பெருந்தன்மையின் பரிபூரணம்: தானா பரமிதா (நன்கொடை)

நாம் குழந்தைகளாக இருந்த போது பெரும்பாலும் நம்முடைய பொம்மைகள் மற்றும் சாக்லேட்டுகளை பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறோம், பெரியவர்களுக்கும் கூட பெருந்தன்மை என்பது இயல்பாகவோ அல்லது எளிதிலோ வரக்கூடிய ஒன்றல்ல. நம்முடைய விலைமதிப்பில்லாத உடைமைகளை விட்டுக்கொடுத்தால், நாம் மகிழ்வதற்கு ஒன்றும் இருக்காது என்று நாம் நினைக்கிறோம். இருப்பினும் பெருந்தன்மை என்பது வியத்தகு பயிற்சி என்று புத்தர் போதிக்கிறார். அது மற்றவர்களுக்கு மட்டும் நேரடி பலன்களைத் தருவதில்லை, மாறாக நமக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி மற்றும் திருப்தியை கொண்டு வருகிறது. இந்தக் கட்டுரையானது பெருந்தன்மையை ஆறு தொலைதூர-அடைதல் அணுகுமுறைகள் அல்லது பரிபூரணங்களில் முதலாவதாக பார்க்கிறது.

அறிமுகம்

ஆறு-தொலைதூர அடைதல் அணுகுமுறைகள், பெரும்பாலும் "ஆறு பரிபூரணங்கள்" அல்லது "ஆறு பரமிதாக்கள்" என்று அறியப்படும் மனநிலைகள் அது நமக்கு நாமே செயலாற்றவும் மற்றவர்களுக்கு சிறந்த சாத்தியமுள்ள வழிகளில் உதவுவதற்கும் நம்மைத் தூண்டுகிறது. இந்த அணுகுமுறைகள் வெற்றியை தடுக்கும் மிகப்பெரிய தடைகளான சோம்பல் மற்றும் கோபத்தை எதிர்க்கிறது, இதனால் இது ஒவ்வொருவருக்கும் உதவிகரமாக இருக்கிறது. நாம் அதனை "தொலைதூர-அடைதல்" என்று அழைக்கிறோம் ஏனெனில் பௌத்த சூழலில், நாம் அதனை முழுவதுமாக மேம்படுத்தினால், அது தொலைதூரத்தில் இருக்கும் நம்முடைய வரையறைகள் மற்றும் பிரச்னைப் பெருங்கடலின் கரையை அடைவதற்கு நம்மை செயல்படுத்துகிறது. அவை துறவு மூலமாக உந்தப்பட்டால் - அனைத்து துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற தீர்மானம் - இவை அனைத்தும் நமக்கு விடுதலைக்கு வழிவகுக்கும்.  போதிசிட்டாவால் உந்தப்படுவால்- மற்ற அனைவருக்கும் சிறந்த பலன்களைத் தரக்கூடிய புத்தராக மாற விரும்பினால் - இவை அனைத்தும் நமக்கு முழு ஞானமடைதலுக்கு வழிவகுக்கும்.  

ஆறு தொலைதூர - அடைதல் அணுகுமுறைகளானவை:

  • பெருந்தன்மை
  • நன்னெறி சுய-ஒழுக்கம்
  • பொறுமை
  • விடாமுயற்சி
  • மன உறுதி (ஒருநிலைப்படுத்துதல்)
  • பாகுபடுத்தும் விழிப்புணர்வு (அறிவொளி)

அனைத்து ஆறு அடைதல்களையும் தியானம் மற்றும் நம்முடைய அன்றாட செயல்பாடுகளில் நாம் பயிற்சிக்கலாம். நம்முடைய தசைகளை கட்டமைக்க கடுமையான உடற்பயிற்சி செய்வது போல, நாம் செய்யும் இந்த மனநிலைகளில் எந்த அளவு அதிகமாக ஈடுபடுகிறோமோ அந்த அளவிற்கு அவை உறுதியானவையாக மாறுகின்றன. இறுதியில், அவை நம்முடைய வாழ்வோடு ஒருங்கிணைந்த ஒன்றாக மாறி, அவை இயற்கையாகவே நம்முடனும் மற்றவர்களுடனும் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதன் ஒரு பகுதியாகிறது.

பெருந்தன்மை

மற்றவர்களுக்கு என்ன தேவையோ அதனை கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு அணுகுமுறையே பெருந்தன்மையாகும். சில மதங்களில் காணப்படுவது போல், வறுமையே ஒரு நல்லொழுக்கமாக இருப்பதைப் போல, நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏழைகளாக மாற வேண்டும் என்று அர்த்தமல்ல. இங்கே பெருந்தன்மை என்பதன் பொருள் தயக்கமின்றி, எந்தத் தடைகளும் இன்றி நாம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று பொருள், மேலும் கொடுப்பது பொருத்தமானதாக இருந்தால், அதற்காக நாம் பாகுபடுத்துதலை பயன்படுத்த வேண்டும். கொலை செய்ய வேண்டும் என்பதற்காக வெளியே செல்லும் ஒருவரிடம் துப்பாக்கியை கொடுக்கக் கூடாது, "அட, நான் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்கிறேன்! இதோ உங்கள் துப்பாக்கிக்கான பணம்!" என்று சிந்திக்கக் கூடாது. பொருந்தாத பெருந்தன்மைக்கான மற்றொரு உதாரணம் போதைக்கு அடிமையான ஒருவரிடம் பணம் கொடுப்பது அதனால் அவர் எளிதாக போதை வஸ்துக்களை வாங்கலாம்.

