விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பு
விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பு ஏன் ஒரு ஆசையை நிறைவேற்றும் ஆபரணம் போன்றது
நாம் கொண்டிருக்கம் இந்த விலைமதிப்பில்லாத மனித உடலானது ஒரு ஆசையை நிறைவேற்றும் ஆபரணத்தை விட அதிக விலைமதிப்பில்லாதது. ஓய்வுக்கான அடித்தளம் அதுவே; ஆனால் நம்முடைய உடல் நமக்கு கொடுக்கும் வாய்ப்பும் ஓய்வும் போதையில் உச்சத்தை அடைவதற்கு அல்ல, மாறாக தர்மத்தை பயிற்சிப்பதற்கானது. விலைமதிப்பில்லாத மனித உடலை விட ஒரு ஆசை நிறைவேற்றும் ஆபரணம் ஏன் விலைமதிப்பில்லாதது? ஏனெனில் ஆசையை நிறைவேற்றும் ஆபரணத்தை நாம் இந்த வாழ்நாளில் உணவு மற்றும் பானங்களிலிருந்து பெறலாம், ஆனால் ஆசையை நிறைவேற்றம் ஆபரணத்தால் எதிர்கால வாழ்க்கைக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே நாம் கொண்டிருக்கும் இந்த உடலானது நாம் தர்மத்தை பயிற்சிப்பதற்கான வாய்ப்பை பெறுவதற்கு நமக்கு ஒத்துழைக்கிறது மற்ற ஆபரணத்தை விட இதுவே அதிக விலைமதிப்பில்லாதது.
நாம் அனைவருமே எல்லா நேரமும், எவ்வளவு நேரம் சாத்தியம் இருக்கிறதோ அவ்வளவு நீடித்த நேரம் மகிழ்ச்சியை விரும்புகிறோம். ஆனால் இந்த வாழ்நாளில் நாம் என்ன மகிழ்ச்சியை அடைந்திருக்கிறோம் என்பது பெரிதல்ல, அது மிக குறுகிய கால வாழ்க்கை ஏனெனில் அவை இந்த வாழ்நாளிற்கு மட்டுமே நிலைத்திருக்கும். எனவே நாம் நீடித்த மகிழ்ச்சியின் தொடர்ச்சியை விரும்பினால், நாம் நம்முடைய எதிர்கால வாழ்க்கை பற்றி சிந்திக்க வேண்டும்.
ஆசையை நிறைவேற்றும் ஆபரணம் நமக்கு மூன்று உலகின் மோசமான மறுபிறப்பில் இருந்து சுதந்திரம் கொடுக்காது மற்றும் அழியாத தன்மையை வழங்க முடியாது. ஆனால் விலைமதிப்பில்லாத இந்த மனித உடலை அடிப்படையாகக் கொண்டு, கீழ்மையான மறுபிறப்பில் இருந்து நம்மை நாம் பாதுகாக்கலாம்; ஜெட்சன் மிலரேபரைப் போல, உடலை தர்மத்தை பயிற்சிப்பதற்கான அடித்தளமாக வைத்து, நாம் இந்த வாழ்நாளில் ஞானத்தை அடையலாம். எனவே நம்முடைய விலைமதிப்பில்லாத மனித உடலால் கொடுக்க முடிகின்ற விஷயங்களை ஆசை நிறைவேற்றும் ஆபரணத்தால் கொடுக்க முடியவில்லையெனில், ஆசையை நிறைவேற்றும் ஆபரணத்தை விட நம்முடைய உடல் விலைமதிப்பற்றது.
எனவே விலைமதிப்பில்லாத இந்த மனித உடலுடன் நாம் தர்மத்தை பயிற்சிக்க வேண்டும். ஆனால் நாம் எதிர்மறை பார்வையை பிடித்துக்கொள்ளும் போக்கை கொண்டிருக்கிறோம் – ஆசையை நிறைவேற்றும் ஆபரணத்தை விட இது அதிக விலைமதிப்பில்லாததாக இருந்தாலும், நாம் நம்முடைய உடலை மேலும் மேலும் செல்வம் சேர்க்க பயன்படுத்துகிறோம், இந்த குறுகிய-கால இலக்கிற்காக நாம் நம்முடைய வாழ்க்கையை தியாகம் செய்யவும் கூட தயாராக இருக்கிறோம். இந்த உலகில் வசதி படைத்த பலரும் நம்மை விட அதிக அறிவாளியானவர்களும் இருக்கின்றனர். ஆனால் நம்முடைய விலைமதிப்பில்லாத மனித உடலை பயன்படுத்தி தர்மத்தை பயிற்சித்தால், அவர்கள் செய்வதை விட நம்மால் அதிக நேர்மறை சக்தியை கட்டமைக்க முடியும். எனவே விலைமதிப்பில்லாத இந்த மனித மறுபிறப்பை வீணாக்காமல் இருப்பது முக்கியமாகும், ஆனால் அது பயனுள்ளதாக இருக்கும் எதிர்காலத்தில் சிறந்த மறுபிறப்புகளில் ஒன்றை அடைதல், விடுதலை மற்றும் ஞானம் உள்ளிட்ட மூன்று நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டும்.
நம்மிடம் எவ்வளவு பொருள் இருந்தாலும், அவை திருப்தியைத் தராது. ஒருவர் இந்த உலகில் இருக்கும் அனைத்து பொருட்களை சொந்தமாக வைத்திருந்தாலும் கூட, அவன் திருப்தியடைய மாட்டார். எனவே ஆசையை நிறைவேற்றும் ஆபரணங்கள் திருப்தியைக் கொண்டு வராது என்பது தெளிவாகிறது. ஒருவர் மென்மேலும் செல்வத்தை அடைந்தால், அது அவருக்கு மென்மேலும் துன்பத்தையே கொடுக்கும். இந்த உண்மையை நமக்கு நாமே அனுபவிக்க முடியும் – நாம் ஒரு ரயிலிலோ அல்லது பேருந்திலோ அதிக சுமையுடன் பயணித்தால், பயணிப்பதற்கு அது மிகச் சிரமமாக இருக்கும்; ஆனால் நாம் இந்த உடைமைகளை அனைத்தையும் கொண்டிருக்காவிட்டால், பயணிப்பதற்கு மிக எளிதாக இருக்கும்.
எனவே தர்மத்தை நாம் இவ்வாறு பயிற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஜெட்சன் மிலரேபர், குகையில் வசித்தபோது, அவர் உடைமையாக எந்தப் பொருட்களையும் கொண்டிருக்கவில்லை. ஜெட்சன் மிலரேபர் மற்றும் ஷக்யமுனி புத்தர் தேவையில்லாத விஷயங்கள் எவ்வளவு அற்பமானவை என்பதை உணர்ந்து தர்மத்தை பயிற்சிப்பதற்காக அதனை விட்டுக்கொடுத்தனர். உலகில் பல பணக்கார நாடுகளில் வாழ்ந்த நீங்களும் கூட, பொருள்வாதம் அவ்வளவு முக்கியமல்ல என்பதை உணர்ந்து அவற்றை கைவிட்டு விட்டு இங்கு வந்து தர்மத்தை பயிற்சிக்கிறார்கள்.
விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை பெறுவதற்கான காரணங்கள் மற்றும் சிரமங்கள்
இந்த விலைமதிப்பில்லாத மனித உடலை அடைவது ஏன் அவ்வளவு கடினமானது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதனை கட்டமைப்பதற்கான காரணங்கள் கடினமாக இருப்பதனால் அதைப் பெறுவதும் கடினமே. அங்கே மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கின்றன:
- கடுமையான நன்னெறி சுய ஒழுக்கத்தை கடைபிடித்தல்
- தொலைதூரத்தை அடையும் ஆறு அணுகுமுறைகளை பயிற்சித்தல் (ஆறு பரிபூரணங்கள்)
- தூய்மையான பிரார்த்தனையை வழங்குதல்
கடுமையான நன்னெறி சுய ஒழுக்கத்தை கடைபிடித்தல்
கடுமையான நன்னெறி சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் கடினமாகும், மேலும் அதனை உணர்வதும் மற்றவர்களுக்கு மதிப்பீடு செய்வதும் மிகக் கடினம். அதே போன்று நன்னெறி சுய-ஒழுக்கம் என்ற விதத்தில், பத்து அழிவுகரமான செயல்கள் இருக்கின்றன, மேலும் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தாங்கள் என்னவென்று கூட தெரியாமல் இருப்பதை பற்றி என்று நாம் சிந்திக்க வேண்டும். நிச்சயமாக தாங்கள் என்னவென்று அறிந்தவர்களிடையே, பெரும்பாலானவர்கள் அவர்களைத் தவிர்க்கப் பயிற்சி செய்வதில்லை.
உடலின் மூன்று அழிவுகரமான செயல்கள் இருக்கின்றன:
- உயிரைக் கொல்லுதல் – உதாரணமாக, நாம் கொல்லக் கூடாது என்பதை நாம் அறியலாம், ஆனால் ஒரு பூச்சி நம்மை கடித்தால் உடனடியாக நாம் அதனை அடித்துக்கொள்கிறோம்.
- கொடுக்கப்படாததை எடுத்தல் – நாம் வெளியே சென்று ஒரு பெரிய திருட்டை செய்யாவிட்டாலும், மற்றவர்களிடமிருந்து பொருட்களை பெறுவதற்கு நாம் புத்திசாலித்தனமான வழிகளைப் பயன்படுத்தலாம், எனவே இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விஷயம்.
- பொருந்தாத பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் – மற்றவர்களின் துணையுடன் இருப்பதற்கு நாம் பல ஆசைகளை கொண்டிருக்கிறோம்.
மழை பெய்யும்போது நம் மீது விழும் ஒவ்வொரு மழைத்துளிகளைப் போல ஒவ்வொரு நாளும் உடலின் இந்த அழிவுகரமான செயல்களை நாம் குவிக்கிறோம்.
பேச்சின் நான்கு அழிவுகரமான செயல்கள்:
- பொய் உரைத்தல்- எல்லா நேரமும் நாம் இதனை கூடவே வைத்திருக்கிறோம். உதாரணமாக, நாம் மலைக்குக் கீழே செல்ல முனைகிறோம் யாராவது எங்கே போகிறீர்கள் என்று நம்மிடம் கேட்டால், மேலே மலையேறப் போகவதாகச் சொல்கிறோம்.
- பிரிவினையை ஏற்படுத்தும் விதமாகப் பேசுதல் – நண்பர்கள் ஒருவருக்கொருவரை நட்பற்றவர்களாகவும், ஏற்கனவே நட்பு இல்லாதவர்களை மேலும் பகைமை கொண்டவர்களாகவும் மாற்றக் காரணமாக இருப்பது. மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதன் மூலம் இதை நாம் எப்போதும் செய்கிறோம்.
- கடுமையாகப் பேசுதல் – ஒரு மனிதனை நோக்கி நிச்சயமாக இது இருக்கத் தேவையில்லை. உதாரணமாக, ஒரு நாய் உங்கள் அறைக்குள் வந்தால், இங்கிருந்து போ! என்று நாம் கத்துவோம் மேலும் கடினமான வார்த்தையை பயன்படுத்துவோம். மோசமான அல்லது கடினமான வார்த்தைகளை பயன்படுத்துவது மிகப்பெரிய தவறாகும், நம்மிடம் யாராவது கடினமாகப் பேசினால் நாம் காயப்பட்டதாக உணர்கிறோம் அப்படித்தான் மற்றவர்களும், விலங்குகளும் கூட இதையே தான் உணர்கின்றன.
- அர்த்தமின்றி அரட்டையடித்தல் – நம்முடைய வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் வதந்தியே: “நான் அந்த நாட்டிற்குப்போனேன்,” “நான் இதைச்செய்தேன் அதைச் செய்தேன்” என்று பெருமை பேசுவது. நீங்கள் அதிகம் பேசினால், பேச்சின் இந்த அழிவுகரமான செயலை அதிகம் செய்வதற்கான வாய்ப்பை நீங்கள் அதிகரிப்பீர்கள். எனக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் வதந்தி பேச எனக்கு வாய்ப்பு இல்லை அதனால் திபெத்திய மொழியில் மட்டுமே என்னால் வதந்திகளை கூற முடியும்.
மனதின் மூன்று அழிவுகரமானச் செயல்கள்:
- பேராசையுடன் சிந்தித்தல் - ஒருவரிடம் ஒரு நல்ல வீடு, முதலியன உள்ளன, அதை நீங்களே வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள், அதைப் பற்றியே எப்பொழுதும் யோசித்து அதை எப்படி பெறுவது என்று சதி திட்டம் தீட்டுகிறீர்கள். இது மிகவும் நல்லதல்ல, ஆனால் இது நம்மிடம் நிறைய இருக்கும் ஒன்று இது.
- காழ்ப்புணர்ச்சியுடன் சிந்தித்தல் – ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று விரும்புவது அல்லது அவரின் கழுத்தை உடைக்க நினைப்பது. நம்முடைய எதிரிக்கு மட்டும் நாம் இவ்வாறு சிந்திப்பதில்லை, நம்மிடம் சண்டையோடு நம்முடைய நண்பர்களிடத்திலும் காழ்ப்புணர்ச்சியுடன் நாம் இவ்வாறு சிந்திக்கிறோம்.
- விரோதத்துடன் சிதைந்துவிட சிந்தித்தல் – உதாரணமாக, எதிர்காலத்தில் மறுபிறப்பு என்ற ஒன்று இல்லை என சிந்தித்தல் அல்லது அடைக்கலத்தின் மூன்று ஆபரணங்கள் யாருக்கும் உதவாது, அல்லது கடவுளை வணங்கும் நிகழ்ச்சி நேர விரயம் என்று சிந்தித்தல் அல்லது வெண்ணெய் விளக்குகளை வழங்குவது வெண்ணையை வீணாக்குவது அல்லது தோர்மா பிரசாதம் அளிப்பது சம்பாவை (வறுத்த பார்லி தானியத்தை) தூக்கி எறிவது போன்றதாக நினைத்தல்.
இது போன்றவற்றை செய்யாமல் நம்மை நாமே பாதுகாப்பது மிகவும் கடினமானது. இவற்றை செய்வதில் இருந்து உங்களை நீங்களே பாதுகாக்காவிடில், நீங்கள் விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை அடைய முடியாது. அதில் மேலும் ஆழமாகச் செல்வதற்கு இப்போது நேரமில்லை, ஆனால் நீங்கள் ஆழமாக தெரிந்து கொள்ள விரும்பினால், லாம் – ரிம் போதனைகளை நீங்கள் படிக்க வேண்டும்.
தொலைதூரத்தை அடைதலின் 6 அணுகுமுறைகளை பயிற்சித்தல் (6 முழுமைகள்)
விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை அடைவதற்கான இரண்டாவது காரணம் தொலைதூரத்தை அடைதலின் 6 அணுகுமுறைகள் அல்லது பரமிதாக்கள் (ஆறு முழுமைகளை) பயிற்சித்தல் ஆகும்:
- பெருந்தன்மை
- நன்னெறி சுய – ஒழுக்கம்
- பொறுமை
- விடா முயற்சி
- மன நிலைத்தன்மை (ஒருநிலைப்படுத்துதல்)
- அழிவு குறித்த விழிப்புணர்வு (ஞானம்)
பெருந்தன்மையை பயிற்சித்தலுக்குப் பதிலாக, நாம் கஞ்சத்தனத்தை பயிற்சித்து அந்த அணுகுமுறையை மற்றவர்களிடத்திலும் நாம் விரிவுபடுத்துகிறோம். விடாமுயற்சியை கொண்டிருப்பதற்கு பதிலாக நாயகனுக்கான தைரியத்தை செலுத்துவதுடன், தர்மத்தை பயிற்சிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், நாம் சோம்பேறித்தனத்தை கொண்டிருப்பதனால் எல்லா நேரமும் தூங்குவதற்கு விரும்புகிறோம். மன நிலைத்தன்மையை கொண்டிருப்பதற்கு பதிலாக, மனம் அலைபாய்வதை விதைக்கிறோம் – உதாரணமாக, மந்திரத்தை பாராயணம் செய்யும் போது நம்முடைய மனமானது எல்லா இடங்களுக்கும் அலைபாய்கிறது – இது நடப்பதற்கான மேலும் வாய்ப்புகளை நாம் ஏற்படுத்துகிறோம்.
