெறி சுய - ஒழுக்கம் என்பது உண்மையான நடத்தை என்பதற்கு பதிலாக ஒரு மனநிலை என்பதாகும். நம்முடைய மனதில் இருந்து வரும் ஒரு ஒழுக்கமாகும் மேலும் நாம் நடந்து கொள்ளும் விதத்திற்கான வடிவத்தை கொடுக்கிறது - நாம் நேர்மறை செயல்களில் ஈடுபடுகிறோமோ என்பதை உறுதிபடுத்தி அழிவுகரமான மற்றும் பொருத்தமில்லாத நடத்தையில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்த ஒழுக்கம் இல்லையெனில், நாம் முற்றிலும் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்போம், இதனால் எளிதில் சிக்கலான உணர்வுகளின் செல்வாக்கின் கீழ் வந்துவிடுவோம். 

நன்னெறி சுய-ஒழுக்கமானது பாகுபடுத்தல் மற்றும் அறியாமையை பாகுபடுத்தல் அடிப்படையிலானது. அழிவுகரமாக செயல்படுவதில் இருந்து விலக்கிகொள்ள, நாம் பாகுபடுத்துகிறோம் அழிவுகரமாக செயல்படுதன் தீமைகள் பற்றி நாம் உறுதியாக இருக்கிறோம். நேர்மறை நடத்தையில் ஈடுபடுவதன் மூலம்,  தியானித்தல், முதல்நிலை பயிற்சிகளைச் செய்தல் உள்ளிட்டவற்றின் பலன்களை நாம் பாகுபடுத்துகிறோம். பாகுபடுத்துதலுடன், நாம் தானாகவே எப்படி செயல்படுவது என்பதை அறிந்து அதில் நம்பிக்கையோடு இருக்கிறோம். 

மற்றவர்கள் பலனடைய செயலாற்றுதல்

நன்னெறி சுய-ஒழுக்கத்தின் மூன்றவாது வகையானது உண்மையில் மற்றவர்கள் பலனடையவும் அவர்களுக்கு உதவவும் செயல்படுதலாகும். நாம் இங்கே மற்றவர்களுக்கு உதவுவதற்கான பலனையும் நாம் விரும்புவதாக உணராததால் அல்லது குறிப்பிட்ட ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு உவுவதில் இருந்து நாம் விலக்கிக் கொள்ளும் பாகுபடுத்தலையும் கொண்டிருக்கிறோம்.  

மற்றவர்களுக்கு உதவுதல் என்பதில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன, ஆனால் பொதுவாகப் பேசும் போது, நாம் ஈடுபடுவதற்கான ஒழுக்கத்தை கொண்டிருக்கிறோம், அவையே "நம்முடைய நேர்மறை செல்வாக்கின் கீழ் மற்றவர்களை ஒன்றிணைப்பதற்கான நான்கு வழிகள்" என்று அதைச் சொல்கிறோம். மற்றொரு விதத்தில், பிறர் நம் கருத்துகளை அதிகம் உள்வாங்குபவராக மாற்றுவதற்காக செயல்படும் வழிகள், இதனால் அவர்களுக்கு நாம் மேலும் ஆழமான விஷயங்களை போதிக்க முடியும். 

நான்கு வழிகளானவை :

  1. பெருந்தன்மையுடன் இருத்தல்
  2. மகிழ்வூட்டும் விதத்தில் பேசுதல்
  3. மற்றவர்கள் அவர்களின் இலக்குகளை அடையத் தூண்டுதல்
  4. இந்த நோக்கங்களுடன் நிலைத்து இருத்தல்

ஆறு தொலைதூர-அடைதல் அணுகுமுறைகள் பற்றிய போதனைகள் 11 வகையான நபர்களின் பட்டியலைக் குறிப்பிடுகின்றன, குறிப்பாக அவர்களுக்கு உதவ பலனடைவதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாம் அதை ஒரு பட்டியலாக மட்டும் நினைக்கக்கூடாது, ஆனால் அப்படிப்பட்டவர்களை நாம் சந்திக்கும் போது அவர்களை புறக்கணிப்பதை விட அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு குறிப்பிட்ட அறிவுறுத்தலாக இருக்க வேண்டும்.