பெருந்தன்மையை பயிற்சிக்க நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல; நாம் மிகுந்த ஏழையாக இருந்தாலும் கொடுப்பதற்கு எதுவுமே இல்லாவிட்டாலும், கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்தால் போதும். இல்லாவிட்டால், ஏழை மக்களால் கூட எப்படி பெருந்தன்மையை வளர்க்க முடியும்? எனவே, எப்போதெல்லாம் நாம் அழகிய சூரியமறைவை பார்க்கிறோமோ, மற்றவர்களும் இதைப் பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்பும் பெருந்தன்மையை கொண்டிருக்க முடியும். இதையே அழகான இயற்கைக்காட்சிகள், நல்ல வானிலை, அறுசுவை உணவு உள்ளிட்ட விஷயங்களோடு நம்மால் விருப்பமாக வைக்க முடியும். இவை அனைத்துமே பெருந்தன்மை என்றே கணக்கில் கொள்ளப்படுகிறது! நம்மிடம் இருக்கும் நமக்கு சொந்தமான பொருட்களில் மட்டுமல்ல, யாருக்கும் சொந்தமில்லாத பொருள் மீதும் நட்டத்தால் பெருந்தன்மையாக இருக்க முடியும். தியானத்தில், அனைத்து வகையான அற்புதமான விஷயங்களையும் மற்றவர்களுக்கு கொடுப்பதைப் போன்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும், ஆனால் வேறு யாருக்காவது உதவியாக இருக்கும் ஏதாவது ஒன்று நம்மிடம் இருந்தால் அது அவர்களுக்குத் தேவைப்பட்டால், அதை அவர்களுக்குக் கொடுப்பதை நாம் கற்பனை மட்டும் செய்து பார்க்க மாட்டோம். நாம் உண்மையில் அவர்களுக்கு அதனைக் கொடுக்கிறோம்!

பெருந்தன்மை என்பது கஞ்சத்தனத்தின் எதிர்பதம், இந்த உணர்வு எதையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது எதையும் கொடுக்கவோ விரும்பாதாகும். இந்த கஞ்சத்தனம் பொதுவாக நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால், நமக்கென்று எதுவும் இருக்காது என்ற உணர்வுடன் இருக்கும். ஆனால், மாறாக:

எல்லாவற்றையும் எனக்காக என்று வைத்துக்கொண்டால், மற்றவர்களுக்கு கொடுக்க என்ன இருக்கிறது? - திபெத்திய பழமொழி

நாம் வெறியர்களாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது, நாமும் உண்டு உறங்க வேண்டும். நம்மையும் நாம் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், எனவே பெருந்தன்மையுடன் நம்மிடம் இருப்பவற்றை பகிர்ந்து கொள்வதைப் பற்றியும் நாம் அதிகம் பேசிவிட்டோம். மிக மேம்பட்ட போதிசத்வாக்கள் தங்களுடைய வாழ்வை மற்றவர்களுக்கு உதவுவதற்காக தியாகம் செய்ய முடியும், ஆனால் நாம் இருக்கும் நிலையில் யதார்த்தத்தில் நம்மால் இதைச் செய்ய முடியாது. எனவே, பட்டினியால் நாம் சாகும் அளவிற்கு எல்லாவற்றையும் கொடுக்க முடியாது, செய்யக்கூடாது. ஆனால் நாம் இன்னும் நம் உடலை மற்றவர்களுக்கு உதவுவதற்காக தயார்படுத்த வேண்டும், இது கடினமான வேலை அல்லது உடல் உழைப்பு போன்ற வடிவங்களில் இருக்கலாம். நம் கைகளை அழுக்காக்குவதற்கு நாம் பயப்படக்கூடாது! 

பெருந்தன்மை என்பது நமது "நல்லொழுக்கத்தின் வேர்கள்" என்று அழைக்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதையும் உள்ளடக்குகிறது, அவை நாம் கட்டமைத்த நேர்மறையான சக்தியின் நேர்மறையான ஆற்றல்கள் ஆகும். என்னுடைய சொந்த வாழ்வில் இருந்து ஒரு உதாரணத்தை நான் பயன்படுத்த முடியும்: கடந்த ஜென்மங்களில் கட்டமைத்த ஆக்கப்பூர்வமான செயல்களிள் விளைவான நேர்மறைத் திறனால், என்னால் இந்தியாவின் சில மிகப்பெரிய பௌத்த குருமார்களை சந்தித்து கற்க முடிந்தது, உலகம் முழுவதும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன் அதனால் பல அற்புதமானவர்களுடன் நேர்மறைத் தொடர்புகளை உருவாக்க முடிந்தது. இது மேலும் கூட நேர்மறைத் திறனை கட்டமைத்தது, என்னுடைய பயிற்சியில் ஒரு பகுதியாக, நான் இந்த "நல்லொழுக்கத்தின் வேர்களை" மற்றவர்களுடன் பகிர முயற்சிக்கிறேன், அதில் இருந்து எனக்கு என்ன கிடைத்தது என்பதை நான் எனக்குள்ளேயே வைத்திருக்க மாட்டேன். தேவைப்பட்டால், நான் என்னுடைய தொடர்புகளை மற்றவர்களுக்கு கிடைக்கும்படி செய்வேன் உலகம் முழுவதும் உள்ள உதவிகரமான மக்களை  இந்த குருக்களுக்கு அறிமுகம் செய்த, மற்றவர்களும் கற்கச் செய்வேன்.  என்னுடைய பல்கலைக்கழகக் கல்வி மற்றும் சில தசாப்தங்கள் இந்தியாவில் செலவிட்டு தியானித்தது படித்தது என்ன என்பதை நான் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். இது தான் நல்லொழுக்கத்தினை பகிர்வது எனப்படுகிறது : மற்றவர்களுக்கான கதவைத் திறந்துவிடுதல். 