ஒரு முறை ஒரு ஆசிரியர் இருந்தார், பயிற்சியின் மத்தியில், தன்னுடைய சீடர் ஒரு பணியை செய்ய வேண்டும் ஆனால் அதைச் சொல்ல மறந்து விட்டது அவர் நினைவுக்கு வந்தது. அவருடைய நினைவுக்கு வந்த உடனேயே தியானிப்பதை நிறுத்தி விட்டு, எழுந்து சென்று அந்தச் சீடரிடம் அதனைச் செய்யுமாறு பணித்தார். இது அவருடைய மனம் அலைபாய்தலாகும். எப்போதெல்லாம் பாராயணத்தை பயிற்சிக்கிறோமோ, அப்போதெல்லாம் நம்முடைய மனம் அலைபாய்கிறது.
தொலைதூர – அடைதலின் பாகுபடுத்தும் விழப்புணர்வை பொறுத்தவரையில், வெற்றிடத்தை (வெறுமை) புரிந்து கொள்ளும் விழிப்புணர்வை நாம் விதைக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக உலக விஷயங்களான ஓவியம் போன்றவற்றை படிப்பதனால், நாம் சரியான வகை ஞானத்தை கட்டமைப்பதில்லை.
சுருக்கமாகச் சொன்னால், விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பிற்கான காரணங்களை கட்டமைத்தல் என்பது மிகவும் கடினம். ஒரு உடலைக் கொண்டிருப்பது எவ்வளவு அரிதானது என்பதைப் பாருங்கள், இந்த உடலை நாம் ஒரே ஒரு முறை தான் கொண்டிருக்கப் போகிறோம் மேலும் மிக எளிதாக அதை நாம் இழக்க முடியும். நாம் கொண்டிருக்கும் இந்த விலைமதிப்பில்லாத மனித உடலின் நற்பலனை நாம் எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் பெறுவது என்பது மிகவும் கடினமாகும்.
தூய பிரார்த்தனைகளை செய்தல்
ஒரு விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை அடைய நேர்மையான பிரார்த்தனைகளைச் செய்வதுடன் நாம் நம்முடைய தூய நன்னெறி சுய- ஒழுக்கம் மற்றும் ஆறு தொலைதூர – அடைதல் அணுகுமுறைகளை பக்கபலமாக வைத்திருக்க வேண்டும். இதன் அர்த்தம் “புத்தரே, நான் நல்ல பையனாக அல்லது பெண்ணாக இருந்தால் இதை எனக்குக் கொடுங்கள் நான் உங்களை எல்லா நேரமும் ஆராதிக்கிறேன்” என்று பிரார்த்தனை செய்வதல்ல. மாறாக ஒரு விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட அர்ப்பணித்தலுடன் நம்முடைய நோக்கம் மற்றும் நேர்மறை சக்தியை மிக உறுதியாக இயக்குவதாகும்.
அந்த அர்ப்பணிப்பு குறிப்பிட்டதாக இருப்பது முக்கியம். கந்தன் மடாலயத்தில் ஒரு சிம்மாசனம் இருக்கிறது, கெலுக்பா வரிசைத் தலைவரின் மிக உயரிய இருக்கை, கந்தன் சிம்மாசனமாகும். திபெத்தில், எப்போதுமே மடாலயத்தில் விலங்குகள் இருக்கும், ஒரு நாள் கோவிலுக்குள் பசு ஒன்று நடந்து சென்று சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கொண்டது. இதைப் பார்த்து துறவிகள் மிகவும் ஆச்சரியம் அடைந்துவிட்டார்கள், அதனால் அவர்கள் அங்கே இருந்த மிகப்பெரிய குருமாரிடம், “இப்படி நடந்ததற்கு என்ன காரணம்?” என்ற கேட்டார்கள். அதற்கு அந்த ஆசிரியர், கடந்த ஜென்மத்தில், இந்த உயிரினம் கந்தன் சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கும், ஆனால் அப்போது அது போதுமானதாக இருந்திருக்காது” என்று பதிலளித்தார்.
ஓய்வில்லாத எட்டு சூழ்நிலைகளில் இருந்து ஓய்வு
ஒரு விலைமதிப்பில்லாத மனி மறுபிறப்பின் இயல்பானது அது மகிழ்விக்கும் எட்டு ஓய்வுகளாகும். அதாவது, அந்த தருணத்திற்கு, ஓய்வில்லாத எட்டு தற்காலிக சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டிருக்கும். ஓய்வில்லாத நிலை என்பது ஒருவர் தர்மத்தை பயிற்சிப்பதற்கு வாய்ப்பு இல்லாத ஒன்றாகும்.
ஓய்வில்லாத நான்கு மனிதாபிமானமற்ற நிலைகள் இருக்கின்றன:
- மகிழ்ச்சியில்லாத இடத்தில் சிக்கி இருத்தல் (நரகத்தில் இருத்தல்) – மறுபிறப்பில் நாம் மகிழ்ச்சியில்லாத நரகத்தில் நாம் இருந்தால், பயிற்சிக்க நமக்கு வாய்ப்பு இருக்காது ஏனெனில் நம்முடைய உடல் எல்லா நேரமும் தீயின் மேல் இருக்கும்.
- ஆசையுள்ள பேய் (பசியான பேய்) – நாம் பேயாக மறுபிறப்பு எடுத்தால், பசி நமக்கு நிலைத்திருக்கும் மேலும் எப்போதும் உணவு பற்றிய சிந்தனைகளோடே இருப்போம்.
காலையில் எழுந்தால் சிற்றுண்டி கிடைக்காது, நாம் தர்மத்தை பயிற்சிக்க விரும்ப மாட்டோம். தலைவலியோடு நீங்கள் எழுந்தால், தர்மத்தை பயிற்சிக்க நாம் விரும்ப மாட்டோம். எனவே, நம்முடைய புறச்செருகல் அனுபவத்தில் இருந்து, நாம் பசியான பேயாக பிறந்தால் 60 ஆண்டுகள் உணவு இன்றி சென்றால், தர்மத்தை பயிற்சிப்பதில் நமக்கு ஆர்வம் இருக்காது. எனவே கொடுமைபடுத்தப்படும் உயிராக மகிழ்ச்சியே இல்லாத நரக இடத்தில் சிக்கிக்கொள்ளாமல் அல்லது எப்போதும் உணவுக்காக அலையும் பசியான பேயாக மறுபிறப்பு எடுக்காமல் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டவசமானது என்பதை நாம் பாராட்ட வேண்டும்.
- ஊர்ந்து செல்லும் உயிரினம் (விலங்கு) – நாம் புனிதர் தலாய் லாமாவின் நாயாக பிறந்திருந்தாலும் கூட, நம்மால் அடைக்கலப் பிராத்தனையை பாராயணம் செய்ய முடியாது. நாம் அவ்வாறு இல்லாமல் இருக்கிறோம் என்றால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
- தெய்வீக உயிரினம் (கடவுளாக நீண்ட ஆயுள்) - தெய்வீக மண்டலங்களில் நீண்ட ஆயுள் கொண்ட கடவுளுக்கு தர்மம் செய்வதில் ஆர்வம் இல்லாத அளவுக்கு உலகத்தில் ஏராளமான இன்பம் இருக்கிறது.