  1. யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்காக
  2. அவர்களுக்கே எப்படி உதவுவது என்பது பற்றிய குழப்பத்தில் இருப்பவர்களுக்காக
  3. யார் நமக்கு உதவினார்களோ அவர்களுக்காக
  4. பயம் நிறைந்தவர்களுக்காக
  5. மனதளவில் துக்கத்தை கடந்தவர்களுக்காக
  6.  ஏழ்மை மற்றும் தேவையில் இருப்பவர்களுக்காக
  7. நம்முடைய இணைப்பாக இருப்பவர்களுக்காக
  8. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் உதவக்கூடியவர்களுக்காக
  9. நேர்மையான வாழ்க்கையை நடத்துபவர்களுக்காக
  10.  அழிவுகரமான வாழ்க்கையை வழிநடத்துபவர்களுக்காக
  11. நம்மிடம் இருக்கும் எந்த ஒரு அசாதாரணமான திறன்களையும் பயன்படுத்த வேண்டியவர்களுக்காக

நன்னெறி சுய-ஒழுக்கம் பற்றி சாந்திதேவா

போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் என்னும் தன்னுடைய புத்தகத்தில் நன்னெறி சுய- ஒழுக்கம் பற்றி இரண்டு அத்தியாயங்களில் சாந்திதேவா விவாதித்திருக்கிறார். பராமரிக்கும் அணுகுமுறை என்னும் முதல் அத்தியாயம்,நன்னெறி சுய-ஒழுக்கத்திற்கான அடித்தளமாகும், அங்கே நாம் நம்முடைய நடத்தையின் தாக்கத்தை பராமரிக்கிறோம் மற்றும் சிக்கலான உணர்ச்சிகளின் செல்வாக்கின் கீழ் செல்லாமல் இருப்பதைப் பற்றி அக்கறைப்படுகிறோம். மற்றவர்களுக்கு கூட உணர்வுகள் இருக்கிறது என்பதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம், அதனால் நாம் அழிவுகரமாக செயல்பட்டால் பின்னறர் நாம் அவர்களை காயப்படுத்துவோம். நம்முடைய நடத்தையின் விளைவுகள் நமக்கே எதிர்காலத்தில் என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். இவை அனைத்துமே நன்னெறி சுய-ஒழுக்கத்தின் அடித்தளத்தை உருவாக்குகின்றன. எதிர்காலத்தில் நமக்கோ அல்லது மற்றவர்களோ காயப்படுவதைப் பற்றி நாம் அக்கறைப் படவில்லையெனில், பின்னர் நன்னெறி வழியில் செயல்படுவதைப் பற்றி நாம் கருதுவதற்கு எந்தத் தேவையும் இல்லை. 

பராமரிக்கும் அணுகுமுறை என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது பல மொழிகளில் மிகக் கடினமானதாகும். ஏனெனில் இந்த வார்த்தை பராமரித்துக் கொள்ளுதல் மற்றும் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில் ஜாக்கிரதையாக இருப்பதையும் உள்ளடக்கியது, ஆனால் அதில் இருந்து எதைப் பின்பற்றுகிறோம், நம்முடைய நடத்தை நமக்குள்ளும் மற்றவர்களிடத்திலும் ஏற்படுத்தும் தாக்கத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளுதலையும் கூட இது குறிக்கிறது. 