பொதுவாக, நாம் நான்கு வகைகளான பெருந்தன்மையைப் பற்றி பேசுகிறோம்:

  • பொருள் உதவிஅளித்தல்
  • போதனைகள் மற்றும் அறிவுரை அளித்தல்
  • பயத்தில் இருந்து பாதுகாப்பு அளித்தல்
  • அன்பை அளித்தல்

பொருள் உதவி அளித்தலின் பெருந்தன்மை

பொருள் உதவி அளித்தலின் பெருந்தன்மையானது நமது உடைமைகள், உணவு, உடை, பணம் என நாம் கொண்டிருக்கும் எதை வேண்டுமானாலும் கொடுப்பதைக் குறிக்கிறது. தேவைப்படும் போது அளிக்கும் உணர்வை இது உள்ளடக்கியது மேலும் நாய்க்கு எலும்புத் துண்டைத் தூக்கிப் போடுவதைப் போல அல்லாமல் மதிப்புமிக்க முறையில் அளித்தலாகும். பொருள் உதவி அளிக்க நாம் செல்வந்தராக இருக்க வேண்டியதில்லை ஏராளமான பொருட்களை சொந்தமாக வைத்திருக்கத் தேவையில்லை, ஏனெனில் நமக்கு சொந்தமில்லாதவற்றையும் கூட நம்மால் கொடுக்க முடியும். அதற்காக நவீன ராபின் ஹுட் போல வெளியே சென்று திருடி வந்து கொடுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல! மாறாக நாம் பொதுவான விஷயங்களைப் பற்றி பேசுகிறோம் மற்றவர்களும் மகிழும் விதத்தில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் சொல்கிறேன். மற்றவர்களுக்கு அது ஒரு அற்புதமான பரிசாகும். "எல்லோராலும் அழகான வானிலையை மகிழ்விக்க முடியும்" என்பது போன்ற எதாவது மகிழ்ச்சியான அனுபவத்தை நம்மால் பகிர முடியும். 

நாம் வெறுமனே உண்மையான பௌதிகப் பொருட்களைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடாது. நமது நேரம், வேலை, ஆர்வம், ஆற்றல், ஊக்கம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் நம் உடலையும் கொடுக்க முடியும். இவை அனைத்தும் பொருள் விஷயங்களில் பெருந்தன்மையாக இருப்பதற்கான திறமையான வழிகள். 

நிச்சயமாக அவர்களையோ மற்றவர்களையோ காயப்படுத்தக் கூடிய ஏதோ ஒன்றையோ, விஷம் அல்லது ஆயுதங்களையோ கொடுப்பது பொருத்தமற்றதாகும். 

போதனைகள் மற்றும் அறிவுரை அளித்தலின் பெருந்தன்மை

பௌத்த சூழலில், இது தர்மத்தை பௌத்த போதனைகளை கொடுப்பதைப் பற்றியதாகும் - ஆனால் நாம் இதனை பௌத்தம் அல்லாத பகுதிகளிலும் கூட விரிவாக்கம் செய்ய முடியும். இது வெறுமனே போதித்தல், மொழிபெயர்த்தல், குறிப்பெடுத்தல், வெளியிடுதல், அல்லது கல்வி மையங்களில் செயலாற்றுதல் அல்லது உருவாக்குதலைப் பற்றியதல்ல, மாறாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதையும், நம்மால் முடிந்தால் அவர்களுக்கு தகவல் மற்றும் அறிவுரை வழங்குதலையும் கூட ஏற்படுத்துகிறது. 

சக்ய பாரம்பரியத்திலும் சமாதி (ஒருநிலைப்படுத்துதல்) படையிடல் முறை இருக்கிறது, அங்கே நாம் நம்முடைய தர்ம பயிற்சியை பலருக்கும் வெவ்வேறு விதங்களில் கொடுக்கலாம். நாம் படித்து, கற்றவை அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுக்கலாம், மேலும் அவர்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்தலாம்.  இதையே நாம் நம்முடைய அறிவு, நம்பிக்கை, ஒழுக்கம், உள்ளுணர்வு மற்றும் நாம் பெற்ற ஒருநிலைப்படுத்துதல் மற்றும் போதனைகளின் விளக்கங்களையும் மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தலாம். இவை அனைத்தும் தர்மத்தை அளிக்கும் பெருந்தன்மையின் கீழ் வருவதாகும், ஆனால் நிச்சயமாக மற்றவர்களுடன் நாம் அறிந்த பயனுள்ள எதையாவது பகிர்வதை நம்மால் விரிவாக்கம் செய்ய முடியும். 