ஷரிபுத்ராவிற்கு ஒரு சீடர் இருந்தார் இருந்தார், "குரு பக்தி"க்காவே தன்னை அர்பணித்தார். அந்த சீடர் இறந்த பின்னர், கடவுள் உலகில் மறுபிறப்பெடுத்தார். ஷரிபுத்ரா, தன்னுடைய அதீத புலன்உணர்வு சக்திகளை பயன்படுத்தி, தன்னுடைய நம்பிக்கைக்குரிய சீடர் கடவுள் உலகில் பிறப்பார் என்பதைக் கண்டார். அதன் பின்னர் அவர் அங்கே சென்று சீடரை பார்க்கலாம் என்று ஷரிபுத்ரா நினைத்தார். ஷரிபுத்ரா கடவுள் உலகிற்கு சென்ற பின்னர், அவருடைய அனைத்து சீடர்களும் அவரிடம் கைகளை அசைத்துக் காட்டினர். அவர் தன்னுடைய குரு அல்லது தர்ம பயிற்சியில் விருப்பம் செலுத்தவில்லை, ஏனெனில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
நம்முடைய அனுபவத்தில் இருந்து இதை நாம் பார்க்கலாம். யாரேனும் மிகவும் ஏழையாக இருந்தால், அவர் தர்மத்தை பயிற்சிக்க தயாராக இருக்கிறார். ஆனால் அவர் செல்வந்தராக மாறிய பின்னர், அது மிகவும் சவுகரியமாக இருப்பதனால், தர்ம பயிற்சியில் ஆர்வம் இருப்பதில்லை. ஆகவே நீண்ட- ஆயுள் கடவுளாக பிறப்பெடுக்காத நாமும் கூட அதிர்ஷ்டசாலிகளே.
ஓய்வில்லாமைக்கு நான்கு மனித நிலைகள் இருக்கின்றன. மறுபிறப்பு எடுத்தல்:
- புத்தரின் வார்த்தைகள் அங்கு இருப்பதில்லை – உதாரணமாக, தர்மத்தின் ஒரு வார்த்தையைக் கூட கேட்க முடியாத நேரத்தில் பிறந்தவர்களும் சில நாடுகளில் இருக்கிறார்கள். அந்த நிலையில் நாம் இல்லை.
- காட்டுமிராண்டித்தன சமூகங்கள் – இந்த இடங்களில் இருந்து எல்லா மக்களும் உணவு மற்றும் ஆடைகளைப் பெறுவதில் ஆர்வமாக இருப்பார்கள்.
திபெத்தில் ஒரு மலை இருக்கிறது அதன் பெயர் த்சரி. ஒவ்வொரு 12 ஆண்டுகளும் திபெத்தியர்கள் அங்கே செல்வார்கள். அங்கு வாழும் லோபா பழங்குடியினர் மிகவும் காட்டுமிராண்டித்தனமானவர்கள், அவர்கள் நாட்டை கடந்து செல்வதற்கு ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும். காட்டு எருதுதான் அந்த வரி. காட்டு எருதை பெற்றுக்கொள்ளும் லோபாக்கள், அவற்றை உடனடியாகக் கொன்று உண்பதோடு அதன் ரத்தத்தையும் குடித்துவிடுவார்கள். எனவே மனிதனாகக் கூட அந்த இடத்தில் நாம் பிறக்காதது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
- அதிக ஊனத்துடன்: நாம் கண்பார்வையற்றவராகவோ, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவராகவோ, அல்லது உடல் ரீதியில், மன ரீதியில் மாற்றுத்திறன் படைத்தவராக பிறந்திருந்தால், கற்றலுக்கும் பயிற்சித்தலுக்கும் நாம் தீவிரத் தடைகளைக் கொண்டிருப்போம்.
- நாத்திக நடைமுறைகளுடன் இருக்கும் பகுதிகளில் – எந்த ஆன்மிகப் பயிற்சி குறிப்பாக பௌத்த மத தர்மம், இவை அனைத்தும் நேர விரயம் இவை அனைத்தும் பணம் சம்பாதிப்பதற்கான வழி என சிந்திக்கும் மக்கள் இருக்கிறார்கள்.
ஓய்வில்லாத இந்த அனைத்து நிலைகளில் இருந்துவிடுபடும் மனித மறுபிறப்பை நாம் கொண்டிருந்தால், அதனுடன், அதனை அடைவதற்கான காரணங்களை நாம் புரிந்து கொண்டால், நாம் இரட்டிப்பு அதிர்ஷ்டசாலிகள். பலர் இது போன்ற விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையை கொண்டிருப்பதை உணர்வதில்லை அதன் விளைவுகள் என்ன அதனைத் தொடர்வதனால் எதிர்வரும் இது போன்ற மறுபிறப்புகளில் அடையப் போவது என்ன என்பதை உணர்வதில்லை.
ஒற்றுமைகள்
விலைமதிப்பற்ற மனித உடலைப் பெறுவதில் உள்ள சிரமத்தைப் புரிந்துகொள்ள நாம் ஒப்புமைகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, கண்ணாடி மீது மணல் துகல்களை தூக்கி எறியும் போது அது கண்ணாடியில் ஒட்டுவது என்பது அரிதிலும் அரிது.
நாம் இந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்தால், நம்முடைய இப்போதைய மனித மறுபிறப்பு விலைமதிப்பில்லாத ஒன்றை அடைந்திருப்பதை நாம் உணரலாம், மேலும் இதை நாம் ஒரு முறை மட்டுமே பெற முடியும் என்றும் நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களை பற்றி சிந்தியுங்கள் அவர்களில் சிலர் மட்டுமே தர்மப் பயிற்சியில் இருக்கிறார்கள். ஆகவே இது எவ்வளவு அரிது என்பதை நாம் பார்க்கலாம்.
ஒரு விலைமதிப்பற்ற மனித மறுபிறப்பைப் பெறுவதில் உள்ள சிரமம் குறித்து ஒரு லாமா உரை நிகழ்த்தினார். பார்வையாளர்களில் இருந்த மங்கோலியர் ஒருவர், “மனித மறுபிறப்பை பெறுவது அவ்வளவு கடினம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் சீனாவிற்குத் தான் செல்ல வேண்டும் அங்கே எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறது பாருங்கள்!” என்றார். அது என்னை சோவியத் யூனியனுக்குச் செல்லுங்கள் என்று சொல்வதைப் போன்று இருந்தது.
தியானத்தில் இதைப் பற்றி சிந்திப்பது மிகவும் நல்ல பாடங்களாகும்.
நம்முடைய விலைமதிப்பில்லாத உடலின் பயனை எடுத்தல் மற்றும் அர்த்தமுள்ள வாழ்வை வாழுதல்
கடந்த ஜென்மத்தில் நாம் எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம் இந்த விலைமதிப்பில்லாத மனித உடலை அடைவதற்கு என்று நாம் சிந்தித்தால், இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கான விருப்பத்தில் நாம் மிகவும் தீவிரமாக இருப்போம். உதாரணத்திற்கு நீங்கள் எப்போதாவது மலை மீது சுமையை சுமந்து கொண்டு சென்று அதை பாதி வழியிலேயே விட்டிருக்கிறீர்களா, அப்படி செய்தால் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பாதியில் விட்டால் அது கீழே விழுந்து வீணாகும். விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை இந்த ஜென்மத்தில் அடைவதற்காக நாம் செய்தது என்பது மலையின் பாதி தூரம் வரை சுமையை சுமந்து சென்று; அதனை கைநழுவவிட்டால், நாம் செய்த அனைத்து வேலையும் பாழாகிவிடும்.