இந்தத்தலைப்பு சாந்திதேவா அர்ப்பணிக்கும் இரண்டாவது அத்தியாயம் மனந்தெளிநிலை மற்றும் எச்சரித்தலை கையாள்கிறது. மனந்தெளிநிலையானது சிக்கலான உணர்வுகளால் உறிஞ்சப்படாமல் மனதளவில் ஒழுக்கத்தில் ஒரு பிடிப்பை கொண்டிருக்கும் மனநிலையாகும். ஒழுக்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மனப்பசை, அதாவது நாம் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் அந்த சமயத்தில் ஒரு பேக்கரியை கடந்து செல்கிறோம், அங்கே நமக்கு மிகப் பிடித்தமான கேக்கை பார்க்கிறோம், முடிந்தவரையில் நம்முடைய உணவுக்கட்டுப்பாட்டில் தீர்மானமாக இருக்க முயற்சிக்கிறோம். நம்முடைய டயட்டை கைவிடமாட்டோம் :"என்னுடைய பேராசை மற்றும் இணைப்பின் செல்வாக்கினால் நான் அந்த கேக்கை வாங்கப் போவதில்லை" என்று உறுதியாக இருக்கிறோம், இதற்குக் காரணம் மனந்தெளிநிலை நன்னெறி ஒழுக்கத்தில் இது மிக முக்கியமானதாகும்.  எச்சரிக்கையுடன், கேக்கை பார்த்ததும் நம்முடைய உணவுக்கட்டுப்பாட்டை பறக்கவிடத் தொடங்கி, "ஒரு சிறுதுண்டு கேக் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது!" என்று நினைக்கும் போது நம்முடைய உள்உணர்வு ஒரு எச்சரிக்கை மணியை ஒலிக்கும் அதனால் நாம் விலக்கிக் கொண்டு சுய- கட்டுப்பாட்டுக்கு திரும்புகிறோம். இது போன்ற விஷயங்களை நாம் பார்த்தல் அவசியம். மனந்தெளிநிலை மற்றும் எச்சரிக்கை இரண்டும் நன்னெறி ஒழுக்கத்திற்கான பலம். அவையே ஆயுதங்கள் அவற்றுடன் நாம் நமது ஒழுக்கத்தை கடைபிடிக்க முடியும், மேலும் அதனை வைத்து ஒருநிலைப்படுத்துதலை மேம்படுத்துவதற்கும் அதனை பயன்படுத்த முடியும். 

இறுதியாக, மனந்தெளிநிலையை மேம்படுத்தவும் பராமரிக்கவும் உதவும் மூன்று காரணிகளை சாந்திதேவா குறிப்பிட்டு காட்டுகிறார்:

  • நம்முடைய ஆன்மிக குருக்கள் அரவணைப்பில் இருங்கள். நம்மால் முடியவில்லை எனில் அவர்களின் இருப்பில் இருப்பதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம். நாம் அவர்களின் இருப்பில் இருந்தால், நிச்சயமாக நாம் முட்டாள்தனமாகவோ அல்லது அழிவுகரமாகவோ, அவர்களுக்கான நம்முடைய மரியாதையை மீறியோ செயல்படமாட்டோம். சிந்தனையில் வைத்திருப்பதும் நல்லதே, "என்னுடைய குரு இருக்கும் போது இது போன்ற விஷயங்களை நான் செய்யலோமா அல்லது பேசலாமா?" நம்மால் அப்படி செய்யமுடியவில்லையெனில் "ஒரு மரக்கட்டையைப் போல இருந்துவிடலாம்" என்று சாந்திதேவா நம்மை அறிவுறுத்துகிறார். வெறுமனே நீங்கள் ஒன்றுமே செய்யாதீர்கள். அது நாம் மனந்தெளிநலையோடு இருக்க உதவுகிறது - நிச்சயமாக நாம் நம்முடைய குருவுடன் இரவு உணவு சாப்பிடும் போது, முகம் முழுக்க கேக்கை பூசிக்கொண்டு யாரிடமும் கத்த மாட்டோம். 
  • நம்முடைய குருவின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள். அவர்கள் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பது நம்மை மனந்தெளிநிலையுடன் வைத்திருக்க உதவுகிறது.
  • மனந்தெளிநிலையுடன் இல்லாமல் இருப்பதன் விளைவுகளைப் பற்றி பயப்படுங்கள். இதற்கு அர்த்தம் நாம் பயந்துவிட்டோம் என்பதல்ல, ஆனால் சுய-கண்ணியம் மற்றம் சுய-மதிப்பு உணர்நிலைளின் அடிப்படையில் மனந்தெளிநிலை இல்லாமல் இருப்பதன் விளைவுகளை அனுபவிக்க நாம் விரும்பவில்லை. கோபம், பேராசை உள்ளிட்டவற்றின் செல்வாக்கின் கீழ் தரம் தாழ்ந்து செயல்படுவதை நாம் விரும்பாமல் நேர்மறை வழியில் நம்மைப் பற்றியே நாம் போதுமான அளவில் சிந்திப்போம். 