பயத்திலிருந்து பாதுகாப்பளிக்கும் பெருந்தன்மை

இந்த வகையான பெருந்தன்மையானது மற்றவர்கள் மோசமான நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு உதவுவதை குறிக்கிறது. மிருகவதை செய்யப்படும் விலங்குகளை காப்பதையும் உள்ளடக்கியதே இது, மேலும் கூண்டுக்குள் அடைபட்டிருப்பவற்றை சுதந்திரமாக அலைய விடுதல். நீச்சல் குளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் பூச்சிகள் மற்றும் மனிதர்கள், விலங்குகளை தீவிர உஷ்ணம் மற்றும் குளிரில் இருந்து மீட்டல் - இந்த அனைத்து பாதுகாப்பை வழங்குவதாகும். நம்முடைய அடுக்குமாடியில் ஒரு வண்டு இருந்தால், நாம் அதனை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி போட்டுவிட்டு அது ஐந்து அடுக்கு கீழே சென்றால் அதற்கு காயம்பட்டுவிடாது என்று நியாயப்படுத்தக் கூடாது. பயத்திலிருந்து பாதுகாப்பைக் கொடுக்கும் பெருந்தன்மை அதை வெளியில், மெதுவாக எடுத்துச் செல்வதாகும்.

மற்றவர்கள் பயப்படும்போது, அது நம் குழந்தைகளோ அல்லது வேட்டையாடப்படும் மிருகமாகமோ எதுவாக இருந்தாலும் சரி, அவற்றிற்கு ஆறுதல் அளிப்பதை இங்கே சேர்க்கலாம். உதாரணமாக, பூனை எலியை சித்திரவதை செய்தால், எலியை எடுத்துச் சென்று பாதுகாக்க முயற்சிப்போம்.

பயத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பெருந்தன்மைக்கு தந்திரத்தில் மேலும் ஒரு விளக்கம் உள்ளது, இது மற்றவர்களுக்கு நமது சமநிலையை வழங்குவதாகும். மற்றவர்கள் நம்மிடம் பயப்பட வேண்டியதில்லை என்பதே இதன் பொருள், ஏனென்றால் நாம் அவர்களைப் பற்றிக்கொள்ளவோ, கோபத்துடனும் விரோதத்துடனும் அவர்களை நிராகரிக்கவோ போவதில்லை, அல்லது அப்பாவித்தனத்துடன் அவர்களைப் புறக்கணிக்கப் போவதில்லை. இங்கே, நாம் அனைவருக்கும் சமமாக வெளிப்படையாக இருக்கிறோம், இது யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க மிகவும் அற்புதமான பரிசு.

அன்பை கொடுத்தலின் பெருந்தன்மை

நான்காவது வகை பெருந்தன்மையான அன்பை கொடுத்தல் பற்றி பேசுகிறது. அதற்காக எங்காவது போய்க்கொண்டு யாரையாவது கட்டித் தழுவுவது என்று அர்த்தமல்ல, மாறாக ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நமது விருப்பத்தை கொடுக்கலாம். அன்பின் விளக்கம் அதுவே -மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதற்கான காரணங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பம்.  

எப்படி சரியாக கொடுப்பது

தொலைதூர - அடைதல் அணுகுமுறைகளின் ஒவ்வொன்றையும் நாம் பயிற்சிக்கம் போது, மற்ற ஐந்தையும் கூட சேர்த்துக்கொள்ள முயற்சிக்கிறோம். பெருந்தன்மையை பயிற்சிக்கும்போது: 

  • நன்னெறி ஒழுக்கத்துடன் சேரும் போது, எல்லா தவறான அல்லது முறையற்ற உள்நோக்கங்களில் இருந்தும் நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.
  • பொறுமையுடன் சேரும் போது, அதில் உள்ள எந்த சிரமங்களையும் தாங்கிக் கொள்ள நாம் கவலைப்பட மாட்டோம்.
  • விடாமுயற்சியுடன் இணையும் போது, கடமைக்கு என்ற உணர்வுடனோ அல்லது பொறுப்பிற்காகவோ செய்யாமல் கொடுப்பதில் மகிழ்ச்சியை நாம் எடுக்கிறோம்.  
  • மன உறுதிப்பாட்டுடன் சேரும் போது, கொடுப்பதில் இருந்து கட்டமைக்கப்படும் நேர்மறை சக்தியின் அர்ப்பணிப்பில் நாம் கவனம் செலுத்துகிறோம்.
  • பாகுபடுத்தும் விழிப்புணர்வுடன் சேரும் போது,  கொடுப்பவர் (நாம்), பெறுபவர் மற்றும் கொடுக்கப்பட்ட பொருள் அனைவருக்கும் சுயமாக நிறுவப்பட்ட இருப்பு இல்லை என்பதை நாம் உணர்கிறோம். அவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. பெறுபவர் இல்லை என்றால் கொடுப்பவரும் இல்லை.