எனவே நாம் இப்போது விலைமதிப்பில்லாத மனித உடலை கொண்டிருக்கிறோம், எனவே எதிர்காலத்தில் மற்றொன்றை பெறுவதற்கு நாம் விருப்பப்பட மாட்டோம். நாம் இப்போதே அதனை கொண்டிருப்பதனால், நாம் அதனைப் பயன்படுத்தி முழு ஞானமடைந்த புத்தரின் மனநிலையை அடையலாம். நாம் அப்படி செய்யாவிட்டடால், ஒரு மூட்டை நிறைய அரிசியோடு உட்கார்ந்து கொண்டு அதனை சாப்பிடாமல், அடுத்த ஜெனுமத்தில் இன்னொரு மூட்டை அரிசி வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைப் போன்றதாகும். தற்போதைய மனித மறுபிறப்பின் முழுப் பயனையும் நாம் எடுக்க வேண்டும்.
மரணம் பற்றி மனநிறைவோடு இருத்தல்
மரணம் நிச்சயம்
என்ன வகையான விலைமதிப்பில்லாத மனித உடலை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொண்டால், அது கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதல்ல. அது இருந்தால், நீண்ட காலம் நீடித்திருக்கும். உண்மையில், நம்முடைய உடலைப் பிளந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தால், சந்தையில் இறைச்சி வாங்கிய பிறகு மக்கள் வீடுகளில் தொங்கவிடும் விலங்குகளின் உறுப்புகளைப் போல ஏராளமான ரத்தமும் வீரமும் நிறைந்ததாக இருக்கும். ஒரு கடிகாரத்தின் உட்புறம் போல நம் உள்ளமும் மென்மையானது.
மரணத்தை பற்றியும் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் நாம் சிந்தித்தால், ஒவ்வொரு மணிகளாலும் அவற்றை எண்ணி பல ஜெபமாலைகளை நாம் கடந்து செல்ல முடியும். தர்மசாலாவிற்கு வரத்தொடங்கியதில் இருந்து எவ்வளவு திபெத்தியர்கள் இறந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் சிந்தித்தால், நான் என்னுடைய மொத்த ஜெபமாலையையும் மிக விரைவாக கடந்து வந்து விடுவேன்.
மனித உடலைக் கொண்டிருக்கும் யாரும் இறக்காமல் இருந்ததில்லை. மரங்களும் செடிகளும் எவ்வாறு இறக்கின்றன என்று நீங்கள் சிந்தித்தால், நீங்கள் இறப்பதற்கு முன்னரே அவை இறந்து போகின்றன காலம் மட்டுமே மாறுபடுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். பிறத்தலின் இயல்பான முடிவு இறப்பு. யாராலும் அதில் செய்வதற்கு என்று எதுவும் இல்லை. நாம் இங்கே ஒன்றாக வந்திருப்பதன் முடிவு கலைந்து செல்லுதல், மேலே செல்வதன் இறுதி முடிவானது கீழே வருவது. இறப்பதைத் தவிர நம்மால் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை என்பதை நாம் உணர்ந்தால், மரணம் வருவதற்கு முன்னரே நம்மால் முடிந்த அளவிற்கு தர்ம பயிற்சியை முயற்சிக்க வேண்டும்.
நாம் எப்படி இறக்கப் போகிறோம் என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்கிறோம். நீங்கள் மிகவும் நோய்வாய்ப்படுகிறீர்கள், உங்களுடைய உடலானது மோசமான நிறத்திற்கு மாறுகிறது நீங்கள் பலவீனமானவராக மாறுகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்களுடைய உறவினர்கள் அனைவரும் அழுகிறார்கள் மேலும் இது எவ்வளவு கொடுமையானது என்று சொல்கிறார்கள், மருத்துவர் வந்து உங்களுக்கு மருந்து கொடுத்துவிட்டு, நாக்கை சொட்டி மிகப் பரிதாபமான நிலை என்று சொல்கிறார்.
நாம் எந்த நேரத்திலும் இறக்கலாம்
நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நரைத்த முடியுடன் மிக வயதான பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் உடலைப் புதைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சாதாரண உணவு தொண்டையில் சிக்கி பலர் இறந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, திபெத்தில் இருந்து நடந்த இந்த உதாரணத்தை வைத்து நீங்கள் சிந்தித்து பார்க்கலாம். ஒருவர் சில பெரிய இறைச்சித் துண்டுகளை எடுத்து வைத்துவிட்டு நான் இதை காலையில் சாப்பிடுவேன் என்கிறார், ஆனால் மாமிசத் துண்டுகள் இருந்த வரை கூட அவர் இல்லை. மற்றொரு உதாரணம்: சிம்லாவைச் சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயி ஒருவரை எனக்குத் தெரியும் அவர் மதிய உணவுக்கு வறுத்த ரொட்டியைச் செய்யப் போனார், ஆனால் ரொட்டி வெந்து முடிவதற்கு அவர் இறந்துவிட்டார்.
நிலையற்ற தன்மை மற்றும் இறப்பைப் பெறுவதற்கான சிறந்த வழி, அவற்றைப் பற்றி புத்தகங்களிலிருந்து வாசிப்பது அல்ல, மாறாக நமக்குத் தெரிந்தவர்கள் இறந்ததைப் பற்றி சிந்தித்தலாகும்.
இறக்கும் நேரத்தில் தர்மம் மட்டுமே நமக்கு உதவும்
மரணிக்கும் போது தியானத்தின் முக்கியத்துவம் என்ன? தர்மத்தைக் கடைப்பிடிப்பது மட்டுமே பயனுள்ளது என்பதை இது காட்டுகிறது.
பொருள்வாதம் என்கிற விதத்தில் நாம் சிந்தித்தால், நம்முடன் எதையும் நாம் எடுத்துச் செல்லப் போவதில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக நீங்கள் பணக்கார வியாபாரி ஏராளமான பணம் சம்பாதித்திருக்கிறீர்கள், நீங்கள் வைத்திருக்கும் அதிக விலையுள்ள துணியின் துண்டு உங்களை எரிக்கும் போது உடலை சுற்ற மட்டுமே பயன்படும். செல்வத்தை குவிப்பதற்க இந்த வியாபாரி நாடு விட்டு நாடு பயணித்த போது செய்தஅழிவுகரமான நடவடிக்கைகளின் அடிப்படையில், அது மிகப்பெரியதாக இருக்கலாம்.
நிறைய பணியாட்கள் அல்லது வேலையாட்களைக் கொண்டிருக்கலாம் அல்லது 100,000 படைவீரர்களுக்கு கட்டளையிடும் அதிகாரியாக இருக்கலாம், நீங்கள் இறக்கும் போது அவர்கள் யாரும் உங்களுடன் வரப்போவதில்லை. சொல்லப்போனால் ஒரு நாடு முழுவதும் உறவினர்கள் இருந்தாலும் கூட அவர்களாலும் உதவ முடியாது: அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் நீங்கள் இறக்கப் போகும் சமயத்தில் உங்கள் அருகில் நின்று கொண்டு, அதிக இடையூறுகள் செய்து கொண்டு உங்களுடைய அமைதியான மரணம் மற்றும் மறுபிறப்பிற்கு தடங்கள் ஏற்படுத்துவதாகும்.
நீங்கள் இறக்கும் நேரத்தில் உங்களுக்கு உதவக்கூடிய ஒன்றே ஒன்று தர்மப் பயிற்சி, ஆக்கப்பூர்வமான செயல்களில் இருந்து நேர்மறை கர்மப் பலனை நீங்கள் கட்டமைத்து வைத்திருந்தால், உங்களுடைய எதிர்கால மறுபிறப்பில் அவை மிகப்பெரிய பலனை கொடுக்கும்; ஆனால் எதிர்மறை கர்மப் பலன் அதனை மோசமாக்கும். மரணத்தை பற்றி சிந்திக்காமல் நீங்கள் உணரக் கூடிய ஏதோ ஒன்று இதுவாகும். திபெத்தில் பல திபெத்தியர்கள் செல்வந்தர்கள், ஆனால் அந்த நேரத்தில் அவர்களிடம் இருக்கும் அறிவு மற்றும் உள்ளுக்குள் இருக்கும் குணங்களுடன் செல்ல வேண்டியது தான். எனவே உலகச் செயல்களில் நம்முடைய நேரத்தை விரயம் செய்யாமல் இந்த ஜென்மத்தில் தர்மத்தை தூய மனதுடன் பயிற்சித்தல் வேண்டும்.