மேற்கூறியவற்றுடன் கைகோர்த்து, நமது ஆன்மீக குருகளிடம் பயபக்தி உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். "பயபக்தி" என்பது கடினமான வார்த்தை. ஆன்மிக குருகள் நம்மைத் திட்டுவார்கள் என்று நாம் அவர்களிடம் பயப்பட வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். பயபக்தி என்பது நாம் நம்முடைய ஆன்மிக குருகளையும் பௌத்தத்தையும் மிகவும் மதிக்கிறோம் நம்முடைய எதிர்மறை நடத்தையானது அவர்களிடம் மோசமாக பிரதிபலித்தால் அது நம்மை மோசமாக உணர வைக்கிறது என்பதை குறிக்கிறது. நம்மால், நமது செயலால் நம்முடைய குருவை பற்றி மக்கள், "இந்த குருவின் சீடர்களா இப்படி செயல்படுகிறார்கள்?" என்று நினைத்தால் அது எவ்வளவு மோசமானது அல்லது " நீங்கள் ஒரு பௌத்தராக இருக்கிறீர்கள்?! ஆனால் நீங்கள் மது அருந்துதல், சண்டையிடுதல் மற்றும் கோபமடைதலை கடைபிடிக்கிறீர்கள்." பயபக்தி மற்றும் மரியாதை உணர்வுடன், நாம் நமது நினைவாற்றலை வைத்து நெறிமுறை ஒழுக்கத்தின்படி செயல்படுகிறோம்.   

சுருக்கம்

ஒழுக்கம் என்பது நம் வாழ்வில் முன்னேற்றம் அடைவதில் நம்பமுடியாத முக்கியமான அங்கம் என்பதை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம். எழுத்துக்களைக் கற்றுக் கொண்டாலும், தேர்வுகளுக்குப் படித்தாலும் அல்லது உடல் எடையைக் குறைக்க முயற்சித்தாலும் - ஒழுக்கம் இல்லாமல், எங்கும் செல்வது கடினம்.

பௌத்த பயிற்சியிலும் அதுவே சரியாகப் பொருந்தும், பாதையில் முன்னேற்றத்தை கொண்டு வர நம்முடைய நடத்தையில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும். நம்மையும் மற்றவர்களைப் பற்றியும் நாம் அக்கறைப்பட்டால், பிறகு நன்னெறி சுய-ஒழுக்கம் என்பது தூரமானது அல்ல, மாறாக இயல்பான, பொது-உணர் விஷயமாகும். ஆக்கப்பூர்வமான நடத்தையை கவனத்துடன் வளர்த்து மற்றவர்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்கு நம்மால் முடிந்த வரை கடினமாக முயற்சித்தால், நாம் ஒரு அடித்தளத்தையும் நிகழ் மற்றும் எதிர்கால மகிழ்ச்சிக்கான காரணத்தையும் உருவாக்கலாம்.

Top