பெருந்தன்மை மற்றும் பொருந்தாத உந்துதல்

பொருத்தமில்லாத எதையோ நாம் கொடுக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டு பரந்து பட்ட சூழ்நிலைகள் இருக்கின்றன, நாம் அதனை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் கொடுக்கலாம் அல்லது நாம் உண்மையிலேயே மதவாதிகள் மற்றும் அற்புதமானவர்கள் என்று நினைக்கலாம்; அல்லது, பொதுவாகவே நாம் எதையாவது கொடுத்தால், பதிலுக்கு எதையாவது பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம், அது ஒரு நன்றியாக இருந்தாலும் கூட இந்த நிலை பொருந்தும். எப்படி இருந்தாலும், நாம் கொடுக்கும்போது, பதிலுக்கு எதையும் எதிர்பார்ப்பது முறையற்றது, அது நன்றி சொல்வதாகவே இருந்தாலும் கூட, உண்மையில் அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதில் பெரும் வெற்றி ஒருபுறம் இருக்கட்டும். அது முக்கியமாக அவர்களின் கர்மாவைப் பொறுத்தது. நாம் சில உதவிகளை வழங்கலாம், ஆனால் வெற்றியையோ நன்றியையோ பதிலுக்கு எதிர்பார்க்கக் கூடாது.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது இந்தியாவின் தர்மசாலாவில் அது ஒரு மழைக்காலம், அப்போது ஒரு எலி தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. நான் அதனை வெளியே எடுத்து நிலத்தில் போட்டேன், அது அங்கே படுத்திருந்த போது ஒரு பெரிய பருந்து வந்து அந்த எலியை பிடித்துச் சென்றுவிட்டது. நாம் உதவ முயற்சித்தாலும் எல்லாமே தனிப்பட்ட ஒருவரின் கர்மா அடிப்படையிலேயே இருக்கிறது. ஒருவர் வெற்றி அடைவதற்கான அனைத்து வாய்ப்புகள் மற்றும் உதவியை நாம் செய்யலாம், ஆனாலும் அது மோசமான தோல்வியாக மாறக் கூடும். 

மேலும், ஒரு நல்ல முடிவு வந்தால், நாம் ஒருபோதும் மற்ற நபரிடம் மகிழ்ச்சியடையக்கூடாது, அல்லது நாம் செய்த அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டக்கூடாது. நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு ஒரு பெரிய உதவியைச் செய்கிறோம் என்று நினைத்து அவர்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. உண்மையில் அவர்கள் தான் நமக்கு நல்லது செய்கிறார்கள் நம்மை ஏற்றுக்கொண்டு உதவி செய்வதற்கு அனுமதிப்பதனால் நேர்மறை சக்தியை கட்டமைக்க முடிகிறது அது நம்மை ஞானமடைவதற்கு கொண்டு சென்று, சாத்தியம் உள்ள வரை மற்றவர்களுக்கு உதவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.  

யாரேனும் ஒருவர் நன்கொடை அளித்திருந்தால், நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் அல்லது இன்னும் அதிகமாகக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ, குற்ற உணர்வு அல்லது கடமையின் காரணமாகக் கொடுப்பது முறையற்ற உந்துதலாகும்.

பெருந்தன்மை மற்றும் சரியான உந்துதல்

பெருந்தன்மையை பயிற்சிக்கும் போது, தற்காலிகமாகவும் இறுதியாகவும் பெறுபவர் பலனடைய வேண்டும் என்று நம்முடைய ஆன்மா நினைக்க வேண்டும். நம்மால் முயன்ற சிறந்த முயற்சியை செய்ய வேண்டும் நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் நாம் முயற்சியாவது செய்கிறோம். இது "நிச்சயமாக, நான் அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் உதவ விரும்புகிறேன்" என்ற குறுகிய யோசனை அல்ல, இருப்பினும் பாத்திரங்களைக் கழுவுவதற்கு உதவுவதற்காக நாம் கவலைப்பட முடியாது!

நிச்சயமாக பெருந்தன்மை இரண்டு வழிகளில் செல்கிறது. மற்றவர்கள் நமக்கு உதவவோ பெருந்தன்மையாக இருக்கவோ விரும்பினால், அதற்காக நாம் பெருமைப்படவோ அழைப்பு அல்லது பரிசுகளை ஏற்கவோ மறுக்கக் கூடாது. யாராவது எதையாவது வாங்கு போது, இரவு சிற்றுண்டி போன்ற எதையாவது வாங்கும் போது கூட பலர் இப்படிச் செய்கிறார்கள். அப்படி செய்வதனால், நேர்மறையான சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை நாம் இழக்கிறோம். உண்மையில், அவர்களுக்கு சேதம் ஏற்படாத வரை அழைப்புகள் மற்றும் மக்களின் உதவியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது போதிசத்வா சபதங்கள்.