இந்த வாழ்க்கையின் அனைத்து உலக செயல்பாடுகளும் கோதுமைப் பதர் போன்று தேவையில்லாதது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உலகச் செயல்பாடுகளுக்கு சாரம் இல்லை. உலகச் செயல்பாடுகள் சிறு பிள்ளைகள் கட்டும் மணல்வீடுகளைப் போன்றது என்று நாம் கருத வேண்டும். அவர்கள் விளையாடி முடித்த பின்னர், அதை அப்படியே விட்டு விட்டு சென்றுவிடுவார்கள். இப்படித் தான் உலகச் செயல்பாடுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தைப் பற்றியும் நீங்கள் சிந்தித்தால், உங்களுடைய தர்ம பயிற்சிக்கு அது மிக உதவியாக இருக்கும்.
உந்துதலுக்கான இரண்டு குறைவான நம்பிக்கைகள்
தொடக்க நம்பிக்கை
அனைத்து உலகச் செயல்பாடுகளும் தேவையற்றவை மற்றும் அதிக முக்கியத்துவம் இல்லாதவை என்பதை நாம் கருதினால், தர்மத்தை பயிற்சிப்பது மட்டுமே ஒரே ஒரு முக்கியமான விஷயம் என்பதை நாம் உணரலாம். தர்மத்தை பயிற்சிப்பது உங்களுடைய வருங்கால மறுபிறப்புகளில் பயனளிக்கும் ஒரு விஷயமாகும். உதாரணமாக, “தற்போது நான் ஒரு விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை அடைந்திருக்கிறேன்; எதிர்கால வாழ்வுகளில் மோசமான உலகிற்கு செல்வதைத் தடுப்பதற்கு நான் அதனை பயன்படுத்தப் போகிறேன்” என்ற அணுகுமுறைணை கொண்டிருப்பது என்பது நம்முடைய விலைமதிப்பில்லாத வாழ்வுகளின் பலனை எடுக்கும் குறைந்தபட்ச அளவாகும்.
இந்த மோசமான மூன்று உலகங்களில் வீழாமல் இருக்க என்ன நம்மை பாதுகாக்கப் போகிறது என்றால் கடுமையான நன்னெறி சுய – ஒழுக்கத்தை கொண்டிருத்தல். நன்னெறி சுய – ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கான மிகத் தீர்க்கமான விருப்பத்தை நாம் கொண்டிருந்தாலும் கூட, அது படிப்படியாக சீரழிகிறது. எனவே மோசமான மறுபிறப்பில் விழுவதில் இருந்து நம்மை நாமே பாதுகாப்பதற்கு, நம்மை நாமே சிக்கலான உணர்வுகளில் இருந்து விடுவிக்க வேண்டும். இது எப்படியென்றால் மிகவும் அழுக்கு படிந்த ஆடையை வெளுப்பதைப் போன்றது – முதலில் பார்க்கும் போது சிறிது பலத்தை காட்டுவீர்கள், அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது பலத்தை கூட்டிக்கொள்வீர்கள். சிக்கலான உணர்வுகளில் இருந்து உங்களை நீங்களே விடுவிக்க, நீங்கள் மெதுவாக, மென்மையாக பின்னர் படிப்படியாக உங்களது முழு வலுவையும் செலுத்தி செயலாற்றுவீர்கள். எனவே நன்னெறி சுய- ஒழுக்கத்தை கொண்டிருக்க முதலில் நீங்கள் மெதுவாக பின்னர் படிப்படியாக அதிகரித்து பொருத்துவதன் மூலம் சிக்கலான உணர்வுகளில் இருந்து உங்களை நீங்களே விடுவிக்கலாம்; இல்லாவிட்டால் உங்களது முயற்சிகள் எளிதில் அழிந்து போகலாம்.
மூன்று மோசமான உலகங்களில் மறுபிறப்பைத் தவிர்ப்பதற்காக நீங்கள் நன்னெறி சுய ஒழுக்கத்தை பின்பற்றினால், இதுவே தர்மத்தை கடைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச நிலை.
இடைநிலை நம்பிக்கை
மோசமான இந்த மூன்று உலகங்களில் பிறப்பதில் இருந்து தப்பித்தாலும் கூட அடுத்த ஜென்மத்தில் நாம் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷங்கள் நிறைந்த கடவுள் உலகில், அல்லது மனிதனாகக் கூட பிறக்கலாம், அனைத்து சம்சாரிய மறுபிறப்புகளும் துன்பத்தை கொடுப்பதை என்பதை நாம் உணர முயற்சிக்க வேண்டும். லாம் – ரிம் போதனைகளில் இது மிக ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த உதாரணத்தாலும் கூட விளக்க முடியும்: நீங்கள் வெயிலில் நிற்கும் போது மிகவும் வெப்பத்தைப் பெறுவதனால் உள்ளே சென்றுவிடுகிறீர்கள். இதனால் சூடாக இருக்கும் துன்பத்தில் இருந்து தப்பித்து குளிராக இருக்கும் துன்பத்துடன் இருக்கிறீர்கள். துன்பத்தில் இருந்து நாம் விடுபட்டு விட்டோம் என்று எந்த சம்சாரிய நிலையும் இல்லை.
சிக்கலான உணர்வுகள் நாம் சம்சார சக்கரத்தில் சுழல்வதற்கான காரணம், கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பு. ஒரு மரத்தின் வேரைப் போல உண்மையான சுயாதீன அடையாளங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. சம்சாரியத்தில் நாம் சுற்றுவது என்பது ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டே இருப்பதைப் போன்றது கடைசியில் எதையும் அடையப் போவதில்லை. அதில் இருந்து இறங்குவதற்கான ஒரே வழி நம்மை உயர்த்திக் கொள்வது, அதற்கு மேலே செல்வது, மேலே எழுவதுதான். இதனைச் செய்வதற்கு நாம் அர்ஹதராக மாற வேண்டும், ஒரு உயர் நிலை உணர்வாளர், அடையாளமற்ற தன்மையை உணரும் கருத்தியல் அல்லாத பாகுபாடு விழிப்புணர்வு கொண்ட ஒருவர், சாத்தியமற்ற "ஆன்மா"வின் இல்லாமை. இதுவே வெற்றிடத்தின் (வெறுமை)பாகுபாடுத்தும் விழிப்புணர்வு.
நம்முடைய மனத்தொடர்ச்சிகளுடன் இந்த வெற்றிடத்தை உணர்வதை விதைப்பதற்கு, மன அமைதி அடைதல் முக்கியமானதாகும், ஒரு அசைவற்ற மற்றும் படிந்த மனநிலை; மேலும் இதனைப் பெறுவதற்கு, நமக்கு நன்னெறி சுய –ஒழுக்கம் தேவை. எனவே மூன்று உயர் பயிற்சிகள் – நன்னெறி சுய – ஒழுக்கத்தின் உயர் பயிற்சிகள், உள்வாங்கப்பட்ட ஒருநிலைப்படுத்துதல் மற்றும் பாகுபடுத்தும் விழிப்புணர்வு – நம்மை கட்டுப்பாடின்றி நிகழும் சம்சாரிய மறுபிறப்பிற்கு மேலே எழுவதற்கு அனுமதிக்கிறது.
