ஆறு பரிபூரணங்களின் மேற்பார்வை : ஆறு பரமிதங்கள்

ஆறு தொலைதூர - அடைதல் அணுகுமுறைகள் என்பது விடுதலை மற்றும் ஞானமடைதல் மன நிலைகளுக்கு வழி நடத்துபவையாகும். நம்முடைய மிகப்பெரிய மனத்தடைகளான கோபம், பேராசை, பொறாமை, சோம்பேறித்தனம் உள்ளிட்டவற்றிற்கான எதிர்ப்பு மருந்துகள் - ஆறு அணுகுமுறைகள் ஒன்றாக செயல்பட்டு, வாழ்க்கை நம்மிடம் வீசும் அனைத்தையும் கையாள்வதற்கு நம்மைத் தூண்டுகிறது. இந்த அணுகுமுறைகளை மேம்படுத்திக் கொள்வதன் மூலம், நாம் மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக நம்முடைய முழுத்திறனை உணர்ந்து நமக்குள்ளும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய பலனைக் கொண்டு வருவோம்.

நம்முடைய நேர்மறை இலக்குகளை நம் வாழ்வில் நாம் அடைவதற்கு நாம் முன்னேற்றம் பெறச் செய்ய வேண்டிய ஆறு மனநிலைகளை புத்தர் சுட்டி காட்டி இருக்கிறார். அவை பெரும்பாலும் "பரிபூரணங்கள்," என்று மொழிபெயர்க்கப்படுகின்றன, புத்தர்களைப் போன்று அதனை முழுவதுமாக சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம், நாமும் கூட விடுதலை மற்றும் ஞானத்தை அடைய முடியும். நான் அதனை "தொலைதூர - அடைதல் அணுகுமுறைகள்" என்று அழைக்கவே பரிந்தரைப்பேன் இதற்கான சமஸ்கிருதப் பெயர் பரமிதா என்பதாகும், ஏனெனில் இதனை அடைவதன் மூலம் நம்முடைய பிரச்னைக் கடலில் இருந்து தூர இருக்கும் கரையை நம்மால் அடைய முடியும். 

நாம் இந்த ஆறு மனநிலைகளை வெறுமனே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பட்டியலாக மட்டும் பார்க்கக் கூடாது. மாறாக, அவை மனநிலைகள் நாம் அவற்றுடன் ஒன்றாக கலந்து நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவையாக்க வேண்டும். லாம்-ரிம்மில் (தரப்படுத்தப்பட்ட பாதை) காணப்படும் மூன்று நிலை உந்துதல்களுக்கு ஏற்ப, அவற்றை நம் வாழ்வில் வளர்த்துக்கொள்வது இப்போது நமக்கு மகத்தான நன்மைகளைத் தருகிறது:

  • சிக்கல்களைத் தவிர்க்கவும் தீர்க்கவும் அவை நமக்கு உதவுகின்றன.
  • நம்முடைய சிக்கலான உணர்ச்சிகள் மற்றும் மனநிலைகளில் இருந்து வெளியேற அவை நமக்கு உதவுகின்றன.
  • மற்றவர்களுக்கு சிறப்பாக உதவுபவராக நம்மை அவை பலமாக்குகின்றன.

இந்த நேர்மறை அணுகுமுறைகளை மேம்படுத்த நாம் பயிற்சித்தால், நாம் மனதில் ஒன்று அல்லது இந்த இலக்குகளின் அதிகமானவற்றை மனதில் வைத்தல் வேண்டும். அவற்றை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்ற இது நமக்கு வலுவான ஊக்கத்தை அளிக்கிறது.

Top