ஒரு முறை செர்காங் ரின்போச்சுடன் நான் இத்தாலிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது ஒருவர் அவரிடம் சில கேள்விகளை கேட்க வந்தார். அவர்கள் செல்லும் போது, கதவிற்கு அருகில் இருந்த ஒரு மேஜையில் உறையிட்ட அன்பளிப்பு இருந்தது. இந்த விஷயத்தை குறிப்பிட்டு செர்காங் ரின்போச் என்னிடம் ஒன்றைச் சொன்னார், "கொடுப்பதற்கான சிறந்த வழி இதுவாகும். இங்கு வந்தவர்கள் லாமாவிடம் தனிப்பட்ட முறையில் இதனை கொடுத்து மிகப்பெரிய நிகழ்வை உருவாக்கவில்லை. ஏனெனில் அப்போது தான் இதை யார் கொடுத்தார்கள் என்பதை நினைவில் வைத்து லாமா பாராட்டி அவர்களைப் பற்றி மேலும் உயர்வாகக் கருதுவார் என்று நினைக்கவில்லை."  ஒரு பெரிய நிகழ்ச்சியை உருவாக்காமல் அமைதியாக, யாரும் அறியாமல் கொடுப்பது எப்போதும் நல்லது. இந்த வகையான மகிழ்ச்சி மற்றும் மரியாதைக்குரிய முறையில் அதைச் செய்வது சிறந்ததாகும்.

நாம் கொடுப்பதற்காக அல்லது உதவி செய்வதற்காக மற்றவர்களை காத்திருக்க வைக்காதீர்கள், அதற்கு பதிலாக மற்றொரு நாள் கொடுக்கலாம். இது மீண்டும் சலுகைகளை வழங்குவதைப் போன்றதாகும். செர்காங் ரின்போச்சே தலாய் லாமாவின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார், மேலும் பலர் அவரைப் பார்க்க வருவார்கள். சில விரிவான சாஷ்டாங்கங்களைச் செய்ய மக்கள் நேராகத் தன் முன் வரும் வரை காத்திருப்பது வீண் என்று அவர் கருதுகிறார், “இது என் நேரத்தை வீணடிக்கிறது. அவர்கள் சாஷ்டாங்கமாக இருப்பதை நான் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் செய்வது என்னுடைய நன்மைக்காக அல்ல. அவர்கள் உள்ளே வருவதற்கு முன்பு அதைச் செய்ய வேண்டும், அதனால் அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை என்னிடம் நேரடியாகச் சொல்ல முடியும்." திபெத்தியர்கள் லாமாக்களுக்கு கடாஸ் – சம்பிரதாயத்திற்கு சால்வை – கொடுப்பது மிகவும் வழக்கம், ஆனால் அவர்களைக் கவர்வதற்காக அவ்வாறு செய்யக் கூடாது. வணங்குதல் நமது நன்மைக்காகவே தவிர, ஆசிரியருக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தனிப்பட்ட முறையில் கொடுத்தல்

நாம் எதைக் கொடுக்க முடிவு செய்தாலும், அதை நாமே தனிப்பட்ட முறையில் கொடுப்பது முக்கியம். அதிஷாவிடம் ஒரு பணியாளர் இருந்தார், அவர் தான் ஆசிரியருக்கு தண்ணீர் குடுவையில் நீர் நிரப்பி வைப்பது உள்ளிட்டவற்றை செய்து கொடுப்பார். "நானே செய்து கொள்வது எனக்கு மிகவும் முக்கியம். எனக்காக நீயே உணவையும் சாப்பிட்டு விடுவாயா" என்று அதிஷா கேட்டார். எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் நம்மால் முடிந்தவற்றை நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டும். 

எதையாவது கொடுக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்துவிட்டால், நம்முடைய மனதை மாற்றிக்கொள்ளக் கூடாது அல்லது பின்னால் வருத்தப்பட்டு எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கக் கூடாது. மேலும் ஒரு முறை நாம் ஒன்றை கொடுத்துவிட்டால், நாம் விரும்பும் வகையிலேயே அதனை பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தம் தரக் கூடாது; குறிப்பாக நாம் பணத்தை கொடுக்கும் போது, அதனை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது. இது எப்படியென்றால் நாம் ஒரு படத்தை கொடுத்துவிட்டு பின்னர் அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் வீட்டுச் சுவற்றில் அந்தப் படம் இல்லையெனில் சற்றே காயப்பட்டதாக உணர்வதைப் போன்றதாகும். உண்மையில் நாம் எதையாவது கொடுத்துவிட்டால், அது எப்போதும் நம்முடையது அல்ல. 

எனக்கு நினைவிருக்கிறது ஒரு முறை தர்மசாலாவில், ஒரு மடாலயம் இருந்தது. அங்கே உணவின் தரம் மிக மோசமாக இருந்தது அதனால் துறவிகளுக்கு மிக உடல்நலன் சரியில்லை. மேற்கத்தியர்கள் நாங்கள் பணத்தை திரட்டி அவர்கள் சிறந்த உணவை வாங்கிக் கொள்வதற்காக கொடுத்தோம். ஆனால் கடைசியில் அந்தத் துறவிகள் பணத்தை அந்தக் கோவிலை சிறப்பாக மேலும் பெரியதாகக் கட்டுவதற்காக செங்கற்களை வாங்க பயன்படுத்திக் கொண்டனர்! இதற்காக உண்மையில் ஏராளமான மேற்கத்தியர்களை உணவுக்காக நாம் கொடுத்த பணத்தை அதற்காகப் பயன்படுத்தவில்லை என்று கோபப்பட்டு பெரிய நிகழ்வை ஏற்படுத்திவிட்டனர்.  எனவே நாம் சற்றேனும் புத்திசாலியாக இருக்க வேண்டும். இருப்பினும் அவர்களுக்கு விருப்பமானது எதுவோ அதை வாங்கிக் கொடுத்தோம், திபெத்தியர்களின் விருப்பமான உணவு என்றால் அசைவம், சில மேற்கத்தியர்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் வாங்கி கொடுத்தோம். டோபு போன்ற எதையாவது வாங்கிக் கொடுத்தால் அவர்கள் ஒரு போதும் சாப்பிட மாட்டார்கள் உண்மையில் அது பொருத்தமில்லாததும் கூட.