தங்களை ஒரு அர்ஹத நிலைக்கு உயர்த்திய உயிரினங்களின் மூன்று வகைப்பாடுகள் உள்ளன:
- மனதின் பார்க்கும் பாதையை அடைந்தவர்கள் (பார்க்கும் பாதை)
- மனதின் பழக்கப்படுத்தும் பாதையை அடைந்தவர்கள் (தியானப்பாதை)
- மேலும் அதிக பயிற்சி தேவைப்படாத மனப்பாதையை அடைந்தவர்கள்
புதிதாகப் பார்க்கும் மனதைக் கொண்ட உயிரினங்கள் வெற்றிடத்தின் கருத்தியல் அல்லாத நேரடியான அறிவைக் கொண்டுள்ளன. மனதின் பழக்கப்படுத்தும் பாதையுடன் இருப்பவர்கள் மேலும் மேலும் தியானித்து கருத்தியல் அல்லாத வெற்றிடத்தின் அறிவாற்றல் பழக்கத்தை கட்டமைப்பதற்காக தங்களைத் தாங்களே பழக்கப்படுத்துகின்றனர். நீங்கள் தியானம் செய்து கொண்டே இருந்தால் உங்களுடைய மனமானது முழுவதுமாக இந்த அறிவாற்றல் வெற்றிடத்திற்கு முழுமையாக பழக்கப்பட்டு விடுதலையை பாதுகாக்கும் உங்கள் மனதின் உணர்வு மறைப்புகளை எப்போதைக்கும் முழுவதுமாக அகற்றி, உங்களை ஒரு அர்ஹதர், சுதந்திரமானவராக்கும்.
உந்துதலின் மேம்படுத்தப்பட்ட நம்பிக்கை
அன்பு மற்றும் இரக்கம்
ஆனால் உங்களை மட்டும் விடுவிப்பது போதாது, ஏனென்றால் எல்லா வரையறுக்கப்பட்ட உயிரினங்களும் (உணர்வுள்ள உயிரினங்கள்) இதே இக்கட்டான நிலையில் உள்ளன. அனைத்து வரையரைக்குட்பட்ட உயிரினங்களும் ஒன்றே அதில் அனைவருமே துன்பப்படுகின்றனர் மேலும் அனைவருமே அதில் இருந்து வெளியே செல்வதற்கு விரும்புகின்றனர். நம்முடைய மனதில் எல்லா உயிர்களும் துன்பப்படுவதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று விரும்பினால், அதுவே “இரக்கம்” ஆகும். ஆனால் அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களும் துன்பத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான இந்த ஆசையை வளர்ப்பதற்கு, நீங்கள் உங்கள் சொந்த துன்பத்திற்காக நீண்ட காலம் தியானிக்க வேண்டும், பின்னர் அது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து, நீங்கள் துறவறத்தை வளர்த்துக் கொள்ளலாம் - சுதந்திரமாக இருப்பதற்கான தீர்மானம். துன்பப்படுவது எவ்வளவு மோசமானது என்பது பற்றிய ஒரு எண்ணத்தை பெற்று அதில் இருந்து நீங்களாகவே உடனடியாக வெளியேற விரும்பினால், பின்னர் அந்த சிந்தனையையே நீங்கள் மற்ற உயிரினங்கள் இடத்திலும் செயல்படுத்த முடியும். அதுவே இரக்கம்.
ஆதலால், துன்பப்படுவதில் இருந்து வெளியேற துறவறேமே என்னுடைய விருப்பமாகும், இருப்பினும் இரக்கம் என்பது அனைத்து உயிரினங்களும் துன்பத்தில் இருந்து வெளியேற விரும்புதலாகும். இரக்கம் மற்றும் அன்பு இடையிலான வித்தியாசம் என்பது “அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களும் துன்பப்படுதல் மற்றும் அதற்கான காரணங்களில் இருந்து விடுபடுவதில் இருந்து பிரிந்து வந்தால் எவ்வளவு அற்புதமானதாக இருக்கும்”என்று இரக்கத்துடன் நாம் சிந்திப்பது; இருப்பினும் அன்பு என்பது அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சிக்கான காரணங்களுடனும் இருக்க விரும்புதலாகும்.
வேறுபாடில்லாமை மற்றும் போதிசிட்டாவை எப்படி வளர்ப்பது
அன்பு மற்றும் இரக்கத்தை நாம் கொண்டிருக்காததற்கு என்ன காரணம்? அனைவரும் துன்பப்படுவதில் இருந்து விடுபட வேண்டும் மகிழ்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் ஏன் விரும்பவில்லை? ஏனெனில் நம்முடைய மனங்கள் மென்மையானதாக இல்லை – அது கடினமானது; அது உயர் மற்றும் தாழ்வுகளைக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனதின் இந்த சமநிலையில்லாமை என்பது என்ன? நம் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நமக்கு மிகுந்த பற்றுதல் உள்ளது, மேலும் நம் எதிரிகள் அல்லது நமக்குப் பிடிக்காத நபர்களைப் பார்க்கும்போது, நமக்கு வெறுப்பு அதிகரிக்கிறது.
எனவே ஒரு பாழடைந்து கிடக்கும் சாலையை எப்படி சமன்படுத்துவது? இந்த உதாரணத்தைப் பற்றி சிந்தித்து நாம் புரிந்து கொள்ள முடியும்: ஒரு நபர் நேற்று உங்களிடம் 100 ரூபாய் கொடுத்திருக்கிறார், இன்று மற்றொரு நபர் 100 ரூபாய் கொடுக்கிறார். நேற்று 100 ரூபாய் கொடுத்தவர் இன்று காலையில் உங்கள் முகத்தில் ஒரு குத்து விட்டிருக்கிறார், இன்று உங்களிடம் 100 ரூபாய் கொடுத்தவர் நேற்று உங்களுடைய முகத்தில் குத்தி இருக்கிறார். நீங்கள் யாரை விரும்புவீர்கள் யாரை வெறுப்பீர்கள்?
இதே போன்று, கடந்த காலத்தில் நம்முடைய எதிரிகள் எப்படி நமக்கு பெரிய தீர்வுகளைப் பயனாகத் தந்தார்கள், எதிர்காலத்தில் பெரிய உதவியுடன் வரலாம் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அதைப் போலலவே, கடந்த காலத்தில் நமக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படுத்தி நம்முடைய நண்பர்கள் எதிர்காலத்திலும் அதை மீண்டும் செய்ய நேரிடலாம். இவை அனைத்தும் காலத்தை பொருத்தது.
மற்றொரு உதாரணம்: நரமாமிசங்கள், அல்லது ஓநாய்கள் அல்லது காட்டேரிகள் போன்ற பலர் உள்ளனர். நாம் அவர்களை மிகவும் கவர்ச்சியாகக் கண்டு அவர்களில் ஒருவரை மணக்கலாம், ஆனால் ஒரு நாள் இரவில் அவர்களின் கோரைப்பற்கள் வெளியே வந்து நம்மைத் தின்றுவிடும்.
ஒரு நாயை நீங்கள் அடித்தால் அது குரைப்பதோடு உங்களை கடிக்கும். எனவே நாம் நம்முடைய எதிரியிடம் கோபமடைந்தால், நாமும் அந்த நாயைப் போன்ற அதே வழியில் தான் பதிலுக்கு செயல்படுவோம். மனதின் இந்த சமநிலையின்மை, நாம் கொண்டிருக்கும் இந்த இணைப்பு மற்றும் எதிர்வினையை அப்புறப்படுத்தி மனதின் வேறுபாடில்லாமையை அடைய வேண்டும். வேறுபாடில்லாத அந்த நிலையின் மீது, நாம் அன்பு மற்றும் இரக்கத்தை வளர்க்கலாம் - ஒரு காரில் பயணம் செய்ய நீங்கள் பாழடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்.
ஒரு சாலையை வெடித்துச் சீரமைக்கும் வெடிகுண்டைப் போன்ற சக்திவாய்ந்த எண்ணங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். என்ன வகையான எண்ணங்கள்? மற்ற வரையறுக்கப்பட்ட உயிரினங்களை கருணையோடு சிந்தித்தல். உதாரணத்திற்கு, நாம் பால் அருந்துகிறோம். அது பசு மற்றும் எருமைகளிடம் இருந்து வருகிறது. அவை வெளியே சென்று புல்லைத் தின்று தண்ணீரைக் குடிக்கிறது நாம் செய்வதெல்லாம் அதனிடம் இருந்து பாலை எடுத்துக்கொள்கிறோம். முயல்கள் மற்றும் எலிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, எனவே எலிகள் மற்றும் முயல்களின் உயிரை விலைகொடுத்து நாம் மருந்துகளை கொண்டிருக்கிறோம் அவற்றின் உயிரை எடுக்கும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது.