செர்காங் ரின்போச்சை நான் ஏறத்தாழ தினந்தோறும் பார்த்தாலும், எப்போதும் அவருக்கு சிறிதேனும் எதையாவது வாங்கிச் செல்வேன். கொஞ்சம் நேரம் கழித்து அவர் என்னைத் திட்டிவிட்டு "இந்த கடாக்கள் மற்றும் தூபங்கள் அனைத்தையும் என்னிடம் ஏன் கொண்டு வருகிறீர்கள்? இந்தக் குப்பை எனக்குத் தேவையில்லை!" அவர் அதை குப்பை என்று அழைத்தார்! “1,000 கடாக்களை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று கேட்டார். "பொருட்களை கொண்டு வரப்போகிறீர்கள் என்றால், எனக்கு உபயோகமுள்ள நான் பயன்படுத்தும் எதையாவது வாங்கி வந்து கொடுங்கள்" என்றும் அவர் சொன்னார். அவருக்கு வாழைப்பழம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் அவருக்கு வாழைப்பழம் கொண்டு சென்றேன். நாம் மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால், நாம் சாமர்த்தியமாக, அவர்கள் விரும்புவதை கொடுக்க வேண்டும். என்னை நம்புங்கள், அந்த லாமாக்களுக்கு போதுமான தூபங்கள் உள்ளன!

அதே சமயம், நல்ல தரமான பொருட்களை கொண்டு செல்வதும் முக்கியமாகும், நமக்கு அந்தப் பொருட்கள் பிடிக்கவில்லை அல்லது அதனால் எந்தப் பயனும் நமக்கு இல்லை என்பதற்காக கொடுக்கக் கூடாது. எதையும் ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் இருக்கிறார்கள், “யாரோ இதை எனக்குக் கொடுத்தார்கள், நான் அதை ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை. தயவுசெய்து எடுத்துக் கொள்ளுங்கள். நான் அதை தூக்கி எறிய விரும்பவில்லை" என்று நாம் கூறலாம். சைவ உணவு உண்பவருக்கு அசைவ பர்கரை கொடுப்பதைப் போன்ற பொருத்தமற்ற விஷயங்களும் உள்ளன. யாரேனும் ஒரு குறிப்பிட்ட உணவு முறையைப் பின்பற்றினால், நாமும் அதைப் பின்பற்றுகிறோம். கண்டிப்பான உணவுக்கட்டுப்பாட்டில் உள்ள ஒருவருக்கு நாங்கள் கேக் கொண்டு வருவதில்லை!

தர்மத்தை கொடுத்தல்

தர்மத்தைக் கொடுப்பதைப் பொறுத்தவரை, யாராவது கோபம், பற்று, பெருமை அல்லது சும்மா ஆர்வத்தின் தூண்டுதலால் நம்முடன் விவாதம் செய்ய விரும்பினால், நாம் விவாதம் செய்யவோ அல்லது அவர்களுக்கு பௌத்த நூல்களைக் கொடுக்கவோ கூடாது. ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுடன் மட்டுமே நாம் எப்போதும் தர்மத்தை போதிக்கவோ கலந்தாலோசிக்கவோ வேண்டும். கேட்கத் தயாராக இல்லாதவரிடம் அதைப் பற்றி பேசுவதும் போதிப்பதும் பொருத்தமில்லாததாகும். சொல்லப்போனால், அது நேர விரயமாகும் அது விரோதம் மற்றும் எதிர்மறை மனநிலைக்கு மட்டுமே பங்களிக்கும். திறந்த-மனதுடன் கற்க விரும்புபவர்களுக்கு மட்டுமே நாம் போதிக்கலாம். 

நாம் போதித்தால், மற்றவரின் மட்டத்தில் இருந்து போதிக்கலாம். நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் நம்முடைய அறிவையும் அவர்களிடம் திணித்து நாம் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறோம் என்று நிரூபிக்கத் தேவையில்லை. மிக மேம்பட்ட போதனைகளை நாம் கொடுக்கத் தேவையில்லை, மாறாக அதன் சிறு சுவையைத் தருவது உதவிகரமானதாகும். சில சமயங்களில், ஒரு மேம்பட்ட கற்பித்தல் என்பது, கடினமாக உழைத்து அதனை புரிந்து கொள்ள முயற்சிக்கும் மக்களை ஊக்குவிக்கும், மேலும் யாராவது கொஞ்சம் திமிர்த்தனமாக இருந்தாலும் அது உதவியாக இருக்கும்.  பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு சில சமயங்களில் புனிதர் தலா லாமா பௌத் போதனைகள் எவ்வளவு சவுகரியமானதாக இருக்கின்றன என்பதை மிக கடினமான வழியில் போதிப்பார். இது பௌத்தம் பழமையானது அல்லது பின்தங்கியது என்ற எந்தக் கருத்தையும் அகற்ற உதவுகிறது.

எனக்கு நினைவிருக்கிறது ஒரு முறை செர்காங் ரின்போச் மேற்கத்திய தர்ம மையத்தை பார்வையிட்டார், அவர்கள் சாத்திதேவாவின் புத்தகத்தில் இருந்து வெற்றிடம் (வெறுமை) என்ற பிரிவை இரண்டு நாட்களில் செர்காங் போதிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். உண்மையில் அது அபத்தமானது! இந்தப் பிரிவை மட்டுமே முழுமையாக படிப்பதற்கு ஓராண்டுகளாவது வேண்டும். அத்தியாயத்தின் முதல் சில வார்த்தைகளை மிகவும் மேம்பட்ட மற்றும் சிக்கலான மட்டத்தில் ரின்போச் விளக்கத் தொடங்கினார், ஒவ்வொரு வார்த்தையிலும், அது எவ்வளவு சிக்கலானது என்பதைக் காட்டினார். அவர் என்ன சொல்கிறார் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை, அதே சமயம் இரண்டே நாட்களில் போதனைகைய தொகுத்து வழங்க வேண்டும் என்பது எவ்வளவு திமிர்த்தனம் என்பதையும் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் அவர்கள் மட்டத்திற்கு கீழே இறங்கி நிதானமாக அந்த நூலின் சிறிய பகுதியின் பொதுவான அர்த்தத்தை விளக்கினார். 

புனிதர் தலாய் லாமா ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு போதிக்கும் போது, அங்கே இருந்த மக்கள் மத்தியில் அவர்கள் மட்டத்தில் சிறிதேனும் செய்தார். பெரும்பாலான நேரம், மிக மேம்பட்ட அளவில் இருந்த பெரிய லாமாக்கள், கெஷ்கள் மற்றும் கென்போக்களை நோக்கியே போதித்தார். ஏனெனில் அவர் எல்லோரையும் விட மிக மேம்பட்டவர், அவரால் இந்த மட்டத்தில் போதிக்க முடியும், அதன் பின்னர் அவர்கள் சென்று குறுகிய சிக்கலான வழியில் தங்களுடைய சொந்த மாணவர்களுக்கு விவரிக்க முடியும். இந்த வகையான சூழலில், ஒருவர் மிகக் குறைந்த பொதுவான வகுப்பிற்குக் கற்பிப்பதில்லை, ஏனென்றால் மற்றவர்கள் அந்த அளவைக் கவனித்துக் கொள்ளலாம். நீங்கள் மிக உயர்ந்த நிலையை போதிக்கிறீர்கள், அதனால் அது அணிகளின் மூலம் கீழே விழும்.

இறுதியில், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்குவது முக்கியம். ஒருவருக்கு அது தேவையில்லை, ஆனால் பேராசை மற்றும் பற்றுதலால் ஏதாவது ஒன்றை விரும்பினால் - குழந்தைகள் நாள் முழுவதும் சாக்லேட் விரும்புவதைப் போல - கொடுப்பது பொருத்தமானதல்ல. எதை, எப்போது, யாருக்குக் கொடுப்பது பொருத்தமானது மற்றும் பொருத்தமற்றது என்பதைத் தீர்மானிக்க, நாம் பாகுபடுத்தும் விழிப்புணர்வைப் பயன்படுத்த வேண்டும். "முட்டாள்தனமான இரக்கம்" என்ற அற்புதமான வார்த்தையை த்ருங்க்பா ரின்போச்சே உருவாக்கினார்; அனைவருக்கும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்ய நாம் உதவ மாட்டோம், ஏனென்றால் அது மிகவும் முட்டாள்தனமாக இருக்கலாம்! நமது பெருந்தன்மை நமது அறிவொளிக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

சுருக்கம்

பெருந்தன்மையை பயிற்சிக்க நாம் செல்வந்தராகவோ அல்லது ஏராளமான உடைமைகளை கொண்டிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. நாம் எங்கே இருக்கிறோம் அல்லது நாம் என்ன செய்கிறோம் என்பது விஷயமல்ல, நாம் சுவாசிக்கும் புதிய காற்று, நாம் அனுபவிக்கும் அழகிய சூரிய அஸ்தமனம், நாம் உண்ணும் சுவையான உணவுகள் - அனைத்தையும் மனதளவில் பகிர்ந்து கொள்வதன் மூலம் பெருந்தன்மையை மேம்படுத்தத் தொடங்கலாம். நாம் செய்யும் அனைத்தையும் மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவது அடுத்த கட்டத்திற்கு அடிப்படையாகும், அங்கு மற்றவர்களுக்குத் தேவையானதை நாம் உண்மையில் கொடுக்கிறோம்.

நம்மால் முடியும் என்றால், பொருள் உதவி செய்வது மிகச் சிறந்தது, ஆனால் நம்மால் நம்முடைய நேரம் மற்றும் சக்தியுடன் பெருந்தன்மையாக இருக்க முடியும். நாம் மகிழ்ச்சியுடன் மற்றும் தூய்மையான உந்துதலுடன் கொடுக்கும்போது, பெருந்தன்மை மிக சந்க்திவாய்ந்ததாக மாறி நமது சொந்த மற்றும் பிறரின் வளம் மற்றும் மகிழ்ச்சியைப் பாதுகாக்கும்.

Top