சில வரையறுக்கப்பட்ட உயிரினங்களை நாம் நமது எதிரிகளாகக் கருதி அதற்கு தீங்கு விளைவிக்கிறோம். ஆனால் அவை நமக்குச் செய்த தீங்கை அவற்றின் தயவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பிந்தையது முந்தையதை விட அதிகமாக உள்ளது. புத்தராக மாறுவதற்கு, நாம் பொறுமையை வளர்க்க வேண்டும், அதற்கு நமக்கு அருவருப்பானவர்கள் தேவை. எல்லோருமே நல்லவர்களாக இருந்தால், நம்மால் பொறுமையை வளர்க்க முடியாது. நம்மிடம் கோபப்படுபவர்கள் வரையறுக்கப்பட்ட உயிர்களாக இருப்பார்கள் புத்தர்களல்ல; எனவே அவர்களே நமக்கு பொறுமையை பயிற்சிப்பவர்கள். உதாரணமாக, அதிஷா திபெத்திற்கு வந்த போது மிகப் பிடிவாதமான இந்தியர் ஒருவரை தன்னுடன் அழைத்து வந்திருந்தார் அவர் எப்போதுமே அதிஷாவின் பொறுமையை சோதித்தக் கொண்டிருந்தார். அவரை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று அதிஷாவிடம் கேட்டதற்கு, பொறுமையை பயிற்சிப்பதற்காக என்று அவர் பதிலளித்தார். எனவே வரையறுக்கப்பட்ட உயிர்கள் மற்றும் புத்தர்கள் இருவருமே அவரர்களுடைய கருணையில் நமக்கு சமமானவர்களே. ஷாந்திதேவாவின் போதிசத்வா நடத்தையில் ஈடுபடுதலில் இவையும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
புத்தர் ஏன் கோபமடைய மாட்டார் என்பதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு மனதாக இருப்பார் – அனைத்து சிக்கலான உணர்வுகளில் இருந்தும் விடுபட்ட ஒரு நிலைப்படுத்துதலை உள்வாங்கியவர். ஏனெனில் ஒரு புத்தர் என்பவர் ஒற்றை – ஒருநிலைப்படுத்துதல் மனநிலையை கொண்டிருப்பவர், அவர் எப்போதும் கோபமடைய மாட்டார். எனவே நாம் இதனை வளர்க்க வேண்டும். காலையில் நாம் இரண்டு சிந்தனைகளுடன் எழுதல் வேண்டும்:
- நான் இன்று மற்றவர்கள் கோபப்படுவதற்கு காரணமாக இருக்கப் போவதில்லை.
- மற்றவர்கள் என் மீது கோபப்படும்படியாக நான் நடந்து கொள்ளப் போவதில்லை.
இதற்கு நாம் நம்மை பழக்கப்படுத்திக்கொண்டால், நம்முடைய குழப்பமான உணர்ச்சிகளைக் குறைத்து, இறுதியில் குழப்பமான உணர்ச்சிகள் இல்லாத நிலையை உருவாக்கி, அதனால் புத்தர்களாக ஆக முடியும்.
புத்தர்களைப் பிரியப்படுத்த நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்டால், அது வரையறுக்கப்பட்ட மனிதர்களுக்கு உதவுவதும் கருணை காட்டுவதும் ஆகும். இது உண்மையில் புத்தர்களை மகிழ்விக்கிறது. உதாரணமாக, பெற்றோர் இருக்கின்றனர் அவர்களுக்கு குழந்தை இருக்கிறது, பெற்றோரிடம் மட்டும் கருணையோடு இருப்பதற்குப் பதிலாக குழந்தைகளிடமும் கருணையோடு இருப்பதன் மூலம் நம்மால் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்த முடியும். அதே போன்று, புத்தர்கள் போலவே நாம் வரையறுக்கப்பட்ட உயிரினங்களிடமும் அன்பாக இருந்தால் புத்தர் மகிழ்ச்சியாக இருப்பார். எனவே, இவை அனைத்தின் அடிப்படையிலும் "வரையறுக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய நான் புத்தரின் நிலையை அடையப் போகிறேன்" என்று நாம் போதிசிட்டா நோக்கத்தை வளர்க்க முயற்சிக்க வேண்டும்.
இந்த பிறப்பில் ஞானமடைதல்
இன்னும் கூட, இந்த வாழ்நாளில், வரையறுக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்காகவும், புத்தரின் இந்த நிலையை அடைய நாம் மிகவும் வலுவான எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் ஞானத்தை அடைவதற்கான வழி இருக்கிறது என்று புத்தர் கூறி இருக்கிறார். அது என்ன வழி? அது தாந்திரிக பாதையின் மூலமாகச் செய்தலாகும். நீங்கள் அதைப் பின்பற்றினால், இந்த ஜென்மத்தில் ஞானமடைதல் சாத்தியமாகும்.
இந்த ஜென்மத்தில் ஞானம் அடைவதற்கான மிக வலுவான எண்ணம் நமக்கு இருந்தாலும், அது எளிதானது என்று நாம் நினைக்கக்கூடாது, ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே நாம் பெரும் அழிவுச் செயல்களைச் செய்துள்ளோம். தாந்திரிகம் விரைவானதாக இருக்கலாம், ஆனால் அது மிகவும் கடினமான பாதையாகும். தாந்த்ரீகப் பாதையைப் பயிற்சி செய்வது ஒரு விமானத்தை எடுத்துச் செல்வது போல விரைவானது என்று நாம் நினைக்கக்கூடாது - அது அவ்வளவு எளிதல்ல. உதாரணமாக, ஜெட்சன் மிலரேப்பாஅவருடைய குரு மார்பாவுடன் கோபுரங்களைக் கட்டுதல், அடி வாங்குல் மற்றும் மிகுந்த துன்பங்களை அனுபவித்தல் என்று பல கடினங்களை கடந்து வந்திருக்கிறார். இதனாலேயே அவர் இந்த ஜென்மத்தில் ஞானத்தை அடைய முடிந்தது. ஆனால் மிலரெபா அனுபவித்த கஷ்டங்களின் ஒரு பகுதியை கூட நாம் சந்திக்கத் தயாராக இல்லை.
இந்த ஜென்மத்தில் ஞானத்தை அடைவதற்கான ஒரு வலுவான எண்ணம் இருந்தால், பெரும் சிரமங்களைச் சந்திக்கத் தயாராக இருந்தால், நாம் தொடர்ந்து பயிற்சி செய்தால், உண்மையில், நாமே புத்தமதத்தை அடைய முடியும்.
சுருக்கம்
விலைமதிப்பில்லாத மனித உடலுடன் பிறந்ததால், தர்மத்தை பயிற்சிக்கவும், சிறந்த மறுபிறப்பு, விடுதலை மற்றும் ஞானத்தை அடையவும் அதனை பயன்படுத்தலாம். இதற்காக, நாம் ஒரு தரப்படுத்தப்பட்ட பாதையை பின்பற்ற வேண்டும். இது பத்து அழிவுகரமான செயல்களைத் தவிர்ப்பது, தொந்தரவு செய்யும் உணர்ச்சிகளிலிருந்து நம்மை விடுவித்தல் மற்றும் சம்சாரத்தில் இருந்து விடுபடுதல் மற்றும் போதிச்சிட்டா நோக்கத்துடன், ஒருநிலைப்படுத்துதல் என்னும் ஒற்றை-புள்ளி மற்றும் வெற்றிடத்தின் (வெறுமை) கருத்தியல் அல்லாத உணர்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.